Jump to content

ஒருபுறம் பேச்சுவார்த்தை,மறுபுறம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கோரிக்கை! அதிபர் ஜெலன்ஸ்கி திட்டம்தான் என்ன?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஒருபுறம் பேச்சுவார்த்தை,மறுபுறம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கோரிக்கை! அதிபர் ஜெலன்ஸ்கி திட்டம்தான் என்ன?

Pictures-of-the-Week-Global-Photo-Galler

கீவ்: போர் தொடர்பாக பெலராஸ் நாட்டில் உக்ரைன்- ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், அதிபர் ஜெலன்ஸ்கி இப்போது தெரிவித்துள்ள கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் உத்தரவைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர் தொடுத்தது. இந்தப் போர் 4 நாட்களைக் கடந்த 5ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.

இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். போர் காரணமாக அங்கு வான்வழி மூடப்பட்டுள்ளதால், மாற்று வழிகளைப் பயன்படுத்தி வெளிநாட்டினரைத் தாயகம் அழைத்து வரும் நடவடிக்கையில் பல்வேறு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

அமைதி பேச்சுவார்த்தை

இந்தச் சூழலில் அண்டை நாடான பெலாரஸ் நாட்டில் வைத்து உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக உள்ளதாக ரஷ்யா அறிவித்தது. முதலில் பெலாரஸ் நாட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த மறுத்த உக்ரைன், வேறு ஐரோப்பிய நகரங்களில் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனத் தெரிவித்தது. இருப்பினும், இதற்கு ரஷ்யா மறுத்த நிலையில், கடைசியால் பெலராஸ் நாட்டிலேயே இன்று இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம்

அமைதி பேச்சுவார்த்தை தொடங்கி உள்ள நிலையில், விரைவில் போர் முடிவுக்கு வரும் என அனைவரும் நிம்மதி அடைந்தனர். இந்தச் சூழலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்களை உடனடியாக சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். இது குறித்து இன்று அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், 'புதிய சிறப்பு நடைமுறை மூலம் உக்ரைனை உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்க்க வேண்டும் என முறையிடுகிறோம்.

ஐரோப்பியர்களுடன் ஒன்றாகச் சமமாக இருக்க வேண்டும். அதுவே நியாயமானது என்று நான் நம்புகிறேன்.

நம்பாதீர்கள்

ரஷ்யா நடத்திய தாக்குதலின் முதல் 4 நாட்களில் மட்டும் 16 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 45 பேர் காயமடைந்துள்ளனர். உக்ரேனியர்கள் யார் என்பதை உலகுக்குக் காட்டியுள்ளனர். ரஷ்யா இப்போது என்னவாக உள்ளது என்பதும் உலகத்திற்குக் காட்டப்பட்டுள்ளது. ரஷ்ய வீரர்கள் போரை நிறுத்த வேண்டும். ஆயுதங்களைக் கீழே போட வேண்டும். உங்கள் தளபதிகளை நம்பாதீர்கள். மாஸ்கோவில் இருந்து நடக்கும் போலி பிரசாரத்தை நம்பாதீர்கள். உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்' என்று அவர் தெரிவித்தார்.

உயிரிழப்பு

மேலும் ரஷ்யா இந்த போர் தொடங்கியது முதல் 4,500க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். ராணுவ நடவடிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதை ரஷ்ய ராணுவமும் ஒப்புக் கொண்டுள்ளது. இருப்பினும், எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. உக்ரைன் அரசு அறிவித்த உயிரிழந்தோரின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிக பேர் உயிரிழந்திருக்கலாம் என்று ஐநா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

பெரும் பரபரப்பு

கடந்த இரண்டு, மூன்று மாதங்களாகவே உக்ரைன் எல்லையில் ரஷ்யா தொடர்ந்து ராணுவத்தைக் குவித்து வந்தது. அப்போது மேற்குலக நாடுகளிடம் ரஷ்யா வைத்த முக்கிய கோரிக்கை நேட்டோ அமைப்பில் உக்ரைனைச் சேர்க்கக் கூடாது என்பது தான். அதாவது உக்ரைன் என்பது முழுவதுமாக அமெரிக்க அல்லது ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் சென்றுவிடக் கூடாது என்பதைத் தான் புதின் வலியுறுத்தினார். இந்தச் சூழலில் ஒருபுறம் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ள நிலையில், மறுபுறம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

https://tamil.oneindia.com/news/international/ukrainian-president-volodymyr-zelensky-urged-the-european-union-to-grant-immediate-450317.html

டிஸ்கி :

எழரைய கூட்டாதீங்கப்பா .. சமாதானமா போங்கப்பா ..

