Jump to content

கோட்டா அரசியலும் இருக்கும் கேள்விகளும்


Recommended Posts

GOTA  இலகுவில் பதவியை விட்டு இறங்குவார் என நான் நம்பவில்லை 
இராணுவ பலத்தை வைத்தாவது தனது பதவியை தொடர கூடும்.
கிடைக்கும் அயல்நாட்டு உதவிகளினால் அத்தியாவசிய பொருட்களின் விலை சிறிது  குறையுமாயின் சிங்கள மக்கள் தமது போராட்டத்தை கைவிட்டு விடுவார்கள் அல்லது காலம் கடத்தி கொண்டு செல்லும் போது போராடடம் தானாக நீர்த்து போயிடக்கூடும் ..

 

இந்த நிலையிலிருந்து மீண்டுவர குறைந்தது இலங்கைக்கு ஐந்து வருடங்களிற்கு மேலாக எடுக்கும் அடுத்து கைகாட்டக்கூடிய நம்பிக்கையான தலைவர்கள் சிங்களவர்களிடமும் இல்லை சஜித் ரணில் போன்றவர்களின் ஆளுமை திறன் என்பது இந்த பிரச்சினையிலிருந்து மீண்டுவர தக்க முடிவுகள் எடுக்க கூடியவர்களாக தெரியவில்லை ,
வேறு அரசாங்கம் மாறினாலும் இந்த நிலைமை குறுகிய காலம் நீடிக்கும் மக்களின் போராட்டம்கள் இல்லாமல் போகலாம் சிலவேளைகளில்.

 

இன்னொரு தேர்தலுக்கு ஆக வேண்டிய செலவுகளிற்கு பணம் எங்கிருந்து வர போகிறது அதும் மேலதிக கடனாக தானே பெற வேண்டும் 
தமிழ் மக்களில் வெளிநாட்டில உறவினர்களை கொண்டுள்ளோர்கள் ஓரளவு தாக்கு பிடிக்க கூடியதாக இருக்க மற்றையோர் கடுமையான வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொள்வார்கள் 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் நீங்கள் தந்த பல  (ஆதங்கமான, அறிவுபூர்வமான, யதார்த்தமான) நல்ல கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. 🙏
  

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Sasi_varnam said:

சரி அப்படியென்றால் ஏன் ரதி இந்தியாவுக்கும், சைனாவுக்கும் நிலத்தை தாரை வார்க்கிறார்கள்....

இவர்கள் நினைத்திருந்தால் , நாடு பொருளாதார வீழ்ச்சியை  நோக்கி செல்லும் ஆரம்ப கட்டத்திலையையே தடுத்திருக்கலாம் ...அவர்கள் அதை நினைத்து கூட பார்க்கவில்லை .
நாடு ,நாடாய் கடன் கேட்டு திரியிறதை விட்டுட்டு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடம் கடன் வாங்கி இருக்கலாம் ...ஏன் அதை அவர்கள் செய்ய நினைக்கவில்லை ..அவற்றிடம் கடன் வாங்கினால் அவர்களது நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும் ...இப்படி தான் செலவழிக்க வேண்டும் ...தமிழ் ,முஸ்லீம் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு இருக்க வேண்டும் போன்ற பல நிபந்தனைகள் காலக்கேடு கொடுத்து தான் கடன் கொடுப்பார்கள் ...அப்பவே கோத்தா உதை செய்திருந்தால் இதே சிங்கள மக்கள் அவருக்கு எதிராய் ஆர்ப்பாட்டம் செய்திருக்க கூடும் .
இவற்றினை பற்றி நன்கு அறிந்த பலர் இங்கு இருக்கினம் ...அவர்கள் தங்கள் கருத்தை சொல்லலாம் .
நான் சொல்ல வந்தது கோத்தா போன்றவர்கள் நாடு எப்படி தான் வீழ்ந்தாலும் தமிழனின் காலில் விழ கூடாது என்ற கொள்கை உடையவர்கள் ...2000க்கு பிறகு பிறந்த சிங்கள இளைய தலைமுறை மாற்றத்தை கொண்டு வர ஆரம்பித்து இருக்குது என்று சொல்கிறார்கள் ...பார்ப்போம் 
இந்தியா ,சீனா போன்ற நாடுகளுக்கு கொடுத்தால் அதை எப்படி மீட்பது என்று சிங்களவர்களுக்கு தெரியும் ...தமிழர்களிடம் போனால் மீட்க முடியுமா

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2022 at 07:43, vasee said:

எனது கருத்து இணைய தர்வுகளை எனது இடைனிலை பாடசாலை கல்வியறிவின் புரிதலின் அடிப்படையில் கூறப்படுவதால், எனது கருத்து தவறாக இருக்கலாம்.

