Jump to content

இலங்கையின் தமிழருக்கெதிரான யுத்தத்தில் ரஸ்ஸிய மற்றும் உக்ரேனிய அரசுகளின் பங்கு.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

இந்த பங்கருக்குள் இருந்து அழும் உக்ரைன் மக்களை பார்த்தபோது வெளிநாடு வந்தும் பிளேனைக்கண்டால் பங்கரைத்தேடிய எமது பிள்ளைகள் தான் எனக்கு கண் முன்னே வந்தார்கள்.

நான் இங்கே பலமுறை எழுதி விட்டேன் நாங்கள் சாதாரண மனிதர்கள் என்று.

எங்களை தெய்வங்களாக நினைப்பது தவறு. ஆனால் உங்களது சிந்தனைகள் அரவணைப்புகள் தெய்வத்துக்கு சமாந்தரமானது. நீங்கள் அப்படியே இருங்கள் என்று தான் சொல்கிறேன். உலகில் மக்கள் தொகை அதிகம் ஆனால் தெய்வங்கள் குறைவுதான். ஆனால் தெய்வங்களின் எதிர்பார்ப்புக்கள் தான் இவ்வுலகில் வாழணும் ஆளணும். நன்றி.

இங்கு எல்லோருமே சாதாரணமான மனிதர்கள், சில விடயங்களை பொது வெளியில் தவிர்ப்பது நல்லது என்று நான் நினைக்கிரேன். நாங்கள் சில விடயங்களை, தேவை அற்று அதீதமாக உணர்ச்சி வசப்பட்டு அணுகுகிறோம், Politicalஆக அணுகப்பழகவேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.  மாறி மாறி நீங்களும் நானும் எழுதலாம் ஆனால் கருத்துக்கள் எழுதி மற்றவர்களை மாற்ற முடியாது. இனி இதில் எழுதுவதுக்கு  பெரிதாக ஒன்றும் இல்லை, நீங்கள் கேட்டதால் எனது கருத்தை சொன்னேன், மற்றும்படி உங்களை குறைத்து மதிப்பிடும் நோக்கம் எனக்கு இல்லை.  

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • Replies 477
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Ahasthiyan

இனி உலகில் நடக்கும் போர்களில் நிகழும் எந்தவொரு வினோதங்களும் எங்களை ஆச்சரியப் படுத்தாது ஏனென்றால் ஒரு போரில் நிகழக்கூடிய உச்சபட்ச கொடூரங்கள், இழப்புக்கள், அக்கிரமங்கள், அத்துமீறல்கள், அழிவுகள், வினோதங்

குமாரசாமி

உங்கள் இருவருக்கும் இதயபூர்வமான வணக்கம்.🤜 உங்களுக்கு என் மன ஆதங்கத்தை சொல்கின்றேன் கேளுங்கள். இன்று நடக்கும் உக்ரேன் சண்டைகளையும் எமது 40 வருட போராட்டத்தையும் ஒப்பிட்டு பார்க்கின்றேன். நான்

ரஞ்சித்

இலங்கையின் தமிழருக்கெதிரான யுத்தத்தில் ரஸ்ஸிய மற்றும் உக்ரேனிய அரசுகளின் பங்கு.  ரஸ்ஸியா: ராணுவ ரீதியிலான உதவிகள் : புலிகளுக்கெதிரான யுத்தத்தில் இலங்கைக்கு  பெருமளவு உதவிகளை  ரஸ்ஸியா செ

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நீர்வேலியான் said:

இங்கு எல்லோருமே சாதாரணமான மனிதர்கள், சில விடயங்களை பொது வெளியில் தவிர்ப்பது நல்லது என்று நான் நினைக்கிரேன். நாங்கள் சில விடயங்களை, தேவை அற்று அதீதமாக உணர்ச்சி வசப்பட்டு அணுகுகிறோம், Politicalஆக அணுகப்பழகவேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.  மாறி மாறி நீங்களும் நானும் எழுதலாம் ஆனால் கருத்துக்கள் எழுதி மற்றவர்களை மாற்ற முடியாது. இனி இதில் எழுதுவதுக்கு  பெரிதாக ஒன்றும் இல்லை, நீங்கள் கேட்டதால் எனது கருத்தை சொன்னேன், மற்றும்படி உங்களை குறைத்து மதிப்பிடும் நோக்கம் எனக்கு இல்லை.  

