Jump to content

மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்

சரியாகப் 12 வருடங்கள், 10 மாதங்கள், 9 நாட்களுக்கு முன்னர் ஈழத்தமிழினம் தனது சரித்திரத்தில் மிகப்பெரும் மனித அழிவைச் சந்தித்தது. தீவிர பெளத்த இனவாத அரசின் தலைமையில் மொத்த சிங்களத் தேசமும் அதன் ராணுவமும் உருவேற்றப்பட்டு 2006 ஆம் ஆண்டு, ஆடி 26 ஆம் திகதி தமிழர் மீதான இனக்கொலை யுத்தம் தொடங்கப்பட்டது.

கிழக்கில் சிங்கள விவசாயிகளுக்கான நீர் வழங்கலை புலிகள் தடுக்கிறார்கள் என்கிற காரணத்தை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட தமிழினம் மீதான இனக்கொலை யுத்தம் 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 18 ஆம் திகதி கொடூரமான இரத்தக் குளியலுடன் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது.

இனக்கொலை யுத்தத்தினைத் தொடங்கும் நடவடிக்கைகளில் முதலாவதாக தனது திட்டம் வெளியுலகிற்குத் தெரியாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய சிங்களம், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பணியாற்றிவந்த சர்வதேசத் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களுக்கு "உங்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தரமுடியாது" எனும் மிரட்டலினை விடுத்து ஒரே நாளில் அவர்களை அங்கிருந்து வெளியேற்றியது. பின்னர், சர்வதேசச் செய்தியாளர்கள் எவரும் யுத்தம் நடைபெறும் பகுதிக்குச் செல்லமுடியாதெனும் கட்டளையினை விடுத்து விரியவிருக்கும் கொலைக்களத்திலிருந்து உண்மைச் செய்திகள் வெளியே கசிவதை அது தடுத்துக்கொண்டது. சர்வதேசத்தையும், உள்நாட்டுச் சிங்களவர்களையும் ஏமாற்றும் நோக்கில் தமிழினம் மீது தான் நடத்தத் திட்டமிட்டிருந்த இனவழிப்பிற்கு " மனிதாபிமான மீட்பு நடவடிக்கை" என்று பேர்சூட்டிக்கொண்டது. 

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் மாவட்ட அரச அதிபர்களின் கணிப்பீட்டின்படி உள்ளே தஞ்சம் அடைந்திருந்த மக்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து இருபதினாயிரம் என்றிருக்க, அவ்வெண்ணிக்கையினை வேண்டுமென்றேகுறைத்து மதிப்பிட்டு வெறும் எழுபதினாயிரம் மட்டுமே என்று சர்வதேசத்தை ஏமாற்றி வந்தது. ஆனால், தான் வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்ட எண்ணிக்கையான 70,000 மக்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களை அனுப்பிவைப்பதற்குப் பதிலாக வெறும் ஒரு நாளைக்கு மட்டுமே போதுமான உணவுப் பொருட்களை அனுப்பிவைத்து சர்வதேசத்தைத் தொடர்ந்தும் ஏமாற்றிவந்தது. 

உணவையும், மருத்துவப் பொருட்களையும் யுத்தத்தில் ஒரு ஆயுதமாகப் பாவித்தல் கூடாது எனும் சர்வதேசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைக்கு முரணாக  உணவையும் மருந்தினையும் உள்ளே தஞ்சமடைந்த மக்களுக்கு வழங்கமறுத்து அவர்களை பட்டினிச் சாவினுள் தள்ளுவதன் மூலம் மக்கள் கொல்லப்படுவதை உறுதிப்படுத்தியதுடன், போரிடும் மனோவலிமையினையும் அடித்து நொறுக்கியது. வேண்டுமென்றே குரைத்து மதிப்பிடப்பட்ட மக்கள் எண்ணிக்கை, அக்குறை மதிப்பீட்டிற்கும் கூட போதாத உணவுப் பொருட்கள் என்ற சதிகளின் மேல், உணவுப்பொருட்களைக் காவிச் சென்ற பாரவூர்திகளையும் தனது வான்படையைக் கொண்டு அழித்துக் கொண்டது.

  • Like 5
Link to comment
Share on other sites

  • Replies 187
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தில் பொதுமக்கள் தஞ்சமடையும் முகாம்கள், காயப்பட்டவர்களைப் பராமரிக்கும் வைத்தியசாலைகள், யுத்த சூனிய வலயங்கள் என்பவற்றின்மீது போரிடும் எத்தரப்பாக இருந்தாலும் தாக்குதல் நடத்தமுடியாதென்பது சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடைமுறையும், சட்டமும் ஆகும். இதுபோலவே பாடசாலைகள், மத வழிபாட்டுத் தலங்கள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் என்பனவும் யுத்தத்தில் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட முடியாதவை என்றும் சட்டம் இருக்கிறது.

ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி, தானே பிரகடனம் செய்த இரு யுத்த சூனிய வலயங்களுக்குள் மக்களை வலுக்கட்டாயமாக வரவழைத்து, அப்பகுதி மீது தனது விமானப்படையினரைக் கொண்டும், நீண்டதூர எறிகணைகளைக் கொண்டும் அதிகளவு பொதுமக்கள் உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் ஒரே நோக்கில் நோக்கில்  கர்ணகடூரமான , தொடர்ச்சியான தாக்குதலினை மேற்கொண்டது. ஒரு தாக்குதல் முடிவடைந்து, கொல்லப்பட்டவர்களையும், காயப்பட்டவர்களையும் மீட்க ஏனையவர்கள் அப்பகுதியில் திரளும்போது, தனது இரண்டாவது தாக்குதலினை நடத்தி இன்னும் இன்னும் அதிகமான மக்கள் உயிரிழப்புக்களை அது உருவாக்கியது. தாக்குதல்களில் உயிர் தப்பியவர்கள் தப்பியோடி, தஞ்சமடையும் பகுதிமீதும் அவர்களைத் தொடர்ந்துசென்று தாக்குவதன் மூலம் காயப்பட்டவர்களைக் கூடக் காப்பாற்றும் அம்மக்களின் முயற்சிகளைத் தோற்கடித்திருந்தது. 

யுத்த சூனியப் பிரதேசங்கள் மீது சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகளை வானிலிருந்து வீசி, வெண்பொசுபரசு எனும் இரசாயணம் மக்கள் மேல் சிதறிவெடித்து பலர் எரிகாயங்களுடன் உயிரிழக்கும் அவலத்தை ஏற்படுத்தியது. இது போதாதென்று பல்குழல் எறிகணை செலுத்திகளில் தேர்மோபேரிக் எனும் அதிவெப்ப எறிகணைகளைச் செலுத்தி, வீழ்ந்து வெடிக்கும் இடத்தின் ஒக்ஸிஜன் வாயுவை ஊரிஞ்சியெடுத்து பலர் மூச்சுத் திணறியும், காற்றில் எரியுண்டும் கருகிச் சாவதை உறுதிப்படுத்திக்கொண்டது. 

