Jump to content

படைத்துறையில் பயன்படுத்தப்படும் கலைச்சொற்கள் 1000+


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

training 35.jpg

 

எல்லா(hello)!

வணக்கம் மக்களே...

இங்கு படைத்துறையில் பயன்படுத்தக்கூடிய வகையில் 1000+ கலைச்சொற்களை தொகுத்து ஆக்கியுள்ளேன். அவற்றுள் என்னால் இயன்றளவு பழந்தமிழ்ச் சொற்களை கையாண்டுள்ளேன். இச்சொற்கள் படைத்துறை பற்றி எழுதுபவர்களுக்கு பெருமளவில் பயன்படும் என்று நம்புகின்றேன்!

 


''நாம் குறைந்த சொற்களை வைத்து எல்லாவற்றிற்கும் ஒப்பேற்றிவிடலாம் என்று எண்ணுகிறோம். அது பிழை... எப்பொழுதும் பேச்சில் சொற்றுல்லியம் தேவை; இல்லையெனில் பொருள் பிறழும்''


 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to படைத்துறையில் பயன்படுத்தப்படும் கலைச்சொற்கள்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 1 

training 41.jpg

 

  1. accoutrements or warlike costume - போர்க்கோலம், படைக்கோலம்
  2. advance command post - முன்னகர்வுக் கட்டளைப் பீடம்
  3. advance guard - முன்னகர்வுக் காவல்
  4. advance message center - முன்னகர்வுத் தகவல் மையம்
  5. advance unit - முன்னகர்வு அலகு
  6. advance zone- முன்னகர்வு வலயம்
  7. aerial observation - வான்வழி நோக்கம்
  8. aerial photograph - வான்வழி நிழற்படம்
  9. aerodrome - வான்புலம்
  10. aid in battle - படைத்துணை
  11. aide-de-camp - அணுக்கர், அணுக்கியர்
  12. aim miss- பணைத்தல், பிசகுதல்
  13. air advantage/air superiority - வானாதிக்கம்
  14. air area - வான் பரப்பு
  15. airbase - வான்தளம்/ வான்படைத் தளம்
  16. air defence command - வான் காப்புக் கட்டளை
  17. air force - வான்படை
  18. airborne troops - வான்வழிப் படையினர்
  19. aircraft warning service - வான்கல எழுதருகைச் சேவை
  20. air-landing troops - வான்-தரையிறங்கல் படையினர்
  21. airstrip- வான்பொல்லம்
  22. alert - விழிப்பு
  23. all-round defence/perimeter defence - முழுவட்ட வலுவெதிர்ப்பு
  24. alternate emplacement - திரி நிலைக்களம்
  25. alternating - திரித்தல்
  26. ambush - பதிதாக்கு(தல்)
  27. antidote - மாற்று
  28. anti-aircraft artillery intelligence service - வான்கல எதிர்ப்பு சேணேவி உளவுச் சேவை
  29. anti-tank ditch - தகரி எதிர்ப்புக் கிடங்கு
  30. anti-tank mine - தகரி எதிர்ப்புக் கண்ணிவெடி
  31. anti-tank mine field - தகரி எதிர்ப்புக் கண்ணிவயல் (தமிழீ. வழ.)
    • இலக்: "கண்ணிவயல் வெளியை பார்க்கும்போது..." 'வாகையின் வேர்கள்' குறுவெட்டிலிருந்து
  32. anti- tank weapons - தகரி எதிர்ப்பு ஆய்தங்கள்
  33. armaments - படைத் தளவாடங்கள்
  34. armistice - போர்தவிர்ப்பு
  35. area of dead bodies - பிணக்காடு
  36. armoured warfare - கவசப் போர்முறை
  37. armored force - கவசப்படை
  38. arms control - எஃகக் கட்டுப்பாடு
  39. arms race - எஃகப் போட்டி
  40. army and its appendages - படை பண்டாரம்
  41. army is defeated - படை முறிந்தது
  42. army list - படைப் பட்டியல்
  43. army of occupation- வல்வளைப்புப் படை
  44. army regulations - படை ஊழ்மைகள்
  45. army service area - படைச் சேவைப் பகுதி
  46. art of handling weapons of war - படைக்கலத்தொழில்
  47. artificial obstacles - செயற்கைத் தடங்கல்கள்
  48. artillery barrage - சேணேவி பல்லம்
    • பல்லம் - ஒரு பேரெண், அம்பு
      • ஒரே இடத்திற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பல எறிகணைகளை ஏவுதல்
  49. artillery battery - சேணேவி தொகுதி
  50. arrangement of actions - அடவுகள்
  51. assault / attack - தாக்கு(தல்)
  52. assault fire - தாக்கு வேட்டு/சூடு
  53. assembly area - திரள் மையம்
  54. assignment - இடுபணி
  55. aviation - வான்செலவு
  56. awareness/ watchfulness - விழிப்பு
  57. ballistics - எறிபடையியல்
  58. base unit - தள அலகு
  59. beach defence - உவர்க்கம்/ஆழி/பாரவரம்/வேலை/கானல் வலுவெதிர்ப்பு
  60. behaving treacherously as an army - படையறுத்தல்
  61. bellicosity - சண்டித்தனம்
  62. belligerence - போர்க்குணம்
  63. bomblets - குண்டுச்சில்
  64. boundary - எல்லை (ஒத்த சொற்கள் ஏராளம்)
  65. breakthrough - ஊடறுப்பு
  66. camouflage - உருமறைப்பு(தமிழீ.வழ)
  67. cannonade - பட்டடை (தொடர் வேட்டு)
  68. captive - பிடிக்கப்பட்டவர்
  69. carecare - புரவல், பராமரித்தல்
    • careful - புரவு, கவனம்
  70. casualties - இழப்புகள்; உயிர்ச்சேதம்
  71. caution - பேணம்
  72. cease-fire - போர்நிறுத்தம்
  73. censure- கண்டனம்
  74. cessation of hostilities - வைரக அறவுளி
  75. change - வேறுபாடு
  76. cluster bomb - கொத்தணிக் குண்டு
  77. coast artillery - கரையோரச் சேணேவி
  78. coastal force - கரையோரப் படை
  79. coastal frontier defense - கரையோர எல்லை வலுவெதிர்ப்பு
  80. coastal zone - கரையோர வலயம்
  81. coastwise sea lane - கரையோரக் கடல் வழி
  82. code - குழூஉக்குறி
  83. collateral damage - பக்கவாட்டுச் சேதம்
  84. collective fire - கூட்டு வேட்டு
  85. combined operation - இணைந்த நடவடிக்கை
  86. command - கட்டளை
  87. command post - கட்டளைப் பீடம்
  88. commissary - உணவுச்சாலை; உணவதிகாரி
  89. commotion of war/ mutiny - படைக் குழப்பம்
  90. communications - தொடர்பாடல்
  91. communication zone - தொடர்பாடல் வலயம்
  92. compartment - வகுயமைப்பு, வகுதரைக் கூறு
  93. completely prepared for action - அணியம்
  94. concealment - சுழிவு
  95. concentration - செறிவு
  96. cone of fire - வேட்டுக் கூம்பு
  97. conference call - கூடிக்கதை அழைப்பு
  98. consolidation - ?????
  99. containing action - கட்டுப்படுத்துதல் நடவடிக்கை
  100. containing force - கட்டுப்படுத்துதல் படை
  101. contour interval - தரையிடை வெளி
  102. contradiction - முரண்
  103. contrariety - மறுதலை, மாற்றுமை
  104. converging fire - காப்புச் சூடு/ கவர் வேட்டு
  105. convoy- தொடரணி/ஒழுகை
  106. counter - முறியடிப்பு, இகல்
  107. counterattack - இகல் தாக்குதல்
  108. counter-battery fire - இகல் சேணேவித் தொகுதி வேட்டு
  109. counter espionage - இகல் வேவு
  110. counter intelligence - இகல் -உளவு
  111. counter-offensive - இகல் -வலிதாக்குதலான
  112. counter-preparation - இகல் ஆயத்தம்
  113. counter-reconnaissance - இகல் வேவு
  114. court martial - படை நீதிமன்றம்
  115. cover - கவர், காப்பு
  116. covering force - காப்புப்படை/ கவர்ப்படை
  117. cruise missile - கலத்தூர் ஏவுகணை
  118. cryptographic security - குழூஉக்குறியீட்டுப் பாதுகாப்பு
  119. cryptography - மறையீட்டியல்
  120. danger space - இடர் வெளி
  121. decode - இயல்மொழிப்படுத்து
  122. defense area - வலுவெதிர்ப்புப் பரப்பு
  123. defense - வலுவெதிர்ப்பு | நன்றி: தமிழ்த்திரு. இராமகி ஐயா
  124. defensive coastal area - வலுவெதிர்ப்பான கரைப் பரப்பு
  125. defensive position - வலுவெதிர்ப்பான நிலை
  126. defensive sea area - வலுவெதிர்ப்பான கடற்பரப்பு
  127. defensive zone - வலுவெதிர்ப்பான வலயம்
  128. defilade fire - அன்னீள்ச் சூடு (அல்+நீள்)
  129. delaying action - தாமதிப்பு நடவடிக்கை
  130. delaying position - தாமதிப்பு நிலை
  131. denial - மறுதலிப்பு
  132. deploy troops - படையினரை களமிறக்கு
  133. desert - புறமாறு
  134. destruction by the march of an army- படையழிவு
  135. destruction fire - அழிப்பு வேட்டு
  136. detached post - பிரிவணி நிலை
  137. dictated order - சொல்வதெழுதிய கட்டளை
  138. difference - வேற்றுமை
  139. direct fire - நேர் வேட்டு
  140. direct pursue - நேர்ப் பிடித்தாத்துடர்
  141. discharge - பணிநீக்கு/ வெடிதீர்
  142. distributed fire - பரந்த வேட்டு
  143. distributing point - பகிர்வு மையம்
  144. distribution - பகிர்வு
  145. drone missile strike - வண்டு ஏவுகணைத் தெற்று/அடி
  146. dump - குவியல்
  147. echelon - படியணி
  148. effective range - தாக்கமுள்ள வீச்சு
  149. embedded journalist - உடனுறை ஊடகர்
  150. emplacement - நிலைக்களம்
  151. encamping with one's army - படையிறங்குதல், தண்டடித்தல்
  152. encircling force / enveloping force - சூழ்படை
  153. encode - குறிமுறைப்படுத்து
  154. encounter deaths - எதிர்ப்படு இறப்புகள்
  155. encounter killings - எதிர்ப்படுக் கொலைகள்
  156. enmity - பகைமை (ஒத்த சொற்கள் ஏராளம்)
  157. enemy - பகைவர் (ஒத்த சொற்கள் ஏராளம்)
  158. enemy front - பகைமுனை
  159. enemy's position- பகைநிலை
  160. enfilade - நீள்ச் சூடு
  161. engagement- மிண்டுதல்(செ.சொ.பே.மு)
  162. envelopment - சூழுகை
  163. escort சேமம்
    • escort force - சேமப்படை
    • Escorter - சேமக்காரன்
  164. espionage - உளவு
  165. establishing - தாவித்தல்
  166. estimate of the situation - நிலவர மதிப்பீடு
  167. evacuation - வெளியேற்றம்
  168. exchange - மாறு
  169. expedition - ஊராண்மை, படையெழுகை
  170. explosives - வெடிபொருட்கள்
  171. feint - பாசாங்கு
  172. field fortification - கள அரணம்
  173. field of fire - வேட்டுக் களம்
  174. field order - களக் கட்டளை
  175. fighting vigour - போர்நிறம்
  176. fighting spirit- போருணர்ச்சி
  177. fire - சூடு / வேட்டு
  178. fire control - வேட்டுக் கட்டுப்பாடு
  179. fire direction - வேட்டுத் திசை
  180. fire on targets of opportunity - வாய்த்த இலக்குக்கு வேட்டிடு
  181. fire power - சூட்டு வலிமை/ வேட்டு வலிமை
  182. fire superiority - சூட்டு ஆதிக்கம்/ வேட்டு ஆதிக்கம்
  183. fire support - சூட்டாதரவு/வேட்டாதரவு
  184. fixed fire / concentrated fire - செறிவுச் சூட்டு
  185. flank - கை
  186. flank patrol - கை சுற்றுக்காவல்
  187. flanking manoeuvre/ flanking attack - சுற்றிவளைப்பு
  188. fond of fighting - போரூக்கம் (போரிடும் மன எழுச்சி)
  189. force equipped for war - போர்ப்படை
  190. formation - உருவாக்கம்
  191. Forward Defense Lines (FDL) - முன்னரங்க நிலைகள் (தமிழீ.வழ)
  192. fragmentary orders - உதிரிக் கட்டளைகள்
  193. friendly fire - தற்படை வேட்டு
  194. front - முனை
  195. front line - முன்னரண்(தமிழீ.வழ)
  196. frontage - படைமுகம்
  197. frontal fire - முகப்பு வேட்டு
  198. going for skirmish - தாவடிபோ-தல்‌
  199. grazing fire - கிடை வேட்டு
  200. Guard பாதுகாவலர்
    1. Head guard - தலைக் காவலர்
  201. guerrilla warfare - கரந்தடிப் போர்முறை(தமிழீ. வழ.), ஒளிப்போர்முறை(சேரநா)
  202. guide - வழிகாட்டி
  203. harassing fire - அலைக்கழித்தல் வேட்டு
  204. helper - உதவியாளர்
  205. high-angle fire - மேற்கோண வேட்டு
  206. hostile - ஆகாத/வைரக (மிகவும் பொருத்தமான சொல்லே. பொருள் விளக்கத்திற்கு செ.சொ.பே.மு காண்க.. )
  207. hostile person - ஆகாதவர்/வைரகர்
  208. hostile fire - ஆகாத/வைரக வேட்டு
  209. immobilize - முடக்குதல்
