Jump to content

கௌதம புத்தரின் வாழ்வும், போதனைகளும்


Recommended Posts

கௌதம புத்தரின் வாழ்வும், போதனைகளும்

"ஆசையே" துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் என்னும் தத்துவத்தை உலகிற்கு போதித்தவர் கௌதம புத்தர். உலக மகா ஞானிகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர். பௌத்த மதம் என்னும் சமயத்தை தோற்றுவித்து மக்கள் யாவரும் முக்தி அடைய ஒரு எளிதான வழியைக் காட்டியவர். புத்தரின் போதனைகளைப் பின்பற்றுவோர் பௌத்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அனைவருமே கௌதம புத்தர் அவதரித்த நாளைக் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு மே 23-ம் தேதி (திங்கட்கிழமை - 23.05.2005) அன்று புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.

புத்தரின் பிறப்பு :

கபிலவஸ்து அருகிலுள்ள லும்பினிக் கிராமத்தில் கி.மு. 566-ல் சாக்கிய குலத்தில் பிறந்தார் கௌதம புத்தர். பெற்றோர் அவருக்கு சித்தார்த்தர் என்று பெயரிட்டு அழைத்தனர். அவருடைய தந்தை சுத்தோதனர். தாயார் மாயாதேவி. சாக்கிய குலத்தைச் சேர்ந்த சுத்தோதனர், கபிலவஸ்துவைத் தலைநகரமாகக் கொண்ட சாக்கிய நாட்டின் மன்னராவார். கபிலவஸ்து நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ளது. புத்தர் பிறப்பிடம் அசோக மௌரியர் எழுப்பிய ரும்மிந்தைத் தூண் சின்னத்தால் பிரசித்திப் பெற்று விளங்குகிறது.

புத்தர் பிறந்த ஏழாவது நாளில் சுத்தோதனர் இயற்கை எய்தினார். பின்னர் புத்தர் தன் அத்தையான பிரஜூபதி கௌதமியால் வளர்க்கப்பட்டார். இளமைப் பருவத்தில் யசோதரா என்னும் மங்கையை மணந்து இல்லற வாழ்க்கையை நடத்தினார். இவருக்கு ராகுல் என்ற மகன் பிறந்தான்.

சில காலங்களுக்கு பிறகு புத்தருக்கு அரண்மனை வாழ்க்கை பிடிக்கவில்லை. அமைதியை இழந்தார். இவ்வுலக வாழ்க்கையில் கண்ணுற்ற துன்பங்களைப் பற்றி ஆராயத் தொடங்கினார். ஒரு நாள் இவர் வெளியே சென்றுக் கொண்டிருந்தபோது கண்ட காட்சிகள் இவர் மனதை வெகுவாக புண்படுத்தின. வயது முதிர்ந்த ஒரு மனிதரையும், நோயாளி ஒருவரையும், பிணம் ஒன்றையும், துறவி ஒருவரையும் கண்டார். இதனால் மனம் கலங்கினார். இதற்கு முன்னால் இது போன்ற காட்சிகளையும் இவர் நேரில் கண்டதில்லை. ஆகையால் இத்தகைய காட்சிகள் இவரது சிந்தனைகளை வெகுவாகத் தாக்கியது.

துறவறம் :

உலக வாழ்க்கையில் காணப்படும் துன்பங்களைப் பற்றியும், அதற்குப் பின்னர் என்ன நடைபெறும் என்பது பற்றியும் தீவிரமாக ஆராயத் தொடங்கினார். இத்தகைய துன்பங்களுக்கு நிவாரணம் காண வேண்டும் என்பதே தனது லட்சியமாகக் கொண்டார். எனவே இல்லற வாழ்க்கையை துறக்க தீர்மானித்தார். தனது 29-வது வயதில் கடும் துறவறத்தை புத்தர் மேற்கொண்டார். உண்மையைக் காண்பதே தனது முதன்மையான பணி எனக் கருதி, எல்லாவற்றையும் களைந்துவிட்டு அலைந்து திரியும் துறவியின் வாழ்க்கையை மனம் உவந்து மேற்கொண்டார்.

துறவிக்கோலம் பூண்ட புத்தர், வாழ்க்கையைப் பற்றியும் மரணத்திற்குப் பின்னர் நடைபெறுவது பற்றியும் அறிய விரும்பினார். இதற்காக இவர் முதலில் வைசாலியில் தங்கியிருந்த அலாரர் என்பவரிடம் பாடங்களைக் கேட்டறிந்தார். பின்னர் இராஜகிரகத்தில தங்கியிருந்த ஆசிரியரான உருத்திரிகா என்பவரிடம் சீடராக அமர்ந்தார். அவருடைய போதனை புத்தரை வெகுவாக கவரவில்லை. எனவே அவரை விட்டு விலகிச் சென்றார்.

