Jump to content

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது ரஷ்யா


Recommended Posts

1 hour ago, nedukkalapoovan said:

அப்படிங்களாண்ணே. அப்படின்னா.. இந்த உலகில் தனித்து நின்று தன் சொந்த இனத்தின் பங்களிப்போடு அதன் அரசியல் சமூக விடுதலைக்காகப் போராடிய மக்கள் மீது டொலர் கணக்கில் கமிசனை வாங்கிக் கொண்டு ஆயுதங்களையும்.. விமானங்களையும்.. பொஸ்பரஸ் குண்டுகளையும்.. விமானிகளையும்.. பயிற்சிகளையும் கொட்டிக் கொடுத்த உக்ரைனைக்கு கருணை காட்டுவது மட்டும் எப்படி நியாயமாகும்..??!

இன்னும் கோத்தா கும்பல்.. உக்ரைனிடம் வாங்கின ஆயுதத்திற்கு கொடுத்த டொலருக்கு.. கணக்குக் கேட்டுக்கிட்டு இருக்காங்க. இந்த வாரமும் ஒரு செய்தி வந்திருந்ததே. 

நெடுக்ஸ் உங்கள் பழிவாங்கும் உணர்வைப் புரிந்து கொள்கிறேன்.

நூறு வருடங்களுக்கு மேல் எம்மை அடிமைப்படுத்தி நாடற்றவர்களாக்கிய பிரித்தானியா மீதல்லவா உங்கள் பழிவாகல் முதலாவதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அங்கு இருப்பதைப் பெருமையாகக் கருதிக் கொண்டு எங்கேயோ கூலிக்கு மாரடித்தவனைப் பழிவாங்குவதாக நினைக்கிறீர்கள்.

 

7 minutes ago, குமாரசாமி said:

எனது அவதானிப்பின் படி......  கருத்துக்கள பொறுப்பாளராக இருந்து கொண்டு பல திரிகளில் கருத்து எழுதாமலே பக்கசார்பு விருப்பு வாக்கை இட்டவர்களில் நீங்கள் முதன்மையானவர்.நிழலியும் இதே வேலையை செய்திருக்கின்றார். ஆனால் நிழலி குறைந்த பட்சம் திரியில் ஒரு வசன கருத்தையாவது வைத்திருப்பார்.ஆனால் நீங்கள்??????

குழுவாதம் இல்லாது கருத்து எழுத வேண்டுமெனில் ஒருவர் முதுகை மற்றவர் சொறிவது போல் ஆகிவிடும்.

எனக்குப் பிடித்த கருத்துக்குத்தானே நான் பச்சை குத்த முடியும். அது எனது பக்கச் சார்பான கருத்தாகவும் இருக்கலாம்தானே. சில வேளைகளில் ஒருவர் எனக்குப் பதிலளித்திருந்தால் அதனைப் பார்த்து ஆமோதிக்கிறேன் என்பதற்காகவும் குத்தியுள்ளேன். 

பச்சை குத்துவது தீர்ப்புச் சொல்வது என்று குழம்பியுள்ளீர்கள். 😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இணையவன்

பலகோடி மக்கள் வாழும் நாடொன்றைத் தன்னால் ஒரே ஏவுகளையால் அழிக்க முடியும் என்று மார்தட்டுபவனை விட உலகின் அதியுர்ந்த பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்க முடியாது. இதைக் கேட்டு மகிழ்பவரை என்னவென்று சொல்வது ? அது

இணையவன்

நாம் ஈழத் தமிழர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. ஒவ்வொரு விதமான திரிகளில் நடைபெறும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் கள உறவுகளுடன் நட்புடனேயே பழக முயற்சிக்கிறேன். ஒருவர் எழுதிய கருத்தைப் ப

goshan_che

தலைவருடன் கடைசிவரை நிண்டவர்களில் உங்கள், எங்கள் தலைமுறையினரும் அடங்குவர் அண்ணை. 2009 க்கு முன் ஒரு தலைமை இருந்தது, ஆகவே புலத்தில் இருந்து தேசியப்பற்றை பறைசாற்றுவது, உழைப்பது முடியுமாய் இருந்தது. 

8 minutes ago, குமாரசாமி said:

 

குழுவாதம் இல்லாது கருத்து எழுத வேண்டுமெனில் ஒருவர் முதுகை மற்றவர் சொறிவது போல் ஆகிவிடும்.

முற்றிலும் தவறு. இதுதான் அப்பட்டமான முதுகு சொறிதல். 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

முதல் வெடி விழ முன்னரே பிளேன் பிடித்து யூரோப் வந்தவர்கள் போரை அனுபவித்தவர்களா?

ஆட்டிலறி சத்தம், குண்டுவீச்சுக்கள் எதையும் நேரடியாகக் கேட்டேயிருக்கமாட்டார்கள். 

 

என்ன ஜி. இருப்பதே ஒரே ஒரு வேட்டி…

அதையும் டர்…….🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, இணையவன் said:

பச்சை குத்துவது தீர்ப்புச் சொல்வது என்று குழம்பியுள்ளீர்கள். 😂

இல்லை. :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, இணையவன் said:

கபிதான்,

1) நான் பிரெஞ்சு  செய்திகளை அதிகம் வாசிப்பதுண்டும். ஆய்வுக் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளதின்படி Kiev இனைப் பிடிப்பதற்காகத்தான் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு ரஸ்யப் படைகள் அங்கு நகர்த்தப்பட்டன. அந்த நகரைப் பிடிக்காமல் ஏன் பலமான இழப்புகளுடன் ஏன் பின்வாங்க வேண்டும் ? ஒரு நாட்டின் இராணுவ பலத்தைச் சிதைக்க வேண்டுமானால் அதன் தலைநகரைப் பிடிப்பதை விட்டு ஏன் தனது நாட்டு எல்லையில் நின்று வீரம் பேச வேண்டும் ?

