Jump to content

நேற்று என் கனவில் கடல் வந்தது - நிழலி

Recommended Posts

நேற்று என் கனவில்
கடல் வந்தது

என் கடல் நீலமாய் இருக்கவில்லை

அதன் அலைகள்
கடும் சிவப்பிலும்
ஆழத்தில் தொலைந்திருந்த
எங்கோ புதைந்து கிடந்த
என்றோ மறந்து விட்ட
ரகசியங்களின் நிறமாகவும் 
இருந்தது.

கரையே அற்ற பெருங்கடல்
அது
இரக்கமற்றவர்களின்
பிரார்த்தனை போலவும்
மரணங்களைக் கொண்டாடும்
கடவுள்களின் துதிப்பாடலைப்
போலவும்
இரைச்சலாக இருந்தது.

ஈரமற்ற நீர்ப்பரப்பாய்
வானமற்ற நீர் வனமாய்
உயிர்கள் அற்ற ஆழியாய்
அது பரந்து சூழ்ந்தது

அதன் அலைகளின்
நுனிகளை பற்றி
இருந்தேன்
நுரைகளால்
நிரம்பிக் கிடந்தேன்
அதன் பெரும் இரைச்சலை
எனக்குள் இறக்கிக்
கொண்டேன்

அலைக்கழிக்கும்
ஒரு பெரும் துயரத்தின்
ஆழத்துக்குள் 
அதன் சுழி
என்னை இட்டுச் சென்றது

மீள முடியாத பெரும்
சுழி அது

தொடக்கமும் முடிவும்
ஒரே புள்ளியில் 
சில கணங்களும்
பின் விலகி
எதிர் துருவங்களில் 
சில கணங்களுமாக
நேர் கோட்டிலும்
குறுக்குவாட்டிலும்
பின்
சிறுத்தும் பரந்தும்
சுருங்கியும் விரிந்தும்
என்னை இறுக்கி பிழிந்து
உயிர் குடிக்கும்
பெரும் சுழி அது

மூச்சிழந்து கிடந்தேன்
உடல் மரத்து
வேர்வை ஆறாகி பெருக
தப்ப வழியற்று
தப்பும் ஆசையும் அற்று
அதன் நெடிய கரங்களுக்குள்
இன்னும் நெருக்கிக் கொண்டு
அலைக்கழிந்தேன்

ஈற்றில்
முன்னை இட்ட தீ
சுழிக்குள் தகித்து
எரிய 
கடலில் சாம்பலாகி
அலைகளில் துகள்களாகி
கோடிக்கணக்கான அணுக்களாகி
கரைந்தே போனேன்.

நேற்று என் கனவில் 
கடல் வந்தது
இமைகள் திறந்த பொழுது
அந்தக் கடல்
வற்றிக் கொண்டது
வற்றிப் போக முன்
என் அறையெங்கும்
சேற்று மணத்தை 
நிரப்பி விட்டுச் சென்றிருந்தது...

March 27, 2022

 • Like 15
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, நிழலி said:

நேற்று என் கனவில் 
கடல் வந்தது
இமைகள் திறந்த பொழுது
அந்தக் கடல்
வற்றிக் கொண்டது
வற்றிப் போக முன்
என் அறையெங்கும்
சேற்று மணத்தை 
நிரப்பி விட்டுச் சென்றிருந்தது...

நிழலி
உங்கள் கவிதை சுனாமியை கண்முன்னே கொண்டுவந்து விட்டது.
பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை......மனசில் குழப்பங்கள்( நாட்டின் நிலைமைகள் சம்பந்தமானதாகக் கூட இருக்கலாம்) கனவில் பிரதிபலித்து கடலோடு சங்கமிக்கின்றது. பாராட்டுக்கள்.........!  👍

நன்றி நிழலி.....!

Link to comment
Share on other sites

21 hours ago, ஈழப்பிரியன் said:

நிழலி
உங்கள் கவிதை சுனாமியை கண்முன்னே கொண்டுவந்து விட்டது.
பாராட்டுக்கள்.

21 hours ago, suvy said:

நல்ல கவிதை......மனசில் குழப்பங்கள்( நாட்டின் நிலைமைகள் சம்பந்தமானதாகக் கூட இருக்கலாம்) கனவில் பிரதிபலித்து கடலோடு சங்கமிக்கின்றது. பாராட்டுக்கள்.........!  👍

நன்றி நிழலி.....!

வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி

எனக்கு / எமக்கு வரும் சில கனவுகள் இனம்புரியாத உணர்வுகளை தோற்றுவிப்பன. அடுத்த நாள் காலையில் எழுந்தால் அக் கனவின் சுமை கண்களின் வழி மனதெங்கும் பரவி அன்றைய நாளின் மீது கவிழும் மேகமாக தொடரும் இயல்புள்ளன. என்ன கனவு என்று தெளிவாக அடுத்த நாள் சொல்ல முடியாமல் இருக்கும். மீள அதை நினைவில் கொண்டு வர முடியாமல் இருக்கும். அது தரும் உணர்வுகளையும் பழக்கமான வார்த்தைகளால் அளக்க முடியாமல் இருக்கும்.

