Jump to content

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது ரஷ்யா

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

இதற்கு  காலம் தான் பதில் சொல்லணும் என்று கூட  எழுதமுடியவில்லை

காரணம் மே 9க்குள் புட்டின்  ஏதாவது  செய்து  தொலைப்பார் என்று உலகமே  பயந்தபடி???

இவ்வளவு  கால அமெரிக்க+ மேற்குலக -  ரஸ்யா  இழுபறி  அவ்வளவு சீக்கிரத்தில்  அதுவும் ரஸ்யத்தோல்வியுடன்  முடியும் என  நான் நினைக்கவில்லை

பார்க்கலாம்

ரஸ்யா சண்டைக்கு முன்பே உலகின் 15 பெரிய பொருளாதாரத்துக்குள் இல்லை.

இப்போ ?

அவர்களின் மரபுவழி ஆண்டையிடும் வலுவும் மேற்கின் ஆயுதங்கள்+உக்ரேனிய ஓர்மத்துக்கு ஈடு கொடுக்கவே மூச்சு திணறுகிறது (நானே இவ்வளவு மோசமாக ரஸ்யா வாங்கி கட்டும் என நினக்கவில்லை).  கிட்டதட்ட ஜெயசிக்குருவில் ரத்வத்த/தளுவத்த வாங்கிய அடிக்கு நிகரானது வட/கீவ் போர்முனையில் ரஸ்யா வாங்கிய அடி.

இதுவரை ரஸ்யா பாவித்த ஒரே புதிய ஆயுதம் என்றால் ஐந்துக்கும் குறைவான ஹைப்பர்சோனிக் மிசைல்கள் மட்டுமே.

புட்டினை மேற்கு கொஞ்சந்தன்னும் மரியாதையாக நடத்த ஒரே காராணம் அவரிடம் இருக்கும் சோவியத் கால அணு மற்றும், இரசாயன, உயிரியல் ஆயுதங்கள் மட்டுமே.

கிட்டதட்ட ஒரு வெறிகாரன் கையில் ஏகே47 இருக்கும் நிலை.

ஆனால் ஒரு நாடு தனது இருப்புக்கு ஆபத்து என்றால் மட்டுமே அணு ஆயுதத்தை பாவிக்கலாம் என்பது அணு ஆயுத நாடுகள் மத்தியில் உள்ள எழுதப்படாத ஒப்பந்தம்.

ஆகவே ரஸ்யா அணு ஆயுதத்தை 2 வகையில் பாவிக்கலாம்.

1. எதோ ஒரு அல்லது சகல நேட்டோ நாடுகளின் மீதும் போடுவது - இது நேட்டோவின் Article 5 படி அத்தனை நேட்டோ அணு ஆயுதங்களும் ரஸ்யா மீது பொழிய வகை செய்யும்.  நேட்டோ நாடுகள் பாரிய அழிவை சந்திக்கும். ஆனால் ரஸ்யா என்ற நாடே இராது (mutually assured destruction). எனவே இதற்கு புட்டின் முட்டாள்தனமாக ஓம்பட்டாலும் அவரின் தளபதிகள் தடுப்பார்கள் என நம்பலாம்.

2. அடுத்து - உக்ரேனின் மீது சிறிய அளவில் அணு அல்லது இரசாயனதாக்குதல் - இதற்கு அதிக வாய்ப்புண்டு. ஆனால் இது சீனா, இந்தியாவையும் ரஸ்யாவுக்கு எதிராக திருப்பும். ஏனென்றால் பாரம்பரிய யுத்தத்தில் அணுப்பாவனையை எந்த பெரியநாடும் விரும்பபோவதில்லை.

ஆகவே புட்டினை, மே 9 நினைத்து பயந்தபடி அப்படி ஒருவரும் இல்லை என்பதே உண்மை.

ஆனால் புட்டினையும், அவர் ஆதரவாளர்களையும் இப்படி நம்ப வைப்பது கயிறு கொடுப்பதன் ஒரு அங்கம்.

மாவீரர் தின உரையை மேற்கு உலகமே காத்திருந்து கேட்கிறது, மேற்கை வெட்டி ஆடலாம் என்ற நம்பிக்கையை (கயிறை) எமக்கு தந்து, ஈற்றில் இழுத்து விட்டதும் இப்படியே.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இணையவன்

பலகோடி மக்கள் வாழும் நாடொன்றைத் தன்னால் ஒரே ஏவுகளையால் அழிக்க முடியும் என்று மார்தட்டுபவனை விட உலகின் அதியுர்ந்த பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்க முடியாது. இதைக் கேட்டு மகிழ்பவரை என்னவென்று சொல்வது ? அது

இணையவன்

நாம் ஈழத் தமிழர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. ஒவ்வொரு விதமான திரிகளில் நடைபெறும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் கள உறவுகளுடன் நட்புடனேயே பழக முயற்சிக்கிறேன். ஒருவர் எழுதிய கருத்தைப் ப

goshan_che

தலைவருடன் கடைசிவரை நிண்டவர்களில் உங்கள், எங்கள் தலைமுறையினரும் அடங்குவர் அண்ணை. 2009 க்கு முன் ஒரு தலைமை இருந்தது, ஆகவே புலத்தில் இருந்து தேசியப்பற்றை பறைசாற்றுவது, உழைப்பது முடியுமாய் இருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

இல்லை - இங்கே வெல்ல முடியாத போரில் உக்ரேனை விட அதிகம் மாட்டி முழி பிதுங்கி நிற்பது ரஸ்யா.

மேலோட்டமாக உக்ரேன் அழிவுகளை சந்திப்பது தெரிகிறது, ஆனால் யுத்தம் அவர்கள் சார்பாக முடிந்து உக்ரேன் ஒரு ஈயு நாடாக பரிணமித்தால் - ஜேர்மனி 2ம் உலக யுத்தத்தின் பின் எழும்பியதை விட வேகமாக எழும்ப உக்ரேனுக்கு உதவிகள் கிட்டும். 

ஆனால் ரஸ்யா கிட்டதட்ட தன் படைபலத்தின் 1/3 பகுதியை உக்ரேனில் முடக்கி வைத்துள்ளது. இனி பின்லாந்து, சுவீடன் நேட்டோவில் சேர்ந்தாலும் அசைய முடியாது. உக்ரேனில் கூட வடக்கே பெலரூஸ் எல்லை வரை பின்வாங்கும் நிலை. மாஸ்கோவோ கப்பல் அழிந்த பின், ஷார் நிக்கலோய் கட்டிய 100 வருடம் பழைய போர்க்கப்பலை சேவையில் இறக்கும் அவலநிலை. 

இதை சாட்டாக வைத்து ஜேர்மனி போன்ற நாடுகளுடன் ரஸ்யாவிக்கு இருந்த வர்த்தக உறவை மிக தந்திரமகா உடைத்து விட்டுள்ளது அமெரிக்கா. 

இனி டொன்பாசில் மட்டும் அல்ல, கிரைமியாவில் இருந்தும் ரஸ்யா விலகாதவரை ஐரோப்பாவுடன், அமெரிகாவுடன் ரஸ்யா வர்த்தகம் செய்வது கடினம்.

