Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

  
தலை நகரின் பிரதான மையத்தில் அமைந்து  இருந்தது அந்த அந்தோனியார் கோவில். செவ்வாய்க் கிழமைகளில் மத வேற்றுமை பாராது  மக்கள் தம் வேண்டுதலுக்காக அங்கு கூடுவர். சில இளையோர் தம் சோடிகளுடனும் , வேலை தேடும் இளையவர்  தமக்கு வேலை கிடைத்துவிட வேண்டும் எனும் வேண்டுதலுடனும் , இளம்  பெண்கள் தங்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை அமைந்துவிட வேணுமென்றும் வேளையில் இளையோர்  வெளிநாட்டுப்பயணம் அமைந்து விட வேணுமெனவும்  இன்னும் பல தேவைகளுக்கு  நேர்த்தி வைத்து அங்கு கும்பிட வருவார்கள். அந்த வாயிலில்  மெழுகு திரிக்க கடை கச்சான் கடலைக் கடை  குளிர் பானக கடை என்பன கடைவிரித்து  காத்திருப்பார்கள்.  அவர்களுக்கு அண்மையில் வறுமைப்பட்டோர்  சில ர்  யாசகம் செய்யவும் கூடி இருப்பார்கள். அங்கு  அவர்களுக்கிடையில் வயது  முதிர்ந்த , நீண்ட தா டியும் பரடடைத் தலையும்  கையில் ஒரு ஊன்று கொள்ளும் , தோளில் ஒரு துணி மூடடையும்    கொண்ட முருகேசனும் உட்கர்ந்திருந்தார் .  அவரூ க்கு பழக்கமான சிலர் என்ன முருகேசா!  நீ வேதமா ? சைவமா?  எனக் கேட்ப்பார்கள். அவரும்  அப்பா வேதம் அம்மா சைவம் அதனால் நான் முருகேசனானேன். என்பார் ...

அப்போது அங்கு ஒரு வெண்ணிறக் காரில் ஒரு வயதான அம்மாள் , தன உதவி பெண்ணுடன் கும்பிட வந்திருந்தார். வாயிலின் அருகே  இருந்த முருகேசனின் தட்டில்  இருபது ரூபாய் ...வந்து விழுந்த்து ...ஏற்கனவே சில சில்லறைகளை  வைத்திருந்தார் . அந்த இருபது ரூபாயை எடுத்து தனியே பாத்திரம் பண்ணி வைத்தார் .  இரண்டு நாளாக உணவு சாப்பிட வில்லை .  வெறும்  தேநீர்  மட்டும்  அருந்தி பேசிக் களையை போக்கி இருந்தார்.  .  மதிய வெயில் பசி மயக்கம் கண்ணைக் கட்டிடவே   மெது வாக   அருகில்  இருந்த சாப்பாட்டுக்கு கடையை நோக்கி  சென்றார் .  இவர்  தோற்றத்தை பார்த்த்தும் வாயிலில் நிற  பையன் ... அப்பாலே   போ என விரட்டினான் .  தம்பி ..நான் சாப்பிட வந்திருக்கிறேன் என்றதும் ஒரு ஓரமான பலகை யைக் காட்டி அங்கு உட்க்கார்ந்து கொள் என்றான்.  பணியாளர்  (வெயிட்டர் ) அருகே வரவே ..தம்பி எனக்கு ஒரு பார்சல் ..எவ்வ்ளவு என்றான்.  "மீன் சாப்பாட்டு பார்சல் ஐம்பது ரூபாய்" ..."மரக்கறி பார்சல்  முப்பது ரூபாய் " என்றான்.  அருகே அமர்ந்திருந்த  ஒரு இளைஞன்  .. அவர் வைத்திருந்த  இருபது ரூபாயைக் கண்டு ...தம் பி   அவருக்கு ஒரு மீன் பார்சல் கொடு என்றான். 