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆரோ இவரை உசுப்பி விடுகினம்..😊

IMG-20220228-234255.jpg

Link to comment
Share on other sites

செலன்ஸ்கியை வைத்து தான் மேற்கு ஊடகங்கள் புட்டினையும் ரஸ்யாவையும் தரமிரக்குகிறார்கள்.  மக்கள் உண்மை நிலையை அறிய விடாது  ரஸ்ய ஊடகங்களையும் தடை செய்கிறார்கள். எங்காவது  ஒரு மேற்கு ஊடகத்தில் ரஸ்ய அகதிகள் பற்றி எழுதி உள்ளார்களா என்றால் இல்லை. இது தான் இவர்களின் ஊடக தர்மம்.
செலன்ஸ்கி யூக்ரேனில் உள்ளார் என்பதும் ஒரு  படம் காட்டல் என நான் நினைக்கிறேன்.

 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

செலன்ஸ்கியை வைத்து தான் மேற்கு ஊடகங்கள் புட்டினையும் ரஸ்யாவையும் தரமிரக்குகிறார்கள்.  மக்கள் உண்மை நிலையை அறிய விடாது  ரஸ்ய ஊடகங்களையும் தடை செய்கிறார்கள். எங்காவது  ஒரு மேற்கு ஊடகத்தில் ரஸ்ய அகதிகள் பற்றி எழுதி உள்ளார்களா என்றால் இல்லை. இது தான் இவர்களின் ஊடக தர்மம்.
செலன்ஸ்கி யூக்ரேனில் உள்ளார் என்பதும் ஒரு  படம் காட்டல் என நான் நினைக்கிறேன்.

உண்மை..  இவ்ளா சிலவழிச்சு யுத்தம் செய்து கெட்டபெயரும் வாங்கி மினக்கெட்டுக்கொண்டிருக்காமல் ரஷ்யாவுக்குத் தேவை என்ன.. இந்த ஆட்சியாளர்களை நீக்கவேணும்.. நேட்டோவில் சேர்வதை தடுக்கவேனும்.. அதுக்கு இஸ்ரேல் ஈரானில் அணு விஞ்ஞானிக்கு செய்ததுபோல் அமெரிக்கா பின்லேடனுக்கு பாகிஸ்தானில் செய்ததுபோல் ஒரு ரகசிய நடவடிக்கை மூலம் உக்ரேனிய கிளர்ச்சியாளர்களையும் இணத்து இவரை தூக்கிட்டு பழியை உக்ரேனிய கிளர்ச்சியாளர்கள் நாங்கள்தான் செய்தோம் எண்டு ஒத்துக்கொள்ள செட் அப் பண்ணி இருந்தா கேம் முடிஞ்சிருக்கும்.. இல்லை மேற்குலகு செய்ததுபோல் இன்னொரு சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கவிட்டு இருக்கலாம்.. எட்டி தொடுர மூக்கை சுத்தி தொட்டுக்கொண்டு இருக்காமல்..

 • Like 2
Link to comment
Share on other sites

12 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஆரோ இவரை உசுப்பி விடுகினம்..😊

IMG-20220228-234255.jpg

செலன்ஸ்கி தான் காமெடியன் என்பதை அடிக்கடி நிரூபிக்கிறார்!!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Eppothum Thamizhan said:

செலன்ஸ்கி தான் காமெடியன் என்பதை அடிக்கடி நிரூபிக்கிறார்!!

என்ன தான் இருந்தாலும் ரஷ்யா க்கு அடி பலம் தான்.  ரஷ்யா எதிர்பார்த்திராத அளவான அழிவுகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்

Link to comment
Share on other sites

3 hours ago, Sabesh said:

என்ன தான் இருந்தாலும் ரஷ்யா க்கு அடி பலம் தான்.  ரஷ்யா எதிர்பார்த்திராத அளவான அழிவுகளுக்கு 

உலகம் vs ரஸ்யா என்றாகி விட்டது.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 hours ago, nunavilan said:

உலகம் vs ரஸ்யா என்றாகி விட்டது.

