Jump to content

மனிதாபிமானப் பன்னாடை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் கள் வடிக்கும் பன்னாடை அல்ல இது...!

அது வெறும் பூச்சிகளை மட்டும் வடிக்கும்...!

இது கொஞ்சம் வித்தியாசமானது...!

 

மனிதர்களை மட்டும் வடிக்கும் வல்லமை கொண்டது...!

மேலைத் தேசங்களின் மகத்தான கண்டு பிடிப்பு...!

 

மண்டலாவை வடித்த போது...,

கறுப்பன் இவன்...அரைக் காச்சட்டை போதுமென்றது..!

மகாத்மாவை வடித்த போது,

கொஞ்சம் வெளிர் நிறம்..முழுக்காச்சட்டை போடு என்றது...!

அரேபிய அகதிகளுக்கு...,

அதன் வடி கண்களை இறுக்கிப் பிடித்தது,,,!

பாலஸ்தீனக் குழந்தைகள் அழுகையில்...,

தன் காதுகளை முழுதாக மூடியது...!

 

முள்ளி வாய்க்காலில்...,

முகத்தையே மூடியது..!

பன்னாடைக்கு என்ன நடந்தது...?

எல்லோரும் தேடினார்கள்...!

மனித உரிமைகள் சபையில் குந்தியிருந்தது...!

ஒன்று...இரண்டல்ல...,

பத்து வருடங்கள்..!

வேலையில்லாத ஒரு பட்டதாரியைப் போல..!

போர்க் குற்றமா..?

எங்கே நடந்தது...?

புதினம் கேட்டது, பன்னாடை..!

 

உக்ரெயினில் யுத்தமாம்..!

ஓடோடி வந்தது...பன்னாடை..!

தங்கத்தின் நிறத்தில்..தலை மயிர்....!

அங்கத்தின் நிறமோ, வெள்ளை...!

கண்களின் நிறமோ....மரகதம்..!

கச்சிதமாக வடி கட்டி எடுத்தது, பன்னாடை...!

 

உக்ரெயின் யுத்தம் தொடங்கி...,

இன்னும் பத்து நாள் ஆகவில்லை...!

நாலாயிரம் அகதிகள் வருகிறார்களாம்...!

ஆயிரம் பேர் வந்தும் விட்டார்களாம்..!

எவ்வளவு வேகமாகிறது, பன்னாடை..!

 

அகதி முகாமில் பிறந்த குழந்தயை...,

ஆயிரம் கேள்விகள் துளைக்கின்றன...!

அந்தக் குழந்தயை....,

பன்னாடை வடிகட்டாது...!

ஏனெனில்..,

அவள் ஒரு ஈழத்து அகதி...!

 

 

 

 

 

 

Edited by புங்கையூரன்
எழுத்துப் பிழை
  • Like 18
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் புங்கை, இந்தப் பன்னாடைகளின் நகர்வு காலவோட்டத்தில்  பாரதத்தையும் பங்கு போடும்போல் இருக்கின்றது.......!

இவைபோன்ற கவிதைகள் சிறப்பு......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை.. மனிதாபிமானம் பேசும் உலகின் இரட்டைவேடத்தை தோலுரிக்கும் கவிதை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, புங்கையூரன் said:

வெறும் கள் வடிக்கும் பன்னாடை அல்ல இது...!

அது வெறும் பூச்சிகளை மட்டும் வடிக்கும்...!

இது கொஞ்சம் வித்தியாசமானது...!

 

மனிதர்களை மட்டும் வடிக்கும் வல்லமை கொண்டது...!

மேலைத் தேசங்களின் மகத்தான கண்டு பிடிப்பு...!

 

மண்டலாவை வடித்த போது...,

கறுப்பன் இவன்...அரைக் காச்சட்டை போதுமென்றது..!

மகாத்மாவை வடித்த போது,

கொஞ்சம் வெளிர் நிறம்..முழுக்காச்சட்டை போடு என்றது...!

அரேபிய அகதிகளுக்கு...,

அதன் வடி கண்களை இறுக்கிப் பிடித்தது,,,!

பாலஸ்தீனக் குழந்தைகள் அழுகையில்...,

தன் காதுகளை முழுதாக மூடியது...!

 

முள்ளி வாய்க்காலில்...,

முகத்தையே மூடியது..!

பன்னாடைக்கு என்ன நடந்தது...?