பின்னர் கௌதமர் உருவேலா என்னும் இடத்தில் உணவு இன்றி கடும் தவம் மேற்கொண்டார். சுமார் 6 ஆண்டுகள் இவ்வாறு கழிந்தது. எனினும் தமது லட்சியத்தை அடைவதற்கு இது பயனற்றது என அறிந்தார்.

ஞானோதயம் :

பிறகு நைரஞ்சனா ஆற்று கால்வாயொன்றில் புனித நீராடி இக்கால போத்-கயா என்னுமிடத்திலுள்ள பிப்பல் அல்லது அரச மரத்தடியில் அமர்ந்தார். இறுதியில் அங்கு அவருக்கு உயர்வான ஞானம் புத்தொளி தோன்றியது. தனது 36-வது வயதில் ஞானோதயம் பெற்று நிர்வாணத்தை அடைந்தார்.

அன்று முதல் இவர் "புத்தர்" அல்லது ஒளிபெற்றவர் என்றும் "ததாகதர்" (உண்மையை அறிந்தவர்) என்றும், சாக்கியமுனி அல்லது சாக்கிய வம்சத்து முனிவர் என்றும் பல பெயர்கள் சொல்லி அழைக்கப்பட்டார்.

"புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள். தன் ஆசையையும், அகந்தையையும் வெற்றி கொண்டார். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே "நிர்வாணம்" அல்லது "நிர்வாண நிலை" என்று சொல்லுவார்கள்.

கொள்கைகள் :

ஒளி பெற்ற புத்தர், வாரனாசியின் அருகாமையிலுள்ள சாரநாத் என்னுமிடத்திலுள்ள "மான் பூங்கா" என்னுமிடத்தில் தன் கொள்கையை போதிக்கத் தொடங்கினார். 45 ஆண்டுகள் அயோத்தி, பீகார், அதையடுத்த பகுதிகளின் மக்களுக்கும், மன்னருக்கும் தாம் கண்ட பேருண்மையை ஊர் ஊராகச் சென்று பரப்பினார். இராஜகிரகத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது போதனைகளை நடத்தி வெற்றிகண்டார்.

கபிலவஸ்துவில் ராகுல், மகா பிரஜாபதி ஆகியோரை தன் சமயத்தில் சேர்த்துக் கொண்டார். மகத மன்னர்களான பிம்பிசாரர், அஜாதசத்துரு ஆகியோர்களை பௌத்த சமயத்தை தழுவும்படி செய்தார். கோசல நாட்டிற்கும் சென்று பலரை பௌத்தத்தை தழுவிட வழிகோலினார்.

இந்த இடங்களிலெல்லாம் அவரது நான்கு உண்மைகளையும், "நான்கு அதிசய சத்தியங்களையும்", "எண் வகை வழிகளையும்" கூறினார். பிறகு தனது 80-வது வயதில், குசி நகரத்தில் கி.மு. 486-ல் உயிர் நீத்தார்.

கி.மு. 3-ம் நூற்றாண்டு வட இந்தியா, கிழக்கிந்தியா, ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் புத்த மதம் பரவி இருந்தது. கி.பி. முதலாம் நூற்றாண்டில் புத்தமதம் கிழக்கு நாடுகளுக்கு பரவியது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திபெத்திற்குச் சென்றது.

புத்தரின் போதனைகள் :

புத்த சமயக் கொள்கைகளைச் சுத்த பிதகம் கூறுகின்றது. மனத் துயரிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் விடுபடுவதே பௌத்த சமயத்தின் முக்கிய நோக்கமாகும். தன்னலம் துன்பங்களுக்கெல்லாம் காரணமாக இருக்கிறது. ஆசையை ஒழித்தால் தான் மன அமைதியும், ஆனந்தமும் அடைய முடியும். தீமைகளை தவிர்த்து நன்மைகளைச் செய்து வந்தால் ஆசை அகன்றுவிடும்.

"நான்கு உயரிய உண்மைகளும்", "எண் வகை வழிகளும்" பிறவி என்பது ஒருவரது செயலினால் ஏற்படும் பயன் என்ற கோட்பாடும் தத்துவ இயலுக்கு புத்தர் ஆற்றிய அரிய தொண்டாகும்.

