Jump to content

அரச எச்சரிக்கை "புலியை தோற்கடித்தோம்! ஒட்டகங்களே அடங்குங்கள்!"

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் சிங்கள இராச தந்திரம் விளக்குங்க....

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

கனடாவில் சிங்கள இராச தந்திரம் விளக்குங்க....

ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தை அழித்ததுபோன்று வெளிநாடுகளில் வாழும் தமிழரின் வலுவைச் சிதைக்கும் மிகப்பெரிய திட்டத்தின் அடுத்த கட்டம் தற்போது கனடாவில் செயற்படுத்தப்படுகிறது. 

1) இங்கு பந்து வாழும் சிங்களவரை இணைக்கும் வேலை மிகவும் மும்முரமாக நடக்கிறது.

2) இத்ற்காக இலங்கையில் இருந்து பலர் கனடாவிற்கு வந்துள்ளனர்.

பலர் தமிழரின் ஊடகங்களில் பணிபுரிகின்றனர். 

இங்கு வாழும் சிங்களவர்கள் கல்வியாளர்களாகவும் பண வசதி படைத்தோராயும் இருக்கின்றனர். ஆனால் சிதறி வாழ்கின்றனர். அவர்களை ஒருங்கிணைக்கும் வேலை நடக்கிறது. இதற்காக இலங்கையில் இருந்து பலர் உங்கு வந்து நிற்கின்றனர்.

ontario தவிர்ந்த வேறு மாநிலங்களில் வசிக்கும் அவர்களை ஒன்று சேர்க்கின்றனர். 

பலருக்கு assignment கொடுக்கப்பட்டுவிட்டது.

மாதாந்தம் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

தமிழரின் முக்கிய இடங்களில் சிங்களவர் அலுவலகங்களை ஆரம்பிக்கின்றனர். 

தமிழரின் சகல் விபரங்களும் திரட்டப்படுகின்றன. 

ஊடகங்களைக் குறிவைக்கின்றனர்.

தமிழர் செறிந்து வாழாத பிராந்தியங்களில் உள்ள conservative MPக்களை குறிவைப்பதுதான் இவர்களது பிரதான நோக்கம்.

(என்னுடைய் அனுமானத்தின்படி, திவிர செயற்பாட்டாளர்கள் கால்ப்போக்கில் இலக்குவைக்கப்படலாம். இயற்கை, தற்கொலை  அல்லது விபத்து மரணங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது)

இதற்கு அனுசரணை இந்தியா.

இவை மேலோட்டமாகக் கூறப்பட்டவைதான். ஆனால் மிகத் தீவிரமாக நடைபெறுகின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

புலிகள் தோற்றது அவர்கள்  எடுத்த  முடிவால்...

ஆனால்  அவர்கள்  வைத்த  வலையிலிருந்து  சிறீலங்கா வெளியில் வரவே  முடியாது

சிரங்கு பிடிச்சவன் கை சும்மா இராது. நாட்டை இந்து சமுத்திரத்தில் மூழ்கடிக்காமல் விடமாட்டானுகள் போல கிடக்கு. பொருட்களுக்கு  வரிசையில் நின்று சனம் விழுந்து சாகுது, இவனுகளுக்கு புத்தியே வராது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தை அழித்ததுபோன்று வெளிநாடுகளில் வாழும் தமிழரின் வலுவைச் சிதைக்கும் மிகப்பெரிய திட்டத்தின் அடுத்த கட்டம் தற்போது கனடாவில் செயற்படுத்தப்படுகிறது. 

1) இங்கு பந்து வாழும் சிங்களவரை இணைக்கும் வேலை மிகவும் மும்முரமாக நடக்கிறது.

2) இத்ற்காக இலங்கையில் இருந்து பலர் கனடாவிற்கு வந்துள்ளனர்.

பலர் தமிழரின் ஊடகங்களில் பணிபுரிகின்றனர். 