சீனா ஒரு போதும் ரஸ்யாவுக்கு கைகொடாது. வெறும் வாய் வார்த்தை மட்டும்தான். அவர்களை பொறுத்தவரை ரஸ்யா- அமெரிகா பனி போரில் இருந்தால் நல்லம். ஆனால் ரஸ்யாவுக்கு உதவ எந்த காரணமும் இல்லை. 

ஏற்கனவே 2030 இல் எரி சக்தியில் ஐரோப்பா தங்கி இருக்காது என்பது கொள்கை முடிவு. அதை இப்போ விரைவுபடுத்துகிறார்கள். 

ஜப்பான் பூகம்பத்தின் பின் கிடப்பில் போடபட்ட அணு மின் உலை திட்டங்களை இப்போ  பிரிட்டனும் ஜேர்மனியும் மீள செயல்படுத்த போகிறார்கள்.

2025/26 இலெயே ரஸ்ய எண்ணை மட்டும் அல்ல யாரின் எண்ணையும் தேவையில்லை எனற சக்தி-சுய சார்புக்க்கு வருவதே ஐரோப்பாவின் குறி.

ஆனால் ரஸ்யா ? வெல்ல முடியாத ஒரு போரில் தனது இத்து போன 80ம் ஆண்டு டாங்கிகளை 2020ம் ஆண்டு தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளுக்கு பலி கொடுத்தபடி, ஒட்டு மொத்த மேற்கின் சந்தையில் இருந்தும் அந்நியப்பட்டு, இந்தியா சீனாவில் வர்த்தகத்துக்கு தங்கி இருக்கும் நிலை.

சோவியத் காலத்திலாவது ஒரு கொள்கை இருந்தது. ஆனால் இப்போ புட்டினை சூழ இருப்பவர்கள் அனைவரும் வெறும் கொள்ளையர் மட்டுமே.  90களில் ரஸ்யாவின் இயற்கை வளங்களை கொள்ளை அடித்து பெரும் பணக்காரர் ஆகியவர்கள்.

ஆகவேதான் - இது உக்ரேனை விட - ரஸ்யாவுக்கே வெல்லமுடியாத யுத்தம். 

2002-2005 எமக்கு கொடுக்க பட்ட நீண்ட கயிறு இப்போ புட்டினுக்கு கொடுக்க படுகிறது. அவரும் அதே பிழையை விடுகிறார்.

போரினைத் தொடங்கும் முன்னர் ஏற்படக்கூடிய பின்விளைவுகளைப்பற்றி ஆராய்ந்திருக்கமாட்டார்கள் என நீங்கள் நினைப்பதுபோல் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

போரினைத் தொடங்கும் முன்னர் ஏற்படக்கூடிய பின்விளைவுகளைப்பற்றி ஆராய்ந்திருக்கமாட்டார்கள் என நீங்கள் நினைப்பதுபோல் தெரிகிறது.

அப்படி ஆராய்ந்து தொடங்கும் போர்கள் எல்லாம் பின்விளைவுகளை இலகுவாக எதிர்கொண்டு முன்னேறும் என்பதில்லையே.

அப்படியாயின் நெப்போலியன், கிட்லர் என யாரும் தோற்றிருக்க கூடாது.

என்னை பொறுத்தவரை புட்டின் தம் பலம் பற்றி மிகை மதிப்பீடும் உக்ரேனிய ஓர்மம், இதில் எந்த அளவுக்கு நேட்டோ முழு மூச்சாக ஒரே அணியாக இறங்கும் என்பதை  குறை மதிப்பீடும் செய்துவிட்டதாகவே உணர்கிறேன்.

நான் கூட ஒரு கிழமைக்குள் கியவ்வை பிடித்து விடுவார்கள் எண்டுதான் நினைத்தேன்.

சிலவேளை டிரம் காலத்தில் இறங்கி இருந்தால் நிலமை வேறாக இருந்திருக்கும். 

புட்டின் ஒரு கால அவகாசத்துள் சிலதை செய்ய அவசரப்படுகிறார் என உணர்கிறேன்.

இது பற்றியும், டிரப்ம், பைடனின் மகன் பற்றியும் என்னிடம் ஒரு தியரி இருக்கிறது. பின்னர் ஒரு பதிவில் எழுதுகிறேன்:

2014 காலத்தில் இருந்த நிதானமான, calm and calculative புட்டின் இப்போ இல்லை என்பதும் என் அவதானம்.

பிகு

கொள்கையை மீறி கருத்து சுதந்திரம் மட்டுபட்ட இத்தளத்தில் நிறையவே எழுதிவிட்டேன்🤣.

நன்றி வணக்கம்.🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பிகு

கொள்கையை மீறி கருத்து சுதந்திரம் மட்டுபட்ட இத்தளத்தில் நிறையவே எழுதிவிட்டேன்🤣.

நன்றி வணக்கம்.🙏🏾

எழுத  வைப்பம் இல்ல🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

மேற்கு நாடுகளுக்கு ரஸ்யாவின் வளங்கள் தேவை. சீனாவின் மலிவான உடல் உழைப்பு தேவை. இந்திய மூளை வளம் தேவை. 

இவைகள் எப்போது தமது கைகளை விட்டு நழுவத் தொடங்குகின்றதோ அப்போது அவர்களை வழிக்குக் கொண்டுவர யுத்தம் தேவை. 

இங்கே நியாயம், அநியாயம், மனித உரிமை, பேச்சுரிமை, சனநாயகம, சட்டத்தின் ஆட்சி  என்பதெல்லாம் மேற்கு தனது நோக்கங்களை மறைப்பதற்கான வெளிப்பூச்சு மட்டுமே. 

எனக்குப் புரியாத விடயம் இதுதான்..

தென்னமெரிக்க நாடுகளை பட்டினியால் வாட்டும்போதும், மத்திய கிழக்கை யுத்தங்களால் அழிக்கும்போதும், ஆபிரிக்காவை சுரண்டலுக்கு உட்படுத்தும்போதும் எம்மவர்களுக்கு வராத கோபம், உக்ரேன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பின்போது மட்டும் ரஸ்யாவின் மீது எம்மவர்களுக்கு கோபம் வருகிறதே? 

அதன்  காரணம்  என்ன? 

  • Like 3
Link to comment
Share on other sites

On 22/4/2022 at 01:43, Kapithan said:

1) பிரென்சுக் கட்டுரைகளை மட்டும் நம்பினால் பிரச்சனை எழத்தான் செய்யும்.

Kiyiv விட்டு ரழ்யப் படைகள் வெளியேறுவதற்கு காரணம், உக்ரேன் ரஸ்ய பேச்சுவார்த்தை. பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் இருதரப்பும் கொள்கை அளவில் மேற்கொள்ளப்பட்ட முடிவின் கீழ் ரஸ்யப் படைகள் தலைநகரில் இருந்து வெளியேறியது. 

2) ரஸ்ய அத்பர் ஒரு சர்வாதிகாரி என்று நீங்கள் கூறினால் அது உங்கள் சொந்தக் கருத்தாகத்தானே இருக்க முடியும்?

3) பொதுமக்களின் இலக்குகளும் தாக்குதலுக்குள்ளாகியிருப்பது மறுக்க முடியாதது.

