Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனிதனின் வாழ்க்கைச்  சக்கர சுழற்சியின்போது  இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். ஒரு  அழகிய கிராமத்திலே சற்று வசதி படைத்த  குடும்பத்தில்  ஒரு கணவனும் மனைவியும் ,அவர்களது  இல் வாழ்வின் வசந்தமாக வந்துதித்தாள் கவினா ...காலம் உருண்டோட அவள்  பள்ளி செல்லும் காலம் வந்தது .  இனிய பள்ளிக் காலம் தன் ஓடடத்தில்  அவளை பத்தாம்   வகுப்புக்கு நகர்த்தியது.  இவர்களின் வீட்டுக்கு  உதவிக்கு வரும்  வேலப்பனின்  சகோதரி  மாணிக்கம் குடும்பத்துக்கு  அழகான ஐந்து குழந்தைகள் .  வேலப்பன் தூரத்து  உறவென்றாலும் கஷ்டத்தின் நிமித்தம் தன்  வயல் வேலைகளோடு  இவர்களுக்கும் உதவி செய்பவன்.  

மாணிக்கம்,கணவன்  கதிரேசனின் ,  வாத்தியார்  சம்பளத்தோடு  ஐந்து குழந்தைகளுக்கு அன்பான தாயக பராமரிப்பவள்.  இவர்களும்  கவினா வோடு  ஒரே பள்ளிக் கூ டத்தில்   படிப்பவர்கள்.  கவினா  ஒற்றைப் பெண்  குழந்தையாதலால்  இவர்களுடனே பள்ளிக்கு செல்வாள். மாணிக்கத்தின் மூத்தமகன்   கிருபாகரன்  இவளை விட மூன்று வயது கூடியவன்.  கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான்.  

கவிதா கணக்கில் படு மக்கு . பாடம் சொல்லிக் கொடுக்க  வேலப்பன் மூலம்  கவினா வின் தாய் செய்தி  சொல்லி அனுப்பி,  அவனும்  பாடம் சொல்லிக் கொடுக்க  முன் வந்தான்.  அந்த வருடம் கவினா  கணக்கு பாடத்தில் நல்ல புள்ளிகள் பெற்றாள்   .  ஆசிரியரின் பாராட்டும் பெற்றாள் .அடுத்த வருடம்  பத்தாம் வகுப்பு  முக்கியமான  வருடம்.  தொடர்ந்தும்  கணக்கில் முன்னேறினால் தான்  உயர்தரம் விஞ்ஞானம்   பிரிவில் படிக்க முடியும்.  தொடர்ந்தும்   கிருபன் வந்து பாடம் எடுக்க ஒழுங்கு செய்தனர்.  அந்த சிறு பண உதவி  அவனுக்கு  பஸ் போக்குவரத்து  போன்ற செலவுக்கு  உதவியது .  பத்தாம்  வகுப்பு  இறுதி பரீடசையும் வந்தது ...கவனமாக படிக்க வேண்டும்  என இடைக்கிடை  கிருபன்   பாடம் சொல்லிக் கொடுக்கும் போது தாயார் வந்து போவார்.சில சமயம் தேநீரும்  சிற்றுண்டியும்   பரிமாறுவாள்.  பரீடசை முடித்து . நல்ல   பெறுபேறு   கிடைத்தது .  கணித்துக்கு டி.. சித்தியும் மற்றும் 4சீ 3 எஸ் .எடுத்தாள் . அவர்கள் உயர்கல்விக்கு எங்கே சேர்ப்பது என்  யோசித்து கொண்டு இருந்தார்கள்.   கவினா வுக்கு கிருபன்  வீட்டுக்கு வராதது பெரும் ஏக்கமாக  எதோ ஒன்றை  இழந்தவள் போல இருந்தாதாள் . வழக்கம்போல  அவ்வூர்   கோவில் திருவிழா காலம் வரவே  ..பெற்றோருடன்  சென்றவள் ,கிருபனிடம் தான்  அவனை  விரும்புவதாக யாருக்கும்  தெரியாமல் கடிதம்  ஒன்றைக்   கொடுத் தாள். மறு நாள்  பதிலாக அவன்  உங்கள்  வீட்டு   நிலைமையும்.  எங்களுக்கும் சரிவராது . நாங்கள் நட் ப்பாகவே  இருப்போம் என்றான். 