இங்கு வாழும் சிங்களவர்கள் கல்வியாளர்களாகவும் பண வசதி படைத்தோராயும் இருக்கின்றனர். ஆனால் சிதறி வாழ்கின்றனர். அவர்களை ஒருங்கிணைக்கும் வேலை நடக்கிறது. இதற்காக இலங்கையில் இருந்து பலர் உங்கு வந்து நிற்கின்றனர்.

ontario தவிர்ந்த வேறு மாநிலங்களில் வசிக்கும் அவர்களை ஒன்று சேர்க்கின்றனர். 

பலருக்கு assignment கொடுக்கப்பட்டுவிட்டது.

மாதாந்தம் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

தமிழரின் முக்கிய இடங்களில் சிங்களவர் அலுவலகங்களை ஆரம்பிக்கின்றனர். 

தமிழரின் சகல் விபரங்களும் திரட்டப்படுகின்றன. 

ஊடகங்களைக் குறிவைக்கின்றனர்.

தமிழர் செறிந்து வாழாத பிராந்தியங்களில் உள்ள conservative MPக்களை குறிவைப்பதுதான் இவர்களது பிரதான நோக்கம்.

(என்னுடைய் அனுமானத்தின்படி, திவிர செயற்பாட்டாளர்கள் கால்ப்போக்கில் இலக்குவைக்கப்படலாம். இயற்கை, தற்கொலை  அல்லது விபத்து மரணங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது)

இதற்கு அனுசரணை இந்தியா.

இவை மேலோட்டமாகக் கூறப்பட்டவைதான். ஆனால் மிகத் தீவிரமாக நடைபெறுகின்றன. 

நல்லாத்தான் இருக்கு...கபிதன் நீங்கள்  எந்தநாட்டில் இருக்கிறியள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, alvayan said:

நல்லாத்தான் இருக்கு...கபிதன் நீங்கள்  எந்தநாட்டில் இருக்கிறியள்..

நல்லாத்தான் இருக்கு என்றால் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டொலர் இல்லையெண்டு தூதராலயமே மூடப்படுகுது...இதுசெய்ய அவைக்கு டொலர் எங்காலான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, alvayan said:

டொலர் இல்லையெண்டு தூதராலயமே மூடப்படுகுது...இதுசெய்ய அவைக்கு டொலர் எங்காலான்

கனடாவில் இருப்பவர்கள், கனடாவில் வேலை செய்து Rs. ல் சம்பளம் வாங்குவதில்லையே.?

நான் கூறியவற்றிற்கு. ஆதாரம் அல்லது possibilities தொடர்பாக கேள்வி எழுப்புவீர்கள் என்று பார்த்தால்,  இலங்கை அரசின் வங்குரோத்து நிலை காரணமாக அப்படி நடக்கச் சந்தர்ப்பம் இல்லை என்பது போல கருத்து கூறுகிறீர்கள்..☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப விளங்குது ..முதலில் யாழில் இருந்து வெளியேறவேண்டும்...என்று....ஆரும் தன்ரை காசை செலவழிச்சு அரசாங்கத்திற்கு வேலைசெய்யமாட்டான்....

இந்த.வெருட்டு புருடா எல்லாம் 35 வருடமா கேட்டும் ரசிச்சும் வாறம்....எல்லாமெ கண்டு அனுபவிச்சும் இருக்கம்..நீங்கள்  பத்திரமா இருங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தை அமைப்பதற்கு திரைமறைவில் நடக்கும் சதி! - மகிந்தவின் நெருங்கிய சகா தகவல்

இப்படியும் கதை வருகுது..எதை நம்பிறது.... நல்ல கிரிக்கட்டு போட்டிகள் நடக்குது..அதிலை மனதைத் திருப்புங்கோ...எல்லாம் சரியாகிடும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, alvayan said:

இப்ப விளங்குது ..முதலில் யாழில் இருந்து வெளியேறவேண்டும்...என்று....ஆரும் தன்ரை காசை செலவழிச்சு அரசாங்கத்திற்கு வேலைசெய்யமாட்டான்....

ஆக நாட்டுப்பற்று உள்ளவர்கள் த்மிழ் இன்த்தில் மட்டும்தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள் போல. 

நீங்க்ள் அப்படியே மாற்றம் எதுவும் அடையாமல் இருங்கோ. உங்கள் உடம்புக்கும் மனதுக்கும் நல்லது. 

