Jump to content

இலங்கைக்கு... இந்தியா,  மேலும்  "2 பில்லியன் அமெரிக்க டொலர்" நிதி உதவி.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடுமையான நிதி நெருக்கடி- இந்தியாவிடம் 73ஆயிரம் கோடி ரூபாய் கடன் கோரும் இலங்கை!

இலங்கைக்கு... இந்தியா,  மேலும்  "2 பில்லியன் அமெரிக்க டொலர்" நிதி உதவி.

இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்குத் தேவையான உணவு மற்றும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த நிதி வழங்கப்படவுள்ளது.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போது இந்தியாவுடன் ஒரு பில்லியன் டொலரை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, அவருடனான சந்திப்பையடுத்து, முன்னாள் நிதியமைச்சரினால் மேலும் ஒரு பில்லியன் டொலருக்கான கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1276502

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுத்து கொடுத்து கோவனாண்டி ஆகபோறான் கிந்தியன் ..👍..😊

CPSWou.gif

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கொடுத்து கொடுத்து கோவனாண்டி ஆகபோறான் கிந்தியன் ..👍..😊

CPSWou.gif

சின்ன மீனை போட்டுத்தான் பெரிய மீனை பிடிக்கமுடியும்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரை கைதூக்கி விடுவதால், இவரோடு சேர்ந்து தானும் தடக்கி விழுவதை தடுத்து விடலாம் என எண்ணி உதவுகிறாரோ?

Link to comment
Share on other sites

1 hour ago, vasee said:

சின்ன மீனை போட்டுத்தான் பெரிய மீனை பிடிக்கமுடியும்

இதைத்தான் நானும் நினைத்தேன். இந்தியா இலங்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இதுதான் சரியான சந்தர்ப்பம். 
இலங்கை இந்த நிலமைக்கு வருவது இந்தியாவின் நிகழ்ச்சி நிரலோ என்றும் தோன்றுகிறது. முன்பு போர்ச் சூழல் காரணமாக இலங்கை முன்னேற முடியாமல் இருந்தது. இப்போது போர் இல்லை. ஆனாலும் நிலமை இன்னும் மோசமாகியுள்ளது. இலங்கைக்கு உள்ள 53 பில்லியன் கடன்களில் எத்தனை வீதம் இந்தியாவுக்கானது, அது என்ன தேவைக்காக வழங்கப்பட்டது என்ற விபரங்கள் சரியாகத் தெரியவில்லை. ஒவ்வொரு வருடமும் இதற்கான வட்டி கட்டுவதே சவாலாக இருக்கும். அபிவிருத்தியை நோக்கிப் பயணித்தால் கடனில் பாதி செலுத்தவே 10 வருடங்களுக்கு மேலாகும். இன்னும் குறைந்தது 15 வருடங்களுக்காவது இலங்கை இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் எந்த நிலையில் உள்ளனவோ அதே நிலையில் இருக்கும் - எதிர்பாராத பூகோள அரசியல் மாற்றம் ஏதாவது நிகழாவிட்டால்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இலங்கைக்கு... இந்தியா,  மேலும்  "2 பில்லியன் அமெரிக்க டொலர்" நிதி உதவி.

இந்த நிதியில் மகிந்த திருப்பதி தரிசன செலவும் அடங்குமா சேர்? 🤣

Sri Lankan PM Rajapaksa offers prayers at Tirupati | Latest News India -  Hindustan Times

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாத்தையா பிரதமர் ஆவதற்கு முன்னால் உந்த விரல்களில் மின்னுவதெல்லாம் இருக்கவில்லை, ஒரு தங்க மந்திரக்கோல் கொண்டு திரிந்தாரே ....  அதெல்லாம் எங்கிருந்து வந்தது? மைத்திரியும் ஒரு மோதிரத்தோடு வந்தார் போகும்போது அவரும் சேர்த்துக்கொண்டார். இவர்கள் அடித்த கொள்ளை; நாடு வற்றி பற்றி எரியுது. போரின் பின் தமிழ் மக்களின் தங்கத்தினை கோத்தா இந்தியாவுக்கு நடத்தியதாக ஒரு கதை அடிபட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

