Jump to content

புட்டினும் புதுமாத்தளனும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காலம்: டிசம்பர் 2026

இடம்: வெசாயில்ஸ், பிரான்சு

அன்பு நண்பன் அமுதனுக்கு,

உன் பால்ய நண்பன் உடான்ஸ்சாமியார் எழுதிக்கொள்வது.

மச்சான் இங்க இப்ப நிலைமை ரொம்ப மோசமடா.

ரஸ்யாகாரன் போலந்துக்கால வந்து ஜேர்மனியில் பல பகுதியை பிடிச்சிட்டான்.

எங்கட சனம் கொஞ்சம் ஜேர்மனில இருந்து வெளிக்கிட்டு இஞ்ச ஒரு சேர்ச்சில வந்து அகதியளா இருக்குது. நல்லா வாழ்ந்த குடும்பங்கள்ஒரு டெண்டுக்குள்ள ஒரு குடும்பமே ஒண்டி கொண்டு சாப்பாட்டுக்கு அடுத்தவன்கையை எதிர்பார்த்து நிற்குதுகள். 45 வயதுக்கு கீழ்பட்ட ஆக்கள் எல்லாம் கட்டாயா இராணுவத்திலசேந்திட்டினம். மிஞ்சி வந்திருக்கிற ஆக்கள் கண்ணில் அப்படி ஒரு மரண பயம் தெரியுது மச்சான்.

என்ர மகனையும் பிரான்சு கட்டாய இராணுவ பணிக்கு எடுத்து கொண்டு போட்டாங்கள். போன கிழமைஉப்பிடிதான் ஒரு தமிழ்பிள்ளை, பெற்றாருக்கு ஒரே மகள் - ரொமேனியா போடரில் நிக்கேக்க ரஸ்யண்டபொஸ்பரஸ் குண்டு பட்டு ஆள் அந்த இடத்திலயே அவுட்.

மகனுக்கு என்ன நடக்குமோ எண்டு நாங்கள் பயந்து கொண்டு கிடக்கிறம் மச்சான். தவமிருந்து பெற்ற ஒரே பிள்ளை.

லண்டன் பக்கம் நிலமை இன்னும் மோசம்.  லண்டனில அணுகுண்டு அடிச்ச பிறகு மிஞ்சின சனம் எல்லாம் ஸ்கொட்லாண்ட், வேள்ஸ் பக்கம் போய் வயல்களில நாட்கூலிக்கு நிக்குதாம். கோவில், கோபுரம் எண்டு இப்படி எங்கட தமிழ்ச் சனம் இருந்த ஊர் லண்டன்? இப்ப ஒரு புல் பூண்டு கூட இல்லையாம் மச்சான். கனடாவும் அதேநிலைமைதான்.

பார் மச்சான் எங்கட நிலமையை. ஊரில வந்து இருப்பம் எண்டால் ஐரோப்பிய அகதியளுக்கு இடம் இல்லைஎண்டு இலங்கை சொல்லி போட்டுது. இந்திய வம்சாவழி எண்டால் இந்தியா எடுக்குது. நாங்கள் என்ன செய்ய?

எல்லாம் ஊழ்வினையோ? எண்டும் யோசிக்க வருகுது மச்சான்.

ஊரில முதல் வெடிச்சத்தம் கேட்டதும் கிளம்பி ஐரோப்பா வந்த ஆள் நான். பிறகு சனம் அங்க சாகும் போதுகொஞ்சம் காசை அனுப்பி போட்டு, இரெண்டு போராட்டத்தில முகத்தை காட்டி போட்டு, மக்கள், போராளிகள்அழிவை ஏதோ கிரிகெட் ஸ்கோர் கேட்பது போல எல்லே கேட்டு கொண்டு இருந்ததான்.

இப்ப ஒரு நாலு வருசத்துக்கு முதல் இந்த உலக மகா யுத்தம் தொடங்கேக்க, உக்ரேன் சனத்தின்ர சாவை கூடஇப்படிதானே சணல் அடி” “நல்ல வெளுவை எண்டு விசிலடிச்சு ரசிச்சனான்.

ரஸ்யா உக்ரேனை போட்டு வெளுத்த நேரம், வெளிநாட்டில் இருந்த உக்ரேன் சனம் எல்லாம் நாட்டுக்காக, இனத்துக்காக சண்டை பிடிக்க உக்ரேன் போனது. பொம்பிளையள், பிள்ளையளை போலந்துக்கு அனுப்பிபோட்டு, ஆம்பிளையள் நிண்டு சண்டை பிடிச்சவங்கள்.   

எங்கட ஊரில? 

நாங்கள் வெக்கம் கெட்டு கோழையள் மாரி ஓடி எல்லே வந்தனாங்கள். சனமும் போராளியளும் அங்க சாக, நாங்கள் கொழும்பிலயும், பரிசிலயும், லண்டனிலயும், டுசிள்டோபிலயும், டொராண்டோவிலயும் வீடு வாங்கிற, கடை வாங்கிற, பிள்ளையள டொக்டர் ஆக்கிற பிசியில எல்லே திரிஞ்சனாங்கள்?

எதோ சில இணைய தளங்களில் போய் பத்தி பத்தியா எழுதினத தவிர நாங்கள் வேற என்ன செய்தம் எங்கட இனத்துக்கு? புலம்பெயர் உக்ரேனியனிட்ட, புலம்பெயர் தமிழன் எதையோ வேண்டி குடிக்க வேணும் மச்சான்.