""இந்த.வெருட்டு புருடா எல்லாம் 35 வருடமா கேட்டும் ரசிச்சும் வாறம்....எல்லாமெ கண்டு அனுபவிச்சும் இருக்கம்..நீங்கள்  பத்திரமா இருங்கோ...""

இப்பவும் அம்பும் வில்லும்தான் வச்சிருக்கிறனீங்களோ இல்லாவிட்டால் கல்லும் கவணும் தானோ..😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தலைப்பின் தன்மையே மாத்திறவர் என்பதை நீண்டகாலமாகவே அறிவேன்...எனக்குப் பொழுது போகேல்லை பகிடிவிட்டுப் பார்த்தனான்....நாட்டு நிலமையை கவனிப்பதில்லையோ...அவங்களே ஆளாளுக்கு அடிபடுறான்...இதுக்கிள்ளை அடிவருடியள்.. கிலுகிலுப்பு..விடுறியள்...நாளைக்கு லீவு...இரவு இந்தியா ..  வங்கதேச போட்டி இருக்கு ..பாக்கப்போறன் ..கூலா  நீங்களும் பாரூங்கோ...ஆரிடம் என்ன இருக்கு என்பதை குனிந்தும் பாக்கலாம் அய்யா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, alvayan said:

அதுதானே பார்த்தேன், இந்த ஆள் ஏன் இப்படி இடக்கு மடக்காய் கதைக்கிறார் என்று. இப்ப்த்தான் விளங்குகிறது பழைய கறள் என்று. நீங்கள் சொல்லுறமாதிரிப்  பார்த்தாலும் இருந்தால்தானே கண்ணுக்கும் தெரியும். 

நான் நினைச்சன் இப்பயும் கையில கல்லு வைச்சுத்தான் நெருப்பு மூட்டுறநீங்களோ எண்டு.🤣 ஆனா அப்பிடி இல்லப்போல கிடக்கு. கருக்கு மட்டயால ஊமக்கொட்டய அடிக்கிற விளயாட்டெல்லாம் பார்க்கிறியள்..😆

அதெல்லாம் கிடக்கட்டும், நான் கூறின விடயங்களின்ர உண்மைத் தன்மை இப்ப விளங்காது. அதுவும் உங்களுக்கு விள்ங்காது. நீங்க 13 பேர் கிளமைக் கணக்கா விளயாடைக்க, லட்சக்கணக்கில குந்தியிருந்து பார்க்கிற விளையாட்ட கண்ண மூடாமப் பாருங்கோ.. புண்ணியமாப்போகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசுக்கு கூவுறதை  விட்டிட்டு.... ஒரு விசயத்தின் தலைப்பை பார்த்து விசயத்தை எழுதுங்கோ...எல்லாரையும் நேரில் பார்த்த கட்டை நான்  அய்யா...முதலில் யாழில் விதண்டாவாதம் செய்வதை விட்டுவிட்டு...நல்ல மனதுடன்...நல்ல விடையங்கள் ..எழுதவும்...கனடா பொலிசு லேசுப்பட்டவர்கள்  இல்லையென்பதை..உங்கடை ஆட்களுக்கும் சொல்லி வையுங்கோ.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nunavilan said:

bus-3+%25281%2529.jpg

 பேரூந்தில் உள்ள முஸ்லிம்கள் பற்றியதான இந்த இனதுவேச வார்த்தைகள் உண்மையானதாக இருந்தால் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று. 

ஒரு சிறுபான்மை இனத்தை பெரும்பான்மை இனம் இப்படி பகிரங்கமாகவே எச்சரிப்பதென்பது சிறுபான்மை இனமெனும் வீட்டுக்குள் புகுந்த விஷ பாம்புகள்போல்தான் அது தமிழர் முஸ்லிம்கள் என்று பார்க்காமல் யாரை வேண்டுமானாலும் தீண்டி கொல்லும்.