இவ்வாறே, போரில் கட்டாயமாகத் தவிர்க்கப்படவேண்டிய மிக முக்கிய இடங்களில் ஒன்றான வைத்தியசாலைகள் மீது சிங்களம் நடத்திய ஈவிரக்கமற்ற தாக்குதல்கள் அகோரமானவை. "இந்த அமைவிடங்களில் இருக்கும் வைத்தியசாலைகளைத் தவிருங்கள்" என்று சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினால் ராணுவத்திடம் கொடுக்கப்பட்ட புவியியல் அமைவிட விபரங்களைப் பாவித்தே குறைந்தது இரு வைத்தியசாலைகள் மீதும், புலனற்றோர் பராமரிப்பு நிலையங்கள், வயோதிபரைப் பராமரிக்கும் இடங்கள் மீதும் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு பல நூற்றுகணக்கான அப்பாவிகளைக் கொன்று தள்ளியது. முதலாவது தாக்குதலில் கொல்லப்பட்டவர்களையும், காயப்பட்டவர்களையும் மீட்கவந்த மருத்துவ பணியாளர்களையும், தன்னார்வத் தொண்டர்களையும் இலக்குவைத்து நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதலிலும் பலர் உயிரிழப்பதையும் இதன்மூலம் சிங்களம் உறுதிப்படுத்திக்கொண்டது. 

Edited by ரஞ்சித்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் சிங்கள அரசின் நேரடிப் பங்களிப்போடு.. அமெரிக்கா.. ரஷ்சியா.. ஹிந்தியா.. சீனா.. ஐநா..  உட்பட எல்லாரும் சேர்ந்து நடத்தியது. இனப்படுகொலை தொடர்பான.. எந்த ஆதாரமும் சிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து நடத்தினார்கள். அதுவும் உலகில் எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக போராடாத மக்களை கொன்று குவித்தார்கள். சொந்த மண்ணில் சொந்த வாழும் உரிமையைக் கோரியது ஒன்றே அந்த மக்கள் செய்த குற்றம். அது பயங்கரவாதமாக்கப்பட்டது.

ஆனால்.. உக்ரைன் - ரஷ்சிய யுத்தம் அப்படி அன்று. நேட்டோ விரிவாக்கம் ரஷ்சிய எல்லைகளை எட்ட எட்ட ரஷ்சிய மக்கள் உக்ரைனில் படுகொலை செய்யப்படப் பட.. எழுந்த யுத்தம். உக்ரைனில் இரண்டு பகுதி ரஷ்சிய மக்களின் சுதந்திரத்தை அங்கீகரிக்க வக்கில்லாத மேற்குலகம்.. அந்த மக்களையும் சேர்த்து முழு உக்ரைனையும் அழிப்பது தான் இந்த யுத்தத்தின் நோக்கம். அதன் மூலம்.. ரஷ்சியாவை இராணுவ ரீதியில் அச்சுறுத்துவதோடு.. ரஷ்சிய பொருண்மியத்தை பலவீனப்படுத்துவம் நோக்கம்.

ஆக.. தமக்கான எதிரி சீனா.. என்பதோடு இருக்க விரும்பும் மேற்குலகம்.. ரஷ்சியாவை பலவீனப்படுத்த நடத்தும் ஒரு யுத்தத்தில் ரஷ்சியா தன் இருப்பை தக்க வைக்கும் நடவடிக்கையும்.. தமது உயிர்வாழ்வுக்காக.. உரிமை கேட்டுப் போராடிய தமிழ் மக்களை தமிழர் என்பதற்காகவே கொன்று குவித்ததும் ஒன்றல்ல.

முள்ளிவாய்க்கால்.. ஒரு கூட்டு இனப்படுகொலையின்.. ஆதாரமற்று நடத்தப்பட்ட ஒரு இனப்படுகொலையின் அடையாளம். 

ரஷ்சியாவால் மரியுப் போல் சிதைக்கப்பட்டது போல்.. உக்ரைனால்.. ரஷ்சியர்கள் வாழ்ந்த Donbas பிராந்தியம் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது.

உலகின் ஒரு பெரிந்துரோக இனப்படுகொலைக்கு ஆளான நாமே.. மேற்குலகின் பிரச்சாரங்களை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு சிந்தனைக்குள் வைச்சுக் கொண்டு மரியுப் போலுக்காக குரல் எழும்பி.. Donbas பிராந்திய அழிவுகளை உக்ரைனின் அரச பயங்கரவாதத்தை மறைப்பது மிகக் கேவலமான செய்லாகும்.

உண்மையில் ரஷ்சியா பலவீனப்படுவது.. உலக யுத்த சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு.. அமெரிக்க சார்பு சக்திகளின் ஏகாதபத்தியத்துக்கு இன்னும் பல முள்ளிவாய்க்கால்கள் உலகெங்கும் ஆதாரமற்ற படுகொலைகள் மூலம் இலக்காகும் அபாயமே அதிகம். 

Edited by nedukkalapoovan
  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனது ராணுவத்தின் முன்னேற்றம் தடைப்பட்ட கணங்களிலும், தனது ராணூவத்திற்கு அதிக இழப்புக்கள் ஏற்பட்ட கணங்களிலும் பொதுமக்கள் மீதான தனது அகோரக் குண்டுவீச்சினை முடுக்கிவிட்ட சிங்களம் அவ்வப்போது தனது இயலாமையினை அப்பாவிகள் மீது காட்டுவதன் மூலம் வஞ்சம் தீர்த்துக்கொண்டது.

தமிழ் மக்கள் மீதான தனது இனவழிப்பின் சாட்சியங்களை முற்றாக மறைத்துவிட்ட சிங்களம், தன்னுடைய வீரப் பிரதாபங்களை தெற்குச் சிங்களவர்களுக்கும், தனது நேச நாடுகளான ரஸ்ஸியா, இந்தியா, சீனா, பாக்கிஸ்த்தான் ஆகியவற்றிற்குக் காட்டுவதற்காக அரச தொலைக்காட்ட்சியின் படக்குழுவை தன்னுடன் போர் முன்னரங்கிற்கு அழைத்துச் சென்றது. இதன் மூலம் தனது ராணூவம் அடைந்துவரும் வெற்றிகள் பலமாக விளம்பரப்படுத்தப்பட்டு, போரில் அழிக்கப்பட்டுவரும் பொதுமக்களின் விபரங்களை முற்றாக இருட்டடிப்புச் செய்தது. 