இதைத்தான் நானும் நினைத்தேன். இந்தியா இலங்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இதுதான் சரியான சந்தர்ப்பம். 
இலங்கை இந்த நிலமைக்கு வருவது இந்தியாவின் நிகழ்ச்சி நிரலோ என்றும் தோன்றுகிறது. முன்பு போர்ச் சூழல் காரணமாக இலங்கை முன்னேற முடியாமல் இருந்தது. இப்போது போர் இல்லை. ஆனாலும் நிலமை இன்னும் மோசமாகியுள்ளது. இலங்கைக்கு உள்ள 53 பில்லியன் கடன்களில் எத்தனை வீதம் இந்தியாவுக்கானது, அது என்ன தேவைக்காக வழங்கப்பட்டது என்ற விபரங்கள் சரியாகத் தெரியவில்லை. ஒவ்வொரு வருடமும் இதற்கான வட்டி கட்டுவதே சவாலாக இருக்கும். அபிவிருத்தியை நோக்கிப் பயணித்தால் கடனில் பாதி செலுத்தவே 10 வருடங்களுக்கு மேலாகும். இன்னும் குறைந்தது 15 வருடங்களுக்காவது இலங்கை இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் எந்த நிலையில் உள்ளனவோ அதே நிலையில் இருக்கும் - எதிர்பாராத பூகோள அரசியல் மாற்றம் ஏதாவது நிகழாவிட்டால்.

இலங்கை நினைப்பது போல இந்தியாவையும் சீனாவையும் வைத்து இராஜதந்திரமாக தனது நலனை பெறலாம் என, ஆனால் இந்த சந்தர்ப்பம் இந்தியாவிற்கு மிகப்பெரிய வாய்ப்பு, இந்தியாவிற்கு இழப்பாக எதுவும் இல்லை ஆனால் இலங்கை இந்தியாவிடம் பேரம் பேசும் ஆற்றல் இழந்துவிட்டது, தனது இறையாண்மையை இழந்துவிட்டது, இப்போது இலங்கைக்கு செய்யப்படும் உதவி இலங்கையினை இந்த பிரச்சினையிலிருந்து மீட்பதற்காக அல்ல, மற்றவர்கள் எரியிர வீட்டில் புகுந்து எடுப்பதை தடுப்பதற்காக செய்யப்படும் உதவிகள்.

இது ஒரு அறவிடமுடியாகடன் என்பது இந்தியாவிற்கும் தெரியும், ஆனால் அதனை விட இந்தியாவிற்கு இந்த அறவிட முடியா கடனால் பல மடங்கு அரசியல் பொருளாதார ரீதியாக இலாபம், பொருளாதார ரீதியாக குறிப்பிடுவதானால் இந்தியாவிற்கு வரும் கப்பல்கள்  கொழும்பினூடகவே வருவதாகக்கூறுகிறார்கள், இந்து சமுத்திரத்தில் திருகோணமலைதுறைமுகம், மன்னாரில் எண்ணெய் என மிக முக்கிய பொருளாதார இலக்குகள் இந்தியாவிடம் ஏற்கனவே உள்ளது, சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளது அது பொருலாதார ரீதியாக முக்கியத்துவமற்ற துறைமுகம்.

இலங்கை நாணயம் பெறுமதியிழந்தால் இந்திய ரூபாதான் இலங்கையில் பாவிக்கப்படும் ( இது எனது சந்தேகம்), ஒரு வகையில் இதுவும் நல்லதுதான்,  பெரும்பான்மையின சிங்களவர்களுக்கும் அவர்களுடன் சேர்ந்து முஸ்லீமகளுக்கும் இந்தியாவை பிடிக்காது ஆனால் இனிமேல் இந்தியாவுக்கு கட்டுப்பட்டு தானிருக்கவேண்டும், தமிழர்கள் பேரம்பேசும் ஆற்றல் அதிகரிக்கும்.

தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக சிங்களவர்களை விட பேரம் பேசும் ஆற்றல் அதிகரிக்கும், அதற்கு காரணம் தமிழகத்துடன் எமக்கிருக்கும் பூர்வீக தொடர்பு, முன்பு போல் இந்தியா இலங்கையின் கைப்பொம்மை இல்லை, இனி இலங்கைதான் இந்தியாவின் கை பொமை.

இதன் மூலம் தமிழர் தமது அரசியல் உரிமையை பெறுவதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் உருவாகிறது.

சீனா இலங்கையில் மேற்கொண்டு தலையிடாமல் பார்த்து கொண்டாலே போதும். ( இது எனது தனிப்பட்ட கருத்து தவறாக இருக்கலாம்)

  • Like 2
Link to comment
Share on other sites

5 hours ago, vasee said:

இனி இலங்கைதான் இந்தியாவின் கை பொமை.

இதன் மூலம் தமிழர் தமது அரசியல் உரிமையை பெறுவதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் உருவாகிறது

பேரதிசயமாக இலங்கை அரசானது தமிழர்களுக்கு அரசியல் உரிமையைக் கொடுக்க கொடுப்பதற்கு முன்வந்தாலும் இந்தியா விடாது. இருந்தாலும் இலங்கையின் வட கிழக்கு இந்தியாவின் மாகாணங்கள் ஆகி அதன் ஆளுமைக்கு உள்ளானால் நிலமை வேறாகலாம்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடன் பெறப்போய், புதுப்புதுப்பிரச்னைகளை வாங்கி வாறானுகள். இனி இந்தியா தமிழருக்கு உரிமை வாங்கி குடுக்கப்போகுது என்று பூச்சாண்டி காட்டி சிங்களமக்களிடம் வாக்கும் வாங்க முடியாது. சிங்களமக்களே இப்போ நேரடியாக இந்தியாவுக்கு நன்றி சொல்லிகொண்டுஇருக்கிறார்கள். இந்தியா ரோசங்கெடாதுபோல் இருந்து நாசூக்காக ஆட்டக்காரரை விழுத்துகிறது தன் வலையில். நம் ஆட்டக்காரருக்கு பந்தை கையில் கொடுத்து போட வழிவிட்டாலும்; எதிரணியிடம் பந்தை கொடுத்து கைதட்டி அவர்களின் ஆட்டத்தை ரசிக்கும் இவர்களை நம்பி ஆட்டத்தை பற்றி எதிர்வு கூற  முடியாமலுள்ளது. முதலில் திறனற்றவர்களை நீக்கி, அணியை சீர்படுத்த வேண்டும். அதுவரை நாம் அவர்களின் ஆட்டத்தை காண வேண்டியதுதான். 

1 hour ago, Paanch said:

பேரதிசயமாக இலங்கை அரசானது தமிழர்களுக்கு அரசியல் உரிமையைக் கொடுக்க கொடுப்பதற்கு முன்வந்தாலும் இந்தியா விடாது

அதுக்கும் ஒரு வழி பிறக்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, இணையவன் said:

இதைத்தான் நானும் நினைத்தேன். இந்தியா இலங்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இதுதான் சரியான சந்தர்ப்பம். 
இலங்கை இந்த நிலமைக்கு வருவது இந்தியாவின் நிகழ்ச்சி நிரலோ என்றும் தோன்றுகிறது. முன்பு போர்ச் சூழல் காரணமாக இலங்கை முன்னேற முடியாமல் இருந்தது. இப்போது போர் இல்லை. ஆனாலும் நிலமை இன்னும் மோசமாகியுள்ளது. இலங்கைக்கு உள்ள 53 பில்லியன் கடன்களில் எத்தனை வீதம் இந்தியாவுக்கானது, அது என்ன தேவைக்காக வழங்கப்பட்டது என்ற விபரங்கள் சரியாகத் தெரியவில்லை. ஒவ்வொரு வருடமும் இதற்கான வட்டி கட்டுவதே சவாலாக இருக்கும். அபிவிருத்தியை நோக்கிப் பயணித்தால் கடனில் பாதி செலுத்தவே 10 வருடங்களுக்கு மேலாகும். இன்னும் குறைந்தது 15 வருடங்களுக்காவது இலங்கை இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் எந்த நிலையில் உள்ளனவோ அதே நிலையில் இருக்கும் - எதிர்பாராத பூகோள அரசியல் மாற்றம் ஏதாவது நிகழாவிட்டால்.

இந்தியாவிடம் இலங்கை பெற்றுள்ள கடன் மிக சொற்பமானது, ஆனால் இந்த தரவு கடந்த ஆண்டிற்குரியது,

இதில் குறிப்பிடப்படும் விடயம் என்னவென்றால், வெளிநாட்டுக்கடன் 35.5 பில்லியன் என இலங்கையரசு தற்போது ஒத்துக்கொண்டுள்ளது, கடந்த ஆண்டு சித்திரையில் 35.1 பில்லியன் வெளிநாட்டுக்கடன் என ஒத்துகொண்டுள்ளது இந்த 12 மாதகாலப்பகுதியில் வெறும் 0.4 பில்லியனா இலங்கை கடன் வாங்கியுள்ளது? 

அப்படியானால் இலங்கையின் உள்நாட்டு கடன் கிட்டத்தட்ட 20 பில்லிய்னாக இருக்குமா? அதாவது உள்நாட்டில் இலங்கை வங்கிகளில் அரசு பெற்ற கடன், இது உண்மையானால் இலங்கை பொருளாதாரம் மிகப்பெரிய பேரழிவை சந்திக்கவுள்ளது இலங்கை வங்குரோத்தாகும் போது.

http://www.erd.gov.lk/index.php?option=com_content&view=article&id=102&Itemid=308&lang=en

பல இலங்கை உள்நாட்டு வங்கிகள் முறிவடையும் நிலை உருவாகலாம்.

Edited by vasee
  • Like 2
Link to comment
Share on other sites

22 hours ago, குமாரசாமி said:

இந்த நிதியில் மகிந்த திருப்பதி தரிசன செலவும் அடங்குமா சேர்? 🤣

Sri Lankan PM Rajapaksa offers prayers at Tirupati | Latest News India -  Hindustan Times

முகக்கவசம் அணியாமல் சிராந்தி திருப்பதியானை வணங்கியதால் திருப்பதியானுக்கும் கொரோனா தொற்றிக்கொண்டதாம். அதனால் திருப்பதியானுக்கு செலவாகும் மருந்துச் செலவுகளும் இந்த நிதியில் அடங்குமாம். 😲 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, இணையவன் said:

இதைத்தான் நானும் நினைத்தேன். இந்தியா இலங்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இதுதான் சரியான சந்தர்ப்பம். 
இலங்கை இந்த நிலமைக்கு வருவது இந்தியாவின் நிகழ்ச்சி நிரலோ என்றும் தோன்றுகிறது. முன்பு போர்ச் சூழல் காரணமாக இலங்கை முன்னேற முடியாமல் இருந்தது. இப்போது போர் இல்லை. ஆனாலும் நிலமை இன்னும் மோசமாகியுள்ளது. இலங்கைக்கு உள்ள 53 பில்லியன் கடன்களில் எத்தனை வீதம் இந்தியாவுக்கானது, அது என்ன தேவைக்காக வழங்கப்பட்டது என்ற விபரங்கள் சரியாகத் தெரியவில்லை. ஒவ்வொரு வருடமும் இதற்கான வட்டி கட்டுவதே சவாலாக இருக்கும். அபிவிருத்தியை நோக்கிப் பயணித்தால் கடனில் பாதி செலுத்தவே 10 வருடங்களுக்கு மேலாகும். இன்னும் குறைந்தது 15 வருடங்களுக்காவது இலங்கை இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் எந்த நிலையில் உள்ளனவோ அதே நிலையில் இருக்கும் - எதிர்பாராத பூகோள அரசியல் மாற்றம் ஏதாவது நிகழாவிட்டால்.