1985 க்கு பிறகு ஊருக்கு போராட போன, அல்லது பிள்ளையள போராட அனுப்பின புலம்பெயர் தமிழன் எண்டுயாரும் இல்லைத்தானே மச்சான்.

மச்சான் எங்களுக்கு, குறிப்பாக இந்த புலம்பெயர்ந்த தமிழருக்கு விசுவாசம் மருந்துக்கும் இல்லை மச்சான்.

ஊரில சண்டை வந்த போது அங்க விசுவாசமா நிண்டு போராடாமல் மேற்கு நாட்டுக்கு ஓடி வந்து பிச்சைஎடுத்தம்.

ஆனால் பிச்சை போட்ட நாட்டுக்கும் நாம் விசுவாசம் காட்டேல்ல மச்சான்.

அந்த நாடுகளுக்கு ரஸ்யாவோட பிரச்சனை எண்டால் - நாங்கள் அதில நியாயம் பிளக்க எல்லோவெளிகிட்டனாங்கள்.

நாங்கள் இனத்தின் இருப்பு பற்றி யோசிக்கிற ஆக்கள் எண்டால், ரஸ்யாவோட நிற்பதை விட மேற்கோடு நிற்பதுபுலத்திலும், புலம் பெயர்ந்தும் வாழும் நாட்டிலும் தமிழர் நலனுக்கு ஒப்பீட்டளவில் நல்லது எண்டு உணர்ந்துநடந்திருப்பம் மச்சான்.

ஆனால் நாங்கள்தான் மந்தைகள் ஆச்சே மச்சான். எங்களுக்கு சுய புத்தியும் இல்லை. சொல் புத்தியும் இல்லை. ஸ்கோர் கேட்டு கைதட்ட மட்டும்தான் தெரியும்.

சரி மச்சான் கனக்க எழுதி போட்டன். 

இனி ஐரோப்பாவில்/கனடாவில் முன்னர் போல் தமிழர் பரம்பல் இராது. ஆகவே இந்த நாட்டு அரசுகளை நெருக்கி, நாட்டில உங்களுக்கு கொஞ்சம்தன்னும் விடிவை தர முயற்சிக்க கூட இனி முடியாது.

தவிரவும் ரஸ்யா, இந்தியா, இலங்கை இரெண்டுக்கும் நல்ல நண்பந்தானே. ஆகவே இனி இலங்கைக்கு வெளி அளுத்தம் எண்டு ஒண்டு மருந்துக்கும் இருக்கபோவதில்லை.

குறைந்த பட்சம் உங்களுக்கு உயிராவது மிஞ்சும் எண்டு சந்தோசப்படு மச்சான். இஞ்ச அதுவும் சந்தேகம்தான்.

அடுத்த முறை எழுத கிடைத்தால் - அதுவரை,

நட்புடன்,

உடான்ஸ் சாமியார்

(யாவும் கற்பனையாக இருக்கட்டும்)

  • Like 6
  • Thanks 2
  • Haha 7
  • Sad 1
Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

காலம்: டிசம்பர் 2026 இடம்: வெசாயில்ஸ், பிரான்சு அன்பு நண்பன் அமுதனுக்கு, உன் பால்ய நண்பன் உடான்ஸ்சாமியார் எழுதிக்கொள்வது. மச்சான் இங்க இப்ப நிலைமை ரொம்ப மோசமடா. ரஸ்யாகாரன் போல

goshan_che

புட்டினும் புதுமாத்தளனும் II காலம்: புத்தாண்டு தினம் 2027 இடம்: பதுங்கு குழியாக மாறிய பாரிசின் சிறுநீர் நாற்றம் எடுக்கும் ஒரு நிலக்கீழ் இரயில் நிலையம்.   மச்சான் அமுதன், உன் க

தமிழ் சிறி

உக்ரைனிலை ஒருத்தன்... ரஷ்யாவிடம் இருந்து உக்ரைனை காக்க,  தன்னை வெல்ல வைக்கச் சொல்லி...  வாக்கு வாங்கி, வென்று... சும்மா இருக்க ஏலாமல்... வாயை குடுத்து,  உக்ரைனை... சல்லி, சல்லியாக நொருக்க  வைத்த

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

லண்டன் பக்கம் நிலமை இன்னும் மோசம்.  லண்டனில அணுகுண்டு அடிச்ச பிறகு மிஞ்சின சனம் எல்லாம் ஸ்கொட்லாண்ட், வேள்ஸ் பக்கம் போய் வயல்களில நாட்கூலிக்கு நிக்குதாம். கோவில், கோபுரம் எண்டு இப்படி எங்கட தமிழ்ச் சனம் இருந்த ஊர் லண்டன்? இப்ப ஒரு புல் பூண்டு கூட இல்லையாம் மச்சான். கனடாவும் அதேநிலைமைதான்.

ஆகா ஆகா 

நல்லகாலம் அமெரிக்கா தப்பீட்டுது.

நகைச்சுவை நன்று.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ரஸ்யா உக்ரேனை போட்டு வெளுத்த நேரம், வெளிநாட்டில் இருந்த உக்ரேன் சனம் எல்லாம் நாட்டுக்காக, இனத்துக்காக சண்டை பிடிக்க உக்ரேன் போனது. பொம்பிளையள், பிள்ளையளை போலந்துக்கு அனுப்பிபோட்டு, ஆம்பிளையள் நிண்டு சண்டை பிடிச்சவங்கள். 

