Jump to content

இலங்கை பொருளாதார நெருக்கடி: "ஜனாதிபதி பதவி விலகி, மேலை நாடுகளில் செல்வாக்கு உள்ள ஒருவர் கைக்கு நாடு செல்லவேண்டும்"

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பொருளாதார நெருக்கடி: "ஜனாதிபதி பதவி விலகி, மேலை நாடுகளில் செல்வாக்கு உள்ள ஒருவர் கைக்கு நாடு செல்லவேண்டும்"

  • ரஞ்சன் அருண்பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
6 மணி நேரங்களுக்கு முன்னர்
 
இலங்கை போராட்டம்

பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகி, மேலை நாடுகளின் செல்வாக்கு பெற்ற ஒருவர் கைக்கு இலங்கை செல்லவேண்டும் என்று கூறியுள்ளார் பொருளாதார வல்லுநர் விஜேசந்திரன்.

இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ள இந்த தருணத்தில், நாட்டு மக்கள் நாளாந்தம் பல்வேறு விதமான பிரச்னைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், நாடு எதிர்காலத்தில் எவ்வாறான சவால்கள் மற்றும் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கும் என்பது குறித்து, பிபிசி தமிழ் ஆராய்கிறது.

இந்த நிலையில், பொருளாதார நிபுணரும் பேராதனை பல்கலைக்கழக பொருளியல் துறை மூத்த விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன் பிபிசி தமிழுக்கு அளித்த நேர்க்காணல்.

கேள்வி: இலங்கை ரூபா அதன் மதிப்பை இழக்குமா? இலங்கை மற்றுமொரு நாணயத்தை ஏற்றுக்கொள்ளுமா?

பதில்: மற்றுமொரு நாணயத்தை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை இப்போதைக்கு இல்லை. இலங்கை பொதுவாக தன்னுடைய ரூபாவின் பெறுமதியை இழந்துக்கொண்டிருக்கின்றது. பாரிய முதலீடுகள், சர்வதேச நாடுகளின் உதவிகள் அல்லது நன்கொடைகள் கிடைப்பதன் ஊடாக, இந்த நிலைமையிலிருந்து மீளலாம். ஆகவே, அதன் அடிப்படையில் இன்னுமொரு நாட்டின் நாணயத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கான அவசியம் இப்போதைக்கு இல்லை என்று கருத முடிகிறது.

கேள்வி: அப்படி மற்றுமொரு நாணயத்திற்குச் சென்றால், இலங்கை யாருடன் இணையும்?

எஸ்.விஜேசந்திரன்

பட மூலாதாரம்,S.VIJESANDIRAN

படக்குறிப்பு,

எஸ்.விஜேசந்திரன்

பதில்: இலங்கைக்கு அருகில் இருக்கக்கூடிய இந்தியா அல்லது சீனாவுடன் தான் இலங்கை சேர வேண்டும். ஆனாலும், தற்போதைய சூழ்நிலையில் அதற்கான சாத்தியம் இல்லை என்றே கூற வேண்டும்.

கேள்வி: கடனை திரும்ப செலுத்த முடியவில்லை என்றால், நாடு திவாலாகுமா?

பதில்: கடனை திருப்பிச் செலுத்த முடியாதபோது, இலங்கைக்குள் உதவிகள் வராது. வங்கித் துறை வங்குரோத்து அடையலாம். நாட்டின் பொருளாதாரம் முழுமையாக ஸ்தம்பித்து, நாடு முழு வங்குரோத்து நிலைக்கு அல்லது பொருளாதார மந்த நிலைக்குச் செல்லலாம்.

கேள்வி: இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கினால், நாடு மீள வழமை நிலைக்கு வர அது உதவுமா?

பதில்: சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கினால், இலங்கை எதிர்நோக்கியிருக்கின்ற பிரச்னையிலிருந்து ஓரளவு மீள முடியும். அது முழுமையாக மீள முடியாது. கடனை விட நாட்டிற்கு மானிய அடிப்படையில் பாரிய அளவிலான உதவிகள் கிடைக்கும் போதே நாடு மீள முடியும். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனைப் பெற்றால், அந்த கடனைச் செலுத்த முடியாது, திரும்பத் திரும்ப சிக்கலில் சிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். ஆகவே மேலை நாடுகளிடமிருந்து நிதி உதவிகள் மூலம் அல்லது மானிய அடிப்படையிலான உதவிகளைப் பெற்றுக் கொள்வதன் மூலம் தான் இந்த பிரச்னையிலிருந்து விடுப்படக் கூடிய வாய்ப்பு இருக்கும்.