எல்லோரும் தேடினார்கள்...!

மனித உரிமைகள் சபையில் குந்தியிருந்தது...!

ஒன்று...இரண்டல்ல...,

பத்து வருடங்கள்..!

வேலையில்லாத ஒரு பட்டதாரியைப் போல..!

போர்க் குற்றமா..?

எங்கே நடந்தது...?

புதினம் கேட்டது, பன்னாடை..!

 

உக்ரெயினில் யுத்தமாம்..!

ஓடோடி வந்தது...பன்னாடை..!

தங்கத்தின் நிறத்தில்..தலை மயிர்....!

அங்கத்தின் நிறமோ, வெள்ளை...!

கண்களின் நிறமோ....மரகதம்..!

கச்சிதமாக வடி கட்டி எடுத்தது, பன்னாடை...!

 

உக்ரெயின் யுத்தம் தொடங்கி...,

இன்னும் பத்து நாள் ஆகவில்லை...!

நாலாயிரம் அகதிகள் வருகிறார்களாம்...!

ஆயிரம் பேர் வந்தும் விட்டார்களாம்..!

எவ்வளவு வேகமாகிறது, பன்னாடை..!

 

அகதி முகாமில் பிறந்த குழந்தயை...,

ஆயிரம் கேள்விகள் துளைக்கின்றன...!

அந்தக் குழந்தயை....,

பன்னாடை வடிகட்டாது...!

ஏனெனில்..,

அவள் ஒரு ஈழத்து அகதி...!

 

 

 

 

 

 

அருமையான பகிர்விற்கு நன்றிகள் தோழர்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, புங்கையூரன் said:

வெறும் கள் வடிக்கும் பன்னாடை அல்ல இது...!

அது வெறும் பூச்சிகளை மட்டும் வடிக்கும்...!

இது கொஞ்சம் வித்தியாசமானது...!

 

மனிதர்களை மட்டும் வடிக்கும் வல்லமை கொண்டது...!

மேலைத் தேசங்களின் மகத்தான கண்டு பிடிப்பு...!

 

மண்டலாவை வடித்த போது...,

கறுப்பன் இவன்...அரைக் காச்சட்டை போதுமென்றது..!

மகாத்மாவை வடித்த போது,

கொஞ்சம் வெளிர் நிறம்..முழுக்காச்சட்டை போடு என்றது...!

அரேபிய அகதிகளுக்கு...,

அதன் வடி கண்களை இறுக்கிப் பிடித்தது,,,!

பாலஸ்தீனக் குழந்தைகள் அழுகையில்...,

தன் காதுகளை முழுதாக மூடியது...!

 

முள்ளி வாய்க்காலில்...,

முகத்தையே மூடியது..!

பன்னாடைக்கு என்ன நடந்தது...?

எல்லோரும் தேடினார்கள்...!

மனித உரிமைகள் சபையில் குந்தியிருந்தது...!

ஒன்று...இரண்டல்ல...,

பத்து வருடங்கள்..!

வேலையில்லாத ஒரு பட்டதாரியைப் போல..!

போர்க் குற்றமா..?

எங்கே நடந்தது...?

புதினம் கேட்டது, பன்னாடை..!

 

உக்ரெயினில் யுத்தமாம்..!

ஓடோடி வந்தது...பன்னாடை..!

தங்கத்தின் நிறத்தில்..தலை மயிர்....!

அங்கத்தின் நிறமோ, வெள்ளை...!

கண்களின் நிறமோ....மரகதம்..!

கச்சிதமாக வடி கட்டி எடுத்தது, பன்னாடை...!

 

உக்ரெயின் யுத்தம் தொடங்கி...,

இன்னும் பத்து நாள் ஆகவில்லை...!

நாலாயிரம் அகதிகள் வருகிறார்களாம்...!

ஆயிரம் பேர் வந்தும் விட்டார்களாம்..!

எவ்வளவு வேகமாகிறது, பன்னாடை..!

 

அகதி முகாமில் பிறந்த குழந்தயை...,

ஆயிரம் கேள்விகள் துளைக்கின்றன...!

அந்தக் குழந்தயை....,

பன்னாடை வடிகட்டாது...!

ஏனெனில்..,

அவள் ஒரு ஈழத்து அகதி...!