யூக்ரேன் இராணுவத்தில் 15% பெண்கள் என்று கூட தெரியாமல் என்ன பத்தி எழுத்தாளரப்பா இந்தாள்?😀

Quote

ஆனால் பிச்சை போட்ட நாட்டுக்கும் நாம் விசுவாசம் காட்டேல்ல மச்சான்.

பேச்சுவார்த்தைக்கு நோர்வேயை வைத்து கெடுத்துப்போட்டு சிறிலங்கா அரசுக்கு எல்லா விதமான ஆயுதங்களையும் கொடுத்து தமிழ் மக்களை அழிக்க சொன்னது இதே மேற்கு நாடு தானே.
முள்ளி வாய்காலில் நடந்தது இன்ப்படுகொலை இல்லையாம். ஆனால் யூக்ரேனில் நடந்தது இனப்படுகொலை போர் தொடங்கி 10ம் நாளில். ஏனய்யா இந்த  கிப்போகிறசி என சிந்திக்க கொஞ்ச மூளை போதும்.🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடான்ஸ் சாமியார் அடுத்த முறையும் வந்து எழுதட்டும்.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Explosion GIFs | Tenor

உடான்ஸ் சாமியார், அடுத்த முறை இந்தப் பக்கம் வந்தால்,
இரண்டு காலுக்கும் இடையிலை.... கண்ணிவெடி, வைக்கப் படும். 😂 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் சேர்ந்துதான் எங்களை வேரோடு அறுத்தவர்கள்.

இதில் விசுவாசமாக இருக்க எந்தக் காரணமும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

காலம்: டிசம்பர் 2026

இடம்: வெசாயில்ஸ், பிரான்சு

அன்பு நண்பன் அமுதனுக்கு,

உன் பால்ய நண்பன் உடான்ஸ்சாமியார் எழுதிக்கொள்வது.

மச்சான் இங்க இப்ப நிலைமை ரொம்ப மோசமடா.

ரஸ்யாகாரன் போலந்துக்கால வந்து ஜேர்மனியில் பல பகுதியை பிடிச்சிட்டான்.

எங்கட சனம் கொஞ்சம் ஜேர்மனில இருந்து வெளிக்கிட்டு இஞ்ச ஒரு சேர்ச்சில வந்து அகதியளா இருக்குது. நல்லா வாழ்ந்த குடும்பங்கள்ஒரு டெண்டுக்குள்ள ஒரு குடும்பமே ஒண்டி கொண்டு சாப்பாட்டுக்கு அடுத்தவன்கையை எதிர்பார்த்து நிற்குதுகள். 45 வயதுக்கு கீழ்பட்ட ஆக்கள் எல்லாம் கட்டாயா இராணுவத்திலசேந்திட்டினம். மிஞ்சி வந்திருக்கிற ஆக்கள் கண்ணில் அப்படி ஒரு மரண பயம் தெரியுது மச்சான்.

என்ர மகனையும் பிரான்சு கட்டாய இராணுவ பணிக்கு எடுத்து கொண்டு போட்டாங்கள். போன கிழமைஉப்பிடிதான் ஒரு தமிழ்பிள்ளை, பெற்றாருக்கு ஒரே மகள் - ரொமேனியா போடரில் நிக்கேக்க ரஸ்யண்டபொஸ்பரஸ் குண்டு பட்டு ஆள் அந்த இடத்திலயே அவுட்.

மகனுக்கு என்ன நடக்குமோ எண்டு நாங்கள் பயந்து கொண்டு கிடக்கிறம் மச்சான். தவமிருந்து பெற்ற ஒரே பிள்ளை.

லண்டன் பக்கம் நிலமை இன்னும் மோசம்.  லண்டனில அணுகுண்டு அடிச்ச பிறகு மிஞ்சின சனம் எல்லாம் ஸ்கொட்லாண்ட், வேள்ஸ் பக்கம் போய் வயல்களில நாட்கூலிக்கு நிக்குதாம். கோவில், கோபுரம் எண்டு இப்படி எங்கட தமிழ்ச் சனம் இருந்த ஊர் லண்டன்? இப்ப ஒரு புல் பூண்டு கூட இல்லையாம் மச்சான். கனடாவும் அதேநிலைமைதான்.

பார் மச்சான் எங்கட நிலமையை. ஊரில வந்து இருப்பம் எண்டால் ஐரோப்பிய அகதியளுக்கு இடம் இல்லைஎண்டு இலங்கை சொல்லி போட்டுது. இந்திய வம்சாவழி எண்டால் இந்தியா எடுக்குது. நாங்கள் என்ன செய்ய?

எல்லாம் ஊழ்வினையோ? எண்டும் யோசிக்க வருகுது மச்சான்.

ஊரில முதல் வெடிச்சத்தம் கேட்டதும் கிளம்பி ஐரோப்பா வந்த ஆள் நான். பிறகு சனம் அங்க சாகும் போதுகொஞ்சம் காசை அனுப்பி போட்டு, இரெண்டு போராட்டத்தில முகத்தை காட்டி போட்டு, மக்கள், போராளிகள்அழிவை ஏதோ கிரிகெட் ஸ்கோர் கேட்பது போல எல்லே கேட்டு கொண்டு இருந்ததான்.