2) புட்டின் சர்வாதிகாரி என்பது எனது சொந்தக் கருத்தாக நீங்கள் கருதினால் இது பற்றி உங்களுடன் உரையாடுவதில் பயனில்லை.

3) கொழும்புத் தாக்குதலைச் சுட்டிக் காட்டியது எந்த நிலையிலும் புலிகளின் இலக்கு சிங்கள பொதுமக்கள் இல்லை. தற்போது உக்ரெய்னில் இருந்து வரும் செய்திகளையும் படங்களையும் பார்த்திருந்தால் உங்களுக்குப் புரிந்திருக்கும் அது முற்றிலும் இராணுவ இலக்குகள் இல்லை.

4) இதுவரை மேற்கு நாடுகள் யுத்தத்தில் இறங்காமைக்குக் காரணம் இயலாமை அல்லது மூன்றாவது உலக யுத்தம் மூழும் என்ற காரணம் இல்லை. ரஸ்யாவிடம் உள்ள அணு ஆயுதங்களும் ஐரோப்பா முழுவதும் உள்ள மின்னணு ஆலைகளும்தான்.

5) மேற்கு நாடுகளிடம் அணு ஆயுதம் இருந்தாலும் அது இனி ஒருபோது பாவிக்கப்பட மாட்டாது என்று நம்பலாம். ரஸ்யா அப்படி அல்ல.

6) புட்டின் எடுப்பதுதன் முடிவு. புட்டினை நீங்கள் ஒரு பொறுப்புள்ள மனிதராகக் கருதினால் அது உங்கள் விருப்பம்.

வெட்கித் தலை குனியவேண்டிய சிந்தனை எனக் குறிப்பிட்டது எதோ ஒரு காரணத்துக்காக முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான மக்களைப் பேரினவாதம் பலியிட்டதோ அதே இனம் அதேபோன்று இன்னொரு தேசத்தில் ஏதோ காரணத்துக்காக அங்கும் பொதுமக்கள் சாவதைக் கண்டுகொள்ளாது அதை வெற்றியாகக் கொண்டாடுவதைத்தான்.

7) ரஸ்ய ஏவுகணை ஆதாரம். இது பிரெஞ்சில் உள்ளது. RS-28 Sarmat பற்றித் தேடிப் பாருங்கள். 

1) பிரென்சுக் கட்டுரைகளை மட்டும் நம்பினால் பிரச்சனை எழத்தான் செய்யும்.

Kiyiv விட்டு ரழ்யப் படைகள் வெளியேறுவதற்கு காரணம், உக்ரேன் ரஸ்ய பேச்சுவார்த்தை. பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் இருதரப்பும் கொள்கை அளவில் மேற்கொள்ளப்பட்ட முடிவின் கீழ் ரஸ்யப் படைகள் தலைநகரில் இருந்து வெளியேறியது. 

2) ரஸ்ய அத்பர் ஒரு சர்வாதிகாரி என்று நீங்கள் கூறினால் அது உங்கள் சொந்தக் கருத்தாகத்தானே இருக்க முடியும்?

3) பொதுமக்களின் இலக்குகளும் தாக்குதலுக்குள்ளாகியிருப்பது மறுக்க முடியாதது.

4) இயலாமை அல்ல. அது எல்லோருக்குமே தெரியும். ஆனால் அண்மையில் ரஸ்ய அதிபர் " அணு ஆயுத யுத்தத்தில் வெற்றியாளர்கள் என்று எவருமே இல்லை " என்று கூறியதைக் கவனிக்க வேண்டும். 

ஆனாலும் ஆணு ஆயுத வல்லமையுள்ள நாட்டை தாக்க முடியாமல் உக்ரேனுக்கு ஆயுத விநியோகம் செய்வது இயலாமையால்தான். இது ஒருவகை "இருக்கு ஆனால் இல்லை"  எனும் நிலைமைதான்.

5) இந்த உலகத்தில் அணு ஆயுதத்தை, அதுவும் யுத்தத்தின் நிறைவில் பாவித்த ஒரே ஒரு மேற்கு நாடு அமெரிக்கா  மட்டுமே. (அதனை மட்டும்  இலகுவாக மறந்துவிடுகிறீர்கள்.)

6) புட்டினை A Real Stateman என்று கொண்டாடுவது மேற்குலகத்தவரே.

ஆனாலும் கடந்த 20 வருடங்களில், உலகின் தலைசிறந்த Leader ஆக Vladimir Putin ஐ நான் கருதுகிறேன். அதற்கடுத்த இடத்தில் இருப்பவர் ஜேர்மனிய முன்னாலள் அதிபர் Angela Merkel என்பது என் தனிப்பட்ட கருத்து. 