பால்மாவுக்கான வரிசை.

கேள்வி: இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இலங்கைக்கு கடன் வழங்கும்பட்சத்தில், அது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவர உதவியாக இருக்குமா?

பதில்: ஓரளவு இருக்கும். பெருமளவு என்று சொல்ல முடியாது. இந்த இரண்டு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு கடனை வழங்கும் போது, அது பல்வேறு நிபந்தனைகளை விடுத்தே கடனை வழங்கும். சீனாவும் இந்தியாவும் கடன் வழங்கும் போது, இலங்கை மேலும் இக்கட்டான நிலைக்குத்தான் போகும். சீனாவும் இந்தியாவும் முரண்பட்ட துருவங்கள். முரண்பட்ட துருவங்களிடமிருந்து கடனை வாங்கும் போது இந்தியா விதிக்கின்ற நிபந்தனைகளையும் சீனா விதிக்கின்ற நிபந்தனைகளையும் நிறைவேற்றும் போது இலங்கை அரசியல் மற்றும் பொருளாதார குழிக்குத் தள்ளப்படும். மீளவே முடியாத நிலைமை ஏற்படும். இது இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பனிப் போருக்கான களமாக மாற்றப்படும். ''இலங்கை குரங்கு கையில் அகப்பட்ட அப்பத்தை" போன்று இறுதியில் இருக்கும்.

கேள்வி: இலங்கை பிரச்சினைகள் முடிவடைய வேண்டும் என்றால், தற்போது இருக்கின்ற அரசாங்கம் பதவி விலக வேண்டுமா?

பதில்: இந்த அரசாங்கம் பதவி விலகுவது சரிவராது. ஜனாதிபதி பதவி விலக வேண்டும். ஏனென்றால், இலங்கையின் அதிகாரங்கள் தீர்மானம் எடுக்கும் சக்தி நாடாளுமன்றத்தை விடவும் ஜனாதிபதிக்கே அதிகம் இருக்கின்றது. அரசாங்கம் பதவி விலகி ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே ஜனாதிபதி பதவி விலகி வேறு ஒருவருக்கு பொறுப்பைக் கொடுக்க வேண்டும். அல்லது புதிய தேர்தலுக்குப் போக வேண்டும். அல்லது செய்யக்கூடிய ஆளுமை உள்ள மேலை நாடுகளின் செல்வாக்கு, மேலை நாடுகளின் அங்கீகாரம், மேலை நாடுகளின் பங்களிப்பு ஆகிய செல்வாக்கு உள்ள ஒருவருக்கு இந்த நாடு கையளிக்கப்பட வேண்டும். அப்படியாக இருந்தால் மாத்திரமே இலங்கை மீண்டெழ முடியும். அப்படி இல்லையென்றால், இலங்கைக்கு எந்த வித முன்னேற்றமும் வராது.

https://www.bbc.com/tamil/sri-lanka-60886261

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகி, மேலை நாடுகளின் செல்வாக்கு பெற்ற ஒருவர் கைக்கு இலங்கை செல்லவேண்டும் என்று கூறியுள்ளார் பொருளாதார வல்லுநர் விஜேசந்திரன்.

ரணில் பணம் கொடுத்து எழுதச் சொல்லியிருப்பாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

ரணில் பணம் கொடுத்து எழுதச் சொல்லியிருப்பாரோ?

இவர் பிரதமரானால்..அமைச்சர்மார் ஒருவரும் இருக்க மாட்டினம்...இவர் கட்சியில் இவர் மட்டுமே எம் பி...அப்ப டொலர் மிச்சமாகும்..😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓர் இனத்தை அழித்து போர் செய்ததன் பலாபலன்கள் கண்ணெதிரே தெரிகின்றது.ஆனாலும் இன்னும் திருந்தும் யோசனை இனவாத அரசுகளுக்கு இல்லை.

அது சரி சம்பந்தனைப்போல ஒரு  ரோசம் கெட்ட அரசியல்வாதி பக்கத்தில் இருந்தால் யார்தான் திருந்துவார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

ஓர் இனத்தை அழித்து போர் செய்ததன் பலாபலன்கள் கண்ணெதிரே தெரிகின்றது.ஆனாலும் இன்னும் திருந்தும் யோசனை இனவாத அரசுகளுக்கு இல்லை.

