Jump to content

அரச எச்சரிக்கை "புலியை தோற்கடித்தோம்! ஒட்டகங்களே அடங்குங்கள்!"

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

bus-3%2B%25281%2529.jpg

 “புலிகள் சிங்கத்திடம் தோற்ற ஒரு நாட்டில் 

ஒட்டகங்கள் அடங்கியிருக்கத் தெரிந்துகொள்ள வேண்டும்.”

அரச பொதுப் போக்குவரத்து பஸ் வண்டியின் பின்னால் இந்த வாசகம் பொறிக்கப்பட்டு போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது.

இலங்கைப் போக்குவரத்துச் சபையால் மத்துகம டிப்போவிலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த பேருந்து சிங்கள மொழியில் இப்படி இனத்துவேசத்தை கக்கும் வாசகத்தை கக்கியபடி நாளாந்தம் பயணிக்கிறது.

  மத்துகம பகுதியானது சிங்களவர்களும் முஸ்லிம்களும் அதிகமாக வாழும் பிரதேசம். இந்த பஸ் வண்டியும் கூட களுத்துறை, அளுத்கம, மத்துகம பகுதியில் சேவையில் உள்ள பேருந்து. அது மட்டுமன்றி சிங்கள மக்கள் மத்தியில் ஏற்கெனவே முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறுப்பு அதிகமாக ஊட்டப்பட்ட பிரதேசம். 2014 ஆம் ஆண்டு ஞானசார தேரர் உள்ளிட்டோரால் ஏற்படுத்தப்பட்ட கலவரம் இந்தப் பகுதியில் தான் நிகழ்ந்தது. எப்போதும் ஒரு கெடுபிடி நிலை தொடரவே செய்யும் பகுதிகள் இவை.

அங்கு வாழும் முஸ்லிம் மக்களை எச்சரிப்பதற்காகவே இந்த “ஒட்டகங்களை அடங்கியிருக்கச் சொல்லும்” எச்சரிக்கை.

தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டதாக முஸ்லிம்களுக்கு நினைவுபடுத்தும் அதேவேளை முஸ்லிம்கள் அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அடங்கியிருக்க தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற எச்சரிக்கையை விடுக்கிறது.

அதுவும் அரச போக்குவரத்து வண்டியில் போக்குவரத்து சபையால் பொறிக்கப்பட்டிருகிறது. மதுகம டிப்போவுக்கு சொந்தமான 9532 இலக்கமுடைய பஸ்ஸிலேயே தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக இந்த வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. 

கோத்தபாய ஆட்சியமர்ந்தபின்னர் மிகவும் துணிச்சலாகவே பேரினவாத சக்திகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள அரச நிறுவனங்களை ஏனைய இனங்களுக்கு எதிராக பயன்படுத்திவருவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது போன்ற விடயங்களை தொடர்ச்சியாக அம்பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே பேரினவாதத்தின் அமுலாக்கத்துக்கு எதிராகவும், அதன் நிறுவனமயப்படுத்தலுக்கு எதிராகவும் வெகுஜன கூட்டு மனநிலையை கட்டியெழுப்ப முடியும். 

https://www.namathumalayagam.com/2020/11/warningMusims.html

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தோற்றது அவர்கள்  எடுத்த  முடிவால்...

ஆனால்  அவர்கள்  வைத்த  வலையிலிருந்து  சிறீலங்கா வெளியில் வரவே  முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

புலிகள் தோற்றது அவர்கள்  எடுத்த  முடிவால்...