7) இந்த ஆயுதத்தால் ஒரு நாட்டையே அழிப்பேன் என்று ரஸ்ய அதிபர் பொறுப்பில்லாமல் கூறியதாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை. (ஆயுத சோதனை நடைபெற்றது உண்மை )

இந்த கருத்தாடலே ஆதாரமற்ற புரளியை (Gossip) அடிப்படையாகக் கொண்டுதான் நடைபெறுகிறது. அதனால்தான் ஆதாரத்தை முன்வைக்கும்படி கோருகிறேன்.  அப்படிக் கேட்டவுடன் உங்களுக்கு விருப்பு வாக்களித்த (NOTA 😆) விளங்க நினைப்பவர் escape.( அவர் வருவாரா... அவர் வருவாரா....என் கேள்வியைப் புரிந்துகொண்டு அவர் வருவாரா...😆)

 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

சர்வாதிகளுக்குரிய ஆணவபேச்சு. அதிலும் புரின் உலகின் அதியுர்ந்த பயங்கரவாத சர்வாதிகாரி  😟

அமெரிக்கா இரண்டாவது தடவையாக ஈராக்கை தாக்க முனைந்த போது பல நாடுகள் எதிர்த்தன. ஐக்கிய நாடுகள் சபையும் எதிர்த்தது. எல்லாவற்றையும் மீறி தன்னிச்சையாக ஜோர்ஜ் புஷ் அவர்கள் ஈராக்கை தாக்கி அழித்ததை எப்படி பார்க்கின்றீர்கள்? அது உங்கள் பயங்கரவாத சர்வாதிகாரி பட்டியலில் உள்ளடக்கப்பட மாட்டாதா?
ஒன்றுமே இல்லாத ஈராக்கை அழித்தது பற்றி அமெரிக்காவே ஒத்துக்கொண்டது ஒருபக்கம் அமைதியாக இருக்கட்டும்.

வியட்னாம் போரில் கூட அமெரிக்கா இன்றும் அம்மணமாகவே நிற்கின்றது.

Phan Thi Kim Phuc - Wikipedia

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

முதல் வெடி விழ முன்னரே பிளேன் பிடித்து யூரோப் வந்தவர்கள் போரை அனுபவித்தவர்களா?

ஆட்டிலறி சத்தம், குண்டுவீச்சுக்கள் எதையும் நேரடியாகக் கேட்டேயிருக்கமாட்டார்கள். 

பிரசவ வலி என்றால்…. எப்படி இருக்கும் என்று ஆண்கள் உணர்ந்தது இல்லை.
ஆனால் அது கொடுமையான வலி என்று ஆண்களுக்கு தெரியும்.

அதுபோல் தான்… குண்டு சத்தத்தை நேரடியாக கேட்கா விட்டாலும்,
போர் எப்படி இருக்கும் என்று… உணர்ந்தே இருப்பார்கள். 🙂

3 hours ago, goshan_che said:

என்ன ஜி. இருப்பதே ஒரே ஒரு வேட்டி…

அதையும் டர்…….🤣

 

🧐 மேலே கூறிய பதில்… உங்களுக்கும் சேர்த்துத்தான்… 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ரஷ்யாவின் இப்போதைய நிலையைத் தான் கவனிக்கிறோம்.

அனால், ரஷ்யா பயப்படுவதற்கு வரலாற்று நினைவுச் சுவடுகள், ருசியாவாள் மறக்க முடியாதவை.

இதில் ஒன்று, புட்டின் எந்தவிதமான எதேச்சாதிகார, அடக்குமுறை அல்லது சர்வாதிகாரம் அல்லது இவை கலந்த  ஆட்சியை கொண்டு இருந்தாலும், பெரும்பான்மையான ரஸ்சிய சமூகம் புட்டின் இந்த நிலைப்பாட்டில் உள்ளன, யுத்தமோ அல்லது இராணுவ நடவடிக்கையை ஆதரிக்கிரார்கள்.

இது ஒரு கரணம் மேற்கு, பொதுமக்கள், ரஷ்யா அரசு என்று வேறுபடுத்தாமல், புதிய புதிய  தடைகளை தொடர்ந்து போடுவதற்கு.

சுருக்கமான ரஷ்யா வரலாறு - இப்போதைய ரஷ்யா அரசின் தோற்றம், Kievan Rus, இப்போதைய Kiev, உக்ரைன் தலைநகரில்.

இந்த 3 அரசுக்களும், ருஸ்சியா, உக்ரைன், பெலாரஸ் , ,   Kievan Rus, தமது மூதாதையர் என்று பிடித்தாலும், ரஸ்சியாவிலும், பெலாரஸ் இலும் மட்டுமே rus உள்ளது.

அண்மைய வளரலற்றில், ரஷ்யா, நாசி ஜெர்மனி, பிரித்தானிய பேரரசு, (அன்றைய நிலையில்), சுவீடன், பிரான்ஸ் கூட்டு குழு,  நெப்போலியன் (France) ஆல் ஆக்கிமிக்கப்பட்டு இருக்கிறது.  

அததற்கு முந்திய வரலாற்றில், இப்போதைய போலந்து, லித்துவேனியா மற்றும்  நாடுகளில் அப்போது இருந்த அரசுக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது.

இது எல்லாம் ருஸ்சிய சமூகத்தில் மறக்காத நினைவுகள்.

உக்கிரைனில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு ஒப்பண பட்டினிச் சாவு (1932 -33), ருஸ்சிய செய்யவில்லை. சோவியத் யூனியன், ஸ்டாலின் (ஓர் ஜோர்ஜியர், Georgia) தலைமையில் நடந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

🧐 மேலே கூறிய பதில்… உங்களுக்கும் சேர்த்துத்தான்… 😁

தலையிடியும், காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும். அனுபவிக்காதவர்களுல்கு ஒருபோதும் அந்த வலிகளின் முழுமையும் புரிய வாய்ப்பில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

எல்லோரும் ரஷ்யாவின் இப்போதைய நிலையைத் தான் கவனிக்கிறோம்.

அனால், ரஷ்யா பயப்படுவதற்கு வரலாற்று நினைவுச் சுவடுகள், ருசியாவாள் மறக்க முடியாதவை.