அது சரி சம்பந்தனைப்போல ஒரு  ரோசம் கெட்ட அரசியல்வாதி பக்கத்தில் இருந்தால் யார்தான் திருந்துவார்கள்?

அவர்ஆவேசத்தில் மேசையில் குத்தினார் ....செய்தி பார்க்க வில்லையோ...ஒரு குத்துக்கு ஒரு பெட்டி...படு பிசியான பிசினெஸ்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, alvayan said:

அவர்ஆவேசத்தில் மேசையில் குத்தினார் ....செய்தி பார்க்க வில்லையோ...ஒரு குத்துக்கு ஒரு பெட்டி...படு பிசியான பிசினெஸ்😂

குத்தின குத்தில மேசை இரண்டா போச்சென்றால் பாருங்கோவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

குத்தின குத்தில மேசை இரண்டா போச்சென்றால் பாருங்கோவன்.

யோவ்  நேரகாலம் தெரியாமல் பகிடி விடாதையா    நாங்கள் சீரியசாய் கதைச்சுக்கொண்டிருக்கிறம்....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவங்க பேச்சுவார்த்தை முடியும் முன்னே சனம் பிச்சை எடுக்க தொடங்கி விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

குத்தின குத்தில மேசை இரண்டா போச்சென்றால் பாருங்கோவன்.

276149547_478104030706985_67083345107597

சம்பந்தன் ஐயா... உடைத்த மேசை.  😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரதிஸ்டவசமாக இலங்கை வங்குரோத்தாவத்ற்கான சாத்திய கூறுகள் அதிகமாக காணப்படுகிறது என கருதுகிறேன், வெளிநாட்டுகடனோ அல்லது ஐ எம் எப் கடனோ தீர்வாகாது, இலங்கைக்கு இந்தியா மற்றும் உலக நாடுகள் கடனடிப்படையில் காசு வழங்காமல், மானியமாக வழங்க முன் வந்தாலே இலங்கையால் இப்பிரச்சனையில் இருந்து மீழ முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட கால குத்தகை அடிப்படையில் (வல்லரசுகள்) யார் யார் நாட்டில் எந்த எந்த பகுதியை கேட்கினமோ அதை அளித்துவிட்டு இருக்குற மக்களை காப்பாற்றலாம் ..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/3/2022 at 17:20, குமாரசாமி said:
On 26/3/2022 at 16:11, ஈழப்பிரியன் said:

குத்தின குத்தில மேசை இரண்டா போச்சென்றால் பாருங்கோவன்.

யோவ்  நேரகாலம் தெரியாமல் பகிடி விடாதையா    நாங்கள் சீரியசாய் கதைச்சுக்கொண்டிருக்கிறம்

18 hours ago, தமிழ் சிறி said:

276149547_478104030706985_67083345107597

சம்பந்தன் ஐயா... உடைத்த மேசை.  😜

படத்தோட போட்டிருக்கு இப்ப என்ன சொல்லிறியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

படத்தோட போட்டிருக்கு இப்ப என்ன சொல்லிறியள்?

சும்மா சொல்லப்படாது ஐயாவுக்குள் ஒரு மினி ஹல்க் தூங்கிக்கொண்டிருக்கு 
ஐயாவின் குத்தை பார்த்து கோத்தாவுக்கு யட்டி நனைந்து விட்டதாம். 
https://youtu.be/MwGkIjL1I50

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேலை பார்க்குமிடத்திலுள்ள சிங்களவர்கள் பேசி கொண்டார்கள் ஆகிலும் பஞ்சம் பட்டினி ஏற்பட்டால் தமிழர்களுக்கு ஓடி போக தமிழகம் இருக்கு, ஆனால் சிங்களவர்களும் முஸ்லிம்களும் இலங்கைக்குள்ளையே கிடந்து சாகவேண்டியதுதன் எண்டு.

இப்போதே பல வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் சிங்களவர்கள் வெள்ளை பச்சை அரிசி சோறும் தேங்காய் சம்பலும்தான் சாப்பிட ஆரம்பித்து விட்டார்களாம் அதுவும் ஒருவேளை, இனி அதுவும் கஷ்டம் என்றார்கள்.

வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் தங்கடை ஆக்களுக்கு ஹெல்ப் பண்ணுவினமாம் ஆனால் தங்கள் இனம் அப்படியில்லை என்று நொந்து கொண்டார்கள்.