அப்படி ஒரு கனவு நேற்றுக் காலையில் வந்தது. அதில் கடல் நிரம்பி இருந்தது. விடிய எழும்பும் போது கண்களில் எரிச்சலும் மனசில் உளைச்சலுமாக இருந்தது. அதை எழுத்தில் கொண்டு வர எடுத்த முயற்சி தான் இது. யாழின் 24 ஆவது அகவைக்கு என்று மினக்கெட்டு எழுதவில்லை இது. தானாக வந்த கவிதை.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி… நிழலி.
எனக்கு வாற கனவுகளில் எல்லாம்….
நக்மாவும், நமீதாவும் தான் வருகிறார்கள். 😛

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.. இலவசமா வார கனவுல கூட இன்னும் நக்மா, நமீதா காலத்திலேயே இருந்தால் எப்படி? சட்டு புட்டுன்னு அப்டேட் ஆகிற வழிய பாருங்க தலைவா.🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
21 minutes ago, தமிழ் சிறி said:

கவிதைக்கு நன்றி… நிழலி.
எனக்கு வாற கனவுகளில் எல்லாம்….
நக்மாவும், நமீதாவும் தான் வருகிறார்கள். 😛

அவனவன் சமந்தாவையும் கஜோலையும் தாண்டி போய்கொண்டிருக்கிறான் இவர் நக்மாவும் நமீதாவும் என்று கொண்டு......."அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு"படம் பாருங்க அக்க்ஷரா ஹாசன் செம க்யூட் என்று சொல்கிறார்கள்........!   😂

Edited by suvy
எழுத்து பிழை திருத்தம் .....!
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

கவிதைக்கு நன்றி… நிழலி.
எனக்கு வாற கனவுகளில் எல்லாம்….
நக்மாவும், நமீதாவும் தான் வருகிறார்கள். 😛

2 hours ago, Sasi_varnam said:

ம்ம்ம்.. இலவசமா வார கனவுல கூட இன்னும் நக்மா, நமீதா காலத்திலேயே இருந்தால் எப்படி? சட்டு புட்டுன்னு அப்டேட் ஆகிற வழிய பாருங்க தலைவா.🤣

வயசுக்கேற்ற ஆக்கள் தானே வருவார்கள்.

2 hours ago, தமிழ் சிறி said:

கவிதைக்கு நன்றி… நிழலி.
எனக்கு வாற கனவுகளில் எல்லாம்….
நக்மாவும், நமீதாவும் தான் வருகிறார்கள். 😛

ஏன் சிறி ஆஸ்பத்திரி நேர்ஸ் எவரும் வாறலையோ?

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

வயசுக்கேற்ற ஆக்கள் தானே வருவார்கள்.

ஐயாவின்ரை கனவிலை வந்து போறது கேஆர் விஜயாவா?

Ghfhghvjkvvhg Mature, Yesteryear, tamil, actress, KR, Vijaya, hot, saree, pallu, blouse GIF

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

ஐயாவின்ரை கனவிலை வந்து போறது கேஆர் விஜயாவா?

Ghfhghvjkvvhg Mature, Yesteryear, tamil, actress, KR, Vijaya, hot, saree, pallu, blouse GIF

அவர் இன்னும் சுந்தராம்பாள் ஐ தாண்டவில்லை, அவர் நினைவாகவே இருக்கிறார்

7 hours ago, நிழலி said:

வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி

எனக்கு / எமக்கு வரும் சில கனவுகள் இனம்புரியாத உணர்வுகளை தோற்றுவிப்பன. அடுத்த நாள் காலையில் எழுந்தால் அக் கனவின் சுமை கண்களின் வழி மனதெங்கும் பரவி அன்றைய நாளின் மீது கவிழும் மேகமாக தொடரும் இயல்புள்ளன. என்ன கனவு என்று தெளிவாக அடுத்த நாள் சொல்ல முடியாமல் இருக்கும். மீள அதை நினைவில் கொண்டு வர முடியாமல் இருக்கும். அது தரும் உணர்வுகளையும் பழக்கமான வார்த்தைகளால் அளக்க முடியாமல் இருக்கும்.

அப்படி ஒரு கனவு நேற்றுக் காலையில் வந்தது. அதில் கடல் நிரம்பி இருந்தது. விடிய எழும்பும் போது கண்களில் எரிச்சலும் மனசில் உளைச்சலுமாக இருந்தது. அதை எழுத்தில் கொண்டு வர எடுத்த முயற்சி தான் இது. யாழின் 24 ஆவது அகவைக்கு என்று மினக்கெட்டு எழுதவில்லை இது. தானாக வந்த கவிதை.

கவிதை சூப்பர், எங்களுக்கு வரும் கனவுகளை இப்பிடி எல்லாம் எழுத்தெரியாது. எழுத்ததெரிவது ஒரு கொடுப்பினை.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

ஐயாவின்ரை கனவிலை வந்து போறது கேஆர் விஜயாவா?

Ghfhghvjkvvhg Mature, Yesteryear, tamil, actress, KR, Vijaya, hot, saree, pallu, blouse GIF

இப்பிடி படங்கள் உடனே எங்கிருந்து தேடிப்பிடிக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை, நிழலி…!

ஒருவரது பார்வையைப் பொறுத்துக் கவிதையைப்வ்பல நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்தி ரசிக்கலாம் என்பது கவிதையின் தனிச் சிறப்பாகும்…! ஒரு விதமான பயத்தையும், இயலாமையையும், வெறுமையையும் கவிதை அழகாக விபரிக்கின்றது…! தொடர்ந்தும் இது போன்ற கவிதைகளைத் தாருங்கள்…! வாழ்த்துக்கள்…!

Link to comment
Share on other sites

கன நாட்களின் பின் உங்கள் கவிதை .. .. .. நன்று

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.