நான்கு உண்மைகள் :

1. துன்பம் : இவ்வுலக வாழ்க்கை துன்பகரமானது. ஏழ்மை, நோய், மூப்பு, இறப்பு முதலியவை நிறைந்த உலக வாழ்க்கை, எளிதில் விலக்கிக் கொள்ள முடியாத துன்பம் நிறைந்தது. இவை நம்மை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

2. அதன் தோற்றம் : சிற்றின்ப ஆசையே துன்பத்தின் காரணம். தான் இன்பமாக வாழ வேண்டும் என்ற தன்னலம் கலந்த ஆசையே துன்பங்களுக்கு காரணமாகும்.

3. அதை ஒழித்தல் : ஆசை ஒழிக்கப்பட்டாலொழிய துன்பத்தை ஒழிக்க முடியாது.

4. அட்டசீலம் : (எண்வகை வழி) துன்பத்தை ஒழிக்கும் வழி இதுவேயாகும். எண்வகை வழிமுறைகளை கடைபிடித்தால் ஆசைகளை ஒழித்துவிடலாம்.

நடுவு நிலை வழி, இடை வழி : புத்தர் கூறிய சமய முறையில் ஆசையை அறவே ஒழித்து, பல்வகையான வாழ்க்கையின் மீது நாட்டம் கொள்ளாமல், வாழ்க்கையில் ஆசையால் விளையும் துன்பங்களை ஒழிப்பதே நிர்வாணமாகும்.

இடைவழி : ஆழ்ந்த அறிவு, விவேகம், புலமை, அமைதி, நிர்வாணம் ஆகியவற்றை அடையச் செய்கின்றன. இடைவழியில் எட்டு கொள்கைகள் உள்ளன. இதற்கு "அட்ட சீலம" அல்லது "எண் வகை வழிகள்" என்று பெயர்.

அட்டசீலம் அல்லது எண்வகை வழிகள் :

1. நல்ல நம்பிக்கை : நான்கு உண்மைகளில் நம்பிக்கைக் கொள்ளுதல்.

2. நல்லெண்ணம் : இல்லற வாழ்க்கையை விட்டொழிக்கவும், சினத்தை அகற்றவும், ஒருவருக்கும் தீமை செய்யாமலிருக்கவும் தீர்மானித்தல்.

3. நல்வாய்மை அல்லது நல்லமொழி : பயனற்றதும், கடுமையானதும் பொய்யானதுமான சொற்களை கூறாதிருத்தல்.

4. நற்செய்கை : பிறரை துன்புறுத்தாமலும் (அகிம்சை) களவாடாமலும் நன்னெறி தவறாமல் இருத்தல்.

5. நல்வாழ்க்கை : பிச்சை எடுத்து வாழ்தல்.

6. நன் முயற்சி : தீமையை அகற்றி நற்குணங்களை வளர்த்தல்.

7. நற்சாட்சி : சிற்றின்ப ஆசையையும், துன்பத்தையும் அடையாவண்ணம் விழிப்புடனிருத்தல்.

8. நல்ல தியானம் : லட்சியத்தை (குறிக்கோளை) அடைய மனம் ஒருவழிபட்டு சிந்தித்தல்.

சுருக்கமாகக் கூறினால், புத்தருடைய அறிவுரைகளில் நம்பிக்கையுடன் அவற்றை அறியவும், அதன்படி நடக்கவும் முயன்று ஒழுக்கம் தவறாத நடத்தையுடன் மனதை ஒருவழிபடுத்தி இறுதியான இன்பத்தை (வீடு, மோட்சம்) அடைய வேண்டுமென்பதாகும்.

அவரது காலக் கட்டத்தில் இந்திய தத்துவ இயலில் ஆதிக்கம் செலுத்தி வந்த கடவுள், ஆன்மா, மாறாத நிலையான உண்மை அல்லது வஸ்து போன்ற கருத்துகளை அறிவார்த்த முறையில் களைந்து உலகம், வாழ்க்கை, சிந்தனை குறித்த முற்றிலும் மாற்றான கருத்துகளை முதன் முதலில் பறை சாற்றியவர் புத்தர் என்றால் அது மிகையாகாது.

Link to comment
Share on other sites

ஆசைகளை அழிக்க அட்டசீலத்தில் புத்தர் சொன்ன ஐந்தாவது தான் எனக்கு பிடித்து இருக்கிறது...

5. பிச்சை எடுத்தல்...!