  210. incendiary agent - நெருப்பன்
  211. indirect fire - மறைமுக வேட்டு
  212. individual equipment / personal equipment - படையாள் ஏந்தனம்
  213. infantry ammunition dump - காலாட்படைக் கணைக் குவியல்
  214. infiltration - ஊடுருவல்
  215. initial point/starting point - தொடக்க முனை
  216. initial requirements - தொடக்கத் தேவைகள்
  217. inshore patrol - உட்கடலோர சுற்றுக்காவல்
  218. instruments of war - போர்கருவிகள்
  219. intercept - இடைமறி; ஒற்றுக்கேள்
  220. intercepted information - ஒற்றுக்கேட்ட தகவல்/பற்றியம்
  221. interdiction fire - இடைநிறுத்து வேட்டு
  222. intermediate objective - இடைப்பட்ட நோக்கம்
  223. interpretation of information - தகவற் பொருள்கோடல்
  224. interval - இடைவேளை
  225. invasion - படையெடுப்பு
  226. invasion (by uproar & uprising) - கலாபம்
  227. left flank - இடது சிறகு
  228. lie in ambush - பதிவிரு
  229. listening posts - செயலறி நிலைகள்
  230. lock and load - கொளுவித் தாணி
  231. logistics - ஏற்பாடு
  232. loss of war - போரிழப்பு
  233. low-angle fire - தாழ்கோண வேட்டு
  234. main attack - முதன்மைத் தாக்குதல்
  235. main supply road - முதன்மை வழங்கல் வீதி
  236. maintenance - பேணுதல்
  237. maneuver - தடூகம்(தட + ஊகம்)
  238. marines - ஈரூடகப்படை (தமிழீ.வழ)
  239. martial law - படைச் சட்டம்
  240. mechanized cavalry - எந்திரமயப்பட்ட ஊர்திப்படை | நன்றி: தமிழ்த்திரு. இராமகி ஐயா
  241. mechanized infantry - எந்திரமயப்பட்ட காலாட்படை
  242. mechanized unit - எந்திரமயப்பட்ட அலகு
  243. meeting engagement - எதிர்கொள கலத்தல்/மிண்டுதல்
  244. message center - செய்தி நிலையம்
  245. military action - படைத்துறை நடவடிக்கை
  246. military balance - படைவலுச் சமநிலை (தமிழீ.வழ)
  247. military capability - படைய வல்லமை
  248. military equipment, devices like things - தளபாடம்/தளவாடம்
  249. military government - படைத்துறை அரசாங்கம்
  250. military information - படையத் தகவல்
  251. military intelligence - படைத்துறை உளவு/ படையப் புலனாய்வு(தமிழீ.வழ)
  252. military police - படையக் காவலர்
  253. military skill - போர்த்தினவு
  254. military strategy - படைத்துறை தடந்தகை/கேந்திரம்
  255. military strategist - படைத்துறை தடந்தகையாளர்/கேந்திரவாளர்
  256. military unit - படைத்துறை அலகு
  257. military zone - படைய வலயம்
  258. mobile armament - நடமாட்ட படைத் தளவாடங்கள்
  259. mobilize army - படை திரட்டு
  260. modes of battle - படைவிகற்பம்
  261. mopping up / clearing up - தேடுதல்/ அகற்றல் நடவடிக்கை
  262. morale - மனத்திண்மை
  263. motorized unit - ஊர்தி அலகு
  264. move / charge - நகர்வு
  265. mud bund- மண்ணரண் (தமிழீ.வழ)
  266. munitions - படைக்கலங்கள்/ படை
  267. natural obstacles - இயற்கைத் தடங்கல்கள்
  268. navigation - செலுத்துநெறி
  269. negation - மறை
  270. neutralize - தெழி
  271. neutralization fire - தெழி வேட்டு
  272. no-fire zone - மோதல் தவிர்ப்பு வலயம்(தமிழீ.வழ)
  273. no-fly zone - பறத்தல் தவிர்ப்பு வலயம்
  274. non-commissioned officer - ஆணையமற்ற அதிகாரி
  275. commissioned officer - ஆணையமுள்ள அதிகாரி
  276. normal barrage - வழமைப் பல்லம்
  277. normal fire zone - வழமை வேட்டு வலயம்
  278. obviate - தடையறுத்தல்
  279. oblique fire - சாய் வேட்டு
  280. observation post (OP)- நோக்கு நிலை (நோநி)
  281. obstacle - தடங்கல்
  282. office of commander - தள கருத்தம்
  283. offence - வலிதாக்குதல் (வலிந்த தாக்குதல் என்பதன் குறுகிய வடிவம்)
  284. offensive - வலிதாக்குதலான
  285. offensive weapon - வலிதாக்குதலுக்கான ஆய்தம்
  286. offshore patrol - புறக்கடலோரச் சுற்றுக்காவல்
  287. onset or meeting of armies in battle - படைமுகம்
  288. open hostility - புறப்பகை
  289. opponent - எதிரி
  290. opposite - எதிர்
  291. order of march - படைசெல் ஒழுங்கு
  292. outguard - புறக்காவலர்
  293. outflank - கடவுச்சூழ்
  294. overhead fire - மேல் வேட்டு
  295. overrun - பரம்பு
  296. pace - அடிவைப்பு
  297. parachute troops - பரக்குடைப் படையினர்
  298. patrol - சுற்றுக்காவல்
  299. penetration - மடுத்தல்
  300. phalanx - திணிநிலை - சேனையின்‌ செறிந்த நிலை
  301. plunging fire - குத்துவீழ் வேட்டு
  302. port of embarkation -ஏறுதுறை
  303. position, in - உரிய நிலையில்
  304. power of determination - துணிவுடைமை
  305. priority message - முன்னுரிமைச் செய்தி
  306. prisoners of war (PoW)- போர்ச் சிறையாட்கள்
    • those who are fettered in chains - கால்கள் தொடரியாற் பிணைக்கப்பட்டவர் = தளையாளர்
  307. prohibition - விலக்கம்
  308. Protect கா
    • protecting - காத்தல்
    • Protection - காப்பு
    • Protector - காப்பன், காப்பாள், காத்தவராயன்
    • இலக்கை - இலக்கு அணிந்திருக்கும்/சூழ்ந்திருக்கும் காப்பு
    • புறந்தரு - புறந்தரல் - புறந்தருதல் - புறந்தரம் - கைவிடப்பட்ட ஒன்றை/ஒருவரை காத்துதவுதல்
  309. pursue - பிடித்தாத்துடர்
  310. RADAR - கதுவீ
  311. raid - அதிரடி
  312. raise an army - படைகூட்டுதல்
  313. rallying point - பேரணி முனை
  314. rate of march - படைசெல் வீதம்
  315. readiness, in - ஆயத்த நிலையில்
  316. rearguard - கூழை
  317. reconnaissance - வேவு
  318. reconnaissance patrol - வேவுச் சுற்றுக்காவல்
  319. reconnoiter - வேவுகாண்
  320. recovery - மீட்சி
  321. refutation - மறுப்பு
  322. reinforcement - வலுவூட்டம்
  323. reliving the guard - காவல் மாற்றுதல்
  324. repel விரட்டியடி
    • Repulsion - விரட்டியடிப்பு
    • Repelling - விரட்டியடித்தல்
  325. requisition - தேவைக் கோரிக்கை
  326. rescue - மீட்பு
  327. rescue mission - மீட்பு நடவடிக்கை
  328. reserve force - இருப்புப்படை
  329. retreat - வென்னிடு
  330. retreating - வென்னிடுதல்
  331. revive - மீட்டெடு
  332. right flank - வலச் சிறகு
  333. riot- கலகம் - இரு குழுவார்/கூட்டத்தார் செய்யும் போர்
  334. risk - இக்கு
  335. rolling barrage - முன்னகர் பல்லம்
  336. routes of communication - தொடர்பாடல் தடங்கள்
  337. routine procedure - வழமை நடைமுறை
  338. safe-save  -
    • save/safe = ஓம்புதல் (காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்)
    • காப்பாற்றுதல் - இடர் அ ஊறின் போது கைதூக்கிவிட்டு ஓம்பி ஆற்றுதல்
  339. safeguard - இரங்கித்தல்
  340. salvage - அழிவுமீட்பு
  341. satire - அங்கதம்
  342. scout - சாரணர்
  343. scouting - சாரதல்
  344. searching fire - தேடுதல் வேட்டு
  345. security பாதுகாப்பு
    • secure= பாதுகா
    • securing = பாதுகாத்தல்
  346. seize eagerly or by force - கைப்பற்று
  347. seizure - கைக்கோள்
  348. shell proof shelter - எறிகணைத் தகை காப்பரண்
  349. shelter - காப்பரண்(தமிழீ.வழ)
  350. shrapnel - சிதறல் (தமிழீ.வழ)
  351. signal intelligence - குறிகை உளவு
  352. skirmish - தாவடி/ கைகலப்பு
  353. smokescreen - புகைத்திரை
  354. sortie - நடவடிக்கை பறப்பு
  355. special task force - விதப்பு/சிறப்பு பணிக்கடப் படை
  356. stages of attack - தாக்கு நிலை
  357. standard operating procedure - செந்தர நடவடிக்கை செயல்முறை
  358. state of war - போர் நிலவரம்
  359. strike - தெற்று/அடி
  360. straggler - நழுவுநர்
  361. strategic importance - தடந்தகை/கேந்திர முக்கியத்துவம்
  362. strategic missiles - தடந்தகை/கேந்திர ஏவுகணை
  363. strategic nuclear missiles - தடந்தகை/கேந்திர அணு ஏவுகணை
  364. stray bullet - வழிதவறிய சன்னம்
  365. strong negation - எதிர்மறை
  366. supply point - வழங்கல் முனை
  367. supporting fire - ஆதரவுச்சூடு
  368. supporting unit - ஆதரவு அலகு
  369. surface-to-air missile / SAM - மேற்பரப்பு-இருந்து-வான் ஏவுகணை
  370. surface-to-surface missile / SSM - மேற்பரப்பு-இருந்து-மேற்பரப்பு ஏவுகணை
  371. sweeping / zone fire - பரந்த வேட்டு
  372. tact and consideration - தந்திரமும் ஓர்வும்
  373. tactful move -தந்திரமிக்க நகர்வு
  374. tactical group - தந்திரமான குழு
  375. tactical obstacles - தந்திரமான தடங்கல்கள்
  376. tactical retreat - தந்திரமான வென்னிடல்/பின்வாங்கல்
  377. tactics - தந்திரங்கள் | நன்றி: தமிழ்த்திரு. இராமகி ஐயா
  378. take position - நிலையெடுக்கவும்
  379. target - இலக்கு, மச்சை
  380. target or aim of a gun - சரவியம்
  381. task - பணிக்கடம்
  382. technique - உத்தி; நுட்பம்
  383. time of attack / "H" hour - தாக்கும் நேரம்
  384. the treachery of an army or disloyalty - படைமறுத்தல்
  385. the direction of march - படைசெல் திசை
  386. threat - மிரட்டல்
  387. to carry on the war - படைசெய்தல், படை பண்ணுதல்
  388. to challenge to war - படை சாற்றுதல்
  389. to go on the expedition - படைபோதல்
  390. to become subordinate or submissive / to become powerless - படையறுதல்
  391. to search & enquire - திரக்குதல்
  392. touchhole - திரிவாய், வததிவாய், காது
  393. transference - மாற்றம்
  394. transport - போக்குவரவு
  395. trajectory - எறிபாதை
  396. traversing fire - குறுக்கு வேட்டு
  397. trick - சூழ்ச்சி
  398. triumphalism - வாகை / செருக்கு
  399. troop movement by air - வான்வழிப் படை நகர்வு
  400. troop-leading - படை இயவுதல்(வழி நடத்துதல்)
  401. truce - போரோய்வு
  402. uniform- சீருடை
  403. urgent call - கெதி அழைப்பு
  404. urgent message - கெதி செய்தி
  405. verbal order / oral order - வாய்மொழிக் கட்டளை
  406. vertical interval - செங்குத்து இடைவெளி
  407. veterans - பட்டறிவாளர்
  408. war correspondent - போர்க்கள செய்தியாளர்
  409. war council - போர் மன்றம்
  410. war crime - போர்க்குற்றம்
  411. war dead - போரில் மடிந்தோர்
  412. war desire - போர்நாட்டம்
  413. war drum - போர்முரசு
  414. war field - போர்க்களம்
  415. warmonger - போர்வெறியர்
  416. war of attrition - உராய்வுப் போர்
  417. war of nerves - தெம்புச்செறுப் போர்
  418. war of words/propaganda war - பரப்புரைப் போர்
  419. warfare - போர்முறை, பண்டனம்
  420. warhead - வெடியுளை
  421. warlord - போர்க் கிழார்
  422. warning - எழுதரு/ எழுதருகை
  423. warning order - எழுதருகை ஆணை
  424. watch - காவல், பாது
  425. Watchman - காவலாளி
  426. watchfulness/ vigilance - தூங்காமை
  427. weapons of mass destruction - பேரழிவு ஆய்தங்கள்
  428. wing - சிறகு
  429. withdrawal/retirement - பின்வாங்கல், வென்னிடல்
  430. zone defence - வலய வலுவெதிர்ப்பு
  431. zone of action - செயல் வலயம்
  432. zone of fire - வேட்டு வலயம்

 

இதை நான் 600 சொற்களாக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளேன். 

