Jump to content

அன்று போல் என்தீவு வேண்டும்!


Recommended Posts

என் அன்பு யாழ்  இதயங்களுக்கு..

பல ஆண்டுகள் நான் நாட்டை விட்டு புலம்பெயர்து வாழ்ந்தாலும்  இன்றும் என்னுக்குள் அன்றைய

 எனது ஊரின் நினைவுகள்தான் இனிமை தருகிறது.

இதேபோல் உங்கள் ஊர்களையும் நினைத்துப் பார்க்க இந்த சிறு கவிதை உதவினால் எனக்கு மகிழ்ச்சியே.

large.1384522503_Schermafbeelding2020-10-10om12_47_17.png.0c777f6d676dd38919367d65f1d7ea6c.png

அன்றுபோல் என் தீவு வேண்டும்

************************

அம்மாவின் அன்பு வேண்டும்

அப்பாவின் கருணை வேண்டும்

பனை தென்னை உணவு வேண்டும்

பாசத்தின் உறவு வேண்டும்

 

பனம் பாளைக் கள்ளு வேண்டும்-ஓலை

பாய்தன்னில் உறங்க வேண்டும்

கூள் காச்சிக் குடிக்க வேண்டும்

கொண்டாடி மகிழவேண்டும்.

 

உரல் இடித்து சம்பல் வேண்டும்

ஒடியல் பிட்டு  கலந்து வேண்டும்

மண்சட்டி சமையல் வேண்டும்-அந்த

மகிழ்வான பொழுது வேண்டும்.

 

வெடி கொளுத்தும் பொங்கல் வேண்டும்

கிறிஸ்மஸ் தாத்தா..

வீட்டுக்கு வரவும் வேண்டும்

அயலவர்கள் கூட வேண்டும்-பழய

அன்பு மழை பொழிய வேண்டும்

 

வெளிநாட்டில் வாழும் போதும்-ஊர்

விட்டு வந்த நினைவே தோன்றும்

அழகான என்னூர் போல-இந்த

அகிலத்தில் நான் கண்டதில்லை.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அன்றுபோல் என் தீவு வேண்டும்

 இழந்த சொர்க்கம் மீண்டும் வேண்டும் .

 

அழகான கவி வரிகள் . நியாயமான ஆசை 

 • Like 1
Link to comment
Share on other sites

On 23/4/2022 at 18:46, நிலாமதி said:

அன்றுபோல் என் தீவு வேண்டும்

 இழந்த சொர்க்கம் மீண்டும் வேண்டும் .

 

