Jump to content

8 பில்லியன் டொலர் குத்தகைக்கு பல சொத்துக்களை வழங்க அரசாங்கம் உத்தேசம்?


Recommended Posts

4 minutes ago, Nathamuni said:

 

சந்தர்ப்பம், ஒருமுறை தான் வரும்.... சீனாக்காரன், இந்தியாக்காரன் வாங்குவதிலும், பார்க்க, தமிழர்கள் வாங்குவது, அவர்களுக்கும், தமிழர்களுக்கும் நல்லது.

 

நல்லதுதான்.

முன்னர் கேட்ட அதே கேள்வியைத்தான் உங்களிடமும் கேட்கிறேன். வாங்கும் தமிழர்கள் யார் ? துரோகிப் பட்டம் கொடுப்பவர்களா ? துரோகிப் பட்டம் வாங்கியவர்களா ? ஏனென்றால் வெளிநாட்டில் இரண்டையும் தவிர தமிழர் தரப்பு என்று ஒன்றும் கிடையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

ஏனெனில், அரசு, fiscal மற்றும் monetary கொள்கைகளை சீரமைத்து, முதல் படி எடுக்கும் வரையிலும் IMF தனது பண பரிவர்த்தனை செய்ய முடியாது.

அப்படி செய்யும் போது, , fiscal மற்றும் monetary கொள்கைகளை சீரமைத்து, IMF debt restructuring ஐ கடன் கொடுத்தவர்களோடு வசதிப்படுத்தும்.  

bridging finance, அதுவும் ஓர் அரசுக்கு இக்கட்டம்னா நிலையில், முக்கியமாக, ஓர் நாட்டின், அரசின் தேசிய வருமானம் உழைக்கும் சொத்துக்களை, சேவைகளை, பொதுவாக மேற்கு தனியார் கம்பனிகள், வங்கிகளின் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வருவதில், IMF மறைமுக வசதிப்படுத்தல் பங்களிப்பு செய்யும்.

இதில்  ஹிந்தியை கம்பனிகளுக்கு இடம் உள்ளது.

மேற்கு, மற்றும் ஹிந்தியா வங்கிகள் கிரெடிட் வழங்கவும் இடம் இருக்கிறது.

கடஞ்சா,

இலங்கை தவிர ஆரக்குறைய 30 வளர்ந்து வரும் நாடுகள் ஏறக்குறைய வங்குரோத்து நிலைமையை அடைந்துவிட்டதாக வரும் தகவல்கள் சரியானவையா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, இணையவன் said:

குறை நினைக்க வேண்டாம், நாம் என்றால் புலத்தில் உள்ள தமிழ் தேசியவாதிகளையும் சேர்த்தா ? 
அவர்கள் யாருக்குக் கணக்குக் காட்டுவார்கள் ? 🤣

அந்த தலைவனின் காலத்துக்கு பிறகு ஒற்றுமை என்பது கிடையாது தேவையற்று காசை சிங்களவனிடம் ஏன் இழப்பான் .

கணக்கு காட்டுவம் என்றவர்கள் தான் முன்னுக்கு போய் நிக்கினம் கண்ணுக்கு முன்னாள் எம்மை அழித்தவன் படும் பாட்டை பார்த்தாவது திருந்தட்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்.... நீங்கள், காசை ரெடி பண்ணுங்கோ,
நான்... ஆக்களை, ரெடி பண்ணுறன். 😂 🤣

எதுக்கும், கவலைப்படாதீங்கோ....

இன்னும், சிங்களத்துக்கு, ஆப்பு இருக்கு.... சரியான நேரத்தில், களம் இறங்குவோம்.

18 minutes ago, இணையவன் said:

நல்லதுதான்.

முன்னர் கேட்ட அதே கேள்வியைத்தான் உங்களிடமும் கேட்கிறேன். வாங்கும் தமிழர்கள் யார் ? துரோகிப் பட்டம் கொடுப்பவர்களா ? துரோகிப் பட்டம் வாங்கியவர்களா ? ஏனென்றால் வெளிநாட்டில் இரண்டையும் தவிர தமிழர் தரப்பு என்று ஒன்றும் கிடையாது.