 காலம் மெல்ல நகர்ந்து சென்றது  கிருபன்  கல்லூரி   முடித்து  ஒரு   வேலை யில்  சேர்ந்தான் .  அதற்காக தினமும்  பஸ் பயணம்  செல்வதுண்டு .  கவினா வும் உயர் கல்விக்காக  பஸ் வண்டியில் செல்ல விரும்பி வீட்டில் கார் வசதி  இருந்தாலும் சாக்கு போக்கு சொல்லி  கிருபனை காண்பதற்காகவே  பஸ் இல்  பாடசாலைக்கு  சென்று  விடுவாள். ஆனாலும்  கிருபன் இல்லாத வாழ்க்கையை  கற்பனை பண்ண  முடியவில்லை .  அவன் நினைவாகவே  இருப்பாள். ." என்ன பிரச்னை என்றாலும் நான் பார்த்து கொள்வேன். எனக்கு  உன்  பதில் என்ன?  என்றாள்" .அவனும் இளைஞன் தானே  ...இருவரும் காதலின்  சங்கீதம் பாட  ஆரம்பித்தனர்.  

சில நாடகள் சென்றன  கவினா வின் போக்கில் சில மாறுதலைக் கண்டு  கண்டித்தார்.  தாயார் . அப்படி ஏதுமில்லை என்று  சாதித்தாள் கணவனிடம் கூறிய  போது    பெண் பிள்ளைக்கு படிப்பும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் . கலியாணத்தை கட்டி வைப்போம் என்கிறார்.  இதை  மெதுவாக பேச்சு  வாக்கில் சொன்னாள்  தாயார் .  அதற்கு அவள்  "நான் சின்ன  வயசிலே இருந்து  அவனைத் தான்   என்  மனதில் நினைத்து இருக்கிறேன்    எனவே வேறு எதற்கும் சம்மதிக்க மாடடேன்" என்றாள் .  மகளின் பிடிவாதத்தை எண்ணியவாறு ...ஒரு நாள் கிருபனை     தன்னை வந்து சந்திக்கும்படி  வீட்டுக்கு அழைத்தார்கள் .  

 

அவனும் எதோ நடக்க போகிறது .  என் எண்ணியவாறு  அங்கு சென்றான்.  அவனைக் கண்டதும்  கதிரையில் உடகாரும் என்றார்.  கேள்வி க்கணைகளாக  தொடுத்தார் ... "உமக்கு என்ன  வருமானம் இருக்கிறது?  ".." என் பிள்ளையை எப்படி  காப்பாற்று வீர்? .". என் பணத்தின்  மீது  ஆசை இருந்தால்   ஏதாவது , பிச்சை  போடுகிறேன் எடுத்து கொண்டு  சென்று விடும் "  ....  உமக்கு இரு தங்கைகள் இருக்கிறார்கள் அவர்களை எப்படி கரை சேர்ப்பீர் ? . இதெல்லாம்  சரிவராது  ..உமது வேலையைப்பாரும் ..உமது பெற்றோருக்கு  ஒரு நல்ல நிலையை அமைத்து கொடும்.   என்று  அதட்டியவாறே   மகள் கவிதாவை அழைத்தார்.  அவளும்  பயத்துடன் தேநீரைக் கொண்டு வந்து   கொடுத்தாள்  அவன் மறுத்து விடடான்.  அவ்வளவு நேரமும்  பொறுமையாக ,  எல்லாவற்றையும் பொறுமையாக கேடடான் .   எந்த வித பிரச்சினை வந்தாலும் நான் உன்னைக் கைவிடேன் என்றவள் மெளனமானாள் .    நீ யாருடா?  என்பதுபோல் பார்த்தாள் . நா நுனி வரை   உங்கள் மகள் தான் என்னை பின்னும் முன்னும்  துரத்தி காதலித்தாள் . என்னோடு பார்க்கில்  வந்து  சந்திப்பாள்   முதலில் உங்கள் மகளை   எச்சரியுங்கள் என்று சொல்ல நினைத்து  மெளனமானான் . சரி நீர் போகலாம்"  என்றதும் திருப்பியும் பாராமல்  வீடு வந்து சேர்ந்தான். 