இதில் ஒன்று, புட்டின் எந்தவிதமான எதேச்சாதிகார, அடக்குமுறை அல்லது சர்வாதிகாரம் அல்லது இவை கலந்த  ஆட்சியை கொண்டு இருந்தாலும், பெரும்பான்மையான ரஸ்சிய சமூகம் புட்டின் இந்த நிலைப்பாட்டில் உள்ளன, யுத்தமோ அல்லது இராணுவ நடவடிக்கையை ஆதரிக்கிரார்கள்.

இது ஒரு கரணம் மேற்கு, பொதுமக்கள், ரஷ்யா அரசு என்று வேறுபடுத்தாமல், புதிய புதிய  தடைகளை தொடர்ந்து போடுவதற்கு.

சுருக்கமான ரஷ்யா வரலாறு - இப்போதைய ரஷ்யா அரசின் தோற்றம், Kievan Rus, இப்போதைய Kiev, உக்ரைன் தலைநகரில்.

இந்த 3 அரசுக்களும், ருஸ்சியா, உக்ரைன், பெலாரஸ் , ,   Kievan Rus, தமது மூதாதையர் என்று பிடித்தாலும், ரஸ்சியாவிலும், பெலாரஸ் இலும் மட்டுமே rus உள்ளது.

அண்மைய வளரலற்றில், ரஷ்யா, நாசி ஜெர்மனி, பிரித்தானிய பேரரசு, (அன்றைய நிலையில்), சுவீடன், பிரான்ஸ் கூட்டு குழு,  நெப்போலியன் (France) ஆல் ஆக்கிமிக்கப்பட்டு இருக்கிறது.  

அததற்கு முந்திய வரலாற்றில், இப்போதைய போலந்து, லித்துவேனியா மற்றும்  நாடுகளில் அப்போது இருந்த அரசுக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது.

இது எல்லாம் ருஸ்சிய சமூகத்தில் மறக்காத நினைவுகள்.

உக்கிரைனில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு ஒப்பண பட்டினிச் சாவு (1932 -33), ருஸ்சிய செய்யவில்லை. சோவியத் யூனியன், ஸ்டாலின் (ஓர் ஜோர்ஜியர், Georgia) தலைமையில் நடந்தது. 

ரஸ் என்ற பெயரே வைகிங்கள் கொடுத்தது. மாஸ்கோ வெறும் பொட்டல் காடாக இருந்த போது நகர நாகரீகமாக வளர்ந்து விட்ட இனம் உக்ரேனிய இனம்/கியவ்.

ஆகவே இன வரலாற்று அடிப்படையில் பார்த்தாலும் இன்றைய உக்ரேனிய இனத்துக்கு ரஸ்ய இன அடையாளத்தின் கீழ் தன்னை சுருக்கி கொள்ள வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

போரின் ஆரம்பத்தில் உக்ரேன் என்ற நாடே இல்லை அது ரஸ்யா என்ற தொனியில் பேசினார் புட்டின் (60 நாளில் வாங்கிய வெளுவை இப்போ அவரை டொன்பாசோடு சுருக்கி விட்டது) ஆனால் இந்த அணுகுமுறை அப்படியே ஆஸ்திரியா, போலந்து இதர நாடுகள் மீது படைஎடுக்க முன் கிட்லார் கூறிய “அகண்ட ஜேர்மனி” தத்துவத்துக்கு நிகரானது. ஆபத்தானது.

“சகல கியிவியன் ஸ்லாவிக் மக்களும் ரஸ்யர்கள்” என்ற புட்டினின் கொள்கை - சகல தென்னிந்தியர்களும் தமிழர்கள் என நாம் இப்போ அடம்பிடித்து, கேரளா, ஆந்திரா, தெலுங்கான, கர்னாநடகாவை தமிழ் நாட்டின் கீழ் கொண்டு வர கோருவதை போன்ற ஒரு அபத்தம்.

இனங்களின் சுயநிர்ணயத்தை பொல்சோவிக் காலத்திலேயே ரஸ்யா ஏற்று கொண்டு விட்டது. அதன் அடிப்படையில்தான் சோவியத் கூட்டரசு உடைந்த போது இன சுயநிர்ணய அடிப்படையில் உக்ரேன், லத்வியா உட்பட்ட பல நாடுகள் தனிநாடுகள் ஆகின. 

இப்படி இன அடிப்படையிலான பூரண சுய நிர்ணயம் உக்ரேனுக்கு இருக்கும் போது, நேட்டோவில் இணைவதும் பிரிவதும் அந்த நாட்டு மக்களின் தேர்தல் முடிவாக மட்டுமே இருக்க முடியும். உக்ரேனில் வாழும் ரஸ்ய இனத்தவர் உரிமையை பாதுகாக்க ரஸ்யா முயல்வது தப்பில்லை ஆனால் முழு நாட்டையும் அடிமை கொள்ள நினைப்பது, உக்ரேனிய இன அடையாளத்தை மறுதலிப்பது நியாயம் இல்லை.

இந்த சண்டையின் ஆரம்பம் உக்ரேன் நேட்டோவில் சேர நினைப்பதால் என பலர் மேலோட்டமாக நினைப்பது தவறு.

இதன் ஆரம்பம் புட்டினுக்கு ஜனநாயகத்தின் மீதுள்ள அவநம்பிக்கை.  மற்றும் சார் கால ரஸ்ய சாம்ராஜ்யத்தை மீள நிறுவும் முனைப்பு என்பனவே.