சர்வதேச நாடுகளால் இலங்கையின் போர் தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட கரிசணைகளையும், கேள்விகளையும், குற்றச்சாட்டுக்களையும் பொய்யென்று வாதாடி மறுத்ததுடன், தனது படக்குழுவினரால் சோடிக்கப்பட்டு படமாக்கப்பட்ட "புலிகள் பொதுமக்களைக் கொல்கிறார்கள், யுத்த சூனியப் பிரதேசத்தில் ஆயுதங்களைக் குவித்து வைக்கிறார்கள், யுத்த சூனிய வலயத்தின் இதயப்பகுதியிலிருந்து எம்மீது எறிகணைத் தாக்குதல் நடத்துகிறார்கள், வைத்தியசாலையின்மீதிருந்து தாக்குதல்கள் நடத்துகிறார்கள், பொதுமக்களின் உணவைப் பறித்துச் செல்கிறார்கள்"   பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பாவிக்கிறார்கள்" என்று கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டு தன்னால் கொல்லப்பட்டுவரும் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் படுகொலையினை ஒன்றில் புலிகள் கொன்றார்கள் எம்றோ அல்லது புலிகள் இம்மக்களை கேடயமாகப் பாவித்துத் தாக்கினார்கள் என்றோ கூறி நியாயப்படுத்திக்கொண்டது. 

போரின் இறுதிநாட்களில், புலிகளின் ஆயுதங்கள் மெளனித்திருக்க, பதுங்குகுழிகளிலும், இன்னும் இடிபடாத வீடுகள், ஆலயங்கள் ஆகியவற்றிலும் தஞ்சமடைந்திருந்த பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் மீது தாங்கிகளை ஏற்றிச் சென்றதுடன், தாங்கிகளின் பின்னால் அணிவகுத்து வந்த ராணுவக் காலாற்படை இன்னும் முனகல்கள் கேட்ட பதுங்கு குழிகளுக்குள் நூற்றுக்கணக்கான கைய்யெறிகுண்டுகளை எறிந்து அம்மக்கள் தாம் தஞ்சமடைந்திருந்த குழிகளுக்குள்ளேயே சமாதியாவதை உறுதிப்படுத்திக் கொண்டது . 

உச்சகட்ட இனவழிப்பு அரங்கேறிக்கொன்டிருக்க, இனவழிப்பு ராணுவத்தின் இன்னொரு படையணி சரணடைந்தவர்களை கூட்டாக இழுத்துச் சென்று, நிர்வாணப்படுத்தி தலையில் சுட்டுக் கொன்று இனவாதப்பசி  தீர்த்துக்கொள்ள, இன்னொரு அணி கட்டாயமாக பிடித்து இழுத்துவரப்பட்ட தமிழ்ப் பெண்களையும் சிறுமிகளையும் கூட்டாக வன்புணர்ந்து தனது இன இச்சையினைத் தீர்த்துக்கொண்டது. துப்பாக்கிகளின் ரவை தீரும் வரைக்கும், தமது ஆண்குறிகளின் விந்தணுக்கள் நீர்த்துப் போகும்வரையும் இச்சைதீர்த்த சிங்களப் பிசாசுகள் அப்பிரதேசமெங்கும் குவிந்துகிடந்த தமிழினத்தை கூட்டாக கனரக வாகனங்கள் கொண்டு பாரிய புதைகுழிக்குள் தள்ளி மூடி சாட்சியங்களை அழித்து, தனது வெற்றியை பறைசாற்றி தம்பட்டம் அடித்துக்கொண்டது.

இனக்கொலை யுத்தத்தின் முடிவில், சுற்றிவளைத்துக் கைதுசெய்யப்பட்ட 280, 000 அப்பாவிகளை முட்கம்பி முகாமினுள் அடைத்து, விசாரணை என்கிற பெயரில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களும், பெண்களும் இழுத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டதுடன், பலர் கூட்டுப் பாலியல் வன்புணர்விற்கும், அதன்பின்னரான படுகொலைகளுக்கும் உள்ளானார்கள். பல பெண்கள் இராணுவத்தாலும், துணைராணுவக் குழுக்களாலும் இழுத்துச் செல்லப்பட்டு கட்டாய விபச்சாரத்தில் தெற்கில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

ஆனால், இவை அனைத்துமே சிங்களத்தால் சர்வதேசத்திடமிருந்து முற்றாக மரைக்கப்பட்டு, புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிவரும் மக்களை ஆரத்தழுவி வரவேற்கும் ராணுவம், அவர்களுக்கு தண்ணீர்ப் போத்தல்களைக் கொடுக்கிறது, களைத்துப்போய் , நடக்க திராணியற்று வரும் வயோதிபர்களையும், சிறுவர்களையும் தனது கைகளில் ஏந்தி நீரைக் கடந்து மீட்டு வருகிறது, முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் கொடுத்து மகிழ்கிறது. 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, தன்மீதான குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுதலித்து, சர்பதேசத்தில் தன்மீதான தீர்மானங்களை தனது நீண்டகால நண்பர்களான ரஸ்ஸியா, பாக்கிஸ்த்தான், சீனா, இந்தியா ஆகியவற்றின் உதவியுடன் இன்றுவரை தடுத்தோ அல்லது பலவீனப்படுத்தியோ வெற்றிகரமாக இயங்கிவருகிறது.

18 minutes ago, nedukkalapoovan said:

முதலாவது,

இது எனது ஆக்கம், நீங்கள் கருத்துக் கூறவேண்டிய தேவையில்லை. யாழ்க் களத்தின் 24 ஆவது ஆண்டு நிறவிற்காக எழுதப்படும் எனது சொந்த ஆக்கம். உங்களுக்குத் தேவையென்றால் ரஸ்ஸியாவைன் இனக்கொலையினை நியாயப்ப்டுத்தி சொந்தமாக ஒரு ஆக்கத்தினை எழுதுங்கள். இங்கே வந்து எனது ஆக்கத்தினை சிதைக்குமாறு நான் கோரவில்லை.

இரண்டாவது,

நான் என்ன எழுதப்போகிறேன் என்பதை தீர்மானிக்கவோ அல்லது எனது ஆக்கம் எத்திசையில் பயணிக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவோ நீங்கள் யார்.

இது ஒன்றும் அரசியல் விவாதக் களம் அல்ல. புரிந்துகொள்ளுங்கள்.

உங்களின் விதண்டாவாதங்கள் இங்கே எனக்குத் தேவையில்லை. அகலுங்கள்.
 
  • Confused 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிழின முள்ளிவாய்க்காலின் மணற்கரைகளில் வடிந்தோடிய குருதி இன்னும் ஈரமாகவிருக்க, இன்னொரு முள்ளிவாய்க்கால் சுமார் 5,847 கிலோமீட்டர்கள் தொலைவில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. 