இப்ப ஒரு நாலு வருசத்துக்கு முதல் இந்த உலக மகா யுத்தம் தொடங்கேக்க, உக்ரேன் சனத்தின்ர சாவை கூடஇப்படிதானே சணல் அடி” “நல்ல வெளுவை எண்டு விசிலடிச்சு ரசிச்சனான்.

ரஸ்யா உக்ரேனை போட்டு வெளுத்த நேரம், வெளிநாட்டில் இருந்த உக்ரேன் சனம் எல்லாம் நாட்டுக்காக, இனத்துக்காக சண்டை பிடிக்க உக்ரேன் போனது. பொம்பிளையள், பிள்ளையளை போலந்துக்கு அனுப்பிபோட்டு, ஆம்பிளையள் நிண்டு சண்டை பிடிச்சவங்கள்.   

எங்கட ஊரில? 

நாங்கள் வெக்கம் கெட்டு கோழையள் மாரி ஓடி எல்லே வந்தனாங்கள். சனமும் போராளியளும் அங்க சாக, நாங்கள் கொழும்பிலயும், பரிசிலயும், லண்டனிலயும், டுசிள்டோபிலயும், டொராண்டோவிலயும் வீடு வாங்கிற, கடை வாங்கிற, பிள்ளையள டொக்டர் ஆக்கிற பிசியில எல்லே திரிஞ்சனாங்கள்?

எதோ சில இணைய தளங்களில் போய் பத்தி பத்தியா எழுதினத தவிர நாங்கள் வேற என்ன செய்தம் எங்கட இனத்துக்கு? புலம்பெயர் உக்ரேனியனிட்ட, புலம்பெயர் தமிழன் எதையோ வேண்டி குடிக்க வேணும் மச்சான்.

1985 க்கு பிறகு ஊருக்கு போராட போன, அல்லது பிள்ளையள போராட அனுப்பின புலம்பெயர் தமிழன் எண்டுயாரும் இல்லைத்தானே மச்சான்.

மச்சான் எங்களுக்கு, குறிப்பாக இந்த புலம்பெயர்ந்த தமிழருக்கு விசுவாசம் மருந்துக்கும் இல்லை மச்சான்.

ஊரில சண்டை வந்த போது அங்க விசுவாசமா நிண்டு போராடாமல் மேற்கு நாட்டுக்கு ஓடி வந்து பிச்சைஎடுத்தம்.

ஆனால் பிச்சை போட்ட நாட்டுக்கும் நாம் விசுவாசம் காட்டேல்ல மச்சான்.

அந்த நாடுகளுக்கு ரஸ்யாவோட பிரச்சனை எண்டால் - நாங்கள் அதில நியாயம் பிளக்க எல்லோவெளிகிட்டனாங்கள்.

நாங்கள் இனத்தின் இருப்பு பற்றி யோசிக்கிற ஆக்கள் எண்டால், ரஸ்யாவோட நிற்பதை விட மேற்கோடு நிற்பதுபுலத்திலும், புலம் பெயர்ந்தும் வாழும் நாட்டிலும் தமிழர் நலனுக்கு ஒப்பீட்டளவில் நல்லது எண்டு உணர்ந்துநடந்திருப்பம் மச்சான்.

ஆனால் நாங்கள்தான் மந்தைகள் ஆச்சே மச்சான். எங்களுக்கு சுய புத்தியும் இல்லை. சொல் புத்தியும் இல்லை. ஸ்கோர் கேட்டு கைதட்ட மட்டும்தான் தெரியும்.

சரி மச்சான் கனக்க எழுதி போட்டன். 

இனி ஐரோப்பாவில்/கனடாவில் முன்னர் போல் தமிழர் பரம்பல் இராது. ஆகவே இந்த நாட்டு அரசுகளை நெருக்கி, நாட்டில உங்களுக்கு கொஞ்சம்தன்னும் விடிவை தர முயற்சிக்க கூட இனி முடியாது.

தவிரவும் ரஸ்யா, இந்தியா, இலங்கை இரெண்டுக்கும் நல்ல நண்பந்தானே. ஆகவே இனி இலங்கைக்கு வெளி அளுத்தம் எண்டு ஒண்டு மருந்துக்கும் இருக்கபோவதில்லை.

குறைந்த பட்சம் உங்களுக்கு உயிராவது மிஞ்சும் எண்டு சந்தோசப்படு மச்சான். இஞ்ச அதுவும் சந்தேகம்தான்.

அடுத்த முறை எழுத கிடைத்தால் - அதுவரை,

நட்புடன்,

உடான்ஸ் சாமியார்

(யாவும் கற்பனையாக இருக்கட்டும்)

உங்களை அங்கே பார்த்துவிட்டு, பதில் போட்டுவிட்டு இங்கே வந்தால், அட்டகாசமாக இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

வெளிநாட்டில் இருந்த உக்ரேன் சனம் எல்லாம் நாட்டுக்காக, இனத்துக்காக சண்டை பிடிக்க உக்ரேன் போனது. பொம்பிளையள், பிள்ளையளை போலந்துக்கு அனுப்பிபோட்டு, ஆம்பிளையள் நிண்டு சண்டை பிடிச்சவங்கள்.   

உக்ரேனிலிருந்து ஆண்கள் வெளியேற அனுமதியில்லை.

