Jump to content

பிரித்தானிய மக்களுக்கு அவசர அறிவிப்பு! - £20 - £50 நோட்டுகள் செல்லுபடியாகும் கால எல்லை நிர்ணயம்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் தற்போது பாவனையில் இருக்கும் £20 மற்றும் £50 நோட்டுகள் செப்டம்பர் 30ம் திகதிக்கு பின்னர் செல்லுபடியாகாது என பேங் ஒப் இங்கிலாந்து (The Bank of England) அறிவித்துள்ளது.

ஜே.எம்.டபிள்யூ டர்னர் மற்றும் கணிதவியலாளர் ஆலன் டூரிங் ஆகியோரைக் கொண்ட காகிதத் தாள்களுக்குப் பதிலாக நீடித்து நிலைத்திருக்கும் பிளாஸ்டிக் நோட்டுகளை புழக்கத்திற்கு கொண்டுவர பேங் ஒப் இங்கிலாந்து (The Bank of England) தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், தங்களின் காகித £20 மற்றும் £50 நோட்டுகளை செலவழிக்க அல்லது வங்கியில் வைப்பிலிடுமாறு பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 17 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள காகித நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் முதல், பிரித்தானிய வங்கிக் கணக்கு உள்ளவர்கள் தங்கள் கணக்கில் காகித நோட்டுகளை வைப்பிலிட முடியும்.

சில தபால் நிலையங்கள் பழைய நோட்டுகளை பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணமாகவோ அல்லது தபால் சேவை மூலம் அணுகப்பட்ட கணக்கில் வைப்புத்தொகையாகவோ ஏற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் தலைமை காசாளர் சாரா ஜோன் கருத்து வெளியிடுகையில், “நோட்டுகள் காகிதத்தில் இருந்து பிளாஸ்டிக்குக்கு மாற்றப்படுகின்றன. "இந்த வடிவமைப்புகள் போலி நோட்டுகளை உருவாக்குவது மிகவும் கடினம், அதே சமயம் அதிக நீடித்திருக்கும்" என்று கூறியுள்ளார்.

https://tamilwin.com/article/six-month-warning-over-20-and-50-paper-notes-1648586389

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எடியே மச்சாள் கேட்டியேடி சேதி.......நீ கள்ளவேலை செய்து கட்டுக்கட்டாய் வைச்சிருக்கிற நோட்டுக்கள் செல்லாதாமடி.....கொண்டு வாடி.....என்னட்ட தாடி.....நான் ஈரோவிலை மாத்தி வைச்சிருக்கிறன்......😂

 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

எடியே மச்சாள் கேட்டியேடி சேதி.......நீ கள்ளவேலை செய்து கட்டுக்கட்டாய் வைச்சிருக்கிற நோட்டுக்கள் செல்லாதாமடி.....கொண்டு வாடி.....என்னட்ட தாடி.....நான் ஈரோவிலை மாத்தி வைச்சிருக்கிறன்......😂

அவுஸில் காகித நோட்டுகள், நீண்ட காலமாகப் புழக்கத்தில் இல்லை…!

அப்பாடா, ஒரு விசயத்தில் ஐரோப்பாவைப் பின்னுக்குத் தள்ளியாச்சுது…!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புங்கையூரன் said:

அவுஸில் காகித நோட்டுகள், நீண்ட காலமாகப் புழக்கத்தில் இல்லை…!

அப்பாடா, ஒரு விசயத்தில் ஐரோப்பாவைப் பின்னுக்குத் தள்ளியாச்சுது…!

அப்ப ஒரு பியர் ரின் வாங்கிறதுக்கும் மட்டையை தள்ள வேண்டியதுதான்(50 சென்ற்) 😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இது போரிஸ்  வேணுமென்று செய்யும் வேலை  இம்முறை இவர்களுக்கு பலத்த அடி விழும் காரணம் இணைய பிட் கொயின் .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அப்ப ஒரு பியர் ரின் வாங்கிறதுக்கும் மட்டையை தள்ள வேண்டியதுதான்(50 சென்ற்) 😁

பிளாஸ்ரிக் நோட்டுகள் இருக்குது  தானே..!😊

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இது போரிஸ்  வேணுமென்று செய்யும் வேலை  இம்முறை இவர்களுக்கு பலத்த அடி விழும் காரணம் இணைய பிட் கொயின் .

இது எனக்கு புரியவில்லை, ஏன் ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நீர்வேலியான் said:

இது எனக்கு புரியவில்லை, ஏன் ?

கணக்கில் வராத கறுப்பு  பணத்தை பண நோட்டுகளா வைத்து இருக்கும் ரஷ்யன் அண்டர்கிரவுண்ட் மாபியா கூட்டங்கள் லண்டனில் உள்ளன.அதைவிட இங்குள்ள ரஷ்ய புட்டினுக்கு நெருக்கமான செல்வந்தர்களையும்  சட்ட ரீதியாக முடக்கியாயிற்று ஆனாலும் பண நோட்டுக்களாக அவர்களின் கறுப்பு பணம் பதுக்கி வைத்து இருக்கிறார்கள் ஏனென்றால் அவர்கள் எந்த கவலையும் இன்றி திரிகிறார்கள் என்று இங்குள்ள லோக்கல் பேப்பர் வயிறு எரிந்து எழுதி தள்ளுகினம் .இப்படி அறிவிப்பு வந்தால் அவற்றை வெள்ளையாக்கும் வேலை செய்யணும் ஒரே நாளில் முடியாத வேலை எப்படி என்றால் கடந்த முறை 50 பவுன் தாளுக்கு இதே போல் செல்லுபடியாகாது என்று அறிவிக்க  கால அவகாசம் குறைவு இங்குள்ள தமிழர் மொபைல் கொம்பனி வெள்ளையாக்கும் வேலைகளை செய்ய முடியாமல் லட்சக்கணக்கான  50 பவுன் கட்டுகளை வீதிகளில் எறிந்து விட்டு ஓடியதும் உண்டு.ஆனால் இம்முறை பிட் கொயின் பலரை காப்பாற்றி விடும் என்கிறார்கள் பார்ப்பம் என்ன நடக்குது என்று .

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

விளக்கத்துக்கு நன்றி, இதற்குப்பின்னால் இவ்வளவு விஷயம் இருக்குதா! ரஷியன் மாபியாவை பிடிப்பதுக்குத்தான் இந்த முறை இதை செய்கிறார்களா? 

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.