Jump to content

மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

ரஞ்சித்,

நீண்டகாலம் பழகிய உரிமையில் சொல்கிறேன். 

நீங்களும் விடை பெற வேண்டிய காலம் அண்மித்து விட்டது.

Save your sanity 🙏🏾.

இது உங்களுக்கே ஓவராய்த் தெரியல்ல ...ரஞ்சித் தன்னுடைய ஆதங்கத்தை கட்டுரையாய் எழுதுகிறார் ...அதை எல்லோரும் ஏற்க வேண்டும் என்று இல்லை ....உங்கட கதையை பார்த்தால் எல்லோரும் ஆமாம் பாட்டு பாடணுமாக்கும் ...அவரை யாழுக்கு வர வேண்டாம் என்று சொல்ல நீங்கள் யார் ?...மற்றவர்களை துரத்தி விட்டுட்டு  நீங்கள் மட்டும் திரும்ப  வருவீர்களாக்கும்😫 
 

  • Like 5
Link to comment
Share on other sites

  • Replies 187
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் கோசான்

இந்த வார்த்தைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

யாழில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருக்கிறீர்கள்.

தயவு செய்து உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.
இதுவரை காலமும் ரஞ்சித்தின் ஆக்கங்களுக்கு எல்லோரும் மிகுந்த ஆதரவு கொடுத்தே வந்துள்ளனர்.
ஆக இந்த உக்ரேன் ரசிய போரில் அவரவர் தங்கள் கருத்தை வைக்கிறார்கள்.இதனால் புரிந்திராத எத்தனையோ விடயங்கள் அறியக் கூடியதாக உள்ளது.
நன்றி.

வணக்கம் அண்ணா. கண்டது சந்தோசம்.

இங்கே நான் ரஞ்சித்துக்கு எழுதியது என் மனதில் பட்டது.

யாழில் எனக்கு இருப்பதாக நீங்கள் சொல்லும் இடம், அதை நான் தாழ்த்தி கொள்வது இவை எதையும் விட ரஞ்சித்தின் மன நிம்மதி எனக்கு முக்கியமாக பட்டதால் எழுதிய வார்த்தைகள் அவை.

அதை அவர் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம்  ஏதுமில்லை. 

 

28 minutes ago, ரதி said:

இது உங்களுக்கே ஓவராய்த் தெரியல்ல ...ரஞ்சித் தன்னுடைய ஆதங்கத்தை கட்டுரையாய் எழுதுகிறார் ...அதை எல்லோரும் ஏற்க வேண்டும் என்று இல்லை ....உங்கட கதையை பார்த்தால் எல்லோரும் ஆமாம் பாட்டு பாடணுமாக்கும் ...அவரை யாழுக்கு வர வேண்டாம் என்று சொல்ல நீங்கள் யார் ?...மற்றவர்களை துரத்தி விட்டுட்டு  நீங்கள் மட்டும் திரும்ப  வருவீர்களாக்கும்😫 
 

கண்டது சந்தோசம் ரதி அக்கா.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

 

 

கண்டது சந்தோசம் ரதி அக்கா.

உங்களை கண்டது சந்தோசம் ...நான் இப்படி எழுதிட்டேன் என்று திரும்பவும் கோவிச்சுக் கொண்டு போகாதீங்கோ🙂 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

உங்களை கண்டது சந்தோசம் ...நான் இப்படி எழுதிட்டேன் என்று திரும்பவும் கோவிச்சுக் கொண்டு போகாதீங்கோ🙂 

 

அவர் எங்க போனார்?

நீங்க வேற.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இங்கே நெடுக்ஸ் தான் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டார் போல இருக்கிறது.

ரஞ்சித் முதல் எழுதிய இரு பந்தியிலும் ரசிய உக்ரேன் போரைப் பற்றி எதுவுமே எழுதவில்லை.

ஆடறுக்க முதல் என்னவோ அறுத்த மாதிரி போகுது.

தலைப்பே உள்ளடக்கம் எப்படி அமையப் போகிறது என்று செப்பிவிட்டது.

