Jump to content

புட்டினும் புதுமாத்தளனும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

நீங்களும் போனால் - சமையல் குறிப்பு எழுதுறவை கதி அதோ கதிதான்🤣.

விட்டான் வெடி பார்......😂

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • Replies 57
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

காலம்: டிசம்பர் 2026 இடம்: வெசாயில்ஸ், பிரான்சு அன்பு நண்பன் அமுதனுக்கு, உன் பால்ய நண்பன் உடான்ஸ்சாமியார் எழுதிக்கொள்வது. மச்சான் இங்க இப்ப நிலைமை ரொம்ப மோசமடா. ரஸ்யாகாரன் போல

goshan_che

புட்டினும் புதுமாத்தளனும் II காலம்: புத்தாண்டு தினம் 2027 இடம்: பதுங்கு குழியாக மாறிய பாரிசின் சிறுநீர் நாற்றம் எடுக்கும் ஒரு நிலக்கீழ் இரயில் நிலையம்.   மச்சான் அமுதன், உன் க

தமிழ் சிறி

உக்ரைனிலை ஒருத்தன்... ரஷ்யாவிடம் இருந்து உக்ரைனை காக்க,  தன்னை வெல்ல வைக்கச் சொல்லி...  வாக்கு வாங்கி, வென்று... சும்மா இருக்க ஏலாமல்... வாயை குடுத்து,  உக்ரைனை... சல்லி, சல்லியாக நொருக்க  வைத்த

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2022 at 08:26, goshan_che said:

நாளை மறுநாள் பிரான்ஸ் அகதியளை ஏத்தி கொண்டு ஒரு கப்பல் மார்சேயில் இருந்துசோமாலியா போகுதாம். பாப்பம் இடம் கிடைத்தால் சோமாலியாவில் இருந்து கடிதம் போடுறன்

நகைச்சுவையாக எழுதினாலும் அதிலுள்ள கருத்துகள் இன்னமும் உறைக்கவில்லை என்றே நினைக்கிறேன்.. 

அது போகட்டும் சோமாலியாவில் நிலமைகள் எப்படி என அறிய ஆவல்.. 😊

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/3/2022 at 11:34, Kapithan said:

“You are either with us or against us”நினைவிற்கு வந்து தொலைக்கிறது. 

நீங்கள் புடினுக்கும் இரஸ்யாவுக்கும் ஏன் எதிராக இருக்கிறீர்கள் ? 

நீங்கள் மேற்குலகுக்கு ஏன் ஆதரவாக இருக்கிறீர்கள் ? 

விளக்கமாகக் கூற முடியுமா ? 

சரி அப்படியே உங்களின் கருத்துப்படி ரஸ்ஸியாவை ஆதரிப்பதன் மூலம் தமிழருக்கு என்ன நன்மை என்பதை விளக்கமுடியுமா. ஐநாவில் இலங்கையை காப்பவர்கள் பட்டியல் உங்களிடம் இருக்கிறதா

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ragaa said:

சரி அப்படியே உங்களின் கருத்துப்படி ரஸ்ஸியாவை ஆதரிப்பதன் மூலம் தமிழருக்கு என்ன நன்மை என்பதை விளக்கமுடியுமா. ஐநாவில் இலங்கையை காப்பவர்கள் பட்டியல் உங்களிடம் இருக்கிறதா

ரஸ்யாவை ஆதரிக்கும்படி யார் கேட்டார்கள் ?

உண்மையான தகவல்களை / நம்பத்தகுந்த தகவல்களை, பக்கச் சார்பின்றி கூறும்படி கேட்பது  ஒருபக்கத்திற்கு எதிரானதாகவோ அல்லது மறுபக்கத்திற்கு சார்பானதாகவோ கொள்ளவேண்டிய அவசியமில்லை. 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

புட்டினும் புதுமாத்தளனும் - இறுதிப்பாகம் 

இடம் - அடிஸ் அபாபா

காலம் - நல்ல காலம் இல்லை

அன்பு நண்பன் அமுதனுக்கு,

உடான்ஸ் சாமியார் எழுதி கொள்வது.

