Jump to content

பொருளாதார பின்னடைவு, யுத்தகுற்றம் மற்றும் ஊழலுக்கு பொறுப்பேற்று... ஜனாதிபதி பதவி விலகவேண்டும் – சுமந்திரன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

பொருளாதார பின்னடைவு, யுத்தகுற்றம் மற்றும் ஊழலுக்கு பொறுப்பேற்று... ஜனாதிபதி பதவி விலகவேண்டும் – சுமந்திரன்!

பொருளாதார பின்னடைவு, யுத்தகுற்றம் மற்றும் ஊழலுக்கு பொறுப்பேற்று ஐனாதிபதி பதவி விலகவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ராஜபக்ஷ இருட்டு அகன்று போக வேண்டும். இனமதமொழி வேறுபாடின்றி ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென மக்கள் கோருகின்றனர்.

அந்தவகையில் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுவரும் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவை வழங்குகிறோம். போராட்டத்தில் அரசியல் கலப்பு வேண்டாமென போராட்டாரர்கள் விரும்புகிறார்கள்.

வடக்கு கிழக்கில் பலர் கலந்து கொள்ள வேண்டுமென விரும்புகின்றனர். புத்தாண்டு மலரும் வேளையில் போராட்டம் வெற்றி பெற வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிரான குற்றப்பிரேரணை, நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைக்கு எதிரான சட்டத்திருத்தம் நிறைவேறினால் நாட்டில் மறுமலர்ச்சி ஏற்படும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1276584

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டு  சோத்துக்குள்  பெருச்சாளி போல் இருக்கும் சுமத்திரன்  முதலில் அரசியலில் இருந்து ஓய்வு பெறணும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

கட்டு  சோத்துக்குள்  பெருச்சாளி போல் இருக்கும் சுமத்திரன்  முதலில் அரசியலில் இருந்து ஓய்வு பெறணும். 

ஜெனிவாவில்... போர்க் குற்றத்தை, உள்ளூரில் விசாரிக்கின்றோம் 
என்று சொல்லி விட்டு வந்தவர், 
இப்போ... போர்க் குற்றத்துக்கு, ஜனாதிபதி பொறுப்பு ஏற்று 
பதவி விலக வேண்டுமாம்.
மற்றவர்களை.. மடையன் ஆக்குறாரா?

தமிழருக்கு... ஒரு சதத்துக்கு, பெறுமதி இல்லாத அரசியல்வாதி சுமந்திரன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

ஜெனிவாவில்... போர்க் குற்றத்தை, உள்ளூரில் விசாரிக்கின்றோம் 
என்று சொல்லி விட்டு வந்தவர், 
இப்போ... போர்க் குற்றத்துக்கு, ஜனாதிபதி பொறுப்பு ஏற்று 
பதவி விலக வேண்டுமாம்.
மற்றவர்களை.. மடையன் ஆக்குறாரா?

தமிழருக்கு... ஒரு சதத்துக்கு, பெறுமதி இல்லாத அரசியல்வாதி சுமந்திரன்.

நான் சொன்னேனோ என்னோ?  பிரதேசத்துக்கு பிரதேசம், இடத்துக்கு இடம், ஆளுக்கு ஆள், நாட்டுக்கு நாடு மாறி மாறி வசனம், பேட்டி கொடுத்து மக்களை ஏமாற்றும் இவர் எங்கும், எதிலும்  நிலையாக தரிக்க மாட்டார். நாளைக்கே கோத்தாவோடு விருந்தும் கொண்டாடுவார். கேட்டால் சொல்வார்; விருந்து சாப்பிடுவது பிரச்சனையில்லை, அவர்களோடு விருந்துண்ணாமல் பிரச்சனையை தீர்க்க முடியாது என்பார். அவரைப்பொறுத்தவரை விளையாட்டு, விருந்து, களியாட்டம் ஆகியவற்றிலேயே தமிழரின் பிரச்சனை தங்கியுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

வடக்கு கிழக்கில் பலர் கலந்து கொள்ள வேண்டுமென விரும்புகின்றனர்.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என சுலோகம் எடுத்து கொண்டு செல்லுங்கோ 
ஒரு கையில் சிறிலங்கா தேசிய கொடியையும் மறுகையில் வட மாகாணசபை கொடியையும்....
முடியமா உங்களால் ?

