Jump to content

எழுத்தாளனை காதலிப்பது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
 
ஜெயமோகனுடனான காதல் அனுபவம் பற்றி அருண்மொழி நங்கை எழுதிய அழகிய கட்டுரையைப் படித்தேன். 
 
இது இயல்பாக ஏற்படுவது தான், பெண்களை ஒரு எழுத்தாளன் தன் எழுத்தை, ஆளுமையை வைத்து கவர்வது ஆச்சரியமான ஒன்றல்ல. அபெண் வாசிக்கக் கூடியவளாக, ரொம்ப எழுதாதவளாக, களங்கமற்ற மனம் கொண்டவளாக இருந்தால், இன்னொரு பக்கம் அந்த எழுத்தாளன் அறியப்பட்டவனாக, வலுவான ஆளுமை, தன்னம்பிக்கை, உணர்வுவயப்பட்ட இயல்பு கொண்டவனாக இருந்தால் போதும். எல்லாரிடம் இருந்து ஒதுங்கி எழுத்தில் ஈடுபடுகிற எனக்கே அப்படி மூன்று காதல் அனுபவங்கள் உள்ளன. 
 
எழுத்தாளன் மீதான ஈர்ப்பு என்பது உறவின் முதற்படி மட்டுமே. பெரும்பாலும் அப்பெண்கள் அடுத்தடுத்த மாதங்கள், வருடங்களில் அவனது படைப்புகளை பொருட்படுத்த மாட்டார்கள், ஆனால் பேச்சை, நடவடிக்கைகளை, ஆளுமையை மட்டும் ரசிப்பார்கள். அப்படியே நகர்ந்து நகர்ந்து அவன் வெறும் ஆணாகவும் அவள் வெறும் பெண்ணாகவும் எஞ்சுவார்கள் என நினைக்கிறேன். (விதிவிலக்குகளும் உண்டு.)
 
இதில் கவிஞர்கள் ஒரு தனிவகை - ஓரளவுக்கு சமூகமாக்கல் செய்பவர்கள் எனில் வருடத்திற்கு சில காதல்களாவது வெற்றிகரமாக அவர்களுக்கு நிகழும். ஒரு கவிஞருக்கு மாதம் சில காதல்களாவது மரக்கிளையில் இருந்து மலர்கள் உதிர்வதைப் போல மடியில் வந்து விழுந்தபடி இருப்பதைக் கண்டிருக்கிறேன். 
 
கட்டுரையாளர்கள் தாம் பாவம் என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள். அவர்களும் - புரிகிற மாதிரி எழுதுகிறவர்கள், பேசுபவர்கள் எனில் - சக்கை போடு போடுகிறார்கள்.
 
 மொழியின் தளத்தில் இயங்குவதால் கிடைக்கும் ஒரு அனுகூலம் இது. பணம் படைத்த அழகான ஆண்கள் மீது போன்றே அறிவும் கற்பனையும் படைத்தவர்கள் மீதும் பெண்களுக்கு ஒரு மனச்சாய்வு உண்டென நினைக்கிறேன். ஏனெனில் இவர்கள் பெண்களின் மனவுலகை விகாசிக்க வைக்கிறார்கள்.
 
இதை பல எழுத்தாளர்கள் வெளியே சொல்ல மாட்டார்கள் என்பது வேறு விசயம்.
 
என்னுடைய ஒரு சந்தேகம் அசோகமித்திரனை இப்படி யாராவது காதலித்திருப்பார்களா?
  • Like 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2022 at 19:20, ஏராளன் said:

 

 
என்னுடைய ஒரு சந்தேகம் அசோகமித்திரனை இப்படி யாராவது காதலித்திருப்பார்களா?
Posted 9 hours ago by ஆர். அபிலாஷ்
 

எனக்குத் தெரியாது.....சிலநேரம் பயில்வானுக்கு தெரிந்திருக்கலாம்.......!   🤔

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

எனக்குத் தெரியாது.....சிலநேரம் பயில்வானுக்கு தெரிந்திருக்கலாம்.......!   🤔

பயில்வான் ரங்கநாதனையா சொல்கிறீர்கள்?
அவருக்கு சினிமாவில் நடக்கும் கிசுகிசு தான் தெரியும் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

எனக்குத் தெரியாது.....சிலநேரம் பயில்வானுக்கு தெரிந்திருக்கலாம்.......!   🤔

 

17 minutes ago, ஏராளன் said:

பயில்வான் ரங்கநாதனையா சொல்கிறீர்கள்?
அவருக்கு சினிமாவில் நடக்கும் கிசுகிசு தான் தெரியும் என நினைக்கிறேன்.

 

பயில்வான் ரங்கநாதன் சாதாரண ஆள் இல்லை… புகார் கொடுக்க தயங்கும் நடிகர்கள் ! |  The Tamil film industry is scared to Bayilvan Ranganathan - Tamil Filmibeat

 

அட… பயில்வான் ரங்கநாதனுக்கும், யாழ். களத்தில் ஒரு ரசிகர்கள் இருக்கிறார்கள். 😂

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

Mmm.. எழுத்தாளனை காதலிப்பது என்பது அவரது எழுத்துகளை/எண்ணங்களை அது அரசியலாக இருக்கலாம் அல்லது சமூகம் சார்ந்ததாக இருக்கலாம் அல்லது கற்பனை கதைகளாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் அதில் அதிகம் தலையிடாமல் இருந்தால் எழுத்தாளனைக் காதலிப்பது கடினம் இல்லை😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் வாழ்க்கையில் காதல் வரும் . அது எழுத்தாளனாக   இருந்தாலும் சரி  எவராக இருந்தாலும் சரி. அவரவர் தனிப்பட்ட்  விருப்பம். (நானும் அவரது காதல் கதையை வாசித்திருந்தேன்) 

"என்னுடைய ஒரு சந்தேகம் அசோகமித்திரனை இப்படி யாராவது காதலித்திருப்பார்களா?"
Posted 9 hours ago by ஆர். அபிலாஷ்

 இது  அபிலாஷின்  கருத்து . இது யாழ்களத்துக்கு தேவையற்ற பதிவு என்றே எண்ணுகிறேன். 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.