ஆனால்  அவர்கள்  வைத்த  வலையிலிருந்து  சிறீலங்கா வெளியில் வரவே  முடியாது

அப்படியே சொல்லிக்கொண்டு அடுத்த 15 வருடங்களையும் ஓட்டுவோம்

"இந்தியாவிடம் கடன் வாங்கிய பசில் இப்போது சீனாவிடம் கடன் வாங்க நிற்கிறார்"

இராஜதந்திரத்தை சிங்களவரிடம் கற்றுக்கொள்வோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

அப்படியே சொல்லிக்கொண்டு அடுத்த 15 வருடங்களையும் ஓட்டுவோம்

"இந்தியாவிடம் கடன் வாங்கிய பசில் இப்போது சீனாவிடம் கடன் வாங்க நிற்கிறார்"

இராஜதந்திரத்தை சிங்களவரிடம் கற்றுக்கொள்வோம். 

வாங்கட்டுமே...??

இனி  யுத்தம் அல்லது  தமிழரை  வென்றது  பற்றி பேசினால்  அடி விழும் நிலையும்

தமிழருக்கு  தீர்வை வையுங்கள் அதுவரை  நாம் எழும்ப  முடியாது என்ற குரல்களும்

சிறீலங்காவிலிருந்து  எழும்

எழுதி வைத்துக்கொள்ளுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

வாங்கட்டுமே...??

இனி  யுத்தம் அல்லது  தமிழரை  வென்றது  பற்றி பேசினால்  அடி விழும் நிலையும்

தமிழருக்கு  தீர்வை வையுங்கள் அதுவரை  நாம் எழும்ப  முடியாது என்ற குரல்களும்

சிறீலங்காவிலிருந்து  எழும்

எழுதி வைத்துக்கொள்ளுங்கள்

நிச்சயமாக இல்லை. 

எந்த ஒரு எதிரியையும் வெற்றி கொள்ள வேண்டுமானால் அவனது எண்ணவோட்டத்தை புரிந்துகொள்ள வேண்டும். அவனது எண்ணவோட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமனால் அவனது வாழ்க்கை முறையை அவனது கலாசாரத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 

இல்லாதுபோனால் எங்கள் வெற்றி தற்காலிகமானதாக மட்டுமே இருக்கும். 

இதற்குச் சிறந்த உதாரணம் ஆப்கானிஸ்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

உலகம் எங்கேயோ போய்விட்டது

இனியும் பிக்குகளின் கைகளில்  அரசோ அல்லது  கலாசாரமோ  இருக்க வாய்ப்பில்லை

வரலாறு  அதையும்  உணர்த்தியிருக்கிறது

இன்னும்  உணர்த்தும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொறுங்கோ.. வெகுவிரைவில் இந்தப் பேரூந்து டீசல் இல்லாமல் ரோட்டில இறங்காமக் கிடக்கும். அப்ப தெரியும் புலிகளை வென்றதன் தார்ப்பரியம். 

புலிகளை அடிக்க ஓடி வந்தவனெல்லாம்.. இப்ப தூர நின்று விடுப்புத்தான் பார்க்கிறாங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அப்படியே சொல்லிக்கொண்டு அடுத்த 15 வருடங்களையும் ஓட்டுவோம்

"இந்தியாவிடம் கடன் வாங்கிய பசில் இப்போது சீனாவிடம் கடன் வாங்க நிற்கிறார்"

இராஜதந்திரத்தை சிங்களவரிடம் கற்றுக்கொள்வோம். 

கடன் வேண்டுவது இராஐதந்திராமா?.   அபபடியாயின். சும்மா வேணடுவதற்க்கு   [நன்கொடையாக] என்ன பெயர?60 ஆண்டுகளுக்கு மேல் தீர்வு காண முடியாமல் பிரச்சனையுடனிருக்கும்  ஒரு நாட்டுக்கு இராஐதந்திரம் இருக்க முடியாது...ஆனால் நரி தந்திரம் இருக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

பொறுங்கோ.. வெகுவிரைவில் இந்தப் பேரூந்து டீசல் இல்லாமல் ரோட்டில இறங்காமக் கிடக்கும். அப்ப தெரியும் புலிகளை வென்றதன் தார்ப்பரியம். 