4) இயலாமை அல்ல. அது எல்லோருக்குமே தெரியும். ஆனால் அண்மையில் ரஸ்ய அதிபர் " அணு ஆயுத யுத்தத்தில் வெற்றியாளர்கள் என்று எவருமே இல்லை " என்று கூறியதைக் கவனிக்க வேண்டும். 

ஆனாலும் ஆணு ஆயுத வல்லமையுள்ள நாட்டை தாக்க முடியாமல் உக்ரேனுக்கு ஆயுத விநியோகம் செய்வது இயலாமையால்தான். இது ஒருவகை "இருக்கு ஆனால் இல்லை"  எனும் நிலைமைதான்.

5) இந்த உலகத்தில் அணு ஆயுதத்தை, அதுவும் யுத்தத்தின் நிறைவில் பாவித்த ஒரே ஒரு மேற்கு நாடு அமெரிக்கா  மட்டுமே. (அதனை மட்டும்  இலகுவாக மறந்துவிடுகிறீர்கள்.)

6) புட்டினை A Real Stateman என்று கொண்டாடுவது மேற்குலகத்தவரே.

ஆனாலும் கடந்த 20 வருடங்களில், உலகின் தலைசிறந்த Leader ஆக Vladimir Putin ஐ நான் கருதுகிறேன். அதற்கடுத்த இடத்தில் இருப்பவர் ஜேர்மனிய முன்னாலள் அதிபர் Angela Merkel என்பது என் தனிப்பட்ட கருத்து. 

7) இந்த ஆயுதத்தால் ஒரு நாட்டையே அழிப்பேன் என்று ரஸ்ய அதிபர் பொறுப்பில்லாமல் கூறியதாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை. (ஆயுத சோதனை நடைபெற்றது உண்மை )

இந்த கருத்தாடலே ஆதாரமற்ற புரளியை (Gossip) அடிப்படையாகக் கொண்டுதான் நடைபெறுகிறது. அதனால்தான் ஆதாரத்தை முன்வைக்கும்படி கோருகிறேன்.  அப்படிக் கேட்டவுடன் உங்களுக்கு விருப்பு வாக்களித்த (NOTA 😆) விளங்க நினைப்பவர் escape.( அவர் வருவாரா... அவர் வருவாரா....என் கேள்வியைப் புரிந்துகொண்டு அவர் வருவாரா...😆)

கபிதான்,

பிரெஞ்சு பத்திரிகைகள் ரஸ்ய தமிழ் செய்திகளைப்போல் பொய்களை அள்ளிக் கொட்டுவதில்லை. பல தடவை இஸ்லாமியப் பயங்கரவாதிகள் அவர்களது கொன்றபோதும் தாங்கள் சுதந்திரமாக எழுதுவதை நிறுத்தப் போவ்தில்லை என்ற கொள்கை உடையவர்கள். இங்கும் பக்கச்சார்பான பத்திரிகைகள் உண்டு. எல்லாவைற்றையும் படிப்பதுண்டு. போர் நிலமை உங்களுக்குத்தான் புரியவில்லை.

இத் தலைப்பின் தொடக்கத்திலேயே தமிழ்சிறி மேற்கோள் காட்டியதுதான் புட்டினின் சூழுரை. அது ஏன் சொன்னது என்பது திரியின் தலைபில் உள்ளது.

நான் ஆரம்பத்தியேயே குறிப்பிட்ட RS-28 Sarmat ஏவுகணை பற்றி இன்னும் தெரிந்துகொள்ளவில்லை என்றால் தேடிப் பாருங்கள்.

ஒருவன் வாளுடன் நின்று கிட்ட வா பார்க்கலாம் என்று சண்டித்தனம் காட்டுவது அவனோடு கொஞ்சி விளையாடுவதற்கா ? அதுவும் ஒரு பொறுப்புள்ள வல்லரசுத் தலைவரின் பேச்சா இது ?

அமெரிக்கா பாவித்த அணுஆயுதத்தை இலகுவாக மறந்துவிட்டதாகக் கூறியுள்ளீர்கள். மேலோட்டமாக வாசித்துவிட்டுக் கருத்தெழுதியுள்ளீர்கள். அதனை இதே திரியில் ஏற்கனவே அழுத்தமாகக் கூறி விட்டேன்.

இன்னொரு விடயம். ஐநா வில் ஈழத் தமிழருக்கு ஆதரவான தீர்மானங்களை ரஷ்யா எதிர்த்து வாக்களித்து வந்துள்ளதுடன் சிங்கள அரசுக்கு ஆதரவாக வாதாடியும் உள்ளது. 

இந்த ஒரு காரணமே போதும், ஈழத் தமிழனாகிய எனக்கு புட்டினின் சூளுரைகளைப் பார்த்துப் பெருமைப்படாமல் இருப்பதற்கு.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகிற்கு எதிரான நாடுகளான.....
ஈரானை வெல்ல முடியவில்லை
ஆப்கானிஸ்தானை வெல்ல முடியவில்லை
வட கொரியாவை வெல்ல முடியவில்லை
சிரியாவை வெல்ல முடியவில்லை
கியூபாவை வெல்ல முடியவில்லை
வெனிசுலாவை வெல்ல முடியவில்லை
ஏன் ஐரோப்பாவில் இருக்கும் ஒரு சில நாடுகளையே இன்னும் வெல்ல முடியவில்லை.கூட்டாஞ்சோறு சாப்பிட்டுக்கொண்டிருந்த பெரிய பிரித்தானியாவே  ஐரோப்பிய யூனியனை விட்டு தப்பித்தோம் என ஓடி தன் ஒற்றுமையை வெளிக்காட்டி விட்டது.நேட்டோ தலைவரின் சொந்த நாடான டென்மார்க்கே பண விடயத்தில் எட்ட நிற்கின்றது.

இந்த லட்சணத்தில் உக்ரேனுக்காக வீரவசனம் வேறு!

ஜேர்மனிய அதிபர் உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதன் மூலம் மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுக்குமென கையை விரித்து விட்டார். மதசார்பு நிறுவனங்களும்,பெரிய தொழிற்சாலைகளும் உக்ரேனுக்கு ஆயுதம் வழங்குவதை எதிர்க்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, இணையவன் said:

இன்னொரு விடயம். ஐநா வில் ஈழத் தமிழருக்கு ஆதரவான தீர்மானங்களை ரஷ்யா எதிர்த்து வாக்களித்து வந்துள்ளதுடன் சிங்கள அரசுக்கு ஆதரவாக வாதாடியும் உள்ளது. 

இந்த ஒரு காரணமே போதும், ஈழத் தமிழனாகிய எனக்கு புட்டினின் சூளுரைகளைப் பார்த்துப் பெருமைப்படாமல் இருப்பதற்கு.

ரஷ்யா இந்திய சார்பான நாடு. அது இந்தியாவிற்கு சாதகமாக எதையும் செய்யும். இன்று இந்தியா உக்ரேன் யுத்தத்தில் ரஷ்யா சார்பாக நிற்கின்றது. 

விளங்கினால்ச்சரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

மேற்கு நாடுகளுக்கு ரஸ்யாவின் வளங்கள் தேவை. சீனாவின் மலிவான உடல் உழைப்பு தேவை. இந்திய மூளை வளம் தேவை. 

இவைகள் எப்போது தமது கைகளை விட்டு நழுவத் தொடங்குகின்றதோ அப்போது அவர்களை வழிக்குக் கொண்டுவர யுத்தம் தேவை. 