வடக்கு கிழக்கு மக்கள் ஜனநாயக முறையில் தேர்தல் நடக்கும் காலத்திலயே சொல்லி விட்டார்கள் எங்களுக்கு கோத்தபாயா வேண்டாம் என்று இவர்களின் கட்சியும் வேண்டாம் என்று ....
பிறகு என்ன புதுசா  எங்கன்ட சனம் போய் கொடி பிடிக்க வேண்டும்....
அன்று சம்பந்தன் தேசிய கொடி பிடித்தார் இன்று யாழ்ப்பாணத்தன் எல்லொரும் சிங்க கொடி பிடிக்கிறார்கள் என நீங்கள் அலப்பறை பண்ணி மகிந்தாவை போர்குற்ற விசாரணையிலிருந்து காப்பாற்றவோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

எங்களுக்கு கோத்தபாயா வேண்டாம்

எந்த இனவாத அரசும் வேண்டாம் எங்களுக்கு. இவர்கள் கை காட்டியவர்களுக்கு குத்தினோம் பாருங்கோ! அப்பவே இவர்கள்  எங்களையும், எங்கள் கோரிக்கைகளையும் தள்ளிவிட்டு எங்களை செம்மறியாட்டுக் கூட்டமாக்கி விட்டார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்வாதியள் லைம்ரைட்டிலே இருக்க வேணும்

தினசரி செய்திகளில் ஏதாவது அடிபட்டு கொண்டே இருக்க வேண்டும்.. சனம் மறந்து விடும் கண்டியலோ.😢 .. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அந்தவகையில் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுவரும் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவை வழங்குகிறோம்.

இந்த அரசுக்கு எதிராக வடக்கு கிழக்கில் ஏதாவது போராட்டம் நடக்கின்றதா இல்லையே .
பாரிய அளவில் சிங்கள மக்கள் நடத்தும் போராட்டத்தை வலுப்படுத்தும் விதத்தில் அறிக்கை விட்டிருக்கின்றார்
 
நாளை புதிய அரசு வந்தால் ஏதாவது பெட்டிகள்
வந்து சேருமல்லவா

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு கைதேர்ந்த தரகர் அதிலும் அரசியல் தரகர் அவர் அப்படித்தான் சொல்லுவார் என்ன வைசையம் எண்டால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் வரப்போகுது எனும் பயமும் வந்திட்டுதுபோல ஆனால் இனிமேல் யாராவது கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டால் ரவிராஜ் அவர்களது மனைவியைப்போல வெள்ளைப்பேப்பரில கையெளுத்து வைக்கமாட்டினம்.

 

தவிர இவருக்குச் சாதகத்தில சுக்கிரனை மாறுகண்ணோட செவ்வாய் பாக்குது அதனால போகிற இடமெல்லாம் வசை பாடல்கள்தான் அண்மையில புலம்பெயர் தேசத் தமிழரிட்டை காசு வாங்கித்தாறன் எனக்கூறி நாறியவர் அதைச் சிங்களவரே கணக்கில சேர்க்கேல்ல, மன்னார் குடியில விசாரிக்குறாங்கள் மதுரையில கதைக்கிறாங்கள் என்பதுபோல சந்திரிகா இப்பதான் கதைச்சவ ரணில் தொடர்பெடுக்கிறார் என சொல்லி தமிழர்களில் இந்தநேரத்தில் நான் பிசியான அரசியல்வாதி எனச் சொல்லித்திரிகிறார்.

  • Haha 2
Link to comment
Share on other sites

இப்ப அடிச்ச காசு கொஞ்சம் இவருக்கும் கொடுத்து,ஆக்கள் சேர்க்க  விட்டிருக்கிறார்கள்  போலிருக்கிறது. எந்த எழுச்சியிலும் கோத்தபாய போர்க் குற்றம் புரிந்தவர் என்று கோஷம் போடவில்லை . எங்கயாவது எங்கட நண்பர்கள் , முக நூலில் சிங்கள நண்பர் அப்படி எழுதியுள்ளார் என்று கூறுகிறார்கள். அனால் எவரும் அதை ஒரு காரணமாக சொல்லி அவரை பதவி விளக்க சொல்லவில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

நான் சொன்னேனோ என்னோ?  பிரதேசத்துக்கு பிரதேசம், இடத்துக்கு இடம், ஆளுக்கு ஆள், நாட்டுக்கு நாடு மாறி மாறி வசனம், பேட்டி கொடுத்து மக்களை ஏமாற்றும் இவர் எங்கும், எதிலும்  நிலையாக தரிக்க மாட்டார். நாளைக்கே கோத்தாவோடு விருந்தும் கொண்டாடுவார். கேட்டால் சொல்வார்; விருந்து சாப்பிடுவது பிரச்சனையில்லை, அவர்களோடு விருந்துண்ணாமல் பிரச்சனையை தீர்க்க முடியாது என்பார். அவரைப்பொறுத்தவரை விளையாட்டு, விருந்து, களியாட்டம் ஆகியவற்றிலேயே தமிழரின் பிரச்சனை தங்கியுள்ளது. 