உக்ரைன் செய்தது மகா பிழை என்று, ஒத்துக் கொள்கிறீர்கள் என நினைக்கின்றேன். 👍🏽
விரைவில்… இதே முடிவுக்கு, உங்கள் கூட்டாளிகளும் வருவார்கள்…. 😂
என்ற நம்பிக்கை நிறைய உள்ளது. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

உக்ரைன் செய்தது மகா பிழை என்று, ஒத்துக் கொள்கிறீர்கள் என நினைக்கின்றேன். 👍🏽
விரைவில்… இதே முடிவுக்கு, உங்கள் கூட்டாளிகளும் வருவார்கள்…. 😂
என்ற நம்பிக்கை நிறைய உள்ளது. 😁

நானும் நீர்வேலியான் எழுதிய கருத்தை வாசித்தேன் ... ஆனால் அவர் அப்படி ஒன்றும் சொல்லாமலேயே நீங்கள் அவர் கருத்தை ஹைஜாக் செய்து, உங்கள் பக்க ரஷிய ஆதரவு தேடுகிறீர்கள் போல இருக்கிறதே. என்னண்ணா  இப்டி பண்ணறீங்களேன்ணா? 😜

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரினின் உக்ரைன் ஆக்கிரமிப்பை நியாயபடுத்துவதற்காக ஒருவருடைய கருத்தை மாற்றும் ஹைஜாக் பண்ணும்  முயற்சிகள் ஏற்கெனவே தொடங்கியாகிவிட்டது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

நானும் நீர்வேலியான் எழுதிய கருத்தை வாசித்தேன் ... ஆனால் அவர் அப்படி ஒன்றும் சொல்லாமலேயே நீங்கள் அவர் கருத்தை ஹைஜாக் செய்து, உங்கள் பக்க ரஷிய ஆதரவு தேடுகிறீர்கள் போல இருக்கிறதே. என்னண்ணா  இப்டி பண்ணறீங்களேன்ணா? 😜

கருத்து வறட்சியென்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுதான் இது. மனிதநேயமற்ற விதண்டாவாதிகளுடன் இனிமேல் பேசிப்பயனில்லை என்று ஒருவர் முடிவுசெய்யும்போது, அதனை தனது வெற்றியாகவும், தனது மனிதநேயமற்ற கருத்தினை முன்னையவர் ஏற்றுக்கொண்டும் விட்டார் என்றும் ஒருவர் பசப்புவது சுத்தமான கருத்து வறட்சியே அன்றி வேறில்லை, கடந்து சென்றுவிடுங்கள்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக மகிழ்ச்சி நாடுகளின் லிஸ்ரை ஐக்கிய நாடுகள் சபை இன்று வெளியிட்டு இருக்கிறதாம் நான் விரக்தியில் பார்க்கவில்லை.ஏனெனில் எந்த நாடுகள் வரும் என்று தெரிந்தது தானே
1.ரஷ்யா
2.பெலாரஸ்
3.சீனா
4.வட கொரியா

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

அகல் நியூஸில் தமிழில் வரும்போது வாசிக்கலாம் என்று இருக்கின்றேன்😃

நீங்கள் நம்பியிருந்திருக்கின்றீர்கள்!

தலைவர் பிரபாகரன் ஜெயந்தன் படையணியை தென் தமிழீழத்துக்கு வழியனுப்பும் நிகழ்வில் பேசியது அண்மையில் வீடியோவாக வந்தது. பார்த்திருந்தால் புலிகள் மேற்கையும், இந்தியாவையும் நம்பியிருந்திருக்கவில்லை என்று புரிந்திருக்கும். 

1)  அகல்நியூசை மட்டும் நம்பிருக்காதீர்கள். பல்வேறு  மாற்றுக் கருத்துக்களை வெளியிடும் தளங்களையும் பாருங்கள். இல்லாவிட்டால் CNN channels , Sun போன்ற tabloids ஆல் வரும் பாதிப்புக்களில் இருந்து தப்ப முடியாது.

( உங்களைப்போன்ற வாசிப்பில் அதீத ஆர்வம் கொண்டவர்களுக்கும் எம் போன்றவர்களால் (விரும்பாவிட்டாலும்) அறிவுரை சொல்லவேண்டி இருப்பதுதான் வருத்தம் தரும் விடயம்)

2) நம்பிக்கை ஊட்டப்பட்டோம்.    மேற்குலகின் (சனாயகம், நீதி, பன்முகத்தன்மை, சமத்துவம் போன்ற) பிரச்சாரங்களால். இதில் ஆச்சரியமான விடயம், இத்தனை அழிவுகளைக் கண்டுணர்ந்த பின்னரும், அந்தப் பிரச்சாரங்களை இன்னும் பல முட்டாள்கள் நம்பிக்கொண்டிருப்பதுதான்.