சிங்கள மக்கள், பழைய அரசியல் வாதிகளை ஓரம் கட்டுவது போலவே, நாமும், பழைய கோஸ்ட்டிகளை ஓரம் கட்டி விட்டு, புதிய இலங்கை அரசுடன் பேசுவோம்.

சிலவேளை, அவர்களும், 13+ கடாசி விட்டு, நன்கு விட்டுக் கொடுத்து, எமது உரிமையினை, அங்கீகரிக்க கூடும்.

காரணம், சீனாக்காரன், இந்தியன் உடன் பிச்சை பாத்திரம் கொண்டு, நாட்டினை வியாபாரம் செய்வதிலும், தமிழர்களுடன் சமாதானமாக போவது, அவர்களுக்கு நல்லது என்பதை உணரும் காலமிது.  

 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

சிங்கள மக்கள், பழைய அரசியல் வாதிகளை ஓரம் கட்டுவது போலவே, நாமும், பழைய கோஸ்ட்டிகளை ஓரம் கட்டி விட்டு, புதிய இலங்கை அரசுடன் பேசுவோம்.

சிலவேளை, அவர்களும், 13+ கடாசி விட்டு, நன்கு விட்டுக் கொடுத்து, எமது உரிமையினை, அங்கீகரிக்க கூடும்.

காரணம், சீனாக்காரன், இந்தியன் உடன் பிச்சை பாத்திரம் கொண்டு, நாட்டினை வியாபாரம் செய்வதிலும், தமிழர்களுடன் சமாதானமாக போவது, அவர்களுக்கு நல்லது என்பதை உணரும் காலமிது.  

 

இனவெறி  எனும் அரசியல் ஆயுதம் இருக்கும் வரைக்கும் தமிழருக்கான அங்கீகரிப்புகள் சாத்தியமா நாதமுனியாரே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இனவெறி  எனும் அரசியல் ஆயுதம் இருக்கும் வரைக்கும் தமிழருக்கான அங்கீகரிப்புகள் சாத்தியமா நாதமுனியாரே? 

அதைத்தான் சொல்கிறேனே....

பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் மணிமுடியில் இருந்த இந்தியா எனும் வைரக்கல் விழ, விழுந்த அடி, காந்தியினால் அல்ல... உங்கள் ஊர் ஹிட்லரினால்.....

அதுபோலம் சிங்கள இனவாதம் சுருண்டு விழ.... இப்போது மண்டையில் அடி விழுகிறது....

அது இன்னும், மோசமாக இறுகும் போது, இனவாதம் பேசாது.... பசி வந்தால் பத்தும் பறந்து போகும்...

சிங்களவர்களுக்கு வந்திருப்பது பசி மட்டுமல்ல.... நாடே விலைக்கு போகப்போகிறது என்று பயம்...

அனைத்துக்குமே ஒரு முடிவு இல்லாமல் இழு படாது என்பது இயற்கை நியதி.

போர்த்துகேயன், ஒல்லாந்தன், ஆங்கிலேயன், சிங்களவன், இடையே இந்தியன் (1987 - 90).....

ஒவொருவருக்கும் ஒரு முடிவு வந்தது போலவேம் சிங்களத்து ஆட்சிக்கு முடிவு நிச்சயம் உண்டு.  

****

2007ம் ஆண்டு, sunday leader ஆங்கில பத்திரிகையில் இலங்கையில் இருந்து வெளியே செல்லும் ஒரு ராஜதந்திரி, புனை பெயரில் (ஆங்கில பெயர்தான்), தான் அவதானித்ததை எழுதி சென்றார்.

உங்கள் பேரினவாதம், ஒரு நாள் உங்கள் முகத்தில் பலமாக அடிக்கும். அப்போதும் உங்களுக்கு உதவ யாரும் இருக்க மாட்டார்கள்.

அந்த நேரத்தில், உங்கள் அரசியல் வாதிகள் கை விட்டு ஓடி விடுவார்கள். மிகுதியை பொறுக்கி எடுத்து, நீங்கள் எழுந்திருப்பது, மிகவும் கடினமாகவே இருக்கும்.

யார் கேட்டார்கள் அப்போது?

***

https://www.colombotelegraph.com/index.php/downfall-of-sri-lanka-started-in-1948-accelerated-in-1978-completed-in-2022/

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

நல்லதுதான்.

