Jump to content

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது ரஷ்யா

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

புடாபெஸ்ட் மெமோராஸ்டம் என்ற ஒப்பந்தம் 5..12..1994 இல் கையொழுத்து இடப்பட்டது இதில் 1..போரிஸ் யெல்ட்சின்.  2..பில் கிளிண்டன்.  3..உக்கிரேனிய ஐனாதிபதி லியோனிட் குச்மா 4..பிரித்தானியா பிரதமர் ஜான் மேஐர்  ஆகிய நான்கு தலைவர்கள் கையெழுத்திட்டார் ர்கள....அதில் ஒரு விதியை மட்டும் குறித்து காட்டுகிறேன்....அதாவது   உக்ரேனின ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரம் மற்றும் அவர்கள் / உக்ரேனியர்கள்  தற்காப்புக்காக தவிர உக்ரேனுக்கு எதிராக தங்கள் / நான்கு நாடுகளின் ஆயுதங்கள் எதனையும் பயன்படுததமாட்டார்கள்.    என்பதாகும். ....இந்த விதியை புட்டின் அம்பட்டமாக 2014இல மீறி கிரிமியாவை இணைந்து கொண்டார் ....அந்த சமயத்தில் மற்ற மூன்று நாடுகளும் அமைதியாக இருந்தார்கள்....இன்று 2022 ஏன் அமைதியாக இருக்க வேண்டும்?. ஆகவே புடாபெஸ்ட் ஒப்பந்தம்.....புட்டின்  தான்  முதலில் மீறியமை உறுதியானது  😆

On 23 May 1992, Russia, the U.S., Belarus, Kazakhstan and Ukraine signed the Lisbon Protocol to the START I treaty, ahead of ratifying the treaty later. The protocol committed Belarus, Kazakhstan and Ukraine to adhere to the NPT as non-nuclear weapons states as soon as possible. However, the terms for the transfer of the nuclear warheads were not agreed, and some Ukrainian officials and parliamentarians started to discuss the possibility of retaining some of the modern Ukrainian built RT-23 (SS-24) missiles and Soviet built warheads.[10][11]

In 1993, two regiments of UR-100N (SS-19) missiles in Ukraine were withdrawn to storage because warhead components were past their operational life, and Ukraine's political leadership realised that Ukraine could not become a credible nuclear military force as they could not maintain the warheads and ensure long term nuclear safety. Later in 1993, the Ukrainian and Russian governments signed a series of bilateral agreements giving up Ukrainian claims to the nuclear weapons and the Black Sea Fleet, in return in gas and oil debt cancellation and future supplies of fuel for its nuclear power reactors. Ukraine agreed to ratify the START I and NPT treaties promptly. This caused severe public criticism leading to the resignation of Ukrainian Defence Minister Morozov.[2] On 18 November 1993, the Rada passed a motion agreeing to START I but renouncing the Lisbon Protocol, suggesting Ukraine would only decommission 36% of missile launchers and 42% of the warheads on its territory, and demanded financial compensation for the tactical nuclear weapons removed in 1992. This caused U.S. diplomatic consternation, and the following day Ukrainian President Kravchuk said "we must get rid of [these nuclear weapons]. This is my viewpoint from which I have not and will not deviate." He then brought a new proposal to the Rada.[10][11]

https://en.wikipedia.org/wiki/Budapest_Memorandum_on_Security_Assurances

Later in 1993, the Ukrainian and Russian governments signed a series of bilateral agreements giving up Ukrainian claims to the nuclear weapons and the Black Sea Fleet, in return in gas and oil debt cancellation 

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இணையவன்

பலகோடி மக்கள் வாழும் நாடொன்றைத் தன்னால் ஒரே ஏவுகளையால் அழிக்க முடியும் என்று மார்தட்டுபவனை விட உலகின் அதியுர்ந்த பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்க முடியாது. இதைக் கேட்டு மகிழ்பவரை என்னவென்று சொல்வது ? அது

இணையவன்

நாம் ஈழத் தமிழர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. ஒவ்வொரு விதமான திரிகளில் நடைபெறும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் கள உறவுகளுடன் நட்புடனேயே பழக முயற்சிக்கிறேன். ஒருவர் எழுதிய கருத்தைப் ப

goshan_che

தலைவருடன் கடைசிவரை நிண்டவர்களில் உங்கள், எங்கள் தலைமுறையினரும் அடங்குவர் அண்ணை. 2009 க்கு முன் ஒரு தலைமை இருந்தது, ஆகவே புலத்தில் இருந்து தேசியப்பற்றை பறைசாற்றுவது, உழைப்பது முடியுமாய் இருந்தது. 

1 hour ago, Maruthankerny said:

உகண்டாதான் உலகம் என்றால் 
இடி அமீன் தான் பெரும் கூட்டணி 

மேலே இருக்கும் கருத்து சரியாக புரியவில்லை 
சாதிய மேலாதிக்கம் பெரும்பாண்மையானராக பலமிக்கவராக இருந்தால் 
அடிபணிந்து போங்கள் என்ற ஒரு அச்சுறுத்தலாகவே மேலோட்ட்மக இருக்கிறது.