 

 

 

 

 

 

புங்கை அண்ணா, நியாயமான ஆதங்கத்தை வெளிப்படுத்திய நல்லதொரு கவிதை 🙏. போரின் வலி, இழப்பு எங்குமே, எல்லோருக்குமே ஒன்றுதான் நீங்கள் கூறிய பன்னாடைகள் போல் அல்லாமல் இருக்க தமிழர்கள் கடவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

உக்ரெயினில் யுத்தமாம்..!

ஓடோடி வந்தது...பன்னாடை..!

தங்கத்தின் நிறத்தில்..தலை மயிர்....!

அங்கத்தின் நிறமோ, வெள்ளை...!

கண்களின் நிறமோ....மரகதம்..!

கச்சிதமாக வடி கட்டி எடுத்தது, பன்னாடை...!

 

உக்ரெயின் யுத்தம் தொடங்கி...,

இன்னும் பத்து நாள் ஆகவில்லை...!

நாலாயிரம் அகதிகள் வருகிறார்களாம்...!

ஆயிரம் பேர் வந்தும் விட்டார்களாம்..!

எவ்வளவு வேகமாகிறது, பன்னாடை..!

 

அகதி முகாமில் பிறந்த குழந்தயை...,

ஆயிரம் கேள்விகள் துளைக்கின்றன...!

அந்தக் குழந்தயை....,

பன்னாடை வடிகட்டாது...!

ஏனெனில்..,

அவள் ஒரு ஈழத்து அகதி...!

மேற்குலகின் மேட்டுக்குடி தனத்தை தோலுரித்துக் காட்டும் கவிதை.
நன்றி புங்கையர் 👍

Link to comment
Share on other sites

மேற்கின்  ஓரவஞ்சகத்தை தோலுரித்து காட்டும் அற்புதமான கவிதையை வடித்த புங்கையூரானுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

6 hours ago, புங்கையூரன் said:

மனிதர்களை மட்டும் வடிக்கும் வல்லமை கொண்டது...!

மேலைத் தேசங்களின் மகத்தான கண்டு பிடிப்பு...!

அருமையான கவிதை புங்கையூரன் அவர்களே! ஐரோப்பியர்கள் கைப்பற்றி ஆண்ட, ஆளும் நாடுகளில் இந்தப் பன்னாடையானது, அந்த ஐரோப்பியரை மட்டும் வடித்தெடுத்துப் பாதுகாத்து வருவது கண்கூடு.🧐

Edited by Paanch
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பன்னாடை விரைவில் பல துண்டுகளாக பிரியும்👍, அருமையான கவிதை

Link to comment
Share on other sites

நல்ல கவிதை புங்கை. நீண்ட காலத்தின் பின் உங்களின் சுய ஆக்கம் நல்ல கனமான ஒன்றைத் தாங்கி வந்துள்ளது.

மேற்குலக ஊடகங்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு, மேற்குலகில் வாழ்கின்றோம் என்பதற்காய் அதன் போர்களை நியாயப்படுத்துகின்றவர்கள் கூட இந்த பன்னாடையை போன்றவர்கள் தான். உலகமே ஒரு விதத்தில் இந்தப் பன்னாடை போன்றது தான் - நாம் உட்பட.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழை தூறினால் பன்னாடைகள் அவ்வளவாக உபயோகிக்க ஏலாது தானே.அது போல் தான் எல்லாம்.பகிர்வுக்கு மிகவும் நன்றியண்ண..✍️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பன்னாடையில் பிழையா?

வடிப்பவனின் பிழையா?

தோண்ட தோண்ட பிபி தான் ஏறுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை புங்கை. 👍🏽
முதலில்… ஐ.நா. பன்னாடையை, காவோலை போட்டு… கொழுத்த வேணும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தோடு ஒட்டிய கவி வரிகள். பகிர்வுக்கு நன்றி 

 

உக்ரெயின் யுத்தம் தொடங்கி...,

இன்னும் பத்து நாள் ஆகவில்லை...!

நாலாயிரம் அகதிகள் வருகிறார்களாம்...!

 

இன்றோடு இருபத்தாறு   நாட்களாகி விட்ட்ன 🙂.
 

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

அருமையான கவிதை புங்கை. 👍🏽
முதலில்… ஐ.நா. பன்னாடையை, காவோலை போட்டு… கொழுத்த வேணும்.

நாட்டில இருந்து காவோலையை இறக்குமதி செய்ய நிறைய செலவாகும் சிறியர்......!