முன்னர் கேட்ட அதே கேள்வியைத்தான் உங்களிடமும் கேட்கிறேன். வாங்கும் தமிழர்கள் யார் ? துரோகிப் பட்டம் கொடுப்பவர்களா ? துரோகிப் பட்டம் வாங்கியவர்களா ? ஏனென்றால் வெளிநாட்டில் இரண்டையும் தவிர தமிழர் தரப்பு என்று ஒன்றும் கிடையாது.

தீர்வை தேடாமல் பிரச்சினைகளை பிளவுகளை Focus செய்யும் இனம் உருப்பட வாய்ப்பில்லை சகோ. 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இப்படியே கதைத்துக்கொண்டிருக்க, நித்தியானந்தா இலங்கையை வாங்கப்போவதாக ஒரு செய்தி உலாவுது. 😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, vaasi said:

நாங்கள் இப்படியே கதைத்துக்கொண்டிருக்க, நித்தியானந்தா இலங்கையை வாங்கப்போவதாக ஒரு செய்தி உலாவுது. 😀

நித்தி வாங்கினால் பாலும் தேனும் ஓடும்தானே...நாங்களும்  காலிடேயில் போய் குளிச்சிட்டு வரலாம்தானே..😆

Edited by alvayan
Link to comment
Share on other sites

இன்று ஒரு புலம்  பெயர்ந்த சிங்களவரிடம் சிறிது பேச முடிந்தது.
அவர் தான் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவராம். காணிக்குள் உள்ளவற்றை விறகில் தீ மூட்டி சமைத்து சாப்பிட்டு இருக்கலாம் என்றார்.  கொழும்பு போன்ற நகரங்களில் உள்ளவர்களுக்கு தான் மின்சாரம் ,  வாயு அடுப்பு என்று பிரச்சனைகள் பல என்றார்.
மகிந்தவும் சகோதரர்களும் மக்களின் பணத்தை கொள்ளை அடித்துள்ளார்கள். பதவி விலக்கலாம் தானே என்றேன்.
பல மில்லியனை கொள்ளை அடித்துள்ளார்கள்.கணக்கு காட்டுகிறார்கள் இல்லை என்றார்.
அப்போ ரனில், சஜித் போன்றோரை  நாட்டின் தலைவராக்கலாம் தானே என்றேன்.
ஒரு செக்கனும் யோசிக்காமல் வடக்கையும் கிழக்கையும் பிரித்து தமிழர்களிடம் கொடுத்து விடுவார்கள்.அவர்கள் வேண்டாம் என்றார். சாமானியனே இப்படி என்றால்……

  • Like 1
  • Thanks 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nunavilan said:

இன்று ஒரு புலம்  பெயர்ந்த சிங்களவரிடம் சிறிது பேச முடிந்தது.
அவர் தான் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவராம். காணிக்குள் உள்ளவற்றை விறகில் தீ மூட்டி சமைத்து சாப்பிட்டு இருக்கலாம் என்றார்.  கொழும்பு போன்ற நகரங்களில் உள்ளவர்களுக்கு தான் மின்சாரம் ,  வாயு அடுப்பு என்று பிரச்சனைகள் பல என்றார்.
மகிந்தவும் சகோதரர்களும் மக்களின் பணத்தை கொள்ளை அடித்துள்ளார்கள். பதவி விலக்கலாம் தானே என்றேன்.
பல மில்லியனை கொள்ளை அடித்துள்ளார்கள்.கணக்கு காட்டுகிறார்கள் இல்லை என்றார்.
அப்போ ரனில், சஜித் போன்றோரை  நாட்டின் தலைவராக்கலாம் தானே என்றேன்.
ஒரு செக்கனும் யோசிக்காமல் வடக்கையும் கிழக்கையும் பிரித்து தமிழர்களிடம் கொடுத்து விடுவார்கள்.அவர்கள் வேண்டாம் என்றார். சாமானியனே இப்படி என்றால்……

இது தான் உண்மை. வயிறு நிரம்பியவுடன் பழைய கிழவி பவுடர் போட்டு **** வாடி என்று பேரினவாத பூதம் கிளம்பிவிடும். இங்கு தமிழர் தரப்பு செய்யவேண்டியது சும்மா நிண்டு வேடிக்கை பார்ப்பது மட்டுமே!

