Jump to content

அவுஸ்ரேலியாவில் திடீர் வெள்ளம்: இதுவரை குறைந்தது எட்டு பேர் உயிரிழப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவில் திடீர் வெள்ளம்: இதுவரை குறைந்தது எட்டு பேர் உயிரிழப்பு!

அவுஸ்ரேலியாவில் திடீர் வெள்ளம்: இதுவரை குறைந்தது எட்டு பேர் உயிரிழப்பு!

கிழக்கு அவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குயின்ஸ்லாந்தின் தலைநகரான பிரிஸ்பேனின் சில பகுதிகள் நேற்று (திங்கட்கிழமை) நீருக்குள் மூழ்கின.

2,145 வீடுகள் மற்றும் 2,356 வணிகங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், 10,827 கட்டடங்களின் தரைப் பலகைகளுக்கு மேல் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய் கிழமை முதல் பெய்து வரும் தொடர் மழையால் பிரிஸ்பேன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பிரிஸ்பேனின் தெற்கே உள்ள கோல்ட் கோஸ்ட் சிட்டியில் சூரிய உதயத்திற்கு முன் வெள்ளத்தில் மூழ்கிய 50 வயதுடைய ஒருவர் திங்கள்கிழமை நீரில் மூழ்கி இறந்தார் இதனால். உயிரிழப்பு எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.

குயின்ஸ்லாந்தின் முதல்வர் அன்னாஸ்டாசியா பலாஸ்க்சுக் கூறுகையில், ‘இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த அளவு மழையை யாரும் கண்டதில்லை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன்’ என கூறினார்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அவசர சேவைகள் 130க்கும் மேற்பட்டவர்களை மீட்டுள்ளனர். தேடுதல்கள் இன்னும் நடந்து வருகின்றன.

https://athavannews.com/2022/1269778

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக வலதுசாரிகள் புவி வெப்பமடைவதனை பொய் என்று கூறுவர், அவுஸ்திரேலியாவில் பெரும்பான்மையானவர்களின் நிலைப்பாடக உள்ளது அதற்கு காரணம் அவர்களது சிந்தனையில் வலதுசாரி ஊடகங்களின் தாக்கம், ஆரம்பத்தில் காலனிலயில் துருவங்களில் உள்ள பனிக்கட்டி உருகினால் அது எவ்வாறு உயர் தாழமுக்கங்களில் பாதிப்பினை ஏற்படுத்தி காலனிலையினை மாற்றும் என்பதை நகைசுவையாக பார்கின்ற நிலமையே காணப்பட்டது, இப்போது ஓரளவிற்கு உணர  ஆரம்பித்துள்ளார்கள் ஆனால் வலதுசாரி அரசிடமிருந்து புவி வெப்பமடைவதை தடுப்பதற்கான போதுமான செயற்பாடுகள் குறைவாகவே உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

Bild

 என்னப்பா நாய் பேய் வெள்ளம் போல கிடக்கு.....?

அவுஸ் உறவுகள் நலமா?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

Bild

Bild

 என்னப்பா நாய் பேய் வெள்ளம் போல கிடக்கு.....?

அவுஸ் உறவுகள் நலமா?

நன்றி…அண்ணை…!

எனக்குத் தெரிய அனைவரும் நலம்…!

மழை மேகங்கள் சிட்னியை நோக்கி நகரத் தொடங்குவதாகக் கூறுகிறார்கள்! எங்கட ஊர்த் தெற்போட்டம் மாதிரி இருக்கும் போல கிடக்குது…!

உடையார் இருக்கிற பக்கம் ஒரு சிலமனும் இல்லை…!

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, புங்கையூரன் said:

நன்றி…அண்ணை…!

எனக்குத் தெரிய அனைவரும் நலம்…!

மழை மேகங்கள் சிட்னியை நோக்கி நகரத் தொடங்குவதாகக் கூறுகிறார்கள்! எங்கட ஊர்த் தெற்போட்டம் மாதிரி இருக்கும் போல கிடக்குது…!

உடையார் இருக்கிற பக்கம் ஒரு சிலமனும் இல்லை…!

இப்போது ஜேர்மனிய முக்கிய தொலைக்காட்சிகளிலும் எதிர்வரும் நாட்களின் அவஸ்ரேலிய காலநிலையை பிரத்தியேகமாக காட்டினார்கள்.சீரற்ற காலநிலை போல் இருக்கின்றது கவனமாக இருங்கள்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புங்கையூரன் said:

நன்றி…அண்ணை…!

எனக்குத் தெரிய அனைவரும் நலம்…!

மழை மேகங்கள் சிட்னியை நோக்கி நகரத் தொடங்குவதாகக் கூறுகிறார்கள்! எங்கட ஊர்த் தெற்போட்டம் மாதிரி இருக்கும் போல கிடக்குது…!

உடையார் இருக்கிற பக்கம் ஒரு சிலமனும் இல்லை…!

நாங்கள் பத்திரமாக இருக்கின்றோம் கொரோணா முதல் மழை வரை👍

  • Like 5
Link to comment
Share on other sites

19 hours ago, புங்கையூரன் said:

நன்றி…அண்ணை…!

எனக்குத் தெரிய அனைவரும் நலம்…!

மழை மேகங்கள் சிட்னியை நோக்கி நகரத் தொடங்குவதாகக் கூறுகிறார்கள்! எங்கட ஊர்த் தெற்போட்டம் மாதிரி இருக்கும் போல கிடக்குது…!

உடையார் இருக்கிற பக்கம் ஒரு சிலமனும் இல்லை…!

கந்தப்புவையும் கேட்டதாகச் சொல்லவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குயின்ஸ்லான்ட் என்ற இடம் மட்டும் மழை வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கபட்டு இருப்பதாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.ரொறன்டோவும் ஒட்டாவா மற்றும் மொன்றியால் போன்ற தூரத்தை கொண்ட பிரதேசமாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் கவனமாக இருப்பதுடன் தேவையான உணவுப் பொருட்களையும் சேமித்து வையுங்கள்........குழந்தைகள் பத்திரம்.......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

கந்தப்புவையும் கேட்டதாகச் சொல்லவும்

கந்தப்பு வசிக்கிற இடம், மலையும் மலை சார்ந்த நிலமுமாகும். ஐ மீன் குறிஞ்சி.

பயமில்லை….!

Edited by புங்கையூரன்
எழுத்துப் பிழை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு பேய்க்காய் எண்டது எனக்கு எப்பவோ தெரியும் 🤣

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று மாதங்களிற்கு முன் இந்த Colo river/Kurrajong மலைப்பாதை ஊடாக ஒரு drive போயிருந்தேன், அந்த சமயத்தில் Colo riverன் ஒரு பகுதி சாதாரன நீரோடை/அருவி போல ஓடிக்கொண்டிருந்தது👇🏼

400-DD310-065-D-4-DD1-9354-938-EA9675-F0

அதே இடத்திற்கு திரும்பவும் போன கிழமை போனபொழுது பாதையை மூடிவிட்டார்கள்.. 

1-BB820-C7-B200-4-FBB-907-C-48343-A5-FF0

இன்னமும் மழை நின்றபாடில்லை.. 1000 வருடங்களிற்கு பிறகு இந்த மாதிரி வெள்ளப்பெருக்கு.. 

  • Like 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

1000 வருடங்களிற்கு பிறகு இந்த மாதிரி வெள்ளப்பெருக்கு.. 

 பிரபா சிதம்பரநாதன் அவர்களே…..
ஆயிரம் வருடங்களாக, இந்த மழை வீழ்ச்சியை அவுஸ்திரேலியா பதிந்து வைத்திருக்குதா…. 😁
ஆங்கிலேயர் எப்போ…. அவுஸ்திரேலியாவுக்கு போனவர்கள் என அறிய ஆவல். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/3/2022 at 19:32, தமிழ் சிறி said:

 பிரபா சிதம்பரநாதன் அவர்களே…..
ஆயிரம் வருடங்களாக, இந்த மழை வீழ்ச்சியை அவுஸ்திரேலியா பதிந்து வைத்திருக்குதா…. 😁
ஆங்கிலேயர் எப்போ…. அவுஸ்திரேலியாவுக்கு போனவர்கள் என அறிய ஆவல். 😀

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி தமிழ்சிறி அண்ணா!!  1 in 100 year event என்றுதான் எழுதியிருக்க வேண்டும்.. 

 https://theconversation.com/what-is-a-1-in-100-year-weather-event-and-why-do-they-keep-happening-so-often-157589

 


https://theconversation.com/amp/yes-australia-is-a-land-of-flooding-rains-but-climate-change-could-be-making-it-worse-157586

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/3/2022 at 05:19, நிழலி said:

கந்தப்புவையும் கேட்டதாகச் சொல்லவும்

அப்புவை இன்னும் மறக்காமல் இருப்பதற்கு நன்றி 😄

On 3/3/2022 at 09:04, குமாரசாமி said:

கந்தப்பு பேய்க்காய் எண்டது எனக்கு எப்பவோ தெரியும் 🤣

உங்களுக்குத் தெரியுது. ஆனால் வீட்டில தெரியவில்லையே 🥲

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கந்தப்பு said:

உங்களுக்குத் தெரியுது. ஆனால் வீட்டில தெரியவில்லையே 🥲

நித்திய தர்ம அடியும் அதனால் குந்தியிருப்பதும்........ உடாங் சம்பலும் தொடர்கதைகள்......
கண்டதில் மிக்க மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2022 at 16:14, கந்தப்பு said:

அப்புவை இன்னும் மறக்காமல் இருப்பதற்கு நன்றி 😄

கல்லோ காய் காய் கந்தப்பு

நீண்ட நாட்களின் பின்பு கண்டது சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2022 at 05:18, ஈழப்பிரியன் said:

கல்லோ காய் காய் கந்தப்பு

நீண்ட நாட்களின் பின்பு கண்டது சந்தோசம்.

வணக்கம்.  மகிழ்ச்சி  

அது சரி இங்கிலிசில எல்லாம் பிளந்து கட்டிறீங்கள் 

Link to comment
Share on other sites

On 3/16/2022 at 19:14, கந்தப்பு said:

அப்புவை இன்னும் மறக்காமல் இருப்பதற்கு நன்றி 😄

 

அவுஸ் என்றதுமே முதலில் நினைவில் வருகின்றவர்களில் நீங்களும் ஒருவர்.

நீங்கள் எனக்கு ஒரு உறுதிமொழி தந்தும் உள்ளீர்கள்.... நினைவு இருக்கின்றதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

வணக்கம்.  மகிழ்ச்சி  

அது சரி இங்கிலிசில எல்லாம் பிளந்து கட்டிறீங்கள் 

கந்தப்பு ஐ ஆம் பிறம் அமெரிக்கா யூ நோ?

9 minutes ago, நிழலி said:

அவுஸ் என்றதுமே முதலில் நினைவில் வருகின்றவர்களில் நீங்களும் ஒருவர்.

நீங்கள் எனக்கு ஒரு உறுதிமொழி தந்தும் உள்ளீர்கள்.... நினைவு இருக்கின்றதா?

எத்தனை பேருக்கு உறுதிமொழி கொடுத்திருப்பார்.

யார் யாருக்கு என்ன கொடுத்த என்று எழுதியா வைத்திருப்பார்.

பத்தோடு பதினொன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அவுஸ் என்றதுமே முதலில் நினைவில் வருகின்றவர்களில் நீங்களும் ஒருவர்.

நீங்கள் எனக்கு ஒரு உறுதிமொழி தந்தும் உள்ளீர்கள்.... நினைவு இருக்கின்றதா?

என்ன உறுதிமொழி கொடுத்தனான். 🤔.

வயது போயிட்டுது.  ஞாபகம் வரவில்லை 

1 hour ago, ஈழப்பிரியன் said:

கந்தப்பு ஐ ஆம் பிறம் அமெரிக்கா யூ நோ?

அமெரிக்கா என்ன சந்திர மண்டத்திலேயே இருக்குது   

தமிழரோட தமிழில் கதைக்கவேணும் 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் வெள்ளப்பெருக்கு அபாயம் இன்னமும் நீங்கவில்லை.. கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட சேதங்களை திருத்துவதற்கிடையில் மீண்டும் ஒரு வெள்ளம்.. 

இன்று வழமையாக போகும் இடத்திற்கான வீதியை மூடிவிட்டார்கள்.. திரும்பி இன்னொரு வழியில் போகும் பொழுது எடுத்த படங்கள்..

அதிலும் Hawkesbury ஆறு ஓடும் விதத்தை/வேகத்தைப் பார்த்த பொழுது ஒரு இனம்புரியாத உணர்ச்சி(பயம்? கவலை?) 

large.E6E8E4AD-0909-4449-A7CE-35A1C20BC7F6.jpeg.b0367e5125435a7c39d5a2de35e2410c.jpeglarge.933F688F-248F-40F5-9576-1D01F6AC521E.jpeg.47121b835691798993fca0478c445317.jpeglarge.A3B02BFD-952C-421D-90C4-7A9FC281E23C.jpeg.14819c9fde1bddb3735ebd2960f69be1.jpeg

2-ADF5-E89-DD10-49-BF-8-A92-893-AEBCA3-A
 

large.734559C0-938D-4157-911D-16B43372BC37.jpeg.0bee986850972166c4f8c0ec2fdcd237.jpeg

  • Thanks 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.