 எந்த ஒரு அநியாயமும் இன்றைக்கு அவர்களுக்கென்றால் நாளைக்கு எமக்கு என்றே பொதுவாக கூறுவார்கள், ஆனால் எமது இனவரலாற்றில் நேற்றைக்கு எமக்கு நடந்தது இன்றைக்கு இவர்களுக்கு நடக்கிறது.

நேற்று எம்மை பார்த்து சிறுபான்மை இனமென்பது பெரும்பான்மையினமெனும் மரத்தின்கீழ் வளரும் செடி கொடிபோல எமக்கு அடிமையாய் இருந்து வாழ்வை கழிப்பதே உங்கள் விதி என்று அந்நாள் ஜனாதிபதி டிபி விஜயதுங்க எகத்தாளமிட்டபோது அன்று அரசில் பங்கு வகித்துக்கொண்டும்,

தென் தமிழீழத்தில் விசேட அதிரடிப்படையுடன் ஊர்காவல் படை என்ற பேரில் இணைந்து எம் மக்களை கொத்து கொத்தாய் கொன்றும் குவித்து நில ஆக்கிரமிப்பு செய்தும் இதே இனவாத சிங்கள இனத்திற்கு தோளோடு தோள் நின்று உடலாலும் பொருளாலும் ஆதரவு வழங்கி எம் அழிவை சிறுபான்மை இனத்தின் மீதான இனவெறி துவேசத்தை  நியாயபடுத்தியவர்கள் முஸ்லிம்கள் எனும் நினைவு தவிர்க்க முடியாமலே வந்து போகுது.

சரி அதுதான் கடந்த காலமென்றால் இந்த நிமிடம்வரை தமிழர்களுடன் சேர்ந்து பேரினவாதத்தின் திமிரை அடக்கவேண்டுமென்று மனதாலாவது நினைக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை, 

அவர்கள் மனதில் உள்ளதெல்லாம் சிங்களவனின் தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்க வேண்டுமென்ற அதே வக்கிரமே.

இனவாதத்தை ஒன்று சேர்ந்து எதிர்க்கவேண்டும், ஆனால் ஒன்றுசேர இஸ்லாமியர்கள் எப்போதுமே தயாரில்லை, தமிழின ஒடுக்கலின்போது சிங்களவனுடன் சேர்ந்து கூடி குலாவிய அதே வேகம் தமிழர்களுடன் காண்பிக்க அவர்கள் ஒருபோதும் தயாராக இல்லை.

உங்களின்மீதான இனதுவேசத்தை ஒருபோதும் நாங்கள் நியாயபடுத்தவில்லை, ஆனால் உங்களுக்கு ஆதரவு தர எங்களிடம் எந்த பலமும் இப்போது இல்லை,  எங்களிடம் இருந்த பலத்தை அழித்ததில் உங்களின் பங்கும் கணிசமாக உண்டு.

யார் கண்டார் நாளைக்கே சிங்களவன் தமிழர்மீதான இன அழிப்பை மீண்டும் ஏதோ ஒரு வடிவத்தில் ஆரம்பித்தால் நீங்கள் கண்டிப்பாக சிங்களவர்கள் பக்கமே நிற்பீர்கள் என்பதில் எந்தவித குழப்பமும் எங்களீடம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

அருமையான...  கருத்து,  வளவன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, alvayan said:

காசுக்கு கூவுறதை  விட்டிட்டு.... ஒரு விசயத்தின் தலைப்பை பார்த்து விசயத்தை எழுதுங்கோ...எல்லாரையும் நேரில் பார்த்த கட்டை நான்  அய்யா...முதலில் யாழில் விதண்டாவாதம் செய்வதை விட்டுவிட்டு...நல்ல மனதுடன்...நல்ல விடையங்கள் ..எழுதவும்...கனடா பொலிசு லேசுப்பட்டவர்கள்  இல்லையென்பதை..உங்கடை ஆட்களுக்கும் சொல்லி வையுங்கோ.....