 

உசாத்துணை:

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 2

training 39.jpg

 

 

  1. air defenceவான்காப்பு (Literal meaning: Sky protection) (தமிழீ.வழ)
    • (ஒவ்வொரு நாடும் தனக்கென தனித்தனி பெயர்களால் Air defence- ஐக் குறிக்கும். அதுபோலவே எம்மிடமும் Air defence- ஐக் குறிக்க தனிச் சொல் இருக்கும் போது நாம் ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யக் கூடாது. | எ.கா: ராதா வான்காப்புப் படையணி )
  2. area bombardment - இடக் குண்டுவீசுகை
  3. assembly area - கூடுமிடம்
  4. assualt stage - தாக்கு நிலை
  5. battle/ war - ஆடல் - (பொதுச் சொல்)
  6. battle - சமர், விறப்பு, கதனம், கவனம், செயிர், ஓதனம், ஆரம், சிலீகம், ஆர்ப்பரவம், மறல், சரம் (எ.கா: அக்கராயன்குளச் சமர்)
    • மலை | மலைதல் | மலைப்பு - வெறியால் மயங்கி நேருக்கு நேர் பொருதல்
    • நிகர் | நிகர்த்தல் | நிகர்ப்பு - படை, வலி ஒப்புடன் பொருதல்.
    • சமம் - வலியாலும் கருவியாலும் ஒத்த இருபடைகள் கலந்து பொருது அழித்தல்.
      • இது பல விதமாம். அருஞ்சமம், செல்சமம், முன்சமம், பெருஞ்சமம், வெஞ்சமம், எழுசமம், பொருசமம், வெல்சமம், குழுஉச்சமம்
    • எழுகளம் - தோற்றோடிக்கொண்டிருந்த படை எழுச்சி பெற்று திருப்பி அடித்த களம். (எ.கா: புதுக்குடியிருப்புச் சமர். பின்வாங்கி பின்வாங்கி வந்து பேந்து 2009 இரண்டாம் மாதம் இங்கு ஒரு பெருத்த அடி சிங்களத்திற்கு கொடுக்கப்பட்டது.)
    • அடிபாடு - தொடர்ந்து வெற்றிக்காக நடக்கும் சண்டை - combat
    • மொய்த்தல் - பெருமை வலிமை காரணமாக நெருங்கி மொய்த்துச் செய்யும் சமர் (எ.கா: ஆனந்தபுரச் சமர்)
    • மலைவு - பூச்சூடிச் செய்யும் சமர்
    • செரு - செருக்குபற்றி ஏற்பட்ட பகை அழிக்க பொருதல்.
    • தாக்கு - படைவலி கொண்டு பாய்ந்து தாக்குதல்
      • இவை பலவிதமாம். அவற்றுள் சில: இருஞ்செரு, பொருசெரு, பல்செரு, நிலைச்செரு, ஆராச்செரு
      • செருக்களம் - அப்பேற்பட்ட சமர் நடக்கும் களம்
    • ஊர்முகம் - முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகளில்(FDL) அல்லாமல் ஓர் ஊரிற்கு முன்னாலோ அல்லது அவ்வூரினுள்ளோ நடைபெறும் சமர்.
    • அழுவம் - நெருங்கிச் செய்யும் சமர்.
    • ஆகவம் - அறைகூவிச் செய்யும் சமர்
    • குறும்பு - மிளையில் உள்ள சிற்றரண் கடக்கும் போது ஏற்படும் சிறுபூசலும் சமரும் குறும்பெனப்படும்
    • ஊரழிபூசல் - ஊரைக் கொள்ளையிட்டழிக்கும் சமர்
    • சினவல் - வெஞ்சினத்தால் வீறுகொண்டெழுந்து செய்யும் சமர்
    • புடை - எதிரியை நன்கு புடைத்த சமர் (எ.கா: ஆனையிறவு)
    • அமர் - விரும்பிப் பாசறையில் தங்கி அற்றம் பார்த்து அடங்கிப் பொருதல்
      • இது பல விதமாம் : மண்டமர், நல்லமர், ஆரமர், பேரமர், மயங்கமர், வாளமர், இகலமர், நீளமர், ஐயமர், மாறமர் சிலவாம்
    • (அ/ச)மரம், சமிதம் - மிகப் பெரிய சமர் - (ஓயாத அலைகள் மூன்று)
    • வெஞ்சமர் - கொடுமையாக நடந்த போர்
      • வெங்களம் - அப்பேற்பட்ட போர் நடக்கும் களம்
    • மண்டல் - பகைவரை வட்டமிடு சூழ்ந்து பொருதல் மண்டல் எனப்படும்
    • துவந்துவம் - Duels
    • நிலைச்செரு - இடையறாப் போர்/சமர்
    • நூழில் - படைவீரனொருவன் பகை மன்னர் படையிஅன்ரைக் கொன்று குவித்து தன் வேலைத் திரித்து ஆடுதலைக் கூறும் புறத்துறை
  7. Battling with enemies - இவை சமரைக் குறிக்காது சமர் செய்தலைக் குறித்த சொற்களாகும் - அடர்
  8. battle arrayபடை வகுப்பு, கைக்கூட்டம் (இச்சொல் இந்தப் பொருளையும் தரும், ஒருவழியில்!)
    • இதில் இருப்பவர் - கைக்கூட்டன்
  9. battle cry/ war cry - இடிப்பு/ போர் முழக்கம்/ போர்க்குரல்
  10. battle position - சமர் நிலை
  11. battlefield(அ/ச)மர்க்களம், செங்களம் - சமர் நடந்த இடம்
    • செந்நிலம் - செங்களத்தையும் அதன் சுற்றாடலையும் சேர்த்த மொத்த நிலப்பரப்பு
    • செம்புலம் - செங்குருதி சிந்தப்பெற்ற புலம்
      • (புலம் - உங்களிற்கு தொடர்பில்லா தொலைவிடம்| களம் - நீங்கள் இருக்கும் தொடர்புள்ள இடம்)
    • படுகளம் - இது சமக்களத்தை குறித்ததோடு மட்டுமல்லாது சமருடன் சேர்ந்த பிற நிகழ்வுகள் நடந்த இடங்களையும் குறித்த சொல்லாகும். அதாவது வீரச்சாவுகளைப் புதைத்தை, பலர் காயமடைந்ததை, சமர் வளர்க்கப்பட்டதை, படைகுவிக்கப்பட்டதை, கைப்பற்றிய இடங்களில் தரிப்பிடப்பட்டதை போன்றவை நடைந்தேறிய இடங்களையும் குறிப்பிடுகிறது. இன்னும் விதப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் சமரை விட அதிகமான பொருள் கொண்டதாகும்
      • படுநிலம் - படுகளத்தையும் அதன் சுற்றாடலையும் சேர்த்த மொத்த நிலப்பரப்பு
    • மறக்களம் - வீரத்தினை விட கூடியதான மறத்தினை வெளிக்காட்டிய சமர் நடைபெற்ற களம்.
      • (எ.கா: ஆனையிறவு ஊடறுப்புச் சமரில் முட்கம்பி வேலியை உடைக்க முடியாமல் இருக்கேக்கில தன் உயிரினையும் பொருட்படுத்தாது உடலினில் சூட்டினை வாங்கிக் கொண்டே கம்பியை அறுத்துக் கொடுத்து உயர் துறந்த அந்த வீரன் செயல்பட்ட களம் ஓர் மறக்களமாகும்)
  12. battle field (inside the enemy lands)- தென்னர் நிலம், பகைப் புலம் (எ.கா: கொலன்னாவை எண்ணைக் குதம் மீதான தாக்குதல் )
  13. battle front - சமர்முனை, தெம்முனை, களமுனை(எ.கா.: முகமாலை களமுனை )
  14. Commencement of battle - முனையிலே சமர் தொடங்கிய புள்ளி - முனையிடம், முனைமுகம், சிலீமுகம்
  15. carpet bombing - விரிப்புக் குண்டுவீசுகை
  16. War போர், திணிகம், கந்தளம், சங்குலம், அடலை, அடல், கணையம் - பல சமர்கள் ஒன்றாக நடக்கும்/நடந்த இடம். (எ.கா: இரண்டாம் , மூன்றாம் ஈழப்போர், ) இவை பல விதமாம் - வெல்போர், அடுபோர், நற்போர், விறல்போர், சினப்போர், மறப்போர், வெம்போர், நெடும்போர்
    • ஞாட்பு - வீரர்கள் இடம் குறுத்துச் செறிந்து ஆடும் போர்க்களநிலை
    • சண்டை, கண்டாரம், கண்டாளம் - இருவர் செய்யும் போர்
      • சமரிற்கும்(battle) இது பொருந்து, எப்படியென்றால், ஒருவன் தான் செய்த சமரினை விவரிக்கும் போது மட்டுமே.
      • வலுச்சண்டை - குறிப்பிட்டுச் சொல்லுதற்குரிய கரணியமேது மின்றி தமது வலிமையை அல்லது ஆற்றலைக் காட்டுமுக உருவாகும் சண்டை
    • மல், விதர்ப்பு - இருவர் தம் வலைமையைக் காட்டச் செய்யும் போர்
    • கலாம் - பலர் தனித்தனியே செய்யும் போர்
      • கலாபம்/களாபம் - rising, disturbance, uproar, raid
    • விளாகம் - war theater (விளாகம்-போர் நடந்த இடமும் சூழலும்) [எ.கா: கிழக்கின் விளாகம்(eastern theater)]
    • கட்சி - பல நூறு சமர்கள் நடைபெற்ற களம் (எ.கா.: வடபோர்முனை)
    • பறந்தலை - பாலை நிலங்களில் நடை பெறும் போர். (எ.கா.: மத்திய கிழக்கு நாட்டுப் போர்கள்)
    • முயல் - விடாதுபற்றி ஊக்கத்தோடு நடக்கும் போர்- (எ.கா: குர்திசுத்தான் விடுதலைப் போர்)
  17. War field - போர்க்களம், தாமம், அடர்களம்
    • பொருபுவி - பெருமளவான சமர்கள் நடை- பெறும்/பெற்ற/ பெற்றுக்கொண்டிருக்கும் ஒரு பெரும் நிலப்பகுதியை (கிட்டத்தட்ட நாடு) குறிக்கும் பொதுச்சொல். (எ.கா.: பழைய ஈழநிலம், தற்போதைய லிபியா, யேமன் போன்றவை)
  18. battling - ஆர்ப்பு, சமரிடல்
  19. casus belli - போருக்கான சாட்டு
  20. Cocking சாப்புதல்/ சூட்டுதல் (நெருப்பினை எஃகில் தேய்த்தெடுத்து கீழே பற்றுவாயில் சூட்டுதல்)
    • குதிரை, சாப்பு - Cock
    • குதிரை/சாப்பை நிமிர்த்து - pull the cock
  21. Conventional - மரபுவழி
  22. Combat - அடிபாடு
  23. combat zone - அடிபாட்டு வலயம்
  24. combat intelligence - அடிபாட்டு உளவு
  25. combat orders - அடிபாட்டுக் கட்டளைகள்
  26. combat outpost - அடிபாட்டுக் காவலரண்
  27. combat team - தாக்குதலணி/ அடிபாட்டணி
    • அடிபாட்டணி என்பதே நன்கு பொருத்தமான சொல்லாகும். ஆனால் ஈழத்தில் தாக்குதலணி என்றே வழங்குகின்றனர்.
  28. combat unit - அடிபாட்டு அலகு
  29. combatants - அடிபாட்டாளர்
  30. combative style - அடிபாட்டுப் பாணி
  31. demilitarized zone - படைத்துறை இல்லா வலயம்
  32. deliberate attack -திட்டமிட்ட தாக்கல்
  33. explode வெடி
    • explosion - வெடிப்பு
    • Round - வேட்டு - ஒரு சுடுகலனில் இருந்து ஒரு தடவை சுடுதல் ஒரு வேட்டு ஆகும்.
    • வெடில் - வெடிமருந்து வெடிப்பு மற்றும் அந்த வெடிப்பதால் ஏற்படும் தீநாற்றம்.
  34. fight - சண்டை
  35. fire - சுடு
  36. flechette சிரல்
    • Sabot - நிலையமர்த்தி
  37. forming up place - படைத்தாக்கு வடிவு பெறுமிடம்
  38. H-hour - குறிப்பிட்ட நேரம்
  39. marksmanship குறிசாடுதம்
    • marksman - குறிசாடுநர்
  40. martial music- படைவாத்தியம்
  41. no man's land - போர்ச் சூனிய இடம்
  42. non-combatants - அடிபாட்டில் இல்லாதோர்
  43. organization for combat - அடிபாட்டுக்கான குழுமம்
  44. pattern bombing - பாங்கக் குண்டுவீசுகை
  45. preparatory stage - ஆயத்த நிலை
  46. pyrotechnic device - வெடிவகைசார் கரணம்
  47. quick attack - விரைந்த தாக்கல்
  48. reorganization stage - மீளொழுங்குபடுத்து நிலை
  49. sharpshoot குறிசுடு
    • to sharpshoot- குறிசுடுதல்
    • sharpshooter - குறிசுடுநர்
    • Sharpshooting - குறிசுடல்
  50. siege முற்றுகை
    • கோடல் - முற்றுகையிட்டு கொள்ளுகை
  51. snipe குறிசூட்டு/ குறிசூடு - நடத்தப்பட்ட குறிசூட்டல்; குறிசூட்டுத் தாக்குதலால் ஏற்பட்ட காயம்.
    • to snipe - குறிசூட்டுதல்
    • sniper - குறிசூட்டுநர்
    • sniping - குறிசூட்டல்
  52. statt line - சமர் துவங்கு கோடு
  53. theatre- விளாகம்
  54. theatre of operations - நடவடிக்கைகளின் விளாகம்‌ 

