Jump to content

தமிழ்க் கல்விக்கழகத்தின் 32 ஆவது அகவை விழா-2022 யேர்மனி மத்தியமாநிலம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க் கல்விக்கழகத்தின் 32 ஆவது அகவை விழா-2022யேர்மனி மத்தியமாநிலம்.

32ஆவது அகவை தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி
 

WhatsApp-Image-2022-04-10-at-14.50.36-22

தாயகனின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்ததன் விளைவாக மொழியோடு கலை, பண்பாடு, விளையாட்டு எனப் பன்மைப் பரிமாணங்களினூடாகத் தமிழ்ச் சிறார்களை அணியப்படுத்தி ஆற்றலுடையோராய் வளர்த்தெடுப்பதை நோக்காகக் கொண்டியங்கும் தமிழ்க் கல்விக் கழகம் 32ஆவது அகவை நிறைவு விழாவைச் சிறப்போடு தொடங்கியுள்ளது. இவ்வாண்டும் ஐந்து அரங்குகளில் நடாத்துவதற்குத் திட்டமிட்டவாறு முதலாவது அரங்கம் 09.04.2022 சனிக்கிழமை மத்திய மாநிலத்தின் வெஸ்லிங் (Wesseling)  நகரிலே நிறைவுற்றுள்ளது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மன் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறீரவீந்திரநாதன் வெஸ்லிங் நகரத் துணைமுதல்வர் மொனிக்கா எங்கெல்ஸ் வேல்றெர், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி அஞ்சனா பகீதரன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மத்திய மாநிலப் பொறுப்பாளர்களான திரு. சின்னையா நாகேஸ்வரன், திரு. கணபதி சிவசுப்பிரமணியம் ஆகிய சிறப்பு விருந்தினர்களோடு, தமிழ்க் கல்விக் கழகத்தின் தேர்வுப்பிரிவுப் பொறுப்பாளர் செல்வன் சேரன் யோகேந்திரன் மற்றும் தமிழ்க் கல்விக் கழகத்தின் ஆண்டுச் செயற்றிறன் தொகுப்பான வெளிச்சவீடு இதழின் பொறுப்பாளர் திரு. தர்மலிங்கம் தீபன் ஆகியோரும் இணைந்து மங்கல விளக்கேற்றியதைத் தொடர்ந்து அகவணக்கத்தோடு அரங்க நிகழ்வுகள் தொடங்கின. தமிழ்க் கல்விக் கழகத்தின் நோக்கமும் இளையோரின் பங்கேற்பும் ஒன்றாகக் கலந்து நின்ற காட்சியாகத் தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் திரு. செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரை அமைய, விழாவை இளையோர்கள் நடாத்தியமை சிறப்பாகும்.

தேர்வு மதிப்பளிப்பு, தமிழ்த்திறன் மதிப்பளிப்பு என ஆற்றல் வளங்களின் அறுவடையாக அமைய, அந்த ஆற்றல்களை அணியமாக்கும் ஆசான்களின் பணியைப் போற்றும் வகையில் 5,10,15 ஆண்டுகள் பணிநிறைவிற்கான மதிப்பளிப்பும் 20ஆண்டுகள் பணிநிறைவிற்காக ‘தமிழ் வாரிதி’ மற்றும் 25 ஆண்டுகள் பணிநிறைவிற்காக ‘தமிழ் மாணி’ எனப் பட்டமளிப்புமாக அரங்கம் அணிசெய்தமை சிறப்பு. பட்டமளிப்புகளைச் சுட்டுவதாயின் பலபக்கங்கள் எழுதலாம். அவை ஒவ்வொன்றும் விழாவுக்குள் விழாவாக நகர்ந்தமை பாராட்டிற்குரியது.

                                                             

 

K800__SMS7340.jpg

விழாவின் மகுடமாக முப்பது ஆண்டுகள் தமிழ்ப் பணியாற்றியமைக்கான மதிப்பளிப்பு அமைந்தது. அந்த மதிப்பேற்பைச் சோலிங்கன் தமிழாலய நிர்வாகி திரு. நமசிவாயம் தர்மராஜா, சோலிங்கன் தமிழாலய ஆசிரியரும் முன்னாட் தேர்வுப்பிரிவுப் பொறுப்பாளருமான திருமதி தேவிமனோகரி தெய்வேந்திரம் மற்றும் மத்திய மாநிலச் செயற்பாட்டாளர்களில் ஒருவரான திரு. செல்லர் தெய்வேந்திரம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விழாவுக்குள் விழாவாகப் பவளவிழாவைத் தமிழ்க் கல்விக் கழகம் தன்னோடு இணைந்து பயணிக்கும் மூத்தோருக்கு மதிப்பளிக்கும் வகையிற் செயலாக்கியுள்ளது. அந்தவகையிலே வெஸ்லிங் அரங்கில் வூப்பெற்றால் தமிழாலய ஆசான் ‘தமிழ் மாணி’ றோமாலியஸ் ஸ்ரீபன் அவர்களைத் தமிழாலயக் குடும்பம் புடைசூழ அரங்கம் அழைத்துவர, தமிழ்க் கல்விக் கழகத்தால் வாழ்த்துப் பாவுடனான பட்டயம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதோடு, நிர்வாகி மற்றும் ஆசிரியர்களது வாழ்த்துரைகளும் இடம்பெற்றன.