புலிகளை அடிக்க ஓடி வந்தவனெல்லாம்.. இப்ப தூர நின்று விடுப்புத்தான் பார்க்கிறாங்கள். 

புலிகள் மவுனித்தபின்பும் வென்று கொண்டு இருக்கிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

bus-3+%25281%2529.jpg

அமைச்சர் அல் சப்ரி இதற்கான விளக்கத்தை வழங்குவார்.

ஒவ்வொரு முசுலிமுக்கும்  பத்தாயிரம் கொடுத்தால் சரி என்பார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

"இந்தியாவிடம் கடன் வாங்கிய பசில் இப்போது சீனாவிடம் கடன் வாங்க நிற்கிறார்"

இராஜதந்திரத்தை சிங்களவரிடம் கற்றுக்கொள்வோம். 

இதுவும் ராஜதந்திரமா ? உங்களுக்கு நீங்களே சொல்லி சமாதானம் அடையுங்க பாஸ் .

காட்டுக்குள் இருந்த சிங்கள  மோட்டு கூட்டத்துக்கு அதிகாரத்தை கொடுக்க காட்டை வளமிக்க பூமியாக்கினவர்களை ஒரே இரவில் நாடற்றவர்களாக்கி அதிலும் உழைக்கும் வர்க்கம் 6 லட்சம் பேரை இந்தியாவுக்கு கப்பல் ஏற்றி அனுப்பி கொண்டாடிய இனத்துவேச சிங்களவர்களுக்கு அறிவு இருக்குமென்று இன்னும் நம்புவர்களை எப்படி அழைப்பது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

கிட்லரின்  ஒரு  குண்டு பரிசில் விழாமல்  நாட்டைக்கொடுத்து  விட்டு

இப்ப  பிரெஞ்சு  தேசம்  நிமிர்ந்து  நிற்பதும்  அவர்  சொல்லும்  வரலாறு  தான்

பாவம்  அவர்  விடுங்க

வெல்வது  தான் ராசதந்திரம்  என்று  நினைக்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kandiah57 said:

கடன் வேண்டுவது இராஐதந்திராமா?.   அபபடியாயின். சும்மா வேணடுவதற்க்கு   [நன்கொடையாக] என்ன பெயர?60 ஆண்டுகளுக்கு மேல் தீர்வு காண முடியாமல் பிரச்சனையுடனிருக்கும்  ஒரு நாட்டுக்கு இராஐதந்திரம் இருக்க முடியாது...ஆனால் நரி தந்திரம் இருக்க முடியும்.

4 minutes ago, பெருமாள் said:

இதுவும் ராஜதந்திரமா ? உங்களுக்கு நீங்களே சொல்லி சமாதானம் அடையுங்க பாஸ் .

காட்டுக்குள் இருந்த சிங்கள  மோட்டு கூட்டத்துக்கு அதிகாரத்தை கொடுக்க காட்டை வளமிக்க பூமியாக்கினவர்களை ஒரே இரவில் நாடற்றவர்களாக்கி அதிலும் உழைக்கும் வர்க்கம் 6 லட்சம் பேரை இந்தியாவுக்கு கப்பல் ஏற்றி அனுப்பி கொண்டாடிய இனத்துவேச சிங்களவர்களுக்கு அறிவு இருக்குமென்று இன்னும் நம்புவர்களை எப்படி அழைப்பது ?

“Read between the lines”

கடன் வேண்டுவது அல்ல ராசதந்திரம். த்ன்னுடைய நோக்கத்தில் வெற்றியடைவதுதான் இராசதந்திரம். 

சிங்களம் தன்னுடைய தேவையை நிறைவேற்றிக்கொள்கிறது. அது பிச்சை எடுத்தோ காலில் விழுந்தோ..

சிங்களத்தின் பொருளாதாரம் 3Tயில் தங்கியிருக்கிறது. Tea, Tourism and Textile. 

பெருந்தொற்று முடிந்தவுடன் அது மீண்டும் எழுந்து நகரத் தொட்ங்கும். 