உக்கரையின் 
ரஸ்யா 
என்று ஒவ்வருவரும் ஒரு சேலை தலைப்பை பற்றிக்கொண்டு 
தங்கள் தங்கள் பங்குக்கு நிலை  சார்ந்து நியாயம் கற்பிக்க போனால் 
இறுதியில் இவ்வாறான ஆதிக்க ஆணவ கருத்துகளுடனேயே வந்து நிற்க நேரிடும் 

உலகில் வல்லாதிக்க போர் என்பது கடந்த 3000 ஆண்டுகளாக நடைபெறுகிறது 
இந்த அளவுக்கு நாகரீகமாக முன்னேறிய மனித இனம் இவாறான ஒரு மனித பேரழிவை 
செய்யத்தான் வேண்டுமா? 
உக்ரைன் ரஷ்ய போர் என்பது மேற்குலகால் கடந்த 20 வருடமாக நன்கு திட்டமிட்டமிட்டு நடத்தப்பட்டே வருகிறது. உக்ரனியே அரசுகளால் இதுவரை பல ஆயிரம் ரஷ்ய மொழி பேசும் மக்கள் கொல்லபட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கான நீதி நியாயம் இன்று இந்த யாழ் களத்திலும் இறந்தே கிடக்கிறது 

மேற்கு காப்பாற்றும் என்று மேற்கு நிலை சார்ந்து பூகோள அடிப்படை மறந்து 
வால்பிடித்த சதாம் குசேய்ன் ...... பின்லாடன் + முகாஜிதீன்கள் .... இன்றைய சிரிய அரசுகளுக்கு 
நடந்த சோகம் எதிர்கால உகரனியர்களுக்கும் உண்டு என்பதே கடந்தகால தீர்ப்பு 

அமெரிக்கநாட்டு வேக உணவு விடுதிகள் தயாரிக்கும் உணவுகள் நீரிழிவு மற்றும் இருதய நோயை பரப்புகிறது என்பதை பல மருத்த்துவர்கள் ஆதரபூர்வமாக நிரூபித்த காலம் கடந்துபோய் 
உயிரச்சுறுத்தல் இருந்தும் சில மருத்துவ ஆய்வாளர்கள் இன்று இது திட்டமிட்டே நடக்கிறது என்று ஆதரபூர்வமாக நிரூபிக்கிறார்கள். சொந்த நாட்டு மக்களின் நிலையே இதுவாக இருக்கும்போது 
(இன்னொரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன் .... 1970களில்  அமெரிக்க சிகரெட் நிறுவனமான பிலிப் மோரிஸ்  செக்கோஸ்லோவாக்கிய அரசை சந்தித்து புகை பிடித்தலை தூண்ட கூறியது விளம்பர செலவு அனைத்தையும்  தாமே ஏற்பதாகவும். இவ்வாறு செய்தால் மக்கள் ஓய்வூதிய காலம் எட்டும்போது இறந்துவிடுவார்கள் என்றும்... அரசுக்கு பல கோடி லாபம் கிடைக்கும் என்றும் பரிந்துரை செய்தார்கள்) 
உக்ரேனிய மக்கள் இறக்கிறார்கள் என்று அமேரிக்க அரச தலைவர் அழுவது என்பது என்ன என்பதை 
உலகின் வேறு ஒரு இனம் புரிய மறந்தாலும் ........ அலற அலற அடிவாங்கிய ஈழத்தமிழரும் மறந்துதான் ஆகவேண்டுமா?? 

வட கொரிய மக்கள் தற்போதைய அரசின் கீழ் பட்டினியால் சாகிறார்கள் என்று எழுதும் நாம் 
வட கொரிய அரசு என்ன சீரழிவை மற்றைய நாட்டுக்கு செய்கிறது? ஏன் இவ்வளவு பொருளாதார தடைகள் 
என்பதை இலகுவாக மறந்துவிடுகிறோம். வட கொரிய மக்களின் பட்டினிக்கு வட கொரிய அரசே காரணம் எனும் நிலைக்கு  இலகுவாக வந்துவிடுகிறோம். 

லிபியாவில்  இலவச வீடு ....... இலவச கல்வி ... இலவச மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகள் 
கடந்தகால அரசினால் நிர்ணயமாக இருந்தது ........ இன்றைய லிபியர்கள் ரோட்டில் பிச்சை பெண்கள் உணவுக்கு  விபச்சாரம் எனும் நிலையில் நிற்கிறது. 

நாம் மனிதம் பேசுவோம் 
தவரேல் எதோ ஒரு ஆதிக்க ஆணவ சக்தியை பிடித்து தொங்கிக்கொண்டு நிற்போம் 
அப்போதே அடிப்படை நீதி நியாயம் இறந்துவிடும். மேற்கொண்டு பந்தி பந்தியாக பெயிண்ட் அடிக்க என்ன இருக்க  போகிறது? 

( இதை கோஷனுக்கான பதிலாக நான் எழுதவில்லை. இவ்வாறான ஒரு கருத்தை இன்னொரு கருத்தை பதிவு செய்வதன் மூலம்  புரியவைக்க முடியும் என்ற எண்ணம் எனக்கு அறவே இப்போது இல்லை. ரஷ்ய தான் வெல்லவேண்டும்  உக்ரைந்தான் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் நீங்கி பாதிக்க படும் மக்களுக்கு ஒரு துரும்பை  என்றாலும் எங்களால் கொடுக்க முடிந்தால் ... அதன் பிரதி பலன் எமது அடுத்த சந்ததிக்கு சென்று சேரலாம்  எனும் ஒரு சிறிய நம்பிக்கை மட்டுமே உள்ளது) 

உக்ரனியே அரசுகளால் இதுவரை பல ஆயிரம் ரஷ்ய மொழி பேசும் மக்கள் கொல்லபட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கான நீதி நியாயம் இன்று இந்த யாழ் களத்திலும் இறந்தே கிடக்கிறது 

உக்ரேனிய மக்கள் இறக்கிறார்கள் என்று அமேரிக்க அரச தலைவர் அழுவது என்பது என்ன என்பதை 
உலகின் வேறு ஒரு இனம் புரிய மறந்தாலும் ........ அலற அலற அடிவாங்கிய ஈழத்தமிழரும் மறந்துதான் ஆகவேண்டுமா?? 

நாம் மனிதம் பேசுவோம் 
தவரேல் எதோ ஒரு ஆதிக்க ஆணவ சக்தியை பிடித்து தொங்கிக்கொண்டு நிற்போம் 
அப்போதே அடிப்படை நீதி நியாயம் இறந்துவிடும்.
மேற்கொண்டு பந்தி பந்தியாக பெயிண்ட் அடிக்க என்ன இருக்க  போகிறது? 