உலகின் மிகப்பெரிய ராணுவம் ஒன்று சிங்களப் பிசாசுகள் கூறிய அதே காரணங்களை முன்வைத்து "விசேட மனிதாபிமானப் படை நடவடிக்கை" என்கிற பெயரில் பாரிய இனவழிப்பொன்றை உக்ரேன் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இந்த நடவடிக்கையில், தனது இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழும் பகுதியென்று சுதந்திர உக்ரேனின் இரு நிலப்பகுதிகளை ஆக்கிரமிப்பு ராணுவ நடவடிக்கையொன்றின் மூலம் தன்னுடன் வல்வளைத்துக்கொண்ட ரஸ்ஸிய அரச பயங்கரவாதம், தன்னால் வல்வளைக்கப்பட்ட இரு நிலப்பரப்புகளுக்கும் இடையில் அகப்பட்டிருக்கும் உக்ரேனிய துறைமுக நகரான மரியோபுலை முற்றான முற்றுகைக்குள் கொண்டுவந்து, சாட்சியங்களற்ற மிகப்பெரிய இனவழிப்பினை முடுக்கி விட்டிருக்கிறது. 

தமிழினத்தின் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கும், இன்று உக்ரேனின் மரியோபுல்லில் ரஸ்ஸியா நடத்திவரும் முற்றான அழித்தொழிப்பு - இனவழிப்பிற்கும் இடையே இருக்கும் நெருங்கிய ஒற்றுமைகளை ஒப்பிடுவதே எனது ஆக்கத்தின் நோக்கம். 

குறிப்பு : இங்கே என்னுடன் விதண்டாவாதம் செய்ய முனைவோர் தயவுசெய்து அரசியற் களத்திலோ அல்லது உலக நடப்பிலோ அல்லது நிகழ்வும் அகழ்விலுமோ அதைச் செய்யுங்கள். உங்களுடன் வீண் விதண்டாவாதங்களில் எனது நேரத்தை இங்கே நான் விரயமாக்க விரும்பவில்லை. உங்களுக்கான பதில்களை நான் ஏற்கனவே மேல் குறிப்பிட்ட பகுதிகளில் வழங்கிவிட்டேன். தயவுசெய்து, இங்கே வேண்டாம் , நன்றி !

  • Sad 1
Link to comment
Share on other sites

1 hour ago, ரஞ்சித் said:

தனது ராணுவத்தின் முன்னேற்றம் தடைப்பட்ட கணங்களிலும், தனது ராணூவத்திற்கு அதிக இழப்புக்கள் ஏற்பட்ட கணங்களிலும் பொதுமக்கள் மீதான தனது அகோரக் குண்டுவீச்சினை முடுக்கிவிட்ட சிங்களம் அவ்வப்போது தனது இயலாமையினை அப்பாவிகள் மீது காட்டுவதன் மூலம் வஞ்சம் தீர்த்துக்கொண்டது.

தமிழ் மக்கள் மீதான தனது இனவழிப்பின் சாட்சியங்களை முற்றாக மறைத்துவிட்ட சிங்களம், தன்னுடைய வீரப் பிரதாபங்களை தெற்குச் சிங்களவர்களுக்கும், தனது நேச நாடுகளான ரஸ்ஸியா, இந்தியா, சீனா, பாக்கிஸ்த்தான் ஆகியவற்றிற்குக் காட்டுவதற்காக அரச தொலைக்காட்ட்சியின் படக்குழுவை தன்னுடன் போர் முன்னரங்கிற்கு அழைத்துச் சென்றது. இதன் மூலம் தனது ராணூவம் அடைந்துவரும் வெற்றிகள் பலமாக விளம்பரப்படுத்தப்பட்டு, போரில் அழிக்கப்பட்டுவரும் பொதுமக்களின் விபரங்களை முற்றாக இருட்டடிப்புச் செய்தது. 

சர்வதேச நாடுகளால் இலங்கையின் போர் தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட கரிசணைகளையும், கேள்விகளையும், குற்றச்சாட்டுக்களையும் பொய்யென்று வாதாடி மறுத்ததுடன், தனது படக்குழுவினரால் சோடிக்கப்பட்டு படமாக்கப்பட்ட "புலிகள் பொதுமக்களைக் கொல்கிறார்கள், யுத்த சூனியப் பிரதேசத்தில் ஆயுதங்களைக் குவித்து வைக்கிறார்கள், யுத்த சூனிய வலயத்தின் இதயப்பகுதியிலிருந்து எம்மீது எறிகணைத் தாக்குதல் நடத்துகிறார்கள், வைத்தியசாலையின்மீதிருந்து தாக்குதல்கள் நடத்துகிறார்கள், பொதுமக்களின் உணவைப் பறித்துச் செல்கிறார்கள்"   பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பாவிக்கிறார்கள்" என்று கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டு தன்னால் கொல்லப்பட்டுவரும் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் படுகொலையினை ஒன்றில் புலிகள் கொன்றார்கள் எம்றோ அல்லது புலிகள் இம்மக்களை கேடயமாகப் பாவித்துத் தாக்கினார்கள் என்றோ கூறி நியாயப்படுத்திக்கொண்டது. 

போரின் இறுதிநாட்களில், புலிகளின் ஆயுதங்கள் மெளனித்திருக்க, பதுங்குகுழிகளிலும், இன்னும் இடிபடாத வீடுகள், ஆலயங்கள் ஆகியவற்றிலும் தஞ்சமடைந்திருந்த பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் மீது தாங்கிகளை ஏற்றிச் சென்றதுடன், தாங்கிகளின் பின்னால் அணிவகுத்து வந்த ராணுவக் காலாற்படை இன்னும் முனகல்கள் கேட்ட பதுங்கு குழிகளுக்குள் நூற்றுக்கணக்கான கைய்யெறிகுண்டுகளை எறிந்து அம்மக்கள் தாம் தஞ்சமடைந்திருந்த குழிகளுக்குள்ளேயே சமாதியாவதை உறுதிப்படுத்திக் கொண்டது . 

உச்சகட்ட இனவழிப்பு அரங்கேறிக்கொன்டிருக்க, இனவழிப்பு ராணுவத்தின் இன்னொரு படையணி சரணடைந்தவர்களை கூட்டாக இழுத்துச் சென்று, நிர்வாணப்படுத்தி தலையில் சுட்டுக் கொன்று இனவாதப்பசி  தீர்த்துக்கொள்ள, இன்னொரு அணி கட்டாயமாக பிடித்து இழுத்துவரப்பட்ட தமிழ்ப் பெண்களையும் சிறுமிகளையும் கூட்டாக வன்புணர்ந்து தனது இன இச்சையினைத் தீர்த்துக்கொண்டது. துப்பாக்கிகளின் ரவை தீரும் வரைக்கும், தமது ஆண்குறிகளின் விந்தணுக்கள் நீர்த்துப் போகும்வரையும் இச்சைதீர்த்த சிங்களப் பிசாசுகள் அப்பிரதேசமெங்கும் குவிந்துகிடந்த தமிழினத்தை கூட்டாக கனரக வாகனங்கள் கொண்டு பாரிய புதைகுழிக்குள் தள்ளி மூடி சாட்சியங்களை அழித்து, தனது வெற்றியை பறைசாற்றி தம்பட்டம் அடித்துக்கொண்டது.