ரஷ்யா அணி
----------
சிரியா
ஈரான்
சீனா
அஜர்பைஜான்
பெலாரஸ்
அர்மீனியா
கஜகஸ்தான்
கிர்கிஸ்தான்
கியூபா

வடகொரியா

உக்ரைன்
----------
அமெரிக்கா
பிரிட்டன்
இஸ்ரேல்
ஜெர்மனி
ஜப்பான்
துருக்கி
பெல்ஜியம்
கனடா
டென்மார்க்
பிரான்ஸ்
ஐஸ்லாந்து
இத்தாலி
நார்வே
நெதர்லாந்து
போர்ச்சுகல்
லிதுவேனியா
ஜப்பான்
தென்கொரியா
ஆஸ்திரேலியா

நடுநிலை

-------------

இந்தியா
இலங்கை

குழப்ப நிலை

----------------

பாகிஸ்தான்

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 1/3/2022 at 04:22, nunavilan said:

செலன்ஸ்கியை வைத்து தான் மேற்கு ஊடகங்கள் புட்டினையும் ரஸ்யாவையும் தரமிரக்குகிறார்கள்.  மக்கள் உண்மை நிலையை அறிய விடாது  ரஸ்ய ஊடகங்களையும் தடை செய்கிறார்கள். எங்காவது  ஒரு மேற்கு ஊடகத்தில் ரஸ்ய அகதிகள் பற்றி எழுதி உள்ளார்களா என்றால் இல்லை. இது தான் இவர்களின் ஊடக தர்மம்.
செலன்ஸ்கி யூக்ரேனில் உள்ளார் என்பதும் ஒரு  படம் காட்டல் என நான் நினைக்கிறேன்.

அடடா, செய்தி துணுக்கு ஒன்றை எங்கோ தவற விட்டு விட்டேன் போல இருக்கு .

உக்ரேய்ன் எப்பவாம் ரஸ்சியாவிற்குள் உள்ளிட்டு அடி போட்டு ரஸ்சியரை அகதிகளாக்கினவை ? 

சொல்லவேயில்லயே செலன்ஸ்கி.. நாட்டி பாய் ....

Link to comment
Share on other sites

2 hours ago, சாமானியன் said:

அடடா, செய்தி துணுக்கு ஒன்றை எங்கோ தவற விட்டு விட்டேன் போல இருக்கு .

உக்ரேய்ன் எப்பவாம் ரஸ்சியாவிற்குள் உள்ளிட்டு அடி போட்டு ரஸ்சியரை அகதிகளாக்கினவை ? 

சொல்லவேயில்லயே செலன்ஸ்கி.. நாட்டி பாய் ....

நல்ல விளக்கம். அவர் சொன்னது உக்ரைனில் உள்ள ரஷ்ய மொழி பேசும் மக்களை !!

 • Thanks 1
Link to comment
Share on other sites

7 hours ago, சாமானியன் said:

அடடா, செய்தி துணுக்கு ஒன்றை எங்கோ தவற விட்டு விட்டேன் போல இருக்கு .

உக்ரேய்ன் எப்பவாம் ரஸ்சியாவிற்குள் உள்ளிட்டு அடி போட்டு ரஸ்சியரை அகதிகளாக்கினவை ? 

சொல்லவேயில்லயே செலன்ஸ்கி.. நாட்டி பாய் ....

நீங்கள் மேற்கு ஊடகத்தை மட்டும் பார்ப்பதால் வந்த வினை என நினைக்கிறேன். 