ரஷ்ய தான் வெல்லவேண்டும்  உக்ரைந்தான் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் நீங்கி பாதிக்க படும் மக்களுக்கு ஒரு துரும்பை  என்றாலும் எங்களால் கொடுக்க முடிந்தால் ... அதன் பிரதி பலன் எமது அடுத்த சந்ததிக்கு சென்று சேரலாம்  எனும் ஒரு சிறிய நம்பிக்கை மட்டுமே உள்ளது

Thanks Annai

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

 தென்னமெரிக்க நாடுகளை பட்டினியால் வாட்டும்போதும், மத்திய கிழக்கை யுத்தங்களால் அழிக்கும்போதும், ஆபிரிக்காவை சுரண்டலுக்கு உட்படுத்தும்போதும் எம்மவர்களுக்கு வராத கோபம், உக்ரேன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பின்போது மட்டும் ரஸ்யாவின் மீது எம்மவர்களுக்கு கோபம் வருகிறதே? 

அதன்  காரணம்  என்ன? 

மேலே மற்றவர்கள் எழுதியவற்றை விட இன்னுமொரு காரணம் இருக்கிறது. இந்த சண்டை தொடங்கியபோது, அவர்களுக்கு அடி விழுவதை இட்டு, அடித்து நொறுக்கப்படுவதை இங்கு ரசித்தவர்களும், கொண்டாடியவர்களும், நியாயப்படுத்தியவர்களும் என்று நிறைய பேர் உண்டு. மத்தியகிழக்கில் அடி விழுவதை இங்கு கொண்டாடியவர்கள் ஒருவருமில்லை. நடந்த கொலைகளை மீடியாக்களின் சதி என்று முண்டு கொடுக்கவில்லை. நம்மால் எதுவும் செய்ய முடியாது, முடியவில்லை அவ்வளவுதான். ஜோர்ஜ் புஷ் அல்லது டிரம்ப் ஒரு ஹீரோவாக கொண்டாடப்படவில்லை. நாட்டின் சட்டங்களை வளைத்து, எதிர்கட்சிகளை இல்லாமல் பண்ணி, தன்னை ஒரு அசைக்க முடியாத சர்வாதிகாரியாக மாற்றி ஆளும் புடின், இப்பொழுது நமது திடீர் ஹீரோவாக  மாறிவிட்டார், சகிக்கவில்லை

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நீர்வேலியான் said:

"நாட்டின் சட்டங்களை வளைத்து, எதிர்கட்சிகளை இல்லாமல் பண்ணி, தன்னை ஒரு அசைக்க முடியாத சர்வாதிகாரியாக மாற்றி ஆளும் புடின்,"  

இப்பொழுது நமது திடீர் ஹீரோவாக  மாறிவிட்டார், சகிக்கவில்லை

எந்த அடிப்படையில் புடினை சர்வாதிகாரி என்கிறீர்கள் ? பலரும் இதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் இன்றளவும் எமதாட்கள் எவரும்  மகிந்தவையோ அல்லது கொட்டாபய வையோ  சர்வாதிகாரி எனக் கூறியது கிடையாது. 

ஆர்சரியமாகவிருக்கிறது 🧐

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

உகண்டாதான் உலகம் என்றால் 
இடி அமீன் தான் பெரும் கூட்டணி 

மேலே இருக்கும் கருத்து சரியாக புரியவில்லை 
சாதிய மேலாதிக்கம் பெரும்பாண்மையானராக பலமிக்கவராக இருந்தால் 
அடிபணிந்து போங்கள் என்ற ஒரு அச்சுறுத்தலாகவே மேலோட்ட்மக இருக்கிறது.

உக்கரையின் 
ரஸ்யா 
என்று ஒவ்வருவரும் ஒரு சேலை தலைப்பை பற்றிக்கொண்டு 
தங்கள் தங்கள் பங்குக்கு நிலை  சார்ந்து நியாயம் கற்பிக்க போனால் 
இறுதியில் இவ்வாறான ஆதிக்க ஆணவ கருத்துகளுடனேயே வந்து நிற்க நேரிடும் 

உலகில் வல்லாதிக்க போர் என்பது கடந்த 3000 ஆண்டுகளாக நடைபெறுகிறது 
இந்த அளவுக்கு நாகரீகமாக முன்னேறிய மனித இனம் இவாறான ஒரு மனித பேரழிவை 
செய்யத்தான் வேண்டுமா? 
உக்ரைன் ரஷ்ய போர் என்பது மேற்குலகால் கடந்த 20 வருடமாக நன்கு திட்டமிட்டமிட்டு நடத்தப்பட்டே வருகிறது. உக்ரனியே அரசுகளால் இதுவரை பல ஆயிரம் ரஷ்ய மொழி பேசும் மக்கள் கொல்லபட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கான நீதி நியாயம் இன்று இந்த யாழ் களத்திலும் இறந்தே கிடக்கிறது 

மேற்கு காப்பாற்றும் என்று மேற்கு நிலை சார்ந்து பூகோள அடிப்படை மறந்து 
வால்பிடித்த சதாம் குசேய்ன் ...... பின்லாடன் + முகாஜிதீன்கள் .... இன்றைய சிரிய அரசுகளுக்கு 
நடந்த சோகம் எதிர்கால உகரனியர்களுக்கும் உண்டு என்பதே கடந்தகால தீர்ப்பு 