நாமோ...காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது போராட்டத்தையே வெகுசனப் போராட்டமாக மாற்ற முடியாமல் சேடம் இழுத்துக் கிடக்கிறோம். 

உண்மை சுடும். ஆனால் அதுதான் மருந்து.

(யாருக்கு மருந்து ? சிந்திக்கத் தெரிந்தவனுக்கு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

வாங்கட்டுமே...??

இனி  யுத்தம் அல்லது  தமிழரை  வென்றது  பற்றி பேசினால்  அடி விழும் நிலையும்

தமிழருக்கு  தீர்வை வையுங்கள் அதுவரை  நாம் எழும்ப  முடியாது என்ற குரல்களும்

சிறீலங்காவிலிருந்து  எழும்

எழுதி வைத்துக்கொள்ளுங்கள்

இப்பிடி நடந்தால் நல்லது, ஆனால் இப்பிடி நடக்கும் என்று நம்புகிறீர்களா? எங்களது பிரச்னையின் அடிப்படை  என்னவென்று தெரியாத அளவுக்கு, பரம்பரை பரம்பரையாக, சிறு வயதில் இருந்து  இனவாதம் ஊட்டப்பட்டு வளர்க்கப்பட்டது. மதத்தலைவர்களின் கடும் பிடியில் இருக்கும் நாட்டில், இதிலிருந்து இலகுவில் மீள முடியாது. இப்ப இருப்பதை விட எங்களுக்கு கொஞ்சம் RELIEF கிடைக்கலாம். முழுமையாக மீள முடியாவிட்டாலும், எனக்கென்னவோ இந்த பிரச்சனையை ஆட்சியை மாற்றியாவது,  எப்பிடியாவது சமாளித்து விடுவார்கள் என்று தோன்றுகிறது. தற்காலிகமாக எங்களுக்கு ஆதரவான அல்லது எங்களது பிரச்னையை சிங்களர்கள் புரிந்தது போன்ற ஒரு போக்கு தோன்றுகிறது, அவ்வளவுதான். இப்ப நாடு இருக்கும் நிலையை வைத்துக்கொண்டு எம்மால் ஏதாவது எடுக்க முடிந்தால் நல்லது, ஆனால் யார் அடியெடுத்து வைப்பது, தலைமை தாங்குவது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விசுகு said:

கிட்லரின்  ஒரு  குண்டு பரிசில் விழாமல்  நாட்டைக்கொடுத்து  விட்டு

இப்ப  பிரெஞ்சு  தேசம்  நிமிர்ந்து  நிற்பதும்  அவர்  சொல்லும்  வரலாறு  தான்

பாவம்  அவர்  விடுங்க

வெல்வது  தான் ராசதந்திரம்  என்று  நினைக்கிறார்

Hitler Eiffel கோபுரத்தில் நின்றபடியே Paris நகரைப் பார்த்து தனது தளபதிகளுக்கு என்ன சொன்னார் என்று கூற முடியுமா? 

அந்தப் பதிலில் இருக்கிறது இராசதந்திரத்தின் உச்சம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kapithan said:

சிங்களத்தின் பொருளாதாரம் 3Tயில் தங்கியிருக்கிறது. Tea, Tourism and Textile. 

பெருந்தொற்று முடிந்தவுடன் அது மீண்டும் எழுந்து நகரத் தொட்ங்கும். 

யுத்தம் முடிந்தபின்தான் தெரிந்தது அந்த சண்டைக்கு எவ்வளவு சிலவளித்தார்கள் என்று இனி எவ்வளவு சிலவழிப்பார்கள் என்று தெரிய 2012 ல் உண்மைகள் வெளிவந்தது என்னது  3tயா  வாய்ப்பே இல்லை ராஜா இன்னும் இரண்டுமாதம் உக்கிரேன் சண்டை தொடர்ந்தால்  சோமாலியாவை விட பாரிய நரகம் உருவாகும் இல்லாவிட்டாலும் 2025க்கு மேல தாக்கு பிடிக்காது. இல்லாவிடின் அதிசயம் நடக்கணும் .