 

 


 

 

கீழ்க்கண்ட சொற்கள் 'போரியல்: அன்றும் இன்றும்' என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டவை ஆகும்.

  1. ஆர்த்தல் | ஆர்ப்பு - பேரொலியுடன் ஆர்த்துப் பொருதலும், பகைவென்று ஆரவாரித்தலும் இதுவே
  2. இகல் - எண்ணம், சொல், வினை காரணமாக மாறுபாட்டையும் அதன் விளைவையும் இகல் என்னும் சொல் குறிக்கிறது.
  3. உடன்றல் - பெருஞ்சினத்தால் விளையும் மாறுபாடு
  4. உறழ்வு - உளம், உரை, செயல்களில் நிலை திரிதலாம் உறழ்தலும் அதன் விளைவும் உறழ்வு எனப்படும்
  5. எதிர் - பகைமுரண் போக்கு எதிர்நின்று சமராடல் எதிர் எனப்படும் - Counter
  6. கணையம் - துவக்க நிலைச் சமரில் கருவியாம் கணையம் செயற்பாட்டு நிலையையும் வெற்றி நிலையில் வெள்வேலைக் கணையமொடு வித்தலும் கணையம்
  7. சினம் - சினமும், சினத்தால் வரும் விளைவும் மாறுபாட்டிற்கு காரணமாம். இது பல விதப்படும். வெஞ்சினம், கடுஞ்சினம், பெருஞ்சினம், காய்சினம், வஞ்சினம், போன்றவை சிலவாகும்
  8. திறல் - வலி பற்றி வெற்றி வேண்டி ஒளி உண்ணிப் பொரும் ஆற்றல் திறல் எனலாம். இதுவும் பல விதமாம். வெந்திறல், கடுந்திறல், அருந்திறல், நிண்திறல், பொருதிறல் ஒரு சிலவாம்
  9. தெவ்வு - பிறர் ஆக்கம், ஆட்சி கவரவும், கொள்ளவும், நிறைக்கவும், பகைத்தல் தெவ்வு எனலாம்.
  10. அவ்வாறு வினையுடன் நடக்கும் சமர்/போர் - வெவ்வினை, தெவ்வினை
  11. வினை பல்லோருடனும் ஆய்ந்து சூழ்ச்சித் துணையுடன் செயலாற்றல், பொருதல் வினை எனப்படும்.
    • இது பலவிதமாம் - கொலை வினை, கொல்வினை, இகல்வினை, அழல்வினை, கொடுவினை, கூற்றுவினை
      • வினைக்களம் - இப்படிப்பட்ட போர் நடக்கும் களம்
      • வினைமுகம் - ஒருவன் சமராடும் குறிப்பிட்ட இடம் (அதாவது ஒருவன் சுட்டுக்கொண்டிருக்கும் அவனது நிலை)
  12. நேர்தல் - நெருங்கிப் பகை எதிர்ப்படுதல், எண்ணம் இயம்பல், இசைந்து திறை முதலியன கொடுத்தல், உடன்பாடற்ற வழி எதிர்த்தல், அதன் விளைவு ஆகியன நேர்தல் எனப்படும்
  13. பொருதல் - போர் ஆட்சிகளுடன் பொருந்திப் பகைவருடன் மாறுபட்டுப் பொருதல் எனப்படும்
  14. மறல் - பகை இழியும் எழுச்சிப் போர் மாறுபாடு மறல் எனலாம்
  15. மறம் - வலிமை பற்றிச் சினம் மிகுந்து வீரம் சிறந்து பகையழித்து வெற்றி நாடல் மறம் எனலாம்
  16. முரண் - வலிமை பற்றிய மாறுபாட்டால் விளைவது முரண் . இது பல விதப்படும். அவற்றுள் சிலவாவன: அடுமுரண், கொல்முரண், பொருமுரண், உறுமுரண், வெம்முரண், கடுமுரண், தொல்முரண், முனைமுரண்

 

உசாத்துணை:

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 3

training 38.jpg

 

 