இனக்கொலை யுத்தத்தின் முடிவில், சுற்றிவளைத்துக் கைதுசெய்யப்பட்ட 280, 000 அப்பாவிகளை முட்கம்பி முகாமினுள் அடைத்து, விசாரணை என்கிற பெயரில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களும், பெண்களும் இழுத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டதுடன், பலர் கூட்டுப் பாலியல் வன்புணர்விற்கும், அதன்பின்னரான படுகொலைகளுக்கும் உள்ளானார்கள். பல பெண்கள் இராணுவத்தாலும், துணைராணுவக் குழுக்களாலும் இழுத்துச் செல்லப்பட்டு கட்டாய விபச்சாரத்தில் தெற்கில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

ஆனால், இவை அனைத்துமே சிங்களத்தால் சர்வதேசத்திடமிருந்து முற்றாக மரைக்கப்பட்டு, புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிவரும் மக்களை ஆரத்தழுவி வரவேற்கும் ராணுவம், அவர்களுக்கு தண்ணீர்ப் போத்தல்களைக் கொடுக்கிறது, களைத்துப்போய் , நடக்க திராணியற்று வரும் வயோதிபர்களையும், சிறுவர்களையும் தனது கைகளில் ஏந்தி நீரைக் கடந்து மீட்டு வருகிறது, முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் கொடுத்து மகிழ்கிறது. 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, தன்மீதான குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுதலித்து, சர்பதேசத்தில் தன்மீதான தீர்மானங்களை தனது நீண்டகால நண்பர்களான ரஸ்ஸியா, பாக்கிஸ்த்தான், சீனா, இந்தியா ஆகியவற்றின் உதவியுடன் இன்றுவரை தடுத்தோ அல்லது பலவீனப்படுத்தியோ வெற்றிகரமாக இயங்கிவருகிறது.

முதலாவது,

இது எனது ஆக்கம், நீங்கள் கருத்துக் கூறவேண்டிய தேவையில்லை. யாழ்க் களத்தின் 24 ஆவது ஆண்டு நிறவிற்காக எழுதப்படும் எனது சொந்த ஆக்கம். உங்களுக்குத் தேவையென்றால் ரஸ்ஸியாவைன் இனக்கொலையினை நியாயப்ப்டுத்தி சொந்தமாக ஒரு ஆக்கத்தினை எழுதுங்கள். இங்கே வந்து எனது ஆக்கத்தினை சிதைக்குமாறு நான் கோரவில்லை.

இரண்டாவது,

நான் என்ன எழுதப்போகிறேன் என்பதை தீர்மானிக்கவோ அல்லது எனது ஆக்கம் எத்திசையில் பயணிக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவோ நீங்கள் யார்.

இது ஒன்றும் அரசியல் விவாதக் களம் அல்ல. புரிந்துகொள்ளுங்கள்.

உங்களின் விதண்டாவாதங்கள் இங்கே எனக்குத் தேவையில்லை. அகலுங்கள்.
 
மிகவும் தவறான, ஆபத்தான கருத்து.

யாழ் இணையம் ஒரு கருத்துக்களம். இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் எவரும் தங்கள் கருத்துகளை முன்வைக்கலாம். அவ்வாறு தம் கருத்துக்களை முன்வைக்க கூடாது என்று உத்தரவு விட உங்களால் முடியாது.

யாழின் பிறந்த தினத்துக்காக சுய ஆக்கங்களை யாழ் வரவேற்பதே கருத்துக்களத்தை மேலும் விரிவுபடுத்தவே.

கருத்துக்களத்தின் அடிப்படை நோக்கத்தை சிதைக்காமல் இந்த திரியை கொண்டு சொல்லுங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதமாக நடைபெற்றுவரும் ரஸ்ய உக்ரேனியப்  போரில் இதுவரை கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டவில்லை . இதனை ஐநா உறுதிப்படுத்தியுள்ளது.

Ukraine: civilian casualty update 23 March 2022 By UNHCR 

Date: 23 March 2022

From 4 a.m. on 24 February 2022, when the Russian Federation’s armed attack against Ukraine started, to 24:00 midnight on 22 March 2022 (local time), the Office of the UN High Commissioner for Human Rights (OHCHR) recorded 2,571 civilian casualties in the country: 977 killed and 1,594 injured. This included:

a total of 977 killed (196 men, 144 women, 12 girls, and 27 boys, as well as 42 children and 556 adults whose sex is yet unknown)

a total of 1,594 injured (174 men, 136 women, 24 girls, and 20 boys, as well as 64 children and 1,176 adults whose sex is yet unknown)

In Donetsk and Luhansk regions: 1,102 casualties (279 killed and 823 injured)

On Government-controlled territory: 845 casualties (224 killed and 621 injured)

On territory controlled by the self-proclaimed ‘republics’: 257 casualties (55 killed and 202 injured)

( யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இந்த எண்ணிக்கை மாறலாம்,)

இந்த் நிலையில் முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட த்மிழர்கள்கொல்லப்பட்ட இன அழிப்பையும் மரியுபோல் சண்டையையும் ஒப்பிடுவது அபத்தமானதும்  ஒட்டுமொத்த தமிழர்களையும் முட்டாளாக்கும் செயலாகும். 
 
கட்டுரையாளர் யுத்தத்தில் பாதிக்கப்படும் பொதுமக்களையிட்டு வெளிப்படுத்தும் கரிசனையை நானும் பகிர்ந்துகொள்கிறேன். ஆனால் அது தவறான புரிதலுக்கு வழிவகுக்கக் கூடாது. இல்லாதுபோனால் கட்டுரையின் நோக்கம் திசைதிரும்பும் அபாயம் இருக்கிறது

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

மிகவும் தவறான, ஆபத்தான கருத்து.

எனது ஆக்கத்திற்கு இடையூறு செய்வார்கள் என்பதற்காகத்தான் அப்படி எழுதினேன். சொந்த ஆக்கங்கள் என்று எழுதிவிட்டு, மற்றையவர்களும் வந்து விமர்சிக்கலாம் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

சிலவேளை, உக்ரேன் பற்றி எழுதுவதால் ஏனையவர்கள் வந்து இதனை விதண்டாவாதத் திரியாக மாற்றலாம் என்கிற அச்சம் இருந்தது.

