Jump to content

சீமான் பேட்டி: "நடந்ததை நான் தேர்தலாகவே பார்க்கவில்லை"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் பேட்டி: "நடந்ததை நான் தேர்தலாகவே பார்க்கவில்லை"

  • ஆ.விஜய் ஆனந்த்
  • பிபிசி தமிழ்
 

சீமான்

பட மூலாதாரம், NAAM TAMILAR KATCHI/FB

 

படக்குறிப்பு, சீமான்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஐந்தாவது இடத்தை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. மாநகராட்சி, நகராட்சி ஆகியவற்றில் ஓர் இடத்தைக்கூட அக்கட்சி பெறவில்லை. 

இந்நிலையில் ` தி.மு.கவும், பா.ஜ.கவும் பேசி வைத்துக் கொண்டு இந்தத் தேர்தலில் செயல்பட்டுள்ளனர். நேர்மையாக தேர்தலை எதிர்கொண்டதாக ஸ்டாலின் சொல்வாரா?' எனக் கேள்வியெழுப்புகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 12,607 இடங்களுக்குக் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 21 மாநகராட்சிகள் உள்பட பெரும்பான்மையான நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை தி.மு.க கூட்டணியே கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி, பா.ம.க, அ.ம.மு.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் தனித்துக் களமிறங்கின.

இதில், மாநகராட்சிகளில் நாம் தமிழர் கட்சி 2.51 சதவீத வாக்குகளையும் நகராட்சிகளில் 0.74 சதவீத வாக்குகளையும் பேரூராட்சிகளில் 0.80 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. இதில், பேரூராட்சிகளில் ஆறு கவுன்சிலர் பதவிகளை மட்டுமே அக்கட்சி பெற்றுள்ளது. மாநகராட்சி, நகராட்சி ஆகியவற்றில் ஓர் இடத்தைக்கூட பெறவில்லை.

"ஏன் இப்படியொரு நிலை ஏற்பட்டது?" என தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்டோம். 

"நான் மூன்றாவது, நான்காவது இடத்துக்கெல்லாம் சண்டையிடவில்லை. முதலாவது இடத்துக்கு வருவதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறேன். இந்தமுறை தேர்தலாகத்தான் இது நடந்ததா? மத்தியில் ஆள்பவர்களும் மாநிலத்தில் உள்ளவர்களும் பேசி வைத்துக் கொண்டுதான் செயல்படுகிறார்கள். நோட்டாவுக்குக் கீழே ஆர்.கே.நகரில் வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சி, இத்தனை இடங்களைப் பிடித்ததாகப் பேசிக் கொள்கிறார்கள். பணம் கொடுக்காமல் அராஜகம் செய்யாமல் கள்ள ஓட்டு போடாமல் இந்தத் தேர்தலை சந்தித்தார்களா?'' எனக் கேள்வியெழுப்புகிறார் சீமான்.

தேர்தலாகவே பார்க்கவில்லை

"இதனை ஒரு தேர்தலாகவே நான் பார்க்கவில்லை. இவை அனைத்தும் முடிவு செய்யப்பட்ட ஒன்று. பல இடங்களில் வாக்குப்பெட்டிகள் சீல் உடைக்கப்பட்டு திறந்தே வந்தன. அதை எடுத்து ஆவணப்படுத்தி எங்கள் கட்சியின் நிர்வாகிகள் வெளியிட்டனர். சென்னையில் தொடக்கத்தில் 32 சதவீத வாக்குகள் பதிவாகின. மாலை 5 முதல் 6 மணி வரையில் கொரோனா நோயாளிகள் வாக்குப்பதிவு செய்ய நேரம் ஒதுக்கப்பட்டது. அந்த ஒரு மணிநேரத்தில் 12 சதவீத வாக்குகள் பதிவாகி, 44 சதவீதமாக மாறியது. அவ்வளவும் கள்ள வாக்குகள். கொரோனா நோயாளிகள் அனைவரும் வந்து வாக்களித்தார்களா?," என்று கேட்டார் சீமான்.

மேலும் இது குறித்துப் பேசிய சீமான், "மாம்பலத்தில் வென்ற பா.ஜ.க வேட்பாளர், கோட்சேவை தலைவராக ஏற்றுக் கொண்டு, `காந்தியைக் கொன்றது சரி' எனப் பேசியவர். அவருக்கு எதிராக தி.மு.க ஏன் நேரடியாகப் போட்டியிடவில்லை? எந்த காங்கிரஸ் தலைவர் அங்கே போய் பிரசாரம் செய்தார்?

