Jump to content

அதை நாம் பார்த்திருக்கிறோம் நண்பரே

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மேலைத்தேச நண்பரே!
எதை நீங்கள் இன்று பார்க்கிறீர்களோ,
அதை நாங்கள் பார்த்திருக்கிறோம் நண்பரே!
 
உண்மையான உணர்ச்சிகள் கொப்பளிக்கின்ற,
சோகத்தின் ஆழத்தை நாம் அனுபவித்திருக்கிறோம்.
 
போரின் நடுவே,
வளர்ந்த குழந்தைகள் நாம்!
ஆதலால் பலமுறை நாம்,
சொர்க்கத்தை உணர்ந்துள்ளோம் நண்பரே.
 
மரணத்தின் வேதனையை,
தனிமையின் கொடுமையை,
கொடிய வறுமையை நாம் எதிர்கொண்டோம்.
 
பசியின் உக்கிரத்தில் பலநாள் தவித்திருக்கிறோம்.
போரின் நடுவே நம் இளமையைத் தொலைத்தோம்.
தினமரணத் துக்கத்துள் தவித்தோம்.
 
நாம் விடும் ஒவ்வொரு மூச்சிலும்,
எம் மண்ணின் ரணம் கலந்துள்ளது.
 
பட்டவனுக்குத்தான் நோவு தெரியும் நண்பரே!
ஆதலால் சொல்கிறோம்,
எங்கொருவன் குண்டு மழையில்
செத்து மடியும்போதும்,
எங்களுக்கும் வலிக்கிறது நண்பரே!
 
உங்களுக்கு வலிக்கும்போது,
எங்கள் இதயத்தின் ஒரு சிறு ஓரம்,
இறந்துவிடுகிறது நண்பரே!
 
நாங்கள் எம் இதயத்தையும் ஆன்மாவையும்,
உங்களிடம் காட்டுகிறோம்.
எங்களிடம் சாக்குப்போக்குகள் இல்லை,
மறைக்க எதுவும் இல்லை.
எப்போதும் நாம் வழங்கக்கூடியது
எம் அன்பை மட்டுமே!
 
-தியா-
 
275050950_4753727461342057_1909779523745058653_n.jpg?_nc_cat=106&ccb=1-5&_nc_sid=730e14&_nc_ohc=p0ULgWMZeBwAX_5HAGP&_nc_ht=scontent-msp1-1.xx&oh=00_AT_DJwXeBEmt34WUo0dwME6EXO26zDKjENGLDKsU1Kyx1Q&oe=6225B10E
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலைத் தேய நண்பனின் வலியை நாங்கள் உணர்கின்றோம்…! அவர்களை அணைப்பதற்கு ஆயிரம் கரங்கள் நீள்கின்றன..! ஆயிரம் கண்கள் பனிக்கின்றன…! ஆயிரம் வாசல்கள் திறக்கின்றன..!

ஆனால் எமக்காக…?

காந்தியின் குல்லாய் கூட முகத்தைத் திருப்பிக் கொண்டதே?

அது தான் இன்னும் வலிக்கின்றது…!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தால் நேரடியாக பாதிக்கப் பட்டவர்களுக்குத்தான் அதன் வலிகள் தெரியும், புரியும்.....நீங்கள் கூறியதுபோல் சொர்க்கத்தை பலமுறை கண்டு வந்துள்ளோம்......இன்றும் கூட வீட்டுக்கு மேலால் விமானம் போகும்போது மனசில் ஒரு அதிர்வு உண்டு.....!

வலி மிகுந்த கவிதை .....நன்றி சகோதரி......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புங்கையூரன் said:

மேலைத் தேய நண்பனின் வலியை நாங்கள் உணர்கின்றோம்…! அவர்களை அணைப்பதற்கு ஆயிரம் கரங்கள் நீள்கின்றன..! ஆயிரம் கண்கள் பனிக்கின்றன…! ஆயிரம் வாசல்கள் திறக்கின்றன..!

ஆனால் எமக்காக…?

காந்தியின் குல்லாய் கூட முகத்தைத் திருப்பிக் கொண்டதே?

அது தான் இன்னும் வலிக்கின்றது…!

உண்மை 

4 hours ago, suvy said:

யுத்தத்தால் நேரடியாக பாதிக்கப் பட்டவர்களுக்குத்தான் அதன் வலிகள் தெரியும், புரியும்.....நீங்கள் கூறியதுபோல் சொர்க்கத்தை பலமுறை கண்டு வந்துள்ளோம்......இன்றும் கூட வீட்டுக்கு மேலால் விமானம் போகும்போது மனசில் ஒரு அதிர்வு உண்டு.....!

வலி மிகுந்த கவிதை .....நன்றி சகோதரா ......!

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2022 at 07:08, theeya said:
மேலைத்தேச நண்பரே!
எதை நீங்கள் இன்று பார்க்கிறீர்களோ,
அதை நாங்கள் பார்த்திருக்கிறோம் நண்பரே!
 
உண்மையான உணர்ச்சிகள் கொப்பளிக்கின்ற,
சோகத்தின் ஆழத்தை நாம் அனுபவித்திருக்கிறோம்.
 
போரின் நடுவே,
வளர்ந்த குழந்தைகள் நாம்!
ஆதலால் பலமுறை நாம்,
சொர்க்கத்தை உணர்ந்துள்ளோம் நண்பரே.
 
மரணத்தின் வேதனையை,
தனிமையின் கொடுமையை,
கொடிய வறுமையை நாம் எதிர்கொண்டோம்.
 
பசியின் உக்கிரத்தில் பலநாள் தவித்திருக்கிறோம்.
போரின் நடுவே நம் இளமையைத் தொலைத்தோம்.
தினமரணத் துக்கத்துள் தவித்தோம்.
 
நாம் விடும் ஒவ்வொரு மூச்சிலும்,
எம் மண்ணின் ரணம் கலந்துள்ளது.
 
பட்டவனுக்குத்தான் நோவு தெரியும் நண்பரே!
ஆதலால் சொல்கிறோம்,
எங்கொருவன் குண்டு மழையில்
செத்து மடியும்போதும்,
எங்களுக்கும் வலிக்கிறது நண்பரே!
 
உங்களுக்கு வலிக்கும்போது,
எங்கள் இதயத்தின் ஒரு சிறு ஓரம்,
இறந்துவிடுகிறது நண்பரே!
 
நாங்கள் எம் இதயத்தையும் ஆன்மாவையும்,
உங்களிடம் காட்டுகிறோம்.
எங்களிடம் சாக்குப்போக்குகள் இல்லை,
மறைக்க எதுவும் இல்லை.
எப்போதும் நாம் வழங்கக்கூடியது
எம் அன்பை மட்டுமே!
 
-தியா-
 
275050950_4753727461342057_1909779523745058653_n.jpg?_nc_cat=106&ccb=1-5&_nc_sid=730e14&_nc_ohc=p0ULgWMZeBwAX_5HAGP&_nc_ht=scontent-msp1-1.xx&oh=00_AT_DJwXeBEmt34WUo0dwME6EXO26zDKjENGLDKsU1Kyx1Q&oe=6225B10E

கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/3/2022 at 01:14, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர்..

மிக்க நன்றி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.