விதண்டாவாதிகளுக்கு பதில் சொல்லும் நோக்கம் எனக்கில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

முதலாவது,

இது எனது ஆக்கம், நீங்கள் கருத்துக் கூறவேண்டிய தேவையில்லை. யாழ்க் களத்தின் 24 ஆவது ஆண்டு நிறவிற்காக எழுதப்படும் எனது சொந்த ஆக்கம். உங்களுக்குத் தேவையென்றால் ரஸ்ஸியாவைன் இனக்கொலையினை நியாயப்ப்டுத்தி சொந்தமாக ஒரு ஆக்கத்தினை எழுதுங்கள். இங்கே வந்து எனது ஆக்கத்தினை சிதைக்குமாறு நான் கோரவில்லை.

இரண்டாவது,

நான் என்ன எழுதப்போகிறேன் என்பதை தீர்மானிக்கவோ அல்லது எனது ஆக்கம் எத்திசையில் பயணிக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவோ நீங்கள் யார்.

இது ஒன்றும் அரசியல் விவாதக் களம் அல்ல. புரிந்துகொள்ளுங்கள்.

உங்களின் விதண்டாவாதங்கள் இங்கே எனக்குத் தேவையில்லை. அகலுங்கள்.
 
புட்டினை…. சர்வாதிகாரி என்று சொல்லும் ரஞ்ஜித்,
மேலே…அவரே, நடந்து கொண்ட முறையை... எப்படி கருதுகிறார்? 😁

“ஊருக்குத்தான் உபதேசம்… உனக்கு இல்லையடி கண்ணே….” 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரஞ்சித் said:

எனது ஆக்கத்திற்கு இடையூறு செய்வார்கள் என்பதற்காகத்தான் அப்படி எழுதினேன். சொந்த ஆக்கங்கள் என்று எழுதிவிட்டு, மற்றையவர்களும் வந்து விமர்சிக்கலாம் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

சிலவேளை, உக்ரேன் பற்றி எழுதுவதால் ஏனையவர்கள் வந்து இதனை விதண்டாவாதத் திரியாக மாற்றலாம் என்கிற அச்சம் இருந்தது.

விதண்டாவாதிகளுக்கு பதில் சொல்லும் நோக்கம் எனக்கில்லை. 

உங்கள் கருத்தை தயவுசெய்து திரும்பவும் நிதானமாக வாசியுங்கள். 

1 minute ago, தமிழ் சிறி said:

புட்டினை…. சர்வாதிகாரி என்று சொல்லும் ரஞ்ஜித்,
மேலே…அவரே, நடந்து கொண்ட முறையை... எப்படி கருதுகிறார்? 😁

அவர் பொதுமக்களின் இழப்பையிட்டு சற்று உணர்ச்சிவசப்படுகிறார். அவ்வளவே. சற்று நிதனமாக யோசிப்பாராகில் அவரது கருத்தில் மாற்றங்கள் வரக்கூடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

உங்கள் கருத்தை தயவுசெய்து திரும்பவும் நிதானமாக வாசியுங்கள். 

அவர் பொதுமக்களின் இழப்பையிட்டு சற்று உணர்ச்சிவசப்படுகிறார். அவ்வளவே. சற்று நிதனமாக யோசிப்பாராகில் அவரது கருத்தில் மாற்றங்கள் வரக்கூடும். 

ரஞ்ஜித்திடம் இருந்து… இப்படி ஒரு கருத்து வரும் என்று, நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
உணர்ச்சி வசப்படும் எந்த விடயத்தினையும், நடு நிலையாக அணுக முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ரஞ்சித் said:

எனது ஆக்கத்திற்கு இடையூறு செய்வார்கள் என்பதற்காகத்தான் அப்படி எழுதினேன். சொந்த ஆக்கங்கள் என்று எழுதிவிட்டு, மற்றையவர்களும் வந்து விமர்சிக்கலாம் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

சிலவேளை, உக்ரேன் பற்றி எழுதுவதால் ஏனையவர்கள் வந்து இதனை விதண்டாவாதத் திரியாக மாற்றலாம் என்கிற அச்சம் இருந்தது.

விதண்டாவாதிகளுக்கு பதில் சொல்லும் நோக்கம் எனக்கில்லை. 

ஏன் இந்த கைபிற்ஸ் கோவம் அண்ணா.✍️வராதீங்கோ பார்க்காதீங்கோ எழுதாதீங்கோ என்றால் எப்படி உங்கள் ஆக்கங்களைப் படிப்பது நாங்கள்.வாசிப்பதற்கு யாரும் இல்லாத விடத்து எழுதியும் பிரியோசனம் இல்லயே..சற்று யோசிச்சு பாருங்கோ..அப்புறம் என்னோடும் கத்தக் கூடா..மனதில் பட்டதை அப்படியே சொல்லிட்டு போறன்.நன்றி.🖐️

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ரஞ்சித் said:

எனது ஆக்கத்திற்கு இடையூறு செய்வார்கள் என்பதற்காகத்தான் அப்படி எழுதினேன். சொந்த ஆக்கங்கள் என்று எழுதிவிட்டு, மற்றையவர்களும் வந்து விமர்சிக்கலாம் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

சிலவேளை, உக்ரேன் பற்றி எழுதுவதால் ஏனையவர்கள் வந்து இதனை விதண்டாவாதத் திரியாக மாற்றலாம் என்கிற அச்சம் இருந்தது.

விதண்டாவாதிகளுக்கு பதில் சொல்லும் நோக்கம் எனக்கில்லை. 

ரஞ்சித்,

நீண்டகாலம் பழகிய உரிமையில் சொல்கிறேன். 

நீங்களும் விடை பெற வேண்டிய காலம் அண்மித்து விட்டது.

Save your sanity 🙏🏾.

  • Like 1
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ரஞ்சித்,

நீண்டகாலம் பழகிய உரிமையில் சொல்கிறேன். 

நீங்களும் விடை பெற வேண்டிய காலம் அண்மித்து விட்டது.

Save your sanity 🙏🏾.

வணக்கம் கோசான்

நீண்டகாலத்தின் பின்னர். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

வணக்கம் கோசான்

நீண்டகாலத்தின் பின்னர். 🙏

வணக்கம் கற்பிதன். கண்டது சந்தோசம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

ரஞ்சித்,

நீண்டகாலம் பழகிய உரிமையில் சொல்கிறேன். 

நீங்களும் விடை பெற வேண்டிய காலம் அண்மித்து விட்டது.

Save your sanity 🙏🏾.

 கோசான்…. மற்ற ஆட்கள் மாதிரி,
ரஞ்சித்… எம்மை விட்டு போக மாட்டார்,
என்ற நம்பிக்கை எமக்கு நிறையவே உள்ளது. ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன் மனதில் உள்ள ஆதங்கம் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ரஞ்சித்,

நீண்டகாலம் பழகிய உரிமையில் சொல்கிறேன். 