16 minutes ago, நீர்வேலியான் said:

இப்பிடி நடந்தால் நல்லது, ஆனால் இப்பிடி நடக்கும் என்று நம்புகிறீர்களா? எங்களது பிரச்னையின் அடிப்படை  என்னவென்று தெரியாத அளவுக்கு, பரம்பரை பரம்பரையாக, சிறு வயதில் இருந்து  இனவாதம் ஊட்டப்பட்டு வளர்க்கப்பட்டது. மதத்தலைவர்களின் கடும் பிடியில் இருக்கும் நாட்டில், இதிலிருந்து இலகுவில் மீள முடியாது. இப்ப இருப்பதை விட எங்களுக்கு கொஞ்சம் RELIEF கிடைக்கலாம். முழுமையாக மீள முடியாவிட்டாலும், எனக்கென்னவோ இந்த பிரச்சனையை ஆட்சியை மாற்றியாவது,  எப்பிடியாவது சமாளித்து விடுவார்கள் என்று தோன்றுகிறது. தற்காலிகமாக எங்களுக்கு ஆதரவான அல்லது எங்களது பிரச்னையை சிங்களர்கள் புரிந்தது போன்ற ஒரு போக்கு தோன்றுகிறது, அவ்வளவுதான். இப்ப நாடு இருக்கும் நிலையை வைத்துக்கொண்டு எம்மால் ஏதாவது எடுக்க முடிந்தால் நல்லது, ஆனால் யார் அடியெடுத்து வைப்பது, தலைமை தாங்குவது? 

ஆட்சி வெகுவிரைவில் மாறும் மகிந்த கூட்டம் மறுபடியும் வருவது போல் ஏதாவது செய்து விட்டு விலகுவார்களாம் .ஆனால் பூனை விழுந்தாலும் எழுந்து ஓடும் யானை விழுந்தால் எழும்பி ஓடுவது சந்தேகமே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

Hitler Eiffel கோபுரத்தில் நின்றபடியே Paris நகரைப் பார்த்து தனது தளபதிகளுக்கு என்ன சொன்னார் என்று கூற முடியுமா? 

அந்தப் பதிலில் இருக்கிறது இராசதந்திரத்தின் உச்சம்

சொல்லில் இல்லை

செயலில் இருக்கிறது என்பதும் நீங்க  தான்??

ஆமா கிட்லர் என்ன  சொன்னர் என்று  என்னை  எதற்கு  கேட்கிறீர்கள்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நீர்வேலியான் said:

இப்பிடி நடந்தால் நல்லது, ஆனால் இப்பிடி நடக்கும் என்று நம்புகிறீர்களா? எங்களது பிரச்னையின் அடிப்படை  என்னவென்று தெரியாத அளவுக்கு, பரம்பரை பரம்பரையாக, சிறு வயதில் இருந்து  இனவாதம் ஊட்டப்பட்டு வளர்க்கப்பட்டது. மதத்தலைவர்களின் கடும் பிடியில் இருக்கும் நாட்டில், இதிலிருந்து இலகுவில் மீள முடியாது. இப்ப இருப்பதை விட எங்களுக்கு கொஞ்சம் RELIEF கிடைக்கலாம். முழுமையாக மீள முடியாவிட்டாலும், எனக்கென்னவோ இந்த பிரச்சனையை ஆட்சியை மாற்றியாவது,  எப்பிடியாவது சமாளித்து விடுவார்கள் என்று தோன்றுகிறது. தற்காலிகமாக எங்களுக்கு ஆதரவான அல்லது எங்களது பிரச்னையை சிங்களர்கள் புரிந்தது போன்ற ஒரு போக்கு தோன்றுகிறது, அவ்வளவுதான். இப்ப நாடு இருக்கும் நிலையை வைத்துக்கொண்டு எம்மால் ஏதாவது எடுக்க முடிந்தால் நல்லது, ஆனால் யார் அடியெடுத்து வைப்பது, தலைமை தாங்குவது? 