 பின் அந்த முதியவருடன்  பேசத்தொடங்கினான்.  "ஐயா உங்களுக்கு  என்ன ஆனது  என் இந்த நிலமை ? என்று கேட்ட்க அவர் கண் கலங்கியது .. அவர் தன்னைப்பற்றி   கூறத்தொடங்கினார் .   தம்பி  நான்  கனடா நாட்டுக்கு சென்று ..மனைவி  இருமகன்களுடன்  வாழ்ந்து வந்தேன் .  கஷ்ட பட்டு  வேலை செய்தேன்.  இராப்பகலாய் கண் விழித்து  இரண்டு வேலைகள்செய்து பிள்ளை களைப்  படிக்க  வைத்து   ஆளாக்கி கலியாணம் கட்டி வைத்தேன். பின்  நானும் மனைவியும் ..முதுமை காரணமாக  தாய் நாட்டுக்கு வந்து வாழ  ஆசைப்பட்டு . வீடடை விற்று  மக்களுக்கு கொடுத்து விட்டு ,மீதிகாசுடன்   ..சில வருடங்கள்  நலமாக  வாழ்த்து வந்தோம். எனக்கு  ஓய்வூதியம் பணம் வந்தது ...அதில் சேமித்து  ஒரு வீடடை வாங்கினேன்.  எமக்கு துணையாக ஒரு பையனை வளர்த்தோம்.   காலம் மிக வேகமாக ஓடியது என் மனைவிக்கு வ யிற்றில் புற்று நோய்   வந்து அவதிப்பட்டு, வைத்ய சாலையும்  வீடுமாக அலைந்தேன்.    வளர்ப்பு  மகனையும்   படிப்பித்து ஒரு வேலையில் யில் அமர்ந்ததும் ..ஒருகலியாணம் கட்டி வைத்தேன். அவனுக்கு இரு  பெண் குழந்தைகள் . காலப்போக்கில்  மனைவி இறந்து  விடடாள் . வந்த மருமகள் மிகவும்  கர்வம் பிடித்தவள் . என் முதுமை காரணமாய் .ஒரு  கண் பார்வையை இழந்தேன்.  மற்றையது  ஓரளவு பார்வை தெரிகிறது .. ..மனைவி இல்லாத அருமை புரிந்தது .. என்னை கவனிக்கவே மாடடாள் மருமகள். குளிக்க உடைமாற்ற  எனக்கு உதவி தேவைப்பட்ட்து ...கை நடுங்க ஆரம்பித்து விட்ட்து  ஆதர வின்றி ..கோவிலைக் காட்டி ..இந்த கோவிலே தஞ்சம் என் வாழ்கிறேன். என  உணவை மெல்ல மெல்ல  உண்டுகொண்டே   சொல்லி முடித்தார்.

இளைஞனும்   அவருக்கும் தனக்குமான உணவுக்கு காசைக் கட்டி விட்டு   இருவரும்  வெளியேறினார். அவர் மீண்டும் கோவிலை நோக்கி புறப்பட ...அந்த  இளைஞன் .சற்று பொறுங்கோ என் சொல்லி ...அருகில் இருந் காரை எடுத்து வந்து ..இதில் ஏறுங்கோ  என சொல்ல தாத்தா மறுத்தார் . வற்புறுத்தி ..  எற வைத்து   சில மணி நேர ஓட்ட்த்தின் பின்  ...ஒரு  கருணை இல்லத்தின் முன்னே நின்றது ...இறங்கி இவரையும் அழைத்து கொண்டு  இவரும்  முன் வாயிலில்  இருந்தா  காரியாலயத்தில்  ..எதோ ...பேசி விட்டு  திரும்ப வந்து 
தாத்தா இனி இது தான்  உங்கள் வீடு  என சொல்லி அவருக்கு தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுக்கும்படி  பணித்தான்.  அங்குள்ள உதவியாளர்  அவருக்கு குளித்து புத்தாடை உடுத்தி  முக சவரம் தலைமுடி கத்தரித்து .. அவருக்கு ஒரு தனியான அடைக்க படட  அறை  ஒழுங்குபடுத்தி ...ஆதரவளித்தனர் .   