நீங்களும் விடை பெற வேண்டிய காலம் அண்மித்து விட்டது.

Save your sanity 🙏🏾.

ஏனுங்கோ என்ன காரணம்? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

முதலாவது,

இது எனது ஆக்கம், நீங்கள் கருத்துக் கூறவேண்டிய தேவையில்லை. யாழ்க் களத்தின் 24 ஆவது ஆண்டு நிறவிற்காக எழுதப்படும் எனது சொந்த ஆக்கம். உங்களுக்குத் தேவையென்றால் ரஸ்ஸியாவைன் இனக்கொலையினை நியாயப்ப்டுத்தி சொந்தமாக ஒரு ஆக்கத்தினை எழுதுங்கள். இங்கே வந்து எனது ஆக்கத்தினை சிதைக்குமாறு நான் கோரவில்லை.

இரண்டாவது,

நான் என்ன எழுதப்போகிறேன் என்பதை தீர்மானிக்கவோ அல்லது எனது ஆக்கம் எத்திசையில் பயணிக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவோ நீங்கள் யார்.

இது ஒன்றும் அரசியல் விவாதக் களம் அல்ல. புரிந்துகொள்ளுங்கள்.

உங்களின் விதண்டாவாதங்கள் இங்கே எனக்குத் தேவையில்லை. அகலுங்கள்.

தொடர்ந்து எழுதுங்கள்...

வாசிப்பதும் தீர்மானிப்பதும் வாசகராகட்டும். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

 கோசான்…. மற்ற ஆட்கள் மாதிரி,
ரஞ்சித்… எம்மை விட்டு போக மாட்டார்,
என்ற நம்பிக்கை எமக்கு நிறையவே உள்ளது. ❤️

வணக்கம் அண்ணா. கண்டது சந்தோசம்.

55 minutes ago, குமாரசாமி said:

ஏனுங்கோ என்ன காரணம்? 🤣

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

ஆனால்.. உக்ரைன் - ரஷ்சிய யுத்தம் அப்படி அன்று. நேட்டோ விரிவாக்கம் ரஷ்சிய எல்லைகளை எட்ட எட்ட ரஷ்சிய மக்கள் உக்ரைனில் படுகொலை செய்யப்படப் பட.. எழுந்த யுத்தம். உக்ரைனில் இரண்டு பகுதி ரஷ்சிய மக்களின் சுதந்திரத்தை அங்கீகரிக்க வக்கில்லாத மேற்குலகம்.. அந்த மக்களையும் சேர்த்து முழு உக்ரைனையும் அழிப்பது தான் இந்த யுத்தத்தின் நோக்கம். அதன் மூலம்.. ரஷ்சியாவை இராணுவ ரீதியில் அச்சுறுத்துவதோடு.. ரஷ்சிய பொருண்மியத்தை பலவீனப்படுத்துவம் நோக்கம்.

இங்கே நெடுக்ஸ் தான் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டார் போல இருக்கிறது.

ரஞ்சித் முதல் எழுதிய இரு பந்தியிலும் ரசிய உக்ரேன் போரைப் பற்றி எதுவுமே எழுதவில்லை.

ஆடறுக்க முதல் என்னவோ அறுத்த மாதிரி போகுது.

4 hours ago, ரஞ்சித் said:

இது எனது ஆக்கம், நீங்கள் கருத்துக் கூறவேண்டிய தேவையில்லை.

ரஞ்சித் 

நெடுக்ஸ் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டாரே தவிர அவரையோ யாரையுமே கருத்தெழுதக் கூடாது என்று நீங்கள் சொல்லது மிகவும் தவறு.

இது கோவிலில் நடக்கும் அன்னதானம் மாதிரி.யார்யார் சாப்பிட வேண்டும் எம்மால் உத்தரவிட முடியாது.

2 hours ago, goshan_che said:

ரஞ்சித்,

நீண்டகாலம் பழகிய உரிமையில் சொல்கிறேன். 

நீங்களும் விடை பெற வேண்டிய காலம் அண்மித்து விட்டது.

Save your sanity 🙏🏾.

வணக்கம் கோசான்

இந்த வார்த்தைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

யாழில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருக்கிறீர்கள்.

தயவு செய்து உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.
இதுவரை காலமும் ரஞ்சித்தின் ஆக்கங்களுக்கு எல்லோரும் மிகுந்த ஆதரவு கொடுத்தே வந்துள்ளனர்.
ஆக இந்த உக்ரேன் ரசிய போரில் அவரவர் தங்கள் கருத்தை வைக்கிறார்கள்.இதனால் புரிந்திராத எத்தனையோ விடயங்கள் அறியக் கூடியதாக உள்ளது.
நன்றி.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ரஞ்சித்,

நீண்டகாலம் பழகிய உரிமையில் சொல்கிறேன். 

நீங்களும் விடை பெற வேண்டிய காலம் அண்மித்து விட்டது.

Save your sanity 🙏🏾.

எண்ணையை ஊத்துவதில் உங்களை விட யாழில் ஒருவர் இருக்க முடியாது.

----------------------------------------------------------------------------------------------------

ரகு அவர்கள் எழுதியது  ஒரு அரசியல் கட்டுரை. அவரின் ஆதங்கம், நம்பிக்கை என்ற வகையில் எழுதி உள்ளார். அவரின் சுய ஆக்கம் எனினும் பதில் கருத்து எழுத முடியாது என யாழ் கள விதிகள் உள்ளதா என தெரியவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

ஒரு மாதமாக நடைபெற்றுவரும் ரஸ்ய உக்ரேனியப்  போரில் இதுவரை கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டவில்லை . இதனை ஐநா உறுதிப்படுத்தியுள்ளது.

Ukraine: civilian casualty update 23 March 2022 By UNHCR 

Date: 23 March 2022

From 4 a.m. on 24 February 2022, when the Russian Federation’s armed attack against Ukraine started, to 24:00 midnight on 22 March 2022 (local time), the Office of the UN High Commissioner for Human Rights (OHCHR) recorded 2,571 civilian casualties in the country: 977 killed and 1,594 injured. This included:

a total of 977 killed (196 men, 144 women, 12 girls, and 27 boys, as well as 42 children and 556 adults whose sex is yet unknown)

a total of 1,594 injured (174 men, 136 women, 24 girls, and 20 boys, as well as 64 children and 1,176 adults whose sex is yet unknown)

In Donetsk and Luhansk regions: 1,102 casualties (279 killed and 823 injured)

On Government-controlled territory: 845 casualties (224 killed and 621 injured)

On territory controlled by the self-proclaimed ‘republics’: 257 casualties (55 killed and 202 injured)

( யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இந்த எண்ணிக்கை மாறலாம்,)

இந்த் நிலையில் முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட த்மிழர்கள்கொல்லப்பட்ட இன அழிப்பையும் மரியுபோல் சண்டையையும் ஒப்பிடுவது அபத்தமானதும்  ஒட்டுமொத்த தமிழர்களையும் முட்டாளாக்கும் செயலாகும். 
 