அதாவது  ஒரு கட்டத்தை  தாண்டியிருக்கின்றோம்?

இப்போ  தோல்வியால் நாம் துவண்டு  இருந்தவை  அனைத்தையும் பிளந்ததை அல்லது  மூடியதை  தேடுகின்றோம்?

அதுவும் அடுத்த  கட்டம் தானே???

யார் அடி  எடுத்த  வைப்பது?

தலைமை தாங்குவது???நாம  தான்

இனியாவது  இவ்வாறு  சிந்திப்போம்

சிந்திக்கணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விசுகு said:

சொல்லில் இல்லை

செயலில் இருக்கிறது என்பதும் நீங்க  தான்??

ஆமா கிட்லர் என்ன  சொன்னர் என்று  என்னை  எதற்கு  கேட்கிறீர்கள்???

France ஐயும் Hitler ஐயும் நீங்கள்தானே இங்கே  கொண்டுவந்தீர்கள். அதனால் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைத்தேன்.  

இராசதந்திரம் என்றால் என்னவென்று தமிழருக்கு அறவே தெரியாது. அதுதான் உண்மை.

சிங்களம் தற்போது Canada வில் செய்வதுதான் இராசதந்திரம். (?)

நாங்கள்....

வாய்ச்சொல்லில் வீரரடி கிளியே, வாய்ச்சொல்லில் வீரரடி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

புலிகளின் காலத்தில் வாழ்ந்த  எம்மிடம்  இவ்வாறு  சொல்வது வெறும் விதண்டாவாதம்  மட்டுமே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பெருமாள் said:

யுத்தம் முடிந்தபின்தான் தெரிந்தது அந்த சண்டைக்கு எவ்வளவு சிலவளித்தார்கள் என்று இனி எவ்வளவு சிலவழிப்பார்கள் என்று தெரிய 2012 ல் உண்மைகள் வெளிவந்தது என்னது  3tயா  வாய்ப்பே இல்லை ராஜா இன்னும் இரண்டுமாதம் உக்கிரேன் சண்டை தொடர்ந்தால்  சோமாலியாவை விட பாரிய நரகம் உருவாகும் இல்லாவிட்டாலும் 2025க்கு மேல தாக்கு பிடிக்காது. இல்லாவிடின் அதிசயம் நடக்கணும் .

ஆட்சி வெகுவிரைவில் மாறும் மகிந்த கூட்டம் மறுபடியும் வருவது போல் ஏதாவது செய்து விட்டு விலகுவார்களாம் .ஆனால் பூனை விழுந்தாலும் எழுந்து ஓடும் யானை விழுந்தால் எழும்பி ஓடுவது சந்தேகமே .

22 minutes ago, விசுகு said:

அதாவது  ஒரு கட்டத்தை  தாண்டியிருக்கின்றோம்?

இப்போ  தோல்வியால் நாம் துவண்டு  இருந்தவை  அனைத்தையும் பிளந்ததை அல்லது  மூடியதை  தேடுகின்றோம்?

அதுவும் அடுத்த  கட்டம் தானே???

யார் அடி  எடுத்த  வைப்பது?

தலைமை தாங்குவது???நாம  தான்

இனியாவது  இவ்வாறு  சிந்திப்போம்

சிந்திக்கணும்

எவ்வளவு தூரத்துக்கு இந்த பிரச்னை போகுதென்று பார்ப்போம். சிம்பாவே, லெபெனான், கிரீஸ்  என்று சமாளித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் சிம்பாவேயில் ஆட்சி மாற்றம் கூட நிகழவில்லை என்று நினைக்கிறன். எனக்கென்னவோ இன்னும் முழுமையான நம்பிக்கை வரவில்லை, இந்தியா இவர்களுக்கு ஏதாவது ஊட்டிக்கொண்டே இருக்கும். வருடக்கணக்காக நடப்பவற்றை பார்த்த அனுபவம் இன்னும் அவநம்பிகையையே ஊட்டிக்கொண்டு இருக்கிறது.   