பாஜகவும் திமுகவும் ஒப்பந்தம் செய்துகொண்டு போட்டியிட்டதாக எதை அடிப்படையாகக் கொண்டு சொல்கிறீர்கள் என்று கேட்டபோது அதற்கு அவர் நேரடியாக எந்தக் காரணத்தையும் கூறவில்லை. 

 

சீமான்

பட மூலாதாரம், NAAMTAMILARKATCHIOFFL FACEBOOK PAGE

 

படக்குறிப்பு,  சீமான்

தேர்தல் செலவுகளுக்கே நாம் தமிழர் கட்சி சிரமப்பட்டதாக கூறியிருந்தார்களே? என்று அவரிடம் கேட்டபோது, 

"ஆமாம். இந்தமுறை 3,000 பேரைத்தான் வேட்பாளர்களாகப் போட முடிந்தது. அதற்கு மேல் கட்டுத்தொகை (டெபாசிட்) கட்டுவதற்குப் பணம் இல்லை. துண்டறிக்கை, சுவரொட்டி ஆகியவற்றை அச்சசடிப்பதற்கும் பணம் இல்லை. இருப்பினும், முடிந்தவரையில் சண்டையிட்டோம்.

மக்களிடம் வெறுப்புணர்வு வரும்போது கிளர்ச்சி வரும். கொரோனா என்றொரு நோய்த் தொற்று வரும், அது உலகத்தைப் புரட்டிப் போடும் என யாராவது எதிர்பார்த்தார்களா? அதேபோல ஒரு பெரும்காற்று வீசும்போது இங்கு எதுவுமே இருக்காது. அதுபோல ஒரு மக்கள் புரட்சி இங்கே வெடிக்கும்," என்றார். 

சட்டமன்றத் தேர்தலில் 7 சதவீத வாக்குகளைப் பெற்ற நாதக, அடுத்து வந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அந்த அளவு வாக்குகளைப் பெறவில்லையே?'' என்று கேட்டபோது, 

"நாங்கள் யாரிடம் நம்பிக்கையைப் பெற வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? தி.மு.க ஆட்சியின் சாதனைக்காகத்தான் மக்கள் வாக்களித்தார்களா? ஆட்சியின் சாதனையைச் சொல்லி வாக்கு கேட்டார்களா? மிக்சி, கிரைண்டர், ஹாட்பாக்ஸ் ஆகியற்றைக் கொடுத்து வாக்கு கேட்டார்கள். இதில், சாதனை என்ற வார்த்தை எதற்கு?" என்று பதில் அளித்தார் சீமான். 

அப்படியே பார்த்தாலும், மேற்கு மண்டலம் முழுக்க தி.மு.க பக்கம் வந்ததற்குப் பணம் மட்டுமே காரணம் எனக் கூறமுடியுமா? என்று கேட்டபோது, 

"மேற்கு மண்டலத்தில் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் 700 கோடி ரூபாயை செலவிட்டனர். ஒரு வார்டுக்கு மட்டும் 75 கோடி செலவிட்டுள்ளனர். இதை நான் சொல்லவில்லை. ஊடகங்கள் எழுதியுள்ளன. 

பணம் மட்டுமே காரணம் இல்லையென்றால் எதற்காக பணம் கொடுக்க வேண்டும்?

ஓட்டுக்கு நான்காயிரம், பத்தாயிரம் எனக் கொடுப்பதற்குப் பணம் உள்ளது. குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாயும் பொங்கலுக்கு ஐந்தாயிரம் கொடுப்பதற்கும் பணம் இல்லை. நகைக்கடன் தள்ளுபடிக்கும் பணம் இல்லை. காரணம், அரசாங்கத்திடம் இருக்க வேண்டிய பணம் முன்னாள், இந்நாள் அமைச்சர்களிடம் இருக்கிறது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறவர்கள், பணம் கொடுத்து வாக்கு கேட்க மாட்டார்கள்."

 

சீமான்

பட மூலாதாரம், NAAM TAMILAR

 

படக்குறிப்பு, சீமான்

 

முன்கூட்டியே தேர்தலுக்குத் தயாராகாததும் நாம் தமிழர் கட்சியின் பின்னடைவுக்கான காரணமா? என்று கேட்டபோது, 

"ஆமாம். தேர்தல் வருவது குறித்து அவர்களுக்கெல்லாம் முன்கூட்டியே தெரியும். எங்களுக்குத் தெரியவில்லை. `திரள் நிதி திரட்டல்' முறையில் நிதி கேட்டோம். அதில் ஐந்தாறு லட்சம்தான் கிடைத்தது. சற்று முன்கூட்டியே நிதி திரட்டியிருந்தால் 30 லட்ச ரூபாய் வரையில் கிடைத்திருக்கும். அதை வைத்துக் கூடுதலாக களப்பணி செய்திருக்க முடியும். பல இடங்களில் சாதி, ஊர் கட்டுமானம் எனக் கூறி, `போனமுறை அந்த சாதிக்குக் கொடுத்தோம். இந்தமுறை இந்த சாதிக்குக் கொடுக்கிறோம் எனப் பேசி முடிவெடுத்துவிட்டனர்".