எழுந்தமானத்திலை எல்லாத்தையும் எடுத்து விடப்படாது. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

மச்சான் இங்க இப்ப நிலைமை ரொம்ப மோசமடா.

ரஸ்யாகாரன் போலந்துக்கால வந்து ஜேர்மனியில் பல பகுதியை பிடிச்சிட்டான்.

எங்கட சனம் கொஞ்சம் ஜேர்மனில இருந்து வெளிக்கிட்டு இஞ்ச ஒரு சேர்ச்சில வந்து அகதியளா இருக்குது. 

புட்டினை அமுக்கினால்  சண்டை நிக்குமாம்
அடுத்த மாதம் ரஸ்யாவில் புதிய ஜனாதிபதி உருவாக்கப்படுவாராம். இதைப்பற்றி உடான்ஸ் சாமியாரின் கருத்து என்னவாம் 🤣👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

லண்டன் பக்கம் நிலமை இன்னும் மோசம்.  லண்டனில அணுகுண்டு அடிச்ச பிறகு மிஞ்சின சனம் எல்லாம் ஸ்கொட்லாண்ட், வேள்ஸ் பக்கம் போய் வயல்களில நாட்கூலிக்கு நிக்குதாம். கோவில், கோபுரம் எண்டு இப்படி எங்கட தமிழ்ச் சனம் இருந்த ஊர் லண்டன்? இப்ப ஒரு புல் பூண்டு கூட இல்லையாம் மச்சான். கனடாவும் அதேநிலைமைதான்.

எனக்கு ஒரு டவுட்டு கனடாவில் எங்கு அணுகுண்டு புட்டின் போட்டிருப்பார் என்று ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலக நாடுகளில் உள்ள இலங்கை தமிழர்களின் புரின், ரஷ்ய ஆதரவு என்ற மோசமான நிலைபாட்டை அப்படியே எடுத்து சொல்லும் மிகவும் சிறந்த கட்டுரை.💐

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மேற்குலக நாடுகளில் உள்ள இலங்கை தமிழர்களின் புரின், ரஷ்ய ஆதரவு என்ற மோசமான நிலைபாட்டை அப்படியே எடுத்து சொல்லும் மிகவும் சிறந்த கட்டுரை.💐

“You are either with us or against us”நினைவிற்கு வந்து தொலைக்கிறது. 

நீங்கள் புடினுக்கும் இரஸ்யாவுக்கும் ஏன் எதிராக இருக்கிறீர்கள் ? 

நீங்கள் மேற்குலகுக்கு ஏன் ஆதரவாக இருக்கிறீர்கள் ? 

விளக்கமாகக் கூற முடியுமா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐசே வா சரி சிரிப்பு..Epic வா. எங்களுக்கு பாக்கிஸ்தான் ஈக்கிவா..
அதிலும் முதல் வெடிசத்தம்......🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Putin Boobs GIF - Putin Boobs Thumbs Up GIFs

Zelensky Zelenskiy GIF - Zelensky Zelenskiy Zelenskij - Discover & Share  GIFs

உக்ரைனிலை ஒருத்தன்... ரஷ்யாவிடம் இருந்து உக்ரைனை காக்க, 
தன்னை வெல்ல வைக்கச் சொல்லி...  வாக்கு வாங்கி, வென்று...
சும்மா இருக்க ஏலாமல்... வாயை குடுத்து, 
உக்ரைனை... சல்லி, சல்லியாக நொருக்க  வைத்து விட்டு.. 
அழுது கொண்டு இருக்கிறான். 😂

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 உடான்ஸ் சாமியார்... கற்பனையிலும் கனதியான பல செய்திகள் சொல்லியிருக்கிறார். 👌
என்ன....  அதை வாசித்தது, கிரகிக்க எக்ஸ்டரா ஐகியூ தேவை. அது "டிக் டொக்கில்", "மீம்ஸ் கிளிப்பிங்கில்" 
கிடைக்கும் சமாச்சாரம் அல்லவே !! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம்: டிசம்பர் 2027

இடம்: பிராங்பேர்ட், ஜெர்மன்

அன்பு நண்பன் அமுதனுக்கு,

உன் பால்ய நண்பன் படான்ஸ் எழுதிக்கொள்வது. உனது மடல் கிடைத்தது. உடான்ஸ் சொன்னது ஒண்டையும் நம்பாத.. பூரா கற்பனை..

மச்சான் இப்ப நிலைமை அமெரிக்காவிலையும் அமெரிக்காவுக்கு வால்பிடிச்ச யுகேயிலும்தான் ரெம்ப மோசமடா… ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்காவின் நோக்கத்தை உணர்ந்து உசாராகி ரஷ்யாவுக்கு கண்டனத்துடன் நிறுத்திக்கொண்டு விட்டது.. ஆனா நம்ப யூகே வாயைக்குடுத்து சூ*ல சூடு வாங்கி இருக்கு…

ரஸ்யாகாரன் ரேடாரால கண்டுபுடிச்சு அழிக்கேலாத ballistic missiles இல அணுகுண்டை பூட்டி அடிச்சதில லணடனிலையும் அமெரிக்காவிலையும் சரியான சேதம்..