  1. அஞ்சலி - இறுதி மரியாதை செலுத்துதல்
    • சுடரஞ்சலி - இறந்தோரிற்காக சுடரேற்றி அஞ்சலி செலுத்துதல்
    • புகழஞ்சலி - இறந்த ஒருவரை நினைவுகூர்ந்து, அவரின் செயல்களைப் புகழ்ந்து செலுத்தப்படும் அஞ்சலி
    • மலரஞ்சலி - இறந்தோரிற்காக மலர்தூவி அஞ்சலி செலுத்துதல்
  2. அடற்றகை பகைமேல் தான் சென்று ஆடும் தறுகண்மை (பரிமேலழகர், 768)
    • உரன் - நிலை தவறாத(கலங்கா நிலையான) உண்மையான மனவுறுதி
    • தறுகண்மை - இறப்பிற்கஞ்சாத வீரம்
    • திடம் - அசைக்க முடியாத
    • திடாரிக்கம் - தைரியம்(சமற்.)
    • திண்ணக்கம் - நெஞ்சுரம்‌
    • திண்ணம்‌ - உறுதி & வலிமை & இறுக்கம்
    • திண்ணனவு - மிக உறுதியான திண்ணக்கம்
    • திண்ணிமை - மனவுறுதி
    • திதம்‌ - fixedness, steadiness, stability
    • துணிச்சல் - நிலைமைக்கு மிஞ்சிய வீரம்
    • துணிவு - வினை முயற்சிக்கேற்ற வீரம்
  3. அடைப்பம்- போர்க் கருவிகள் வைக்கும் பை/ பேழை.
  4. அணியம் - சமர் செல்ல முன் எல்லோரும் வரிசையாய் தத்தம் அணியோடு நிற்றல்.
  5. அதட்டுதல் மக்களை ஒரு சில அசைகளால், உரத்த குரலால் கடிதல்
    • தெழித்தல் - அதட்டி ஓட்டுதல்
    • கடிதல் - குற்றஞ்செய்தவனை கோபித்தல்
    • கண்டித்தல் - குற்றஞ்செய்தவன் திருந்துமாறு கோபித்தல்
    • எழுதருகை - குற்றஞ்செய்தவன் திருந்துமாறு அச்சுறுத்துதல்
    • சுழறுதல் - மென்மையாகக் கண்டித்தல்
  6. அதிகரித்தல் -அதிகாரத்தோடு பொருந்தி வருதல்
  7. அதிகாரஞ் செலுத்துதல், அதிகரித்தல் - தன் கட்டளையை நிறைவேற்றுதல்
  8. அதிகாரச்சாலைஅதிகாரம் மிக்கவர்கள் வேலை செய்யும் இடம்.
    • அலுவலகம், கச்சாலை>கச்சேரி- அரசு அலுவலகம் போன்றவை.
    • பணிமனை - இட்ட பணி செய்யுமிடம்
  9. அதிர்வேட்டு - அதிர வைத்த/வைக்கும் வேட்டு
  10. அறைபோதல்- பகையரசனால் கீழறுக்கப்படுதல்
  11. ஆணை -அரசாணையின் பெயரால் கூறும் உறுதிமொழி
    • சூள் - தெய்வச் சான்றாகக் கூறும் உறுதி மொழி
    • நெடுமொழி - களமுனையில் பகைவர்முன் ஒருவர் தன்னை மிகுத்துக் கூறும் கூற்று.
    • வஞ்சினம் - 'நான் என் பகைவனுக்கு இன்னது செய்யேனாகில் இன்னநிலையடையக் கடவேன்' என்று கூறும் சூள்.
    • பூட்கை - ஒரு காரியம் முடியும்வரை வேறொன்றை விலக்கி வைக்கும் உறுதிப்பாடு.
    • மேற்கோள் - ஓர் ஒழுக்கத்தை அ நல்வினையை மேற்கொள்ளும் கடைப்பிடி.
    • பொருத்தனை - ஒருவன் தனக்குக் கடவுள் செய்யும் ஒரு குறிப்பிட்ட நன்மைக்குப் பகரமாக தான் ஒன்றைக் காணிக்கையாகக் கொடுப்பதாகச் செய்துகொள்ளும் வாய்ச் சொல் ஒப்பந்தம்.
    • நேர்த்திக் கடன் - கைம்மாறு கருதியும் கருதாமலும் கடவுளுக்கு அ தெய்வத்திற்கு ஒரு பொருளை ஒதுக்கி வைத்தல்.
    • கங்கு அ கங்கணம் - ஒருவன் தன் பகைவனிடத்தில் பழிக்குப் பழிவாங்க வேண்டுமென்று அதற்கடையாளமாகக் கட்டிக் கொள்ளும் காப்பு.
    • ஒட்டு - ஒருவன் தான் விரும்பாததொன்றைத் தன் எதிரி செய்யின், அவன் அழிந்துவிடுவான் என்று கூறும் ஆணை.
  12. ஆணைச் சக்கரம் - அரசாட்சி, செங்கோல்
  13. ஆணை செல்லுதல்- அரசோச்சுதல், அதிகாரம் செயற்படல்
  14. ஆணை செலுத்துதல்- அரசு செலுத்துதல், அதிகாரம் செயற்படச் செல்லுதல்
  15. ஆணைப் பெயர் - எவரும் கட்டளையை அஞ்சியேற்றற்குரிய பதவிப் பெயர்
  16. ஆணை பிறப்பித்தல்- ஆணை முதலியயன வெளியிடுதல்
  17. ஆணையம் -சில செயல்களை நிறைவேற்றவும் மேற்பார்வையிடவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள குழு
  18. ஆணையோலை - கட்டளைத் திருமுகம்
  19. ஆணைவிடுதல் - சூளுறவை நீக்குதல்
  20. உருவிப்பாய்தல் - துளைத்துக்கொண்டு வேகமாய்ச் செல்லல் (சன்னம்(bullet), எறிகணை(shell))
  21. உயிராயுதம் - உயிரினையே ஆய்தமாகப் பயன்படுத்துபவர்
  22. உயிரிழந்தார் - (படைத்துறை) உயிர் அவனது உடலை விட்டுப் பிரிந்ததை அடையாளப்படுத்தும் பொருட்டு வழங்கும் சொல்.
  23. ஊடறுத்தல் - எதிரியின் முன்னரணை அடித்து உடைத்து முன்னேறுவது ஊடறுத்தல் எனப்படும். (தமிழீ.வழ)
  24. ஊருதல் - களத்தில் நிலை கொள்ளுதல்.
  25. ஊறுபாடுஆயுதங்களாற் காயமுண்டாக்குகை
    • ஊறு, விழுப்புண், படைவெட்டு - ஊறுபாட்டால் ஏற்பட்ட காயம்.
    • குண்டுபடுதல் - கணைகளால்(ammunition) தாக்கப்படுதல்
    • ஏவுண்ணுதல் - சன்னம் தைத்தல்
  26. ஏப்பாடு - சன்னம் விழும் எல்லை
  27. ஏவுதல் - ஏவூர்தி, உந்துகணை(weapons rocket), ஏவுகணை(missile) போன்றவற்றைச் செலுத்துதலைக் குறிக்கும் சொல். சுடுகலன்களிற்குப் பயன்படாது. ஆனால் சேணேவிகளின் எறிகணை செலுத்து முறைவழியினை முழுதாக குறிக்கும் சொல் லாகவும் பயன்படும்.
  28. கலஞ்செலுத்தல் - ஒருவர் கலத்தினை ஓட்டுதல் (வான்கலன், கடற்கலன்)
  29. கலமறுத்தல் - கடற்கலங்களை அழித்தல்.
  30. கலமூர்தல் - கலம் கடலில் செல்லுதல்.
  31. கலனறுத்தல் - இது தரையில் வான்கலங்கள் தரித்து நிற்கும்போது அழிபடுவதைக் குறிக்கும். (எ.கா: அநுராதபுர எல்லாளன் நடவடிக்கை)
  32. கலன்வீழ்த்தல்/ சுட்டு வீழ்த்தல் - வான்கலங்களை சுட்டு வீழ்த்துதல்
  33. காலாட்படை/ தானை - காலால் நடந்து மாந்தவலுவால் காவக்கூடிய படைக்கலங்களையும் காவி/இழுத்துச் சென்று சமராடும் படை. இவரிடம் கவசவூர்திகள் இராது.
  34. காவல் கட்டு - கடுமையான காவல்
  35. கீழறுதல் - பகையரசன் பாற்பட்டு வஞ்சித்தல்
  36. குத்துதல் Pounding
    1. வன்னியில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட சொல். அகராதிகளில் இல்லை.
  37. குற்றம் சட்டத்திற்கு மாறான செயல்(fault, guilt)
    • அரில் - பொருள்கள் ஒழுங்கின்றி மடங்கிக் கிடக்கும் குற்றம்
    • அழுக்கு - உடம்பிலும் உடையிலும் படியும் தீநாற்ற மாசு
    • ஆசு - சக்கையும் மக்கும் வைத்து ஒட்டியது போன்ற குற்றம்
    • இழுக்கு - ஒழுக்கக் கேடு
    • ஏதம் - உறுப்பறை, உயிர்க்கேடு
    • கசடு - மண்டி போன்ற குற்றம்
    • கரிசு - பாவம்(sin)
    • கரில் - கொடுமை
    • கறை - வாழை நுங்கு முதலியவற்றின் சாற்றால் உண்டாகும் சாயம்
    • களங்கம் - கருத்தொளிப்பு
    • குறை - தேவை அ ஊனம்
    • தப்பு அ தப்பிதம் - சரியல்லாதது (wrongness)
    • தவறு - ஒரு கடமையைச் செய்யாக் குற்றம் (failure)
    • தீங்கு - இன்னல்(harm)
    • தீமை - நன்மையல்லாதது (evil)
    • துகள் - புழுதி போன்ற குற்றம்
    • நவை - மக்கள் போன்ற குற்றம்
    • பழுது - பழமையால் வந்த கெடுதல்
    • பிழை - ஒன்றிற்கு இன்னொன்றைச் சொல்லும் அல்லது கொள்ளும் குற்றம்(mistake)
    • புகர் - புள்ளி போன்ற குற்றம்
    • புரை - துளை போன்ற குற்றம்
    • போக்கு - சேதம் அ கழிவு
    • மயல் - மயக்கத்திற்கிடமான குற்றம்
    • மறு - மேனியிலுள்ள கரும்புள்ளி போன்ற குற்றம் (mole)
    • மாசு - பொருள்களின் மேற்படியும் சிறுதூசி
    • மை - கருமை
    • வசை - பழிப்பாகிய குற்றம்
    • வடு - தழும்பு போன்ற குற்றம்
    • வழு- இலக்கண நெறியினின்று விலகும் குற்றம்(error)
    • வழுவாய் - பாவம்
  38. கெட்டித்தல் - வாய்வழி தாணித்த வெடிமருந்தினை சலாகை(ramrod, rammer) கொண்டு இடித்து கெட்டிப்பார்கள் (இறுக்கி அடைத்து கெட்டியாக்குதல்). இவ்வாறு குண்டுக்குழாய்(blunderbuss) , தெறாடி(musket) போன்ற பண்டைய கால சுடுகலன்களிற்குச் செய்யப்படும்.
  39. கொல்லப்பட்டார் - (படைத்துறை) எதிரி சமரில் இறந்ததை தெரிவிக்கும் பொருட்டு வழங்கும் சொல்.
  40. சடாய்த்தல் - வெடிமருந்து, குண்டு(ball) போன்றவற்றை குண்டுக்குழாய்(blunderbuss) , தெறாடி(musket) போன்ற பண்டைய கால சுடுகலன்களின் வாயினுட் கொட்டுதல். அதாவது முகவாய் வழியாய் தாணிக்கும்(loading through muzzle) செயல்.
  41. சரி-போ அடிச்சிறங்கு = 'தாக்குதல் தொடங்கட்டும்' என்பதற்கான கட்டளை. (தமிழீ.வழ)
  42. சரி-போடு-அடி = சேணேவிகளுக்குள்(Artilleries) எறிகணையினை தாணித்து(load) ஏவுவதற்கான கட்டளை. (தமிழீ.வழ)
  43. சாவடித்தல் - இறக்கும்படியாக அடித்தல்
  44. சிமுக்கிடுதல் - ஏதேனும் ஒன்றை அசைத்து எச்சரிக்கை செய்தல்.
  45. செயல் சிறியதும் பெரியதுமாய் ஏதேனும் ஒரு செயல்
    • அமஞ்சி - கூலியில்லாக் கட்டாய வேலை
    • அலுவல்- உத்தியோகம்(சமற்.)
    • உழைப்பு - மெய்வருந்தச் செயல்
    • ஊழியம் - வாணாள் முழுவதும் செய்யும் வேலை
    • கடப்பாடு - ஒப்புரவு / வேளாண்மைச் செயல்
    • கடமை - கட்டாயம் செய்ய வேண்டிய செயல்
    • போர்க்கடம் - சமர் செய்வதாகிய வீரர் கடமை
    • கம்/கம்மியர் - ஐவகைக் கொல்லர் தொழில்
    • கரணம் - திருமணச் சடங்காகிய செயல்
    • கருமம் - ஆள்வினைச் செயல்
    • காரியம் - வாழ்க்கைச் செயல்
    • சோலி - கவனிக்க வேண்டிய சொந்த வேலை
    • தொண்டு - பொதுநலச் செயல்
    • தொழில் - கைத்தொழில்
    • தொழும்பு - அடிமை வேலை
    • நிகழ்ச்சி - எதிர்பார்த்த நடப்பு
    • நேர்ச்சி - எதிர்பாராத நடப்பு (ஆபத்து- ஸமற்)
    • பணி - பொருளாக்கச் செயல்/பணிக்கப்பட்ட செயல்
    • பணிவிடை- குரவர்க்குச் செய்யும் தொண்டு
    • புரிவு - விருப்பச் செயல்
    • வினை - பிறவிக்கேதுவான செயல்
    • வெட்டி - வீண் வேலை
    • வேலை - பிழைப்பிற்கேதுவான செயல்
  46. தங்கரித்தல் - காப்பாக சேமித்து வைத்தல்
  47. தடைதல் - தடையிட்டுத் தடுத்தல்
  48. தடைநீக்கி - இருக்கும் தடைகளை நீக்குபவர்(கருவேங்கைகள் போன்றவர்)/ நீக்க உதவுவவை
  49. தம்நியமத்து இயற்றுதல் - தம் முன்னோர் முறைப்படி ஆட்சியேற்றல்
  50. தம்மிடுதல் - தணிந்து நிறுத்தப்படுதல்
  51. தரித்தல் - ஓரிடத்தில் நிலையாகத் தங்கி நிற்றல் - (தமிழீ.வழ)
  52. தரிப்பு - நிலையாக நிற்குமிடம்
  53. தரிபடுதல் - தானே நிலையாக நிற்றல்
  54. தரிபெறுதல் - இன்னொன்றால் நிலையாக நிற்பதற்குப் பெறுதல்
  55. தரியிடுதல் - இன்னொன்றால் நிலையாக நிற்குமாறு செய்யப்படல்
  56. தரைப்படை/ நிலப்படை(வழக்கொழிந்தது) - தரையில் சமராடுவதற்கு உரிய படைக்கலங்கள்/ஆய்த தளவாடங்கள்‌(munition) மற்றும் கவசவூர்திகள் கொண்ட படை
  57. தலைகழித்தல் - கடமை முதலியவற்றைச்‌ செய்துதீர்த்தல்
  58. தலைகாண்‌(ணு)-தல்‌ - உயிராய் நின்று காத்தல்
  59. தலைகொடுத்தல் - செயலை முடிக்க முழுப்பொறுப்பேற்றல்/ பிறர்‌ செயல்களில்‌ தேவை நேராதபோதும்‌, இடைப்‌ புகுதல்/ பிறரது அல்லல்‌ காலங்களில்‌, தன்‌ உயிர்பொருள்களின்‌ சேடுகளை நோக்காமல்‌, உதவிபுரிதல்‌.
  60. தலைசெய்‌-தல் - தலைமை ஏற்றல்
  61. தலைமேற்கொள்ளுதல் - இட்ட வேலையை பணிவுடன் மேற்கொள்ளுதல்/ பொறுப்பேற்றல்
  62. தலையாட்டி - இன்னார்தான் இவன் என்று கண்டறிவதற்காக புலனாய்வுத்துறை வைத்திருக்கும் பலரையறிந்த ஒருவன்.
    • எ.கா: எமது ஊரில் இருந்த தலையாட்டியள்.
  63. தவாளித்தல்‌ - தாக்குப்பிடிக்க இயலாது தத்தளித்தல்‌
  64. தற்காப்பு/தற்காத்தல் - தன்னைக் காத்துக்கொள்ளுகை
  65. தற்காவல் - தனக்குத் தானே காவலாக அமைதல்.
  66. தற்கொடை - தன்னைத் தானே ஆகுதியாக்குதல்
  67. தற்கொலை - தன்னைத் தானே கொல்லுதல்
  68. தன்கைக்கொலை - தானே தன் உடலுறுப்பைக்கொண்டு தன்னை அழித்தல்
  69. தன்றரையாக்குதல் - தரைமட்டமாக்குதல்
  70. தனிக்காவல்‌ - தனியனாக இருக்கும்படி அடைக்குஞ்‌ சிறை - solitary confinment
  71. தனிக்குடை - தனியரசாட்சி
  72. தாணித்தல் load (i.e….loading of a shell into mortar)
    • அசிங்கமாக reloading-க்கு 'ஏற்றுதல்' என்று எழுதி தமிழின் அழகை கெடுக்க வேண்டாம் …_/\_
  73. தாபரித்தல் - பாதுகாப்போடு நிலைபெற்றிருத்தல்
  74. தாவரித்தல்‌ - தீமை கண்ட ஞான்று விரைந்து தாவிச் சென்று அழித்தல்
  75. தாவி-த்தல்‌ - நிலைநிறுத்தல்
  76. திண்டிறல்‌ - மிகுவலி - great valour
  77. திறந்தறை - unguarded place
  78. தீக்குளி-த்தல்‌ - உடம்பில்‌ தீயிட்டுக்‌ கொள்ளுதல்‌
  79. தீகுறு-தல்‌ - தீயினால்‌ அழிதல்‌
  80. தீக்கொளுத்தி - நெருப்பிடுவோன்‌, கலகமூட்டுவோன்‌;
  81. துசங்கட்டு-தல்‌ - காரியத்தில்‌ முனைந்து நிற்றல்‌;
  82. துணை - படைக்‌ கருவி- Arrow, sharp end of instrument or weapon
  83. துணைப்பேறு - உதவி பெறுகை
  84. துணையரண்‌ - வன்மைமிக்க சுற்றத்தாரானாகிய துணை
  85. துணைவலி - நட்பரசரால்‌ ஆகிய ஆற்றல்‌
  86. துவைச்சல் (படைக்கருவி) - tempering (weapons)
  87. தொல்படை - பழம் பெருமை கொண்ட படை
  88. தோய்த்தல் - ஆய்தங்களைக் காச்சி நனைத்தல்.
  89. நிதானித்தல் (சமற்) - பாணித்தல் (தமி)
    • சமர் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் பொழுது ஆராவது ஒருத்தன் பீ.கே. போன்ற கன இயந்திரச் சுடுகலனால் எதிரியை நோக்கி கன்னா-பின்னா என்று அடித்துக்கொண்டிருப்பார்.. அந்த நேரத்தில அவருடைய கட்டளையாளர்() அவரிடம் "நிதானமா அடியடா..... நிதானமா அடியடா....." என்று கட்டளையிடுவார்.
  90. நிறுத்துதல் - தற்காலிகமாக நிப்பாட்டுதல் (பேரூந்து நின்று நின்று செல்லுதல்)
  91. படைகுவிப்பு - ஓரிடத்தில் பெருமளவான வீரர்களைக் குவித்தல். (தமிழீ.வழ)
  92. படைமடம் - அறப்போர் நெறியிலிருந்து மாறுபடுகை
  93. படைமாட்சி- சேனைக்கே உரித்தான சிறப்பு
  94. படையறல் - தம் அரசனிற்கு உட்பகையாக அறுதல்
  95. படையுடன்படாமை - 'ஆய்தம் ஏந்தேன்' என்று வரைந்து கொள்ளுகை;
  96. படையெழுச்சி - போர்வெறிகொண்டு எதிரிமீது கிளர்ந்தெளுந்து தாக்குதல்.
  97. பதிதல் - அதிகாரம் பெறுதல்
  98. பூசல் போரும் சமரொலியும்
    • பூசற்களம் - போராவாரம் மிகுந்த களம்.
  99. பொருள் காட்சி கருத்து ஆகிய இரடிற்கும் பொதுவான பொருள்
    • பண்டம் - கட்புலனானதும், கனவடிவுள்ளதுமான பொருள்
    • சரக்கு - காய்ந்த பொருள்
    • தாரம் - இயற்கை விளைபொருள்
    • ஆக்கம் - செயற்கை விளை பொருள்
    • செய்பொருள் - கையாற் செய்யப் படும் பொருள்
    • உரு - கனவடிவப் பொருள்
    • உருவம் - பெருங் கனவடிவப் பொருள்
    • சிற்றுரு - உருவத்தின் miniature
    • உருப்படி - தனிப்பட்டதும் உயிரற்றதும் ஒன்றன்படியுமான கனவடிவப் பொருள்
    • உடைமை - உடம்பிலுள்ள ஆடையணிப் பொருள்
    • மதி - அளவிடப்பட்டு வரி விதிக்கப்படும் கடல் வாணிகப் பொருள்(ஏற்றுமதி, இறக்குமதி போல)
    • சொம் - சொந்தப் பொருள்
    • சொத்து - சொந்தப் பொருட்டொகுதி
    • செல்வம் - விலைமதிப்புள்ள பொருட்டொகுதி
    • வெறுக்கை - செறிந்த செல்வம்
    • காசு - தனி நாணயம்
    • பணம் - காசுத் தொகுதி
  100. போர்ச்சன்னாகம் - போருக்கு ஆயத்தம் ஆதல்
  101. போருதவி - மக்களால் போர் வீரனுக்குச் செய்யும் உதவி (தமிழீ.வழ)
  102. போரெதிர்த்தல் - போர்செய்தலை மேற்கொள்ளுதல் (to set out to fight)
  103. போரிலே போடுதல் - பயனற்றதாக்குதல் (to render useless)
  104. போராடுதல் - கடினப்பட்டு அடிபடுதல்.
  105. மறைப்பு வேலி - எதிரி எம்மைப் பார்க்கா வண்ணம் போடப்படும் வேலி
  106. மன்றுபாடு - மன்றத்தாரால் விதிக்கப்பட்டு மன்றத்தின் முன் செலுத்தும் தண்டம் (படைத்துறை நீதிமன்றம்)
  107. வணக்கம் வாழ்த்தும் செயலுக்கு மாற்றாகச் செய்யத்தக்க செயலாலோ அ சொற்களாலோ தாழ்ந்து பணியும் நிலை. | நன்றி: கவிஞர் மகுடேசுவரன்
    • அகவணக்கம் - வீரச்சாவடைந்த வீரனிற்கு செலுத்தப்படும் வணக்கம் | (தமிழீ.வழ)
    • சுடர் வணக்கம் - இறந்தோரிற்காக சுடரேற்றி செலுத்தப்படும் வணக்கம் | (தமிழீ.வழ)
    • புகழ்வணக்கம் - இறந்த ஒருவரை நினைவுகூர்ந்து, அவரின் செயல்களைப் புகழ்ந்து செலுத்தப்படும் வணக்கம்
    • மலர் வணக்கம் - இறந்தோரிற்காக மலர்தூவி செலுத்தப்படும் வணக்கம் | (தமிழீ.வழ)
    • வீரவணக்கம் - வீரச்சாவடைந்த வீரனிற்கான இறுதி அஞ்சலியில் செலுத்தப்படும் வணக்கத்தினைக் குறிக்கும் சொல் .. (This is not to salute or equivalent to salute🤬) | (தமிழீ.வழ)
    • Hello - எல்லா
    • கும்பிடுதல் - கைகுவித்து நாம் மதிக்கும் பாங்கினை உணர்த்தும் செயல். | நன்றி: கவிஞர் மகுடேசுவரன்
    • தொழுதல்- தொழிற்பட்டுச் செய்யும் பணிவுச் செய்கை | நன்றி: கவிஞர் மகுடேசுவரன் 
    • மரியாதை = salute
  108. விற்பனன் - சுடுவதில் தேர்ந்தவன்
  109. வீரச்சாவு தன் நாட்டின் படைவீரன் சமர்க்களத்தில் இறந்ததை தெரிவிக்கும் பொருட்டு வழங்கும் சொல் (தமிழீ.வழ.)
    • வீரமரணம் - (தமிழ்.வழ)
    • காயச்சாவு - சமரில் ஏற்பட்ட சாவினால் ஒருவர் மரணடைவாரானால் அவரின் சாவு காயச்சாவு எனக் கொள்ளப்படும். ஆனால் அறிவிக்கப்படும் பொது வீரச்சாவு என்றே அறிவிக்கப்படும். - Died Of Wounds | (தமிழீ.வழ)
    • களச்சாவு - சமர்க்களத்திலோ இல்லை பகைப்புலத்திலோ எதிரிகளுடன் மோதும் போது அங்கேயே மரணமடைந்த வீரர்களைக் குறிக்க படைத்துறையில் பயன்படுத்தும் ஒரு வகைப்பாடு. - Killed In Action | (தமிழீ.வழ)
  110. வேளம் - சோழராற் சிறைபிடிக்கப்பட்ட உயர்குலத்து மகளிர் அடிமையாக வாழும்படி அமைத்த அரணிடம்.