இங்கு அடிக்கடி பேசும் விடயம்தான். நாங்கள்தான் செய்வதென்று சுலபமாக சொல்லலாம், இது ஒரு மலைப்பான வேலை. இங்கு எல்லாரும் ஒன்றாக சேர வேண்டும், இந்த யாழ் களத்திலேயே நம்மால் சேர்ந்து ஒருமித்த கருத்து வைக்க முடியவில்லை. அப்பிடியே நாங்கள் ஒரு அமைப்பை உருவாக்கி அல்லது இருக்கும் அமைப்புக்களை சேர்த்து  இங்கிருந்து ஏதாவது முயற்சித்தாலும் அங்கிருப்பவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். தற்போது பொருளாதாரத்தில் பெரும் அடியென்பதால் சிலவேளை நமது இடையூறு தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்படலாம். இதற்கான முயற்சியும் தலைமைத்துவம் அங்கிருந்து வரவேண்டும் என்று நினைக்கிறன், அதுவே சரியான முறை, நாங்கள் கை கொடுக்கலாம். அங்கிருக்கும் தமிழ் கட்சிகள் இணைத்து இதற்கான முதல் அடியை எடுத்து வைக்கவேண்டும். இதெல்லாம் நடக்கிற காரியமா என்று கேட்டால் என்னிடம் பதிலில்லை    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நீர்வேலியான் said:

இது  தான் எனது நிலைப்பாடும்

நன்றி ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விசுகு said:

புலிகளின் காலத்தில் வாழ்ந்த  எம்மிடம்  இவ்வாறு  சொல்வது வெறும் விதண்டாவாதம்  மட்டுமே??

நல்ல விடயம் நீங்கள் இதைத் தொட்டது.

உண்மை, நேர்மை, வீரத்தில் நம்பிக்கை கொண்டது நமது இனம். அதன் விழைவுதான் தற்போது நாம் மிகப் பலவீனமான நிலையில் இருப்பது. 

இங்கே இராசதந்திரம் இல்லை. 

ஆங்கிலேயரது வெளியேற்றத்தில் காட்டியிருக்கவேண்டிய இராசதந்திரத்தின் தோல்வி எம்மை அகதிகளாக பிரான்சிலும் கனடாவிலும் இருந்து புலம்ப வைக்கிறது. 

இறுதியாகக் கிடைத்த சந்தர்ப்பம், யசூகி அகாசியையும் ஐரோப்பிய யூனியனின் வெளிவிவகாரச் செயளாளரையும் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பு. அதுவும், வன்முறையைக் கொண்ட ஆயுதப் போராட்டத்தில், சனனாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களையும், பொது மக்களையும் வன்முறைக்கு பகியாக்கிய போராட்டம். இருந்தும் எங்கள் போராட்டத்திற்கு இன்றளவு அங்கிகாராம் கிடைத்ததற்குக் காரணம் எமது போராட்டத்றிலுள்ள நியாயமும், போராளிகளின் வீரமும்தான்.

அதனைக் காசாக்கத் தெரியாத ஆட்கள் நாம்தானே. 

(கனடாவில் சிங்களம் என்ன செய்கிறது என்று கேட்பீர்கள் என எதிர்பார்த்தேன். ☹️)

இந்த வருத்தம்  எனக்குமுண்டு

ஆனால் செயல்  வேண்டும்  காண்

அதனை  செய்யணும் நாம்

அப்புறம் கனடா

சொல்லுங்கள்  ஏதோ  சொல்ல வருவது  தெரிகிறது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.