அட்டகாசமாக ஐஞ்சாவதாக சொன்னார் புத்தர்... வேலைக்கு போக வேண்டியதில்லை, வரி செலுத்த வேண்டியதில்லை, பசிக்கிறநேரம் யார்வீட்டு வாசலிலையாவது சட்டியோடை போய் நிண்டு விடுவது சூப்பர் திட்டம் ஐயா...

எல்லாரும் பிச்சைக்கு போனால் யார் பிச்சை போடுவது எண்டு ஒரு சந்தேகம் வந்துதது... வெளிநாடுகளிலை வசிக்கிற எங்களுக்கு அரசாங்கம் போடும்தானே....

புத்தரின் போதனைகளிலை இந்த ஐந்தாவதை மட்டுமாவது சிறீலங்கா பௌத்த அரசாங்கம் பின்பற்றுவது மகிழ்ச்சியான விடயம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசைகளை அழிக்க அட்டசீலத்தில் புத்தர் சொன்ன ஐந்தாவது தான் எனக்கு பிடித்து இருக்கிறது...

இந்த கொள்கை எனக்கு நல்லா பிடித்து கொண்டது. :huh:

Link to comment
Share on other sites

ு...

5. பிச்சை எடுத்தல்...!

புத்தரின் போதனைகளிலை இந்த ஐந்தாவதை மட்டுமாவது சிறீலங்கா பௌத்த அரசாங்கம் பின்பற்றுவது மகிழ்ச்சியான விடயம்....

:lol: :lol: :rolleyes:

Link to comment
Share on other sites

"புத்" என்றால் வடமொழியில் ஞானம் (புத்தி) என்று அர்த்தம். ஞானம்(புத்தி) பெற்றவர் என்னும் பொருள்படவே சித்தார்த்தர் "புத்தர்" என்று அழைக்கப்படுகிறார்.

ஆசையை அறு! ஆசையை அறு! என்று புத்தர் சொல்லும் போது அப்படி ஆசையை

அறுக்க நீ ஆசைப்படு என்பதாகிறது.

ஆசையை அறுக்க வேண்டும் என்பதே ஒரு ஆசை தான்.

"ஆசையை அறு" என்னும் தன் போதனையை கேட்டு மற்றவர் ஆசையை அறுக்க வேண்டும் என்று புத்தர் ஆசைப்பட்டு இருப்பார்.

இதனால் இந்த இடத்தில் புத்தனின் போதனை இயற்கையிடம் தோற்று போகிறது என்பார்கள்

Link to comment
Share on other sites

நான்கு உண்மைகளில் நான்காவதாக சொன்னது அட்டசீலத்துக்கான விளம்பரம்... ஆகவே நாலாவதாய் ஒரு உண்மையும் இல்லை..அட்டசீலத்தில் உள்ள எட்டில் முதலாவதாய் சொல்லப்பட்ட்டது நான்கு உண்மைகளின் விளம்பரம் ஆகவே அது ஏழு விடயங்கள் மட்டுமே.... அதோடு இந்த ஐந்தாவதாக சொன்ன நல்வாழ்க்கை (பிச்சை எடுத்து வாழ்தல்) என்பதை தவிர எல்லாமே சைவதத்துவங்களில் சொல்லப்பட்டவைதான்...

இந்த ஐந்தாவதாக சொன்ன பிச்சை எடுத்தல் என்பது நம்பிக்கை அற்று மனிதனை வாழ தூண்டுவதாகும்...

மற்றவனை அண்டி வாழும் ஒட்டுண்ணியாக வாழ பிச்சை எடுக்காமல் மனிதன் தற்கொலை செய்து கொள்ள வேண்டூம் எண்று புத்தர் சொல்லி இருந்தார் எண்டால் நண்றாக இருந்து இருக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5. நல்வாழ்க்கை : பிச்சை எடுத்து வாழ்தல்.

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ பிச்சை எடுத்து வாழ்தலா?

Link to comment
Share on other sites

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய ஜோதியான புத்த பகவான் எல்லோரையும் பிச்சையெடு என்று கூறியிருக்கவே மாட்டார். இது அவருக்கு 600 வருடங்களுக்குப் பின்வந்த யாரோ பரதேசியினால் உருவாக்கப்பட்ட கொள்கையாக இருக்கவேண்டும்.

இரப்பினும் பிச்சையெடுப்பினும் கேட்டார்க்கு

மறுப்பினும் மற்றிஃதுலகு

என்று வள்ளுவப் பெருந்தகையே எங்கோர் இடத்தில் கூறியுள்ளதாக ஞாபகம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தனது 36-வது வயதில் ஞானோதயம் பெற்று நிர்வாணத்தை அடைந்தார்.

