-
Tell a friend
-
Similar Content
-
Topics
-
Posts
-
By கிருபன் · பதியப்பட்டது
தென்னாபிரிக்க இரவு விடுதியில் 22 இளைஞர்கள் மர்ம மரணம் ! தென்னாபிரிக்காவிலுள்ள இரவு விடுதியொன்றில் மர்மமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. ஈஸ்டர்ன் கேப் மாகாணத்தின் ஈஸ்ட் லண்டன் நகரிலுள்ள இரவு விடுதியொன்றில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) அதிகாலை சிறுவர்கள் உட்பட 22 பேர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். பாடசாலை ஆண்டு இறுதியை கொண்டாடுவதற்கான பதின்ம வயது மாணவர்களின் கொண்டாட்டங்களின் போதே இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் இது தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்கள் 12 முதல் 20 வயதானவர்கள் என பொலிஸ் அதிகாரி டெம்பின்கோசி கினானா தெரிவித்துள்ளார். அதேவேளை, 13 மற்றும் 14 வயதானவர்களும் இவர்களில் உள்ளனர் என தென்னாபிரிக்காவின் பொலிஸ் துறை அமைச்சர் பேகி செலி தெரிவித்துள்ளார். இம்மரணங்களுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இறந்தவர்களின் உடல்களில் காயங்கள் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொலிஸ் துறை அமைச்சர் பேகி செலி இது தொடர்பாக கூறுகையில், ‘சன நெரிசல் ஏற்பட்டிருக்கலாம் என முதலில் நாம் எண்ணினோம். ஆனால் சனநெரிசல் எதுவும் இடம்பெறவில்லை’ என்றார். ‘இம்மரணங்கள் குறித்து ஊகம் தெரிவிக்க நான் விரும்பவில்லை. அதனால் தாம் நாம் முன்னிலை தடயவியல் அணியை வரவழைத்துள்ளோம். இம்மரணங்களுக்கு நஞ்சு ஏதேனும் காரணமாக இருந்தால் அவர்கள் எமக்குத் தெரிவிப்பார்கள்’ என்றார். https://www.virakesari.lk/article/130282 -
By நன்னிச் சோழன் · Posted
அடிபாட்டுச் செய்திகள் செய்திகள் இதற்குள் 1999 ம் ஆண்டு திசம்பர் மாதம் 17 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்திலும் 'உதயன்' என்ற உள்ளூர் தமிழ் நாளேட்டிலும் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக. நுழைவாயில் தானைவைப்பில் புலிகளின் தடூகத்தால் சிக்கல் மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4374 செய்தி வெளியீட்டு நேரம்: யாமம் 12:23 தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27/06/2022 -
அரசாங்கத்தின் தெளிவில்லாத அறிவித்தல் காரணமாக பாடசாலைகள் இயங்கவில்லை - இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் ( எம்.நியூட்டன்) அரசாங்கத்தின் தெளிவில்லாத அறிவித்தல் காரணமாக 27 ஆம் திகதி நாட்டில் உள்ள பெருமளவான பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர் வரவு நிலை குறைவாகக் காணப்பட்டதோடு பெரும்பாலான பாடசாலைகள் இயங்கவில்லை என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மூன்று நாட்கள், ஐந்து நாட்கள் பாசாலைகளை இயக்குதல் என்ற அரசாங்கத்தின் குழப்பமான அறிவித்தல், வருகைதரமுடியாத ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட விடுமுறையாக கணிக்க முடியாது என்ற ஆசிரியர்களுக்குச் சாதகமான அறிவித்தல், அதிபர் ஆசிரியர்களுக்கான போக்குவரத்து வசதியின்மை,சீரற்ற எரிபொருள் விநியோகம்,இ.போ.ச ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு, எரிசக்தி அமைச்சரின் எரிபொருள் இல்லையென்ற அபாயகரமான அறிவித்தல் இத்தகைய நிலைகளைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து மார்க்கங்கள் சீராகும் வரை பாடசாலை செல்வதைத் தவிப்போம் என நாம் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதன்படி நாட்டில் உள்ள பெருமளவான பாடசாலைகளில் போக்குவரத்து மார்க்கங்கள் இல்லாத பலர் எமது வேண்டுகோளை ஏற்று பாடசாலைக்குச் செல்லவில்லை. ஒரு சில பாடசாலை அதிபர்கள் ஆசியர்களைக் கட்டாயப்படுத்தி அழைத்த அதேவேளை மாணவர்களின் வரவு குறைவாகவே இருந்ததாக எமது சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள், வலயச் செயலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இத்தகைய நிலை தொடராமல் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் சீராக, அரசாங்கம் ஆசிரியர்களுக்கான எரிபொருள் விநியோகம், போக்குவரத்து மார்க்கங்கள் என்பவற்றிற்கு உடனடியாக தீர்வு காணவேண்டும். இல்லையேல் ஒட்டுமொத்த பாடசாலைகளையும் நீண்ட நாட்களுக்கு மூடும்நிலை ஏற்படும் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/130286
-
By கிருபன் · பதியப்பட்டது
ஜி7 நாடுகளின் உதவியை நாடிய ஜெலன்ஸ்கி மின்னம்பலம்2022-06-27 கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கிய உக்ரைன் - ரஷ்யா போர் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைய ஜி7 அமைப்பு tநாடுகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பின் மாநாட்டில் உக்ரைன், ரஷ்யா குறித்து பெரிய விவாதம் நடைபெற்றது. இதில் ஏழு நாடு தலைவர்களும் இந்த போரில் உக்ரைனை ஆதரவளிப்பதாக உறுதி அளித்தனர். இந்த மாநாட்டில் இந்த ஏழு நாடுகளும் ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக முடிவெடுத்தன. மேலும் ரஷ்யாவிலிருந்து தங்கம் இறக்குமதியை தடை செய்ய இந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை மூன்று வாரங்களுக்குப் பிறகு உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய படை தாக்குதல் நடத்தியது. தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜி7 மற்றும் நேட்டோ மாநாட்டிற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே மீண்டும் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று ஜி7 மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொளி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யப் படையெடுப்பை முடிவுக்கு கொண்டு வர ஜி7 அமைப்பு நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவளிக்க வேண்டும். ரஷ்யா மீது கடும் தடைகளை விதித்து உக்ரேன் நாட்டிற்கு உங்கள் உதவிகளை வழங்க வேண்டும். உக்ரைன் கிழக்கு பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய படைகள் செவிரோடோனெட்ஸ்க்கை முழுமையாக கைப்பற்றிவிட்டன. மேலும் இன்று அதிகாலை ரஷ்யப் படைகள் மீண்டும் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்தியுள்ளன." என்று தெரிவித்தார். https://minnambalam.com/politics/2022/06/27/25/Zelenskyy-seeks-help-frol-G7-countries
-
Recommended Posts