 அன்று இரவே கொழும்புக்கு ..நேர்முக தேர்வு  இருப்பதாக  சொல்லி , செல்ல ஆயத்த மானான்.  விடிந்ததும்   தனக்கான ஆடைகளை யும் முக்கிய பொருட்களை யம்  எடுத்துக் கொண்டு முதல் ரயில் வண்டியில் பயணமானான் . தன்னுடன் ப டித்த ஒரே ஒரு நண்பனை நம்பி, ...கொழும்பை  அடைந்ததும் நண்பனைத் தொடர்பு கொண்டு அவர்கள் வீட்டுக்கு  ...வந்து  அவனது தந்தையின் அனுமதியுடன் ...அவர்களது தென்னந்தோப்பில்  தொழிலாளி யாக சேர்ந்தான்.  இயந்திரத்தில்  தேங்காய் மடடையை    தும்பாக்கி  கயிறு தயாரிப்பது ...கால்  விரிப்பு ..மெத்தை போன்ற பொருட்களை தயாரிப்பது என்று, எல்லாத தொழில்களையும் கற்று  தனது   நேர்மையாலும்  கடும் உழைப்பினாலும்   நண்பனின்  தந்தைக்கு அடுத்த முதலாளியாக இருந்தான். நண்பனுக்கு  வெளி நாட்டு ஆசை வரவே  ..தந்தை படிக்க லண்டனுக்கு அனுப்பி விடடார் . நண்பனின் குடும்பத்தில் அவனும் ஒருவனாக வாழ்ந்தான். நண்பனின் தங்கை திருமணமாகி  அமெரிக்காவில்  வாழ்ந்து  கொண்டிருந்தார் .    அக்காலத்தில்  அவனுக்கு  கீழே  நாற்பது  பேர் வேலை செய்யும்  தொழிலாளர்களுக்கு அதிகாரியானான்.   முதலாளிக்கு அடுத்த படியாக  அவர்களுக்கு ஊதியம் கொடுப்பது, வேலையைப்பிரித்து கொடுப்பது  போன்ற  ஒரு சின்ன  முதலாளியாக  வலம் வந்தான்.  அவனது நேர்மை  ஓயாத உழைப்பு  நாணயம்  வேலையாட்களிடம் பண்பாக வேலை வாங்குவது,  என்பவை  அவருக்கு அவனிடம் மிகவும் பிடித்த குணங்கள் .  அவர்க ளின்   பொருட்களை  தொகையாக வாங்கி விற்கும்  வாடிக்கையாளர்களை  இவனுக்கும் நண்பராக் கினான். ஒரு நாள் நண்பனின்  அப்பாவிடம்   நாங்களே  ஒரு உற்பத்தி பொருட்களை  விற்கும் ஒரு கடையை  ஆரம்பித்தால்  என்ன என அறிவுரை  கேடடான்  . அதற்கும் அவர் எனக்கும் வயதாகிறது . ஒரே ஒரு மகனும் லண்ட னில்    படிக்குபோது  நட் ப்பான   பிள்ளையைக் கட்டி விடடான் .  ஒரு தொகைப்பணம் தருகிறேன் நீரே அதை  முதலீட்டு உம்மிடம் காசு உள்ள  போது திருப்பி தாரும் என்று சொன்னார்.   கிருபனின்   நாணயம், விடாமுயற்சி  தொழில் பற்று,   நுட்பம்  .வேலையாட்கள் இடம் பழகும் விதம் என்பன  அவனை மேலுயர்த்தியது.  இரண்டு  பெரிய   ஸ்டோர் களுக்கு  அதிபதியானான்.  வெளிநாடடவர் சுற்றுலாவில்  வரும்  போது இவனின்  பொருட்களை   விரும்பி வாங்கவும் ,  தென்னையின் ஒவ்வொரு பகுதியும்  செதுக்க பட்டு  வடிவமைத்து  விற்பனை .பொருளாயின.  தனது   தாய் தந்தையின் வீடடை  ஒரு அழகான வீடாக்கினான்.  ..தங்கைகளுக்கு  திருமணம்  என எல்லாக்  கடமையும் முடித்து  ..சற்று தன்னை  எண்ணி பார்த்தான் .  வயதும் 35  ஐ தாண்டி ண்டி விட்ட்து. 

கவினா குடும்பத்தின் பணத்திமிர்த்தனம் கண் முன்னே வந்தது . தான் பாவிக்கும்  வாகனத்தை  விட  அழகான இன்னொரு காரை வாங்கி கொண்டு , தன்  கிராமத்து நோக்கி பயணமானான் . மீண்டும் கொழும்புக்கு தன்  தாய் தந்தையை தன்னோடு தலைநகருக்கு  கூட்டி வர நினைத்து சென்றான். நீண்ட பயணத்தில்  கவினா   அவர்களது  வீட்டில் தனக்கு நடத்த அவமரியாதையை எண்ணினான். உனது  நிலையை உயர்த்தியப்பின்,  உன் கடமைகள் முடிந்த பின் , பெண் தருகிறோம் என்றாவது ஒரு  நம்பிக்கையை தரவில்லை . எவ்வ ளவு இழிவாக பேசி னர்கள்.  காலம் உருண்டோடியது . கவினா வும் திருமணமாகி  இரண்டு குழந்தைகளுக்கு தாயானதாக கேள்விபட்டுருந்தான். கணவன்  ஒரு புடவைக்கடை,உரிமையாளராக  இருந்தான்.  