ஜனநாயகம் என்ற பெயரில் ரஸ்யாவில் நடப்பது ஒரு “mafia state” ஆட்சியே. உக்ரேன் ஈயுவில் இணைவது, ரஸ்யாவுக்கு அருகில் ஒரு ஸ்லாவிக் நாடு பூரண ஜனநாயகத்தை அனுபவிப்பது - நாமும் ஏன் இப்படி வாழ முடியாது ஏன ரஸ்யர்களை சிந்திக்க வைக்கும். இது ஈற்றில் புட்டின் மற்றும் அவரை சூழ இருந்து ரஸ்யாவின் வளங்களை ஏப்பம் விடும் ஒலிகார்க்ஸ் அத்தனை பேரின் வீழ்ச்சிக்கும் வழிகோலும்.

ஆகவேதான் உக்ரேன், சேர்பியா ஈயூவில் சேரக்கூடாது என்பதில் புட்டின் கண்ணும் கருத்துமாய் உள்ளார்.

புட்டின் விரும்பினால் இப்போது கூட உக்ரேன் ஈயுவில் சேர்ச்லாம் ஆனால் நேட்டோவில் சேரக்கூடாது என்ற அடிப்படையில் இந்த போரை நிறுத்தலாம்.

உண்மையை சொன்னால் ஒரு போதும் நேட்டோ உக்ரேனை சேர்க்காது. ஒரு, ரஸ்ய மொழி ஆதிக்கம் உள்ள ஸ்லாவிக் நாட்டை நேட்டோவில் சேர்ப்பது, எதிரியை நம் கூட்டில் சேர்ப்பது போல. ஆபத்தானது.

முன்னர் ஒருமுறை உக்ரேன் சேர கேட்டு அதை நேட்டோ நிராகரித்தும் உள்ளது. 

அதேபோல் ஈயுவில் உக்ரேன் சேர்வது நீண்டகால நோக்கில் ரஸ்யாவுக்கு நல்லதே.

இப்போ ஹங்கேரியின் விக்டர் ஓபன் இருப்பது போல, ஈயூவுக்கு உள்ளே இருக்கும் ஒரு ரஸ்ய நண்பனாக உக்ரேன் இருந்திருக்கும்.

ஆனால்,

ரஸ்யாவுக்கு நல்லது = புட்டினுக்கு நல்லது என்பதில்லை.

தனதும், தன்னை சுழ இருந்து ரஸ்யாவின் வளங்களை உறிஞ்சும் ஒலிகார்க் கொள்ளைகார பில்லியனர்களினதும் இருப்புக்கு, ரஸ்யாவை சூழ, பெலரூசிலும், ஆர்மேனியாவிலும், உக்ரேனிலும் தன்னை போன்ற ஒரு மாபியா அரசு அமைவதே நல்லது என புட்டின் நம்புகிறார்.

இதுவே இந்த போரின் அடிப்படை காரணம் (இதில் நேட்டோ நோகாமல் நொங்கு சாப்பிடுவது வேறு).

பிகு

இங்கே வாசிப்பின் flow கருதி உங்களை கோட் செய்துள்ளேன். தவிர இது உங்களுக்கான பதில் அல்ல.

யாழில் கருத்து பரிமாற்றத்துக்கான சுதந்திரம் இப்போ இல்லை என்பதால்  நான் கருத்தாடுவது இல்லை. தேவை கருதி எனது கருத்தை மட்டும் வைப்பது உண்டு.

ஆகவே முன்னர் போல ஒரு சம்பாசணையை இங்கே தொடர விரும்பவில்லை. Nothing personal. புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்🙏🏾.

 

Edited by goshan_che
  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

உக்கிரைனில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு ஒப்பண பட்டினிச் சாவு (1932 -33), ருஸ்சிய செய்யவில்லை. சோவியத் யூனியன், ஸ்டாலின் (ஓர் ஜோர்ஜியர், Georgia) தலைமையில் நடந்தது. 

அதாவது சோவியத் யூனியனில் பெரும்பகுதியாக இருந்த அகண்ட ரஷ்யர்களின் விருப்பத்திற்கு மாறாக ஒரு சர்வாதிகாரியும் ஜோர்ஜியருமான ஸ்டாலின் செய்தார். அதனால் சோவியத் யூனியனின் அங்கமான ரஷ்யா பொறுப்பில்லை! இப்படியான லொஜிக்கை வைத்தே பல வெள்ளையடிப்புக்களைச் செய்யலாம்.😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, இணையவன் said:

கபிதான், நான் பிரெஞ்சு  செய்திகளை அதிகம் வாசிப்பதுண்டும். ஆய்வுக் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளதின்படி Kiev இனைப் பிடிப்பதற்காகத்தான் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு ரஸ்யப் படைகள் அங்கு நகர்த்தப்பட்டன. அந்த நகரைப் பிடிக்காமல் ஏன் பலமான இழப்புகளுடன் ஏன் பின்வாங்க வேண்டும் ? ஒரு நாட்டின் இராணுவ பலத்தைச் சிதைக்க வேண்டுமானால் அதன் தலைநகரைப் பிடிப்பதை விட்டு ஏன் தனது நாட்டு எல்லையில் நின்று வீரம் பேச வேண்டும் ?

நன்று.
உங்கள் ஒருதலைப்பட்ச வாசிப்புக்களை போலவே சிங்கள மக்களும் தாம் சார்ந்த  வாசிப்புகளை வாசித்தும் கேட்டும் வரலாறுகளை அறிந்தும் தமிழர்களின் பிரச்சனைகளை உணரமுடியாது உள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கிருபன் said:

அதாவது சோவியத் யூனியனில் பெரும்பகுதியாக இருந்த அகண்ட ரஷ்யர்களின் விருப்பத்திற்கு மாறாக ஒரு சர்வாதிகாரியும் ஜோர்ஜியருமான ஸ்டாலின் செய்தார். அதனால் சோவியத் யூனியனின் அங்கமான ரஷ்யா பொறுப்பில்லை! இப்படியான லொஜிக்கை வைத்தே பல வெள்ளையடிப்புக்களைச் செய்யலாம்.

சோவியத் இல் அகண்ட ரஷ்யா என்ற ஓர் கோட்பாடே இல்லை.

எல்லாமே ideology. 

உக்ரைன் இல் நடத்தப்பட்டது, இனம் என்ற அடிப்படியில் அல்ல. 

கோட்பாட்டை ஓர் குழு மக்கள் (  ஏற்கவில்லை என்ற  அடிப்படையில்.

முக்கியமாக, எல்லாமே வேறு வேறு.  ஸ்டாலின், ஓர ஜோர்ஜியர்,  சோவியத் யூனியன் (நீங்கள் சொன்ன அகண்ட ரஷ்யா) இன் தலைவர்.

மிகவும் முக்கியமாக, உக்ரைனியர்கள் மட்டும் பட்டினியால் சாகவில்லை. 

மொத்தம் - 5 மில்லியன். உக்ரைன் - 3.9 மில்லியன் (இப்போதைய மதிப்பீடு). உக்ரைன் கடுமையாக பாதிக்கப்பட்டது 1932 -33.

அனால் ஸ்டாலின் இதை நடத்தியது  , 1931 - 1934, முழு சோவியத் யூனியன் இலும். 

ரஸ்சியர்கள் பட்டினி சாவல் பாதிக்கப்பட்டாலும் - ஸ்டாலின் ஐ தமது  உன்னத தலைவர்களில் ஒருவராகவே பார்க்கிறார்கள். 

இந்த பட்டினி சாவு - கொள்கைகளின் விளைவு  -ஏறத்தாழ மாவோ சீனாவில் செய்ததையே, ஸ்டாலின் உம் செய்தது.  தனிப்பட்டவர்கள் விவசாயத்தை, குழு விவசாயம் ஆக்கியது.  மற்றது,  ideology ஐ எதிர்த்தவர்கள் எவராகிலும் தண்டனை.

இது ஒரு காரணம், உக்கிரைன் பெருமளவில் இறந்து இருந்தாலும், இனப்படுகொலை என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்படாதற்கு.   

ரஸ்சியர்கள் பட்டினி சாவல் பாதிக்கப்பட்டாலும் - ஸ்டாலின் ஐ தமது  உன்னத தலைவர்களில் ஒருவராகவே பார்க்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரசவ வலி என்பது மனிதபெருகத்திற்காக இயற்கையாக வருவது.வரவு வலி. அதை கொண்டு சென்று புரின் உக்ரேனை ஆக்கிரமிப்பதற்காக செய்யும் அழிப்பு வலியுடன் ஓப்பிடலாமா.வெளிநாடுகளில் உள்ள சேர்பியன் என்ற இனத்தவர்கள் சிலர் ரஷ்யாவை ஆதரிக்கின்றனராம் அதற்கு காரணம் kosovo  பிரச்சனையில் ரஷ்யா தான் அவர்களுக்கு முழுமையான ஆதரவாக நின்றது.அதனால் ரஷ்யாவின் உக்ரேன் கொடுமைகளை இப்போது ஆதரிக்கிறார்கள். ஆனால்  மேற்குலநாடுகளில் வாழும்  இலங்கை தமிழர்களுக்கு ரஷ்யா தங்களுக்கு ஆதரவாக நின்றது என்ற காரணம் எதுவுமே கிடையாது அப்படியிருக்க தங்களை எதிர்த்த ரஷ்யாவை புரினை இவ்வளவு தீவிரமாக ஆதரிப்பது 🤦‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

என்ன ஜி. இருப்பதே ஒரே ஒரு வேட்டி…

அதையும் டர்…….🤣

உண்மையை  சொல்லுங்கள்
எங்கள் தலைமுறையினரின் (அதாவது குண்டடிக்கு  முன்னர்  ஓடியோர்)   தேசியப்பற்று இன்றைய  தலைமுறையினரிடம்  அதிலும்  இன்று புலம்  பெயரும் தலைமுறையினரிடம்  உள்ளதா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

உண்மையை  சொல்லுங்கள்
எங்கள் தலைமுறையினரின் (அதாவது குண்டடிக்கு  முன்னர்  ஓடியோர்)   தேசியப்பற்று இன்றைய  தலைமுறையினரிடம்  அதிலும்  இன்று புலம்  பெயரும் தலைமுறையினரிடம்  உள்ளதா???

தலைவருடன் கடைசிவரை நிண்டவர்களில் உங்கள், எங்கள் தலைமுறையினரும் அடங்குவர் அண்ணை. 2009 க்கு முன் ஒரு தலைமை இருந்தது, ஆகவே புலத்தில் இருந்து தேசியப்பற்றை பறைசாற்றுவது, உழைப்பது முடியுமாய் இருந்தது. 

இப்போ எதுவும் இல்லை. ஆகவே எல்லா தலைமுறையினரும் அவரவர் பாட்டை பார்கிறோம்.

ஆனால் இதை வைத்து  யுத்த வடுக்களை அனுபவித்தவர்களின் அனுபவத்தையும் அப்படி அனுபவிக்காமப் வெளிநாட்டில் இருந்து பங்களித்தவர் அனுபவத்தையும் ஒரு போதும் ஒரே தராசில் நிறுக்க முடியாது.

சம்பந்தமே இல்லாமல் சின்ன சின்ன காரணங்களை காட்டி உக்ரேன் சண்டையில் எமது நியாயமான பழிக் கணக்கை தீர்க முயல்வது, இந்த அனுபவ குறைபாட்டையே காட்டுகிறது.