5 hours ago, விளங்க நினைப்பவன் said:

உலக மகிழ்ச்சி நாடுகளின் லிஸ்ரை ஐக்கிய நாடுகள் சபை இன்று வெளியிட்டு இருக்கிறதாம் நான் விரக்தியில் பார்க்கவில்லை.ஏனெனில் எந்த நாடுகள் வரும் என்று தெரிந்தது தானே
1.ரஷ்யா
2.பெலாரஸ்
3.சீனா
4.வட கொரியா

எனக்கு மூக்குப் போனாலும் பிரச்சனையில்லை. எதிரிக்கு சகுனப் பிழையாக வேண்டும் என்று விரும்பும் நச்சு இரத்தம் ஓடும் இழிவான மக்கள் இனம் இலங்கைத் தமிழர்தானே.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

கருத்து வறட்சியென்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுதான் இது. மனிதநேயமற்ற விதண்டாவாதிகளுடன் இனிமேல் பேசிப்பயனில்லை என்று ஒருவர் முடிவுசெய்யும்போது, அதனை தனது வெற்றியாகவும், தனது மனிதநேயமற்ற கருத்தினை முன்னையவர் ஏற்றுக்கொண்டும் விட்டார் என்றும் ஒருவர் பசப்புவது சுத்தமான கருத்து வறட்சியே அன்றி வேறில்லை, கடந்து சென்றுவிடுங்கள்!

இன்னும் இரண்டு மாதங்கள் கடந்த பின்னர் தமிழ் சிறி கூறியதன் அர்த்தம் புரியும். 

பொறுமையுடன் இருந்து பாருங்கள், அப்போது "(இந்த முடிவை உக்ரேன் முதலே எடுத்திருந்தால்) உக்ரேன் போருக்குள் அகப்பட்டதை/தள்ளிவிடப்பட்டதை முதலே தவிர்த்திருக்கலாம்(இத்தனை அழிவுகளையும்)" என்று கூறுவீர்கள். 

😉

Edited by Kapithan
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விளங்க நினைப்பவன் said:

உலக மகிழ்ச்சி நாடுகளின் லிஸ்ரை ஐக்கிய நாடுகள் சபை இன்று வெளியிட்டு இருக்கிறதாம் நான் விரக்தியில் பார்க்கவில்லை.ஏனெனில் எந்த நாடுகள் வரும் என்று தெரிந்தது தானே
1.ரஷ்யா
2.பெலாரஸ்
3.சீனா
4.வட கொரியா

உங்களுக்கே  தெரியும்  நீங்கள் குறிப்பிடும் நாட்டு மக்களின்  தனிமனித உரிமைகள் சுதந்திரங்கள் எத்தகையவை என்று???

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

கருத்து வறட்சியென்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுதான் இது. மனிதநேயமற்ற விதண்டாவாதிகளுடன் இனிமேல் பேசிப்பயனில்லை என்று ஒருவர் முடிவுசெய்யும்போது, அதனை தனது வெற்றியாகவும், தனது மனிதநேயமற்ற கருத்தினை முன்னையவர் ஏற்றுக்கொண்டும் விட்டார் என்றும் ஒருவர் பசப்புவது சுத்தமான கருத்து வறட்சியே அன்றி வேறில்லை, கடந்து சென்றுவிடுங்கள்!

தயவு செய்து இதை பதிவத்துக்கு மன்னித்து கொள்ளுங்கள் 

நீங்கள் கூறும் அதே குற்றத்தையே நீங்களும் இன்னும் சிலரும் செய்கிறீர்கள் 
மேற்குலகின் குள்ள நரித்தனத்தை கூற வந்தவர்களுக்கு .... ரஷ்ய ஆதரவாளர்கள் 
படடம் ஏன் சூடுகிறீர்கள்? இது கருத்து வறட்ச்சி இல்லையா?
சிலர் அதுக்கும் கீழே இறங்கி தனிமனித தாக்குதலாக கூட எழுதுகிறார்களே? 
நீங்களும் சுட்டி காட்டி இருந்தீர்கள் (நன்றி) 

மேலோட்ட்மாக இங்கு வாசிக்கும்போது யாரும் ரஷ்ய படை எடுப்பை ஆதரிக்கவில்லை 
ஆனால் இந்த மேற்கு உலகின் குள்ள நரித்தனத்தைத்தான் எதிர்க்கிறார்கள் 

இந்த போரில் அழிவது உக்கரைன் 
அழிக்கப்படுவது ரஷிய + மேற்குலகால் 

இதில் யார் லாபம் பெறுகிறார்கள் ? 
என்ற அரசியல் கண்ணோட்டம் உங்களிடம் இல்லாததை எண்ணி கொஞ்சம் மன சஞ்சலம் 