எங்கட சனம் கொஞ்சம் இங்க யுகே  இன்னும் கொஞ்சம் கனடால  இருந்து வெளிக்கிட்டு ஜரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அகதியளா வந்து கொண்டு இருக்கு... நல்லா வாழ்ந்த குடும்பங்கள்… இப்ப பிரான்ஸ் ஜேர்மன் சுவிஸ் நோர்வே எண்டு அரசாங்கம் குடுத்த முகாம்களில் ஒரு குடும்பமே ஒண்டி கொண்டு சாப்பாட்டுக்கு அரசாங்க உதவியை எதிர்பார்த்து நிற்குதுகள். 45 வயதுக்கு கீழ்பட்ட ஆக்கள் யூகேயிலயும் அமெரிக்காலயும் கட்டாயா இராணுவத்திலசேந்திட்டினம். மிஞ்சி வந்திருக்கிற ஆக்கள் கண்ணில் அப்படி ஒரு மரண பயம் தெரியுது.. ஜரோப்பிய ஒன்றியம் உக்ரேனைப்போல அமெரிக்காவை நம்பி முட்டாள்தனமா இருக்காமல் பின்விளைகளை சிந்திச்சு சமயோசிதமா செயற்பட்டதால அங்க இருக்கிற சனம்கள் சந்தோசமா நிம்மதியா இருக்குதுகள்..

நானும் இப்ப ஜெர்மனில அகதியா வந்து இருக்கிறன்.. ஊரில இருந்து யூகேக்கு அகதியா வந்து பிரிட்டிஸ் சிட்டிசன் ஆகி கெத்தா இருந்தனான்.. இப்ப மறுபடியும் ஜெர்மனுக்கு அகதியா போய் இருக்கிறன்.. இதைத்தான் வாழ்க்கை ஒரு வட்டம் எண்டுறது.. ஜேர்மன் நோர்வே பிரான்ஸ் சுவிஸ் எண்டு இரட்டை சிற்றிசன் வச்சிருந்தவை இப்ப அங்கபோய் நிம்மதியா வேலை செய்து கொண்டு இருக்கினம்.. இவன் மோடன் பொறிஸ் ஜரோப்பிய ஒன்றியத்தில இருந்து யுகேயை பிரிச்சதால விசாஇல்லாம இங்க ஜரோப்பிய ஒன்றியத்தில இருக்கேலா.. அதால நானும் அகதி எண்டு பதிஞ்சுபோண்டு இருக்கிறன்..

எல்லாம் ஊழ்வினையோ? எண்டும் யோசிக்க வருகுது மச்சான்.

சிங்களவனிட்ட இவ்வளவு அடிவேண்டியும் இப்ப ஒரு நாலு வருசத்துக்கு முதல் இந்த உலக மகா யுத்தம் தொடங்கேக்க, உக்ரேனில சிறுபான்மை ரஷ்யா சனத்தின்ர அழிவைக்கூட அப்படி ஒண்டுமே இல்லை அப்படி ஒரு அழிவே அங்க நடக்கேல்ல எண்டு எழுதின்னான்.. அமெரிக்கா நேட்டோ நாலுபக்கமும் ரஷ்யாவை சுத்திவளைச்சு ஈரான் ஈராக் லிபியா சிரியா எண்டு பலநாடுகளில் செய்ததை ரஷ்யாக்கு உக்ரேனை வச்சு செய்ய நிண்டதை மனசாட்சியை பூட்டி வச்சிட்டு சரியெண்டு சொல்லி மேற்குக்கு முட்டு குடுத்தனான்.. இப்ப ரஷ்யாக்காரன் அடிபோட்டு அழிவெண்டா என்ன எண்டு மறுபடி எனக்கு காட்டுறான்.. இப்பவும் நான் திருந்தாட்டி நான் மனுசனே இல்ல…

உக்ரேனை ரஷ்யா சிறுபான்மை இனமக்களை போட்டு வெளுத்த நேரம், ரஷ்யாவில் இருந்து எல்லாம் புரட்சிக்காரர்களுக்கு உதவ ரஷ்யமொழிபேசும் இரத்தங்கள் எல்லாம் தம் சகோதர ஒரே மொழிபேசும் இரத்தங்களுக்காக சண்டை பிடிக்க உக்ரேன் போனது…

எங்கட தமிழ்மொழிபேசும் இரத்த உறவுகள் உலகத்தமிழர்கள்..? 

மற்றது மச்சான் எங்களுக்கு, குறிப்பாக இந்த புலம்பெயர்ந்த தமிழருக்கு வெள்ளைத்தோல் மோக அடிமை விசுவாசம் ரெம்ப அதிகம் மச்சான்.

இங்கு பரம்பரையா வாழுற வெள்ளைக்காரனே தங்கட அரசுகள் ஈராக் ஈரான் ஆப்கானிஸ்தான் பாலஸ்தீனம் எண்டு உலகம்பூரா செய்யும் அநியாயங்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடும்போது வெள்ளைக்காற இனவாதிக்கே வாந்தி வாற அளவுக்கு மேற்குலகின் அநியாயங்களுக்கு முட்டுகுடுத்து எழுதுகிறார்கள்டா மச்சான்..

நாங்கள் ஒடுக்கப்படும் இனத்து மக்கள் எண்டால், உலகம் எங்கும் ஏழைநாடுகளை ஒடுக்கும் மேற்குலகுக்கு எப்படி மச்சான் முட்டு குடுக்க முடியும்..? எங்கள் சுயநலனுக்காக எப்படி மச்சான் மேற்குலகின் அநியாயங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு முட்டுகுடுப்பது..?  

