Jump to content

கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று,  இந்திய இராணுவ விமானம். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ராணுவம் இலங்கை சென்றதாக பரவும் வதந்தி!

Thumbnail-Post-No-07-PRAVEEN.png?resize=640%2C360&ssl=1

தகவலின் விவரம்:

இலங்கையில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு பிரச்னையை சமாளிக்க இந்திய ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

 

image-10.png?resize=640%2C483&ssl=1

பிரதமர் மோடி புகைப்படத்துடன் கூடிய பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “கொழும்பில் தரையிறங்கிய மூன்று இந்திய இராணுவ விமானம்  நேற்று நள்ளிரவு, ஸ்ரீலங்காவில்  ஏற்பட்ட  அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்தியா அதன்  நட்பு நாடான இலங்கையை, பாதுகாக்கும் நோக்கில் டெல்லி இந்திய விமானப் படைத் தளத்தில் இருந்து  180 இந்திய இராணுவ வீரர்களுடன் ஒரு விமானமும்  பஞ்சாப் ரெஜிமெண்டில் இருந்து 215 இராணுவ வீரர்களுடன் ஒரு விமானமும் தமிழ்நாடு, தாம்பரம்  இந்திய இராணுவத் தளத்திலிருந்து மெட்றாஸ் ரெஜிமென்ட் படையை சேர்ந்த 200  இராணுவ வீரர்களும், முதல் கட்டமாக… கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையம் வந்து இறங்கி உள்ளார்கள்.

இன்று இரவும் மீண்டும் வன்முறை பெரிய அளவில், தலை தூக்கும்  என கருதப் படுவதால் இலங்கையின் வேண்டு கோளுக்கு இணங்க இவ் அவசர உதவி செய்யப் பட்டதாக  டெல்லியில் இருந்து தெரிவிக்கப் படுகின்றது. 

அத்துடன் இன்று மாலை,  இந்திய போர் கப்பலான “விக்ரமாதித்யா”,4500 இராணுவ வீரர்களை ஏற்றிக்  கொண்டு கொழும்பு துறை முகத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக, இந்திய தூதரகத்தை சேர்ந்த, அதிகாரி ஒருவர்  தெரிவித்ததாக தகவல் ஒரே நாளில் ஆறாயிரம்  இந்திய இராணுவம், இலங்கைக்கு வந்துள்ளதை இலங்கையின் இறையாண்மைக்கு ஏற்பட்ட இழுக்கு என்று, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள் மிகுந்த கண்டனத்தை அரசுக்கு தெரிவித்ததுடன், கோத்தபாயாவை உடனடியாக பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை குமரி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஏப்ரல் 4ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதைப் பதிவிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:

இலங்கையில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொருட்களின் விலை அதிகரித்தது விட்டது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை சமாளிக்க இந்திய ராணுவம் இலங்கைக்கு வந்ததாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் எந்த பிரிவிலிருந்து எத்தனை வீரர்கள் என்றார்கள் என்று துல்லியமாகச் சொன்னது போன்று பதிவிடப்பட்டுள்ளது. அனைத்துக்கும் மேலாக விமானந்தாங்கி கப்பலான விக்ரமாதித்யா இலங்கை செல்கிறது என்று கூறியது சந்தேகத்தை வலுப்படுத்தியது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பொருளாதார உதவிகளை அந்நாட்டு அரசு கேட்டுள்ளது. ராணுவ உதவி கேட்டதாக கூறியிருப்பது நம்பும் வகையில் இல்லை. எனவே இந்த பதிவு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம்.

