Jump to content

நானும் சவேந்திர சில்வாவும் ஜனாதிபதியும் சாதாரண தரம் வரையே கற்றுள்ளோம்! நாடாளுமன்றத்தில் சரத் பொன்சேகா பகிரங்கம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

அவருக்கு கொஞ்சம் அறிவு இருந்ததால் தான் இடையில் விலகிக் கொண்டார் 
 

விலகவில்லையே… தெற்கிலிருந்து தமிழீழத்திற்காப போராடுவேன் என்றார். தனது சுயநலத்திற்காக அப்பாவிகளை பலி கொடுத்து பின்னர் பாலியல், கப்பம் & கடத்தல் என்று மக்களுக்கு நன்மை பயன்தார்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

விலகவில்லையே… தெற்கிலிருந்து தமிழீழத்திற்காப போராடுவேன் என்றார். தனது சுயநலத்திற்காக அப்பாவிகளை பலி கொடுத்து பின்னர் பாலியல், கப்பம் & கடத்தல் என்று மக்களுக்கு நன்மை பயன்தார்.

ஸ்ஸ்ஸ்ஸ் முடியல்ல மீரா ...திரும்பவும் முதலில் இருந்தா 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஸ்ஸ்ஸ்ஸ் முடியல்ல மீரா ...திரும்பவும் முதலில் இருந்தா 

இது தானே உண்மை.. உங்களுக்கு கசக்கத்தான் செய்யும். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

அவருக்கு கொஞ்சம் அறிவு இருந்ததால் தான் இடையில் விலகிக் கொண்டார் 
 

அது அறிவல்ல  அப்படி அறிவு இருந்தால் கிழக்கு தமிழ் மக்கள் நிம்மதியாக இருக்கனும் இருக்க முடியுதா ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

படிச்சஆட்கள் தான் பல அழிவுகளுக்கு காரணம் என்று இன்னோர் பகுதி கூறுகின்றதே. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிங்கலாம், கல்வி பாடத்திட்டத்தில் கைவைக்க முதல், இலங்கை ordinary level, advanced level, university degree எல்லாமே சர்வதேச தரத்தில் இருந்தது.

உ.ம். ஆக, மருத்துவ துறையில் 1956 வரையில், அந்த துறையில் மருத்துவர்க வந்து ருந்தால், அவர்களின் தகைமையை எல்லா நாடுகளும், வேறு கேள்வி இன்றி ஏற்றுக் கொண்டன.

அதடற்கு பின்னும், சிறிய தேர்வுதான் ஏற்றுக் கொண்டன.  


ஓ லெவல் - இலங்கையில் முதல் இருந்தது University of  London ordinary level  - இது கடினமானது.

பின்பு - பெயரை மாற்றி விட்டு, University of  London ஓல் பரீட்சையை  தழுவி பரீட்சை வினாத்தாட்கள் - இதுவும் கடினம்.


சிறிமா - HSC - எல்லாவற்றையும் தலைகீழாகியது. இதில் இருந்து எந்த தர தொகையின் தரமும் குறையாத தொடங்கியது.

HSC இ சிறிமா கொண்டுவந்தது - தரத்தை குறைத்து, சின்னாளவரின் எண்ணிக்கையை கூட்டுவதற்கு. அனால், அது வேலைசெய்யமல் போகவே, தரப்படுத்தல் வந்தது.
 

JR உடன் - ஓல்  மீண்டும் அறிமுகம் - இது மாணவரை சோதிக்கு ஆயினும் - நீண்ட காலம் இருந்த படியால், பாஸ் பேப்பரை செய்து பாஸ் பண்ணக்கூடிய நிலை உருவாக்கியது (அனால் Distiontion, B எடுப்பது கடினம், பாஸ் பேப்பரை மட்டும் செய்து).

அதன் பின் ஒப்படையுடன் (assignments) கூடிய ordinary level, இதில் பரீட்சை ஒப்பீட்டளவில் கடினம் ஆயினும், ஒப்படையினால் pass பண்ணுவோர்  வீதம் கூடியது. ஆயினும் Distinction, B கடினம்.

பின்பு ஒப்படை நீக்கப்பட்டது, பாஸ் பண்ணுவது கடினம் ஆகியது.

இப்பொது உள்ள  ordinary level, Distiontion, B எடுப்பது கடினம் என்று தான் நினைக்கிறன்.      
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அனால், எ லெவல், கணித துறைக்கு, பேராசியர் நடராசர் இருக்கும் வரைக்கும் , எ லெவல் தூய, பிரசாயக்க கணித பரீட்சை, மாணவரின் புரிதலை பரீட்சிக்கும்.

பேராசியர் நடராசர் கணித பரீட்சை வினாக்களை தயாரிப்பது இல்லை,  அதை செய்வது வேறு நபர்கள்.

பேராசியர் நடராசர், அப்படி தயாரித்த பரீட்சையை, அவர் செய்வார், பாடத்திட்டத்துக்குள் வரும் அறிவை கொண்டு.

இதை கொண்டு, கேள்விகளின் கடினம், ஏற்ற இரக்கம் செய்யப்படும்.

இந்த படிமுறை, வேண்டுமாயின் மீளவும் செய்யப்படும், நேரமும், கடினத்தன்மையும் ஒன்றுக்கு ஒன்று மட்டாக இருக்க கூடிய வரையில்

இதனால் தான், அங்கு ஒரு போதுமே 100 எடுக்க முடியாது. இது மற்ற பாடங்களும் இருந்து இருக்கும் என்றே நினைக்கிறன்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎-‎04‎-‎2022 at 19:19, MEERA said:

இது தானே உண்மை.. உங்களுக்கு கசக்கத்தான் செய்யும். 

 

On ‎12‎-‎04‎-‎2022 at 23:36, பெருமாள் said:

அது அறிவல்ல  அப்படி அறிவு இருந்தால் கிழக்கு தமிழ் மக்கள் நிம்மதியாக இருக்கனும் இருக்க முடியுதா ?

மன்னிச்சு கொள்ளுங்கோ சகோதரங்களா ...நீங்கள் சொல்வது தான் சரி ...கருணா எந்த பாடசாலையில் யாருக்கு கீழ் படித்தார் என்பதை நான் மறந்து விட்டேன் .
 

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஆசிரியர்கள் என்கிற வகையில் என்னை அதிகம் பாதித்தவர் பேரின்பராஜா சேர். அடுத்ததாக நான் அதிகம் மதிப்பு வைத்திருப்பவர் பிரேம்நாத் மாஸ்ட்டர். அவர்பற்றியும் முன்னர் ஒருமுறை எழுதியிருக்கிறேன். இவர்களின் பாதிப்பும், அவர்களுடனான் எனது நினைவுகளும் என்றுமே மறக்கமுடியாதவை.   உங்களின் ஆதரவிற்கு நன்றி சுவி. எனது எழுத்து நடை எப்போதுமே ஒரே மாதிரியேதான் இருக்கிறது. இதனை மாற்ற என்னால் முடியவில்லை. சிலருக்கு இதனைப் படிக்கும்போது "ஒரே மாதிரி எழுதுகிறான்" என்கிற சலிப்பும் உருவாகலாம். அடுத்ததாக, எனது அனுபவக் குறிப்புகளில் சில வெறும் அனுபவங்கள் மட்டும்தான். பெரிதாக எதுவுமே இருப்பதில்லை. ஆனாலும், அனுபவத்தினை இங்கு பலருடன் பகிரும்போது ஒரு ஆத்ம திருப்தி ஏற்படுகிறது. அதனால் எழுதுகிறேன். அத்துடன், எனது அனுபவங்களில் யாழில் இருக்கும் ஒருசிலராவது வந்துபோவார்கள், குறைந்தது நான் எழுதும் விடயங்கள் பற்றி அறிந்திருக்கிறார்கள். அதனால், அவர்களுக்கும் எனது அனுபவக் குறிப்பு ஒரு நினைவு மீட்டலாக மாறியிருக்கிறது.   மிக்க நன்றி சிறி, நான் எழுதுவதை படிக்கும் ஒரு சிலரில் நீங்களும் ஒருவர். உங்களின் ஆதரவுக்கு எனது நன்றிகள்.   உங்களின் கருத்தைப் படித்து மிகவும் மகிழ்ந்தேன். எனது எழுத்து உங்களையும் எனது அனுபவப் பகிர்வில் ஒருவனாக உணரவைத்தது என்பது மனநிறைவைத் தந்தது. மிக்க நன்றி !   மிக்க நன்றி சுவைப்பிரியன். நீங்களும் மட்டக்களப்பில் வாழ்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சிலவேளை நான் குறிப்பிடும் ஆசிரியர்கள் பற்றி அறிந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்.    எனக்குத் தெரியும் அண்ணா. நான் எழுதும் எல்லாக் கட்டுரைகளிலும் நீங்கள தவறாது வந்து கருத்துப் பகிர்ந்திருக்கிறீர்கள். தொடர்ச்சியாக உற்சாகமூட்டி ஆதரவளித்திருக்கிறீர்கள். வழமைபோல, இன்றும் உங்களின் அயராத ஆதரவிற்கு நன்றியண்ணா!   நன்றி குமாரசாமியண்ணை. உங்களுடன் இக்களத்தில் பலவிடங்களில் முரண்பட்டு எழுதியிருக்கிறேன். அப்படியிருந்தும் நீங்கள் தொடர்ந்தும் எனது அனுபவக் குறிப்புக்களில் ஆதரவு தந்துவருகிறீர்கள். மிக்க நன்றியண்ணா! நீங்கள் கூறுவது மெத்தச்சரி. பேரின்பராஜா சேர் வந்திருக்காவிட்டால் நிச்சயம் எனது வாழ்வு மாறிப்போயிருக்கும். ஆம், நான் அதிஷ்ட்டசாலிதான்.  கமலா டீச்சருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். பாடசாலையில் படித்த காலத்திலும், பலகலைக் கழக அனுமதிக்குக் காத்திருந்த காலத்திலும் அவர் எனக்கு உதவியிருக்கிறார். கண்டிப்பானவர், ஆனால் உதவும் மனம் கொண்டவர்.  அவர் மரணித்த செய்தி கேள்விப்பட்டேன். அவரது மூத்த மகன், பிலிப் இங்குதான் இருக்கிறார். பலமுறை அவரைக் கண்டு பேசியிருக்கிறேன். தேவநம்பி என்று இன்னொரு மகனும் அந்தக் காலத்தில் எமக்கு ஒரு வகுப்பு மேலே படித்தார். இப்போது பொறியியலாளராக இருக்கிறார் என்று நினைக்கிறேன். எமது வகுப்பில் படித்த பல மாணவர்கள் பலகலைக் கழகம் சென்றார்கள். மதனும், சுகந்தும் வைத்தியர்களானார்கள். ராதா, கிரிந்தி, மெளலி ஆகியோர் பொறியியிலாளர்களானார்கள். மெய்யழகன் பட்டப்படிப்பு முடித்ததாகக் கேள்விப்பட்டேன். பிரபா தொழிநுட்ப அதிகாரியாகவும் ஏனையவர்கள் நல்ல துறைகளில் தொழில்புரிவதாகவும் அறிந்தேன். ஆம், அந்த வகுப்புக் கொஞ்சம் பிரபலம் தான். எனது நண்பர்களையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் ரதி. உலகம் சின்னதுதான். உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி !
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • எனது வாழ்க்கையில் என்னை மிகவும் பாதித்த, தாக்கத்தினை உண்டாக்கிய மனிதர்கள் பற்றிப் பேசவேண்டும் என்று விரும்பினேன். அதனால்,  அவ்வப்போது இவர்கள் பற்றி எழுதிவருகிறேன். இதன்மூலம் எனது சிறுவயது நினைவுகளை இரைமீட்டிப் பார்க்கவும் என்னால் முடிகிறது. பேரின்பராஜா சேர் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர். இடையிடையே கல்வித்திணைக்களத்தின் மூலம் வெவ்வேறு பாடசாலைகளுக்குச் சென்று கஷ்ட்டப்படும் மாணவர்களுக்கு கணிதத்தினைக் கற்பிப்பதில் தேர்ச்சி பெற்றவர். கணிதத்தின்மீது எனக்கு விருப்பினை உருவாக்கியவர் அவர்தான். அவரன்றி இன்று ஒரு பொறியியலாளனாக நான் வந்திருக்கச் சாத்தியமில்லை என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். ஆகவேதான் அவர்பற்றிப் பேசுவேண்டும் என்று விரும்பினேன்.  இதே காலத்தில் இன்னும் பல ஆசிரியர்களும் எனக்குக் கற்பித்தார்கள். அகஸ்டின் டீச்சர் மூலம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் நாடகம் ஒன்றிலும் பங்குகொள்ளும் அனுபவம் கிடைத்தது. நத்தார் கால ஒளிவிழா நிகழ்வுகளில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை அரங்கேற்ற அவர் பட்ட பாடும், எம்மைப் பயிற்றுவிப்பதில் அவர் காட்டிய ஈடுபாடும் மெச்சத்தக்கது. தனது சொந்தப் பிள்ளைகள் போலவே அவர் எம்மை நடத்தினார். சுயநலமின்றி பிள்ளைகளை வழிநடத்தி, தம்மால் முடிந்தளவு முன்னேற்றப் பாடுபடும் இவர்கள் போன்ற ஆசிரியர்களிடம் கற்றது எனது பாக்கியமே.  அதேபோல கோமதி டீச்சர். பாடசாலையில் எனது வகுப்பிற்கு வர்த்தகமும் கணக்கியலும் அவர் கற்றுத்தருவதில்லை. ஆனால், நான் ஒருமுறை அவரிடம் கணக்கியலில் உதவி கோரியிருந்தேன். எனக்கு பாடசாலையில் அவர் படிப்பிக்காதபோதும், மாலை நேரங்களில் இன்னும் ஒரு நண்பனுடன் அவரின் வீட்டிற்கு அழைத்துக் கற்றுத்தந்தார். டியூஷன் பணத்தை வாங்க மறுத்து சில மாதங்களாவது எமக்குச் சொல்லித் தந்தார்.  ஆங்கிலம் கற்றுத்தந்த சேவியர் டீச்சர். சொந்தப் பிள்ளைகளுடன் பேசுவது போல மிகவும் அன்பாகவும், இயல்பாகவும் எல்லோருடனும் பேசும், பழகும் அவர் வகுப்பிற்கு வந்தாலே கலகலப்பாகிவிடுவோம். மாணவர்கள் மேல் அவர் வைத்திருந்த நேசம் உண்மையானது. அதே போல தமிழ் கற்றுத்தந்த மணியம் (பெயர் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்) மாஸ்ட்டர். வகுப்பில் இறுதிவாங்கில் இருக்கும் ஒருவனால் விவரணக் கட்டுரையும் எழுதமுடியும் என்று முழு வகுப்பிற்கும் சொல்லிக் காட்டியவர் அவர். மாலை நேரக் காட்சியை வர்ணித்து எழுதுங்கள் என்று கூறியபோது, நான் எழுதிக்கொடுத்த கட்டுரையினை, சுகந்தை அழைத்து, "இதை முன்னுக்கு வந்து நின்று சத்தமாக வாசி" என்று அவர் கூறவும், சுகந்தும் அதனைப் படித்து முடித்தான். வாசித்து முடித்தவுடன், "ஆர் இதை எழுதியது? " என்று கேட்கவும், நான் கையை உயர்த்திக் காட்டினேன். அன்றிலிருந்து வகுப்பில் தமிழ்க் கட்டுரை எழுதுவதென்றால், என்னிடம் மாணவர்கள் வருவதும் நடந்தது.  இவர்கள் எல்லாருமே ஏதோ ஒரு வகையில் எனது வாழ்க்கையை தீர்மானித்திருக்கிறார்கள்.இவர்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.