இன்று உதவி எனும் பேரில் மேற்கு நாடுகள் அள்ளிக்கொடுத்து 
உக்ரைன் இராணுவம் ஏவும் ஏவுகணைகள் அனைத்தும் 
இன்னமும் 2-3 வருடங்களில் காலாவதியாக இருக்கும் 
அமெரிக்க ரைத்தான் (Raytheon)  லொக்கி மார்ட்டின் Lockee Martin)   போயின்( Boeing)  மற்றும் பிரிடிஷ் பி எ யி (BAE) 
தயாரிப்புகள் ஆகும். இவைகள் அனைத்தும் அமெரிக்க பிரித்தானிய குடிகளின் வரிப்பணத்தில் 
அவர்களிடம் கொள்வனவு செய்து காலாவதியாக இருந்த இவற்றை பல மில்லியன் டாலர்கள் லாபமும் போனஸும்  அவர்களுக்கு கொடுத்து வாங்கி அயல் நாடான ரஸ்யாவிடம் பகையை வளர்க்க உக்கரைன் 
புகைவிட்டுக்கொண்டு இருக்கிறது 

ஜெர்மனி பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் 35% மேலான இயறகை வாயு மற்றும் எரிபொருளை 
ரஸ்யாவிடம் இருந்தே பெறுகிறார்கள் .... ஒத்து ஊதிய பலனுக்கு இனி சொந்த நாட்டு மக்களுக்கு விலை உயர்வையும்  வரியை உயர்த்துவதை தவிர வேறு வழி  இல்லை என்றாலும் வரும் டிசம்பர் மாத குளிர்காலம் 
தொடங்கும்போது பற்றாக்குறையை தீர்க்க இதுவரை எந்த தீர்வும் இல்லை.
இப்போது இலங்கையை பரிசக்கிக்கும் ஐரோப்பிய வாழ் தமிழர்கள் அதே போன்றதொரு நிலைக்குள் சிக்க 
குறைந்த பட்ஷம் 35% சாத்தியம் உண்டு. இல்லையேல் இவர்கள் மீண்டும் ரஸ்யாவிடமே கையேந்த போகிறார்கள்  அப்போ இந்த போர்க்குற்ற பைல்கள் அலுமாரிக்குள் வைத்து இறுக்க பூட்டிடப்படும் .

அகதிகள் ஆகிய உக்ரைனியர்கள் நாடு நாடாக அலைவார்கள் இப்போ பூ கொடுத்து அழைப்பவர்கள் 
அவர்கள் பசிக்காக திருடியும் வருமானம் தேடி குறைந்த ஊதியத்திற்கு சமரசம் செய்து வேலைகளை பெறும்போது  தங்கள் வேலைகளை திருடுகிறார்கள் நாட்டை சீரழிகிறார்கள் என்று குமுறுவார்கள். 

அழிந்துபோன உக்ரைனை கட்டி தருவதாக கூறி (இலங்கைக்கு சீனா வந்ததை கசப்புடன் கடன் வலையில் சிக்க வைக்கிறார்கள்) என்று முதலை கண்ணீர் விட்டவர்கள் கிளம்புவார்கள் அதே ஐ எம் எப் கடன் திட்டத்துடன்  

மாறாக ரஸ்யா உக்ரைனை கைப்பற்றினாலும் ...
அழிந்த உக்ரைனின் அழிவுகள் அழிவுகள்தான் ஐநாவில் யாராலும் வாய்திறக்க முடியாது 
காரணம் புட்டின் பேசுவதில் நியாயம் இருக்கும் குள்ளநரிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் 
வார்த்தை பிரயோகம் இருக்கும். படையெடுப்புக்கு முதல்நாள் இரவு புடின் பைடனுடன் ஒன்றரை மணி நேரம் பேசினார்  அவர் தவறாக பேசியதை (அவர் தப்பானவராக இருந்தால்) நாட்டு மக்களுக்கு போட்டு காட்டலாமே ? முடியாது. ரஷிய செய்தி நிறுவனங்களை இருட்டடிப்பு செய்வதை தவிர மேற்குற்கு இப்போ வேறு வழி  இல்லை ......அதைத்தான் செவ்வனே செய்கிறார்கள். 