எம்மீதான இன அழிப்புப் போரில் நேரடிப் பங்களிப்பு செய்த உக்ரைன்.. எம் மக்கள் மீது எரிகுண்டு எனும்.. பொஸ்பரஸ் குண்டு வீசியவர்கள்..இன்று தங்கள் மீது பொஸ்பரஸ் குண்டு வீசியதாகச் சொல்லி மேற்கு நாடுகளிடம் பல்வேறு இராணுவ உதவிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மேற்கு ஊடகங்களும் உக்ரைனின் டொன்பாஸ் (DONBAS) ரஷ்சிய மொழி பேசும் மக்களின் இன அழிப்பை மறைத்தும் குறைத்தும் பேசி வருகின்றன. நாமும் அதற்கு இசைவது போல் பக்கச் சார்புக் கட்டுரைகள் வடித்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது பொருண்மிய தடையும்.. தொடர் குண்டு வீச்சும் நடத்தி மக்களை வவுனியா இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இழுத்த போது இதே மேற்குலக ஊடகங்கள் சிங்கள அரசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தன. மக்கள் விடுவிப்பு என்றும் புலிகள் மனிதக் கேடயமாக மக்களை பாவிப்பதாகவும் உச்சரித்தன. இன்று ரஷ்சியா அப்படிச் செய்வதாக உக்ரைன் சொல்லும் போது... ரஷ்சியா குண்டு வீசி மக்களை தன் பக்கம் இழுப்பதாக குற்றம் சாட்டுகின்றன. 

இது மேற்குலகின் இரட்டை வேடத்தனத்திற்கு நல்ல உதாரணமும் கூட. அப்படியான மேற்குலக செய்தி ஆதிக்கங்களின் அடிப்படையில்.. எமது மக்களின் வலியை இழப்பை அழிவை தவறான ஒப்பிடலுக்குள் கொண்டு செல்வது எம் மக்களின் வலியை இழப்பை மலினப்படுத்தும்.. அவர்களின் நீதிக்கான குரலை ஓரங்கட்டுவதுமாகிவிடும்.

உக்ரைன் - ரஷ்சிய போரின் உள்..வெளி நோக்கம் வேறானது. எமக்கு தெரியாத பலதும் அதற்குள் உண்டு.

ஆனால்.. எம் மக்கள் மீது எம் மண்மீதும் திணிக்கப்பட்ட போர் மற்றும் இனவழிப்பை தெளிவாகத் தெரிந்திருந்தும்.. அதனை புலிகளோடு சேர்த்து கேள்விக்குட்படுத்தியவர்கள்.. உக்ரைனுக்கு வெள்ளையடிப்பது ஏனோ..??!

எம் மக்களைப் பொறுத்த வரை.. உக்ரைன் மற்றும் ரஷ்சியாவின் தமிழின அழிப்பிலான  பங்களிப்பு அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளின் பங்களிப்பில் இருந்தும் சற்றும் குறைந்ததல்ல. 

Edited by nedukkalapoovan
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

ரஞ்சித்,

நீண்டகாலம் பழகிய உரிமையில் சொல்கிறேன். 

நீங்களும் விடை பெற வேண்டிய காலம் அண்மித்து விட்டது.

Save your sanity 🙏🏾.

வணக்கம் கோஷான்,

உங்களை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி. உக்ரேன் பிரச்சினைபற்றிய விவாதங்கள் நடந்தபோது நீங்கள் இல்லாமையினை உணர்ந்தேன்.

உங்களின் புட்டினும் புதுமாத்தலனும் படித்தேன். உண்மையில் சுட்டு விட்டது. ரஸ்ஸிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் உக்ரேனியர்கள் எங்கே, யுத்தம் நடக்கும்போது புலிகளிடமும் , தப்பியோட முடியாதவர்களிடமும் போராட்டத்தைத் திணித்துவிட்டு  "நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு தப்பியோடி வந்த நான் எங்கே என்று எண்ணிப்பார்த்துக்கொண்டேன்.

நீங்கள் கூறியதுபோல அந்நியப்பட்டுவிடுவேன் என்கிற அச்சம் இப்போது வருகிறது. அதற்காக நான் நினைப்பதை எழுதாமலும் இருக்கமுடியவில்லை. சிறுகச் சிறுக சேர்த்த பலர் விலகிச் செல்லவும் சந்தர்ப்பம் இருப்பதாக நினைக்கிறேன். 

