Jump to content

நான் ஏன் தமிழன்? ஏனெனில் என் ரத்தம் தமிழக மண்ணுடன் கலந்திருக்கிறது”- ராகுல் காந்தி பேச்சு


Recommended Posts

நான் ஏன் தமிழன்? ஏனெனில் என் ரத்தம் தமிழக மண்ணுடன் கலந்திருக்கிறது”- ராகுல் காந்தி பேச்சு

 

 

 
 
தான் தமிழன் என்று ஏன் சொன்னேன் என்பது குறித்து ராகுல்காந்தி உருக்கமாக உரையாற்றியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில், உள்ள வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதை நூலான, ‘உங்களில் ஒருவன்’ புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா, பினராயி விஜயன் ஆகிய தேசிய அளவிலான தலைவர்கள் கலந்துகொண்டனர்.
kalaignarseithigal_2022-02_5d950967-aad0
இதில் ராகுல்காந்தி பேசுகையில், ”ஒரு அருமையான புத்தகத்தை ஸ்டாலின் வழங்கியுள்ளார். அவருடைய வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டம். இது பல ஆண்டுகால போராட்டம். தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் நிறையவே செய்திருக்கிறார். நேற்று என் தாய் என்னை தொடர்புகொண்டு பேசினார். ஸ்டாலினுக்கு பிறந்த நாள் என்று கூறினார். நான் எனக்கு தெரியும் என்று கூறிவிட்டு, அவருக்கு எத்தனை வயது தெரியுமா என கேட்டேன். தெரியாது என்றார். 69 வயது என்று கூறியதும் அவர் வாய்ப்பேயில்லை என்றார். சரி, அவருக்கு எத்தனை வயது இருக்கும் என கேட்டேன். அதற்கு அவர்,58, 60 இருக்கும் என்றார்.
கூகுள் தேடிப்பார்த்தார். மை காட் நீ சொன்னது சரிதான் என்று ஒப்புக்கொண்டார். அவர் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறார் என்பதை ஒரு புத்தகமாக எழுத வேண்டும். என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து பெருமைபடுத்தியதற்கு நன்றி கூறுகிறேன். தமிழ்நாட்டிற்கு வருவதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். என் மனதின் ஆழத்திலிருந்து கூறுகிறேன். சில நாட்களுக்கு முன்பு நான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தமிழகத்தை பாராட்டினேன்.
நான் ஏன் தமிழ் என்று கூறினேன்?:
FMvU5WlWYAYNpf3-300x162.jpg
நாடாளுமன்றத்திலிருந்து வெளியே வந்தபோது, ‘நீங்கள் ஏன் தமிழ்நாட்டை மேற்கொள் காட்டினீர்கள்?” என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார். அப்போதுதான் எனக்கு தோன்றியது, நான் தமிழ்நாட்டை குறிப்பிட்டிருக்கிறேன் என்பது. எனக்கே தெரியாமல் என் வாயிலிருந்து தமிழ்நாடு என்று கூறியிருக்கிறேன். நான் தமிழ் என்று கூறினேன். காரிலிருந்து ஏறியதற்கு பின்பு தான் நான் ஏன் அப்படி கூறினேன் என்று நினைத்து பார்த்தேன். 3500 ஆண்டுகள் பழமையான நாகரீகம் கொண்ட மொழி தமிழ். அந்த நாகரீகம் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ளவில்லை.
பிறகு எப்படி தமிழன் என்று கூறிக்கொண்டேன் என்பது குறித்து நான் யோசித்துக்கொண்டிருந்தேன். காரணம், என் ரத்தம் உங்கள் மண்ணுடன் கலந்திருக்கிறது. தந்தையை இழப்பது என்பது வேதனையானது. மிகவும் கடினமான அனுபவம் அது. அந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டேன். தமிழனாக இருப்பதன் பொருள் என்ன?. நான் தமிழ்நாட்டிற்கு வந்தபோது மனிதநேயத்துடன் வந்தேன். உங்கள் மொழி, வரலாறு, பராம்பரியத்திற்கு தலைவணங்குபவனாக வந்தேன்.
பிரதமர் மோடிக்கு புரிதல் இல்லை:
தமிழ்நாடு மக்கள் குறித்து பிரதமருக்கு புரிதல் இல்லை. தமிழ்நாடு என்பது 3500 ஆண்டுகள் பழமையானது. தமிழ்நாடு என்பது மொழி. தமிழ்நாட்டை அவர் புரிந்துகொள்ளவில்லை. தமிழ்நாடு மக்களின் குரலை புரிந்துகொள்ள முடியாமல், உங்களுக்காக பேசுகிறேன் என எப்படி அவர் கூறமுடியும். நீட், ஜிஎஸ்டி வேண்டாம் என கூறிய தமிழ்நாடு மக்களின் குரலை செவிசாய்க்காமல் அவர்களை அவமதிக்கிறீர்கள். 3000ம் ஆண்டுகலாக தமிழ்நாட்டின் மீது யாராலும், எதையும் திணிக்க முடிந்ததில்லை. அன்போடும், அக்கறையோடும் பேசினால் தமிழ்நாடு மக்களிடமிருந்து எதையும் பெற முடியும்.
இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் தற்போது தான் முதன்முறையாக ஒரு மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஜம்மு காஷ்மீர் மக்களால் தங்களை தாங்களே ஆள முடியாத நிலை உள்ளது. குஜராத், உத்தரபிரதேச அதிகாரிகள் ஜம்மு காஷ்மீரை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். இது அந்த மக்களுக்கு இழைத்திருக்கும் கொடுமை. பஞ்சாப்பில் நூற்றுக்கணக்கான நிலங்களை எடுத்து எல்லை பாதுகாப்பு படையினருக்கு கொடுத்திருக்கிறார்கள். அதேயேத்தான் தமிழ்நாட்டிற்கும் அவர்கள் செய்கிறார்கள்.
 
‘நாங்கள் போராடி வெல்வோம்’
வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியா. நாங்கள் எதை சொல்கிறோமா அதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். ஆனால், நீங்கள் யார் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிப்பதற்கு.. உங்களுக்கு யார் அந்த அதிகாரத்தை கொடுத்தது. இது தான் நாட்டின் முக்கிய பிரச்னை.
பாஜக கற்பனை கோட்டை கட்டவேண்டாம். அவர்களுக்கு எதிராக நாங்கள் போராடி வெல்வோம். அவர்கள் வரலாற்றுக்கு எதிராகவும், பாரம்பரியத்தை எதிர்த்து போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள். தோற்றுவிடுவார்கள். சகோதரர் ஸ்டாலினுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்” என்றார்.

Thinakkural.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோனியா..சொக்கத்தங்கம் என்றும் ..தமிழகத்தில்  இருந்து ஒருவர் சொன்னவர்....அதனால்தானோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people standing and text that says 'வர்த்தக மையக் கூட்டரங்கம். நந்தம்'

மதுரையிலை....  இந்திரா காந்தியின்ரை, மண்டையை…
நாங்க உடைச்சோமே... அது,  இந்தப் பக்கத்திலை  இருக்கு.  😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

முதலமைச்சர்  ஸ்ராலின்  எழுதிய... "உங்களில் ஒருவன்"  புத்தக வெளியீட்டு  விழா.

 

"உங்களில் ஒருவன்" புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் தேசிய தலைவர்கள்

 

இந்த நிகழ்ச்சி, என் அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனை - ஸ்டாலின் அதிரடி 

 

 

உங்களில் ஒருவன் புத்தக வெளியீடு - குடும்பத்துடன் வந்த உதயநிதி ஸ்டாலின்! 

 

"இந்த மேடை ட்ரைலர் மட்டும்தான்... இனி படம் வரும்" - கனிமொழி எம்.பி

 

“அந்த 17 வயது இளைஞன்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்”- வைரமுத்து

 

Link to comment
Share on other sites

6 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 2 people, people standing and text that says 'வர்த்தக மையக் கூட்டரங்கம். நந்தம்'

மதுரையில...  இந்திராகாந்தியின்ர  மண்டையை, 
நாங்க உடைச்சோமே... அது, இந்த பக்கதில இருக்கு.  😂 🤣

இந்தியாவின் தலை சிறந்த அரசியல்வாதிகள்.

Link to comment
Share on other sites

நான் நினைக்கவில்லை ஸ்டாலினின் தனது  சுயசரிதை எழுதி இருப்பார் என்று ,அவருடைய மொழியறிவு யாம் அறிந்ததே, அநேகமாக கனிமொழி எழுதியிருக்க கூடும். மோடிக்கு எதிரான தேசிய சக்திகளை ஒன்றினைக்கும் ஒரு மேடையாக இந்த புத்தக வெளியீடு பாவிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/3/2022 at 03:29, nunavilan said:

நான் ஏன் தமிழன்? ஏனெனில் என் ரத்தம் தமிழக மண்ணுடன் கலந்திருக்கிறது”- ராகுல் காந்தி பேச்சு

கொஞ்சம் தள்ளி வந்து ஈழ தமிழரின் இரத்தத்தையும் குடித்து பார்த்தேன்.

வித்தியாசமாக இருந்தது.

தமிழ்நாட்டு இரத்தமே ரொம்ப ரேஸ்ட்.

Link to comment
Share on other sites

5 minutes ago, ஈழப்பிரியன் said:

கொஞ்சம் தள்ளி வந்து ஈழ தமிழரின் இரத்தத்தையும் குடித்து பார்த்தேன்.

வித்தியாசமாக இருந்தது.

தமிழ்நாட்டு இரத்தமே ரொம்ப ரேஸ்ட்.

ராகுல் ஈழத் தமிழர்களின் இரத்ததைக் குடித்தவரா? எப்ப நடந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, நிழலி said:

ராகுல் ஈழத் தமிழர்களின் இரத்ததைக் குடித்தவரா? எப்ப நடந்தது?

ஓ அப்ப ராகுல் காங்கிரசில் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

இந்தியாவின் தலை சிறந்த அரசியல்வாதிகள்.

எதிர்கால இந்தியாவில்…
இவர்கள் இருவரின் பெயர்களும், பொன் எழுத்துக்களால்   பொறிக்கப் படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, zuma said:

நான் நினைக்கவில்லை ஸ்டாலினின் தனது  சுயசரிதை எழுதி இருப்பார் என்று ,அவருடைய மொழியறிவு யாம் அறிந்ததே, அநேகமாக கனிமொழி எழுதியிருக்க கூடும். மோடிக்கு எதிரான தேசிய சக்திகளை ஒன்றினைக்கும் ஒரு மேடையாக இந்த புத்தக வெளியீடு பாவிக்கப்பட்டுள்ளது.

கையுக்குள்ளை வைரமுத்து இருக்க... அவர் ஏன், கனி மொழியிடம் போகிறார். 

Link to comment
Share on other sites

3 hours ago, zuma said:

நான் நினைக்கவில்லை ஸ்டாலினின் தனது  சுயசரிதை எழுதி இருப்பார் என்று ,அவருடைய மொழியறிவு யாம் அறிந்ததே, அநேகமாக கனிமொழி எழுதியிருக்க கூடும். மோடிக்கு எதிரான தேசிய சக்திகளை ஒன்றினைக்கும் ஒரு மேடையாக இந்த புத்தக வெளியீடு பாவிக்கப்பட்டுள்ளது.

கதை வசனம் எழுதவா தமிழ்நாட்டில் ஆட் கள் இல்லை?

Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

ஓ அப்ப ராகுல் காங்கிரசில் இல்லையா?

, காங்கிரஸில் இருக்கும் / இருந்த/ இருக்கப் போகும் அனைவரும் ஈழ இரத்தம் குடித்தவர்கள் என்று சொல்கின்றீர்கள்... அப்ப சரி

36 minutes ago, தமிழ் சிறி said:

எதிர்கால இந்தியாவில்…
இவர்கள் இருவரின் பெயர்களும், பொன் எழுத்துக்களால்   பொறிக்கப் படும்.

இன்று விகடனில் ஒரு பத்தி வந்துள்ளது... ஸ்டாலினின் இளமை ரகசியம் என்னவென்று... சிரிப்போம் சிறப்போம் பகுதியில் பிரசுரிக்கவா என்று யோசித்து விட்டு பிறகு நிறைய body shaming வகையான பதில்கள் வரும் என்று நினைத்து பிரசுரிக்கவில்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

இன்று விகடனில் ஒரு பத்தி வந்துள்ளது... ஸ்டாலினின் இளமை ரகசியம் என்னவென்று... சிரிப்போம் சிறப்போம் பகுதியில் பிரசுரிக்கவா என்று யோசித்து விட்டு பிறகு நிறைய body shaming வகையான பதில்கள் வரும் என்று நினைத்து பிரசுரிக்கவில்லை.
 

ஸ்ராலினின் இளமை ரகசியம்…. அவர் தலையில் போட்டு இருக்கின்ற “விக்” என்று,
சோனியாவையும், ராகுலையும் தவிர… அகில உலக தமிழருக்கும் தெரியும். 😂
சில வேளை அவர்கள் இருவரும்…  ஸ்ராலினை, பப்பா மரத்தில் ஏற்ற… “றீல்” விட்டிருக்கலாம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நிழலி said:

இன்று விகடனில் ஒரு பத்தி வந்துள்ளது... ஸ்டாலினின் இளமை ரகசியம் என்னவென்று... சிரிப்போம் சிறப்போம் பகுதியில் பிரசுரிக்கவா என்று யோசித்து விட்டு பிறகு நிறைய body shaming வகையான பதில்கள் வரும் என்று நினைத்து பிரசுரிக்கவில்லை.
 

நாங்கள்…. பகிடி பண்ண மாட்டம்.
நீங்கள்… அந்த விகடன் கட்டுரையை இணைத்து விடுங்கோ. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 2 people, people standing and text that says 'வர்த்தக மையக் கூட்டரங்கம். நந்தம்'

மதுரையிலை....  இந்திரா காந்தியின்ரை, மண்டையை…
நாங்க உடைச்சோமே... அது,  இந்தப் பக்கத்திலை  இருக்கு.  😂 🤣

இது யார் மனதையும் புண்படுத்தினால் நான் பொறுப்பல்ல..🤣

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நிழலி said:

ராகுல் ஈழத் தமிழர்களின் இரத்ததைக் குடித்தவரா? எப்ப நடந்தது?

2009, இல் கொத்து கொத்தாக தமிழர் கொள்ளப்பட்டு போது, ராகுல் சொன்னது ஈழத்தமிழருக்கு நாடு அல்லது அரசு கிடைக்க கூடாது என்று; அல்லது அந்த கருத்தை அவரது மொழியில்.


இதை கண்டு தான், இறுதியில் தெரிந்தது, யார் தமிழ்  இனவழிப்புக்கு கரணம் என்று.

     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people standing and text that says 'வர்த்தக மையக் கூட்டரங்கம். நந்தம்'

இந்த பக்கத்துல தான்.... தம்பி,  
உங்க ஆயாவும்... எங்க நைனாவும்,  
கச்சத்தீவை...  ஸ்ரீலங்காவுக்கு,  வித்ததை  பற்றி  இருக்கு. 😁 😂 🤣

Link to comment
Share on other sites

1 hour ago, Kadancha said:

2009, இல் கொத்து கொத்தாக தமிழர் கொள்ளப்பட்டு போது, ராகுல் சொன்னது ஈழத்தமிழருக்கு நாடு அல்லது அரசு கிடைக்க கூடாது என்று; அல்லது அந்த கருத்தை அவரது மொழியில்.


 

     

ஈழத்தமிழருக்கு நாடு அல்லது அரசு கிடைக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் சிலவற்றைத் தவிர (அவற்றிலும் அனேகமானவை திராவிட கட்சிகளும் சாதிக் கட்சிகளுமே) உலகில் வேறு எவராவது எந்த தேசமாவது, விரும்பியிருக்கின்றதா?

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளும் இணைந்து தான் தமிழர்களுக்கு நாடு கிடைக்க கூடாது என்று இலங்கை அரசை பலப்படுத்தியும் புலிகளை தடை செய்தும் காரியம் ஆற்றின. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ராலின் எழுதிய “உங்களில் ஒருவன்” புத்தகத்தை பற்றி,
ஆராய்ச்சி செய்பவர்களுக்கு, டாக்டர் பட்டம் கொடுக்க,
பல பல்கலைக் கழகங்கள் தயாராக உள்ளதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

ஸ்ராலின் எழுதிய “உங்களில் ஒருவன்” புத்தகத்தை பற்றி,
ஆராய்ச்சி செய்பவர்களுக்கு, டாக்டர் பட்டம் கொடுக்க,
பல பல்கலைக் கழகங்கள் தயாராக உள்ளதாம்.