இஸ்லாமியர், கிறிஸ்துவர்

"இஸ்லாமியர் என்றால் ஜமாத்தில் பேசி முடிவு செய்கின்றனர். `கிறிஸ்துவர் என்றால் இவருக்குத்தான் வாக்கு' என பிஷப் கூறிவிடுகிறார். இவையெல்லாம் அனைவரும் அறிந்ததுதான். டெல்லியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஓர் இடத்தில்கூட வெல்லாத கெஜ்ரிவால், அடுத்து வந்த சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்துவிட்டார். இங்கு முதலிடத்துக்காக வருவதற்காகத்தான் போட்டி போடுகிறேன்" என்றார் சீமான். 

இன்னும் அடித்தட்டு வரையில் உங்கள் கட்சி செல்ல வேண்டியிருப்பதை இந்தத் தேர்தல் உணர்த்தியுள்ளதா? என்று கேட்டபோது, 

"நாங்கள் நிச்சயமாக செல்வோம். தொடக்கத்தில் இருந்து தி.மு.கவை ஸ்டாலினே கரையேற்றினாரா? எடப்பாடியே அ.தி.மு.கவை ஆரம்பத்தில் இருந்து கரையேற்றினாரா? `கடந்த 3 ஆண்டுகளில் உழைத்து பா.ஜ.கவை முன்னேற்றினோம்' என அண்ணாமலை கூறுகிறார். 

நான் பிறக்கும்போது இருந்தே ஆர்.எஸ்.எஸ் இருக்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பு இருக்கிறது. அதன் அரசியல் வடிவம்தானே பா.ஜ.க. நான் படிக்கும் காலத்திலேயே இவர்கள் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்தனர்."

22 மாநகராட்சி வார்டுகளில் பா.ஜ.க வென்றுள்ளதே? என்று கேட்டபோது, 

"இதுவே வெற்றி என்றால் எப்படி? ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது மத்தியில் வலிமையாக இருந்தனர். ஆனால், நோட்டாவுக்குக் கீழே வாக்குகளைப் பெற்றனர். தி.மு.கவும் பா.ஜ.கவும் நல்ல புரிதலுடன்தான் உள்ளனர். இவ்வளவு வளர்ச்சியைக் கண்டுவிட்டதாக சொல்கிறவர்கள், நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடட்டுமே? அன்றைக்கு இவர்களின் வலிமை என்ன என்பது தெரிந்துவிடும். மதம், சாதி பேசும் இவர்களா அல்லது மண், மக்கள் நலம் பேசும் நாங்கள் இருக்கிறோமா எனப் பார்த்துவிடலாம்" என்றார் சீமானம். 

மூன்றாவது இடம் எங்களுக்குத்தான் என பா.ஜ.கவும் காங்கிரஸ் கட்சியும் மோதிக் கொள்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்? என்று கேட்டபோது, 

அவர்கள் அந்த இடத்தில்தான் கடைசி வரையில் இருக்க முடியும். பா.ஜ.க தனித்து நின்றாலும் பல இடங்களில் அ.தி.மு.க அவர்களை ஆதரித்தது. தி.மு.கவும் ஆதரித்தது. இவை அனைத்தும் வெளியில் தெரியவில்லை, அவ்வளவுதான். எனக்கு வாக்களித்தால் பா.ஜ.க வந்துவிடும் என தி.மு.க ஏன் கூறியது? அப்படியானால் அவர்கள் வரட்டும் என்றுதானே விரும்புகிறது?''.

பாஜக வளரவில்லையா?

அப்படியானால் பா.ஜ.க வளரவில்லை என்கிறீர்களா? என்று கேட்டபோது, 

"பா.ஜ.கவுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏன் வந்தது? மாநகராட்சி மாமன்றத்தில் பதவியேற்று இவர்கள் எதாவது செய்வார்கள் என நம்பித்தான் மக்கள் வாக்களித்தார்களா? பா.ஜ.க வெற்றி பெற்றால் குடிதண்ணீர், சாலை வசதி கிடைக்குமா? இவர்கள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் இந்த வசதிகள் எல்லாம் செய்யப்பட்டுவிட்டதா?"