தலைப்பைப்பார்த்துத்தான் எல்லா விடயங்களையும் எழுத வேண்டும் என்பதல்ல. கருத்தோடு கருத்தாக ஒரு முக்கியமான விடயத்தைக் கனடா வாழ் தமிழருக்கு வெளிப்படுத்தியுள்ளேன். உங்கள் கொள்ளளவு (capacity), வெளிப்படுத்தப்பட்ட விடயத்தை விட்டுவிட்டு காசுக்கு கூவுறன் என்று என்னைத் துரோகியாக்குகிறது. 

தமிழருக்கு எதிராக நடைபெறும் ஒரு விடயத்தை த்மிழர் சார்பாக நின்று கூறும்போது யரிடம் நான் காசு வேண்டியிருக்க வேண்டும் ? தமிழரிடம்தானே ?  அப்படியானால் நீங்கள் யார் ?

 தமிழரின் விரோதியா ? தமிழரை எச்சரிப்பது ஏன் உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது ? 

நீங்கள் யார் ? 

ஒரு முக்கியமான விடயத்தைச் சொல்லி எமது ஆட்களை எச்சரிக்கை செய்யும்போது அதிலுள்ள விடயத்தை அலசி ஆராயாமல் சொல்பவரின் நம்பகத்த்ன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறீர்கள்.

எனக்கென்னமோ நீங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து பழம் தின்று கொட்டை போட்டவர் போலிருக்கிறது. 🤣

சிங்களவர்கள் ஒன்று சேர்ந்து இயங்கத் தொடங்குகின்றனர் என்பது ஒரு விடயமாக உங்களுக்குத் தெரியவில்லை. ஏன் ? 

விடயத்தை வெளிப்படுத்திய நான் காசுக்குக் கூவுகிறேன் ?...ம்ம்ம்ம்ம். 

கட்டை என்று சரியாகத்தான் உங்களை  சொல்லியுள்ளீர்கள். நான் கூறியது ஆறறிவு உள்ள மனிதருக்கு. மரங்களுக்கோ மரக் கட்டை களுக்கோ அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kapithan said:

அப்படியே சொல்லிக்கொண்டு அடுத்த 15 வருடங்களையும் ஓட்டுவோம்

"இந்தியாவிடம் கடன் வாங்கிய பசில் இப்போது சீனாவிடம் கடன் வாங்க நிற்கிறார்"

இராஜதந்திரத்தை சிங்களவரிடம் கற்றுக்கொள்வோம். 

ஓ அப்படியா🙄, நக்கி பிழைக்கும் இந்த ராஜ தந்திரத்தைவிட வீர மரணமடத்தை எமது காவல் தெய்வங்களுக்கு தலை வணங்குகின்றேன், தமிழரை தலை நிமிர வைத்த தெய்வங்கள்🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, உடையார் said:

ஓ அப்படியா🙄, நக்கி பிழைக்கும் இந்த ராஜ தந்திரத்தைவிட வீர மரணமடத்தை எமது காவல் தெய்வங்களுக்கு தலை வணங்குகின்றேன், தமிழரை தலை நிமிர வைத்த தெய்வங்கள்🙏🙏🙏

நக்கிப்பிழைப்பதும் இராசதந்திரமும் வேறு வேறானவை. பிறருக்காக(இனத்திற்காக) வெட்டியாடுவது இராசதந்திரம். தனி மனித தேவைக்காக வழைந்து நெழிவது, கூழைக் கும்பிடு போடுவது இழிவானது.

 வீரமரணமடைந்தவர்களை மறந்த ஒரு இனத்திலிருந்துகொண்டு நாங்கள் வாய் வீரம் பேசக்கூடாது. மரணித்தது அவர்கள்தானே. வீதி வீதியாய் பிச்சையெடுப்பது மாவீரர் பெற்றோர்தானே. நாங்களல்லவே

எங்கள் கடமையச் சரிவரச் செய்திருந்தோமானால், நாங்கள் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பேசலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

தலைப்பைப்பார்த்துத்தான் எல்லா விடயங்களையும் எழுத வேண்டும் என்பதல்ல. கருத்தோடு கருத்தாக ஒரு முக்கியமான விடயத்தைக் கனடா வாழ் தமிழருக்கு வெளிப்படுத்தியுள்ளேன். உங்கள் கொள்ளளவு (capacity), வெளிப்படுத்தப்பட்ட விடயத்தை விட்டுவிட்டு காசுக்கு கூவுறன் என்று என்னைத் துரோகியாக்குகிறது. 

