Jump to content

அனைத்து பதவிகளில் இருந்தும்... சுரேன் ராகவன், நீக்கம் !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீன தூதுவர் வடக்கில் தெரிவித்த கருத்தில் கரிசனை கொண்டுள்ளோம் – சுரேன் ராகவன்

அனைத்து பதவிகளில் இருந்தும்... சுரேன் ராகவன், நீக்கம் !!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகிக்கும் அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த கடிதம் ஒன்றின் மூலம் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர சுரேன் ராகவனுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலின் பேரில், கட்சியின் பிரதிச் செயலாளர், வன்னி மாவட்ட உறுப்பினர் மற்றும் கட்சியின் சர்வதேச விவகார செயலாளர் பதவிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தயாசிறி ஜயசேகரவினால் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1277373

Link to comment
Share on other sites

ஒவ்வொருவரையும் அமைச்சராக்குவதற்கு அவர்களின் சம்மதத்தைப் பெற 2 மில்லியன் டொலர்களை வரை கொடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி இன்று குற்றம் சாட்டியுள்ளது.

சும்மா கிடந்த சுரேனுக்கு கிடைத்த அதிஷ்டம். பெளத்தம் படித்த தமிழன் என்ற ஒரு தகுதியே போதும் இவருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

ஒவ்வொருவரையும் அமைச்சராக்குவதற்கு அவர்களின் சம்மதத்தைப் பெற 2 மில்லியன் டொலர்களை வரை கொடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி இன்று குற்றம் சாட்டியுள்ளது.

சும்மா கிடந்த சுரேனுக்கு கிடைத்த அதிஷ்டம். பெளத்தம் படித்த தமிழன் என்ற ஒரு தகுதியே போதும் இவருக்கு.

எனக்கென்னவோ... 2 மில்லியன் டொலர், மிக அதிகம் போல் தெரிகின்றது.
கோத்தா... 2 மில்லியன் ஸ்ரீலங்கா ரூபாய், கொடுத்திருக்கலாம்.
பல பில்லியன் ரூபாய், இதுக்குத்தானே புத்தம் புதுசாய்  அடிச்சு வைச்சிருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

எனக்கென்னவோ... 2 மில்லியன் டொலர், மிக அதிகம் போல் தெரிகின்றது

பெற்றோல், டீசலுக்கே பத்தாது! கோத்தா கொள்ளை மலிவில் வாங்கிவிட்டார்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

எனக்கென்னவோ... 2 மில்லியன் டொலர், மிக அதிகம் போல் தெரிகின்றது.
கோத்தா... 2 மில்லியன் ஸ்ரீலங்கா ரூபாய், கொடுத்திருக்கலாம்.
பல பில்லியன் ரூபாய், இதுக்குத்தானே புத்தம் புதுசாய்  அடிச்சு வைச்சிருக்கு. 

அட..... கருணா அம்மான்..... இந்த நேரம் பார்த்து எம்பி யா இல்லையே.

இருந்தால், டக்கியர், பிள்ளையானோட, ஒரு கெத்தா, அமைச்சராகியிருப்பார்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

எனக்கென்னவோ... 2 மில்லியன் டொலர், மிக அதிகம் போல் தெரிகின்றது.
கோத்தா... 2 மில்லியன் ஸ்ரீலங்கா ரூபாய், கொடுத்திருக்கலாம்.
பல பில்லியன் ரூபாய், இதுக்குத்தானே புத்தம் புதுசாய்  அடிச்சு வைச்சிருக்கு. 

அட ஆமால்ல, இப்ப நம்ப நாட்டில எங்கை டொலர் இருக்கு. இருந்த கொஞ்சத்தையும் அண்ணன் தம்பிமார் அள்ளிகொண்டு போயிட்டானுங்க. இனி "டொலர்" எண்டு வெற்றுபேப்பரிலை எழுதிதான் கொடுக்கணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

EEAA2914-39-D5-4136-8-B0-B-1-C612-FE857-

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை….. 💰 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.