அழகான கவி வரிகள் . நியாயமான ஆசை 

நன்றி  நிலாமதி அக்கா

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இன்று எனது நண்பன் மகனை பாடசாலையில் இருந்து வீட்டுக்கு ஏற்றி வரும்போது வழியில் மோட்டார் சைக்கிளில் பெற்றோல் முடிந்து தள்ளிக்கொண்டு நடந்து வந்தவர்களாம், வெயில் சுட்டு மகனுக்கு காய்ச்சல். அவருடைய மனைவி தாதியாக பணிபுரிகிறார், வேலை முடிந்து தெல்லிப்பளையில் இருந்து யாழ் சென்று அங்கிருந்து ஊர் வந்து சேர 8.30 மணி.
  • 👉  https://www.facebook.com/100011887622942/videos/pcb.1260715901001319/716987792866361 👈 சிங்கள மக்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என பாராளுமன்றத்தில் இனவாதம் பேசியவரை... சிங்கள மக்களே தெருவில் துரத்தும் காட்சி...   முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு நடுவிரல் காட்டி, தகாத வார்த்தைகளால் பேசி... விரட்டியடிக்கும் சிங்கள மக்கள்...   சுப்ரமணிய பிரபா
  • ஓபிஎஸ் Vs இபிஎஸ்: அதிமுக எம்ஜிஆர் உயில் என்ன சொல்கிறது? இரட்டை இலைக்கு சிக்கல் வருமா? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர்   பட மூலாதாரம்,GETTY IMAGES அ.தி.மு.கவில் உள்கட்சி மோதல் வலுவடைந்துள்ள நிலையில், 'உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான சின்னத்தில் யார் கையொப்பமிடுவார்கள்?' என்ற கேள்வி எழுந்துள்ளது. ' தேர்தல் ஆணையத்தில் முறையிட்டால், சின்னத்துக்குச் சிக்கல் வரும் என்ற அச்சத்தில் இரண்டு தரப்புமே தேர்தல் ஆணையத்தை அணுகவில்லை' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 510 பதவிகள் தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு வரும் ஜூலை மாதம் 9 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், ' 498 ஊரக உள்ளாட்சிப் பதவிகள், 12 நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகள் என 510 பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல், ஜூன் 20 ஆம் தேதி தொடங்கி 27 அன்று முடிவடைய உள்ளது. வேட்புமனுக்களை ஜூன் 30 ஆம் தேதிக்குள் திரும்பப் பெறலாம். இதனைத் தொடர்ந்து ஜூலை 9 ஆம் தேதி வாக்குப் பதிவு நடத்தப்பட்டு ஜூலை 12 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் நிர்வாகிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் உள்பட 34 பணியிடங்களுக்கு கட்சி சார்பில் தேர்தல் நடைபெற உள்ளது. இவர்களுக்கு சின்னத்தை ஒதுக்கீடு செய்யும் ஏ படிவம், பி படிவம் ஆகியவற்றில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையொப்பமிட வேண்டும். இவ்விரு பதவிகளும் காலாவதியாகவிட்டதாக கூறப்படுவதால், 'யார் கையொப்பமிடுவார்கள்?' என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இரட்டை இலைச் சின்னம் கிடைக்குமா? இதுதொடர்பாக, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும் வழக்குரைஞருமான பாபு முருகவேலிடம் பிபிசி தமிழுக்காக கேட்டபோது, ''இதுதொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வருகின்ற இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம். இதுதொடர்பாக, விரைவில் தகவல் வெளியிடப்படும்'' என்கிறார். 'ஓபிஎஸ் அனுதாப அரசியல் செய்கிறாரா?' - அவரது பயணம் பலனளிக்குமா? அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வம் தன் ஆதரவை இழந்தது எப்படி? இதையடுத்து, இரட்டை இலை சின்னம் தொடர்பாக பிபிசி தமிழுக்காக பேசிய மூத்த பத்திரிகையாளர் தி.சிகாமணி, ''அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதால் சின்னத்தில் கையொப்பமிட இரு தரப்புக்குமே அதிகாரம் இல்லை. அதுவரையில், இடைக்காலமாக சின்னத்தைப் பயன்படுத்துவார்களா எனத் தெரியவில்லை. இந்தப் பிரச்னையில் ஓ.பி.எஸ் தரப்பினர் நீதிமன்றம் செல்லவே வாய்ப்பு உள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் என்பது சிறிய அளவில் உள்ளதால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடவும் வாய்ப்புகள் உள்ளன'' என்கிறார். மேலும், ''தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கை ஓங்கியிருப்பதால், சின்னம் தொடர்பாக அவரே முடிவெடுக்கலாம். பொதுக்குழுவை கூட்டுவதற்கு அவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது எனக் கூறுவதால் அதன் அடிப்படையில் முடிவெடுப்பார்கள்'' என்கிறார். அச்சத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்? அதேநேரம், தேர்தல் ஆணையத்தை அணுகினால் சின்னம் முடங்கிவிடும் என்ற அச்சத்தில் இரு தரப்பும் உள்ளதாகக் குறிப்பிடுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். இதுதொடர்பாக பிபிசி தமிழுக்காக பேசிய அவர், ''சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் இவர்கள் சென்றால், யாராவது ஒருவருக்கு சின்னத்தைக் கொடுப்பதற்கு பா.ஜ.