சில மணி   நேர இடைவேளையின் பின் ...அந்த   இளைஞன்   மீண்டும்   வந்து  இவரை பார்த்தன். அவரது  இருப்பிடமும் வசதியும் திருப்பி  அளிக்கவே. மீண்டும்  மேலிடத்தில் உள்ள  காரியாலயத்தில் சென்று .      இன்னும் சில  வசதிகள் அவருக்கு தேவைப்படுவதாகி  சொல்லி ...ஏற்பாடு செய்து  வீடு திரும்ப    இருளாகி  விட்ட்து .  தன் காரை  பின்னோக்கி  ரெவெர்ஸ் செய்யும்  போது ,முன் முகப்பு வெளிச்சத்தில்  மின்னியது   "அம்மா கருணை இல்லம் :"  வீடு சென்று  உணவு உண்டு ... மனைவி குழந்தைகளுடன் உரையாடி விட்டு ... உறங்க  சென்று  தாயின் படத்தை  நோக்கி கும்பிட   ஒரு வெண்ணிற பூ ..உதிர்ந்தது  அவன் முன்னே.  "மகனே ஒரு நல்ல காரியம் செய்தாய் " எனும்  மலர்ந்த புன்னகையுடன் அவர் அம்மா படத்தில்  புன்னகைத்தாள். 

ஒரு தாயின் கருவில்  உருவாகி  பூமில் வாழும் மனிதன்  ஒரு மரத்துக்கு  இணையாகிறான்.  ஒரு விதை  மரமாகி, கிளைபரப்பி  பூத்து  காய்த்து   கனிந்து   மீண்டும் விதையாகி மண்ணில்  சருகாகி வீழ்கிறான். விதைகளுக்கு தெரிவதில்லை  இலைச் சருகுகள் தான் தம்மை வளர்த்த விளை  நிலங்கள் என்று.

 

 

  • Like 15
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாக்கா, உங்கள் கதையை வாசித்த போது...ஒரு சினிமாப் பாடல் தான் நினைவுக்கு வந்தது...!

மனிதன் நினைப்பதுண்டு...வாழ்வு நிலைக்கும் என்று....!

இறைவன் நினைப்பதுண்டு...பாவம் மனிதனென்று....!

 

கூட்டைத் திறந்து விட்டால்....குருவி பறந்து விடும்...!

 

நல்ல ஒரு படிப்பினைக் கதை...!

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புங்கையூரன் said:

நிலாக்கா, உங்கள் கதையை வாசித்த போது...ஒரு சினிமாப் பாடல் தான் நினைவுக்கு வந்தது...!

மனிதன் நினைப்பதுண்டு...வாழ்வு நிலைக்கும் என்று....!

இறைவன் நினைப்பதுண்டு...பாவம் மனிதனென்று....!

 

கூட்டைத் திறந்து விட்டால்....குருவி பறந்து விடும்...!

 

நல்ல ஒரு படிப்பினைக் கதை...!

எங்கே உங்கள் ஆக்கம் ஒன்றையும் காணம்..😃

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:

மீன் சாப்பாட்டு பார்சல் ஐம்பது ரூபாய்" ..."மரக்கறி பார்சல்  முப்பது ரூபாய் " என்றான்.  அருகே அமர்ந்திருந்த  ஒரு இளைஞன்  .. அவர் வைத்திருந்த  இருபது ரூபாயைக் கண்டு ...தம் பி   அவருக்கு ஒரு மீன் பார்சல் கொடு என்றான். 

பார்சல் விலையை பார்க்க பழைய கதை மாதிரி தெரியுது.

உங்கள் கதை மாதிரி சில குறும் படங்களும் வந்தன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு படிப்பினைக்கதை சகோதரி......முதியவர்களிடம் தன்கையில் சொத்து இல்லையென்றால் வெத்து வேட்டாகி வீதிக்குத்தான் வரவேண்டும் என்று கதை சொல்லுது.......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாசகர் ஒவ்வொருவருக்கும் பின்னால் இப்படி ஒரு பெரும்கதை இருக்கும். கதையில் வரும்  இளைஞனைப் போல எல்லோரும் கருணைகொண்டிருந்தால் உலகம் வேறு மாதிரி இருக்கும்!

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

கதையின் ஆரம்பத்தில் நல்லதொரு கருவைத் தொட்டு வேறு விதமாக அவசரமாக முடித்துள்ளீர்கள். ஒருவேளை கதையின் ஆரம்பத்தை வாசித்ததும் வேறு திசையில் என் சிந்தனை இருந்திருக்கலாம். 

- பிள்ளைகளை வளர்த்து ஆளா சொத்துக்களைக் கொடுப்பது
- திட்டமிடப்படாத வாழ்க்கை
- மருமக்கள் பிள்ளைகளைச் சார்ந்து வாழவேண்டிய நிலை

இவைற்றை எனது வாழ்க்கையில் தவிர்க்க நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.