 

ஸ்டாலின்-சீமான்

பட மூலாதாரம், TNDIPR

 

படக்குறிப்பு, ஸ்டாலின்-சீமான்

உள்ளாட்சிக்கான 70 சதவீத நிதியை மத்திய அரசு கொடுப்பதாகத்தானே பா.ஜ.க பிரசாரம் செய்தது? என்று கேட்டபோது, 

"இதுவரையில் என்ன செய்தார்கள்? மாநிலத்துக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி தொகையை இன்னும் தரவில்லை என முதலமைச்சரே கூறுகிறார். இந்தியாவிலேயே மத்திய பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் பணத்தை வைத்துதான் அவர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். 

எங்களுக்கு வரவேண்டிய 12,000 கோடி ஜி.எஸ்.டி நிலுவையைத் தொகை கொடு என்கிறோம். முதலில் அதனைத் தரட்டும். `நிதி வலிமை இல்லை' என்று கூறிவிட்டு, பிறகு நாங்கள்தான் கொடுக்கிறோம் என்பது. எத்தனை காலத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்காக கல்லை மட்டுமே நடுவார்கள்? நான்கு கற்களையாவது அடுக்கிக் காட்டட்டுமே. அந்தக் கல்லையும் உதயநிதி எடுத்துக் கொண்டு போய்விட்டார்" என்றார் சீமான். 

அ.தி.மு.கவுக்கு ஏற்பட்ட பின்னடைவை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தக் கேள்விக்கு பதில் அளித்த சீமான், 

"தேர்தலில் பின்னடைவு, முன்னடைவு என்றெல்லாம் எதுவும் இல்லை. ஒருமுறை வரும், மறுமுறை இறங்குவது என்பது இயல்பானதுதான். காற்று எப்போதுமே சீராக வீசுவதில்லை. பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்கு வந்து, `நான் நேர்மையாக இந்தத் தேர்தலை எதிர்கொண்டு வென்றேன்' என தி.மு.க தலைவர் ஸ்டாலினை கூறச் சொல்லுங்கள். நான் அரசியலையே நிறுத்திக் கொள்கிறேன். 

இதை ஒரு வெற்றி எனப் பேசிக் கொள்வதே வெட்கக்கேடானது. `நாங்கள் கைப்பற்றினோம்' என்கிறார் ஸ்டாலின். கைப்பற்றுவது என்பது கையில் கிடைப்பதையெல்லாம் எடுத்துக் கொண்டு ஓடுவது. வாக்குகளைப் பெற்றோம் என்று கூறுவதை விட வாங்கினோம் என அவர்கள் கூறுவதுதான் சரி," என்றார் சீமான். 

https://www.bbc.com/tamil/india-60523544

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

இனி தமிழ்நாட்டில் ஈழ அரசியல் ஐஞ்சியத்துக்கு எடுபடாது, வேண்டுமென்றால் புலம் பெயர்தேசங்களில் இருந்து குலுக்கல்(வசூலிப்பு) கிடைக்கும்.🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, zuma said:

இனி தமிழ்நாட்டில் ஈழ அரசியல் ஐஞ்சியத்துக்கு எடுபடாது, வேண்டுமென்றால் புலம் பெயர்தேசங்களில் இருந்து குலுக்கல்(வசூலிப்பு) கிடைக்கும்.🤪

உங்கள் பையிலிருந்து எவ்வளவு கொடுத்தீர்கள்? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

உங்கள் பையிலிருந்து எவ்வளவு கொடுத்தீர்கள்? :cool:

பொக்கற்றில் கைவைக்கப்படாது??

எங்களுக்கு  எப்பொழுதுமே  கேள்வி ஞானம்  தான்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

பொக்கற்றில் கைவைக்கப்படாது??

எங்களுக்கு  எப்பொழுதுமே  கேள்வி ஞானம்  தான்?

கொடுப்பவர்களே ஏதோ ஒரு காரணத்திற்காக அமைதி காக்கும் போது இடையில் இருப்பவர்கள் பொங்கியெழுவதன் மர்மம் ஏனோ தெரியவில்லை? 😄

Link to comment
Share on other sites

40 minutes ago, குமாரசாமி said:

உங்கள் பையிலிருந்து எவ்வளவு கொடுத்தீர்கள்? :cool:

 

15 minutes ago, குமாரசாமி said:

கொடுப்பவர்களே ஏதோ ஒரு காரணத்திற்காக அமைதி காக்கும் போது இடையில் இருப்பவர்கள் பொங்கியெழுவதன் மர்மம் ஏனோ தெரியவில்லை? 😄