ஆனால் நாங்கள்தான் மந்தைகள் ஆச்சே மச்சான். எங்களுக்கு சுய புத்தியும் இல்லை. சொல் புத்தியும் இல்லை…

சரி மச்சான் கனக்க எழுதி போட்டன். 

அடுத்த முறை எழுத கிடைத்தால் - அதுவரை,

நட்புடன்,

படான்ஸ்..

(யாவும் கற்பனையாக இருக்கட்டும்)

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

😂 சுயமா எழுத தெரியாட்டிக்கி இது தான் பிரச்சினை.

அடுத்தவன் கற்பனையை ஆட்டையை போடுவது. ஆட்டுக்குள்ள வந்து மாட்டை போடுவது...🤣
"டிக் டொக் டிக்கிலோனாக்கள்" அசட்டுத்தனம் பெரும் அவஸ்தை தான் பாருங்கோ.
~~ இது கற்பனை அல்ல நிஜம் ~~ !!! 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ரஸ்யாகாரன் ரேடாரால கண்டுபுடிச்சு அழிக்கேலாத ballistic missiles இல அணுகுண்டை பூட்டி அடிச்சதில லணடனிலையும் அமெரிக்காவிலையும் சரியான சேதம்..

யுகே ஆச்சு
ஐரோபபா ஆச்சு
ரசியா ஆச்சு

ஏனப்பா சும்மா இருக்கிற அமெரிக்காவை இழுக்கிறீங்க.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

👏🏻 ஆகா…. உடான்ஸ் சாமியாருக்கு, “நொங்கு” எடுக்க வந்த,
படான்ஸ் சாமியாரின் ஆச்சிரமத்துக்கு… இராணுவ பாதுகாப்பு போடுங்க. 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ஈழப்பிரியன் said:

யுகே ஆச்சு
ஐரோபபா ஆச்சு
ரசியா ஆச்சு

ஏனப்பா சும்மா இருக்கிற அமெரிக்காவை இழுக்கிறீங்க.

யோவ்…. சும்மா, இருக்கிற அமெரிக்காவோ….
இவ்வளவு பிரச்சினையும்… அமெரிக்காவாலைதான் வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

😂 சுயமா எழுத தெரியாட்டிக்கி இது தான் பிரச்சினை.

அடுத்தவன் கற்பனையை ஆட்டையை போடுவது. ஆட்டுக்குள்ள வந்து மாட்டை போடுவது...🤣
"டிக் டொக் டிக்கிலோனாக்கள்" அசட்டுத்தனம் பெரும் அவஸ்தை தான் பாருங்கோ.
~~ இது கற்பனை அல்ல நிஜம் ~~ !!! 

""மற்றது மச்சான் எங்களுக்கு, குறிப்பாக இந்த புலம்பெயர்ந்த தமிழருக்கு வெள்ளைத்தோல் மோகஅடிமை விசுவாசம் ரெம்ப அதிகம் மச்சான்.""

இதை சீரணிக்கிறது கஸ்ரம்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

""மற்றது மச்சான் எங்களுக்கு, குறிப்பாக இந்த புலம்பெயர்ந்த தமிழருக்கு வெள்ளைத்தோல் மோகஅடிமை விசுவாசம் ரெம்ப அதிகம் மச்சான்.""

இதை சீரணிக்கிறது கஸ்ரம்தான். 

 ஓம் மச்சான்... புட்டின் ஆபிரிக்கா காட்டுக்குள்ள பிறந்த கருப்பு சொக்கத்தங்கம். என்டபடியால  நாங்கள் புலம்பெயர்ஸ் எல்லாம் அவருக்கு பின்னால அணிவகுக்கிறம். மற்றது நாங்கள் அசைலம் அடிக்கேக்க...அடிக்கும் முதல்ல...  ஓடோடி வந்து கேஸ் அக்செப்ட் பண்ணி எங்களை ஆப்பிரிக்காவில அந்த மாதிரி வாழ வச்ச மனிசன். நான் செய்யிற தொழில், அடிக்கிற கோட்டம் எல்லாம் கருவல்ஸ் புட்டின்  தந்த வரம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

யோவ்…. சும்மா, இருக்கிற அமெரிக்காவோ….
இவ்வளவு பிரச்சினையும்… அமெரிக்காவாலைதான் வந்தது.

போரைத் தீவிரமாக்கும் முயற்சிக்கு
ஐரோப்பா அடிபணிந்துவிட கூடாது 

பைடனின் போலந்துப் பேருரைக்கு
எதிராக மக்ரோன் ஆட்சேபக்கருத்து

போரை மேலும் தீவிரமாக்கத் தூண்டு
கின்ற "செயல்கள்", "வார்த்தைகள்" தவிர்க்கப்பட வேண்டும் என்று அதிபர் மக்ரோன் கூறியிருக்கிறார். ரஷ்ய அதி
பர் புடினை "சர்வாதிகாரி""கசாப்புக்கடை
க்காரர் "என்று வர்ணித்து ஜோ பைடன்
போலந்து நாட்டில் கூறிய வார்த்தைக
ளுக்கு எதிராகவே மக்ரோன் இவ்வாறு
கருத்து வெளியிட்டிருக்கிறார்.

" இதுபோன்ற வார்த்தைகளை நான்
பயன்படுத்தப் போவதில்லை. ஏனெ
னில் நான் புடினோடு தொடர்ந்தும்
பேச்சுக்களில் ஈடுபட்டுவருகிறேன்.."
என்றும் அவர் கூறியிருக்கிறார்.