அதுதான் சிங்களவர் தமிழனை நிர்வாணம் ஆக்கி கொலை செய்யிறவையள் போல...</p>

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

[size=6]பௌத்தத்தில் கடவுள் உண்டா? [/size]- பாபா பகுர்தீன்

போதிதர்மர் தனது பிற்கால வாழ்க்கையை பௌத்தத்துக்கே அர்ப்பணித்தவர் என்பதால் நாம் அதைப் பற்றி அறிந்துகொள்வதும் கொஞ்சம் அ வசியமாகிறது. ஒரு மதத்தை அறிய அதன் கடவுள் கோட்பாட்டை முதலில் அறிய வேண்டும். ஏனென்றால் மதங்கள் அனைத்தும் கடவுளில் இருந்துதான் தங்கள் கொள்கைகளை விரிக்கின்றன.

‘புத்த மதத்தில் யார் கடவுள்? கௌதம புத்தரா? இல்லை வேறு யாருமா?’

[size=2][size=4]அதர்மம் மலிந்திருக்கும்போது, அறத்தை நிலைநாட்ட ஒரு விழிப்படைந்த மனிதர் அவ்வப்போது வரலாற்றில் தோன்றுவது வழக்கம். அவ்வாறு தோன்றுபவர் தன் சமூகத்தாரை நேர்வழியில் கொண்டு செல்வார். புத்தர் அவர்களில் ஒருவர். கௌதமருக்கு முன்னும் பின்னும் பல்வேறு நாடுகளில் பல்வேறு சமூகத்தில் பல புத்தர்கள் தோன்றியுள்ளனர். கௌதமருக்கு பின் ‘மைத்ரேயர்’ எனும் புத்தர் தோன்றுவார் என்றும் அவர் தன் சமூகத்தினரை மட்டுமின்றி உலகமக்கள் அனைவரையும் செம்மைப்படுத்தி உலகத்துக்கே ஒரு வரமாவார் என்றும் புத்தர் முன்னறிவிப்பு செய்தது இங்கே குறிப்பிடத்தக்கது. இதுவே புத்த மதத்தின் புத்தர்கள் பற்றிய நம்பிக்கை. அப்படியென்றால் கடவுள்?[/size][/size]

[size=2][size=4]எதா எதாஹி தர்மஸ்ய கிலானிர் பவதி பாரத; அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ர்ஜான்ம் அஹம்[/size][/size]

[size=2][size=4](பொருள்: பாரத நாட்டில் எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோ; அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் (கிருஷ்ணன்) அவதரிப்பேன்.[/size][/size]

[size=2][size=4]மேற்படி பகவத் கீதை உபதேசத்தை எடுத்துக்கொண்டு ஹிந்துக்கள் இன்று புத்தரை கிருஷ்ணரின் அவதாரமாகக் கொண்டாடுகின்றனர். புத்தரைக் கடவுளாக பாவிக்கின்றனர்.[/size][/size]

[size=2][size=5]பௌத்த மதத்தில், புத்தர் கடவுளின் அவதாரம் எனும் கருத்துக்கு மட்டுமல்ல புத்தர் கடவுள் எனும் கருத்துக்கே இடமில்லை. புத்தர் கடவுளுமில்லை, கடவுளின் அவதாரமும் இல்லை. ஜஸ்ட் நம்மைப்போல் ஒரு மனிதர் அவ்வளவே. நமக்கும் அவருக்கும் ஒரே ஒரு வேறுபாடு. நாம் தூங்கிக் கொண்டிருக்கிறோம்; அவர் விழிப்படைந்துவிட்டார். அவ்வளவே. விழிப்படைந்தால் நாமும் புத்தரே.[/size][/size]

[size=2][size=4]அப்படியானால் புத்த மதத்தில் கடவுள் நம்பிக்கை இல்லையா?[/size][/size]

[size=2][size=4]புத்தர் ஒருபோதும் கடவுளைப் பற்றி நேரடியாக விவாதித்ததில்லை. தன் சீடர்களுடனும் அதுபற்றிக் கலந்துகொண்டதாகக் குறிப்புமில்லை. இறைவன் இருக்கிறார் என்றும் அவர் கூறியதில்லை. இல்லை என்றும் சொன்னதில்லை. கடவுள் விஷயத்தில் புத்தர் நடுநிலைமை காத்துள்ளார் என்பது மட்டும் புலனாகிறது. ஆக மொத்தத்தில் நமக்கு தெரியவருவது என்னவென்றால் ‘புத்த மதம் கடவுள் விமரிசனமற்ற மதம்’ . ‘இருந்தால் நல்லா இருக்கும்’ என்று கூறும் அக்னாஸ்டிக் வகையறா.[/size][/size]