இங்கே நியாயம், அநியாயம், மனித உரிமை, பேச்சுரிமை, சனநாயகம, சட்டத்தின் ஆட்சி  என்பதெல்லாம் மேற்கு தனது நோக்கங்களை மறைப்பதற்கான வெளிப்பூச்சு மட்டுமே. 

எனக்குப் புரியாத விடயம் இதுதான்..

தென்னமெரிக்க நாடுகளை பட்டினியால் வாட்டும்போதும், மத்திய கிழக்கை யுத்தங்களால் அழிக்கும்போதும், ஆபிரிக்காவை சுரண்டலுக்கு உட்படுத்தும்போதும் எம்மவர்களுக்கு வராத கோபம், உக்ரேன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பின்போது மட்டும் ரஸ்யாவின் மீது எம்மவர்களுக்கு கோபம் வருகிறதே? 

அதன்  காரணம்  என்ன? 

ரொம்ப சிம்பிளான கேள்விக்கு ஏன் இப்படி மண்டையை உடைத்து கொள்ளுகிறீர்கள் கற்பிதன்.

வள்ளுவரே கூறி உள்ளார் … சுய நலமே பொது நலத்தின் அடிப்படை.

நான் முன்பே ஒரு முறை எழுதி விட்டேன். தர்மம் சார் வெளியுறவு கொள்கை என்று ஒன்று இல்லை. எல்லா நாடும் தன்னலன் சார் வெளியுறவு கொள்கைதான்.

அதே போலத்தான் தனி மனிதர்களும்.

பெருந்தொகையாக நாம் எல்லாம் ஏன் தலைவரின் பின்னால் நின்றோம்? அவர் மீது தீராத காதலா? இல்லை. இலங்கையில் ஒரு தமிழனாக எனக்கு தனிப்பட்டு ஒரு நல்ல எதிர்காலத்தை, கூட்டாக என் இனத்துக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை பெற்று தரும் கொள்கை, இயலுமை, நேர்மை அவரிடம் இருந்தது என நம்பினோம். அங்கேயும் அடிப்படை சுயநலம்தான்.

இங்கேயும் அதுதான்.

ஒரு பிரித்தானிய பிரசையாக எனக்கு வேறு போக்கிடம் இல்லை. ஒரு இனமாக எனது மக்கள் சிங்கப்பூருக்கு வெளியே பூரண பொருளாதார, அரசியல் சுந்ததிரத்தை அனுபவிப்பது நேட்டோ+அவுஸ்சில் தான்.

இந்த நாடுகளில் வாழும் எனது மக்களின் பலத்தை வைத்து பேரம் பேசி மட்டுமே நாம் இனி இலங்கையில் இருக்கும் எமது மக்களின் தழைகளை உடைக்க முடியும்.

இந்த நிலையில் நான் ரரஸ்யா, சிரியா, பனாமா, வியட்நாம், கொரியா, சோமாலியா எண்டு ஏன் எனக்கு ஒரு சதம் பிரயோசனமில்லாதவருக்கு அழுவான்?

எல்லாருக்கும் மனம் இரங்க முடியும். ஆனால் நான் யார் பக்கம் எடுக்கிறேன் என்பதை ஒரு தனி மனிதனாக, ஒரு குடும்பமாக, ஒரு இனமாக நான் யாரோடு நிற்பது என் சுயநலனுக்கு உகந்தது என்பதே தீர்மானிக்கும்.

ரஸ்யாவிற்கும் எமக்கும் என்னையா தொடர்பு? அங்கே கோவில் கட்டி தேர் இழுக்க விட்டானா? தமிழ் பாடசாலை நடத்த விட்டானா? டிவி ரேடியோ வைக்க விட்டனா? ஒரு சில நகரங்களைக் தமிழ் மயப்படுத்த விட்டானா?

நான் ஏன் டொன்பாசில் ரஸ்யன் சாகிறான், டமாஸ்கசில் சிரியன் சாகிறான், ஆப்கானிஸ்தானில் பஸ்டூன் சாகிறான் என்று மூக்கை சிந்த வேண்டும்?

நேட்டோ தோற்றால், அழிந்தால் நான் மட்டும் அல்ல, என் குடும்பம் மட்டும் அல்ல, 50 வருடமாக என் இனம் காக்கை கூட்டில் கட்டி வளர்த்த வாழ்க்கையும் சேர்ந்தே அழியும்.

இதை தவிர எனக்கு இந்த போரில் ரஸ்யாவை எதிர்க்க வேறு எந்த காரணமும் தேவையில்லை.

Edited by goshan_che
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

நேட்டோ தோற்றால், அழிந்தால் நான் மட்டும் அல்ல, என் குடும்பம் மட்டும் அல்ல, 50 வருடமாக என் இனம் காக்கை கூட்டில் கட்டி வளர்த்த வாழ்க்கையும் சேர்ந்தே அழியும்.

நேட்டோ யாருக்காக எதற்காக ஆரம்பிக்கப்பட்டது சார்?

நேட்டோ அமைப்பிற்கு ரஷ்ய எல்லை நாடுகளில் என்ன வேலை சார்?
நேட்டோவில் மெக்சிக்கோ கியூபா போன்ற நாடுகளை ஏன் இணைக்க முற்படவில்லை சார்?

கிழக்கு ஜேர்மனியும்  மேற்கு ஜேர்மனியும் இணைவதற்கு முன் அமெரிக்க ரஷ்ய ஒப்பந்தங்கள் என்னவானது சார்?
 Budapest ஒப்பந்தம் என்னவானது சார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

நான் உங்களை போல் உலக நாட்டாமை சாலமன் மன்னன் இல்லை அண்ணை.

ஒரு போதும் நான் நேட்ட்டோ சுத்தம் எண்டு எழுதவில்லை.

எனது, என் குடும்பத்தினனது, என் இனத்தினது சுயநல அடிப்படையில் மட்டுமே என் நிலைப்பாடு அமைகிறது. ஆகவே இந்த மாதிரி பெரிய பெரிய கேள்விகளை பற்றி எல்லாம் நான் அலட்டிகொள்வதில்கலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

நான் உங்களை போல் உலக நாட்டாமை சாலமன் மன்னன் இல்லை அண்ணை.

ஒரு போதும் நான் நேட்ட்டோ சுத்தம் எண்டு எழுதவில்லை.

எனது, என் குடும்பத்தினனது, என் இனத்தினது சுயநல அடிப்படையில் மட்டுமே என் நிலைப்பாடு அமைகிறது. ஆகவே இந்த மாதிரி பெரிய பெரிய கேள்விகளை பற்றி எல்லாம் நான் அலட்டிகொள்வதில்கலை.

இதனால் தான் சொல்கிறேன் உக்ரேனை நினைத்து நாம் கண்ணீர் வடிக்க தேவையில்லை என.......அதை அவர்களே பார்த்துக்கொள்ளட்டும். கட்டுரைகளும் கவிதைகளும் உக்ரேனுக்காக வடிக்க தேவையில்லை என....