இங்கு பெற்றோல் 0.50 cts கூட்டி விட்டார்கள் என்பதற்காக காவோலையை மலினமாக்கக் கூடாது........!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, suvy said:

உண்மைதான் புங்கை, இந்தப் பன்னாடைகளின் நகர்வு காலவோட்டத்தில்  பாரதத்தையும் பங்கு போடும்போல் இருக்கின்றது.......!

இவைபோன்ற கவிதைகள் சிறப்பு......!  👍

உண்மை தான், சுவியர்…!

பாரதமும் எமது பழியைத் தேவையில்லாமல் தேடிக்கொண்டது…! வரவுக்கு நன்றி…!

22 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அருமையான கவிதை.. மனிதாபிமானம் பேசும் உலகின் இரட்டைவேடத்தை தோலுரிக்கும் கவிதை..

நன்றி, ஓணாண்டியார்…!

நீங்கள் பதிந்த பிராமணன் மச்சம் சாப்பிட்ட கதை இன்னும் தலைக்குள் ஓடிக் கொண்டிருக்கின்றது..! 

22 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அருமையான பகிர்விற்கு நன்றிகள் தோழர்..💐

வருகைக்கும் , ஊக்குவித்தலுக்கும் நன்றி, தோழர்….!

Edited by புங்கையூரன்
கூகிள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு ஒரு பிரச்சினை வரேக்கை தான் அவர்களின் இரட்டை வேடம் அப்பட்டமாக தெரிகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2022 at 20:08, Sasi_varnam said:

புங்கை அண்ணா, நியாயமான ஆதங்கத்தை வெளிப்படுத்திய நல்லதொரு கவிதை 🙏. போரின் வலி, இழப்பு எங்குமே, எல்லோருக்குமே ஒன்றுதான் நீங்கள் கூறிய பன்னாடைகள் போல் அல்லாமல் இருக்க தமிழர்கள் கடவர்கள். 

வணக்கம் சசி..! தமிழர்கள் போரின் வலியை நன்றாக உணர்ந்தவர்கள்...!

இருப்பினும் வலிக்குக் காரணமானவர்களை இலகுவாக மறந்து விட மாட்டார்கள்!

நிச்சயம் மன்னிப்பார்கள் எனினும் மறந்து விட மாட்டார்கள்! ஏனெனில் அவர்களும் மனிதர்கள்...!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...!

 

 

On 22/3/2022 at 20:45, குமாரசாமி said:

மேற்குலகின் மேட்டுக்குடி தனத்தை தோலுரித்துக் காட்டும் கவிதை.
நன்றி புங்கையர் 👍

நன்றி, குமாரசாமி அண்ணா...!

மேட்டுக்குடித் தனம் என்பது பொருத்தமான வார்த்தை தான்..!

On 22/3/2022 at 21:28, Paanch said:

அருமையான கவிதை புங்கையூரன் அவர்களே! ஐரோப்பியர்கள் கைப்பற்றி ஆண்ட, ஆளும் நாடுகளில் இந்தப் பன்னாடையானது, அந்த ஐரோப்பியரை மட்டும் வடித்தெடுத்துப் பாதுகாத்து வருவது கண்கூடு.🧐

உண்மை தான், பாஞ்ச்...! அண்மையில் ஒரு காணொலி பார்த்தேன்! அதை இங்கு இணைத்தால் பொருத்தமாக இருக்கும்!

ஆனால் அதில் வரும் சில வார்த்தைகள் யாழ் கள விதிகளை மீறுவதாக உள்ளன!

மிக்க நன்றி, பாஞ்ச்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஃறிணை பன்னாடைகள் நல்லதை வடிகட்டுவன. 

ஆனால் இந்த உயிரிணை பன்னாடைகள் மனிதாபிமானம் என்ற இன்னொரு பன்னாடையையும் இணத்து வடிகட்டும் பாங்கு இருக்கே. நிலம் வெடிக்காமல் இது அடங்காது.

நன்றி அண்ணா இன்றைக்கு இங்கும் தேவையான கவிதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2022 at 23:01, உடையார் said:

பன்னாடை விரைவில் பல துண்டுகளாக பிரியும்👍, அருமையான கவிதை

பொறுத்திருந்து பார்ப்போமே....உடையார்...!

அந்தக் காலத்தில் வாழக்கிடைத்தது ஒரு அரிய பாக்கியமே...!