தமிழருக்கு எதிராக நடைபெறும் ஒரு விடயத்தை த்மிழர் சார்பாக நின்று கூறும்போது யரிடம் நான் காசு வேண்டியிருக்க வேண்டும் ? தமிழரிடம்தானே ?  அப்படியானால் நீங்கள் யார் ?

 தமிழரின் விரோதியா ? தமிழரை எச்சரிப்பது ஏன் உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது ? 

நீங்கள் யார் ? 

ஒரு முக்கியமான விடயத்தைச் சொல்லி எமது ஆட்களை எச்சரிக்கை செய்யும்போது அதிலுள்ள விடயத்தை அலசி ஆராயாமல் சொல்பவரின் நம்பகத்த்ன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறீர்கள்.

எனக்கென்னமோ நீங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து பழம் தின்று கொட்டை போட்டவர் போலிருக்கிறது. 🤣

சிங்களவர்கள் ஒன்று சேர்ந்து இயங்கத் தொடங்குகின்றனர் என்பது ஒரு விடயமாக உங்களுக்குத் தெரியவில்லை. ஏன் ? 

விடயத்தை வெளிப்படுத்திய நான் காசுக்குக் கூவுகிறேன் ?...ம்ம்ம்ம்ம். 

கட்டை என்று சரியாகத்தான் உங்களை  சொல்லியுள்ளீர்கள். நான் கூறியது ஆறறிவு உள்ள மனிதருக்கு. மரங்களுக்கோ மரக் கட்டை களுக்கோ அல்ல. 

உங்களுக்கு..நிறைய விடையம் தெரியுது..இதை கனடா பொலிசுக்கு அறிவித்தால் அனைவரும் பாதுகாக்கப்படுவோம்..லண்டனிலை இல்லாத சிங்களக்கூட்டமா ..இங்கிருக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தை அழித்ததுபோன்று வெளிநாடுகளில் வாழும் தமிழரின் வலுவைச் சிதைக்கும் மிகப்பெரிய திட்டத்தின் அடுத்த கட்டம் தற்போது கனடாவில் செயற்படுத்தப்படுகிறது. 

1) இங்கு பந்து வாழும் சிங்களவரை இணைக்கும் வேலை மிகவும் மும்முரமாக நடக்கிறது.

2) இத்ற்காக இலங்கையில் இருந்து பலர் கனடாவிற்கு வந்துள்ளனர்.

பலர் தமிழரின் ஊடகங்களில் பணிபுரிகின்றனர். 

இங்கு வாழும் சிங்களவர்கள் கல்வியாளர்களாகவும் பண வசதி படைத்தோராயும் இருக்கின்றனர். ஆனால் சிதறி வாழ்கின்றனர். அவர்களை ஒருங்கிணைக்கும் வேலை நடக்கிறது. இதற்காக இலங்கையில் இருந்து பலர் உங்கு வந்து நிற்கின்றனர்.

ontario தவிர்ந்த வேறு மாநிலங்களில் வசிக்கும் அவர்களை ஒன்று சேர்க்கின்றனர். 

பலருக்கு assignment கொடுக்கப்பட்டுவிட்டது.

மாதாந்தம் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

தமிழரின் முக்கிய இடங்களில் சிங்களவர் அலுவலகங்களை ஆரம்பிக்கின்றனர். 

தமிழரின் சகல் விபரங்களும் திரட்டப்படுகின்றன. 

ஊடகங்களைக் குறிவைக்கின்றனர்.

தமிழர் செறிந்து வாழாத பிராந்தியங்களில் உள்ள conservative MPக்களை குறிவைப்பதுதான் இவர்களது பிரதான நோக்கம்.

(என்னுடைய் அனுமானத்தின்படி, திவிர செயற்பாட்டாளர்கள் கால்ப்போக்கில் இலக்குவைக்கப்படலாம். இயற்கை, தற்கொலை  அல்லது விபத்து மரணங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது)

இதற்கு அனுசரணை இந்தியா.