 


மேலே உள்ள சொற்களில் 118 சொற்கள் (மற நிலை, மறுதலை வகைகள், தொழில் வகை, சண்டை வகை, பொருள் வகை, குற்ற வகை, கண்டிக்கும் வகைகள், சூள் வகை) பாவாணரிடம் இருந்து எடுத்தனான்.  ஏனையவற்றில் 95 வீதமானவை அகராதிகளில் இருந்து கொள்ளப்பட்டவை ஆகும்.


 

 

  1. வில்லை - Badge
  2. துண்டம் - patch
  3. மார்பொட்டி - நெஞ்சு/ மார்பில் ஒட்டும் வில்லை
  4. சின்னம், பொறி, இலச்சினை உருகொண்ட ஒன்றனது அடையாளம்
    • படைத்துறைப் பொறி - Military insignia
    • இலச்சினை - புலி இலச்சினை, இந்திய அரச இலச்சினை, சிறீலங்கா அரச இலச்சினை, தமிழ்நாட்டு அரச இலச்சினை போன்றவை.
    • சின்னம் - கிட்டத்தட்ட இலச்சினை போன்ற பொருள் கொண்டது, ஆனால் இது பூதியல்(Physical) உருகொண்ட இலச்சினையினையையே கூடுதலாகக் குறிக்கும்
  5. முத்திரை- கையால் காட்டும் சின்னம்/ ஒன்றின் மேல் பொறிக்கப்படும் ஓர் சின்னம் - stamp
  6. முத்திரிகை - Signet
  7. இடாகு, பொரிம்பு - Brand
  8. கோசகம், குறியீடு - Symbol
  9. பதக்கம் - பெற்றும் கொள்ளும் பதக்கம் - medal
  10. தழும்பு - ஏதேனும் ஒன்றால் உடலிலோ அல்லது பிற பொருட்களிலோ ஏற்படும் அடையாளம் - Mark
  11. வியஞ்சனம் - குறிப்பால் உணர்த்தி நிற்கும் அடையாளம்
  12. வேத்தியம் - அறியப்படும் அடையாளம்

 

 

உசாத்துணை:

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to படைத்துறையில் பயன்படுத்தப்படும் கலைச்சொற்கள் 1000+
  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, Kuna kaviyalahan said:

இது வன்னியில் உருவாக்கப்பட்ட அகராதியா?

இல்லை ஐயனே, இது நானாக சொந்தமாக உருவாக்கியது. 

இதை நான் ஓராண்டிற்கு முன்னர் பெருந்தொற்றுக் காலத்தில் கிடைத்த இடைவேளையின்போது கோராவில் எழுதினேன். இப்போது அதைபடி எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக இங்கே பதிவிட்டுவருகிறேன்.

முழுதாகக் காண இங்கே சொடுக்கவும். கிட்டத்தட்ட ~2000 சொற்கள் இதற்குள்ளுள்ளன. 

https://aaythasaalai.quora.com/படைத்துறை-அகராதி

----------------------------------------

 

வன்னியில் படைத்துறைக்கென ஒரு அகராதி இருந்தது. அதன் பெயர் 'MoD (militray office dictionary)' என்று கேள்விப்பட்டுள்ளேன். கறுப்பு நிற அட்டை உடையதாம். (தகவல் உறுதியில்லை)

எனக்கு அதே போன்று ஒன்றை மீள உருவாக்க வேண்டும் என ஆசை. அதன் முன்னேற்பாடாகத்தான் இப்படி சிறுகச்சிறுக ஆக்கி வருகிறேன்.

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 4

training 42.jpg

 

இதனுள் உள்ளவை படைத்துறைக் கட்டுமானம் தொடர்பானவை ஆகும்

 

 