"உக்ரைனில் ரஷ்யா தொடங்கியுள்ள போரை நாங்கள் போருக்குச் செல்லா மலேயே நிறுத்த விரும்புகிறோம். இதுவே எங்கள் குறிக்கோள்.நாம்
அதைச் செய்ய விரும்பினால், நமது வார்த்தைகளையோ செயலையோ தீவிரமாக்கக்கூடாது... "

 "ஐரோப்பியர்கள் சில விரிவாக்கங்
களுக்கு அடிபணியக் கூடாது.நமது புவியியல் மற்றும் நமது வரலாற்றை மறந்துவிடக் கூடாது. நாங்கள் ரஷ்ய மக்களுடன் போரில் ஈடுபடவில்லை" என்று அவர் வலியுறுத்தினார்,

" ஐரோப்பா இனிமேலும் மொஸ்கோவிற்
கும் வோஷிங்டனுக்கும் இடையிலான
பனிப் போர்க் காலச் சூழ்நிலைக்குள்
இருக்கப் போவதில்லை "-என்பதையும்
மக்ரோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

போலந்து தலைநகர் வார்ஸோவில்
ஜே பைடன் ஆற்றிய பேருரையில்
புடினின் அதிகாரத்தை நேரடியாகவும்
தகாத வார்தைகளாலும்" உணர்ச்சிவசப்
பட்டுச்" சாடியுள்ளார் என்று சர்வதேச
அவதானிகள் கருதுகின்றனர். அரசியல்
படைபலம், பொருளாதார நிலைகளில்
பார்த்தால் அமெரிக்க அதிபர் இவ்வாறு
தனக்கு நிகரற்ற ரஷ்யா மீது கருத்துக்
களால் தாக்குவதற்கு அருகதையுடை
யவர் என்று வேறு சில கொள்கை வகுப்
பாளர்கள் கூறுகின்றனர்.

புடினின் கோபத்தைக் கிளறாமல் அவரை
அணுகிப் போரை முடிவுக்குக் கொண்டு
வர விரும்புகின்ற ஐரோப்பியத் தலைவ
ரான மக்ரோனை அமெரிக்காவின் போர்
விரிவாக்கப் பேச்சுகள் பொறுமையிழக்
கச் செய்துள்ளன. புடினுடன் தொடர்பைப்
பேணக் கூடிய ஒரே தலைவராகவும் புடின் செவிமடுக்கக் கூடிய குரலுடைய
ஒரே நண்பராகவும் விளங்கும் மக்ரோன்
ஐரோப்பாவின் பாதுகாப்புத் தொடர்பான
"யதார்த்த நோக்கத்தில்" மொஸ்கோவை
வெளியே விலக்கி வைக்க விரும்பாதவர்.
தார்மீக ரீதியில் நேட்டோவுக்கு ஆதரவா
கச் செயற்பட்டாலும் புடினோடு சமாதான
முறையில் இணக்கம் காண்பதிலேயே
மக்ரோன் கவனம் செலுத்திவருகிறார். 
போருக்கு முன்னரும் பின்னருமான
அவரது பல செயற்பாடுகள் இதனையே
வெளிப்படுத்துவதாக அவதானிகள்
சுட்டிக்காட்டுகின்றனர்.
-------------------------------------------------------------------
             -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                                 28-03-2022

https://www.facebook.com/1328781225/posts/10228838670214750/?d=n

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

பிரான்ஸ் அதிபர் மக்ரோனின் அணுகுமுறை… சரியான நகர்வாகவே தெரிகின்றது.
ஐரோப்பா…  அமெரிக்காவின் பின்னால் போவதை, நிறுத்தி…
சுய பாதையை தீர்மானிக்க வேண்டும்.
அதில்… ரஷ்யாவையும் இணைப்பதில் தவறே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

😂 சுயமா எழுத தெரியாட்டிக்கி இது தான் பிரச்சினை.

அடுத்தவன் கற்பனையை ஆட்டையை போடுவது. ஆட்டுக்குள்ள வந்து மாட்டை போடுவது...🤣
"டிக் டொக் டிக்கிலோனாக்கள்" அசட்டுத்தனம் பெரும் அவஸ்தை தான் பாருங்கோ.
~~ இது கற்பனை அல்ல நிஜம் ~~ !!! 

அதுவொரு பதில் கடிதம். 

நீங்கள் ஒருவருக்கு பதில்கடிதம் எழுதுவதென்றால் எப்படி எழுதுவீர்கள்?

மனதில் வன்மத்தை வளர விட்டால் ஆசிரியரிடம் கற்றது கூட ஆட்டைய போட்டது மாதிரித்தான் தெரியும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாரை எப்போ சந்தித்தார் என்ன தான் சாதித்தார் என்பதைவிட  இதனால் ஏதோ கோடிக் கணக்காக பணம் வாங்கி கோடீஸ்வரனாகி விட்டாரோ? இல்லையே. ஆற்றைத் தோண்டுறான். மலையை தோண்டி விற்கிறான் இப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்க.மற்றவர்களுடன் இவரையும் சேர்த்து விடுகிறோம். மற்றும்படி நீங்கள் சொல்லும் குற்றச் சாட்டுகள் எல்லாம் தமிழ் நாட்டில் ஒன்றுமே இல்லை.
    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.