அமெரிக்கநாட்டு வேக உணவு விடுதிகள் தயாரிக்கும் உணவுகள் நீரிழிவு மற்றும் இருதய நோயை பரப்புகிறது என்பதை பல மருத்த்துவர்கள் ஆதரபூர்வமாக நிரூபித்த காலம் கடந்துபோய் 
உயிரச்சுறுத்தல் இருந்தும் சில மருத்துவ ஆய்வாளர்கள் இன்று இது திட்டமிட்டே நடக்கிறது என்று ஆதரபூர்வமாக நிரூபிக்கிறார்கள். சொந்த நாட்டு மக்களின் நிலையே இதுவாக இருக்கும்போது 
(இன்னொரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன் .... 1970களில்  அமெரிக்க சிகரெட் நிறுவனமான பிலிப் மோரிஸ்  செக்கோஸ்லோவாக்கிய அரசை சந்தித்து புகை பிடித்தலை தூண்ட கூறியது விளம்பர செலவு அனைத்தையும்  தாமே ஏற்பதாகவும். இவ்வாறு செய்தால் மக்கள் ஓய்வூதிய காலம் எட்டும்போது இறந்துவிடுவார்கள் என்றும்... அரசுக்கு பல கோடி லாபம் கிடைக்கும் என்றும் பரிந்துரை செய்தார்கள்) 
உக்ரேனிய மக்கள் இறக்கிறார்கள் என்று அமேரிக்க அரச தலைவர் அழுவது என்பது என்ன என்பதை 
உலகின் வேறு ஒரு இனம் புரிய மறந்தாலும் ........ அலற அலற அடிவாங்கிய ஈழத்தமிழரும் மறந்துதான் ஆகவேண்டுமா?? 

வட கொரிய மக்கள் தற்போதைய அரசின் கீழ் பட்டினியால் சாகிறார்கள் என்று எழுதும் நாம் 
வட கொரிய அரசு என்ன சீரழிவை மற்றைய நாட்டுக்கு செய்கிறது? ஏன் இவ்வளவு பொருளாதார தடைகள் 
என்பதை இலகுவாக மறந்துவிடுகிறோம். வட கொரிய மக்களின் பட்டினிக்கு வட கொரிய அரசே காரணம் எனும் நிலைக்கு  இலகுவாக வந்துவிடுகிறோம். 

லிபியாவில்  இலவச வீடு ....... இலவச கல்வி ... இலவச மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகள் 
கடந்தகால அரசினால் நிர்ணயமாக இருந்தது ........ இன்றைய லிபியர்கள் ரோட்டில் பிச்சை பெண்கள் உணவுக்கு  விபச்சாரம் எனும் நிலையில் நிற்கிறது. 

நாம் மனிதம் பேசுவோம் 
தவரேல் எதோ ஒரு ஆதிக்க ஆணவ சக்தியை பிடித்து தொங்கிக்கொண்டு நிற்போம் 
அப்போதே அடிப்படை நீதி நியாயம் இறந்துவிடும். மேற்கொண்டு பந்தி பந்தியாக பெயிண்ட் அடிக்க என்ன இருக்க  போகிறது? 

( இதை கோஷனுக்கான பதிலாக நான் எழுதவில்லை. இவ்வாறான ஒரு கருத்தை இன்னொரு கருத்தை பதிவு செய்வதன் மூலம்  புரியவைக்க முடியும் என்ற எண்ணம் எனக்கு அறவே இப்போது இல்லை. ரஷ்ய தான் வெல்லவேண்டும்  உக்ரைந்தான் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் நீங்கி பாதிக்க படும் மக்களுக்கு ஒரு துரும்பை  என்றாலும் எங்களால் கொடுக்க முடிந்தால் ... அதன் பிரதி பலன் எமது அடுத்த சந்ததிக்கு சென்று சேரலாம்  எனும் ஒரு சிறிய நம்பிக்கை மட்டுமே உள்ளது) 

இங்கே லைக் போட்டது உங்கள் நல்ல மனதுக்கு.

மற்றும்படி நீங்கள் சொல்லும் நிலை வர ஒவ்வொரு நாட்டிலும் புத்தர் ஜனாதிபதியாக, ஜேசு பிரதமராக வரவேண்டும்.

உலக வரலாறு வாள், துப்பாக்கி முனையில் தந்திரஙகளாலேயே நகர்கிறது. நகரும்.

இங்கே அணி சாராமல் நிற்கவே ஒரு அணியை அமைக்க வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

அடிக்கடி இதை சொல்பவன் என்ற ரீதியில்.

நான் முன்பே எழுதியதை போல ஓடி வந்தவர் எல்லாம் ஓடி வந்தவர்தான்.

அதில் முன்னுக்கு வந்தவர் பின்னுக்கு வந்தவர் எண்ட வேறுபாடு இல்லை.

ஆனால் வாழ்ந்த அனுபவம் (lived experience)  83 தைப்பொங்கல் சீன வெடியோடு கிளப்பியவத்களுக்கு இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

ஏனையோர் அவலங்களை சந்தித்த போது, இவ்வாறு ஓடி வந்தோர் அதை கொக்கிளாய் கொப்பி, தவளைபாய்ச்சல் கொப்பி, ஓயாத அலைகள் கொப்பி எண்டு ரம்போ, கொமாண்டோ படங்கள் போல பார்த்த அனுபவத்தை மட்டுமே கொண்டிருந்தார்கள்.

யுத்தத்தின் அவலத்தை ஒரு போதும் சண்டை கொப்பி பார்த்து அறிய முடியாது அண்ணை.

இந்த அனுபவ குறைபாடு நிச்சயம் எழுத்திலும் கருத்திலும் தொனிக்கிறது.

ஒரு ரயில் விபத்தை - பெட்டியள் எல்லாம் சுக்கல் சுக்கலா கிடக்கு எண்டு ரசித்து எழுதமாட்டோம்.

ஆனால் உக்ரேனில் கற்குவியாலக கிடப்பது குடிமனைகள் என தெளிவாக தெரிந்த பின்னும், அதை சுட்டி பெருமிதமாக (இதில் என்ன பெருமிதம்) எழுதுவோம்.

வடிவாக அவதானித்து பாருங்கள், யாழ்களத்கில் ரஸ்ய ஆதரவு நிலை எடுத்த, ஊரில் அடி வாங்கியோர் கூட இப்படி எழுத மாட்டார்கள்.