மச்சான், போன முறை எழுதும் போது சோமாலியா போறன் எண்டு எல்லே எழுதினான் மச்சான், ஆனால் உந்த ஏஜென்சிகாரன் படுபாவி எத்தியோப்பாவில இறக்கி விட்டுட்டு எஸ்சாய்யிட்டான் மச்சான்.

ஆனால் எத்தியோப்பியா எண்டதும் நாங்கள் குறைவா நினைச்சது சரியான பிழை மச்சான் - இந்த பகுதிக்குள் வரும் ரிப்ட் சமவெளிதான் மனித நாகரிகத்தின் தொட்டிலாம் மச்சான். அது மட்டும் இல்லாமல் அபிசினியா எண்டு ஒரு பெரும் சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆண்ட மக்கள் கூட்டம் மச்சான் இவங்கள். ஆரம்பகால முஸ்லீம்கள் அரேபியாவில் இருந்து துரத்து பட்டு அகதியா வந்த போது அடைக்கலம் கொடுத்த செல்வம் கொழித்த கிறிஸ்தவ நாடும் கூட.

பார் மச்சான் நிலமையை இப்ப - பஞ்சம் எண்டதுமே நினைவுக்கு வரும் ஒரு இனமாக மாறிப்போட்டுது.

கிட்டதட்ட எங்கட கதையும் இது மாரித்தானே மச்சான்?

ஆனாலும் மனசை விடாத மச்சான், கீழ போறது எல்லாம் மேல வரும். ஒவ்வொரு அஸ்தமனத்தின் பின்பும் ஒரு உதயம் வந்தே தீரும். இடையில் வரும் இரவுகளை மெழுகுதிரி கொண்டு கடப்பதுதான் புத்திசாலித்தனம்.

சரியடா மச்சான், கனக்க எழுத மனமில்லை. 

இந்த கடிதம் கொண்டுவாற சேவையும் மாசகடைசியோடு நிக்கப் போதாம். இனிமேல் நான் கடிதம் போடுறது சந்தேகம்தான்.

சந்தர்ப்பம் கிடைத்தால் மீண்டும் எழுதுறன்.

பின்ன வரட்டே.

என்றென்றும் நட்புடன்.

உடான்ஸ் சாமியார்

 

 

Edited by goshan_che
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

உடான்ஸ் சாமியார் எழுதி கொள்வது.

நீ உருட்டுமா உன் நல்ல மனசுக்கு நீதான் ஜெயிப்ப....🤣

Edited by குமாரசாமி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

, போன முறை எழுதும் போது சோமாலியா போறன் எண்டு எல்லே எழுதினான் மச்சான், ஆனால் உந்த ஏஜென்சிகாரன் படுபாவி எத்தியோப்பாவில இறக்கி விட்டுட்டு எஸ்சாய்யிட்டான் மச்சான்.

நடுக்கடலில விடாமல் பத்திரமாக எதியோப்பாவில இறக்கிவிட்டுவிட்டதற்கு ஏஜென்சிக்காரனுக்கு ஒரு நன்றி சொல்லவேண்டும் இல்லையோ??

Anyway, உங்களைப் போன்றவர்களின் கருத்துகளை அறிய சந்தர்ப்பம் கிடைத்தது சந்தோஷமே.. 

நன்றி Goshan!!

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நடுக்கடலில விடாமல் பத்திரமாக எதியோப்பாவில இறக்கிவிட்டுவிட்டதற்கு ஏஜென்சிக்காரனுக்கு ஒரு நன்றி சொல்லவேண்டும் இல்லையோ??

Anyway, உங்களைப் போன்றவர்களின் கருத்துகளை அறிய சந்தர்ப்பம் கிடைத்தது சந்தோஷமே.. 

நன்றி Goshan!!

 

உங்கள் நட்புக்கும் நன்றி பிரபா🙏🏾.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.