கட்டுரையாளர் யுத்தத்தில் பாதிக்கப்படும் பொதுமக்களையிட்டு வெளிப்படுத்தும் கரிசனையை நானும் பகிர்ந்துகொள்கிறேன். ஆனால் அது தவறான புரிதலுக்கு வழிவகுக்கக் கூடாது. இல்லாதுபோனால் கட்டுரையின் நோக்கம் திசைதிரும்பும் அபாயம் இருக்கிறது

84) "Mariupol is now just hell": What to know about the deteriorating  situation in the Ukrainian city

Ukraine: Situation in encircled city of Mariupol 'critical' |  Russia-Ukraine war News | Al Jazeera

Mariupol in ruins as residents flee besieged city | Reuters.com

Ukraine war: Why Kherson and Mariupol are key to Russian success - BBC News

Photos: Mariupol residents escape besieged, devastated city | Gallery News  | Al Jazeera

Ukraine war: 'Tanks in streets' as fighting hits Mariupol centre - BBC News

Krieg in der Ukraine: Mariupol offenbar eingekesselt | tagesschau.de

Ukraine war: Residents return to shattered homes in Mariupol | World News |  Sky News

ICRC warns besieged Ukrainian city Mariupol faces 'worst-case scenario' as  it pushes for humanitarian action - ABC News

மரியபோல் நகரத்தை.... 
புட்டினின், ரஷ்ய ராணுவம்   இவ்வளவு  சல்லடை போட்டு தாக்கியும்...
ஒரு மாத காலத்தில்... உக்ரைன் என்ற  நாடு முழுக்க நடந்த போரில்,
1000`ற்கு குறைவான மக்கள் இறந்துள்ளதை நினைக்கும் போது,
புட்டின், சாதுரியமாக... பொது மக்களின் இழப்பை தவிர்த்துள்ளது,
அவரின் பெருந்தன்மையை காட்டுகின்றது. 👍
இதற்காகவே... அவருக்கு, நோபல் பரிசு கொடுக்க வேண்டும்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், தொடர்ந்து வருகின்றோம்........!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

84) "Mariupol is now just hell": What to know about the deteriorating  situation in the Ukrainian city

Ukraine: Situation in encircled city of Mariupol 'critical' |  Russia-Ukraine war News | Al Jazeera

Mariupol in ruins as residents flee besieged city | Reuters.com

Ukraine war: Why Kherson and Mariupol are key to Russian success - BBC News

Photos: Mariupol residents escape besieged, devastated city | Gallery News  | Al Jazeera

Ukraine war: 'Tanks in streets' as fighting hits Mariupol centre - BBC News

Krieg in der Ukraine: Mariupol offenbar eingekesselt | tagesschau.de

Ukraine war: Residents return to shattered homes in Mariupol | World News |  Sky News

ICRC warns besieged Ukrainian city Mariupol faces 'worst-case scenario' as  it pushes for humanitarian action - ABC News

மரியபோல் நகரத்தை.... 
புட்டினின், ரஷ்ய ராணுவம்   இவ்வளவு  சல்லடை போட்டு தாக்கியும்...
ஒரு மாத காலத்தில்... உக்ரைன் என்ற  நாடு முழுக்க நடந்த போரில்,
1000`ற்கு குறைவான மக்கள் இருந்துள்ளதை நினைக்கும் போது,
புட்டின், சாதுரியமாக... பொது மக்களின் இழப்பை தவிர்த்துள்ளது,
அவரின் பெருந்தன்மையை காட்டுகின்றது. 👍
இதற்காகவே... அவருக்கு, நோபல் பரிசு கொடுக்க வேண்டும்.

என்னால் கொடுக்கப்பட்டுள்ள தகவல் UNHCR ன் March 23ம் திகதி அறிக்கை. இதில் எனது விருப்பு வெறுப்பு எதுவும் இல்லை. 

அழிவுகளை யாருமே நியாயப்படுத்த முடியாது.

அதற்காக 150,000 ஆயிரம்பேர் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்காலை மொத்தமாக ஆயிரத்திற்கும் குறைவான மககள் கொல்லப்பட்டுள்ள  யுக்க்ரேனுடன் ஒப்பிடுவது எமது அழிவை/இனப்படுகொலையை சிறுமைப்படுத்தும் செயல் என்பது எனது நிலைப்பாடு.

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நியூயோர்க் பங்கு சந்தை வெள்ளி 4 மணிக்கு மூட, சில options, swaps நடந்தேறிய பின், திங்கள் 8 EST க்கு முதல் எதாவது எதிர்வினை காட்டப்படலாம் என்கிறனர் சிலர். மீள நேற்று நான் எழுதியபோது சரிய தொடங்கிய எண்ணை 82 இல் தரித்து நிற்கிறது. சந்தை தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை என நினைத்தால் 76 க்கு வந்திருக்கும்.
    • நல்லா கேட்டியள் போங்கோ... நானும் எனக்கு கீழே வேலை செய்வதற்கு முதற்கட்டமாக ஒரு மூன்று பேரை தயார் செய்ய ஒரு வருடமாக முக்கிக் கொண்டு நிக்கிறன். இந்த முறை மட்டும் கிடைக்கவில்லை என்றால் பிலிப்பைன்ஸில் கைக்கும் காலிற்கும் இருக்கிறார்கள் ஆட்கள் மொத்தமாக அங்கே நிறுவனத்தை தொடக்கிவிட்டு கிழக்கில் தொடங்கும் எண்ணத்தை ஊத்தி மூட வேண்டியதுதான். ரொம்ப நாளைக்கு நிறுவனத்திற்கு சாக்கு சொல்ல முடியாது. இவ்வளவிற்கும் சம்பளம் USD இல் ஆரம்பமே 1.5-2 லகரத்தை தொடலாம்
    • போட்டியில் கலந்துகொண்ட @ஈழப்பிரியன் ஐயா வெற்றிபெற வாழ்த்துக்கள்! இன்னும் மூன்று பேர் தேவை!
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG LSG   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH Select 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         LSG 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         LSG 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JOS BUTTLER 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         CSK 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         VIRAT KOHLI 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JOS BUTTLER 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பகிர்வுக்கு நன்றி. டொமினோஸ், பீட்சா ஹட் இரெண்டிலும் தக்காளி சோஸ்தான் கொடுத்தார்கள். யாழ்பாணத்து அரிய வகை ஏழைகள் இப்படி எல்லாம் சந்தோசமாக இருப்பதை பார்க்க - சிலருக்கு கரோலினா ரீப்பர் சோஸ் சாப்பிட்டது போல உறைக்கப்போகுது🤣. # எரியுதடி மாலா
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.