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

நித்தி வாங்கினால் பாலும் தேனும் ஓடும்தானே...நாங்களும்  காலிடேயில் போய் குளிச்சிட்டு வரலாம்தானே..😆

இப்படி நீங்கள் செல்லிறீங்க. அங்க ஹிசபுல்லா ரெடியா இருக்கார். அவரிட்ட அரபு சேக் பணமுள்ளது. அங்க போய் ஒரு அரபு சேக்கிடம் கதைத்து ஒரு இஸ்லாமிய கம்பஸ் கட்டும் அளவிற்க்கு பணம் வாங்கி வந்தார். கட்டியும் முடித்தார். இப்படி நாடு விற்பனக்கு வந்தால், அவர் உடனடியாக காசு கொடுத்து வாங்க ரெடி. அரபு பணத்துடன் மோத முடியாது. மாசா அல்லா என்று அள்ளி கொடுக்க அவர்கள் தயார். 

ஒரு குவைத் தினான் 1000 மேல் போகுது. ஒரு இங்கிலந்து பவுன்ஸ் என்ன் 420 தான். வாங்கினார் என்ன்றால் எங்கட கிழக்கு மாகண தமிழர்கள் எங்கே போவார்கள்? ஈச்சரங்கள் எல்லால் இறச்சி கடையாகும். ராசாக்களே கோவில்கள் எல்லாம் மதரசாக்கள் ஆகிரும்.

நாங்கள்தான் அவர்களை தமிழர்கள் என்கிறேம். ஒழுவில் பிரகடனத்தில் நாங்கள் வேட்டி வீசப்பட்ட நுனித்தோலுக்கு ஒப்பிடப்ப்ட்டுள்ளேம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

இன்று ஒரு புலம்  பெயர்ந்த சிங்களவரிடம் சிறிது பேச முடிந்தது.
அவர் தான் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவராம். காணிக்குள் உள்ளவற்றை விறகில் தீ மூட்டி சமைத்து சாப்பிட்டு இருக்கலாம் என்றார்.  கொழும்பு போன்ற நகரங்களில் உள்ளவர்களுக்கு தான் மின்சாரம் ,  வாயு அடுப்பு என்று பிரச்சனைகள் பல என்றார்.
மகிந்தவும் சகோதரர்களும் மக்களின் பணத்தை கொள்ளை அடித்துள்ளார்கள். பதவி விலக்கலாம் தானே என்றேன்.
பல மில்லியனை கொள்ளை அடித்துள்ளார்கள்.கணக்கு காட்டுகிறார்கள் இல்லை என்றார்.
அப்போ ரனில், சஜித் போன்றோரை  நாட்டின் தலைவராக்கலாம் தானே என்றேன்.
ஒரு செக்கனும் யோசிக்காமல் வடக்கையும் கிழக்கையும் பிரித்து தமிழர்களிடம் கொடுத்து விடுவார்கள்.அவர்கள் வேண்டாம் என்றார். சாமானியனே இப்படி என்றால்……

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் அந்த சிங்களவரின் கருத்து இருந்தது. இனவெறி என்பது அவர்கள் இரத்ததில் ஊறியது. உழுது போட்டாலும் திருந்த மாட்டார்கள். இவர்களிடம் எம் விடுதலையை அது அரசியல் உரிமைகளாக இருந்தாலும் சரி அல்லது தனி நிலமாக இருந்தாலும் சரி அடித்து/அடாத்தாக பெற்றால் ஒழிய வேறுவழியில்லை என்பதை உணர்த்துகின்றார்கள்.

நானும் ஒருவகை தமிழன் எனும் வெறியன் தான். ஆனால் மற்றவனுடையதை பறிக்கும் /பதுக்கும் எண்ணம் இல்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

தீர்வை தேடாமல் பிரச்சினைகளை பிளவுகளை Focus செய்யும் இனம் உருப்பட வாய்ப்பில்லை சகோ. 

