Jump to content

தமிழ்நாடு வந்த இலங்கை அகதிகள்: “ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ. 1,000க்கு விற்றால் எப்படி வாழ்வது?”


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு வந்த இலங்கை அகதிகள்: “ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ. 1,000க்கு விற்றால் எப்படி வாழ்வது?”

5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

தமிழகம் வந்தவர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கையில் இருந்து 60 இலங்கை தமிழர்கள்; தமிழகத்திற்கு வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை 9 மாத கை குழந்தை உட்பட 5 குடும்பத்தை சேர்ந்த மேலும் 15 பேர் தனுஷ்கோடி வந்துள்ளனர்.

இலங்கை உள்நாட்டுப் போரின்போது இலங்கைத் தமிழர்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றி கொள்ள அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழ்நாட்டுக்கு வந்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ளனர். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டின் தனுஷ்கோடி மிக அருகில் இருப்பதே இதற்குக் காரணம்.

அதேபோல் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இலங்கை தமிழர்கள் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் உள்ள தீவிர கண்காணிப்பையும் மீறி ஃபைபர் படகுகளில் தனுஷ்கோடிக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவு கடற்கரையில் இருந்து ஒரு ஃபைபர் படகுகளில் யாழ்ப்பாணம் மாவட்டம் ஆணைக்கோட்டம் மற்றும் காக்கா தீவை சேர்ந்த யோகன், மாலா, கதிரமலை, ஜெயராம், பேபி ஷாலினி என 9 மாத கை குழந்தை உட்பட 5 குடும்பத்தை சேர்ந்த 15 இலங்கை தமிழர்கள் திங்கட்கிழமை அதிகாலை 3 மணி அளவில் தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர் கோவில் கடற்கரையில் வந்து இறங்கினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மரைன் போலீசார் அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்த பிபிசி தமிழிடம் பேசிய யோகன், 'இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தற்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை கடுமையாக உயர்ந்துள்ளது.'

 

தமிழகம் வந்தவர்கள்

'ஒரு கிலோ பச்சை மிளகாய் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதால் எப்படி வாங்கி சாப்பிட முடியும். மருத்துவ பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை. தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் காய்ச்சல், தலை வலிக்கு 4 ஆயிரம் வரை வசூல் செய்கிறார்கள்.'

"இலங்கையில் தற்போது உள்ள நிலை நீடித்தால் இலங்கையில் பட்டினி சாவு ஏற்பட்டு அனைவரும் உயிரிழக்க நேரிடும். எனவே உயிரை காப்பாற்றிக் கொள்ள தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்தோம்," என இலங்கை தமிழர் யோகன் தெரிவித்தார்.

விசாரணைக்குப் பின் இந்த 15 பேரும் மண்டபம் அகதி முகாமில் ஒப்படைக்கபட்டார்கள்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடங்கியது முதல் மார்ச் 22 முதல் இன்று வரை 75 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/india-61216375

Link to comment
Share on other sites

இவைகள் இந்தியா போன காசுல சும்மா இருக்கிற நிலத்திலேயே  ஏன் 10 கண்டு நட  இயலாது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, lusu said:

இவைகள் இந்தியா போன காசுல சும்மா இருக்கிற நிலத்திலேயே  ஏன் 10 கண்டு நட  இயலாது

எல்லாம் நீண்ட கால திட்டமிடல்..

3 hours ago, lusu said:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, lusu said:

இவைகள் இந்தியா போன காசுல சும்மா இருக்கிற நிலத்திலேயே  ஏன் 10 கண்டு நட  இயலாது

 

அது அவர்கள் தொழில் இல்லைப்போல....😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

அது அவர்கள் தொழில் இல்லைப்போல....😁

கிழக்கு மாகாணத்தில் இருந்து யுத்தத்தால் இடம்பெயர்ந்து வடக்கு நோக்கி வந்த விவசாயிகளுக்கு நிலம் இல்லாமல் போனதால் நாளடைவில் அவர்கள் வேறு தொழில்களுக்குப் மாறிவிட்டன்ர். 

இந்தியாவை நோக்கி சென்றவர்களில் பெரும்பங்கினர் இவர்களே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

கிழக்கு மாகாணத்தில் இருந்து யுத்தத்தால் இடம்பெயர்ந்து வடக்கு நோக்கி வந்த விவசாயிகளுக்கு நிலம் இல்லாமல் போனதால் நாளடைவில் அவர்கள் வேறு தொழில்களுக்குப் மாறிவிட்டன்ர். 

இந்தியாவை நோக்கி சென்றவர்களில் பெரும்பங்கினர் இவர்களே. 

அங்கு குத்தகைக்கு  நிலம் எடுத்து விவசாயம் செய்யக்கூடிய நிலை இன்றும் உண்டு.