பதில் இல்லாமல் எழுதிய கருத்திற்கு நன்றி 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

கபிதான்,

பிரெஞ்சு பத்திரிகைகள் ரஸ்ய தமிழ் செய்திகளைப்போல் பொய்களை அள்ளிக் கொட்டுவதில்லை. பல தடவை இஸ்லாமியப் பயங்கரவாதிகள் அவர்களது கொன்றபோதும் தாங்கள் சுதந்திரமாக எழுதுவதை நிறுத்தப் போவ்தில்லை என்ற கொள்கை உடையவர்கள். இங்கும் பக்கச்சார்பான பத்திரிகைகள் உண்டு. எல்லாவைற்றையும் படிப்பதுண்டு. போர் நிலமை உங்களுக்குத்தான் புரியவில்லை.

இத் தலைப்பின் தொடக்கத்திலேயே தமிழ்சிறி மேற்கோள் காட்டியதுதான் புட்டினின் சூழுரை. அது ஏன் சொன்னது என்பது திரியின் தலைபில் உள்ளது.

நான் ஆரம்பத்தியேயே குறிப்பிட்ட RS-28 Sarmat ஏவுகணை பற்றி இன்னும் தெரிந்துகொள்ளவில்லை என்றால் தேடிப் பாருங்கள்.

ஒருவன் வாளுடன் நின்று கிட்ட வா பார்க்கலாம் என்று சண்டித்தனம் காட்டுவது அவனோடு கொஞ்சி விளையாடுவதற்கா ? அதுவும் ஒரு பொறுப்புள்ள வல்லரசுத் தலைவரின் பேச்சா இது ?

அமெரிக்கா பாவித்த அணுஆயுதத்தை இலகுவாக மறந்துவிட்டதாகக் கூறியுள்ளீர்கள். மேலோட்டமாக வாசித்துவிட்டுக் கருத்தெழுதியுள்ளீர்கள். அதனை இதே திரியில் ஏற்கனவே அழுத்தமாகக் கூறி விட்டேன்.

இன்னொரு விடயம். ஐநா வில் ஈழத் தமிழருக்கு ஆதரவான தீர்மானங்களை ரஷ்யா எதிர்த்து வாக்களித்து வந்துள்ளதுடன் சிங்கள அரசுக்கு ஆதரவாக வாதாடியும் உள்ளது. 

இந்த ஒரு காரணமே போதும், ஈழத் தமிழனாகிய எனக்கு புட்டினின் சூளுரைகளைப் பார்த்துப் பெருமைப்படாமல் இருப்பதற்கு.

.

ஐய இணையவனே,

ரஸ்ய அதிபர் இவ்வாறு கூறினார் என்பதற்கு ஆதாரத்தைக் கேட்டேன். ஆதாரத்தை யாராவது காட்டினார்களா ? இல்லையே. 

எனது வாதம் இந்தத் திரி போலிச் செய்தியின்/திரிவுபடுத்தப்பட்ட செய்தியின் அடிப்படையில்  இடம்பெறுகின்றது என்பதே. 

ரஸ்ய அதிபரல்ல, எந்த ஒரு நாட்டின் அதிபரும் (ஈரானைத் தவிர 😆) இவ்வாறு பொறுப்பில்லாமல் பேசப்போவதில்ல. 

மற்றும், இந்த SARMAT ICBM -2 (NATO code name SATAN -2 ) இன்று நேற்று  வடிவமைக்கப்பட்ட ஏவுகணை அல்ல. தற்போது பரீட்சித்துப்பார்க்கப்பட்டது ஏற்கனவே ரஸ்ய படைகளிடம் உள்ளதின் மெருகேற்றப்பட்ட புது வடிவம். உண்மையில் இது தொடர்பாக நான் கருத்துக் கூறாததற்குக் காரணம் இந்தத் திரியின் அடிப்படை ஏவுகணை அல்ல. ரஸ்ய அதிபர் கூறியதாக கூறப்பட்ட வாக்கியத்தின் சாராம்சம் உண்மை அல்லது பொய் தொடர்பானது. 

இங்கே, யாழ் களத்தில்  உக்ரேனில் இடம்பெறும் யுத்தம் தொடர்பான பல பதிவுகளில் எனது நிலைப்பாட்டை கவனித்திருந்தீர்களானால் நான் திருவுபடுத்தப்பட்ட அல்லது போலிச் செய்திகள்  அல்லது பக்கச்சார்பான எழுத்துக்களுக்கெதிராக மட்டுமே நான் கருத்துரைக்கிறேன்.

அழிவின் பிள்ளைகளான நாங்கள் எப்படி யுத்தத்தை ஆதரிக்க முடியும் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, goshan_che said:

ரொம்ப சிம்பிளான கேள்விக்கு ஏன் இப்படி மண்டையை உடைத்து கொள்ளுகிறீர்கள் கற்பிதன்.

வள்ளுவரே கூறி உள்ளார் … சுய நலமே பொது நலத்தின் அடிப்படை.

நான் முன்பே ஒரு முறை எழுதி விட்டேன். தர்மம் சார் வெளியுறவு கொள்கை என்று ஒன்று இல்லை. எல்லா நாடும் தன்னலன் சார் வெளியுறவு கொள்கைதான்.

அதே போலத்தான் தனி மனிதர்களும்.

பெருந்தொகையாக நாம் எல்லாம் ஏன் தலைவரின் பின்னால் நின்றோம்? அவர் மீது தீராத காதலா? இல்லை. இலங்கையில் ஒரு தமிழனாக எனக்கு தனிப்பட்டு ஒரு நல்ல எதிர்காலத்தை, கூட்டாக என் இனத்துக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை பெற்று தரும் கொள்கை, இயலுமை, நேர்மை அவரிடம் இருந்தது என நம்பினோம். அங்கேயும் அடிப்படை சுயநலம்தான்.

இங்கேயும் அதுதான்.

ஒரு பிரித்தானிய பிரசையாக எனக்கு வேறு போக்கிடம் இல்லை. ஒரு இனமாக எனது மக்கள் சிங்கப்பூருக்கு வெளியே பூரண பொருளாதார, அரசியல் சுந்ததிரத்தை அனுபவிப்பது நேட்டோ+அவுஸ்சில் தான்.

இந்த நாடுகளில் வாழும் எனது மக்களின் பலத்தை வைத்து பேரம் பேசி மட்டுமே நாம் இனி இலங்கையில் இருக்கும் எமது மக்களின் தழைகளை உடைக்க முடியும்.

இந்த நிலையில் நான் ரரஸ்யா, சிரியா, பனாமா, வியட்நாம், கொரியா, சோமாலியா எண்டு ஏன் எனக்கு ஒரு சதம் பிரயோசனமில்லாதவருக்கு அழுவான்?

எல்லாருக்கும் மனம் இரங்க முடியும். ஆனால் நான் யார் பக்கம் எடுக்கிறேன் என்பதை ஒரு தனி மனிதனாக, ஒரு குடும்பமாக, ஒரு இனமாக நான் யாரோடு நிற்பது என் சுயநலனுக்கு உகந்தது என்பதே தீர்மானிக்கும்.

ரஸ்யாவிற்கும் எமக்கும் என்னையா தொடர்பு? அங்கே கோவில் கட்டி தேர் இழுக்க விட்டானா? தமிழ் பாடசாலை நடத்த விட்டானா? டிவி ரேடியோ வைக்க விட்டனா? ஒரு சில நகரங்களைக் தமிழ் மயப்படுத்த விட்டானா?