இலங்கையில் பொருளாதார சரிவு (recession)ஏற்படும் எந்த அறிகுற்யும் தென்படவில்லை.

Business confidence and consumer confidence (Leading indicator) நல்ல நிலையில் உள்ளது அத்துடன் ஆண்டிறுதி (மார்கழி)GDP 3.5% என எதிவு கூறுகிறார்கள்.

இலங்கையின் தற்போதய பொருளாதார சிக்கல் அடிப்படையில் தீர்க்ககூடிய ஓரளவிற்கு இலகுவான பிரச்சினை, இலங்கையின் தற்போதய சிக்கல் Balance of Payment பாதகமாக உள்ளதால் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மொத்த தேசிய வருமானத்தில்

சுற்றுலாத்துறை 13%

உற்பத்திதுறை 17%

இந்த இரண்டு துறையும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால்தான் இந்த நிலை.

இலங்கையால் இந்த சிக்கலில் இருந்து இலகுவாக மீள முடியும்.

1. இலங்கை வங்குரோத்தாவதை என்ன விலை கொடுத்தேனும் தவிர்த்தல்

2. மொத்த தேசிய வருமானத்தில் 35% வீதம் இறக்குமதியில் செலவாகிறது அதில் வெறும் நாலில் ஒரு பங்கு மட்டும் முதலீட்டு செலவு மிகுதி நுகர்வு செலவு,நுகர்வு செலவில் அத்தியாவசியங்களை நிரல்படுத்தல்.

3. வெளிநாட்டு பயணங்களை கட்டுப்படுத்தல்.

4. மூடிய பொருளாதார கொள்கைக்கு அவசரப்பட்டு செல்லவேண்டிய அவசியமில்லை ஏனெல் இலங்கையின் கல்வியறிவுள்ள சனத்தொகை மிகப்பெரிய வளம் அதன் மூலம் சேவை துறை ஏற்றுமதிக்கு புதிய சந்தையை உருவாக்கலாம்.

இலங்கையில் நல்ல ஒரு அரசு உருவானால் இந்த சிக்கலை 1-6 வருடத்திற்குள் தீர்க்கலாம் என கருதுகிறேன்.

இலங்கையில் பெரும்பான்மையினரிடையே ஒரு பேரழிவு ஏற்படப்போகிறது எனும் எண்ணம் வரத்தொடங்கியுள்ளது ( மனிதாபிமான பிரச்சனைகளுக்கு மக்கள் அன்னிய செலாவணி தட்டுப்பாடால் முகம் கொடுக்கும் நிலை உள்ளதுதான்) இதன் மூலம் அவர்கள் சிந்தனையில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு சிறுபான்மையினர் அரசியல்வாதிகள் செய்வது போல (Scare campaign) அதாவது முன்பு தமிழருக்கும் உலகுக்கும் புலிகள்தான் தீர்வு திட்டங்களுக்கு தடை போடுகிறார்கள் என்று நம்பவைத்தை போல சிறுபான்மை மக்களின் உரிமைகளை வழங்குவதற்கு இந்த நிகழ்வை பயன்படுத்தலாம் என கருதுகிறேன்.

இலங்கை மத்திய வங்கி தரவுகளின் அடிப்படையிலேயே இலங்கை பொருளாதார சரிவு (recession) ஏற்படாது என தெரிவித்தேன், ஆனால் எவ்வாறு இலங்கையில் இன்றைய நிலையில் Business confidence and consumer confidence (Leading indicator) நல்ல நிலையில் இருக்கமுடியுமா?  என்ற சாதாரண் பொதறிவில்லாமல் இலங்கை மத்திய வங்கியின் தரவுகளை உண்மை என நினைத்து கருத்து பதிந்து விட்டேன், தவறுக்கு மன்னிக்கவும்.