வேற்றுமொழிச் சூழலுள் தமிழோடு பயணிக்கும் தமிழ்ப் பெற்றோரது அயராத முயற்சியும் ஆசான்களின் ஒருங்கிணைந்த முயற்சியின் பயனாக ஆண்டு 12வரை தமிழாலயங்களில் கற்றலை நிறைவுசெய்தோருக்கான மதிப்பளிப்பு தமிழ்க் கல்விக் கழகத்தின் மற்றொரு பரிமாணமாய்த் துலங்கியது. இந்த மாணவர்களை நோக்கி, எம் தேசத்திற்காக என்ன செய்யப் போகின்றோம்? என்று தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் தனது உரையிலே வினவியமையையும் அவதானிக்க முடிந்தது.

K800__SMS6654-200x300.jpg

அகவை நிறைவு விழாவின் முத்தாரமாய் தமிழாலயக் குடும்பம் ஒன்றுகூடி முயற்சியும் பயிற்சியுமாக ஒன்றிணைந்து உழைத்ததன் அறுவடையாகத் தமிழ்த்திறன், தேர்வு, கலைத்திறன் எனத் தமிழாலயங்கள் தமதாக்கிய வெற்றிக்கனிகளின் பயனாகச் சிறப்பு மதிப்பளிப்புகள் வழங்கப்பட்டன.
மாநில மட்டத்தில் நடைபெற்ற கலைத்திறன் போட்டியில் முறையே முதல் மூன்று நிலைகளைத் தமிழாலயம் முன்சன்கிளட்பாக், தமிழாலயம் நொய்ஸ், தமிழாலயம் வூப்பெற்றால் ஆகியனவும் தமிழ்த்திறன் போட்டியில், யேர்மனி தழுவிய மட்டத்தில் தமிழாலயம் முன்சன்கிளட்பாக் இரண்டாம் நிலையைப் பெற்றமைக்கும் பொதுத்தேர்வில் யேர்மனி தழுவிய மட்டத்தில் தமிழாலயம் காகன் இரண்டாம் நிலையையும் தமிழாலயம் முன்சன்கிளட்பாக் மூன்றாம் நிலையைப் பெற்றமைக்கும் தமிழாலயங்கள் தனித்துவமாக அணி அணியாக அரங்கிற்கு வருகைதந்து, தங்கள் மகிழ்வுகளைக் கொண்டாடியதோடு மதிப்பேற்பையும் பெற்றுக்கொண்டன. வெற்றிபெற்ற தமிழாலயங்களைப் பாராட்டிப் பொறுப்பாளர் மற்றும் பிரிவுசார் பொறுப்பாளர்களின் வாழ்த்துரையும் இடம்பெற்றது.

 

நிறைவாக விழாவைச் சிறப்பாக நடாத்திய இளையோருக்கான மதிப்பளிப்போடு, நன்றியுரையைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் என்ற நம்பிக்கையோடு மத்திய மாநிலத்திற்கான அகவை நிறைவு விழா நிறைவுற்றது.

அதேவேளை நான்கு மாநிலங்களின் அகவை நிறைவு விழா 16.04.2022 சனிக்கிழமை தென்மேற்கு மாநிலத்தில் குன்ஸ்ரற்ரன் நகரிலும் 17.04.2022 ஞாயிற்றுக்கிழமை வடமத்திய மாநிலத்தில் ஆன்ஸ்பேர்க் நகரிலும் 24.04.2022 ஞாயிற்றுக்கிழமை வடமாநிலத்தில் பீலபெல்ட் நகரிலும்  நிறைவில் 30.04.2022 சனிக்கிழமை தென்மாநிலத்தில் ஸ்ருட்காட் நகரிலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