 

 

  • Like 3
  • Thanks 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

பிரசவ வலி என்பது மனிதபெருகத்திற்காக இயற்கையாக வருவது.வரவு வலி. அதை கொண்டு சென்று புரின் உக்ரேனை ஆக்கிரமிப்பதற்காக செய்யும் அழிப்பு வலியுடன் ஓப்பிடலாமா.வெளிநாடுகளில் உள்ள சேர்பியன் என்ற இனத்தவர்கள் சிலர் ரஷ்யாவை ஆதரிக்கின்றனராம் அதற்கு காரணம் kosovo  பிரச்சனையில் ரஷ்யா தான் அவர்களுக்கு முழுமையான ஆதரவாக நின்றது.அதனால் ரஷ்யாவின் உக்ரேன் கொடுமைகளை இப்போது ஆதரிக்கிறார்கள். ஆனால்  மேற்குலநாடுகளில் வாழும்  இலங்கை தமிழர்களுக்கு ரஷ்யா தங்களுக்கு ஆதரவாக நின்றது என்ற காரணம் எதுவுமே கிடையாது அப்படியிருக்க தங்களை எதிர்த்த ரஷ்யாவை புரினை இவ்வளவு தீவிரமாக ஆதரிப்பது 🤦‍♂️

ஐயா விளங்க நினைப்பவரே,

இந்த விவாதத்திற்கு அடிப்படையான "ஒரு ஏவுகணையால் ஒரு நாட்டையே அழிப்பேன்"  என்று கூறியதற்கு ஆதாரத்தைக் கேட்டிருந்தேன். 

பதிலைக் காணோம் ? 

முதலில் பதிலைத் தாருங்கள். மிகுதியைப் பின்னர் பார்க்கலாம். 

இல்லாவிட்டால் விளங்க நினைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான். 

(போலி செய்திகளுக்கெல்லாம் பின்னூட்டம் எழுத வெளிக்கிட்டால் இதுதான் நிலமை 😏)

Link to comment
Share on other sites

ரஸ்ய படையினரால் மரியோபோலில் கைப்பற்றிய யூக்ரேனிய ராணுவ வீரர்கள்...

https://m.facebook.com/story.php?story_fbid=1632257707158975&id=359842774400481&m_entstream_source=feed_mobile&anchor_composer=false

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

அதுபோல் தான்… குண்டு சத்தத்தை நேரடியாக கேட்கா விட்டாலும்,
போர் எப்படி இருக்கும் என்று… உணர்ந்தே இருப்பார்கள்.

சொந்த மண்ணை விட்டு வாழ்கின்றோமே என்ற சோகம் ஒருபுறம் இருக்க......
வெடிச்சத்தம் கேட்டவர்-வெடித்தச்சம் கேட்காதவர் என்ற பிரிவினைகளை உருவாக்க மேட்டுக்குடிகளால் மட்டுமே முடியும்.சாதி தடிப்புள்ளவர்களால் மட்டுமே இப்படி சிந்திக்க முடியும்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

சொந்த மண்ணை விட்டு வாழ்கின்றோமே என்ற சோகம் ஒருபுறம் இருக்க......
வெடிச்சத்தம் கேட்டவர்-வெடித்தச்சம் கேட்காதவர் என்ற பிரிவினைகளை உருவாக்க மேட்டுக்குடிகளால் மட்டுமே முடியும்.சாதி தடிப்புள்ளவர்களால் மட்டுமே இப்படி சிந்திக்க முடியும்.

 

அண்ணா நன்றாக கவனியுங்கள்

இன்று  வெல்லமுடியாத ரஸ்யாவுக்கு எதிராக 

உக்ரைன் தொடர்ந்து  போராடணும்  தமது  மண்ணை  காக்கணும் என்று  எழுதுவோர் 

அநேகமாக  அனைவரும் அன்று  புலிகள்  சரணடைந்திருக்கணும்

வெல்லமுடியாத  போரை  தெரிவு  செய்திருக்கக்கூடாது  என்று  வகுப்பெடுத்த  மேட்டுக்குடியோர்கள்  தான்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விசுகு said:

 

அண்ணா நன்றாக கவனியுங்கள்

இன்று  வெல்லமுடியாத ரஸ்யாவுக்கு எதிராக 

உக்ரைன் தொடர்ந்து  போராடணும்  தமது  மண்ணை  காக்கணும் என்று  எழுதுவோர் 

அநேகமாக  அனைவரும் அன்று  புலிகள்  சரணடைந்திருக்கணும்

வெல்லமுடியாத  போரை  தெரிவு  செய்திருக்கக்கூடாது  என்று  வகுப்பெடுத்த  மேட்டுக்குடியோர்கள்  தான்

 

சொல்பவர்கள் மிக தெளிவாகவே சொல்லி இருக்கிறார்கள். 

2009 இலும் வெல்ல முடியாத பெரும் கூட்டணியை எதிர்ப்பது சமயோசிதம் இல்லை என்று புலிகளுக்கு சொன்னார்கள்.

2022 இலும் வெல்ல முடியாத பெரும் கூட்டணியை எதிர்ப்பது சமயோசிதம் இல்லை என ரஸ்யாவுக்கு சொல்கிறார்கள்.

அண்ணாக்களுக்குத்தான் 2009இலும் புரியவில்லை, 2022 இலும் புரியவில்லை. 

கருத்து வரட்சி ஏற்பட்டதும் மேட்டுகுடி, சாதி என்று சம்பந்தந்தா சம்பந்தம் இல்லாமல் எழுதும் படி ஆகிறது🤣.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

 

2022 இலும் வெல்ல முடியாத பெரும் கூட்டணியை எதிர்ப்பது சமயோசிதம் இல்லை என ரஸ்யாவுக்கு சொல்கிறார்கள்.