 • Haha 1
Link to comment
Share on other sites

10 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ரஷ்யா அணி
----------
சிரியா
ஈரான்
சீனா
அஜர்பைஜான்
பெலாரஸ்
அர்மீனியா
கஜகஸ்தான்
கிர்கிஸ்தான்
கியூபா

வடகொரியா

உக்ரைன்
----------
அமெரிக்கா
பிரிட்டன்
இஸ்ரேல்
ஜெர்மனி
ஜப்பான்
துருக்கி
பெல்ஜியம்
கனடா
டென்மார்க்
பிரான்ஸ்
ஐஸ்லாந்து
இத்தாலி
நார்வே
நெதர்லாந்து
போர்ச்சுகல்
லிதுவேனியா
ஜப்பான்
தென்கொரியா
ஆஸ்திரேலியா

நடுநிலை

-------------

இந்தியா
இலங்கை

குழப்ப நிலை

----------------

பாகிஸ்தான்

இம்ரான் கான் போன கிழமை ரஸ்யாவில் தான் இருந்தார். மோடியை நாசிஸ்ட் என்றார். மேற்குலகையும் மறைமுகமாக சாடினார். பாகிஸ்தான் குழம்பவில்லை.

இலங்கை, இந்தியா மதில் மேல் பூனைகள்.
உக்ரேன் பக்கம் சுவீடன், பின்லாந்தும் வரும்.

ரஸ்யாவின் பக்கம் சிரியா மட்டும் மேற்குக்கு எதிராக கருத்து தெரிவிததது. சீனா பொருளாதார ரீதியில் உதவலாம். 

Link to comment
Share on other sites

யார் யாரின் பக்கம் நின்றாலும்,

1. வரும் வாரங்களில் ரஷ்யா உக்ரேனின் அனேக பகுதிகளை கைப்பற்றி விடும், தலை நகர் உட்பட
2. ரஷ்யா மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலில் மாட்டுப்படும்
3. சீனாவின் பொருளாதார உதவிகள் ரஷ்யாவுக்கு தாரளமாக கிடைக்கும்
4. உலக வல்லரசுகள் ரஷ்யாவுடன் ஏதாவது ஒரு உடன்பாட்டுக்கு வந்தே தீரும். இல்லாவிடின் கொரனாவால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கின் மற்றும் உலகின் பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படும்.

சிலவேளை இது தான் சாக்கு என்று சீனா தாய்வானை ஆக்கிரமிக்க நினக்கலாம். அவ்வாறு நிகழ்வின் உலகப் போக்கே மாறிவிடும்

11 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ரஷ்யா அணி
----------
சிரியா
ஈரான்
சீனா
அஜர்பைஜான்
பெலாரஸ்
அர்மீனியா
கஜகஸ்தான்
கிர்கிஸ்தான்
கியூபா

வடகொரியா

 

+ நிழலி 😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ரஷ்யா அணி       (இதன் அணியில் அதன் நண்பர்கள்.)
----------
சிரியா
ஈரான்
சீனா
அஜர்பைஜான்
பெலாரஸ்
அர்மீனியா
கஜகஸ்தான்
கிர்கிஸ்தான்
கியூபா

வடகொரியா

உக்ரைன்      (இதன் அணியில் அமெரிக்காவும் அதன் அடிமைகளும்.)
----------
அமெரிக்கா
பிரிட்டன்
இஸ்ரேல்
ஜெர்மனி
ஜப்பான்
துருக்கி
பெல்ஜியம்
கனடா
டென்மார்க்
பிரான்ஸ்
ஐஸ்லாந்து
இத்தாலி
நார்வே
நெதர்லாந்து
போர்ச்சுகல்
லிதுவேனியா
ஜப்பான்
தென்கொரியா
ஆஸ்திரேலியா

நடுநிலை     (இதைவிட்டால் இவர்களுக்கு வேறு வழிஇல்லை)

-------------

இந்தியா
இலங்கை

குழப்ப நிலை     (தொப்பியை எந்தப்பக்கம் போடுவது?)

----------------

பாகிஸ்தான்

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப வடிவாகவே கோர்த்து விடுகினம்.👌

IMG-20220303-121656.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 2/3/2022 at 21:03, nunavilan said:

நீங்கள் மேற்கு ஊடகத்தை மட்டும் பார்ப்பதால் வந்த வினை என நினைக்கிறேன். 

ஹ்ம்ம் , அடி சறுக்கா விட்டால் அது யானையே இல்லை ..

மன்னிக்க வேண்டும் அன்பர்  எனது தவறான புரிதலுக்கும் சிலேடைக்கும்.

எழுபத்தேழில் ஊரில் இருந்த சிங்கள பேக்கரிக்காரனை ஊர்ச் சனம் எல்லாம் சேர்ந்து அடித்துக் கலைத்தது ஞாபகம் வருகிறது ....

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.