ஏனென்றால் இப்படி ஒரு கற்குவியலுக்குள் இருந்து அவர்களும் எழும்பி வந்திருப்பதால்.

இதுதான் யுத்த வடுக்களை சுமந்தவர்களுக்கும், அதை பல்லாயிரம் மைலுக்கு அப்பால் இருந்து வீடியோ கொப்பியில் பார்த்தவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

உடான்ஸ் தெய்வமே...  உன்னைப்போல இடித்து சொரணை வரும் அளவுக்கு (வராது... இருந்தாலும்) சொல்ல என்னால் முடியவியல்லையே.  🙏 😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Sasi_varnam said:

உடான்ஸ் தெய்வமே...  உன்னைப்போல இடித்து சொரணை வரும் அளவுக்கு (வராது... இருந்தாலும்) சொல்ல என்னால் முடியவியல்லையே.  🙏 😂

முயற்சி செய்யுங்கள் உங்களாலும் முடியும் 😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

முயற்சி செய்யுங்கள் உங்களாலும் முடியும் 😆

அவர் "Grand Master" நான் வெறும் "Experienced".. வித்தியாசம் இருக்கத்தானே வேணும். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

எந்த அடிப்படையில் புடினை சர்வாதிகாரி என்கிறீர்கள் ? பலரும் இதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் இன்றளவும் எமதாட்கள் எவரும்  மகிந்தவையோ அல்லது கொட்டாபய வையோ  சர்வாதிகாரி எனக் கூறியது கிடையாது. 

ஆர்சரியமாகவிருக்கிறது 🧐

கபிதன். ஒரு வருடத்திற்குள் நடந்த உண்மை சம்பவம் உலகம் முழுவதும் அனைத்து ஊடகங்களும் எழுதி இருக்கிறது...ரஷ்யா அதிபர்  புடின். ரஷ்யாவின் எதிர்கட்சி தலைவரை கூலி ஆள்களை நியமித்து கொலை செய்ய முயற்சித்தவர்.  நஞ்சு உணவுகள் கொடுத்து    அவர் மயங்கி விட்டார் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை எங்கள் நாட்டின் முன்னாள் பிரதமர் விடயம் அறிந்து உடன் தனி விமானம் மூலம் பேர்லின் கூட்டி வந்து ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் இங்கே இருந்தவர்   புட்டின் இடமளிக்கவில்லை. ரஷ்யாவில் மருத்துவம் செய்ய முடியும் என்று அடம்பிடித்தான்...இதை போல் இன்னும் பல விடயங்கள் எனக்கு தெரியும்.....எனவேதான் நீர்வேலியான் கருத்தை நான் வழிமொழிந்து உள்ளேன்....நீங்கள் புட்டினை எப்படி நினைத்தாலும் சரி அது உங்கள் இஸ்டம்.  😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kandiah57 said:

35 minutes ago, Kandiah57 said:

முயற்சி செய்யுங்கள் உங்களாலும் முடியும் 😆

மில்லியன் கணக்கில் ஈராக்கில் கொன்ற புஸ் ஒரு போதும் சர்வாதிகாரி ஆக மாட்டார். ஏனெனில் அவர் கொன்றது ஒரு அந்நிய நாடு: அத்தோடு முசிலிம் நாடு. எப்படி இந்த உலகம் (நீங்கள் உட்பட) இவ்வளவு மும்முரமாக பதில் கருத்து எழுதவில்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நீர்வேலியான் said:

மேலே மற்றவர்கள் எழுதியவற்றை விட இன்னுமொரு காரணம் இருக்கிறது. இந்த சண்டை தொடங்கியபோது, அவர்களுக்கு அடி விழுவதை இட்டு, அடித்து நொறுக்கப்படுவதை இங்கு ரசித்தவர்களும், கொண்டாடியவர்களும், நியாயப்படுத்தியவர்களும் என்று நிறைய பேர் உண்டு. மத்தியகிழக்கில் அடி விழுவதை இங்கு கொண்டாடியவர்கள் ஒருவருமில்லை. நடந்த கொலைகளை மீடியாக்களின் சதி என்று முண்டு கொடுக்கவில்லை. நம்மால் எதுவும் செய்ய முடியாது, முடியவில்லை அவ்வளவுதான். ஜோர்ஜ் புஷ் அல்லது டிரம்ப் ஒரு ஹீரோவாக கொண்டாடப்படவில்லை. நாட்டின் சட்டங்களை வளைத்து, எதிர்கட்சிகளை இல்லாமல் பண்ணி, தன்னை ஒரு அசைக்க முடியாத சர்வாதிகாரியாக மாற்றி ஆளும் புடின், இப்பொழுது நமது திடீர் ஹீரோவாக  மாறிவிட்டார், சகிக்கவில்லை

யாழ்கள புட்டின் பிரிகேட்க்குகும் ஏனையோருக்குமான வித்தியாசம் இவ்வளவுதான். 

இங்கே உக்ரேனிய படுகொலைகளை கொண்டாடியது போல வேறு எதையும் யாரும், ஒரு போதும் கொண்டாடியதில்லை.

ஒரு பலவீனமான தமிழனாக எப்போதும் நாம் மெளனசாடிகளாகவே இருந்தோம்.

ஆனால் புட்டினை வளர விட்டால் நமக்கே ஆபத்து என்பதால் எதிர்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, kalyani said:

மில்லியன் கணக்கில் ஈராக்கில் கொன்ற புஸ் ஒரு போதும் சர்வாதிகாரி ஆக மாட்டார். ஏனெனில் அவர் கொன்றது ஒரு அந்நிய நாடு: அத்தோடு முசிலிம் நாடு. எப்படி இந்த உலகம் (நீங்கள் உட்பட) இவ்வளவு மும்முரமாக பதில் கருத்து எழுதவில்லை. 