ஈழத்தமிழர் போராட்டம் பாணுக்கும் பருப்புக்குமான போராட்டம் இல்லை என்பதை முதலில் எம்மவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

5 hours ago, விசுகு said:

தீர்வை தேடாமல் பிரச்சினைகளை பிளவுகளை Focus செய்யும் இனம் உருப்பட வாய்ப்பில்லை சகோ. 

பிளவுகளுடன் தீர்வை நோக்கி எவ்வாறு நகர முடியும் ? எங்களுக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம். எதிரியுடன் பேசும்போது உள்பிரச்சனைகளைப் புறம்தள்ளிய ஒற்றுமை வேண்டும். அது எம்மிடம் இல்லை. அது தவிர வெளிநாட்டில் எமக்கான அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் எதுவும் இல்லை.

56 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழர் போராட்டம் பாணுக்கும் பருப்புக்குமான போராட்டம் இல்லை என்பதை முதலில் எம்மவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

ஈழத் தமிழர் போராட்டம் என்று ஒன்று உள்ளதா ? அது எங்கே, அதை யார் நடத்துகிறார்கள் ? நான் அறிந்த வகையில் இலங்கையில் அது முற்றாக இல்லை. வெளிநாட்டில் யாராவது செய்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரிந்தால் விபரம் தாருங்கள்.

  • Like 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பொருளாதார பிரச்சினை ஐ எம் எப் இடம் போவதால் தீர்க்கப்படப்போவதில்லை, இலங்கையின் கிரடிட் ரேட்டிங் குறைய குறைய வட்டி விகிதம் அதிகரிக்கும் (90 நாள் பண முறி 23% வந்து விட்டது அதாவது 1 வருடத்தில் கடன் இரட்டிப்பாகும்), இலங்கையின் இன்றைய நிலை ஒரு ஆரம்பம் மட்டுமே, ஆர்ஜென்ரீனா, ஈக்குவடோர் இந்தப்பாதையால்தான் இலங்கைக்கு முன்பாக போய்கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

கடஞ்சா,

இலங்கை தவிர ஆரக்குறைய 30 வளர்ந்து வரும் நாடுகள் ஏறக்குறைய வங்குரோத்து நிலைமையை அடைந்துவிட்டதாக வரும் தகவல்கள் சரியானவையா ? 

சாத்திய கூறுகள் இருக்கிறது.

கொரானாவிடற்கு முதல் பல விளிம்பு நிலையில் இருந்தன, கொரன நிலைமையை மோசமாக்கி இருக்கலாம்.

இந்த கிழமை அல்லது அடுத்த கிழமை, லண்டன் இல் சிங்கள துறைசார் எதிர்ப்பு அணி நடைபெற உள்ளதாக பார்க்கிறேன்.

அதற்கு, தெரிந்த தமிழர்களை அழைத்து உள்ளார்கள். அழைக்கப்பட்ட தமிழர்கள் கேட்டது, கோத்த வீட்டுக்குப் போ என்று நீங்கள் பிடித்தால், நாங்கள் வடகிழக்கில் இராணுவம் வீட்டுக்கு போ என்றும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே, அவர்களுக்கு நீதி, கொத்தவும் குழாமும் Hague க்கு அனுப்ப வேண்டும் என்றார் பதாகைகள் பிடிப்போம் என்றும் சொல்லி , சித்தத்திற்கு அயத்சம் என்றால் வருகிறோம் என்று.

அத்துடன் அழைப்பு  நின்று விட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, colomban said:

இப்படி நாடு விற்பனக்கு வந்தால், அவர் உடனடியாக காசு கொடுத்து வாங்க ரெடி. அரபு பணத்துடன் மோத முடியாது. மாசா அல்லா என்று அள்ளி கொடுக்க அவர்கள் தயார். 

அது பழைய காலம் இப்போ எண்ணெய்க்கு  பதில் லித்தியம் அதை தேடி உலகம் ஓடதொடங்கி  விட்டது அது அரபு உலகத்தவருக்கும் தெரியும் இருக்கிற பணத்தை இறுக்கி பிடிக்கிறார்கள் இல்லாவிட்டால் ரோஹிஞ்சா முஸ்லிம்களை நடு கடலில் விட்டு இருப்பார்களா ?

13 hours ago, Nathamuni said:

சிங்களவர்களுக்கு வந்திருப்பது பசி மட்டுமல்ல.... நாடே விலைக்கு போகப்போகிறது என்று பயம்...

அப்படி பார்த்தால் அம்பாந்தோட்டை யை  சைனாவுக்கு தாரை வார்த்து விட்டு எப்படி அவர்களால் நித்திரை கொள்ள முடிகின்றது ?

சிங்களம் திருந்தாது 1000 வருட தமிழ் எதிர்ப்பு  இனவாத இரத்தம் அவர்களில் ஓடுகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே நேரம் அவர்களால் உழைக்கவும் முடியாத சோம்பேறிகள் ஆறு லட்சம் இந்திய தமிழரை நாடு கடத்திய கூட்டத்தால்  இலங்கையின் முக்கிய வருவாயான தேயிலை கொழுந்து பறிக்க முடியாத ஏலா  வாளிகளை கொண்ட சமூகம் .

Edited by பெருமாள்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

சந்தர்ப்பம், ஒருமுறை தான் வரும்.... சீனாக்காரன், இந்தியாக்காரன் வாங்குவதிலும், பார்க்க, தமிழர்கள் வாங்குவது, அவர்களுக்கும், தமிழர்களுக்கும் நல்லது.

மற்றவன் வாங்கினால் அமைதியாக இருக்கும் இனவாத சிங்களம் அதயே தமிழன் வாங்கினால் நித்திரை இல்லாமல் இருப்பார்கள் இப்போதைக்கு மற்றவன் வாங்கி இந்த அழகிய தீவை நாசமாக போவதையே நான் விரும்புகிறேன் 2007ல் இருந்து 2009 மட்டும் நாம் பட்ட வலி அவர்களுக்கும் உருவாகட்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

மற்றவன் வாங்கினால் அமைதியாக இருக்கும் இனவாத சிங்களம் அதயே தமிழன் வாங்கினால் நித்திரை இல்லாமல் இருப்பார்கள் இப்போதைக்கு மற்றவன் வாங்கி இந்த அழகிய தீவை நாசமாக போவதையே நான் விரும்புகிறேன் 2007ல் இருந்து 2009 மட்டும் நாம் பட்ட வலி அவர்களுக்கும் உருவாகட்டும் .

நூற்றுக்கு நூறு...  சரியான கருத்து.
காசை கொடுத்து காப்பாற்றியபின், 
பிக்குகளின் தூண்டுதலில்... தட்டிப் பறிக்க நிற்பார்கள். 

நேற்று....  தமிழில் தேசிய கீதம் பாடினதுக்கே... 
பிக்கு, ஒண்டு...இருப்புக் கொள்ள ஏலாமல்  ஓடி வந்து, 
"மைக்கை" வாங்கினதை பார்த்தமே. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

நூற்றுக்கு நூறு...  சரியான கருத்து.
காசை கொடுத்து காப்பாற்றியபின், 
பிக்குகளின் தூண்டுதலில்... தட்டிப் பறிக்க நிற்பார்கள். 

நேற்று....  தமிழில் தேசிய கீதம் பாடினதுக்கே... 
பிக்கு, ஒண்டு...இருப்புக் கொள்ள ஏலாமல்  ஓடி வந்து, 
"மைக்கை" வாங்கினதை பார்த்தமே. 

 

6 hours ago, பெருமாள் said:

மற்றவன் வாங்கினால் அமைதியாக இருக்கும் இனவாத சிங்களம் அதயே தமிழன் வாங்கினால் நித்திரை இல்லாமல் இருப்பார்கள் இப்போதைக்கு மற்றவன் வாங்கி இந்த அழகிய தீவை நாசமாக போவதையே நான் விரும்புகிறேன் 2007ல் இருந்து 2009 மட்டும் நாம் பட்ட வலி அவர்களுக்கும் உருவாகட்டும் .

சேர் பொன் ராமநாதன் விடயத்தில் இருந்து, டட்லி - செல்வா, பண்டா - செல்வா, ஜேஆர்  - ராஜீவ் வரை சிங்களத்தை நாம்அறிவோம்.... இவர்களை நம்ப, காரணம் எதுவும் இ்ல்லை..... கணவன், மணைவி ஒத்து வரவில்லை..... ஒரே சண்டை, நம்பகத்தன்மை இல்லை என்றால், தனித்தனியாக வேறு வாழ்க்கை ஆரம்பித்து வாழ, கோட்டு போய், ஜீவனாம்ச கொடுப்பனவுகள் முடித்து தான் விவாகரத்து வாங்க வேணும்.....