பார்க்கலாம், எதுவரை என்னால் முடிகிறதென்று.

உங்களின் ஆதங்கத்திற்கும், உண்மையான கரிசணைக்கும் எனது நன்றிகள். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இங்கே நெடுக்ஸ் தான் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டார் போல இருக்கிறது.

ரஞ்சித் முதல் எழுதிய இரு பந்தியிலும் ரசிய உக்ரேன் போரைப் பற்றி எதுவுமே எழுதவில்லை.

ஆடறுக்க முதல் என்னவோ அறுத்த மாதிரி போகுது.

ரஞ்சித் 

நெடுக்ஸ் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டாரே தவிர அவரையோ யாரையுமே கருத்தெழுதக் கூடாது என்று நீங்கள் சொல்லது மிகவும் தவறு.

இது கோவிலில் நடக்கும் அன்னதானம் மாதிரி.யார்யார் சாப்பிட வேண்டும் எம்மால் உத்தரவிட முடியாது.

வணக்கம் கோசான்

இந்த வார்த்தைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

யாழில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருக்கிறீர்கள்.

தயவு செய்து உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.
இதுவரை காலமும் ரஞ்சித்தின் ஆக்கங்களுக்கு எல்லோரும் மிகுந்த ஆதரவு கொடுத்தே வந்துள்ளனர்.
ஆக இந்த உக்ரேன் ரசிய போரில் அவரவர் தங்கள் கருத்தை வைக்கிறார்கள்.இதனால் புரிந்திராத எத்தனையோ விடயங்கள் அறியக் கூடியதாக உள்ளது.
நன்றி.

வணக்கம் அண்ணா,

யாழில் எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்து ஊக்கப்படுத்துபவர்களில் நீங்கள் முக்கியமானவர். சிலவேளைகளில் எனது கருத்துக்களுடன் ஒத்துப்போக முடியவில்லையென்றாலும்கூட, அதை எழுதுவதற்கான ஆதரவினை நீங்கள் தர எப்போதுமே பின்னின்றதில்லை. அதற்கு முதற்கண் எனது நன்றிகள்.

உக்ரேன் பிரச்சினை ஆரம்பித்தது முதல் நான் எழுதிவரும் கருத்துக்களை நிச்சயம் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இப்பிரச்சினை தொடர்பான உங்களின் நிலைப்பாட்டையும், நீங்கள் பெரும்பாலும் மெளனமாக இருந்தாலும் கூட என்னால் ஓரளவிற்கு அனுமானிக்க முடிந்தது. 

நெடுக்காலபோவான் எனது தலைப்பை சரியாகப் புரிந்துகொண்டுதான் தனது கருத்தை முன்வைத்திருக்கிறார். ஏனென்றால், நான் நிச்சயம் முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும், மரியோபுல் அவலத்தையும் ஒப்பிட்டு எழுதுவதற்காகவே இத்திரியினை ஆரம்பித்தேன். என்ன, பலரும் வந்து விமர்சிப்பார்கள் என்பதை நான் எதிர்பார்த்திருக்கவேண்டும், அது எனது தவறுதான். சொந்த ஆக்கம் என்பதால் விமர்சனம் இருக்காது என்று இருந்துவிட்டேன்.

நெடுக்காலபோவான் செய்தது விளங்கிக்கொள்ளக் கூடியதுதான். ஆனால் என்ன, என்னை முழுவதுமாக எழுதிமுடிக்க விடாது அவரே ஆரம்பித்துவிட்டார். சிலவேளை இத்திரியின் பாதை எப்படியிருக்கப்போகிறதென்பதை முன்பே அனுமானித்ததால் அவர் இதைனச் செய்திருக்கலாம். 