இப்ப சம்..அண்டி (சிங்கல சம்பந்தி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Elugnajiru said:

இனிமேல் யாராவது கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டால் ரவிராஜ் அவர்களது மனைவியைப்போல வெள்ளைப்பேப்பரில கையெளுத்து வைக்கமாட்டினம்.

பார்த்து கதையுங்கோ இங்கிருக்கும் சும் விசுவாசிகளுக்கு  அழுகை வந்துவிடும் 😄

கொஞ்சப்பேர்  ஓடி ஒழிந்து  விட்டனர் ஆனால் யாழை பார்க்கினம்  சீதன காணிகளை சும்  காப்பாற்றுவார் எனும் நப்பாசையில் இருந்தார்கள் அவரால் முடியாது என்றவுடன் யாழில் எழுதுவதையும் நிப்பாட்டி விட்டார்கள்.😄 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த குடும்பம் பதவியில் இருப்பதுதான் தற்போதைய நிலையில் தமிழருக்கு நன்மையானது. 

இப்போதைக்கு தமிழர்  போராட்டங்கள் எதிலும் பங்குபற்றாமல, நாட்டில் நிலைமை மேலும் சீரழியும்வரை பொறுமைகாக்க வேண்டும். 

தமிழ் அரசியலாளர்கள் தங்களுக்குள் ஒற்றுமைப்படுதல்தான் தற்போதைய தேவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது தேர்தல் வைக்க சர்வதேசம் விடாது மகிந்த குடும்பம் இருப்பதை தான் அவர்களும் விரும்புவார்கள் ,காசை கையில் கொடுக்காமல் இன்னும் இரு வருடங்கள் ஆட்சி நடத்த அனுமதிப்பார்கள் அதன் பின்பு  தேர்தல்  நடக்கும் நாமல் மாத்திரம் எம்பியாக வரலாம் ஆனால் மொட்டுகட்சி மொட்டை அடித்துவிட்டு காவி உடுத்து பிச்சை பாத்திரம் ஏந்த வேண்டியான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, alvayan said:

இப்ப சம்..அண்டி (சிங்கல சம்பந்தி)

உங்களுக்கு  தெரியுமோ தெரியாது, முன்னாள் முதலமைச்சரோடு இவர் பொருதி கொண்டு திரிந்த போது;  சிங்கள சம்பந்தி, கொழும்பு வாசி, நான்தான் அவரை அரசியலுக்கு கொண்டுவந்தேன், அவர் இப்போ தன்னிச்சையாக செயற்படுகிறார், தனக்கு எதிராக செயற்படுகிறார், அவர் பதவி விலகவேண்டும், முடிந்தால்  பொல்லாத த. தே கூட்டமைப்பில் இருந்து விலகி தேர்தலில் நின்று வென்று காட்டட்டும் என்று நாகரீகமில்லாமல் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சவால் விட்டுத் திரிந்தார்.  தன்னிலை உணராமல். தன்மானமுள்ள மனிதர் விலகினார் வென்றார். அதற்கும் கட்சியை உடைத்து 
விட்டார் என குற்றஞ்சாட்டுகிறார். ஆனால் இவரோ பதவிக்காலம் முடிந்தும் தமிழரசுக்கட்சி த . தே. கூட்டமைப்பின் பேச்சாளர் என்று சொல்லிக்கொண்டு ,தன் சொந்தக்கருத்துக்களை வெளியிடுகிறார். தட்டிக்கேட்க தலைமைக்கு வக்கில்லை. தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக்க தகராறு செய்கிறார். இப்போ தனக்கென்றவுடன் அமைதியாகிவிட்டார். அவர் முன்னாள் முதலமைச்சரைப்பற்றி வெளியிட்ட கருத்துக்கள் எல்லாம் இங்கு யாழிலும் வந்தன, ஆனால் இவர் சிங்கள சம்பந்தியான சங்கதி தணிக்கை. எல்லோரும் பிரச்சனை தங்கள் தங்கள் வீட்டுக்கதவை தட்டும்வரை மற்றவர் குறைகளை சொல்லிக்காட்டி எள்ளி நகையாடுவர். தங்களுக்கு வந்தவுடன் காரணம் தேடுவர். சாணக்கியன் என்னவாகிறார் என்று பொறுத்திருந்து பாப்போம்! அவரும் தேவையில்லாமல் இவரோடு சேர்ந்து சிங்கள சம்பந்தி என்று இழுத்து கருத்து விட்டவர். எங்களுடைய வார்த்தைகளே எங்களுக்கு எதிராக திரும்பும்.  

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.