  1. Abatis/ abattis/ abbattis - மரத் தடங்கல்
  2. Abwurfdach - கழற்றக்கூடிய கூரை
  3. Air raid shelter - வான் குண்டுவீச்சு காப்பரண்
  4. Albarrana tower - வெளிப்புறக் கோபுரம்
  5. Angstloch - ஒடுங்கியகுழி
  6. Ankle breaker - கணுக்கால் குழி
  7. Arcade - கவானணி
  8. Arrows lit/ loophole- ஏப்புழை/ சூட்டிஞ்சி
  9. Bailey காப்பு
    1. மதிலுக்குள் உள்ள நிலம் காப்பு எனப்படும்
  10. Banquette - தளப்பாதை
  11. Barbette - அலங்கந்தாங்கி
  12. Barbican - சோகூடம்
  13. Barmkin/ barmekin/ barnekin - அரணத் தொழுவம்
  14. Barricade - தடையரண்
  15. Barrier - தடைவேலி
  16. Bastion கொத்தளம்/ தோணி/ கொம்மை
    • Counterguard - எதிர்க்கொத்தளம்
    • Bastion fort - கொத்தளக் கோட்டை
  17. Battery - சேணேவித் தொகுதி
  18. Battlement - ஞாயில்/ நாயில்
  19. Bawn - ஆநிரை அரணிருக்கை
  20. Berm - கரைப்படிவு
  21. Bent entrance - வளைந்த வாயில்
  22. Blockhouse - வகுமுக வீடு/ தடுப்பு வீடு
  23. blast shelter - காப்பரண்
  24. border observation post - எல்லை நோக்கல் நிலை
  25. Broch - குழிமதில் வீடு
  26. Bunker பதுங்ககழி
    • பதுங்குகுழி - smaller or less fortified than bunker
  27. Buoy - கூம்புத்தடை
  28. Burges/Turris - அரணக் கோபுரம்
  29. buttress - மிண்டு
  30. Caltrop- காக்கா கால்
  31. Caponier - அகழிதா கொம்மை
  32. Casemate - குண்டுறுதி அறை
  33. Castellum - கோபுரக் கோட்டை
  34. Castle கோவிக்கல்/ அரண்மனை(அரணான மனை வேறு; மாளிகை வேறு)
    • bridge castle - பால அரண்மனை
    • Cave castle - குகை அரண்மனை
    • Concentric castle - ஒருமையமுள்ள அரண்மனை
    • coercive castle - வலுக்கட்டாய அரண்மனை
    • Counter-castle - இகல் அரண்மனை
    • courtyard castle - முற்ற அரண்மனை
    • Enclosure castle - உள்ளிடப்பட்ட அரண்மனை
    • Ganerbenburg - பல்குடும்ப அரண்மனை
    • Hill castle - குன்று அரண்மனை
    • Hillside castle - சாரல் அரண்மனை
    • Hilltop castle - குவட்டு அரண்மனை
    • Imperial castle - பேரரசுக்குரிய அரண்மனை
    • Island castle - தீவு அரண்மனை
    • Landesburg / landesherrliche Burg / sovereign castle / state castle - கிழான் அரண்மனை
    • Lowland castle - தாழ்நில அரண்மனை
    • Marsh castle- சதுப்பு அரண்மனை
    • Motte-and-bailey castle - பிட்டி & காப்பு அரண்மனை
    • Mountain castle - மலை அரண்மனை
    • Ridge castle - முகட்டு அரண்மனை
    • Rock castle - பாறை அரண்மனை
    • Spur castle - வெற்பு அரண்மனை
    • Urban castle - நகர்ப்புற அரண்மனை
    • Toll castle - சுங்கச்சாவடி அரண்மனை
    • Tower castle - கோபுர அரண்மனை
  35. Cavalier - உள்ளரணம்
  36. Cavin - பொக்குவழி
  37. Checkpoint - நோட்டச்சாவடி
  38. Citadel - அரண்ணகரம்
  39. Coastal defence and fortification - கடற்கரை வலுவெதிர்ப்பு மற்றும் அரணம்
  40. Courtyard - முற்றம்
  41. Corbel - தண்டயம், கச்சோர்
  42. Cornice - கொடுங்கை, மதலை
  43. Coupure - உடையடைத்தல்
  44. Covert way/ covered way- கள்ளவழி
  45. Crannog - அமோரக்குடில் | அம்+ஓரம்+குடில்
  46. Dirnitz - சூடறை
  47. Ditch - கிடங்கு/ உடு/ கோட்டைக்குழி
  48. Dover Quad - நான்மூலை காவலரண்
  49. Dragon's teeth - யாளிப்பல்
  50. Drawbridge ஐயவித்துலாம்/ ஐயவி/ நாஞ்சில்/ ஞாஞ்சில்
    • Bridgehead - பாலத்தலை
    • footbridge - நிரந்தர பாலம் 
  51. Dungeon நிலவறை
    • Oubliette - புட்டில் நிலவறை
  52. Embrasure/Crenellation- குடிஞை/ஏவறை
  53. Entrench - திண்ணிறுப்பு, அரணத்தில் படைமுகாம் நிறுப்பு
  54. Entry checkpoint - நுழைவு நோட்டச்சாவடி
  55. Esplanade - கோட்டைவெளி
  56. Fallout shelter - அணுகுண்டு காப்பரண்
  57. Fascine - கம்புக்கட்டு
  58. Field gun emplacements - களச் சுடுகலன் இடங்கோலல்
  59. Fighting platform - சண்டை மேடை
  60. Fire support base - சூட்டாதரவு/வேட்டாதரவு - தளம்
  61. Flak tower - வான்கலன் - எதிர்ப்புக் கோபுரம்
  62. Flèche - அம்புவடிவம்
  63. Fortified town - அரணப்பட்ட நகர்
    • கடிநகர் - காவல் மிகுந்த நகர்
  64. Fort கோட்டை, கவை, அலக்கு, ஆவரணம்
      • கோட்டைச்சுவர் - கோட்டையில் உள்ள சுவர்
      • கோட்டைமதில் - கோட்டையைச் சுற்றியுள்ள மதில்
    • Fortification - அரணம்
      • Palanka - மரக்கோட்டை அரணம்
    • அரண் - இச்சொல் இங்கு பலவித அரண்களைக் குறிக்கும்.
    • Gord - மரக்கட்டை கோட்டை
    • Hillfort - குன்றுக் கோட்டை
    • Kotta mara - கோட்டை மரம்
    • Promontory fort - புறத்தெற்றிடறு கோட்டை
    • Ring fort - வளைய கோட்டை
    • Vitrified fort - ஆடியாக்கிய கோட்டை
  65. Fortress அரணாம்பரம்/ பந்தம்
    • Ordensburgen - சிலுவைப்போர் அரணாம்பரம்
  66. Forward operating base - முன்னணி இயக்குதல் தளம்
  67. Foxhole/ fighting position/ ranger grave/ fighting hole/ gun-pit/ fighting pit/ rifle pit - நரிக்குழி - இதை ஆட்குழி என்றெல்லாம் மொழி பெயர்க்கவேண்டாம். ஆட்குழி என்றாலே பொருள் வேறு!
    • Slit trench/ fire trench - நிற்குழி/ வேட்டுக்குழி
    • Sangar - கற்சாக்கரண்
    • shell scrape - எறிகணைக்குழி
    • Machine gun nest- இயந்திரச் சுடுகலக் கூடு
  68. Gate (Fort) - வாயில் / கௌனி/ ஆத்தானம்/ அரிகூடம்
    • Fortified gateway - அரணப்பட்ட வாயில்
    • City gate - நகரவாயில்
      • கோட்டையின் முக்கிய வாயில் - ஒலிமுகவாயில்/ ஆசாரவாயில்/ தலைவாயில்
      • கோட்டைக்கு பாதுகாப்பான, கட்டுப்படுத்தப்பட்ட நுழைவு வழி - புழை - Sally port
      • நகரவாயிற்றிணையின் பெயர்- அளிந்தம்
      • நகரவாயிற் படிச்சுறுள்- அத்திகை
      • கவாடம் - கதவு
    • Chamber gate - குவியறை வாயில்
    • Elevated entrance - தூக்கு வாயில்
    • Gate house - வாயில்வீடு
    • Picer gate - இடுக்கி வாயில்
    • Portcullis/Sliding gate - இசி வாயில்
    • Watergate - நீர்வாயில்
    • Yett - இரும்புவாயில்
  69. Garderobe - அரண்மனை அறை
  70. Glacis - அரண்மென்சரிவு/ கோட்டைமேடு
  71. Gorge - வெளிக்காட்டா களவேலை
  72. Great hall - பெருங்கூடம்
  73. Guardhouse - காவல்வீடு
  74. Gulyay-gorod - நகர் தட்டி
  75. Hardened aircraft shelter (HAS) / Protective aircraft shelter - வானூர்தி காப்பரண்
  76. HESCO - கெசுக்கோ
  77. Hedgehog - அறுமுகத் தடுப்பு
  78. Hillfort - சிகரி / துருக்கம்/ துருவம்/ அருப்பம்/ அழுவம்
  79. Hoarding, brattice or brettice - கொத்தளத்தலை
  80. Hunting lodge - வேட்டைத் தங்ககம்
  81. Jersey barrier - இயேர்சி தடையரண்
  82. Lunette - அரைநிலவு
  83. Machicolations - விதப்பு
  84. mainline of resistance - ஈடுமுட்டின் முக்கிய அரண்நிரை
  85. Mantlet - பரிசை/ தட்டி
  86. Merlon - ஆரல்/ குருவித்தலை
  87. Missile launch facility/ Underground missile silo - ஏவுகணை ஏவும் நிலத்தடி வசதி
  88. Moat - அகழி/ உடுவை/ கயம்/ காடி/ ஓடை/ நீரரண்
  89. Murder holes - சாத்துளை
  90. Neck - கழுத்து
  91. Neck ditch - கழுத்து கிடங்கு
  92. Open tower/ Half tower - திறந்த கோபுரம்
  93. Oppidum - அரண்குடியிருப்பு
  94. Orillon - சிறுகாது
  95. Outpost - புறக்காவல்
    • Outpost area - புறக்காவல் பகுதி 
    • Outpost line of resistance - ஈடுமுட்டு புறக்காவல் நிரை
  96. Outwork புறக் கட்டுமானம்
    • Breastwork - மாரரண்
    • Crownwork - முடிக்கட்டுமானம்
    • Hornwork - கொம்புக் கட்டுமானம்
    • Ringwork - வளைய கட்டுமானம்
  97. Palace மாளிகை/ கொட்டாரம்/ அரசன்றேவியில்
    • imperial palace - பேரரசுக்குரிய கொட்டாரம்
    • Lustschloss / pleasure palace - சொகுசு கொட்டாரம்
  98. palisade கழு/ கழுக்கோல்/ யானைத்தடை
    • Stockade - கழுச்சுற்று
  99. Parapet - கைச்சுவர்
  100. Pickett-Hamilton fort - பிக்கெட்டு-கமில்டன் அரண்
  101. pillbox குளுசைப்பெட்டி (அரண்)
    • Cantilevered pillbox - முனைநெம்பிய குளுசைப்பெட்டி (அரண்)
    • Eared pillbox - காதுவடிவ குளுசைப்பெட்டி (அரண்)
    • Essex lozenge pillbox - எசெக்சு வைரவடிவ குளுசைப்பெட்டி (அரண்)
    • Lincolnshire three-bay pillbox - இலிங்கொன்சைர் முக்குடா குளுசைப்பெட்டி (அரண்)
    • Lozenge pillbox - வைரவடிவ குளுசைப்பெட்டி (அரண்)
    • Norkon pillbox - நோர்கோன் குளுசைப்பெட்டி (அரண்)
    • Northumberland 'D' Type pillbox - வடவம்பர்லாந்து 'D' வடிவ குளுசைப்பெட்டி (அரண்)
    • Pentagonal pillbox - ஐம்முக குளிசைப்பெட்டி (அரண்)
    • Ruck pillbox - இரக்கு குளிசைப்பெட்டி (அரண்)
  102. Pinnacle - முடி
  103. Postern - பிற்கதவு
  104. Punji stick - குத்து தடி
  105. Redan - 'V' புறத்தெற்றம்
  106. Redout/redoubtகுறும்பு
    • Schwedenschanze - சுவீடிய குறும்பு
  107. Reduit - வென்னிடரண் (வென்னிடல்+அரண்)
  108. Refuge castle/ Refuge fort - அடைக்கல கோட்டை
  109. Remote controlled weapon station தொலையியக்கி கட்டுப்படுத்திய படைநிலையம்
    • இங்கு படை என்றால் ஆய்தம் என்று பொருள்
  110. Ricetto - ஊர் காப்பகம்
  111. Ringstände / Torbuk - அலங்க நிலையம்/ தோர்பக்கு
  112. Sapping - அடிக்குடைதல்
  113. Sentry - காவலணி (தமிழீ. வழ.)
  114. Sentry gunகட்டுச் சுடுகலன்
    • ஈழத்தின் கட்டுத்துவக்கை ஒப்புநோக்குக
  115. Scarp குத்து
    • counterscarp - எதிர்க்குத்து
    • Counterscarp gallery - குகைப்பாதை
  116. Schanze - முக்கோண அரண்
  117. Sconce - (தெறுவேயக்) காப்பிட்டி
  118. Section post- பகுதி காவலரண்
  119. Siege - முற்றல் | முற்றுகை வேறு; முற்றல் வேறு
  120. Siege engine - முற்றல் எந்திரங்கள்
  121. Slighting - பயன்விடா அழித்தல்
  122. spider hole - சிலந்திக் குழி
  123. Sudis - கவர்க் கொட்டன்
  124. Suffolk Square - சாவெக்கு சதுரம்
  125. stronghold- அரணிருக்கை
  126. T- wall - T- தடையரண்
  127. Tenaille - நாக்கு
  128. Terreplein- தெறுவேய சமாந்தரை
  129. Tett turretதெட்டு அலங்கம்
    • spy holes - வேவு ஓட்டை
  130. Tower கோபுரம்
    • Archery tower - வில்வட்டக் கோபுரம்
    • Bartizan/ Turret - கிளிக்கூண்டு/ அலங்கம்/அலங்கன்
    • battery tower- சேணேவித் தொகுதிக் கோபுரம்
      • சுருக்கமாக சேணேவிக் கோபுரம் எனலாம்
    • Bergfried - நெடுங்கோபுரம்
    • Butter-churn tower - ஈரடுக்கு கோபுரம்
    • Corner tower - மூலைக் கோபுரம்
    • Fire control tower - வேட்டுக் கட்டுப்பாடு கோபுரம்
    • Flanking tower - கைத்தல் கோபுரம்
      • கை - Flank
    • Gate tower/ defensive tower/ castle tower - வாயில் கோபுரம்
      • இதன் வாயில் - கோட்டி
    • Keep - காவல்மாளிகை/ கோபுரரண்
      • Shell keep - கூட்டுக் கோபுரரண்
    • Observation tower - நோக்க கோபுரம்
    • Peel towers/pele towers - அடையாள கோபுரம்
    • Powder tower - வெடிமருந்து கோபுரம்
    • Roundel - வல்வளை கோபுரம்
    • Siege towers/ breaching towers - முற்றல் கைக்கொள்ளாப்படை/ உடைத்தல் கைக்கொள்ளாப்படை
    • Tower house - கோபுர வீடு
    • Wall tower/ Fortified tower - அரணப்பட்ட கோபுரம்
    • Watchtower - அட்டாலகம் / அட்டாலை/ மேவறை/ கண்காணிப்பு கோபுரம்
    • Witch tower - மையலி கோபுரம்
  131. Trench - நகரகழி
  132. Trenching tool - நகரகழியாக்கும் ஆய்தம்
  133. Tunnel warfareகுடைவழி போர்முறை
    • Counter mine - எதிர்ச்சுரங்கம்
  134. Wall மதில்/ அரணி/ கடகம்/ பீலி/ வாடம்/ வேதி / அல்/ ஓதை/ நொச்சி/ வரைப்பு/ ஆரை/ உல்லி/ ஆர்மை/ பரிகம்/ புரிசை/ தொடை/ தகைப்பு/ வரணம்/ வேணகை/ வாரி
    • மதில்/ அகமதில் - உயரமொன்றேயுடையது
    • எயில் - உயரத்தொடு அகலமுமுடையது
    • இஞ்சி/ புறமதில் - அவற்றொடு திண்மையு முடையது . புறமதிலில்தான் மேற்கூறிய பலவகைப் பொறிகள் அமைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் செம்பு புனைந்தியற்றியதாகவும் சிறுபான்மை அரைத்த சாந்திட்டமைத்ததாகவும் பகைவரால் எளிதில் தாக்க முடியாதவாறு திண்ணிதாகக் கட்டப்பட்ட மதில் ஏனை வகை மதில்களிலும் மிக இறுகியிருத்தல் பற்றி இஞ்சி எனப்பட்டது. - Enceinte
    • சோ - அம் மூன்றொடு அருமையுமுடையது
    • கற்பா, கற்பு - உண்மதிலின் வாரியுள் உயர்ந்தநிலம்
    • கடிமதில் - காவல் மிகுந்திருந்த மதில்
    • இறைப்புரிசை, நெடுமதில் - மிகவும் உயர்ந்த மதில்
    • குமரி மதில்- அழியா மதில்
    • Allure, alure, wall-walk - மதிலுண் மேடை/ அகப்பா/ பரிகை
    • Blast wall - வெடிகா மதில்
    • Carnot wall - கார்னொட்டு மதில்
    • Chemise/ mantlet wall/ apron wall - சட்டை மதில்
    • Contramure - மறுசுவர்
    • Curtain wall - இடைமதில்
    • Faussebraye - கட்டைமதில்
    • Loopholed walls - சூட்டிஞ்சி மதில்
    • Rampart - பதணம்
    • Revetmnet wall - தறைமதில்
    • Shield wall - கேடய மதில்
    • Stockade - சாலம்
    • Zwinger - வண்சிறை
    • கோட்டைப்படி- சோபானம் 
  135. wolf hole - ஓநாய்க் குழி