என்ன இருந்தாலும் சிறிலங்காவை பொருத்தவரை இந்தியாவின் பொறுமையை பாராட்டத்தான் வேணும் .....58 ஆண்டு இனக்கலவரத்தில் அப்பட்ட எப்பா மசால வடே ...என்று சொல்லி அடிச்சவங்கள் என எனது தந்தை சொல்வார் ...முக்கியமா அது இந்தியாவுக்கு எதிரான துவேசம்,........அதன் பின்பு பல இந்தியா எதிர்ப்பு வேலைகளை செய்தார்கள் ...இன்று மாட்டுப்பட்டு போய் முழிக்கின்றனர்

  • Like 2
Link to comment
Share on other sites

23 minutes ago, putthan said:

இறுதியில் எல்லோரும் சொல்வதுபோல் இந்தியாவே எமது தலைவிதியை நிர்ணயிக்கும். 
இந்தியாவை எதிர்த்து எம்மால் எதுவுமே செய்ய முடியாது என்பது உண்மைதான் போலுள்ளது. இலங்கையின் அபிவிருத்தி முன்னேற்றம் எல்லாமே ஒரு எல்லையைத் தாண்ட முடியாது.

  • Like 1
Link to comment
Share on other sites

8 hours ago, vasee said:

இந்தியாவிடம் இலங்கை பெற்றுள்ள கடன் மிக சொற்பமானது, ஆனால் இந்த தரவு கடந்த ஆண்டிற்குரியது,

இதில் குறிப்பிடப்படும் விடயம் என்னவென்றால், வெளிநாட்டுக்கடன் 35.5 பில்லியன் என இலங்கையரசு தற்போது ஒத்துக்கொண்டுள்ளது, கடந்த ஆண்டு சித்திரையில் 35.1 பில்லியன் வெளிநாட்டுக்கடன் என ஒத்துகொண்டுள்ளது இந்த 12 மாதகாலப்பகுதியில் வெறும் 0.4 பில்லியனா இலங்கை கடன் வாங்கியுள்ளது? 

அப்படியானால் இலங்கையின் உள்நாட்டு கடன் கிட்டத்தட்ட 20 பில்லிய்னாக இருக்குமா? அதாவது உள்நாட்டில் இலங்கை வங்கிகளில் அரசு பெற்ற கடன், இது உண்மையானால் இலங்கை பொருளாதாரம் மிகப்பெரிய பேரழிவை சந்திக்கவுள்ளது இலங்கை வங்குரோத்தாகும் போது.

http://www.erd.gov.lk/index.php?option=com_content&view=article&id=102&Itemid=308&lang=en

பல இலங்கை உள்நாட்டு வங்கிகள் முறிவடையும் நிலை உருவாகலாம்.

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 51 பில்லியன் என்று 3 நாளைக்கு முன் இந்தச் செய்தி கூறுகிறது.
https://www.bfmtv.com/economie/international/le-sri-lanka-annonce-un-defaut-de-paiement-sur-sa-dette-exterieure-de-51-milliards-de-dollars_AD-202204120167.html

இலங்கை வங்குரோத்தாகும் என்று நான் நினைக்கவில்லை. அந்த நிலைக்குக் கொண்டு செல்லும் அவசியம் வெளிநாடுகளுக்கு இல்லை. நுகர்வோர் சந்தையை அவை இழக்க முயற்சிக்க மாட்டாது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. சினிமாவில் லைக்கா போன்ற பெரு முதலாளிகள் முதலீடு.

2. ஈழத்தமிழர் சினிமா வாடிக்கை.

3. புலம்பெயர் இலக்கையருக்கான உணவு, இந்தியாவில் இருந்து, கேரளத்தில் இருந்து, பூநகரி மொட்டடைகருப்பன், ஆணைக்கோட்டை சுத்தமான நல்லண்ணை, இதயம் நல்லெண்ணெய், சக்தி சாம்பார் பொடி, யாழ்ப்பாண பாரம்பரிய மிளகாய் தூள், அனைத்துமே Produce of  India (சட்டப்படி ) லேபிளுடன் வரும் நிலையில்.....

4. சேலை, பட்டு சேலை..... பக்தி சுற்றுலா தேவைகள் என ஆகக்குறைந்தது வருசம் $3 - $4 பில்லியன் வருமானம் வரும் போது,

எமது பிரச்சனையினை தீர்க்க, இந்தியா முன்வரலாம் என்பது, வீண் எண்ணம்.

மாறாக, இந்த யதார்த்தத்தினை சிங்களத்துக்கு புரிய வைப்பதே பலன் தரும்...

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, இணையவன் said:

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 51 பில்லியன் என்று 3 நாளைக்கு முன் இந்தச் செய்தி கூறுகிறது.
https://www.bfmtv.com/economie/international/le-sri-lanka-annonce-un-defaut-de-paiement-sur-sa-dette-exterieure-de-51-milliards-de-dollars_AD-202204120167.html

இலங்கை வங்குரோத்தாகும் என்று நான் நினைக்கவில்லை. அந்த நிலைக்குக் கொண்டு செல்லும் அவசியம் வெளிநாடுகளுக்கு இல்லை. நுகர்வோர் சந்தையை அவை இழக்க முயற்சிக்க மாட்டாது.

துரதிர்ஸ்டவசமாக இலங்கை வங்குரோத்தாவது தவிர்க்கமுடியாது.  

இலங்கை வங்குரோத்தாவதை தடுக்க இதுவரை எந்த நாடும் முயற்சிக்கவில்லை, இப்போது கொடுக்கும் காசு கூட கடனடிப்படையில் கொடுப்பதால் இலங்கைக்கு மேலும் சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளதே தவிர குறையாது.

இலங்கை ஏற்றுமதி இறக்குமதியினால் ஏற்படுகின்ற பற்றாக்குறை இலங்கை GDP இல 1 - 2 வீதம் மட்டுமேயானது அதாவது இறுதியாக 2.2 பில்லியன் இறக்குமதி, 1.1 பில்லியன் ஏற்றுமதி பற்றாக்குறை 1.1 பில்லியன் அவற்றில் பெரும் பகுதியை இந்தியாவில் இருந்து இரக்குமதி செய்கிறது.

இலங்கை கடனை மீள ஒழுங்குபடுத்தும்போது எந்த கடனும் தள்ளுபடி செய்யப்படாது போலத்தான் (haircut) உள்ளது, யாழ் திரைகடலோடி பகுதியில் பிரபா ஒரு கட்டுரை இணைத்துள்ளார்.

இலங்கை கடன் எதனால் உருவானது என்பதுதான் மிகப்பெரிய கேள்வி, ஏனென்றால் இலங்கை ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக இடைவெளியை நிரப்ப இலங்கையால் இலகுவாக முடியும் BOP= Current Account + Capital Account + Financial Account , ஆனால் இது ஊழல்களால் வந்த கடன் போல் உள்ளது (இது தொடர்பாக முன்பே வேறு ஒரு திரியில் விரிவாக விவாதித்ததால் மீண்டும் கூறவில்லை) இந்த நிலையில் யாரோ சிலர் செய்யும் ஊழலுக்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்.

இலங்கை GDP இல் இலங்கை கடன் 104 வீதமாக உள்ளது, இலங்கை ஒவ்வொரு நிதியாண்டும் பற்றாக்குறை பாதீட்டையே சமர்ப்பிக்கிறது (2017 குமாரசாமி மத்திய வங்கி ஆளுநராக இருந்தபோது மட்டும் விதி விலக்கு)

எவ்வாறு இவ்வளவு கடனையும் இலங்கையால் கட்டமுடியும்? இந்தக்கடனுக்கான வட்டியையாவது கட்டமுடியுமா?

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, vasee said:

தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக சிங்களவர்களை விட பேரம் பேசும் ஆற்றல் அதிகரிக்கும், அதற்கு காரணம் தமிழகத்துடன் எமக்கிருக்கும் பூர்வீக தொடர்பு, முன்பு போல் இந்தியா இலங்கையின் கைப்பொம்மை இல்லை, இனி இலங்கைதான் இந்தியாவின் கை பொமை.

தொப்புழ்க் கோடி உறவை முன்வைத்து
ஈழ மக்களுக்கு எந்த விடிவும் கிடையாது .
மாறாக தமிழ் நாடு இந்தியாவின் கைகளில்
இருக்க வேண்டுமென்றால் இலங்கை
புகைந்து கொண்டே இருக்க வேண்டும்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ருப்பிதேர மஸ்தானா... 
மெரே மித்துவா.. 
ஏ.. தோஸ்து கீ ...
போன்ற பல அருமையான ஹிந்தி பாடல்கள் மறுபடி  ரேடியோவில் கேட்கலாம் போல் தெரிகின்றது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, வாத்தியார் said:

தொப்புழ்க் கோடி உறவை முன்வைத்து
ஈழ மக்களுக்கு எந்த விடிவும் கிடையாது .
மாறாக தமிழ் நாடு இந்தியாவின் கைகளில்
இருக்க வேண்டுமென்றால் இலங்கை
புகைந்து கொண்டே இருக்க வேண்டும்

அப்பிடிபார்த்தாலும் இனி சிங்களப்பெரும்பான்மையின் விருப்பிற்கு இந்தியா முன்னுரிமை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை, ஏனென்றால் இனி இலங்கை இந்தியாவின் கைகளில் உள்ளது.

எனது தமிழக நண்பர் ஒருவர் சொன்ன ஒரு சம்பவத்தை இதற்கு உதாரணமாகக்கூறுகிறேன்.

எனது நண்பரின் நண்பர் தனது திருமண அழைப்பிதலில் போட்டிருந்தாராம், திருமணமான முதல் வருடம் கணவன் பேச்சை மனைவி கேட்பார், இரண்டாம் வருடம் மனைவியின் பேச்சை கணவன் கேட்பார், மூன்றாம் வருடம் இருவரது பேச்சையும் (சண்டையினை) பக்கத்து வீட்டார் கேட்பார், நான் பேசுவதை காண எனது திருமணத்திற்கு வாருங்கள் என்று.

இனி பெரும்பான்மை சிங்களத்திற்கு முன்னுரிமை இல்லை, இலங்கையின் நிலை 3ஆம் வருட நிலை.

16 hours ago, colomban said:

ருப்பிதேர மஸ்தானா... 
மெரே மித்துவா.. 
ஏ.. தோஸ்து கீ ...
போன்ற பல அருமையான ஹிந்தி பாடல்கள் மறுபடி  ரேடியோவில் கேட்கலாம் போல் தெரிகின்றது.