எழுதி இருப்பேன்....ஐயா ஆனால் அப்போது நான் எந்த இணைய தளத்திலும் அங்கத்துவம் பெற இல்லை மேலும் அந்த நேரம் விசைப்பலகையில் தட்டவும் எனக்கு தெரியாது மட்டுமல்ல கம்பூட்டருமில்லை  .....2003 ஆம் ஆண்டு இல்லையா?.   நாங்கள் எழுதி ஒரு சிறிய பூச்சி புழுக்கள் கூட சாகாத..🤣🙏 கவலை...கோபம்...கொள்ள வேண்டாம் 😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

உக்ரேனை நினைத்து யாரும் கண்ணீர் வடிப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால்   அப்பாவிகளின் குடிமனைகளை தாக்குகிறார்கள் என அப்பட்டமாக தெரியும் போது அதை இட்டு கவலை கொள்வது சாதாரண மனித இயல்பு.

இந்த உலகில் உக்ரேனில் மட்டும் அழிவுகள் நடக்கவில்லை.உலகம் பூராகவும் மனித அழிவுகள் நடந்த வண்ணமே இருக்கின்றன. பிரத்தியேகமாக உக்ரேனுக்கு மட்டும் பரிதாபப்படுவதற்கு மேற்குலக விசுவாசிகளால் மட்டுமே முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

உக்ரேனியர்கள்  தற்காப்புக்காக தவிர உக்ரேனுக்கு எதிராக தங்கள் / நான்கு நாடுகளின் ஆயுதங்கள் எதனையும் பயன்படுததமாட்டார்கள்.    என்பதாகும். ....இந்த விதியை புட்டின் அம்பட்டமாக 2014இல மீறி கிரிமியாவை இணைந்து கொண்டார் ....அந்த சமயத்தில் மற்ற மூன்று நாடுகளும் அமைதியாக இருந்தார்கள்....இன்று 2022 ஏன் அமைதியாக இருக்க வேண்டும்?. ஆகவே புடாபெஸ்ட் ஒப்பந்தம்.....புட்டின்  தான்  முதலில் மீறியமை உறுதியானது  

சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த நாடுகள் மேற்குலகுடன் வியாபார நீதியாக நட்பு கொண்டாலும் நடுநிலைமை வகிக்க வேண்டும் என்பது ஒப்பந்தம். எனவே ஒப்பந்தத்தை மீறியது பிரிந்த நாடுகளே அன்றி ரஷ்யா அல்ல.தற்பாதுகாப்பிற்காக மட்டுமே ரஷ்யா  கிரிமியாவை சுவீகரித்து கொண்டது. அங்கே நடந்த ரஷ்ய மக்கள் கொலைகளை நாங்கள் பேசமாட்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

இந்த உலகில் உக்ரேனில் மட்டும் அழிவுகள் நடக்கவில்லை.உலகம் பூராகவும் மனித அழிவுகள் நடந்த வண்ணமே இருக்கின்றன. பிரத்தியேகமாக உக்ரேனுக்கு மட்டும் பரிதாபப்படுவதற்கு மேற்குலக விசுவாசிகளால் மட்டுமே முடியும்.

இதற்கு மேல் உங்களுக்கு எப்படி விளங்கபடுத்துவது என்பது புரியவில்லை அண்ணை. கீறல் விழுந்த ரெக்கோர்ட் மாரி ஒண்டையே திரும்ப, திரும்ப சொல்கிறீர்கள்.

நாங்கள் எல்லா அழிவுகளுக்கும் கவலைப்படுகிறோம். உக்ரேன், மோல்டோவா, போலந்து, ஜேர்மன், பிரான்ஸ், யூகே என இது எம்மை, தனி மனிதர்களாக, குடும்பங்களாக, இனமாக நெருக்கும் என்பதால், இது நேட்டோவின் பிரசச்னை மட்டும் அல்ல, புலம் பெயர் ஐரோப்பிய தமிழ் இனத்தின் இருப்புக்கே ஆபத்தான விடயம் என்பதால், சுயநலமாக இதில் அதிக அக்கறை எடுக்கிறோம்.

அப்புட்டுத்தேன்🙏🏾

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kandiah57 said:

எழுதி இருப்பேன்....ஐயா ஆனால் அப்போது நான் எந்த இணைய தளத்திலும் அங்கத்துவம் பெற இல்லை மேலும் அந்த நேரம் விசைப்பலகையில் தட்டவும் எனக்கு தெரியாது மட்டுமல்ல கம்பூட்டருமில்லை  .....2003 ஆம் ஆண்டு இல்லையா?.   நாங்கள் எழுதி ஒரு சிறிய பூச்சி புழுக்கள் கூட சாகாத..🤣🙏 கவலை...கோபம்...கொள்ள வேண்டாம் 😂

உங்களுக்கு வீட்டு வேலை தரப்பட்டுள்ளது. கேட்டு இன்றைய உலகோடு ஒப்பிடுங்கள்.

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

அடிக்கடி இதை சொல்பவன் என்ற ரீதியில்.

நான் முன்பே எழுதியதை போல ஓடி வந்தவர் எல்லாம் ஓடி வந்தவர்தான்.

அதில் முன்னுக்கு வந்தவர் பின்னுக்கு வந்தவர் எண்ட வேறுபாடு இல்லை.

ஆனால் வாழ்ந்த அனுபவம் (lived experience)  83 தைப்பொங்கல் சீன வெடியோடு கிளப்பியவத்களுக்கு இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

ஏனையோர் அவலங்களை சந்தித்த போது, இவ்வாறு ஓடி வந்தோர் அதை கொக்கிளாய் கொப்பி, தவளைபாய்ச்சல் கொப்பி, ஓயாத அலைகள் கொப்பி எண்டு ரம்போ, கொமாண்டோ படங்கள் போல பார்த்த அனுபவத்தை மட்டுமே கொண்டிருந்தார்கள்.

யுத்தத்தின் அவலத்தை ஒரு போதும் சண்டை கொப்பி பார்த்து அறிய முடியாது அண்ணை.

இந்த அனுபவ குறைபாடு நிச்சயம் எழுத்திலும் கருத்திலும் தொனிக்கிறது.