இவை மேலோட்டமாகக் கூறப்பட்டவைதான். ஆனால் மிகத் தீவிரமாக நடைபெறுகின்றன. 

நன்றி உங்களின் எச்சரிக்கை உணர்வுக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, alvayan said:

உங்களுக்கு..நிறைய விடையம் தெரியுது..இதை கனடா பொலிசுக்கு அறிவித்தால் அனைவரும் பாதுகாக்கப்படுவோம்..லண்டனிலை இல்லாத சிங்களக்கூட்டமா ..இங்கிருக்கு..

சட்டத்திற்கு உட்பட்டு செயற்பட்டால் பொலிசாரால் ஒன்றும் செய்ய முடியாது என்பது உங்களுக்கு தெரியாத்தல்ல.

என்னால் அடையாளப்படுத்தப்பட்ட விடயங்களின் பலனை இன்னும் இரண்டு வருடங்களில் வெளித் தெரியும். அப்போதும் நாம் விழித்துக்கொள்ளப் போவதில்லை. 

நாம் எல்லோரும், பிறரில் பிழை காண்பதிலேயே குறியாயிருப்போம்.

19 minutes ago, பெருமாள் said:

நன்றி உங்களின் எச்சரிக்கை உணர்வுக்கு .

நான் கூறிய விடயங்கள் மிகப் பாரதூரமானவை என்பது எனக்கு மிகவும் நன்றாகவே தெரியும்.

இந்தச் சிங்கள புலனாய்வாளர்களுக்கு உதவுவதில் பலர் தமிழ்ர். அவர்கள் மூலமாகத்தான் எமது சமூகத்திற்குள் ஊடுருவுகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பிதன் சொல்வதன் உண்மை /பொய் தெரியாது ..ஆனால் இங்கு சிலர் இவ்வளவு அடி வாங்கியும் சிங்களத்தை முட்டாளாக நினைப்பதை பார்க்க கொமடியாய் இருக்கு.
உடனே சிங்களம் , நாடு பொருளாதாரம் என்றிட்டு வராதீங்கோ...அவர்கள் எப்படியாவது பிச்சை எடுத்தாவது நாட்டை காப்பாற்றிக் கொள்வார்கள் ...உங்களிடம் மறந்தும் பிச்சைக்கு வர மாட்டார்கள்.

புலிகள் இல்லாத நிலையில் உங்களிடம் நாட்டை தந்தால் கிழிப்போம் என்று என்று எழுதுவதை பார்க்கவும் வேடிக்கையாய் இருக்கு ...முழு காசையும் ஆட்டையை போட்டுட்டு  நீ பெரிசா ,நான் பெரிசா என்று அடி படத் தான் சரி .
மகிந்த  சகோதரர்களது ஊழல் பற்றி கதைப்பவர்கள் நம்மவர்கள் செய்த ஊழல் பற்றி மூச்சும்  விட மாட்டார்கள்.
எல்லாவற்றையும் விட சிங்களவனுக்கு இது வேணும் என்று துள்ளுபவர்கள் அங்கிருக்கும் தமிழரை குறிப்பாய் கிழக்கில் ,மலையகத்தில் இருக்கும் தமிழரை பற்றி கொஞ்சம்  கூட கவலைப்படாதவர்களாய் தன இருப்பார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரதி said:

...முழு காசையும் ஆட்டையை போட்டுட்டு  நீ பெரிசா ,நான் பெரிசா என்று அடி படத் தான் சரி .
மகிந்த  சகோதரர்களது ஊழல் பற்றி கதைப்பவர்கள் நம்மவர்கள் செய்த ஊழல் பற்றி மூச்சும்  விட மாட்டார்கள்.