சரி, எவை எப்படியிருப்பினும், மீண்டும் உங்களின் ஆதரவிற்கு நன்றியண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

மரியபோல் நகரத்தை.... 
புட்டினின், ரஷ்ய ராணுவம்   இவ்வளவு  சல்லடை போட்டு தாக்கியும்...
ஒரு மாத காலத்தில்... உக்ரைன் என்ற  நாடு முழுக்க நடந்த போரில்,
1000`ற்கு குறைவான மக்கள் இறந்துள்ளதை நினைக்கும் போது,
புட்டின், சாதுரியமாக... பொது மக்களின் இழப்பை தவிர்த்துள்ளது,
அவரின் பெருந்தன்மையை காட்டுகின்றது. 👍
இதற்காகவே... அவருக்கு, நோபல் பரிசு கொடுக்க வேண்டும்.

இது யுத்தமல்ல சிறித்தம்பி.
ரஷ்யா தனது பிராந்திய நலனுக்காக / தன்னை பாதுகாக்க ஒரு இராணுவ நடவடிக்கையை செய்கின்றது. உக்ரேன் தனது ஐரோப்பிய யூனியன் பிரவேசத்தையும் நேட்டோ அங்கத்துவ  விருப்பத்தையும்  நீண்ட காலமாகவே தெரிவித்து வருகின்றது. ஆனாலும் இதன் பக்க விளைவுகளை அங்கெலா மேர்க்கல் நன்கு அறிந்து வைத்திருந்தார். இதை பிரான்ஸ்சும் நன்கு அறிந்து வைத்திருந்தது.இதனாலேயே உக்ரேனை சேர்ப்பதை தட்டிக்கழித்து வந்துள்ளனர்.. இதை பொறுக்காத அமெரிக்கா உக்ரேனை உசுப்பேற்றி இப்போது இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. ஐரோப்பிய யூனியனுக்கு விழுங்கவும் துப்பவும் முடியாத இக்கட்டான நிலை. காரணம் உலக பொலிஸ் அண்ணன் அமெரிக்காவின் பேச்சை தட்ட முடியாதல்லவா?

அமெரிக்காவின் விருப்பம் ஐரோப்பா பலம் பெறக்கூடாது. ஐரோப்பிய யூனியன் ரஷ்யாவுடன்  பொருளாதார நடவடிக்கைகளில் கூட்டு வைத்தால் தன்னலத்துக்கு கேடு என்பது அமெரிக்காவுக்கு தெரியும். இதனாலேயே குட்டையை குழப்பி சுகம் காண்கின்றது.இது விரல் சூப்பும் குழந்தைக்கும் தெரியும்.

பிராந்திய நலன் பற்றி அமெரிக்கா சிந்திக்கலாம்.
பிராந்திய நலன் பற்றி சீனா சிந்திக்கலாம்.
பிராந்திய நலன் பற்றி ஜப்பான் சிந்திக்கலாம்.
பிராந்திய நலன் பற்றி இந்தியா சிந்திக்கலாம்.
ஆனால் தன் பிராந்திய நலன் பற்றி ரஷ்யா சிந்தித்தால் எங்களுக்கு கண் எல்லாம் கரைய வெளிக்கிடும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித்,

நீங்கள் அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறீர்கள், புரிகிறது, ஆணாலும் உடல் நலத்துக்கு அவ்வளவு நல்லதல்ல

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ரஞ்சித் said:

நான் நிச்சயம் முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும், மரியோபுல் அவலத்தையும் ஒப்பிட்டு எழுதுவதற்காகவே இத்திரியினை ஆரம்பித்தேன். என்ன, பலரும் வந்து விமர்சிப்பார்கள் என்பதை நான் எதிர்பார்த்திருக்கவேண்டும்,

ஓம் மரியோபுலில் நடப்பது புரினின் மனிதமீட்பு  மருத்துவமனைகள் புனரமைப்பு பணிகள். அதை  நீங்கள் முள்ளிவாய்க்கால் அவலத்துடன்   ஒப்பிட்டு எழுதும் போது பலர் வந்து  விமர்சிப்பார்கள் தான்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

உங்களை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி. உக்ரேன் பிரச்சினைபற்றிய விவாதங்கள் நடந்தபோது நீங்கள் இல்லாமையினை உணர்ந்தேன்.

That time Trump called out the corruption in Ukraine with Zelensky sitting next to him... The look on his face is priceless. I can't wait for this to unravel...