ஒரு ரயில் விபத்தை - பெட்டியள் எல்லாம் சுக்கல் சுக்கலா கிடக்கு எண்டு ரசித்து எழுதமாட்டோம்.

ஆனால் உக்ரேனில் கற்குவியாலக கிடப்பது குடிமனைகள் என தெளிவாக தெரிந்த பின்னும், அதை சுட்டி பெருமிதமாக (இதில் என்ன பெருமிதம்) எழுதுவோம்.

வடிவாக அவதானித்து பாருங்கள், யாழ்களத்கில் ரஸ்ய ஆதரவு நிலை எடுத்த, ஊரில் அடி வாங்கியோர் கூட இப்படி எழுத மாட்டார்கள்.

ஏனென்றால் இப்படி ஒரு கற்குவியலுக்குள் இருந்து அவர்களும் எழும்பி வந்திருப்பதால்.

இதுதான் யுத்த வடுக்களை சுமந்தவர்களுக்கும், அதை பல்லாயிரம் மைலுக்கு அப்பால் இருந்து வீடியோ கொப்பியில் பார்த்தவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

எமக்கும் மானம் ரோசம் மனிதாபிமானம் எல்லாம் இருக்கின்றது. நாங்கள் ஜடங்கள் அல்ல.
எமக்கும் மனித அழிவுகளை பார்க்க,கட்டிடங்களின் அழிவை பார்க்க மிகுந்த கவலை வருகின்றதுதான்.இருந்தாலும் இவ்வளவு அழிவுகளை பார்த்த பின்னரும் மேற்குலகு ஏட்டிக்கு போட்டியாக ஆயுதங்களை கொடுக்கின்றனவே? அதன் பொருள் என்ன எவ்வளவு அழிவுகள் வந்தாலும் அடிபடுங்கள் நம் சார்பு வெல்ல வேண்டும் என்பது தானே அர்த்தம்.

மேற்குலகிற்கு இல்லாத  மனித அழிவு அக்கறை  இங்கே பலருக்கு திடீரென முளைத்ததுதான் ஆச்சரியம்.

எனக்கு பிரான்ஸ் மக்களை பிடித்ததிற்கான காரணம் இரண்டாம் உலகப்போரில் நாசிகளிடமிருந்து சமயோசிதமாக எவ்வித அழிவுகளும் இல்லாமல் தங்களை காப்பாற்றியதுதான்.

அழிவுகளை விரும்பாதவர்கள் ஏன் அந்த யுக்தியை கடைப்பிடிக்கவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இங்கே லைக் போட்டது உங்கள் நல்ல மனதுக்கு.

மற்றும்படி நீங்கள் சொல்லும் நிலை வர ஒவ்வொரு நாட்டிலும் புத்தர் ஜனாதிபதியாக, ஜேசு பிரதமராக வரவேண்டும்.

உலக வரலாறு வாள், துப்பாக்கி முனையில் தந்திரஙகளாலேயே நகர்கிறது. நகரும்.

இங்கே அணி சாராமல் நிற்கவே ஒரு அணியை அமைக்க வேண்டும்.

நீங்கள் கூறுவது உண்மைதான் 

ஆனால் நானும் நீங்களும் ஏன் குத்துப்பட வேண்டும்? என்ற மனநிலைதான் எனக்கு இருக்கிறது 
யாழ்களம் ஒரு கருத்துக்களம் என்பதால் எல்லோரும் அவர் அவர் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதே நன்று 
கருத்து பகிர்வை குறைத்தால் யாழ் சூனியமாகிவிடும் என்பதால் அதையும் முயற்சிக்க கூடாது. 

புடின் 
செய்வினை மட்டுமல்ல 
செயற்பாட்டு வினையும் என்பதே எனது தாழ்மையான நிலைப்பாடு.

ஹிட்லர் என்ற தனிநபர் அழிவை செய்யவில்லை தமது வேலை கடமை என்று எண்ணி 
செயல்பட்ட சாதாரண குடிமக்களே முன்னின்று அழிவை செய்தவர்கள். சாதாரண குடிகளின் ஒத்திசைவு 
என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால் .....நாம் சாதாரண குடிகள்தானே என்று  எல்லாவற்றையும் நாம் கடந்துகொண்டும் செல்ல முடியாது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, kalyani said:

உங்களுக்கு வீட்டு வேலை தரப்பட்டுள்ளது. கேட்டு இன்றைய உலகோடு ஒப்பிடுங்கள்.

இது ஒரு தேவையற்ற வேலை....மட்டுமல்ல அடிப்படை அறிவுயற்ற செயலும் கூட   ...இங்கே உங்களுக்கும்....எனக்கும் என்ன பிரச்சனை...அதாவது கருத்துகள் வேறுவேறனாவை   இது சாதரணமில்லையா. ? எனவே… அமைதி கொள்க.  .....நன்றி வணக்கம் 

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

கபிதன். ஒரு வருடத்திற்குள் நடந்த உண்மை சம்பவம் உலகம் முழுவதும் அனைத்து ஊடகங்களும் எழுதி இருக்கிறது...ரஷ்யா அதிபர்  புடின். ரஷ்யாவின் எதிர்கட்சி தலைவரை கூலி ஆள்களை நியமித்து கொலை செய்ய முயற்சித்தவர்.  நஞ்சு உணவுகள் கொடுத்து    அவர் மயங்கி விட்டார் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை எங்கள் நாட்டின் முன்னாள் பிரதமர் விடயம் அறிந்து உடன் தனி விமானம் மூலம் பேர்லின் கூட்டி வந்து ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் இங்கே இருந்தவர்   புட்டின் இடமளிக்கவில்லை. ரஷ்யாவில் மருத்துவம் செய்ய முடியும் என்று அடம்பிடித்தான்...இதை போல் இன்னும் பல விடயங்கள் எனக்கு தெரியும்.....எனவேதான் நீர்வேலியான் கருத்தை நான் வழிமொழிந்து உள்ளேன்....நீங்கள் புட்டினை எப்படி நினைத்தாலும் சரி அது உங்கள் இஸ்டம்.  😆

ஒன்றுமட்டும் நன்றாகப் புரிகிறது. 