அந்தக்காலம் தொடக்கம் வசதி உள்ளவனுக்கும் வசதி இல்லாதவனுக்கும் முயற்சி இருந்தது.இன்று அது இல்லை. 
பச்சைமிளகாய் அவசியமுமில்லை.😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அங்கு குத்தகைக்கு  நிலம் எடுத்து விவசாயம் செய்யக்கூடிய நிலை இன்றும் உண்டு.

அந்தக்காலம் தொடக்கம் வசதி உள்ளவனுக்கும் வசதி இல்லாதவனுக்கும் முயற்சி இருந்தது.இன்று அது இல்லை. 
பச்சைமிளகாய் அவசியமுமில்லை.😁

(என்னுடைய நடை.ஒறை அனுபவத்தைக் கூறினேன்.)

பெட்டி படுக்கையுடன் ஓடி வந்தவர்களிடம் குத்தகைக்கு கொடுப்பதற்கு என்ன  இருக்கப்போகிறது. 1990ல் இருந்து இவற்றை நடைமுறையில் பார்த்துள்ளேன். 

அதுதவிர, என்னுடைய சொந்த உறவினர்களுக்கே இங்கிருந்துதான் தென்னை வை , முருங்கை வை என்று சொல்ல வேண்டி இருக்கிறது. எனது நண்பன் தனது  மைத்துனருக்கு tractor வாங்கி கொடுத்துவிட, அதற்கு அவர் நாளாந்தம் கழுவிப் பூசை செய்கிறாரே தவிர வயலில் இறங்கக் காணோம். 

முயற்சி இன்று எங்கள் மக்கள்  மத்தியில் அறவே அழிந்துவிட்டது. 

Edited by Kapithan
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்பத்தி மூன்றாமாண்டு கொழும்பில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு வந்த நம்ம மலையக சகோதரர்கள் வன்னியில் விவசாயம் செய்து முன்னேறி இருப்பதை, நாம் இடம்பெயர்ந்து வாழ்ந்த காலத்தில் கண்டு கேட்டறிந்துள்ளேன். அந்தக்காலத்தில் காந்தீயம் சிலருக்கு உதவியதாக கூறினார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

எண்பத்தி மூன்றாமாண்டு கொழும்பில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு வந்த நம்ம மலையக சகோதரர்கள் வன்னியில் விவசாயம் செய்து முன்னேறி இருப்பதை, நாம் இடம்பெயர்ந்து வாழ்ந்த காலத்தில் கண்டு கேட்டறிந்துள்ளேன். அந்தக்காலத்தில் காந்தீயம் சிலருக்கு உதவியதாக கூறினார்கள்.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களில் அனேகர் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள். அவர்களின் வெற்றிடம் இன்னும் நிரப்பபப்படவில்லை. அதனால் வன்னியில் அனேக நிலங்கள் பயன்படுத்தப்படாமல் அழிந்துவருகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2022 at 22:57, lusu said:

இவைகள் இந்தியா போன காசுல சும்மா இருக்கிற நிலத்திலேயே  ஏன் 10 கண்டு நட  இயலாது

 

எங்கே நீங்கள் 10 கன்றை வைத்து  படம் போட்டுக்காட்டுங்கள் பார்ப்பம் இங்கே ஒரு மூடை பசளை ,எண்ணெய்  விலை அடிக்கடி ஏற்படும் நோய்களுக்கு விவசாயத்தை கைவிட்டவர்கள் அதிகம் ( வேளாண்மை )  இதையெல்லாம் யோசிக்க மாட்டீர்களா என்ன?

On 26/4/2022 at 03:43, குமாரசாமி said:

அது அவர்கள் தொழில் இல்லைப்போல....😁

என்ன குமாரசாமி அண்ணை நீங்களுமா  😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எங்கே நீங்கள் 10 கன்றை வைத்து  படம் போட்டுக்காட்டுங்கள் பார்ப்பம் இங்கே ஒரு மூடை பசளை ,எண்ணெய்  விலை அடிக்கடி ஏற்படும் நோய்களுக்கு விவசாயத்தை கைவிட்டவர்கள் அதிகம் ( வேளாண்மை )  இதையெல்லாம் யோசிக்க மாட்டீர்களா என்ன?

வீட்டுத்தோட்டம் செய்ய இயற்கையான பசளை சிறந்தது.
கத்தரிக்காயிலை புழு கூடுகட்டினாலும் அந்த கத்தரிக்காய் சுத்தமானது சுகாதாரமானது. 😁

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

என்ன குமாரசாமி அண்ணை நீங்களுமா  😏

தோட்டம் செய்யிறதும் கொஞ்சம் மரியாதை இல்லாத தொழில் கண்டியளோ 😂

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.