• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

ArumugaNavalar

மனமே! சிந்தனை செய்

Recommended Posts

வடலூர் இராமலிங்கர் பாடல்களும் நீதிமன்றமும்.

நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து பிரபல பிரமாணங்காட்டித் தேவாராதி பன்னிரு திருமுறைகளே அருட்பாவாகும். இராமலிங்கரின் பாடற் றொகுதி அருட்பாவன்று எனத் தீர்ப்புப் பெற்ற வெற்றி வீரர் நா. கதிரை வேற்பிள்ளை, அவருக்கு. மாணாக்கர் திரு.வி.க. அத் திரு வி.க.,

* 1 "அருட்பா வென்பது ஆறிரு முறையே என்று

அரசமன்ற மேறிப் பசுமரத் தாணிபோல் நாட்டி" என்றும்

.....................................................................

"மன்னவர் நீதி மன்றினி லேறிப்

பன்னிரு முறையே உன்னருட் பாவென்

றாணி பசுமரத் தறைந்தா லென்னக்

காட்டிச் சாத்திரம் நாட்டின னெவனோ

.....................................................................

................................................................

கதிரைவே லென்றொரு மதுரப் பெயருடைத்

தவன னெவனோ வவனது ஞாபக

சின்னம தாகச் செய்தனம்

உரிமை யுலகமு முவந்திட வினிதே'

* 1 - பெரிய புராணம் - குறிப்புரை by திரு.வி.க. 1910-வது வருடப் பதிப்பு. (உரிமையுரை)

என்றுங் கூறி, அக் கதிரைவேற் பிள்ளையை வந்திக்கிறார், அவ்விராமலிங்கரின் பாடல்களா தேவாராதிகட்குச் சமம்? அவற்றையா சைவாலயங்களில் ஓத வேண்டும்?

Share this post


Link to post
Share on other sites

இராமலிங்கர் பாடல்களால் அர்ச்சனையும் ஆன்மீகத் தொடர்பும்

'தேவார..... ...... .... முதலிய தமிழ்ப் பாசுரங்களில் ஏதாவது ஒன்றிரண்டு ஓதி' என்கிறார் நவீனர். அர்ச்சனையில் ஆயிரம் பூத்தூவி ஆயிரம் நாமத்தையும் நூற்றெட்டுப் பூத் தூவி நூற்றெட்டு நாமத்தையும் ஓத வேண்டும். அது நடைமுறையிலுள்ளது. ஆனால் அவருக்கோ ஒன்றிரண்டு பூத்தூவி ஒன்றிரண்டு பாடல்கள் ஓதினாற் போதும். அவ்வர்ச்சனையால் அவ் வான்மீகத் தொடர்பு தமக்கு ஏற்பட்டு விடுமென அவர் சொல்லுகிறார். அப்படியானால் இராமலிங்கருடைய அருட்பாவில்,

"மின்னைப் போலிடை மெல்லிய லாரென்ற

விடத்தைப் போல் வரும் வெம்மனப் பேய்களைப்

பொன்னைப் போன்மீகப் போற்றி யிடைநடுப்

புழையிலே விரல் போதப் புகுத்தியீத்

தன்னைப் பேரன்முடை நாற்றச் சலத்தையே

சந்தனச் சலந்தா னென்று கொள்கின்றேன்

என்னைப் போல்வது நாய்க்குலந் தன்னினு

மில்லை யல்ல தெவற்றினு மில்லையே'

[இராமலிங்கர் - திருவருட்பா 2ம் திருமுறை - தனித்திரு விருத்தம் 11]

என்பதொரு பாடல். நவீனர் தம் அதிகாரத்திலுள்ள ஆலயங்களில் அதை யோதித் தினத்தந்தி யர்ச்சனை செய்ய முன்வருக. ஆன்மீகத் தொடர்பு அவருக்குத் தப்பாது கிடைக்கும். அன்ன பாடல்கள் பலவுள. 'கருங்குழிப் பிள்ளை பாடல்கள் (ஆராய்ச்சி)" என்றொரு நான் செய்து வைத்திருக்கிறேன். அ·தச்சாகும். பிறகு அப்பாடல்களின் தரம் உலகிற்கு அதிகம் விளங்கும்.

Share this post


Link to post
Share on other sites