நம்மவர்களுக்கும் வெளிநாட்டில் ஆக்கள் இல்லாத குடும்பங்களின் நிலை அதுதான் என்பதை அவங்களுக்கு சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டே பேசாமல் போய்விட்டேன்.

இப்படியாவது அவர்கள் கதறலை பார்க்க ஒரு சந்தோஷம் , நம்மவர்கள் நிலையை சொன்னால் அட எல்லோருக்கும் உள்ளதுதான் என்று தங்களுடைய இனத்தை நினைத்து மன ஆறுதல் அடையாமல் இருக்கட்டும் என்ற கொடூர சிந்தனைதான்.

ஒருகாலம் நாடு முழுவதும் நன்றாக சாப்பிட்டுக்கொண்டிருக்க நம்மை மட்டும் பட்டினி போட்டார்கள், இப்போது நாடு முழுவதும் உணவில்லாமல் இருக்கும்போதுதானே அவர்கள் பட்டினியாய் கிடக்கிறார்கள் அதனால் அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் அல்ல என்பது எண்ணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, valavan said:

நீங்கள்…. அந்த சிங்களவருக்கு,
சொல்ல வந்ததை… சொல்லாமல் விட்டது சந்தோசம்.
முஸ்லீம்களுக்கு… அரபு நாடுகள் உதவி செய்யும், என்று சொல்லியிருந்தால்..
சிங்களவன், வயிறு எரிஞ்சிருப்பான். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள்…. அந்த சிங்களவருக்கு,
சொல்ல வந்ததை… சொல்லாமல் விட்டது சந்தோசம்.
முஸ்லீம்களுக்கு… அரபு நாடுகள் உதவி செய்யும், என்று சொல்லியிருந்தால்..
சிங்களவன், வயிறு எரிஞ்சிருப்பான். 😂

நீங்கள் வேற தமிழ்சிறி, இப்போ எல்லாம் எங்களைவிட முஸ்லிம்களை சிங்களவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள், முஸ்லிம்நாடுகள் இலங்கை முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல் கட்டவும் இஸ்லாமிய மதவாத கல்லூரிகள் ஆரம்பிக்கவும்,மட்டுமே காசு கொடுப்பார்களாம் , மற்றும்படி பஞ்சம் பட்டினி என்றால் கண்டு கொள்ளவே மாட்டார்களாம், மிஞ்சி மிஞ்சிபோனால் ரமழான் காலத்தில் இலவச பேரீச்சம் பழ பெட்டிகள் அனுப்புவார்களாம், என்று பேசி கொள்வார்கள்,

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் சிங்களவரும் முஸ்லிம்களும் எங்களுடன் பெரிதாக பேசுவதில்லை, ஈஸ்டர் தாக்குலுக்கு பிறகு முஸ்லிம்கள் என்றாலே அவர்களுக்கு லைட்டா கசக்கிறது, சரியோ பிழையோ தமிழர்கள் நேருக்கு நேரே மோதினார்கள். கூட இருந்தே குழிபறித்து நயவஞ்சகம் பண்ணவில்லையென்ற ஒரு உணர்வு பல சிங்களவர்களுக்குள் இப்போ அரும்பியிருக்கிறது.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கீழேஉள்ள  படத்திலிருந்துதான் கண்ணுக்கு தெரிந்த எதிரி தமிழர்களைவிட அவர்கள் ஆபத்தானவர்கள் என்றொரு முடிவுக்கு வர ஆரம்பித்தார்கள்.

Screenshot-3oo.png

Link to comment
Share on other sites

On 27/3/2022 at 03:55, vasee said:

துரதிஸ்டவசமாக இலங்கை வங்குரோத்தாவத்ற்கான சாத்திய கூறுகள் அதிகமாக காணப்படுகிறது என கருதுகிறேன், வெளிநாட்டுகடனோ அல்லது ஐ எம் எப் கடனோ தீர்வாகாது, இலங்கைக்கு இந்தியா மற்றும் உலக நாடுகள் கடனடிப்படையில் காசு வழங்காமல், மானியமாக வழங்க முன் வந்தாலே இலங்கையால் இப்பிரச்சனையில் இருந்து மீழ முடியும். 

வாங்க வேண்டிய  கையெழுத்துக்களை இப்போதே வாங்கி விட்டு (ஒப்பந்தங்களில்) சிங்கள மக்களால் மகிந்த அரசு விரட்டப்பட வேண்டும் என்பதே மேற்கின் திட்டமாம். குணா கவியழகன் சொல்கிறார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.