ஆனால் உக்ரைன் தான் இப்ப  முடிவெடுக்கணும்

தனது  அழிவு  தான் இந்த போட்டியின் முடிவா என்று???

(எமது பட்ட பாடங்களின் அடிப்படையில்)

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

ஆனால் உக்ரைன் தான் இப்ப  முடிவெடுக்கணும்

தனது  அழிவு  தான் இந்த போட்டியின் முடிவா என்று???

இல்லை - இங்கே வெல்ல முடியாத போரில் உக்ரேனை விட அதிகம் மாட்டி முழி பிதுங்கி நிற்பது ரஸ்யா.

மேலோட்டமாக உக்ரேன் அழிவுகளை சந்திப்பது தெரிகிறது, ஆனால் யுத்தம் அவர்கள் சார்பாக முடிந்து உக்ரேன் ஒரு ஈயு நாடாக பரிணமித்தால் - ஜேர்மனி 2ம் உலக யுத்தத்தின் பின் எழும்பியதை விட வேகமாக எழும்ப உக்ரேனுக்கு உதவிகள் கிட்டும். 

ஆனால் ரஸ்யா கிட்டதட்ட தன் படைபலத்தின் 1/3 பகுதியை உக்ரேனில் முடக்கி வைத்துள்ளது. இனி பின்லாந்து, சுவீடன் நேட்டோவில் சேர்ந்தாலும் அசைய முடியாது. உக்ரேனில் கூட வடக்கே பெலரூஸ் எல்லை வரை பின்வாங்கும் நிலை. மாஸ்கோவோ கப்பல் அழிந்த பின், ஷார் நிக்கலோய் கட்டிய 100 வருடம் பழைய போர்க்கப்பலை சேவையில் இறக்கும் அவலநிலை. 

இதை சாட்டாக வைத்து ஜேர்மனி போன்ற நாடுகளுடன் ரஸ்யாவிக்கு இருந்த வர்த்தக உறவை மிக தந்திரமகா உடைத்து விட்டுள்ளது அமெரிக்கா. 

இனி டொன்பாசில் மட்டும் அல்ல, கிரைமியாவில் இருந்தும் ரஸ்யா விலகாதவரை ஐரோப்பாவுடன், அமெரிகாவுடன் ரஸ்யா வர்த்தகம் செய்வது கடினம்.

சீனா ஒரு போதும் ரஸ்யாவுக்கு கைகொடாது. வெறும் வாய் வார்த்தை மட்டும்தான். அவர்களை பொறுத்தவரை ரஸ்யா- அமெரிகா பனி போரில் இருந்தால் நல்லம். ஆனால் ரஸ்யாவுக்கு உதவ எந்த காரணமும் இல்லை. 

ஏற்கனவே 2030 இல் எரி சக்தியில் ஐரோப்பா தங்கி இருக்காது என்பது கொள்கை முடிவு. அதை இப்போ விரைவுபடுத்துகிறார்கள். 

ஜப்பான் பூகம்பத்தின் பின் கிடப்பில் போடபட்ட அணு மின் உலை திட்டங்களை இப்போ  பிரிட்டனும் ஜேர்மனியும் மீள செயல்படுத்த போகிறார்கள்.

2025/26 இலெயே ரஸ்ய எண்ணை மட்டும் அல்ல யாரின் எண்ணையும் தேவையில்லை எனற சக்தி-சுய சார்புக்க்கு வருவதே ஐரோப்பாவின் குறி.

ஆனால் ரஸ்யா ? வெல்ல முடியாத ஒரு போரில் தனது இத்து போன 80ம் ஆண்டு டாங்கிகளை 2020ம் ஆண்டு தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளுக்கு பலி கொடுத்தபடி, ஒட்டு மொத்த மேற்கின் சந்தையில் இருந்தும் அந்நியப்பட்டு, இந்தியா சீனாவில் வர்த்தகத்துக்கு தங்கி இருக்கும் நிலை.

சோவியத் காலத்திலாவது ஒரு கொள்கை இருந்தது. ஆனால் இப்போ புட்டினை சூழ இருப்பவர்கள் அனைவரும் வெறும் கொள்ளையர் மட்டுமே.  90களில் ரஸ்யாவின் இயற்கை வளங்களை கொள்ளை அடித்து பெரும் பணக்காரர் ஆகியவர்கள்.

ஆகவேதான் - இது உக்ரேனை விட - ரஸ்யாவுக்கே வெல்லமுடியாத யுத்தம். 

2002-2005 எமக்கு கொடுக்க பட்ட நீண்ட கயிறு இப்போ புட்டினுக்கு கொடுக்க படுகிறது. அவரும் அதே பிழையை விடுகிறார்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

இல்லை - இங்கே வெல்ல முடியாத போரில் உக்ரேனை விட அதிகம் மாட்டி முழி பிதுங்கி நிற்பது ரஸ்யா.

இதற்கு  காலம் தான் பதில் சொல்லணும் என்று கூட  எழுதமுடியவில்லை

காரணம் மே 9க்குள் புட்டின்  ஏதாவது  செய்து  தொலைப்பார் என்று உலகமே  பயந்தபடி???

இவ்வளவு  கால அமெரிக்க+ மேற்குலக -  ரஸ்யா  இழுபறி  அவ்வளவு சீக்கிரத்தில்  அதுவும் ரஸ்யத்தோல்வியுடன்  முடியும் என  நான் நினைக்கவில்லை

பார்க்கலாம்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.