நான் ஏன் டொன்பாசில் ரஸ்யன் சாகிறான், டமாஸ்கசில் சிரியன் சாகிறான், ஆப்கானிஸ்தானில் பஸ்டூன் சாகிறான் என்று மூக்கை சிந்த வேண்டும்?

நேட்டோ தோற்றால், அழிந்தால் நான் மட்டும் அல்ல, என் குடும்பம் மட்டும் அல்ல, 50 வருடமாக என் இனம் காக்கை கூட்டில் கட்டி வளர்த்த வாழ்க்கையும் சேர்ந்தே அழியும்.

இதை தவிர எனக்கு இந்த போரில் ரஸ்யாவை எதிர்க்க வேறு எந்த காரணமும் தேவையில்லை.

இப்படி நேர்மையான பதிலை கூறினால் சச்சரவுகளுக்கு இடம் இல்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/4/2022 at 23:04, குமாரசாமி said:

சரி நானும் என்னைப்போன்றவர்களும் வெடிச்சத்தம் கேட்பதற்கு முன்னரே பாயை சுருட்டிக்கொண்டு வந்தவர்கள் தான் ஒத்துக்கொள்கின்றேன்.

வெடிச்சத்தங்கள் கேட்டும் அவலங்களை பார்த்த பின்னரும் எப்படி அயலவர்களை விட்டு,அவலப்படுபவர்களை விட்டு பெட்டியை தூக்கிக்கொண்டு தப்பி ஓடி வரமுடிந்தது? இவ்வளவு ஈவு இரக்கமான மனம் கொண்ட தாங்கள் ஏன் சொந்த மண்ணை விட்டு ஆங்கில பூமியில் தஞ்சம் புகுந்தீர்கள்?

காகம் கரிச்சட்டியை பாத்து நீ கறுப்பெண்டு சொல்லி சிரிச்சுதாம். 😎

இதற்கு விலாவாரியாக எழுதலாம். ஆனால் இந்தத் திரியில் இல்லை. 

ஆனால் ஆங்கில பூமிக்குப் போகவேண்டும் என்ற திட்டத்துடன் ஊரில் இருந்து வெளியேறவில்லை என்று மட்டும் சொல்லலாம்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

நான் கூட ஒரு கிழமைக்குள் கியவ்வை பிடித்து விடுவார்கள் எண்டுதான் நினைத்தேன்.

நானும் மூன்று நாட்களில் ரஷ்யப் படைகள் கியேவ்வில் நிற்பார்கள் என்று நினைத்து மாத்தி மாத்தி நியூஸ் சனல்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.🤭

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

எனக்குப் புரியாத விடயம் இதுதான்..

தென்னமெரிக்க நாடுகளை பட்டினியால் வாட்டும்போதும், மத்திய கிழக்கை யுத்தங்களால் அழிக்கும்போதும், ஆபிரிக்காவை சுரண்டலுக்கு உட்படுத்தும்போதும் எம்மவர்களுக்கு வராத கோபம், உக்ரேன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பின்போது மட்டும் ரஸ்யாவின் மீது எம்மவர்களுக்கு கோபம் வருகிறதே? 

அதன்  காரணம்  என்ன? 

நீங்கள் கனடாவில் இருகின்றீர்கள்.. நாங்கள் ஐரோப்பாவில் இருக்கின்றோம். இப்போது கிழக்கு ஐரோப்பாவில் நடக்கும் யுத்தம் விரைவில் நிறுத்தப்படாவிட்டால், அது மேற்கு நோக்கியும் பரவலாம். சொந்த ஊரைப் பிரிந்த சோகத்தில் மேற்கில் வாழும் நாங்கள் மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு ஊருக்குப் போகமுடியும் நிலை இல்லையே! அப்படி ஒரு நிலை வந்தாலும்  மேற்கு நாடுகளில் வேர்கொண்டவர்களால் போகமுடியாதே!

மேலும் ரஷ்யா மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அணுவாயதங்களைப் பாவித்தால், அதன் பாதிப்பு உக்கிரேனுடன் மட்டும் நிற்காது அல்லவா.

ஆக வலிந்து உக்கிரேன் மீது ஆக்கிரமிப்பைச் செய்த ரஷ்யா, உக்கிரேனுடனான போரை நிறுத்தி ஒரு சமாதான உடன்படிக்கைக்கு வரவேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

நேட்டோ யாருக்காக எதற்காக ஆரம்பிக்கப்பட்டது சார்?

மூன்றாவது உலகப்போர் எற்பபாடமால் தவிர்க்க உருவானது 

8 hours ago, குமாரசாமி said:

நேட்டோ அமைப்பிற்கு ரஷ்ய எல்லை நாடுகளில் என்ன வேலை சார்?
நேட்டோவில் மெக்சிக்கோ கியூபா போன்ற நாடுகளை ஏன் இணைக்க முற்படவில்லை சார்?

ரஷ்யாவின் அயல்நாடுகளுக்கு   வல்லரசு ரஷ்யாவால் அச்சுறுத்தல்   எனவேதான் அயல்நாடுகளை எப்படி பாதுகாப்பு வழங்கலாம் என்று முயற்சி செய்து பார்க்கிறார்கள் 😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

மூன்றாவது உலகப்போர் எற்பபாடமால் தவிர்க்க உருவானது 

ரஷ்யாவின் அயல்நாடுகளுக்கு   வல்லரசு ரஷ்யாவால் அச்சுறுத்தல்   எனவேதான் அயல்நாடுகளை எப்படி பாதுகாப்பு வழங்கலாம் என்று முயற்சி செய்து பார்க்கிறார்கள் 😆

மெச்சிக்கோ கியூபா .......போன்ற நாடுகள் கம்யூனிஸ்டுகள்   நோட்டோ நாடுகள் ஐனாநாயக நாடுகள்..இருபகுதிகளும். ஒத்துப்போகிறது முடியாத காரியம் எனவேதான் இணைக்க இல்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

கிழக்கு ஜேர்மனியும்  மேற்கு ஜேர்மனியும் இணைவதற்கு முன் அமெரிக்க ரஷ்ய ஒப்பந்தங்கள் என்னவானது சார்?
 Budapest ஒப்பந்தம் என்னவானது சார்?

ஜேர்மன் ஒரு நாடு தான்....இரண்டாவது உலகப்போருக்குப்பின்னர்   ஜேர்மனியை ரஷ்யா அமெரிக்கா பிரான்ஸ் பிரித்தானியா நான்கு நாடுகளும் கூடிப்பேசி   ஜேர்மனியில் தங்கள் நாட்டுப்படைகளை நிறுத்த முடிவு செய்தார்கள்...அந்த நேரத்தில் ஜேர்மன் கையாறு நிலையில் இருந்தால். ஒன்றுமே பேச முடியவில்லை ஒத்துக்கொணடார்கள்.    மேற்கூறிய நான்கு நாடுகளும் தங்கள் கொள்கைகளை ஜேர்மனியில் அமுல் செய்தார்கள்  ....இங்கே தான் ஜேர்மன் இரண்டு ஆக பிரியும்” நிலைமை வந்தது   ரஷ்யா..கம்யூனிசம்..மற்றவை மூன்றும் ஐனாநாயகம்.   ...ரஷ்யா பகுதி கிழக்கு ஜேர்மனியாகவும்.   மற்றைய மூன்று நாடுகளின் பகுதி மேற்கு ஜேர்மனி ஆகவும் மாறியுள்ளது....  இந்த பிரச்சனை தவிர்க்க தான் நோட்டோவில். கம்யூனிஸ்டுகள் சேர்க்கப்படுவதில்லை 

Budapest    ஒப்பந்தம் ஆஸ்திரியா ஹங்கேரி ரஷ்யா   இடையில் 1877இல எழுதிய ஒப்பந்தம் இதில் நபர்கள் தான் பேசி உடன்பாட்டுள்ளார்கள்.  புடாபெஸ்டில். சீல் மட்டுமே குத்தி உள்ளார்கள் இதனை மற்றைய நாடுகள் ஏன் எற்க வேண்டும்?.    