ஒவ்வாரு 10 வருடத்துக்கு ஒருமுறை இரு பெரிய நாடுகளுக்கான போர் ஆயுத தயாரிப்பாளர்களுக்கு வேண்டும்  இல்லையேல் பெரும் நஷடம் கொண்டு பல ஆயுதங்கள் காலாவதியாகிப்போகும் 
ஒன்றில் நண்பராக்கி பெரும்தொகையை விற்பார்கள் ( 80 களில் சதாம் இப்படித்தான் மாட்டினார் என்றால் இப்போ  சவூதி அரேபியா தைவான்) 
இல்லையென்றால் ஜனநாயகத்தை கொண்டுவர அமெரிக்க தனது பக்கவாக்கியங்களுடன் (ஆதரவு நாடுகள்)  தானே எங்காவது இறங்கும் 
அல்லது இப்படி வடிவேலுவை மாட்டி விடுவதுபோல உக்கிரைன் பாகிஸ்தான் போன்ற நாடுகளை இழுத்து விடுவார்கள். 

விளையாட்டு விளையாடாக ஒருபுறம் இருக்க தற்போதைய விலைவாசியை சமாளிக்க 
ராய்தான் லொக்கி மார்டின்  பி ஏ ஈ கம்பெனிகளின் பங்குகளை வாங்கி கொள்ளுங்கள் 
இப்போதே 6-10% லாபம் போர் தொடங்கிய நாளில் இருந்து வந்துள்ளது  

https://stockcharts.com/c-sc/sc?s=RTX&p=D&b=5&g=0&i=0&r=1647709143901

  • Like 6
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

ரஞ்சித் சசிவர்ணம் வகையறாக்கள் நடுநிலைவாதிகளாகி காட்டி தாங்கள் ஏதோ மகாஞானிகள்ன்புத்தர்கள் அன்பை போதிப்பவர்கள் எண்டு காட்ட துடிப்பவர்கள்.. தூங்குபவனை எழுப்பலாம் இவர்களைப்போல் தூங்குவதாக நடிப்பவர்களை எழுப்பமுடியாது.. 

அதெல்லாம் இருக்கட்டும் தலை.. நீ வா தலிவா.. மறுபடி வந்து எழுதியதே பெரிய சந்தோசம் நமக்கு.. மறுபடியும் தலை களத்தில இருங்கொருச்சுடா..💪💪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதரின் ஆய்வு சரிதான். ஆனால் ரஷ்யாவின் பூட்டின் மேற்குநாடுகளின் ஆயுதக்கம்பனிகளுக்கு இலாபம் சம்பாதிக்க தனது நாட்டின் படையினரையும், படைகலங்களையும் மொக்குத்தனமாகப் பலிகொடுக்கின்றார் என்றும் சொல்லலாம். அல்லது ரஷ்யாவும் தமது காலாவதியாகும் ஆயுதங்களையும் வீணாக்காமல் உக்கிரேனை அழிக்கவும், புதிய ஹைபர்சோனிக் மிசையில்களை பரிசோதனை செய்யவும் கெட்டித்தனமாகச் செயற்படுகின்றது என்றும் சொல்லலாம். 

சிலர் ஆயுதக் கம்பனிகளில் முதலிட்டு பணம் சம்பாதிக்கலாம். சிலர் மேற்கின் எண்ணெய்க் கம்பனிகளில் முதலிட்டு பணம் சம்பாதிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ரஞ்சித் சசிவர்ணம் வகையறாக்கள் நடுநிலைவாதிகளாகி காட்டி தாங்கள் ஏதோ மகாஞானிகள்ன்புத்தர்கள் அன்பை போதிப்பவர்கள் எண்டு காட்ட துடிப்பவர்கள்.. தூங்குபவனை எழுப்பலாம் இவர்களைப்போல் தூங்குவதாக நடிப்பவர்களை எழுப்பமுடியாது.. 

அதெல்லாம் இருக்கட்டும் தலை.. நீ வா தலிவா.. மறுபடி வந்து எழுதியதே பெரிய சந்தோசம் நமக்கு.. மறுபடியும் தலை களத்தில இருங்கொருச்சுடா..💪💪

உண்மை தான் ஓணாண்டியாரே மனிதம் வறண்ட, சிந்தனை சிதைந்த உங்களை போன்ற "தொகையறாக்கள்" மத்தியில் எம்மை போன்ற "வகையறாக்கள்" மஹா ஞானிகளாக, புத்தர்களாகதான் தெரிவார்கள். ரஷியாவின் "அடாவடிதனமான", "அவசரத்தனமான"  உக்ரைன் போரில் பாதிக்கப்படும் அப்பாவி மக்களுக்கு ஆத்மார்த்த ஆதரவினை தெரிவித்துக்கொண்டு உங்களை பொருட்படுத்தாமல் கடந்து போகிறோம்.🙏

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

மருதரின் ஆய்வு சரிதான். ஆனால் ரஷ்யாவின் பூட்டின் மேற்குநாடுகளின் ஆயுதக்கம்பனிகளுக்கு இலாபம் சம்பாதிக்க தனது நாட்டின் படையினரையும், படைகலங்களையும் மொக்குத்தனமாகப் பலிகொடுக்கின்றார் என்றும் சொல்லலாம். அல்லது ரஷ்யாவும் தமது காலாவதியாகும் ஆயுதங்களையும் வீணாக்காமல் உக்கிரேனை அழிக்கவும், புதிய ஹைபர்சோனிக் மிசையில்களை பரிசோதனை செய்யவும் கெட்டித்தனமாகச் செயற்படுகின்றது என்றும் சொல்லலாம். 