இந்திய ராணுவம் இலங்கையில் தரையிறங்கினால் அது மிகப்பெரிய செய்தியாக வெளியாகி இருக்கும். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. இந்திய ராணுவம் இலங்கை என்றது என்று பாதுகாப்புத் துறையிலிருந்து எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. 

image-9.png?resize=640%2C490&ssl=1

எனவே, நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இலங்கை பிரிவைத் தொடர்புகொண்டு இந்திய ராணுவம் இலங்கைக்கு வந்துள்ளதா என்று விசாரிக்கும் படி கேட்டுக்கொண்டோம். அப்போது அவர்கள், “இந்த தகவல் தவறானது. இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொண்டு நாங்கள் உறுதி செய்துவிட்டோம். இலங்கைக்கு இந்திய ராணுவம் வந்ததாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. அந்த படம் கடந்த ஆண்டு இந்தியா – இலங்கை ராணுவ பயிற்சியின் போது எடுக்கப்பட்டது என்பதும் உறுதி செய்துள்ளோம். மேலும், இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகமும் இந்த தகவலை மறுத்துள்ளது” என்று கூறினர். மேலும், இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட பத்திரிகை செய்தியின் இணைப்பையும் நமக்கு வழங்கினர்.

image-8.png?resize=640%2C506&ssl=1

உண்மைப் பதிவைக் காண: defence.lk I Archive 1 I army.lk I Archive 2

அதில், “இந்திய இராணுவத்தைச் சேர்ந்த எவரும்  நாட்டுக்குள் நுழைய வில்லை  எனவும் இது தொடர்பில் சில இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்டு வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

இவ்வாறு பொய்யாக பரப்பப்பட்டு வரும் செய்திகளில் சித்தரிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள், கடந்த ஆண்டு நடைபெற்ற ‘மித்ர சக்தி’ என்று அழைக்கப்படும் இந்திய-இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சியின் போது வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ புகைப்படங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்” என்று இருந்தது. மித்ர சக்தி என்ற பெயரில் இந்திய – இலங்கை கூட்டு பயிற்சி நடந்தது தொடர்பான செய்தியை தேடினோம். 2021ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி இது தொடர்பான செய்தியை இலங்கை தரைப்படை வெளியிட்டிருந்தது.

இதன் மூலம் இந்திய ராணுவம் இலங்கை சென்றது என்று பகிரப்படும் செய்தி தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இலங்கைக்கு இந்திய ராணுவம் அனுப்பப்பட்டுள்ளது என்று பரவும் செய்தி தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

https://tamil.factcrescendo.com/india-not-sent-army-to-sri-lanka/

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 135
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

image-3.png

கொழும்பில் தரையிறங்கிய மூன்று இந்திய இராணுவ விமானம்; உண்மை என்ன தெரியுமா? 

INTRO :
இலங்கையில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்ட இந்திய இராணுவம் இலங்கை வந்தடைந்துள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

சமூகவலைத்தளங்களில் ”நம் நோக்கம் மக்களை பாதுகாப்பதாக மட்டுமே இருக்கவேண்டும் என விரும்புகிறோம் …. ”

” கொழும்பில் தரையிறங்கிய மூன்று இந்திய இராணுவ விமானம். நேற்று நள்ளிரவு, ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்தியா அதன் நட்பு நாடான இலங்கையை பாதுகாக்கும் நோக்கில் “ என இம் மாதம் 01 ஆம் திகதி (01.04.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

அதில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்ளை நாம் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, கடந்த ஆண்டு நடைபெற்ற ‘மித்ர சக்தி’ என்று அழைக்கப்படும் இந்திய-இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சியின் போது வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ புகைப்படங்கள் கொண்டு சித்திரிக்கப்பட்டுள்ள தகவல் என கண்டறியப்பட்டுள்ளது.

எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், கொழும்பில் தரையிறங்கிய மூன்று இந்திய இராணுவ விமானம் என்று பரவும்  செய்தி போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

https://srilanka.factcrescendo.com/tamil/fact-check-indian-army-plane-landed-in-colombo/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

site_logo

Sri Lanka dismisses reports Indian troops in country to help maintain law and order

Secretary, Defense Ministry, Kamal Gunaratne told news personnel that local troops were capable of handling any national security emergency and no such aid from outside was required.

flip.png?w=50&dpr=1.0fb.png?w=50&dpr=1.0twitter.png?w=50&dpr=1.0mail.png?w=50&dpr=1.0telegram_share

Published: 02nd April 2022 09:51 PM  |   Last Updated: 02nd April 2022 09:51 PM  |  A+A-

By PTI

COLOMBO: The Sri Lankan Defence Ministry on Saturday rejected social media speculation that Indian Armed troops had arrived in the island nation to help maintain law and order, amidst growing public protests on rising prices and scarcity of essential commodities.