உங்கள் அண்ணாரை இப்படி ஒரேயடியாய் தடம் மாறி திட்டக்கூடாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ரதி said:

எல்லாவற்றையும் விட சிங்களவனுக்கு இது வேணும் என்று துள்ளுபவர்கள் அங்கிருக்கும் தமிழரை குறிப்பாய் கிழக்கில் ,மலையகத்தில் இருக்கும் தமிழரை பற்றி கொஞ்சம்  கூட கவலைப்படாதவர்களாய் தன இருப்பார்கள் 

உண்மை ரதி.. அதுவும் மலையகத்தமிழரை நினைக்கும்போது ரத்தகண்ணீர் வருகுது.. ஆயிரம் ரூபாய் சம்பளத்தை எடுத்து அவர்கள் என்னத்தை வாங்க முடியும்..?

ஒருகிலோ சீரகம் 1200 ரூபாய்

பாண் 160 இப்பிடி போகுது.. இலங்கை பொருளாதார நெருக்கடி என்ற செய்தி வந்த முதல் நொடியே என் மனதில் பெரும் படமாக நிழலாடியது மலையகத்தமிழர் வாழ்க்கைதான்.. சிலபல வருடங்கள் மலையகத்தில் வாழ்ந்து அந்த மக்கள் வாழ்வை பார்த்தவன் என்ற நிலையில் என்னால் ஒருபோதும் சொந்த சகோதரர்களின் துயரில் மகிழ்ச்சி அடையமுடியவில்லை.. கூடவே யுத்தத்தால் எல்லாவற்றையும் இழந்த வன்னி மக்கள் வாழ்க்கை.. இவற்றை எல்லாம் சிந்திக்கும்போது எப்படி இந்த பொருளாதார நெருக்கடியை சிங்களதேசத்தின் வீழ்ச்சியாக மட்டும் பார்த்து குதுகலிக்க முடியும்..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

1) கற்பிதன் சொல்வதன் உண்மை /பொய் தெரியாது ..

2) ஆனால் இங்கு சிலர் இவ்வளவு அடி வாங்கியும் சிங்களத்தை முட்டாளாக நினைப்பதை பார்க்க கொமடியாய் இருக்கு.
உடனே சிங்களம் , நாடு பொருளாதாரம் என்றிட்டு வராதீங்கோ...

3) அவர்கள் எப்படியாவது பிச்சை எடுத்தாவது நாட்டை காப்பாற்றிக் கொள்வார்கள் ...உங்களிடம் மறந்தும் பிச்சைக்கு வர மாட்டார்கள்.

4) புலிகள் இல்லாத நிலையில் உங்களிடம் நாட்டை தந்தால் கிழிப்போம் என்று என்று எழுதுவதை பார்க்கவும் வேடிக்கையாய் இருக்கு ...முழு காசையும் ஆட்டையை போட்டுட்டு  நீ பெரிசா ,நான் பெரிசா என்று அடி படத் தான் சரி .

5)  மகிந்த  சகோதரர்களது ஊழல் பற்றி கதைப்பவர்கள் நம்மவர்கள் செய்த ஊழல் பற்றி மூச்சும்  விட மாட்டார்கள்.

6) எல்லாவற்றையும் விட சிங்களவனுக்கு இது வேணும் என்று துள்ளுபவர்கள் அங்கிருக்கும் தமிழரை குறிப்பாய் கிழக்கில் ,மலையகத்தில் இருக்கும் தமிழரை பற்றி கொஞ்சம்  கூட கவலைப்படாதவர்களாய் தன இருப்பார்கள் 

1) திரும்பவும் சொல்கிறேன், நான் கூறிய தகவல்கள் அத்தனையும் உண்மை. எங்க்ளில் பலர் அவற்றைக் கவனிக்கத் தவறுகிறோம் அல்லது சிங்களத்தின் ஆளுமை தொடர்பான அதீத கற்பனையில் அடிமுட்டாள்களாக இருக்கிறோம். சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளிவரும்போது எல்லோரும் பார்க்கத்தானே போகிறோம்

2)

3)

4)

5)

6) நீங்கள் கூறுவது 30-35 வருடங்களுக்கு முந்திய் கதை. த்ற்போது அந்த நிலை மிகவும் மாற்றம் கண்டிருக்கிறது. குறிப்பாக ஆயுதப் போராட்ட காலத்தில் வளர்ந்தவர்களது நடவ்டிக்கைக்ள் பெரிதும் மாறிவிட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.