[size=2][size=4]ஓஷோ ரஜ்னீஷ் போன்ற பல பௌத்தர்கள் மறைமுகமாகக் கடவுளை ஏற்றுக்கொண்டாலும் சிலர் இல்லவே இல்லை என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்கள். ஆக, இன்றுவரை புத்தமதத்தில் ‘கடவுள் இருக்கிறாரா?’ என்கிற கேள்விக்கு தெளிவான பதில் மட்டும் இல்லை.[/size][/size]

[size=2][size=4]சித்தார்தர் புத்தராகி விழிப்பு நிலை அடைந்த பிறகு (புத்தர் என்பதற்கு ‘விழிப்படைந்தவர்’ என்று பொருள்.) தேடலின் முடிவில் தான் கண்டடைந்த உண்மைகளை ஒரு சூத்திர வடிவில் அறிவித்தார்.[/size][/size]

[size=2][size=4]1. இது இருந்தால் அதுவும் இருக்கும்.

2. இதனுடைய எழுச்சியினால் அதுவும் எழும்.

3. இது இல்லை என்றால் அதுவும் இல்லை.

4. எனவே, இதை நிறுத்தினால் அதுவும் தானாக நின்றுவிடும்.[/size][/size]

[size=2][size=4]அது எது? இது எது?[/size][/size]

[size=2][size=4]இது=ஆசை; அது=துன்பம்.[/size][/size]

[size=2][size=4]புத்தர் சொல்ல வருவது என்னவென்றால்,[/size][/size]

[size=2][size=4]1. துன்பம் இருக்கும் இடத்தில் ஆசையும் இருக்கும்.

2. ஏனென்றால் துன்பம் எழக் காரணம் ஆசை.

3. ஆகவே, ஆசை இல்லையேல் துன்பம் இல்லை.

4. எனவே, ஆசைப்படுவதை நிறுத்திக்கொண்டால் துன்பமும் நின்றுவிடும்.[/size][/size]

[size=2][size=4]இவையே புத்தர் கண்ட நான்கு பேருண்மைகள்.[/size][/size]

[size=2][size=4]இவற்றை அடைய புத்தர் ஒரு நிபந்தனையும் முன்வைக்கிறார். நிபந்தனை என்னவென்றால், இவற்றை அடைய ஒருவர் ‘உலகம் ஒரு மாயை’ என்று முதலில் உணர்ந்திருக்க வேண்டுமாம்.[/size][/size]

[size=2][size=4]ஆம், நேற்றிருந்தது இன்றில்லை. இன்றிருப்பது நாளை இல்லை. எனவே இந்த மாய உலக வாழ்வில் வெற்றி பெறுவது ஒரு மனிதனின் பிறவி நோக்கம் அன்று என்று மொழிந்தார் புத்தர்.[/size][/size]

[size=2][size=4]ஆசைப்படுவதை அடக்கி ஒழுக்க நெறியில் செல்ல, தனது தொண்டர்களுக்கு சில வழிமுறைகளையும் நெறிமுறைகளையும் வகுத்தளித்தார் புத்தர்.[/size][/size]

[size=2][size=4]ஆசைப்படுவதை நிறுத்த அவர் மூன்று வழிகளைப் போதித்தார். இதனை எட்டு மடிவழிகள் என்றும் கூறுவர்[/size][/size]

[size=2][size=4]1. ஒழுக்கம்

2. ஞானம்

3. தியானம்[/size][/size]

[size=2][size=4]ஒழுக்கம்[/size][/size]

[size=2][size=4]நன்மொழி: உண்மை, பிறர் மனம் புண்படாதபடி பேசுதல், தேவையற்ற வீண்பேச்சைத் தவிர்த்தல், மௌனம் காத்தல்.[/size][/size]

[size=2][size=4]நற்செய்கை: செய்கையால் பிறரை புண்படுத்தாதிருத்தல், அஹிம்சையான செயல்களை மட்டும் செய்தல்.[/size][/size]

[size=2][size=4]நல்வாழ்க்கை: பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யா வாழ்க்கை. (அஹிம்சை)[/size][/size]