Mainstream media க்களின் வல்லமை உலகின் அரைப்பங்கினரை அப்படியே கட்டிவைத்துள்ளமை நன்றாகத் தெரிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதற்கு மேல் உங்களுக்கு எப்படி விளங்கபடுத்துவது என்பது புரியவில்லை அண்ணை. கீறல் விழுந்த ரெக்கோர்ட் மாரி ஒண்டையே திரும்ப, திரும்ப சொல்கிறீர்கள்.

நாங்கள் எல்லா அழிவுகளுக்கும் கவலைப்படுகிறோம். உக்ரேன், மோல்டோவா, போலந்து, ஜேர்மன், பிரான்ஸ், யூகே என இது எம்மை, தனி மனிதர்களாக, குடும்பங்களாக, இனமாக நெருக்கும் என்பதால், இது நேட்டோவின் பிரசச்னை மட்டும் அல்ல, புலம் பெயர் ஐரோப்பிய தமிழ் இனத்தின் இருப்புக்கே ஆபத்தான விடயம் என்பதால், சுயநலமாக இதில் அதிக அக்கறை எடுக்கிறோம்.

அப்புட்டுத்தேன்🙏🏾

இந்த கருத்துடன்  நான் பூரணமாக உடன்பாடுகிறேன்.   ஜேர்மனியில் இருந்து கொண்டு....அவர்களால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற....வீட்டு வசதி வேலைவாய்ப்பு...கல்வி மருத்துவம்....பாதுகாப்பு இது போன்ற மேலும் பல வசதிகளை பெற்றுக் கொண்டு   ஜேர்மனியை விமர்சனம் செய்ய விரும்பவில்லை...ஒரு சில பிழைகள் இருக்கலாம்   அவை புறக்கணிக்கதக்கவை...எனக்கு மேற் சொன்ன வசதிகளை புட்டின் ஒருபோதும் தரப்போவதில்லை.......இங்கே புட்டினை ஆதரிப்பவர்களுக்கும்.  அவர் எதுவும் செய்ய போவதில்லை   2036 ஆம் ஆண்டு வரை  பதவி வகிக்கதக்கதாக. ஒரு நாட்டின் அரசியல் அமைப்பையே மாற்றி அமைத்தவர்.  எல்லாம் ஒரு தலைவர்.....?

7 minutes ago, Kapithan said:

ஒன்றுமட்டும் நன்றாகப் புரிகிறது. 

Mainstream media க்களின் வல்லமை உலகின் அரைப்பங்கினரை அப்படியே கட்டிவைத்துள்ளமை நன்றாகத் தெரிகிறது. 

நான் எழுதிய சம்பவம் நடந்தா.?..இல்லையா  ?புட்டினை பற்றி எழுதுங்கள் பார்ப்போம்    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kandiah57 said:

இந்த கருத்துடன்  நான் பூரணமாக உடன்பாடுகிறேன்.   ஜேர்மனியில் இருந்து கொண்டு....அவர்களால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற....வீட்டு வசதி வேலைவாய்ப்பு...கல்வி மருத்துவம்....பாதுகாப்பு இது போன்ற மேலும் பல வசதிகளை பெற்றுக் கொண்டு   ஜேர்மனியை விமர்சனம் செய்ய விரும்பவில்லை...ஒரு சில பிழைகள் இருக்கலாம்   அவை புறக்கணிக்கதக்கவை...எனக்கு மேற் சொன்ன வசதிகளை புட்டின் ஒருபோதும் தரப்போவதில்லை.......இங்கே புட்டினை ஆதரிப்பவர்களுக்கும்.  அவர் எதுவும் செய்ய போவதில்லை  

எப்படி எப்படி உங்களுக்கு இந்த நன்றி விசுவாசம் பொங்கி வழியுது?
அப்படி பார்க்கப்போனால்.......
சிறிலங்கா இனவாத அரசு உங்களுக்கெல்லாம் இறுதிவரைக்கும் இலவச கல்வி இலவச மருத்துவம்  இலவச  கூப்பன் உணவுகள் வரியில்லா வாழ்க்கை என வளர்த்து ஆளாக்கி விட்டதல்லவா? அதற்கு ஏதாவது நன்றிக்கடன் அல்லது விசுவாசமாக இருக்கின்றீர்களா? 

நீங்கள் மானாட மயிலாட அபிமானிதானே? 🤣

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Kandiah57 said:

நான் எழுதிய சம்பவம் நடந்தா.?..இல்லையா  ?புட்டினை பற்றி எழுதுங்கள் பார்ப்போம்    

அதில் எத்தனை விகிதம் உண்மையான செய்தி? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2022 at 01:19, Kapithan said:

அதில் எத்தனை விகிதம் உண்மையான செய்தி? 

உண்மை இல்லை என்று தெரியுமா?. .  ஆதாரம் தரவும்.  ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2022 at 01:08, குமாரசாமி said:

எப்படி எப்படி உங்களுக்கு இந்த நன்றி விசுவாசம் பொங்கி வழியுது?
அப்படி பார்க்கப்போனால்.......
சிறிலங்கா இனவாத அரசு உங்களுக்கெல்லாம் இறுதிவரைக்கும் இலவச கல்வி இலவச மருத்துவம்  இலவச  கூப்பன் உணவுகள் வரியில்லா வாழ்க்கை என வளர்த்து ஆளாக்கி விட்டதல்லவா? அதற்கு ஏதாவது நன்றிக்கடன் அல்லது விசுவாசமாக இருக்கின்றீர்களா? 

 🤣

செகிட்டப்பொத்தி ஒரே அடி... கந்தையாண்ணை காலி...🤣

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.