Bild

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தன் வரலாறு ... இந்தப் புத்தகத்தை திமுகவினர் அல்லது திமுகவின் அனுதாபியாக இருப்பவர்கள் படிப்பார்களா என்று தெரியவில்லை ஆனால் நான் படித்தது தான் ஆச்சரியம். 😀

பொதுவாக மாற்று சித்தாந்தத்தில் உள்ளவர்களைப் பற்றி படிப்பது என் வழக்கம் அதன்படி ஸ்டாலின் அவர்களின் தன் வரலாற்றில் அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்பதற்காக இந்த புத்தகத்தை வாங்கினேன். 

புத்தகத்தில் மொத்தம் 338 பக்கங்கள் உள்ளது அதில் வெறும் 137 பக்கங்கள் மட்டுமே எழுத்துக்களால் ஆனவை மற்ற பக்கங்கள் அனைத்தும் அவர்களுடைய புகைப்படத்தை பதித்துள்ளார்கள்.  

அந்த 137 பக்கத்தில் கூட ஸ்டாலின் அவர்களை பற்றி தெரிந்து கொள்ள வெறும் 60 மட்டுமே உள்ளது மீதி அனைத்தும் திமுகவின் வரலாற்றைப் பற்றியும் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தான் குறிப்பு உள்ளது. இதற்கு மேல் இந்த புத்தகத்தை விமர்சிப்பதற்கு வேறு வார்த்தைகள் இல்லை. 

విషాల్ బొలివర్

 

 

fathima%20babu%20stalin-n38yt.jpg

இவர்கள் பற்றிய சம்பவங்கள் அடங்கிய பக்கங்கள் கிழித்தெறியப்பட்டு விட்டதாம் 😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

Bild

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தன் வரலாறு ... இந்தப் புத்தகத்தை திமுகவினர் அல்லது திமுகவின் அனுதாபியாக இருப்பவர்கள் படிப்பார்களா என்று தெரியவில்லை ஆனால் நான் படித்தது தான் ஆச்சரியம். 😀

பொதுவாக மாற்று சித்தாந்தத்தில் உள்ளவர்களைப் பற்றி படிப்பது என் வழக்கம் அதன்படி ஸ்டாலின் அவர்களின் தன் வரலாற்றில் அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்பதற்காக இந்த புத்தகத்தை வாங்கினேன். 

புத்தகத்தில் மொத்தம் 338 பக்கங்கள் உள்ளது அதில் வெறும் 137 பக்கங்கள் மட்டுமே எழுத்துக்களால் ஆனவை மற்ற பக்கங்கள் அனைத்தும் அவர்களுடைய புகைப்படத்தை பதித்துள்ளார்கள்.  

அந்த 137 பக்கத்தில் கூட ஸ்டாலின் அவர்களை பற்றி தெரிந்து கொள்ள வெறும் 60 மட்டுமே உள்ளது மீதி அனைத்தும் திமுகவின் வரலாற்றைப் பற்றியும் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தான் குறிப்பு உள்ளது. இதற்கு மேல் இந்த புத்தகத்தை விமர்சிப்பதற்கு வேறு வார்த்தைகள் இல்லை. 

విషాల్ బొలివర్

 

 

அறிஞர் அண்ணாதுரையின், காசை…
ஆட்டையை போட்டதைப் பற்றியும் புத்தகத்தில் இருக்குதா? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

அறிஞர் அண்ணாதுரையின், காசை…
ஆட்டையை போட்டதைப் பற்றியும் புத்தகத்தில் இருக்குதா? 😂

ரயில் பயணங்கள்  சம்பவம் கூட இல்லை சிறித்தம்பி 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

ரயில் பயணங்கள்  சம்பவம் கூட இல்லை சிறித்தம்பி 🤣

குமாரசாமி அண்ணை…இன்னும் கன பாகங்கள், புத்தமாக வர இருக்குதாம்.
சிலவேளை அதில வர இருக்குதோ…. 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
    • நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.