Secretary, Defense Ministry, Kamal Gunaratne told news personnel that local troops were capable of handling any national security emergency and no such aid from outside was required.

 

 

Gunaratne said the photographs which have started to trend on social media are from a year ago when Indian troops conducted a joint security exercise with Sri Lanka.

Separately, the Indian High Commission also issued a statement categorically dismissing the reports.

"High Commission (of India) strongly denies blatantly false and completely baseless reports in a section of media that India is dispatching its soldiers to Sri Lanka. The High Commission also condemns such irresponsible reporting and expects the concerned to desist from spreading rumours," the Indian commission said.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரல் பூல் செய்தி அது வெளியிடப்பட்ட நேரத்தில் உள்ள சூழ்நிலையால் நம்பவேண்டியதாகிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக மொத்தத்தில்,  இலங்கை அரசாங்கம் செய்தியின் மூலத்தை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. 😀

அதற்கும் வேறு நாடுகளின் உதவி தேவையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vaasi said:

ஆக மொத்தத்தில்,  இலங்கை அரசாங்கம் செய்தியின் மூலத்தை இதுவரை கண்டுபிடிக்கவில்லை

கண்டு பிடித்திருப்பார்கள் என நினைக்கின்றேன்.
அந்த மூலத்தை வெளிப்படுத்தி பிரபல்யமாக்க விரும்பமாட்டார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

The High Commission also condemns such irresponsible reporting and expects the concerned to desist from spreading rumours," the Indian commission said.

இவிங்க சொல்றதை இப்படி இல்லை இல்லை என்று குத்தி முறிவதை பார்த்தால் உண்மையிலே தரையிறங்கும் ஐடியா உள்ளது போல் உள்ளது .😃

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

இவிங்க சொல்றதை இப்படி இல்லை இல்லை என்று குத்தி முறிவதை பார்த்தால் உண்மையிலே தரையிறங்கும் ஐடியா உள்ளது போல் உள்ளது .😃

அப்பிடியேண்டால்  எங்கடை தமிழ்சிறி ஒரு இராணுவ/அரசியல் அஷ்டவதானி :cool:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பெருமாள் said:

இவிங்க சொல்றதை இப்படி இல்லை இல்லை என்று குத்தி முறிவதை பார்த்தால் உண்மையிலே தரையிறங்கும் ஐடியா உள்ளது போல் உள்ளது .😃

தரையிறங்குவார்கள் அது வடக்கு கிழக்கில். தென்பகுதியில் அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

அப்பிடியேண்டால்  எங்கடை தமிழ்சிறி ஒரு இராணுவ/அரசியல் அஷ்டவதானி :cool:

இலங்கை வங்குரோத்தானபின் இலங்கைக்கு இராணுவ, அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுப்பதற்கு இராணுவம் இலங்கையிலிருப்பது அவர்களுக்கு மேலதிக சாதகம் அத்னால் தமிழ்சிறியின் செய்தி உண்மையாவதற்கு சந்தர்ப்ப சாத்தியம் அதிகம் அதனை முன்னரே வெளியிட்டமையால் ஜூலியன் அசாஞ் மாதிரி நிலமை தமிழ்சிறிக்கு வராமலிருக்க வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, vasee said:

இலங்கை வங்குரோத்தானபின் இலங்கைக்கு இராணுவ, அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுப்பதற்கு இராணுவம் இலங்கையிலிருப்பது அவர்களுக்கு மேலதிக சாதகம் அத்னால் தமிழ்சிறியின் செய்தி உண்மையாவதற்கு சந்தர்ப்ப சாத்தியம் அதிகம் அதனை முன்னரே வெளியிட்டமையால் ஜூலியன் அசாஞ் மாதிரி நிலமை தமிழ்சிறிக்கு வராமலிருக்க வேண்டும்.

சில நேரங்களில்: சில விடையங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் போவதும் நன்றே...

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.