நன்றி, உடையார்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2022 at 23:07, நிழலி said:

நல்ல கவிதை புங்கை. நீண்ட காலத்தின் பின் உங்களின் சுய ஆக்கம் நல்ல கனமான ஒன்றைத் தாங்கி வந்துள்ளது.

மேற்குலக ஊடகங்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு, மேற்குலகில் வாழ்கின்றோம் என்பதற்காய் அதன் போர்களை நியாயப்படுத்துகின்றவர்கள் கூட இந்த பன்னாடையை போன்றவர்கள் தான். உலகமே ஒரு விதத்தில் இந்தப் பன்னாடை போன்றது தான் - நாம் உட்பட.

நன்றி...  நிழலி...!

நீங்கள் கூறிய படியே...நாமெல்லாம் கூட, எம்மையறியாமலே மூளைச் சலவை செய்யப் பட்டுக் கொண்டேயிருக்கின்றோம் என்பது தான் உண்மை...! யாழ் களத்தில் இப்போது எழுதுவது, மிகவும் இலகுவாக உள்ளது...! தொடர்ந்து எழுதலாம் என உத்தேசித்துள்ளேன்!

யாழுக்கு வெறும் வயது மட்டும் போகவில்லை..! அவள் தன்னைத் தானே, மேலும்...மேலும் மெருகூட்டிய படியே வளர்கின்றாள்..!

இதற்கான பெருமை முழுவதும்...மோகனுக்கும், மட்டுறுத்துனர்களுக்கும், தினமும் வந்து போகின்ற கள உறுப்பினர்களுக்கும், அதன் அடித்தளமாக உள்ள வாசகர்களுக்கும் உரியது என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது...!

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமாக இருக்கின்றது கவிதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/3/2022 at 02:00, யாயினி said:

மழை தூறினால் பன்னாடைகள் அவ்வளவாக உபயோகிக்க ஏலாது தானே.அது போல் தான் எல்லாம்.பகிர்வுக்கு மிகவும் நன்றியண்ண..✍️

உண்மை தான் யாயினி...! வரவுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி....!

On 23/3/2022 at 02:10, ஈழப்பிரியன் said:

பன்னாடையில் பிழையா?

வடிப்பவனின் பிழையா?

தோண்ட தோண்ட பிபி தான் ஏறுது.

எனக்கும் அது தான் பிரச்சனை..! அதுக்காகத் தான் இப்பவெல்லாம் அடக்கி வாசிக்கிறது...!

நன்றி....ஈழ்ப்பிரியன்...!

On 23/3/2022 at 03:10, தமிழ் சிறி said:

அருமையான கவிதை புங்கை. 👍🏽
முதலில்… ஐ.நா. பன்னாடையை, காவோலை போட்டு… கொழுத்த வேணும்.

பன்னாடையில் பிரச்சனை இல்லை, சிறியர்...! அதன் பார்வையின் தான் கோளாறு உள்ளது...!

உக்ரெயினில் ஐ.நா.பன்னாடை செய்யவேண்டியதெல்லாம்....ஒழுங்காத் தானே செய்யுது...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/3/2022 at 03:24, நிலாமதி said:

காலத்தோடு ஒட்டிய கவி வரிகள். பகிர்வுக்கு நன்றி 

 

உக்ரெயின் யுத்தம் தொடங்கி...,

இன்னும் பத்து நாள் ஆகவில்லை...!

நாலாயிரம் அகதிகள் வருகிறார்களாம்...!

 

இன்றோடு இருபத்தாறு   நாட்களாகி விட்ட்ன 🙂.
 

நன்றி...நிலாக்கா...! 

கவிதை எழுத நினைச்ச போது....பத்து நாள் தான் முடிஞ்சிருந்தது...!😁

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம் களவு செய்ய துணிந்த இவர்கள் மீது மிகச் சரியான நடவடிக்கை எடுக்கபட்டதால் களவு எடுப்பதில் ருசிப்பட்டு தொடர்ந்தும் களவு செய்யும்  வாய்ப்பு தடுக்கபட்டுவிட்டது .இனி இந்தியா சென்று பதவியில் இருக்கும் போது மக்களிடம் ஊழல் லஞ்சம் என்று கொள்ளையடிக்க மாட்டார்கள் 🙏
    • அட… இந்திய வியாதி, அமெரிக்காவிற்கும் தொற்றி விட்டதா.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli  15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.