 

 

 

கண்ட கண்ட களிசறை யுத்தங்களோடு எமது இனவிடுதலை போரை ஒப்பிடலாகாது.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நினைவூட்டலுக்காக......

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் எந்தவொரு வகையிலும் உக்ரேனுக்கு பொருளாதாதார தடைகளை விதிக்கவில்லை. மாறாக பல வியாபர  பரிமாற்றங்கள் மேற்குலகுடன் உண்டு. ரஷ்யாவும் இவர்களுக்கு தடை விதிக்கவில்லை. எல்லாம் கொழுப்பு தலைக்கேறியதின் விளைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனில் ரஷ்யமொழி பேசும் மக்கள் வாழும் வசிப்புடங்கள் பாடசாலைகள் மீது உக்ரைனால் ஏவப்பட்ட செல்களினால் இறந்துபோன குழந்தைகள் மக்களையும் இப்படி முள்ளி வாய்க்கால் அவலத்துடன் இணைத்து கட்டுரை எழுதலாம்.. அவரவர்க்கு அவரவர் நியாயம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

# According to the statement's description, the Ukrainian military forces bombarded the city with heavy artillery, mortars, grenades, and tanks. "People are dying," read the statement, as it emphasized that the armed forces of Ukraine fired at least  1 700 shells in residential areas.

https://www.telesurenglish.net/news/DPR-Claims-Shelling-Against-Donetsk-From-Ukraine-20220221-0013.html

 

#Donetsk city centre came under shelling of the Armed Forces of Ukraine last night. The Ukrainian rockets, reportedly, fell near the Donbass Arena stadium.
“The park named after Leninsky Komsomol, the territory of the Donbass Arena stadium, as well as the park area of school No. 54 in Donetsk were under artillery fire,”


 "Dozens of people were injured as a result of shelling by the Ukrainian Armed Forces and national battalions. Over the past 24 hours, 28 civilians were injured. The severity of injuries vary. Donetsk was under fire all night, and just a few hours ago, one of the districts of the city was shot at more than 20 times."
https://www.euronews.com/2022/03/23/russian-state-tv-reports-donbass-arena-stadium-was-under-fire-last-night

# Ukrainian military fires 200 shells at Donetsk Republic over three hours

WorldFebruary 19, 16:31 

The situation at the line of engagement in Donbass escalated on the morning of February 17

DONETSK, February 19. /TASS/. The Ukrainian armed forces fired 200 munitions during their bombardments of the territory of the self-proclaimed Donetsk People’s Republic (DPR) during three hours, employing heavy artillery guns, the DPR mission to the Joint Ceasefire Control and Coordination Center reported on Saturday.

https://tass.com/world/1406417
 

# The situation along the contact line in eastern Ukraine took a turn for the worse on Thursday morning

DONETSK, February 19. /TASS/. The self-proclaimed Donetsk People’s Republic on Saturday said shelling by Ukraine damaged a water supply station.

The water-pumping station in Vasilievka is an important part of the system that supplies water for population centers on both sides of the conflict.

"We have urgent information that the Vasilievka water-pumping station has been damaged," power supply in the area has been disrupted and a backup water supply system has been utilized, the DPR’s office at the Joint Center for the Control and Coordination of the Ceasefire Regime said on Telegram.

The situation along the contact line in eastern Ukraine took a turn for the worse on Thursday morning. The DPR and LPR reported some of the most intensive shelling by Ukraine’s armed forces in recent months. There have been no reports of deaths but one civilian woman was injured and the shelling damaged some civilian facilities.

https://tass.com/world/1406319

 

Edited by பாலபத்ர ஓணாண்டி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் இந்தப்பகுதியில் விடுதலைக்காகப்போராடும் மக்களை கிளர்ச்சியாளர்கள் எண்டு சொல்லி குண்டுவீசி தாக்குது.. இலங்கை அரசும் இதைக்கூறித்தான் எம்மீது குண்டுவீசியது.. அப்படி பார்க்கபோனால் முள்ளிவாய்க்கால் ஒப்பீடு ரஷ்யா என்னும் வல்லரசுக்கும் மேற்குலக வல்லரசுகளால் ