Jump to content

‘கோட்டா கோ ஹோம்’: காலி முகத்திடலில் கூடும் மக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘கோட்டா கோ ஹோம்’: காலி முகத்திடலில் கூடும் மக்கள்!

ஜனாதிபதியை வீட்டுக்கு போகுமாறு வலியுறுத்தி கொழும்பு காலிமுகத்திடலில் பெருந்திரளான மக்கள் கூடி வருகின்றனர்.

இதனால் அந்தப் பகுதியில் தற்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களின் ஊடாக இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பெருந்திரளவர்ககள் கலந்துகொண்டுள்ளனர்.

இரண்டு மில்லியன் பேரை இன்றைய தினம் அங்கு அழைக்க முயற்சித்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அங்கு நீர்த்தாரை வாகனங்கள், கலகம் அடக்கும் பொலிஸார் ஜனாதிபதி செயலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
 

http://www.samakalam.com/கோட்டா-கோ-ஹோம்-காலி-முகத்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலி முகத்திடலில் பலத்த பாதுகாப்பு… ! ஒன்றுகூடி இளைஞர்கள் போராட்டம் !!

காலி முகத்திடலில், பலத்த பாதுகாப்பு… ! ஒன்றுகூடி இளைஞர்கள் போராட்டம் !!

கொழும்பு காலி முகத்திடலில் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் தற்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைத்துத் துறையினரும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது காலி முகத்திடலில் இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொள்ளும் தாங்கிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

https://athavannews.com/2022/1275956

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு காலி முகத்திடலில் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளடங்கலாக பலதரப்பினரும் போராட்டம்


spacer.png

கொழும்பு காலி முகத்திடலில் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளடங்கலாக பலதரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.குறித்த போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் நுகேகொடையில் இருந்து அதிகளவிலான பலக்லைக்கழக மாணவர்கள் காலிமுகத்திடலை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர்.இந்த நிலையில் அப்பகுதியில் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.அத்துடன் ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதேவேளை தனியார் மற்றும் அரச பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து ஒரே கோரிக்கையை வலியுறுத்தி ஒன்றிணைந்து போராடும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.(15)
 

http://www.samakalam.com/கொழும்பு-காலி-முகத்திடல-2/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி செயலகம் நோக்கி நகரும் போராட்டம்
 

கொழும்பு காலி முகத்திடலில் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் பங்குபற்றுதலுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டத்தில் தொழில் வல்லுநர்கள், இளைஞர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொள்வதாகவும், இது பாரிய மக்கள் போராட்டமாக உருவாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம் நோக்கி நகர்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது. (R

https://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனதபத-சயலகம-நகக-நகரம-பரடடம/175-294507

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'NPM NAPALAFTRA VEVES வீட்டுக்கு போக மாட்டேன் போடா!!! விகடன் ஆனந்த'

கோத்தா... மைண்ட் வாய்ஸ். 🤣 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

முதன்முறையாக அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் ஒன்றிணைந்து போராட்டம் : ஆட்டம்காணும் காலிமுகத்திடல்

கொழும்பு காலி முகத்திடலில் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளடங்கலாக பலதரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் நுகேகொடையில் இருந்து அதிகளவிலான பலக்லைக்கழக மாணவர்கள் காலிமுகத்திடலை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர்.

தனியார் மற்றும் அரச பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து ஒரே கோரிக்கையை வலியுறுத்தி ஒன்றிணைந்து போராடும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டா அரசுக்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் – இராணுவத்தினர் வரவழைப்பு

April 9, 2022

spacer.png

கோட்டா அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று சனிக்கிழமை கொழும்பில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள உள்ள நிலையில், பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு விசேட காவல்துறை குழுவினர் மற்றும் இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் இன்று அரசுக்கு எதிரான பாரிய போராட்டங்களை முன்னெடுக்கத் தீா்மாளித்துள்ள நிலையில் காலி முகத்திடம் உள்ளிட்ட பல இடங்களில் காலையிலேயே போராட்டங்கள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
spacer.png

இதனைவிட, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு நீதி கோரி கொச்சிக் கடையிலிருந்து நீதிகோரும் நடைபயணம் முன்னெடுக்கப்பட உள்ளது. அத்துடன், கோட்டை தொடரூந்து நிலையம் முன்பாக ஆா்ப்பாட்டம், பொரளையில் மௌனப் போராட்டம், நுகோகொடையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் என்பன இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் காலி முகத்திடல் மைதானத்தில் இன்று கூடும் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக  காவல்துறையினரும் காவல்துறை விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு வருவதுடன், காலி முகத்திடல் பகுதியில் சில பகுதிகள் போராட்டக்காரர்கள் ஒன்று கூட முடியாதவாறு மூடப்பட்டு அறிவித்தல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
spacer.png

காவல்துறை  கலகத் தடுப்பு பிரிவினர் மற்றும் மேல் மாகாணத்தின் ஏனைய காவல்துறை  பிரிவுகளில் இருந்து விசேட காவல்துறை  குழுக்களும் இராணுவத்தினரும் பாதுகாப்பு வழங்குவதற்காக கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக   தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய போராட்டங்களின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம் அல்லது பிரதமர் இல்லத்துக்குள் நுழைய முயற்சித்தால் கடுமையான எதிர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கொழும்பு  காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
 

https://www.ilakku.org/protests-in-colombo-against-the-kota-government/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று... பெரிய சம்பவம் நடக்க உள்ளது போல் தெரிகின்றது.
மகிந்த கொம்பனி... அரசை விட்டு போகின்ற மாதிரி தெரியவில்லை என்பதால்...
இந்தப் போராட்டம் ஒன்றில்... துப்பாக்கி சூட்டில் முடியவும் சாத்தியம் உள்ளது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

காலி முகத்திடலில் குவிந்துள்ள ஆயிரக்கணக்கானோர்! பலப்படுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முற்றுகையிடப்பட்ட ஜனாதிபதி செயலகம்!! குவிக்கப்பட்ட படையினர்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இன்று... பெரிய சம்பவம் நடக்க உள்ளது போல் தெரிகின்றது.
மகிந்த கொம்பனி... அரசை விட்டு போகின்ற மாதிரி தெரியவில்லை என்பதால்...
இந்தப் போராட்டம் ஒன்றில்... துப்பாக்கி சூட்டில் முடியவும் சாத்தியம் உள்ளது.

நல்ல செய்திக்காக காத்திருப்போம் சிறி 

ஆனால் இந்த மனிதாபிமானவர்கள் எம்மை சாடக்கூடும்?? 😭

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தங்கள் கடமையை செய்கிறார்கள். செய்ய வேண்டும்......அவர்கள் தூரத்தில்  எங்காவது ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்கியிருந்து ஸ்நாக்ஸ் கொறித்துக் கொண்டு டி. வி.யில் ரசித்துக் கொண்டு இருப்பார்கள்......!  🤔

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

நல்ல செய்திக்காக காத்திருப்போம் சிறி 

ஆனால் இந்த மனிதாபிமானவர்கள் எம்மை சாடக்கூடும்?? 😭

ஆம்... விசுகு. எப்படியும் வருவார்கள் விசுகு. 
நமது மகிழ்ச்சி, நமக்கு முக்கியம் என்று விட்டு போக வேண்டியதுதான். 

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

காலி முகத்திடலில் ஜேம்மர்: போராட்டக்காரர்கள் அந்தரிப்பு

 

 

அரசாங்கத்துக்கு எதிராக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பெருந்திரளானோர் பங்கேற்று தங்களுடைய எதிர்ப்பை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றனர். 

இந்நிலையி்ல், போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், வெளியாருடன் தொடர்பு கொள்ள முடியாத வகையில்,தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 

அந்த பகுதியில் உள்ள மின்கம்பங்களில் மின்குழில்கள் யாவும் நேற்றிரவு கழற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், தொலைபேசிகளை முடக்கும் ஜேம்மர் வைக்கப்பட்டுள்ளதாக அறியமுகின்றது.

ஜனாதிபதி செயலக நுழைவாயிலேயே இந்த ஜேம்மர் வைக்கப்பட்டுள்ளது. 

image_b3473f1e9b.jpg


Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people, people standing, crowd and road

காலி முகத்திடல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி செயலகம் முற்றுகை ! பெருந்திரளான மக்கள் ஒன்று திரண்டு அமைதிவழிப் போராட்டம் ! காலி முகத்திடல் பகுதி முற்றாக முடக்கம் !

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள் வலுப்பெறத் தொடங்கின.

Image

இந்நிலையில், இன்று காலையிலிருந்து பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் ஒன்று திரண்டு கொழும்பு காலிமுகத்திடல் பகுதிக்கு எதிர்ப்புப் பேரணியாக வருகை தந்தனர்.

Image

சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக மக்கள் காலிமுகத்திடல் பகுதியில் உள்ள ஜனாதிபதி செயலக பகுதியை முற்றுகையிட்டதால் அந்தப் பகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

Image

இந்நிலையில், இலங்கை முழுவதும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் ஒட்டுமொத்த உலகிற்கும் கேட்கக்கூடிய அளவிற்கு மிகவும் வலுவானதாக இருக்கின்றது என இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

Image

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், எரிபொருள், எரிவாயு மற்றும் பால்மா போன்ற அத்தியாவசியப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

WhatsApp_Image_2022-04-09_at_12.00.15_PM

இதனால் அன்றாடம் இவ்வாறான பொருட்களைக் கொள்வனவு செய்ய மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

May be an image of 2 people, people standing and road

இவ்வாறான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் பெறுமை இழந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளளனர்.

WhatsApp_Image_2022-04-09_at_12.00.18_PM
 

 

https://www.virakesari.lk/article/125567

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொட்டும் மழையிலும் தொடரும் அரசுக்கு எதிரான மக்களின் எழுச்சிப் போராட்டம் ! வீதியில் நோன்பு திறப்பு !

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் , நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு துரித தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்து நாடளாவிய ரீதியில் கடந்த இரு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன.

Image

ஆரம்பத்தில் பொது மக்கள் மாத்திரம் இந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் , தற்போது , மதத் தலைவர்கள் , சட்டத்தரணிகள், நிபுணர்கள் உள்ளிட்ட பல தரப்பினராலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காலி முகத்திடலில் திரண்ட இளைஞர் , யுவதிகள்

Image

அதற்கமைய இன்று சனிக்கிழமை காலை 8.30 மணிமுதல் கொழும்பு - காலி முகத்திடலில் பாரிய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

Image

 'பக்க சார்பற்ற மக்கள் போராட்டம்' என்ற கருப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் பொது மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் குறித்த வீதியூடாக பயணித்த வாகனங்கள் ஒலியெழுப்பி (ஹோர்ன்) சென்றன.

Image

அமைப்புக்கள் அல்லது சங்கங்கள் என எவையும் இன்றி இளைஞர் , யுவதிகளால் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

Image

இதன் காரணமாக கொழும்பிற்குள் பிரவேசிக்கும் பல பிரதான வீதிகளில் பொலிஸாரினால் வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. 

அத்தோடு தநைகர் கொழும்பில் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கும் பாதுகாப்பு படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

காலை முதல் மாலை 3 மணி வரை காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தவர்கள் , பின்னர் ஜனாதிபதி செயலக வளாகத்திற்குச் சென்று அங்கு தமது எதிர்ப்பு கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். 

இதன் போது செயலகத்திற்குள் நுழைய முடியாதவாறு பொலிஸாரார் தடைகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் , அவற்றை தகர்ப்பதற்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முயற்சித்தனர். 

இதனால் அங்கு அமைதியற்ற நிலைமையும் ஏற்பட்டது. இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரால் வைக்கப்பட்டிருந்த காவலரண் மீது ஏறி பாதாதைகளை ஏந்தி எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

பேராயர் தலைமையில் நீர்கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைக் கோரியும் , நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு துரித தீர்வினை வலியுறுத்தியும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இன்று நீர்கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் சர்வ மதத் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.

நீர்கொழும்பு கிரீன்பார்க் சந்தியில் - நீர்கொழும்பு கத்தோலிக்க சபையினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் கலந்து கொண்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக சிலாபம் , நீர்கொழும்பு, கிரீன்பார்க் வீதி உள்ளிட்டவற்றில் வாகன போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்தது.

'நீதிக்காக'  - கட்டுவாப்பிட்டிய பேரணி

Image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைக் கோரியும் , நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு துரித தீர்வினை வலியுறுத்தியும் கத்தோலிக்க மக்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்களினால் 'நீதிக்காக' என்ற தொனிப்பொருளில் அமைதி வழி பேரணியொன்று நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. 

இதனை ஏற்பாடு செய்திருந்தவர்கள் நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திலிருந்து , கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம் வரை பேரணியாகச் சென்றனர்.

நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் இந்த எதிர்ப்பு பேரணி இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமானது. இவ்வாறு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் ஆரம்பமான எதிர்ப்பு பேரணி , கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியன் தேவாலயம் , கட்டுநாயக்க தேவாலயம் , துடெல்ல அடக்கல மாதா தேவாலயம் , கந்தானை - ஹெந்தல சந்தி, எலகந்த வழியூடாக கொச்சிக்கடை தேவாலயம் வரை சென்றது.

அச்சுத்துறையினர் ஆர்ப்பாட்டம்

 

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடியால் அச்சுத்துறைக்கு தேவையான கடதாசி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால் , தாமும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்து அச்சுத்துறை சார்ந்தவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நேற்றுமுன்தினம் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

IMG_5504.jpg

தற்போதும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தொடர்ந்தும் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அதேவேளை, வீதியின் இருந்தவாறு நோன்பு திறக்கும் சமயக் கடமையிலும் ஈடுபட்டனர்.

Image

Image

Image

Image
 

 

https://www.virakesari.lk/article/125574

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வெள்ளவுக்கு எவ்வளவு கோட்டா பிடிவாதமாக நிற்கிறாரரோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. ஆனால் தமிழ்த்தலைமைகள் பாலம் போடப் போகிறோம் பெருளாதாரத்தை நிமிர்த்தப் போகிறோம் என்று வெறுமனே சொல்லக் கூடாது. கோத்தா பதவி விலகுவதாயின் உடனடியாகவே அரசியலமைப்புமாற்றம் ஒன்று வரும். அதில் தமிழர்தரப்பு ஒற்றையாட்சி அரசியலமைப்பைுநிராகரித்து சமஷஸ்டிமுறையிலான அரசியலமைப்மைக் கோர வேண்டும்.. இலங்கையின் இன்றைய நிலைக்கு ஒற்றையாட்சி அரசியலமைப்பும் அதனால் ஏற்பட்ட போருமே காரணம் என்பதை சிங்களத் தலைவர்களுக்கும் மக்களுக்கும் உலக நாடுகளுக்கும் ஒரே குரலில் கூறவேண்டும்.அதற்கு அனைத்து அரசியல்கட்சிகளும் இணைந்து ஒரு அரசிலபைபுக் குழுவை ஒருவாக்க வேண்டும். சிறிலங்காவில் இரசியல் (ஸ்தரத்தன்மை) உறுதியான ஆட்சி அமைய வேண்'டுமானால் தமிழ்களுக்கு சமஷஸ்டி முறையிலான தீர்வே பொருத்தமாக இருக்கும் என்று உறுதியாகக் கூற வேண்டும். அதை விட்டு முதலில் பொருளாதாரத்தை நிமிர்த்துவோம் பின்னர் அரசியல் தீர்வு பற்றிப் பேசுவோம் என்று மோட்டுத்தனமாகச் செயற்படக் கூடாது . இது காலம் தந்த சந்தர்பம். அதைச் சரியான முறையில் தமிழத் தரப்பு பயன் படுத்த வேண்டும்.

  • Like 8
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான பேச்சு வார்த்தையில் சுமன் இல்லையென்றால் இது சுமுகமாக முடியும்....சமன்... ரணில் நரியுடன் சேராமலும் பார்க்க வேணும்..

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

எவ்வெள்ளவுக்கு எவ்வளவு கோட்டா பிடிவாதமாக நிற்கிறாரரோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. ஆனால் தமிழ்த்தலைமைகள் பாலம் போடப் போகிறோம் பெருளாதாரத்தை நிமிர்த்தப் போகிறோம் என்று வெறுமனே சொல்லக் கூடாது. கோத்தா பதவி விலகுவதாயின் உடனடியாகவே அரசியலமைப்புமாற்றம் ஒன்று வரும். அதில் தமிழர்தரப்பு ஒற்றையாட்சி அரசியலமைப்பைுநிராகரித்து சமஷஸ்டிமுறையிலான அரசியலமைப்மைக் கோர வேண்டும்.. இலங்கையின் இன்றைய நிலைக்கு ஒற்றையாட்சி அரசியலமைப்பும் அதனால் ஏற்பட்ட போருமே காரணம் என்பதை சிங்களத் தலைவர்களுக்கும் மக்களுக்கும் உலக நாடுகளுக்கும் ஒரே குரலில் கூறவேண்டும்.அதற்கு அனைத்து அரசியல்கட்சிகளும் இணைந்து ஒரு அரசிலபைபுக் குழுவை ஒருவாக்க வேண்டும். சிறிலங்காவில் இரசியல் (ஸ்தரத்தன்மை) உறுதியான ஆட்சி அமைய வேண்'டுமானால் தமிழ்களுக்கு சமஷஸ்டி முறையிலான தீர்வே பொருத்தமாக இருக்கும் என்று உறுதியாகக் கூற வேண்டும். அதை விட்டு முதலில் பொருளாதாரத்தை நிமிர்த்துவோம் பின்னர் அரசியல் தீர்வு பற்றிப் பேசுவோம் என்று மோட்டுத்தனமாகச் செயற்படக் கூடாது . இது காலம் தந்த சந்தர்பம். அதைச் சரியான முறையில் தமிழத் தரப்பு பயன் படுத்த வேண்டும்.

💪நல்ல ஒரு கருத்து.. ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.. நமக்கு வாய்த்த தமிழ் அரசியல்வாதிகள் அப்படி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

எவ்வெள்ளவுக்கு எவ்வளவு கோட்டா பிடிவாதமாக நிற்கிறாரரோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. ஆனால் தமிழ்த்தலைமைகள் பாலம் போடப் போகிறோம் பெருளாதாரத்தை நிமிர்த்தப் போகிறோம் என்று வெறுமனே சொல்லக் கூடாது. கோத்தா பதவி விலகுவதாயின் உடனடியாகவே அரசியலமைப்புமாற்றம் ஒன்று வரும். அதில் தமிழர்தரப்பு ஒற்றையாட்சி அரசியலமைப்பைுநிராகரித்து சமஷஸ்டிமுறையிலான அரசியலமைப்மைக் கோர வேண்டும்.. இலங்கையின் இன்றைய நிலைக்கு ஒற்றையாட்சி அரசியலமைப்பும் அதனால் ஏற்பட்ட போருமே காரணம் என்பதை சிங்களத் தலைவர்களுக்கும் மக்களுக்கும் உலக நாடுகளுக்கும் ஒரே குரலில் கூறவேண்டும்.அதற்கு அனைத்து அரசியல்கட்சிகளும் இணைந்து ஒரு அரசிலபைபுக் குழுவை ஒருவாக்க வேண்டும். சிறிலங்காவில் இரசியல் (ஸ்தரத்தன்மை) உறுதியான ஆட்சி அமைய வேண்'டுமானால் தமிழ்களுக்கு சமஷஸ்டி முறையிலான தீர்வே பொருத்தமாக இருக்கும் என்று உறுதியாகக் கூற வேண்டும். அதை விட்டு முதலில் பொருளாதாரத்தை நிமிர்த்துவோம் பின்னர் அரசியல் தீர்வு பற்றிப் பேசுவோம் என்று மோட்டுத்தனமாகச் செயற்படக் கூடாது . இது காலம் தந்த சந்தர்பம். அதைச் சரியான முறையில் தமிழத் தரப்பு பயன் படுத்த வேண்டும்.

சம்பந்தன் கொம்பனி அதற்கு சரிவரமாட்டார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கக் கொடியை ப் பிடித்து ஆட்டின சிங்கன் எல்லோ!இப்ப ஆட்ட வேண்டிய நேரத்தில முடியாமல் இருக்கிறார்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, புலவர் said:

சிங்கக் கொடியை ப் பிடித்து ஆட்டின சிங்கன் எல்லோ!இப்ப ஆட்ட வேண்டிய நேரத்தில முடியாமல் இருக்கிறார்.

அந்த நேரம் காட்டமாக நின்று சாதித்திருக்க வேண்டிய நேரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

சிங்கக் கொடியை ப் பிடித்து ஆட்டின சிங்கன் எல்லோ!இப்ப ஆட்ட வேண்டிய நேரத்தில முடியாமல் இருக்கிறார்.

போனமாதம் பேச்சுவார்த்தையிவ் மேசையை அடித்துடைத்ததை மறந்திட்டீங்க போல.

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

சிங்கக் கொடியை ப் பிடித்து ஆட்டின சிங்கன் எல்லோ!இப்ப ஆட்ட வேண்டிய நேரத்தில முடியாமல் இருக்கிறார்.

இதன் தொடர்ச்சி ......

27 minutes ago, ஈழப்பிரியன் said:

போனமாதம் பேச்சுவார்த்தையிவ் மேசையை அடித்துடைத்ததை மறந்திட்டீங்க போல.

இது, எங்க போய் முடியப்போகுதோ? தெரியலையே ....

11 hours ago, கிருபன் said:

இலங்கை முழுவதும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் ஒட்டுமொத்த உலகிற்கும் கேட்கக்கூடிய அளவிற்கு மிகவும் வலுவானதாக இருக்கின்றது என இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

ஓ....ஓ இத்தனையும் இந்த அம்மணியின் கைங்கரியமா? அப்போ, கோத்தா ஓடும்வரை தொடரும் போராட்டம் தொடரும். கோத்தா எதிர்கட்சிகளையல்லவா குற்றம் சுமத்தியிருந்தார்? அது சரி ..... இவருக்கு வாக்குப்போட்ட அறுபத்தொன்பது லட்ஷம் மக்களுக்கும் குறையில்லாமல், தடையில்லாமல் பொருட்கள் கிடைக்கின்றனவோ? மக்கள் விரட்டினால் போவோம் என்றவர் போகமாட்டோம் என்று அடம்பிடிக்கிறது இவர்களின் இரட்டை வேடமல்லவா? 

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.