க முயன்றால் சின்னத்துக்கு சிக்கல் ஏற்படும். இதனை யூகத்தின் அடிப்படையில் கூறுகிறேன். இந்த விவகாரத்தில் தேர்தல் உடனே ஆணையம் முடிவெடுப்பதற்கும் வாய்ப்பில்லை. குறிப்பாக, 'ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு சின்னம் இல்லை' எனக் கூறுவதற்கு வாய்ப்புள்ளது. அதற்குப் பயந்து கொண்டே இரண்டு தரப்பும் தேர்தல் ஆணையத்தை அணுகவில்லை. காரணம், சின்னம் முடங்கியதாகத் தகவல் வெளியானால் அது தொண்டர்களை காயப்படுத்திவிடும். 'நீங்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டு சின்னத்தை எப்படி முடக்கலாம்?' என்ற கேள்வி வரும்'' என்கிறார்.   பட மூலாதாரம்,FB/ OPANNEERSELVAM தொடர்ந்து பேசிய ஷ்யாம், '' அ.தி.மு.கவில் சிக்கல்கள் ஏற்பட்டால், அதனை எப்படிக் களைவது என்பதற்கான தீர்வை அ.தி.மு.க முன்னாள் பொதுச் செயலாளர் எம்.ஜி.ஆர் முன்வைத்துள்ளார். அவர் எழுதிய உயிலின் நகல் என்னிடம் உள்ளது. எம்.ஜி.ஆர் மறைந்த 16 ஆவது நாளில் தலைமைக் கழகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதற்கு வி.என்.ஜானகி ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் கூட்டத்தில் இந்த உயிலை என்.சி.ராகவாச்சாரி வாசித்தார். எம்.ஜி.ஆர் உயில் சொல்வது என்ன? 23 பக்கங்கள் உள்ள அந்த உயிலில், பல விஷயங்களை எம்.ஜி.ஆர் சொல்கிறார். குறிப்பாக, 'என்னுடைய சத்யா ஸ்டூடியோ பங்கு உள்பட அனைத்தையும் கட்சியின் நிர்வாகச் செலவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். கட்சி பிளவுபட்டாலோ, கலைக்கப்பட்டாலோ கட்சியின் தற்போதைய 80 சதவீத அங்கத்தினர்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ, அவர்கள்தான் கட்சி' என்கிறார். அதாவது, 'கட்சியின் அடிப்படை உறுப்பினர்களில் 80 சதவீதம் பேர்' என்பதுதான் எம்.ஜி.ஆர் ஃபார்முலா. இந்த விவகாரத்தில் அ.தி.மு.கவின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை அவர் கூறவில்லை. இந்த உயிலை வாசிக்கும்போது அவைத் தலைவராக வள்ளிமுத்து இருந்தார். கட்சியின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் குறித்த எந்தப் பேச்சும் அந்த உயிலில் இல்லை. அடிப்படை உறுப்பினர்களில் 80 சதவீதம் பேர் யார் பக்கம் என்ற அடிப்படையில்தான் இவர்கள் முடிவெடுக்க முடியும். 'என் பக்கம், உன் பக்கம்' என எந்த அடிப்படையில் தற்போதுள்ளவர்கள் பேசுகிறார்கள் எனத் தெரியவில்லை. தவிர, எம்.ஜி.ஆர் உயில் என்பது வெளிப்படையான ஆவணம். 'என்.சி.ராகவாச்சாரியும் அவரது மருமகனும் இறந்துவிட்டால் நீதிமன்றமே இந்த உயிலை செயல்படுத்த வேண்டும்' எனவும் எம்.ஜி.ஆர் கூறியுள்ளார்'' என்கிறார். '' உயிலில் உள்ள 'தற்போதைய' என்ற காலகட்டத்தை தற்போதுள்ள சூழலோடு பொருத்திக் கொள்ளலாம். பொதுவாக உயிலில் சொத்தைப் பற்றித்தான் பலரும் எழுதுவார்கள். ஆனால், கட்சியைப் பற்றி எம்.ஜி.ஆர் எழுதுவதற்குக் காரணம் அவரது சொத்தான சத்யா ஸ்டூடியோவை கட்சிக்குக் கொடுத்ததால்தான். அவரது சொத்துக்களை அனுபவிப்பவர்கள், அவர் சொன்னதையும் நடைமுறைப்படுத்த வேண்டும். சத்யா ஸ்டூடியோவின் இன்றைய மதிப்பு என்பது 200 கோடி ரூபாயைத் தாண்டும். எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் எம்.ஜி.ஆருக்கு சொந்தமான அலுவலகத்தில் அமர்ந்துதான் பேசுகிறார்கள்.   கபடி விளையாட்டும் உப்புக் கோடும் இதுபோன்ற சிக்கலான நேரங்களில், 1987 ஆம் ஆண்டு அ.தி.மு.கவின் உறுப்பினர்கள் பட்டியலை எடுப்பதைவிடவும் ஜெயலலிதா மறைந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உள்ள அ.தி.மு.கவின் உறுப்பினர்கள் பட்டியலை வைத்து முடிவு செய்யலாம். இதுதொடர்பாக, அ.தி.மு.க தொண்டர்களை வாக்களிக்க வைத்து, 'யார் பக்கம் அதிக உறுப்பினர்கள் உள்ளனர்?' என்பதை முடிவு செய்யலாம்'' என்கிறார் ஷ்யாம். ''ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சின்னம் பிரச்னைக்கு தற்காலிகத் தீர்வை அ.தி.மு.க நிர்வாகிகள் கொடுப்பதற்கு வாய்ப்புள்ளதா?'' என்றோம். '' அதற்கு வாய்ப்புள்ளது. இரட்டை இலைச் சின்னம் என்பது முக்கியம். இலை இல்லாவிட்டால் அ.தி.மு.கவே முடங்கிப் போனதாகத்தான் அர்த்தம். தற்போதுள்ள நிலையில் கட்சியில் இருந்து ஒருவரை நீக்கினாலும் அதைப் பற்றி வெளியில் சொல்ல மாட்டார்கள். அவ்வாறு வெளியில் கூறிவிட்டால் இன்னொரு நபர் தேர்தல் ஆணையம் செல்வதற்கு வாய்ப்புள்ளது'' என்கிறார். ''அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நடந்த கூட்டம் செல்லாது என ஓ.பி.எஸ் கூறியுள்ளது எடுபடுமா?'' என்றோம். '' கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பற்றி யாரும் வெளியில் கூறவில்லை. இரண்டு தரப்பும் கபடி விளையாட்டில் உள்ள உப்புக் கோடு நிலையில்தான் உள்ளனர். அந்தக் கோட்டைத் தாண்ட முடியாத அவஸ்தையில்தான் இரு தரப்பினரும் உள்ளனர்'' என்கிறார். https://www.bbc.com/tamil/india-61953774
  • தொழிலாளி, விவசாயி, குடும்பத்தலைவி,  அத்தியாவசிய உத்தியோகத்தர்கள்  எல்லாரும் மணிக்கணக்காக, வரிசையில் நின்றால்... நாடு முடங்கும் தானே. 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.