சிலர் ஆயுதக் கம்பனிகளில் முதலிட்டு பணம் சம்பாதிக்கலாம். சிலர் மேற்கின் எண்ணெய்க் கம்பனிகளில் முதலிட்டு பணம் சம்பாதிக்கலாம்.

ரஷ்ய உக்ரைன் போர் சாம்பிள் தான் 
ஒரிஜினல் போர் சீன தைவான் தான் 

மேற்கு உலகு என்ன செய்யும் என்பதை இப்போ நூல் விட்டு பார்க்கிறார்கள் 
ரஸ்யாவிற்கு பொருளாதார தடை விதித்தது போல எழுந்த மாத்திரத்தில் 
சீனாவுடன் முண்ட முடியாது . சீனவிடம்தான் ரர் மாற்றியல் கையிருப்பில் உண்டு 
தைவான் போரும்  தொடங்கினால் மேற்குக்கு ரேர் (rare Material) மாற்றியலும் இல்லை சிப்பும் (chip) இல்லை.
இப்போதே அமெரிக்க ஜேர்மன் வாகன உற்பத்திகள் சிப் தட்டுபாடடால் தள்ளாடுகிறது 

இதில் இன்னொரு சோதனையும் செய்து அவர்களுக்கு வெற்றி ஆகி இருக்கிறது 
அதுதான் ஆப்ரிக்க தெற்காசிய நாடுகள் மேற்குக்கு எதிராக அல்லது ஆதரவு இல்லாத 
வாக்கு செலுத்தி இருக்கிறார்கள் 

ஈரான் ரஷ்ய வெனிசுவேலா நைஜீரியா எரிபொருள் கையிருப்பு அண்ணளவாக 50% ஆகும் 

சீனா அழகாக புள்ளிவைத்து வருகிறது 
கோலம் போடும்போதுதான் இந்த வெங்காயங்களுக்கு 
போர் மூலம் அழிவுதான் மிஞ்சும் என்பது புரியும் 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

ரஷ்ய உக்ரைன் போர் சாம்பிள் தான் 
ஒரிஜினல் போர் சீன தைவான் தான் 

உலக வளங்களைச் சூறையாடத்தான் போர்கள் நடக்கின்றன. எனினும் சந்தைப் பொருளாதாரத்தில் தங்கி இருக்கும் மேற்கும், ரஷ்யாவும், சீனாவும் இன்னோர் சமநிலைப் புள்ளியை நோக்கி நகர்வார்கள். அப்போது போர் நிற்கும். இந்த உக்கிரேன் போரில் ரஷ்யாவின் கை ஓங்கினால் தைவான் சீனா வசமாவது  விரைவில் நடக்கும்.

அதற்கு மக்களைப் பலிகொடுக்கப்படுதை நியாயப்படுத்தமுடியாது, ஆதரிக்கவும் முடியாது. சிங்கள இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து தப்ப இடம்பெயர்ந்து அவலப்பட்ட அனுபவம் உள்ள எவரும் உக்கிரேனிய மக்களின் அவலங்களைப் புரிந்துகொள்வர். அப்படி அனுபவம் இல்லாமல் அகதியாகவோ, வேறு வழிகளிலிலோ புலம்பெயர் நாடுகளுக்கு வந்த தமிழருக்கு இடப்பெயர்வின் வலிகள் புரியாது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஒருவருக்கு உக்ரைனை ஆக்கிரமிப்பதற்காக மக்களை கொன்று, குடியிருப்புகளை அழிக்கும் ரஷ்ய சர்வாதிகாரி புரினின் சகுனப் பிழையாக வேண்டும் என்று விரும்புவது நச்சு இரத்தம் ஓடும் இழிவான இலங்கை தமிழர்களாக தெரிகின்றது.  சர்வாதிகாரி புரினை ஒரு சூப்பர் ஹீரோவாக காண்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா மீது விதிக்கப்படும் பொருளாதார தடைகளால் மூன்றாம் உலக ஆசிய/ஆபிரிக்க நாடுகளுக்கு செல்லும்  கோதுமை மற்றும் உலர் உணவு நிவாரணங்கள் தடைப்பட்டுள்ளனவாம்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இங்கே ஒருவருக்கு உக்ரைனை ஆக்கிரமிப்பதற்காக மக்களை கொன்று, குடியிருப்புகளை அழிக்கும் ரஷ்ய சர்வாதிகாரி புரினின் சகுனப் பிழையாக வேண்டும் என்று விரும்புவது நச்சு இரத்தம் ஓடும் இழிவான இலங்கை தமிழர்களாக தெரிகின்றது.  சர்வாதிகாரி புரினை ஒரு சூப்பர் ஹீரோவாக காண்கின்றார்.