[size=2][size=4]ஞானம்[/size][/size]

[size=2][size=4]நற்காட்சி: காணும் காட்சியை அது தோன்றும் விதத்தை வைத்து அணுகாமல், அதனுடைய உண்மை நிலையை மதிப்பிடுவது.[/size][/size]

[size=2][size=4]நல்லெண்ணம்: வாழ்க்கைச் சுழற்சியிலிருந்து விடுபட எண்ணுவது, பிற உயிர்களுக்கு தீங்கு செய்யா எண்ணம், பிறர் நலம் விரும்புவது.[/size][/size]

[size=2][size=4]தியானம்[/size][/size]

[size=2][size=4]நன்முயற்சி: தன்னை செம்மைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளல்.[/size][/size]

[size=2][size=4]நற்கடைப்பிடி: உலகின் மெய்ஞானத்தை முன்னுணர்ந்த விழிப்பு நிலையைக் கடைப்பிடித்தல்.

நல்லமைதி: அமைதியை நிலைநாட்ட தியானம் மேற்கொள்ளல்.[/size][/size]

[size=2][size=4]இவையே எட்டு நல்வழிகள் எனப்படும்.[/size][/size]

[size=2][size=4]இவையே புத்த மதத்தின் அடிப்படைத் தத்துவங்கள் என்று கூறினாலும் இதனுள் வராத, புத்தரால் போதிக்கப்பட்ட பல அறநெறிகளும் ஒழுக்கநெறிகளும் உள்ளன. புத்தரின் அத்தகைய உபதேசங்களை அவர் மறைந்து சில மாதங்களுப்பின் புத்த பிக்குகள் தொகுத்து ‘திரிபிடகம்’ என்று வழங்கினர்.[/size][/size]

[size=2][size=4]திரிபிடகம் மூன்று நூல்களை உள்ளடக்கியது. ஒழுக்கத்தை போதிக்கும், ‘விநயபிடகம்’, அறநெறியைப் போதிக்கும், ‘தம்மபிடகம்’, மனத்தில் உருவேற்ற வல்ல ‘சூத்திரபிடகம்’.[/size][/size]

[size=2][size=4]திரிபிடகம் பாலி மொழி நூலாகும். புத்தர் தனது போதனைகளை பாலி மொழியிலேயே நிகழ்த்தினார். புதிய வழக்கங்களை, சடங்குகளை புத்த மதத்தில் புகுத்தும் வேலை புத்தர் மறைந்து சுமார் நூறு ஆண்டுகள் கழித்து சில பிக்குகளால் மேற்கொள்ளப்பட்டது. ஏனென்று கேட்டால் ‘பழையன கழிந்து புதியன புகுந்தால் மட்டுமே புத்தமதம் தழைக்கும்’ என்றனர். இதற்காக ‘வைசாலி’ நகரத்துக்கு அருகில் எட்டு மாதம் தங்கி பிக்குகள் ஆலோசித்தனர்.[/size][/size]

[size=2][size=4]முடிவாக, ‘புத்த மதத்தில் புதுமைகளைப் புகுத்துவதற்கு இடமில்லை’ என்று திட்டவட்டமாக அறிவித்தனர். இவர்களை எதிர்த்து புதுமையை விரும்பி வெளியேறியவர்களே இன்றைய மஹாயான அதாவது, ‘பெருஞ்சுழற் பௌத்தர்கள்’ (அவர்களாகவே வைத்துக்கொண்ட பெயர் இது).[/size][/size]

[size=2][size=4]இந்தப் புதுமை விரும்பிகள், ‘புதுமை மதத்தை பாழ்படுத்தி விடும்’ என்றவர்களை ஹினயான அதாவது சிறுஞ்சுழற் பௌத்தர்கள் என்றழைத்தனர்.[/size][/size]

[size=2][size=4]இதனை எதிர்த்து தங்களுக்கு தேரவாத (மூத்தோர் வழி) பௌத்தர்கள் என்று பெயர் சூடிக்கொண்டார்கள் மூத்தவர்கள்.[/size][/size]

[size=2][size=4]தேராவதத்துக்கும் மஹாயானத்துக்கும் வித்தியாசங்கள் அநேகமிருந்தாலும் மஹாயானம் இல்லையென்றால் பௌத்தம் இவ்வளவு தூரம் பரவி இராது; அதேபோல, தேராவதம் இல்லையென்றால் பௌத்தம் என்றால் என்னவென்றே தெரிந்திருக்காது என்பார்கள் பொது பௌத்தர்கள்.[/size][/size]