யான் என்ன விசில் அடிச்சான் குஞ்சா?. இயன்ற வரை சொந்த புத்தியில் நடக்கிறவன். 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, zuma said:

 

யான் என்ன விசில் அடிச்சான் குஞ்சா?. இயன்ற வரை சொந்த புத்தியில் நடக்கிறவன். 🤪

உண்மையாகவா? 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

கொடுப்பவர்களே ஏதோ ஒரு காரணத்திற்காக அமைதி காக்கும் போது இடையில் இருப்பவர்கள் பொங்கியெழுவதன் மர்மம் ஏனோ தெரியவில்லை? 😄

கொடுப்பவர்களுக்கு காரணங்களை விளங்கிக்கொள்ளும் அறிவு இருந்தால் கொடுக்காமலேயே இருந்திருப்பார்கள்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

உண்மையாகவா? 🤪

உங்களுக்கு இன்னுமா  புரியவில்லை அண்ணா 

கடைசியில் இடப்பட்ட இந்த  குறியின் அடையாளம்  யார்  என்று???🤪

ஏதாவது உதவி  செய்பவனைப்பார்த்து  அறிவற்ற  செயல்  என்பவர்கள் எமது தேசத்திலேயே 70களிலுயே முளைத்து  விட்டார்கள்.😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

கொடுப்பவர்களுக்கு காரணங்களை விளங்கிக்கொள்ளும் அறிவு இருந்தால் கொடுக்காமலேயே இருந்திருப்பார்கள்😜

தமிழருக்குள் அதிகமான அறிவாளிகள் இருப்பதினால் இன்னும் சொந்தமாக நாடுமில்லை.விடிவுகளும் இல்லை.. 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

உங்களுக்கு இன்னுமா  புரியவில்லை அண்ணா 

கடைசியில் இடப்பட்ட இந்த  குறியின் அடையாளம்  யார்  என்று???🤪

ஏதாவது உதவி  செய்பவனைப்பார்த்து  அறிவற்ற  செயல்  என்பவர்கள் எமது தேசத்திலேயே 70களிலுயே முளைத்து  விட்டார்கள்.😭

விசுகர்! நாம் வேறு பட்ட கோணத்தில் சிந்திக்கின்றோம்.
அவர்களோ தங்கள் கூப்பன் அட்டை பற்றி சிந்திக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

"இஸ்லாமியர் என்றால் ஜமாத்தில் பேசி முடிவு செய்கின்றனர். `கிறிஸ்துவர் என்றால் இவருக்குத்தான் வாக்கு' என பிஷப் கூறிவிடுகிறார்.

செந்தமிழன் சீமான் அண்ணா இஸ்லாமியரையும் கிறிஸ்துவர்களையும் சரியாக புரிந்துகொள்ளாமல் பேசுகின்றார், இந்தப் பேச்சு அபாயமானது. முருகனை முப்பாட்டன் என்றுகொண்டு மகன் காதுகுத்துக்கு குலசாமிக்கு கடா வெட்டுவது போன்ற விடயங்கள் அவர் சார்ந்து நிக்கும் அணி குறித்த அச்சத்தை இந்த இரு சமய மக்களுக்கு ஏற்படக்கூடும்.  இந்த மக்களின் ஆதரவை பெறும் முயற்சியில் சீமான் அண்ணா முயலவேண்டும். 

தமிழகத்தில் தேர்தல்களுக்கு பணம் கொடுக்கப்படுவது உண்மை என்றாலும் மக்கள் அதை வங்கிக் கொண்டு தமக்குப் பிடித்த கட்சிகளுக்கே பெருமளவில் வாக்களித்து வருகின்றனர். இல்லாவிட்டால் மத்திய மாநில அரசுகளின் சகல அதிகாரங்களையும் காவல்துறை தேர்தல் ஆணையத்தையும் கைக்குள் வைத்திருந்து போட்டியிட்ட அதிமுகவை திமுகவால் ஒருபோதும் தோற்கடித்து இருக்கமுடியாது. 

விரும்பியோ விரும்பாமலோ தமிழகம் ஒரு திராவிட மண் என்பது ஏற்றுக்கொள்ளவேண்டிய உண்மை. திராவிட எதிர்ப்பை கையில் எடுத்தபோதே சீமான் அண்ணா அரசியலில் தோற்றுவிட்டார் என்பது எனது கணிப்பு. திராவிட எதிர்ப்பு, மதவாதம் எதுவும் தமிழகத்தில் எடுபடப்போவதில்லை என்பதை சீமான் அண்ணா புரிந்துகொண்டு அரசியல் செய்தால் ஓரளவு முன்னேற வாய்ப்பு உண்டு. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.