சம்பந்தப்பட்டவ்கள், அடுத்தவரில் நம்பகத்தன்மை இல்லை என்று கோட்டுக்கே போவது வீண்வேலை என்றால் எப்படி ?

சந்தர்பத்தை பயன்படுத்தி, சரியான வழிமுறையை கண்டறிந்து, வெட்டி ஓடுவது தானே சரியான வழியாக இருக்க முடியும்.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

சந்தர்பத்தை பயன்படுத்தி, சரியான வழிமுறையை கண்டறிந்து, வெட்டி ஓடுவது தானே சரியான வழியாக இருக்க முடியும்.

இதுக்கு உறுதியான தலைமை இருக்கனும் இப்ப இருக்கிற தலைமைகள் சம் சும்  கஜன் ஆகட்டும்  இனவாத சிங்களத்தின் ஏவல் நாய்கள் இவர்களை நம்பி ஒரு முடிவு எடுக்க முடியாது எனவே சிங்களம் சாப்பாடு இல்லாமல் தற்கொலை செய்வதை ரசிப்பதை தவிர வேறுவழியில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேணுமெண்டால் அவர்கள் தற்கொலைக்கு முன் கிரிபத் சாப்பிட பணம் அனுப்பி வைக்கிறேன் யார் யார் தற்கொலைக்கு போகிறார்கள் என்று லிஸ்ட் எடுத்து அனுப்பி வைக்கவும் 2009 நாங்கள் விழும்போது அழ  கண்ணில் கண்ணீர் வரவில்லை 2007 ல் முடிவுகள் தெரிந்த போது  அவர்கள் நல்ல வாழ்க்கை அமைத்து கொண்டு இருப்பார்கள் ஆனால்  முடிந்தவரை சிங்களத்துக்கு  அழிவுகளை ஏற்படுத்தியே போனார்கள் போனவர்களையும் சும்மா விட்டு விட்டீர்களா புனிதமான  கல்லறைகளை உடைத்து நடு ரோட்டில் போட்டீர்கள் உலகில் எங்கும் ஏற்படாத யுத்த வன்மம் அது .சோகம் வந்து அழுதால் அன்றோடு போய் விடும் அன்று அழாமல் கண்ணீரை தேக்கி வைத்தேம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொன்றையும் சொல்ல மறந்து விட்டேன்.

IMF, பகுதி, பகுதியாகவே (instalment) credit அல்லது கடன் கொடுக்கும்.

அது, சொறி சிங்களம் IMF உடன் இணங்கிய சீரமைப்பு, திட்டங்கள் போன்றவற்றை எவ்வளவு தூரம் சொறி சிங்களம் செய்து உள்ளது அல்லது எத்தனிக்கிறது என்பதஹில் தங்கி உள்ளது.

பொதுவாக, செயல்திறன் (performance) அடிப்படையில் கொடுக்கப்படும், இழுக்கப்படும், தற்கலிகளமாக நிறுத்தப்படும்.

சொறி சிங்களம், தமிழருடன் செய்வததை, கிந்தியவுடன் (தமிழரின் வெறுப்பால்) விளையாடும் விளையாட்டை ஹிந்தியை பார்த்து கொண்டு இருப்பது போல, IMF நடக்காது. 

இது மிக முக்கிய காரணம் சொறி சிங்கம் IMF ஐ நாடாமைக்கு. 

IMF சிநலத்துக்கு task  master ஆக இருக்கும்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Virat Kohli 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • பையன்.... பத்திரிகைகள் எல்லாம் அண்மையில் நடந்த செய்தியாகத்தான் குறிப்பிடுகின்றன. அத்துடன்  இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த செய்தி  என்றால்,  "வடை மாத்தையா"வை 😂  அப்போ கைது செய்யாமல் இப்போ ஏன் கைது செய்துள்ளார்கள். அந்த நேரம்  இவை ஏன், சமூக வலைத்தளங்களில் அலசப் படவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன.
    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.