WhatsApp-Image-2022-04-10-at-14.50.36.jp

K800__SMS6654-rotated.jpg

SMS8054-scaled.jpg
K800__SMS6584.jpg
K800__SMS6592.jpg
K800__SMS6593.jpg
K800__SMS6602.jpg
K800__SMS6610.jpg
K800__SMS6626.jpg
K800__SMS6637.jpg
K800__SMS6641.jpg
K800__SMS6651.jpg
K800__SMS6669.jpg
K800__SMS6705.jpg
K800__SMS6708.jpg
K800__SMS6727.jpg
K800__SMS6748.jpg
K800__SMS6774.jpg
K800__SMS6785.jpg
K800__SMS6788.jpg
K800__SMS6792.jpg
K800__SMS6798.jpg
K800__SMS6800.jpg
K800__SMS6802.jpg
K800__SMS6804.jpg
K800__SMS6808.jpg
K800__SMS6809.jpg
K800__SMS6813.jpg
K800__SMS6815.jpg
K800__SMS6818.jpg
K800__SMS6819.jpg
K800__SMS6822.jpg
K800__SMS6834.jpg
K800__SMS6837.jpg
K800__SMS6841.jpg
K800__SMS6861.jpg
K800__SMS6866.jpg
K800__SMS6876.jpg
K800__SMS6881.jpg
K800__SMS6890.jpg
K800__SMS6901.jpg
K800__SMS6907.jpg
K800__SMS6911.jpg
K800__SMS6923.jpg
K800__SMS6945.jpg
K800__SMS6967.jpg
K800__SMS6982.jpg
K800__SMS6998.jpg
K800__SMS7015.jpg
K800__SMS7019.jpg
K800__SMS7021.jpg
K800__SMS7030.jpg
K800__SMS7032.jpg
K800__SMS7034.jpg
K800__SMS7035.jpg
K800__SMS7041.jpg
K800__SMS7046.jpg
K800__SMS7048.jpg
K800__SMS7052.jpg
K800__SMS7058.jpg
K800__SMS7060.jpg
K800__SMS7063.jpg
K800__SMS7067.jpg
K800__SMS7070.jpg
K800__SMS7073.jpg
K800__SMS7084.jpg
K800__SMS7088.jpg
K800__SMS7096.jpg
K800__SMS7098.jpg
K800__SMS7109.jpg
K800__SMS7139.jpg
K800__SMS7166.jpg
K800__SMS7176.jpg
K800__SMS7207.jpg
K800__SMS7208.jpg
K800__SMS7215.jpg
K800__SMS7226.jpg
K800__SMS7231.jpg
K800__SMS7237.jpg
K800__SMS7241.jpg
K800__SMS7246.jpg
K800__SMS7251.jpg
K800__SMS7255.jpg
K800__SMS7258.jpg
K800__SMS7262.jpg
K800__SMS7267.jpg
K800__SMS7270.jpg
K800__SMS7278.jpg
K800__SMS7281.jpg
K800__SMS7284.jpg
K800__SMS7291.jpg
K800__SMS7307.jpg
K800__SMS7309.jpg
K800__SMS7313.jpg
K800__SMS7319.jpg
K800__SMS7323.jpg
K800__SMS7325.jpg
K800__SMS7329.jpg
K800__SMS7337.jpg
K800__SMS7340.jpg
K800__SMS7355.jpg
K800__SMS7359.jpg
K800__SMS7366.jpg
K800__SMS7368.jpg
K800__SMS7374.jpg
K800__SMS7376.jpg
K800__SMS7380.jpg
K800__SMS7396.jpg
K800__SMS7400.jpg
K800__SMS7403.jpg
K800__SMS7454.jpg
K800__SMS7498.jpg
K800__SMS7508.jpg
K800__SMS7513.jpg
K800__SMS7531.jpg
K800__SMS7533.jpg
K800__SMS7537.jpg
K800__SMS7546.jpg
K800__SMS7552.jpg
K800__SMS7560.jpg
K800__SMS7569.jpg
K800__SMS7592.jpg
K800__SMS7607.jpg
K800__SMS7628.jpg
K800__SMS7703.jpg
K800__SMS7739.jpg
K800__SMS7761.jpg
K800__SMS7836.jpg
K800__SMS7841.jpg
K800__SMS7921.jpg
K800__SMS7933.jpg
K800__SMS7962.jpg
K800__SMS7970.jpg
K800__SMS7985.jpg
K800__SMS8008.jpg
K800__SMS8026.jpg
K800__SMS8028.jpg
K800__SMS8030.jpg
K800__SMS8035.jpg
K800__SMS8041.jpg
K800__SMS8047.jpg
K800__SMS8051.jpg
K800__SMS8056.jpg
K800__SMS8060.jpg
K800__SMS8066.jpg
K800__SMS8068.jpg
K800__SMS8077.jpg
K800__SMS8078.jpg
K800_DSC_0881.jpg
K800_DSC_1061.jpg

தமிழ்க் கல்விக்கழகத்தின் 32 ஆவது அகவை விழா-2022 யேர்மனி மத்தியமாநிலம். – குறியீடு (kuriyeedu.com)

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.    
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
    • வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து...............இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரிய‌வ‌ரே..........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.