என்னுடைய பெயரைக் குறிப்பிட்டு எழுதுங்கள். மட்டுறுத்தினரிடம் முறையிடமாட்டேன்.

இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க என்று காலை பிரார்த்த்னை கேட்டு வளர்ந்தவன் நான். இன்னொருவனது வேதனையில் புளகாங்கிதம் அடையமாட்டேன். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nunavilan said:

DbAcDIdVAAAz4O8?format=jpg&name=medium

மண்ணுக்குள் தலையைப் புதைத்தால் இந்தப் படமெல்லாம் தெரியவா போகிறது ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

உலக வளங்களைச் சூறையாடத்தான் போர்கள் நடக்கின்றன. எனினும் சந்தைப் பொருளாதாரத்தில் தங்கி இருக்கும் மேற்கும், ரஷ்யாவும், சீனாவும் இன்னோர் சமநிலைப் புள்ளியை நோக்கி நகர்வார்கள். அப்போது போர் நிற்கும். இந்த உக்கிரேன் போரில் ரஷ்யாவின் கை ஓங்கினால் தைவான் சீனா வசமாவது  விரைவில் நடக்கும்.

அதற்கு மக்களைப் பலிகொடுக்கப்படுதை நியாயப்படுத்தமுடியாது, ஆதரிக்கவும் முடியாது. சிங்கள இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து தப்ப இடம்பெயர்ந்து அவலப்பட்ட அனுபவம் உள்ள எவரும் உக்கிரேனிய மக்களின் அவலங்களைப் புரிந்துகொள்வர். அப்படி அனுபவம் இல்லாமல் அகதியாகவோ, வேறு வழிகளிலிலோ புலம்பெயர் நாடுகளுக்கு வந்த தமிழருக்கு இடப்பெயர்வின் வலிகள் புரியாது.

அதை யார் இங்கு யாழ் களத்தில் நியாய படுத்துகிறார்கள்?

இப்போ அது அநியாயம் என்று விளக்கு பிடிக்கும் மேற்கு இதைத்தானே 
இவ்வளவு காலமும் செய்ததே என்றுதான் கூறுகிறார்கள் 

இவர்கள் செய்யும்போது அது அநியாயம் என்று தெரியவில்லையா? 

  • Like 3
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

உலக வளங்களைச் சூறையாடத்தான் போர்கள் நடக்கின்றன.

மற்றவனின் சொத்துக்களை களவெடுத்து திண்டு ஏப்பம் விடுற இனம்தான் ஆங்கிலேய இனம். களவெடுத்து தின்னுறது எண்டது அதுகளின்ரை ரத்தத்திலை ஊறினது.ஆசியாவை பிடிச்சுதுகள்  களவெடுத்துகள்.ஆபிரிக்காவை பிடிச்சுதுகள் அங்கையும் களவெடுத்துகள்.வட அமெரிக்காவுக்கு போச்சுதுகள். அங்கை களவெடுக்காமல் அங்கை வாழ்ந்த செவ்விந்திய இனத்தையே அழிச்சுதுகள்.இது தங்கடை நாடு எண்டுதுகள்...அவுஸ்ரேலியாவுக்கு போச்சுதுகள் அங்கையும் அதே வேலையை செய்துகள்.அங்கை இருந்த மூதாதையரை அழிச்சு ஒடுக்கி அதையும் தங்கடை நாடு எண்டுதுகள். இன்னொரு இனத்தை அழிச்சு சூரியன் அஸ்தமிக்காத இராச்சியம் எண்டுதுகள்.களவெடுத்த கோஹினூர் வைரத்தை கிழவி இப்பவும் தலையிலை வைச்சுக்கொண்டு ரோசம் மானமில்லாமல் திரியுது.கேட்டால் பரிசாய் தந்தவையாம்.

இவ்வளவு *** (சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம்) வேலையளை செய்த ஆங்கில உலகத்துக்கு வக்காளத்து வாங்குது ஒரு கூட்டம்.

