Jump to content

புதிதாக பிறந்த ஆண் குழந்தை உயிரிழப்பு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஆறுதல் கூறும் ரசிகர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக பிறந்த ஆண் குழந்தை உயிரிழப்பு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஆறுதல் கூறும் ரசிகர்கள்

image.gif.577e3b381d69db72201c7fcf4b9edfac.gif
BBCCopyright: BBC

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு புதிதாக பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்துவிட்டதாக, அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள அவருடைய ரசிகர்கள், ரொனால்டோவுக்கும் அவருடைய மனைவிக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

போர்ச்சுகல் சர்வதேச அணி மற்றும் பிரீமியர் லீகின் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆவார். இவர் கடந்த அக்டோபர் மாதம் தனக்கும் தன் மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ்சுக்கும் இரட்டை குழந்தைகள் பிறக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தார்.

இரட்டை குழந்தைகளில் ஒன்று ஆண் குழந்தை மற்றொன்று பெண் குழந்தை.

இந்நிலையில், புதிதாக பிறந்த ஆண் குழந்தை இறந்துவிட்டதாக, அவர் ட்விட்டரில் அறிவித்துள்ளார். அப்பதிவில், "எங்களுடைய ஆண் குழந்தை இறந்து விட்டது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடனும் வேதனையுடனும் தெரிவித்துக்கொள்கிறேன்.

எந்த ஒரு பெற்றோருக்கும் இதுவொரு பெரிய வலியை ஏற்படுத்தக்கூடியதாகும். எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பது மட்டுமே எங்களுக்கு இந்த நேரத்தில் சிறு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

எங்களுக்காக அக்கறையுடன் பணியாற்றிய அனைத்து மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

நாங்கள் இந்த சமயத்தில் மனதளவில் உடைந்து உள்ளோம்.

இந்த நேரத்தில் எங்களுக்கு பிரைவசி தாருங்கள் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

மேலும், அவருடைய இறந்த ஆண் குழந்தையை குறிப்பிட்டு, "நீ எங்கள் தேவதை. எங்களுடைய அன்பு உனக்கு எப்போதும் உள்ளது" என தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/topics/cdr56rv4qwdt?ns_mchannel=social&ns_source=twitter&ns_campaign=bbc_live&ns_linkname=625e6f7877811a20d37c8f0f%26புதிதாக பிறந்த ஆண் குழந்தை உயிரிழப்பு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஆறுதல் கூறும் ரசிகர்கள்%262022-04-19T08%3A14%3A48.883Z&ns_fee=0&pinned_post_locator=urn:asset:fc80da23-7032-4f14-82c3-9cac8174bc95&pinned_post_asset_id=625e6f7877811a20d37c8f0f&pinned_post_type=share

  • Sad 2
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.