மார்கழி  மாதத்து  இளம் மழைத்துளிகள்  ஆரம்பித்த ஒரு நாளில்   வந்திறங்கினான் ஊருக்கு .  தாய் தந்தையரை அழைத்து கொண்டு  ஒரு வாரத்தில்  தான் புதிதாக  வாங்கிய வீட்டுக்கு கூ ட்டிச்  சென்று குடிபுக  நினைத்து  அழைத்து வர  எல்லா ஏ ற்பாடுகளுடனும் வந்து  இருந்தான்.  பயண களைப்பில்  அயர்ந்து தூங்கி கொண்டிருந்தவனை ,தயார் தேநீருடன்  உறக்கம் கலைத்தாள்.  அவர்  தமது ஊர் கோவிலில்  அவனுக்காக நேர்த்தி வை த்தாகவும்  அதை அவனைக் கொண்டு செலுத்துவதாக வேண்டி இருந்த்தாவும் கூறி கோவிலுக்கு  சென்றார்கள் . அருகே கிராமத்து சிறுவர்கள்  புதிதாக  ஒரு கார் நிற்பதை பார்க்க வென்று  கூடடமாய்  வந்தார்கள்.

 மதிய வேளை க்கு அண்மித்த நேரம்  சூரியன் தன்  கொடும் கதிர்களால்  அனல் வீசிக் கொண்ட பொழுதில்  அவ்வழியே  தாயுடன் கவினா   இரண்டவது குழந்தைக்கு  தடுப்பூசி போடச் சென்று வந்து கொண்டிருந்தாள். தூரத்தே  , இவனைக்  கண்டதும்  மலைத்து நின்றாள். அவன் இவளைக் கண்டதும்   வந்து  நலம் விசாரித்தான். தாயார் முன்னையை  பொலிவிழந்து வயதானவராய்  தோன்றினார்.  கொடிய வெய்யிலாக இருக்கிறது.  வீடு வரை  கொண்டுவந்துவிட கேட்டும்  மறுத்து விடடாள்.  அவள்  கண்கள் நீர்கோர்த்து கொண்டது.  இன்னும் கொஞ்சக் காலம் இவனுக்காக காத்திருக்கலாமோ ..? என  எண்ணியவாறு நடக்க தொடங்கனாள் . கடந்த காலம் அவளுக்கு திரைப்  படம் பார்ப்பதுபோல் மனதில்  தோன்றியது .   

கவினாவின்  பெற்றோர்களின்   வசதி வாய்ப்பு காரணமாக , வந்த தற்பெருமை , அவன் கேடட ஏளனபேச்சு அதனால் வந்த  மன வைராக்கியம்   தன்னை  இவ்வ்ளவு தூரம்  உயர வைத்திருக்கிறதே என்  எண்ணிக் கொண்டே  வீடு நோக்கி விரைந்தனர்.  அவ்னது பெற்றோர்களும் மகனின்  வேண்டுகோளுக்கு  மறுப்புத் தெரிவிக்காமல் தமது மகனின் கனவு  இல்லத்தை  நோக்கி பயணமானார்கள். 

 மனித வாழ்க்கை பல ஏற்றத்   தாழ்வுகளைக் கொண்டிருக்கும்.   சந்தர்ப்பங்கள் தான் ஒருவனை திசை திரும்புகின்றன. அந்த திசைகள் பல  சமயங்களில் உயர்ச்சியையும்  ஒரு  சில சமயங்களில்  வீழ்ச்சியையும் தருவதுண்டு.  மனதில் உளி என  விழும் வார்த்தைகள் தான் இலட்சியம்   எனும் சிலையை செதுக்கும் கற்கள். கொண்ட கொள்கையில் பிடிப்பிருந்தால்  என்றும் எதையும் சாதிக்கலாம்  

 

 

Edited by நிலாமதி
  • Like 11
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கருவை எடுத்து அருமையாக எழுதியிருக்கிறீர்கள் நிலாமதி.

கிருபன் என்ற பேர்வழி எப்போதும் உசார் பாட்டி போல இருக்கு.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"முயற்சி மெய் வருந்தக் கூலி தரும்" கூடவே கொஞ்சம் அவமதிப்பும் சேர்ந்து விட்டால் உயர்வதற்கு சொல்லவும் வேண்டுமோ.........நல்ல கதை சகோதரி.......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2022 at 22:33, நிலாமதி said:

ஆனாலும்  கிருபன் இல்லாத வாழ்க்கையை  கற்பனை பண்ண  முடியவில்லை .  அவன் நினைவாகவே  இருப்பாள். ." என்ன பிரச்னை என்றாலும் நான் பார்த்து கொள்வேன். எனக்கு  உன்  பதில் என்ன?”  என்றாள்

இப்படி எம்ஜியாரைத் துரத்தித் துரத்திக் காதலிக்கும் பெண்கள் மாதிரி நமக்கு வாய்க்கவில்லை! சிவாஜி மாதிரி நாசூக்காக சுற்றியதால் கண்டாலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள்😙

 

On 18/3/2022 at 01:11, ஈழப்பிரியன் said:

கிருபன் என்ற பேர்வழி எப்போதும் உசார் பாட்டி போல இருக்கு.

அது எண்டால் உண்மைதான்.. ஆனால் உசார் மடையர் கிடையாது😜

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.