 


  1. மிளை/ காவற்காடு/ கணையம் - கோட்டை அகழிக்கு முன்னுள்ள செயற்கைக் காடு.
  2. காவலரண் - (முன்னரணில் அமைக்கப்பட்டிருக்கும் சிறுசிறு அரண்கள் காவலரண்(தமிழீ.வழ) என்று அழைக்கப்படும். இது நாட்டினுள் அமைக்கப்படிருக்குமாயின் அதுவும் காவலரண் என்று மட்டுமே வழங்கப்படல் வேண்டும்.. காவலரண் & காப்பரண் ஆகிய இரு சொற்களுக்கும் பொருள் வேறுபாடுண்டு.)

 

  1. Arena கோதாக்குழி
    • (இது த.நா சிற்றூர் வழக்கு. இஃது ஈழத்தில் 'கோதா' என்று இன்றளவும் வழங்கப்படுகிறது)
  2. Armoury - துப்புளி
  3. Arsenal - ஆய்தசாலை
  4. Arsenal (small like tent) - படைக்கொட்டில்
  5. Barrack - கட்டூர்(படைகள் தங்கும் நிரந்தரமான படைத்தளம்)
    • கட்டூர் பற்றி மேலும் காண போரியல் அன்றும் இன்றும் என்னும் புத்தகத்தின் 6.2.6 காண்க
  6. Camp = தாவளம் (முகாம் என்பது தமிழ்ச்சொல் அல்ல. ஆனால் பரவலறியாக பயன்படுத்தப்படுவதால் பயன்படுத்துக.)
  7. Depotஆவடி
  8. Encampment/ cantonment படைவீடு, பாடிவீடு, தண்டு, கோத்து
    • பறந்தலை - பாலையில் உள்ள encampment
    • பாடிவீடு பற்றி மேலும் காண 'போரியல் அன்றும் இன்றும் ' என்னும் புத்தகத்தின் 6.2.6 காண்க
      • இக்குடியிருப்பினுள் வீரர்கள் தங்கும் ஒவ்வொரு கூடாரத்திற்கும் பெயர்: கைந்நிலை
      • படையெடுத்த தளவாய் தங்கும் கூடாரம்: சிவிரம்
      • காவலர் தங்கும் கூடாரம்: கைப்புடை
  9. Garrison தாணையம்
    • தானைவைப்பு - தானை வைக்கப்பட்டுள்ள இடம் - (Garrison - together with its troops and the encampment)
  10. Laager - சகடப்பாடி
  11. Military base- படைப்பற்று/ படைத்தளம் (படைத்துறைத் தளம் என்பதன் சுருக்கம்)
    • படைத்தளத்தைச் சுற்றி வரப் போடப்பட்டிருக்கும் பல வகைக் கம்பிவேலிகள்:-
      • கம்பிவலை வேலி,
      • பட்டுக்கம்பி வேலி,
      • முட்சுருள்
  12. Military complex - கூட்டுப்படைத்தளம்(தமிழீ.வழ)
  13. Military station - படை நிலையம்
  14. Tent  கூடாரம், பாழி
    • (தாவளத்தை (U.முகாமை ) விடச் சிறியது.. கூடுதலாக வேவுப்படை(spys), ஆழ ஊடுருவித் தாக்கும் அணிகளால்(DPU) அமைக்கப்படுவது.. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் அவசர காலத்திற்காக அமைக்கப்படுவது.)
    • வீடாரம் - தாவளத்தை விடக் கொஞ்சம் பெரிய கூடாரம்.. வீடு போன்றது
  15. வீடாரம் - தாவளத்தை விடக் கொஞ்சம் பெரிய கூடாரம்.. வீடு போன்றது
  16. ஆய்தப்பயிற்சி செய்யுமிடம் சரம்புச்சாலை, பயிற்சிப்பாசறை, கிடை, களரி
    • சரம்பு, சலகு - ஆயுதப்பயிற்சி
    • பணிக்கன் - படைக்கலம் பயிற்றுவிப்போன்.
    • சலகுபிடித்தல் - படைப் பயிற்சி எடுத்தல் (to practice drill)
  17. கடகம் - மலைகளில் உள்ள மதில்களால்(தற்காலத்திற்கு உறுதியான வேலிகள்) சூழப்பட்ட பாடிவீடு
  18. கடவை - வழியில் அவ்வப்போது நிற்பதற்காக அமைக்கும் பாசறை - staging area
  19. கேடகம்/ அகலறை - மலைகளில் அமைக்கப்படும் பாசறை
  20. தெவ்வர்முனைப் பாசறை - எமது எதிரி இருக்கும் பாசறை
  21. பாசறை நடுத்தர படைத் தாவளம்/தளம்
    1. பாசறை பற்றி மேலும் காண போரியல் அன்றும் இன்றும் என்னும் புத்தகத்தின் 6.2.6 காண்க
    2. பாசறைக் காப்பாளர் - பாசறையைக் காக்கும் வீரர்
  22. மாசிதறிருக்கை - பகைவரிடத்துக் கவர்ந்த யானை பசு முதலிய விலங்குகளை இரப்போர்க்கு அளவிறந்து கொடுக்கும் பாசறை
  23. குறும்பு - காவற்காட்டில்(மிளை என்ற கோட்டையை சுற்றி உள்ள காடு) உள்ள கடத்தற்கரிய சிற்றரண் சூழ்ந்த கோட்டை

 

 

உசாத்துணை:

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kuna kaviyalahan said:

இது வன்னியில் உருவாக்கப்பட்ட அகராதியா?

வன்னியில் தமிழ் அகராதி உருவாக்கியதாக நான் அறியவில்லையே. ஆனால் இவர் போட்டுள்ள சொற்கள்  பலவும் பயனுள்ளவையாகத்தானே இருக்கின்றன. 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்+

இன்று நான் உலகில் வழங்கப்படும் பல்வேறு வகையான கருவிகளுக்கான தமிழ்ச்சொற்கள் பற்றிய தொகுப்புடன் உங்களைக் காண வந்திருக்கிறேன்... அறிவோமா?

 

 

  1. device = கரணம் (ஏற்கனவே உபகரணம் என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறோம். அதிலுள்ள உப என்னும் சமற்கிருதத்தை வெட்டி விட்டு கரணத்தைப் பயன்படுத்துவோமாக )
  2. implement = கதி (இச்சொல்லின் அகராதிப்பொருள் கருவி ஆகும். இம்பிளிமென்ட்டு என்னும் சொல்லின் பொருள் வேலை செய்ய உதவும் கருவி என்னும் பொருளில் வரும்போது கதி என்னும் சொல் தமிழில் ஆளப்படல் வேண்டும் ஆகவே இது இதற்கான மிகச் சிறந்த கலைச்சொல்!)
  3. furniture = தளவாடம்
    1. தட்டுமுட்டு - கொஞ்சம் பழைய தளவாடங்கள்
  4. agricultural tools/equipment - எக்கர்
  5. equipment - ஏந்தனம்
  6. machine = எந்திரம்
  7. engine = பொறி, சூழ்ச்சியம் [திருநெல்வேலி(த.நா.) வழ.]
  8. speedo-meter = வேக-மானி
  9. gauge = கடிகை, அளவி
  10. tool = ஆய்தம்
  11. instrument = கருவி
  12. auxiliary instrument - துணைக்கருவி
  13. utensil = ஏனம் (ஈழ வழக்கு), கலன்
  14. auxiliary equipment - துணை ஏந்தனம்
  15. control = கட்டுறல்
  16. apparatus = ஆய்கருவி (ஈழ வழக்கு),
    1. இயற்றனம்( இச்சொல்லின் அகராதிப்பொருள் கருவி, பாத்திரம் ஆகும்.. சரியாகப் பொருந்தி வருவதைக் காண்க! மேலும், இயற்று → இயற்றனம் . ஏதேனும் ஒன்றினை இயற்றுவது என்னும் பொருளிலும் கொள்ளலாம். னவே உச்சொல்லிற்கு இதுவே என் கலைச்சொல் பரிந்துரை!)
  17. accessory = அணியம் (இச்சொல்லின் அகராதிப்பொருள் கருவி ஆகும். மேலும் அணியம் என்றால் ஆயத்தம் ஆகும். இன்னொரு வகையில் பார்த்தால் அணிவது என்றும் கொள்ளலாம். அக்சசரி என்றால் சேர்ப்பது.. அணிவதின் பொருளும் அதுவே.. எனவே எனவே உச்சொல்லிற்கு இதுவே என் கலைச்சொல் பரிந்துரை)
  18. gear = முட்டு (இச்சொல்லின் அகராதிப்பொருள் கருவி ஆகும். முட்டுக்கால், முட்டுக்கொடுத்தல், முட்டுச் சட்டம், முட்டுச்சுவர் ஆகிய பொருள்களை இங்கு உற்றுநோக்குக. ஏதேனும் ஒன்றிற்கு பற்றுக்கோடாக முட்டுக் கொடுக்கப்படுகிறது என்னும் பொருளில் வந்துள்ளது. அதே போன்று gear என்னும் சொல்லின் பொருளும் ஒரு தேவைக்குப் பயன்படுத்துவது என்னும் பொருளே உள்ளது.. எனவே முட்டு என்னும் சொல் ஏறக்குறைய அப்பொருளில் வந்துள்ளமையைக் காண்க.. எனவே உச்சொல்லிற்கு இதுவே என் கலைச்சொல் பரிந்துரை!)
  19. paraphernalia = பரிவட்டணை | ஐம்பரி வட்டணை யகத்தில் வாழுயிர்க்கு(மேருமந். 216), சத்திர சாமர முதலிய பரிவட்டணைகளோடு(குருபரம். 191)

 


கிட்டிப்பு(credit): இராமகி ஐயா

  1. equipment = ஏந்தனம்
  2. treadle = தாடல்
  3. appliance = படியாறம்
  4. application = படியாற்றம்
  5. contrivance = கற்பிகம்

 


  1. Gadget - தந்துகை

இதை இணையத்தில் இருந்தே பொறுக்கினேன். உருவாக்கியவர் யாரென அறியில்லை.

 


 hickey க்கு எனக்கு தமிழ்ச்சொல் தெரியவில்லை!


 

  • கரணம் என்னுஞ்சொல் பற்றிய குறிப்பு:

main-qimg-8796a13aac9565efb0dfbaa6659e3192-pjlq

main-qimg-2908f8d262df1e4315888eae51ba59b6-pjlq

main-qimg-356fcb5285e6ff828afb30734031b1e4

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.