[size=2][size=4]புத்தர் புலால் உண்பதை தடை செய்ததைக்கூட அறியாமல் இருக்கும் இன்றைய சீனர்களை பார்த்தால் உங்களுக்கு மஹாயானம் நன்கு விளங்கும்.[/size][/size]

[size=2][size=4]போதிதர்மர் மஹாயானப் பிரிவைச் சார்ந்தவர். இவர் மஹாயான பௌத்த பிரிவின் வலது பக்கம் புகுந்து இடதுபுறம் புதிதாக ஜென் (தியான) புத்த மதத்துடன் வெளியேறியவர். இந்த பௌத்தம்தான் அவரை துறவு மேற்கொள்ள வைத்தது. சீனா செல்லத் தூண்டியது. ஜென்னைத் தோற்றுவிக்க உதவியது.[/size][/size]

[size=2][size=4]இனி தொடர்ந்து போதிதர்மர் வரலாற்றைப் பார்ப்போம். போதி தர்மர், பிறந்தார் வளர்ந்தார். தன் அரச பதவியை உதறித் துறவியானார். ப்ரஜ்னதாராவின் சீடரானார். சீனா சென்றார். இது தான் போதிதர்மரது முற்பாதி வரலாறு.[/size][/size]

[size=2][size=4]முதலில் வளர்ப்பிலிருந்து தொடங்குவோம். போதிதர்மர் ஒரு இளவரசர். ஆகையால் அவர் மற்ற அரச பரம்பரை குழந்தைகளைப் போல்தான் வளர்க்கப்பட்டிருப்பார். அதாவது வாள்வீச்சு, குதிரையேற்றம், மருத்துவம், தற்காப்புக்கலை, ராஜதந்திரம் என ஆயகலைகள் அனைத்தும் கற்றுக்கொடுக்கப்பட்டுதான் வளர்க்கப்பட்டிருப்பார். [size=5]மதம் சார்ந்த கல்வி என்பது ஊறுகாயாயைப் போலத்தான் இருந்திருக்கும். தவிர அவரது கல்வி முறையும் கண்டிப்பாக அவருக்கு அரசாட்சியின்மீதும் அதிகாரத்தின்மீதும் ஆர்வம் வளர்க்கும்படியாகத்தான் அமைந்திருக்கும். அப்படி இருக்கும்போது எப்படி பௌதத்தின் மீது அவருக்கு துறவு மேற்கொள்ளும் அளவுக்கு ஆர்வம் ஏற்பட்டது? தன் வாழ்நாளின் பிற்பகுதி முழுவதையும் பௌத்தத்துக்கே அர்ப்பணிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி அவருள் எழுந்தது? அவரது துறவு முடிவுக்குப் பின்னால் வேறுசில நிகழ்வுகளும் நடந்திருக்கலாம் அல்லவா?[/size][/size][/size]

[size=2][size=4]போதிதர்மரின் துறவறம் பற்றி படிக்கும் எவரது மனதிலும் இந்தக் கேள்விகள் பிறப்பது இயற்கை.[/size][/size]

[size=2][size=4]போதிதர்மர் ஏன் துறவறம் மேற்கொள்ள முடிவெடுத்தார்?[/size][/size]

[size=2][size=4]பௌத்த மதத்தை அறிய அறிய போதிமர்தருக்கு பௌதத்தின் மீதும் புத்தரின் மீதும் காதல் அதிகமாகிவிட்டது. அதனால் தான் துறவறம் மேற்கொண்டார். அவர் திடீரென்று மனம் மாறும் அளவிற்கு எந்த நிகழ்வும் நடக்கவில்லை. இது ஒரு சாரரின் கருத்து.[/size][/size]

[size=2][size=4]போதிதர்மருக்கு அவரைவிட வயதில் மூத்த இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். ஆனால் போதிதர்மர் தன் இரு சகோதரர்களைக் காட்டிலும் திறமை வாய்ந்தவர். எனவே சகோதரர்கள் இருவரும் பயந்தனர். போதிதர்மர் தங்கள் இருவரையும் வீழ்த்திவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்வாரோ என்று கலங்கி போதிதர்மரைத் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினர்.[/size][/size]

http://www.tamilpaper.net/?cat=1280

Link to comment
Share on other sites

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கட்டுரை, வெசாக் காலம் என்பதால் இப்பொழுது புத்தரின் போதனைகள் அதிகம் பிரசங்கிக்கப்படும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.