சிட்னியில் எனக்கு தெரிந்த பெரும்பான்ம இனத்தினை சேர்ந்த நண்பரது பிள்ளைகளுக்கு சீன மொழி கற்பித்தார்கள் ( 2 - 3 வருடங்களுக்கு முன்),  அவர்கள் எல்லாவற்றிலும் ஒரு படி முன்னால்தான் இருப்பார்கள்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎14‎-‎04‎-‎2022 at 15:42, vasee said:

இலங்கை நாணயம் பெறுமதியிழந்தால் இந்திய ரூபாதான் இலங்கையில் பாவிக்கப்படும் ( இது எனது சந்தேகம்), ஒரு வகையில் இதுவும் நல்லதுதான்,  பெரும்பான்மையின சிங்களவர்களுக்கும் அவர்களுடன் சேர்ந்து முஸ்லீமகளுக்கும் இந்தியாவை பிடிக்காது ஆனால் இனிமேல் இந்தியாவுக்கு கட்டுப்பட்டு தானிருக்கவேண்டும், தமிழர்கள் பேரம்பேசும் ஆற்றல் அதிகரிக்கும்.

இது எப்படி என்று சொல்வீ ர்களா?...இந்த பொருளாதார பிரச்சனைக்கு முன்பே இந்திய ரூபா இலங்கை ரூபாவை விட பெறுமதி அதிகம் அல்லவா ?...
ஒரு போதும் இந்தியாவின் கட்டுபாட்டுக்குள் இலங்கை போகாது....அப்படி ஒரு நிலைமை வந்தால் அது சிங்களவர்களை விட தமிழருக்கு தான் ஆபத்து  
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

 .....இந்தியாவுக்குள் போகாது ஆனால் போனமாதிரி.........58/60 களில் இலங்கையின் பெறுமதி அதிகம்  இலங்கை1 ரூபாவுக்கு இந்தியா வில் 1:50 ரூபா 
தமிழனுக்கு யார் வந்தாலும் இனி பிரச்சனை இல்லை.....
முஸ்லீம்கள் பயப்படுவார்கள்

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

இது எப்படி என்று சொல்வீ ர்களா?...இந்த பொருளாதார பிரச்சனைக்கு முன்பே இந்திய ரூபா இலங்கை ரூபாவை விட பெறுமதி அதிகம் அல்லவா ?...
ஒரு போதும் இந்தியாவின் கட்டுபாட்டுக்குள் இலங்கை போகாது....அப்படி ஒரு நிலைமை வந்தால் அது சிங்களவர்களை விட தமிழருக்கு தான் ஆபத்து  
 
இது முன்பு ஒரு திரியில் பதிந்த ஒளிப்படம்.

சிம்பாவே நாட்டு காசு பெறுமதியிழந்தபோது டொலரை அந்த நாட்டின் நாணயமாக பயன்படுத்துகின்றனர், இதனை டொலரைசேசன் என்பார்கள், அது தவிரவும் வேறு சில நாடுகள் அமெரிக்க நாணயத்தினை தமது நாட்டில் நாணயமாக பாவிக்கிறார்கள்,Samoa, Ecuador என 16 நாடுகள் பயன்படுத்துகின்றன.

New Zealand காசை Cook island  என 4 நாடுகள் பயன்படுத்துகின்றன. இலனகை காசு பெறுமதியிழப்பு இப்படி ஏற்படாது என நினைக்கிறேன், ஆனால் அப்படி ஒரு நிலை வந்தால் இலங்கை இந்திய நாணயத்தினை தெரிவு செய்யலாம் என் கருதுகிறேன் (பெருமளவான இறக்குமதி இந்தியாவிலிருந்தே வருகிறது இலங்கைக்கு).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2022 at 13:34, putthan said:

58/60 களில் இலங்கையின் பெறுமதி அதிகம்  இலங்கை1 ரூபாவுக்கு இந்தியா வில் 1:50 ரூபா 

புத்தண்ணாவின் நல்ல ஒரு தகவல். இந்திய ஒரு ரூபா முன்பு இலங்கையில் மாற்றும் விகிதம் 2 இலங்கை ரூபாவாக இருந்ததாகவும், பின்பு தான் பெறுமதி இழந்து இரண்டு அரை, மூன்றாக வந்ததாகவும் சொன்னார்கள்.

  • Like 2
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.