Edited by vasee
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2022 at 10:56, ரதி said:

இவர்கள் நினைத்திருந்தால் , நாடு பொருளாதார வீழ்ச்சியை  நோக்கி செல்லும் ஆரம்ப கட்டத்திலையையே தடுத்திருக்கலாம் ...அவர்கள் அதை நினைத்து கூட பார்க்கவில்லை .
நாடு ,நாடாய் கடன் கேட்டு திரியிறதை விட்டுட்டு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடம் கடன் வாங்கி இருக்கலாம் ...ஏன் அதை அவர்கள் செய்ய நினைக்கவில்லை ..அவற்றிடம் கடன் வாங்கினால் அவர்களது நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும் ...இப்படி தான் செலவழிக்க வேண்டும் ...தமிழ் ,முஸ்லீம் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு இருக்க வேண்டும் போன்ற பல நிபந்தனைகள் காலக்கேடு கொடுத்து தான் கடன் கொடுப்பார்கள் ...அப்பவே கோத்தா உதை செய்திருந்தால் இதே சிங்கள மக்கள் அவருக்கு எதிராய் ஆர்ப்பாட்டம் செய்திருக்க கூடும் .

கேள்வியும் கேட்டு

பதிலும் எழுதியிருக்கிறீர்கள்.

On 6/4/2022 at 10:56, ரதி said:

இந்தியா ,சீனா போன்ற நாடுகளுக்கு கொடுத்தால் அதை எப்படி மீட்பது என்று சிங்களவர்களுக்கு தெரியும் ...தமிழர்களிடம் போனால் மீட்க முடியுமா

இதுதான் விழங்கவில்லை.

Link to comment
Share on other sites

On 6/4/2022 at 12:01, Sasi_varnam said:

இந்த திரியில் நீங்கள் தந்த பல  (ஆதங்கமான, அறிவுபூர்வமான, யதார்த்தமான) நல்ல கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. 🙏
  

கேள்விகளை  தொகுத்து எழுதிய சசிக்கு நன்றிகள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2022 at 00:58, கிருபன் said:

ஒரு சர்வதேச நிதியத்தை உருவாக்கி வடக்கு கிழக்கை வாங்க முயற்சிக்கலாம்!

 

இது நல்லதொரு ஐடியாதான்.

ஆனல் இதற்கு கிழக்கில் வாழும் முஸ்லீம்கள் சம்மதிப்பார்களா? 
ஹிஸ்புல்லவிடம் அரபு நாடு காசு நிறைந்துள்ளது அவன் தமிழர்கள் கேட்கும் விலையை விட அதிகம் கொடுத்து வாங்க தயாரகவுள்ளான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2022 at 03:18, ரதி said:

சிங்களவன், இதற்கு தான் உங்களுக்கு நாட்டை பிரிச்சு தர மாட்டன் என்டவன் 😀
 

எங்களுக்கு தந்தால் எங்களையும் முன்னேற்றி அவர்களுடைய இடங்களையும் முன்னேற்ற உதவலாம்.. ஆனால் அப்படி செய்ய அவர்களுடைய உணர்வில் ஊட்டப்பட்ட இனவாதம் விடமாட்டாது..அப்படி தராமல் செய்த பலனை அனுபவிக்கிறார்கள். அவ்வளவுதான். ஆனால் என்ன இவர்களோடு சேர்ந்து எங்களுக்கும் தண்டனை.. 

 

 

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, colomban said:

இது நல்லதொரு ஐடியாதான்.

ஆனல் இதற்கு கிழக்கில் வாழும் முஸ்லீம்கள் சம்மதிப்பார்களா? 
ஹிஸ்புல்லவிடம் அரபு நாடு காசு நிறைந்துள்ளது அவன் தமிழர்கள் கேட்கும் விலையை விட அதிகம் கொடுத்து வாங்க தயாரகவுள்ளான்

முஸ்லீம்களும் தமிழர்கள் தானே. தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள் தனி அலகு கேட்கின்றார்களா?
சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவர்களும் தமிழ் மொழி பேசும் கிறிஸ்தவர்களும் மொழி ரீதியாக வேறு பட்டுத்தானே நிற்கின்றார்கள்.
இலங்கையில் முஸ்லீம் ஒரு மதம் மட்டுமே. அது இனம் அல்ல. 👈

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎09‎-‎04‎-‎2022 at 15:25, பிரபா சிதம்பரநாதன் said:

எங்களுக்கு தந்தால் எங்களையும் முன்னேற்றி அவர்களுடைய இடங்களையும் முன்னேற்ற உதவலாம்.. ஆனால் அப்படி செய்ய அவர்களுடைய உணர்வில் ஊட்டப்பட்ட இனவாதம் விடமாட்டாது..அப்படி தராமல் செய்த பலனை அனுபவிக்கிறார்கள். அவ்வளவுதான். ஆனால் என்ன இவர்களோடு சேர்ந்து எங்களுக்கும் தண்டனை.. 

 

 

 

 

 

தந்தார்கள் என்றால் அவர்களை விட முன்னுக்கு போய் விடுவோம் என்ற பயம் இருக்குது ...எங்களுக்கு இருக்கும் மிக பெரிய மைனஸ் தமிழ்நாடு பக்கத்தில் இருப்பது தான் ...எங்களுக்கு பக்கத்தில் வட இந்தியாவோ அல்லது வேறு மொழி பேசும் மக்கள் அருகிலிருந்திருந்தால் , இலங்கை ஓரளவுக்கு இறங்கி வந்திருக்க கூடும் 
 

On ‎08‎-‎04‎-‎2022 at 01:57, ஈழப்பிரியன் said:

கேள்வியும் கேட்டு

பதிலும் எழுதியிருக்கிறீர்கள்.

இதுதான் விழங்கவில்லை.

தமிழர்களிடம் நிலத்தையோ ,இடத்தையோ கொடுத்தால் திரும்ப வாங்க முடியுமா அண்ணா?...அதை வைத்து கொண்டு மேலும் விஸ்தரிக்கவே பார்ப்பார்கள்.
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது தலைமுறை சிங்களவர்கள் மாற மாட்டார்கள் ....எமது பேர பிள்ளைகள் காலத்தில் மாற்றம் வர கூடும் .
இந்த போராட்டத்தில் சிங்களவர்களோடு சேர்ந்து முஸ்லீம்களும் போராடுகிறார்கள் ....இப்ப நடப்பது பொது பிரச்சனை ...அவர்கள் இப் போராட்டத்தில் வென்று ,கோத்தா கூட்டனியை பதவியை விட்டு துரத்தி நாட்டை ஓரளவுக்கு சுபீ ட்சமாக்குகிறார்கள் என்று வைத்து கொள்வோம் ....அதன் பின்னர் தமிழரும் இந்த நாட்டின் குடி மக்கள் என்று எந்த மூஞ்சியை வைத்து கொண்டு சொல்வார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

தந்தார்கள் என்றால் அவர்களை விட முன்னுக்கு போய் விடுவோம் என்ற பயம் இருக்குது ...எங்களுக்கு இருக்கும் மிக பெரிய மைனஸ் தமிழ்நாடு பக்கத்தில் இருப்பது தான் ...எங்களுக்கு பக்கத்தில் வட இந்தியாவோ அல்லது வேறு மொழி பேசும் மக்கள் அருகிலிருந்திருந்தால் , இலங்கை ஓரளவுக்கு இறங்கி வந்திருக்க கூடும் 

தமிழ்நாட்டுடன் சுமுகமாகத்தானே இருக்கின்றார்கள்.யாமிருக்க பயமேன் என்று வாக்கு கொடுத்திருப்பார்கள் அல்லவா?

Bild

ஒருவேளை தமிழ்நாடு என்றவுடன் சீமானை நினைத்து பயப்பிடுகின்றார்களோ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

 

 

ஒருவேளை தமிழ்நாடு என்றவுடன் சீமானை நினைத்து பயப்பிடுகின்றார்களோ

பகுடி விடாதீங்கோ அண்ணா

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.