Edited by குமாரசாமி
மெருகூட்டப்பட்டுள்ளது 😎
  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, விளங்க நினைப்பவன் said:

இங்கே ஒருவருக்கு உக்ரைனை ஆக்கிரமிப்பதற்காக மக்களை கொன்று, குடியிருப்புகளை அழிக்கும் ரஷ்ய சர்வாதிகாரி புரினின் சகுனப் பிழையாக வேண்டும் என்று விரும்புவது நச்சு இரத்தம் ஓடும் இழிவான இலங்கை தமிழர்களாக தெரிகின்றது.  சர்வாதிகாரி புரினை ஒரு சூப்பர் ஹீரோவாக காண்கின்றார்.

வியட்னாமில் அமெரிக்கா செய்ததை எப்படி பார்க்கின்றீர்கள் சார்?

உக்ரேனை ரஷ்யா தனது பாதுகாப்பிற்காக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைக்கின்றது. அவ்வளவுதான்....இதைத்தான் ஈழத்திலும் இந்தியா செய்தது.இவ்வளவு தூரத்தில் இருக்கும் அமெரிக்காவுக்கு உக்ரேனில் தேவையென்ன?

புட்டின் சர்வாதிகாரி என்றால் சீனாவில் சனநாயக ஆட்சியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

மற்றவனின் சொத்துக்களை களவெடுத்து திண்டு ஏப்பம் விடுற இனம்தான் ஆங்கிலேய இனம். களவெடுத்து தின்னுறது எண்டது அதுகளின்ரை ரத்தத்திலை ஊறினது.ஆசியாவை பிடிச்சுதுகள்  களவெடுத்துகள்.ஆபிரிக்காவை பிடிச்சுதுகள் அங்கையும் களவெடுத்துகள்.வட அமெரிக்காவுக்கு போச்சுதுகள். அங்கை களவெடுக்காமல் அங்கை வாழ்ந்த செவ்விந்திய இனத்தையே அழிச்சுதுகள்.இது தங்கடை நாடு எண்டுதுகள்...அவுஸ்ரேலியாவுக்கு போச்சுதுகள் அங்கையும் அதே வேலையை செய்துகள்.அங்கை இருந்த மூதாதையரை அழிச்சு ஒடுக்கி அதையும் தங்கடை நாடு எண்டுதுகள். இன்னொரு இனத்தை அழிச்சு சூரியன் அஸ்தமிக்காத இராச்சியம் எண்டுதுகள்.களவெடுத்த கோஹினூர் வைரத்தை கிழவி இப்பவும் தலையிலை வைச்சுக்கொண்டு ரோசம் மானமில்லாமல் திரியுது.கேட்டால் பரிசாய் தந்தவையாம்.

இதெல்லாம் உண்மைதான். எவர் இல்லையென்றது?

8 hours ago, குமாரசாமி said:

இவ்வளவு *** (சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம்) வேலையளை செய்த ஆங்கில உலகத்துக்கு வக்காளத்து வாங்குது ஒரு கூட்டம்.

யார் இவர்கள்? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Maruthankerny said:

அதை யார் இங்கு யாழ் களத்தில் நியாய படுத்துகிறார்கள்?

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை ஆதரித்து ஓணாண்டி மேலே எழுதியிருக்கின்றார். ஆக்கிரமிக்கும் ரஷ்யப்படைகள் மக்களையும், அவர்களின் வாழிடங்களையும் அழிக்கவில்லையா?  அழிவுகளை ஏற்படுத்தாமல் ஆக்கிரமிக்க பூட்டின் புதிதாக உத்திகளை வகுத்திருக்கின்றார் என்றும் சொல்வார்கள். 

17 hours ago, Maruthankerny said:

இப்போ அது அநியாயம் என்று விளக்கு பிடிக்கும் மேற்கு இதைத்தானே 
இவ்வளவு காலமும் செய்ததே என்றுதான் கூறுகிறார்கள் 

இவர்கள் செய்யும்போது அது அநியாயம் என்று தெரியவில்லையா? 

மேற்கு செய்தது அநியாயம், குறிப்பாக அமெரிக்கா பிறநாடுகளில் ஐ.நா. அனுமதி இல்லாமல் படைகளை அனுப்பி அழிவுகளை மேற்கொண்டது எல்லாம் வரலாறுதான். அவற்றைக்கொண்டு ரஷ்யாவின் அநியாயயங்களை நியாயப்படுத்தமுடியாது. முன்னர் உங்கள் ரேர்ண், இப்ப எங்கள் ரேர்ண் என்று சொல்லுவது போலிருக்கிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.