புடாபெஸ்ட் மெமோண்டம் என்ற ஒரு ஒப்பந்தம் 5.12.1994 இல் எழுதப்பட்டது சிறிது நேரத்தில் எழுதுவேன் 

1 minute ago, Kandiah57 said:

இரண்டு நபர்கள் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இதனால் தான் சொல்கிறேன் உக்ரேனை நினைத்து நாம் கண்ணீர் வடிக்க தேவையில்லை என.......அதை அவர்களே பார்த்துக்கொள்ளட்டும். கட்டுரைகளும் கவிதைகளும் உக்ரேனுக்காக வடிக்க தேவையில்லை என....

பதில் இல்லாமல் எழுதிய கருத்திற்கு நன்றி 🤣

உக்ரேனை நினைத்து யாரும் கண்ணீர் வடிப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால்   அப்பாவிகளின் குடிமனைகளை தாக்குகிறார்கள் என அப்பட்டமாக தெரியும் போது அதை இட்டு கவலை கொள்வது சாதாரண மனித இயல்பு.

இதற்கு ஒரு வெளியுறவு கொள்கையும் தேவையில்லை. தமிழனாக இருக்க கூட தேவையில்லை. கொஞ்சம் மனிதாபிமானம் இருந்தால் போதுமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/4/2022 at 23:04, குமாரசாமி said:

சரி நானும் என்னைப்போன்றவர்களும் வெடிச்சத்தம் கேட்பதற்கு முன்னரே பாயை சுருட்டிக்கொண்டு வந்தவர்கள் தான் ஒத்துக்கொள்கின்றேன்.

வெடிச்சத்தங்கள் கேட்டும் அவலங்களை பார்த்த பின்னரும் எப்படி அயலவர்களை விட்டு,அவலப்படுபவர்களை விட்டு பெட்டியை தூக்கிக்கொண்டு தப்பி ஓடி வரமுடிந்தது? இவ்வளவு ஈவு இரக்கமான மனம் கொண்ட தாங்கள் ஏன் சொந்த மண்ணை விட்டு ஆங்கில பூமியில் தஞ்சம் புகுந்தீர்கள்?

காகம் கரிச்சட்டியை பாத்து நீ கறுப்பெண்டு சொல்லி சிரிச்சுதாம். 😎

அடிக்கடி இதை சொல்பவன் என்ற ரீதியில்.

நான் முன்பே எழுதியதை போல ஓடி வந்தவர் எல்லாம் ஓடி வந்தவர்தான்.

அதில் முன்னுக்கு வந்தவர் பின்னுக்கு வந்தவர் எண்ட வேறுபாடு இல்லை.

ஆனால் வாழ்ந்த அனுபவம் (lived experience)  83 தைப்பொங்கல் சீன வெடியோடு கிளப்பியவத்களுக்கு இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

ஏனையோர் அவலங்களை சந்தித்த போது, இவ்வாறு ஓடி வந்தோர் அதை கொக்கிளாய் கொப்பி, தவளைபாய்ச்சல் கொப்பி, ஓயாத அலைகள் கொப்பி எண்டு ரம்போ, கொமாண்டோ படங்கள் போல பார்த்த அனுபவத்தை மட்டுமே கொண்டிருந்தார்கள்.

யுத்தத்தின் அவலத்தை ஒரு போதும் சண்டை கொப்பி பார்த்து அறிய முடியாது அண்ணை.

இந்த அனுபவ குறைபாடு நிச்சயம் எழுத்திலும் கருத்திலும் தொனிக்கிறது.

ஒரு ரயில் விபத்தை - பெட்டியள் எல்லாம் சுக்கல் சுக்கலா கிடக்கு எண்டு ரசித்து எழுதமாட்டோம்.

ஆனால் உக்ரேனில் கற்குவியாலக கிடப்பது குடிமனைகள் என தெளிவாக தெரிந்த பின்னும், அதை சுட்டி பெருமிதமாக (இதில் என்ன பெருமிதம்) எழுதுவோம்.

வடிவாக அவதானித்து பாருங்கள், யாழ்களத்கில் ரஸ்ய ஆதரவு நிலை எடுத்த, ஊரில் அடி வாங்கியோர் கூட இப்படி எழுத மாட்டார்கள்.

ஏனென்றால் இப்படி ஒரு கற்குவியலுக்குள் இருந்து அவர்களும் எழும்பி வந்திருப்பதால்.

இதுதான் யுத்த வடுக்களை சுமந்தவர்களுக்கும், அதை பல்லாயிரம் மைலுக்கு அப்பால் இருந்து வீடியோ கொப்பியில் பார்த்தவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புடாபெஸ்ட் மெமோராஸ்டம் என்ற ஒப்பந்தம் 5..12..1994 இல் கையொழுத்து இடப்பட்டது இதில் 1..போரிஸ் யெல்ட்சின்.  2..பில் கிளிண்டன்.  3..உக்கிரேனிய ஐனாதிபதி லியோனிட் குச்மா 4..பிரித்தானியா பிரதமர் ஜான் மேஐர்  ஆகிய நான்கு தலைவர்கள் கையெழுத்திட்டார் ர்கள....அதில் ஒரு விதியை மட்டும் குறித்து காட்டுகிறேன்....அதாவது   உக்ரேனின ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரம் மற்றும் அவர்கள் / உக்ரேனியர்கள்  தற்காப்புக்காக தவிர உக்ரேனுக்கு எதிராக தங்கள் / நான்கு நாடுகளின் ஆயுதங்கள் எதனையும் பயன்படுததமாட்டார்கள்.    என்பதாகும். ....இந்த விதியை புட்டின் அம்பட்டமாக 2014இல மீறி கிரிமியாவை இணைந்து கொண்டார் ....அந்த சமயத்தில் மற்ற மூன்று நாடுகளும் அமைதியாக இருந்தார்கள்....இன்று 2022 ஏன் அமைதியாக இருக்க வேண்டும்?. ஆகவே புடாபெஸ்ட் ஒப்பந்தம்.....புட்டின்  தான்  முதலில் மீறியமை உறுதியானது  😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

மெச்சிக்கோ கியூபா .......போன்ற நாடுகள் கம்யூனிஸ்டுகள்   நோட்டோ நாடுகள் ஐனாநாயக நாடுகள்..இருபகுதிகளும். ஒத்துப்போகிறது முடியாத காரியம் எனவேதான் இணைக்க இல்லை. 

அவை மேற்கத்திய அமெரிக்க வெற்றி அல்ல.

அந்தந்த நாட்டு மக்கள் கம்யூனிஸ கொள்கையில் இருந்து விடுபட எடுத்த முடிவுகளின் வெற்றி அது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2022 at 07:21, goshan_che said:

சொல்பவர்கள் மிக தெளிவாகவே சொல்லி இருக்கிறார்கள். 

2009 இலும் வெல்ல முடியாத பெரும் கூட்டணியை எதிர்ப்பது சமயோசிதம் இல்லை என்று புலிகளுக்கு சொன்னார்கள்.

2022 இலும் வெல்ல முடியாத பெரும் கூட்டணியை எதிர்ப்பது சமயோசிதம் இல்லை என ரஸ்யாவுக்கு சொல்கிறார்கள்.

அண்ணாக்களுக்குத்தான் 2009இலும் புரியவில்லை, 2022 இலும் புரியவில்லை. 

கருத்து வரட்சி ஏற்பட்டதும் மேட்டுகுடி, சாதி என்று சம்பந்தந்தா சம்பந்தம் இல்லாமல் எழுதும் படி ஆகிறது🤣.

உகண்டாதான் உலகம் என்றால் 
இடி அமீன் தான் பெரும் கூட்டணி 

மேலே இருக்கும் கருத்து சரியாக புரியவில்லை 
சாதிய மேலாதிக்கம் பெரும்பாண்மையானராக பலமிக்கவராக இருந்தால் 
அடிபணிந்து போங்கள் என்ற ஒரு அச்சுறுத்தலாகவே மேலோட்ட்மக இருக்கிறது.

உக்கரையின் 
ரஸ்யா 
என்று ஒவ்வருவரும் ஒரு சேலை தலைப்பை பற்றிக்கொண்டு 
தங்கள் தங்கள் பங்குக்கு நிலை  சார்ந்து நியாயம் கற்பிக்க போனால் 
இறுதியில் இவ்வாறான ஆதிக்க ஆணவ கருத்துகளுடனேயே வந்து நிற்க நேரிடும் 

உலகில் வல்லாதிக்க போர் என்பது கடந்த 3000 ஆண்டுகளாக நடைபெறுகிறது 
இந்த அளவுக்கு நாகரீகமாக முன்னேறிய மனித இனம் இவாறான ஒரு மனித பேரழிவை 
செய்யத்தான் வேண்டுமா? 
உக்ரைன் ரஷ்ய போர் என்பது மேற்குலகால் கடந்த 20 வருடமாக நன்கு திட்டமிட்டமிட்டு நடத்தப்பட்டே வருகிறது. உக்ரனியே அரசுகளால் இதுவரை பல ஆயிரம் ரஷ்ய மொழி பேசும் மக்கள் கொல்லபட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கான நீதி நியாயம் இன்று இந்த யாழ் களத்திலும் இறந்தே கிடக்கிறது 

மேற்கு காப்பாற்றும் என்று மேற்கு நிலை சார்ந்து பூகோள அடிப்படை மறந்து 
வால்பிடித்த சதாம் குசேய்ன் ...... பின்லாடன் + முகாஜிதீன்கள் .... இன்றைய சிரிய அரசுகளுக்கு 
நடந்த சோகம் எதிர்கால உகரனியர்களுக்கும் உண்டு என்பதே கடந்தகால தீர்ப்பு 

அமெரிக்கநாட்டு வேக உணவு விடுதிகள் தயாரிக்கும் உணவுகள் நீரிழிவு மற்றும் இருதய நோயை பரப்புகிறது என்பதை பல மருத்த்துவர்கள் ஆதரபூர்வமாக நிரூபித்த காலம் கடந்துபோய் 
உயிரச்சுறுத்தல் இருந்தும் சில மருத்துவ ஆய்வாளர்கள் இன்று இது திட்டமிட்டே நடக்கிறது என்று ஆதரபூர்வமாக நிரூபிக்கிறார்கள். சொந்த நாட்டு மக்களின் நிலையே இதுவாக இருக்கும்போது 
(இன்னொரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன் .... 1970களில்  அமெரிக்க சிகரெட் நிறுவனமான பிலிப் மோரிஸ்  செக்கோஸ்லோவாக்கிய அரசை சந்தித்து புகை பிடித்தலை தூண்ட கூறியது விளம்பர செலவு அனைத்தையும்  தாமே ஏற்பதாகவும். இவ்வாறு செய்தால் மக்கள் ஓய்வூதிய காலம் எட்டும்போது இறந்துவிடுவார்கள் என்றும்... அரசுக்கு பல கோடி லாபம் கிடைக்கும் என்றும் பரிந்துரை செய்தார்கள்) 
உக்ரேனிய மக்கள் இறக்கிறார்கள் என்று அமேரிக்க அரச தலைவர் அழுவது என்பது என்ன என்பதை 
உலகின் வேறு ஒரு இனம் புரிய மறந்தாலும் ........ அலற அலற அடிவாங்கிய ஈழத்தமிழரும் மறந்துதான் ஆகவேண்டுமா?? 

வட கொரிய மக்கள் தற்போதைய அரசின் கீழ் பட்டினியால் சாகிறார்கள் என்று எழுதும் நாம் 
வட கொரிய அரசு என்ன சீரழிவை மற்றைய நாட்டுக்கு செய்கிறது? ஏன் இவ்வளவு பொருளாதார தடைகள் 
என்பதை இலகுவாக மறந்துவிடுகிறோம். வட கொரிய மக்களின் பட்டினிக்கு வட கொரிய அரசே காரணம் எனும் நிலைக்கு  இலகுவாக வந்துவிடுகிறோம். 

லிபியாவில்  இலவச வீடு ....... இலவச கல்வி ... இலவச மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகள் 
கடந்தகால அரசினால் நிர்ணயமாக இருந்தது ........ இன்றைய லிபியர்கள் ரோட்டில் பிச்சை பெண்கள் உணவுக்கு  விபச்சாரம் எனும் நிலையில் நிற்கிறது. 

நாம் மனிதம் பேசுவோம் 
தவரேல் எதோ ஒரு ஆதிக்க ஆணவ சக்தியை பிடித்து தொங்கிக்கொண்டு நிற்போம் 
அப்போதே அடிப்படை நீதி நியாயம் இறந்துவிடும். மேற்கொண்டு பந்தி பந்தியாக பெயிண்ட் அடிக்க என்ன இருக்க  போகிறது? 

( இதை கோஷனுக்கான பதிலாக நான் எழுதவில்லை. இவ்வாறான ஒரு கருத்தை இன்னொரு கருத்தை பதிவு செய்வதன் மூலம்  புரியவைக்க முடியும் என்ற எண்ணம் எனக்கு அறவே இப்போது இல்லை. ரஷ்ய தான் வெல்லவேண்டும்  உக்ரைந்தான் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் நீங்கி பாதிக்க படும் மக்களுக்கு ஒரு துரும்பை  என்றாலும் எங்களால் கொடுக்க முடிந்தால் ... அதன் பிரதி பலன் எமது அடுத்த சந்ததிக்கு சென்று சேரலாம்  எனும் ஒரு சிறிய நம்பிக்கை மட்டுமே உள்ளது) 

  • Like 6
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.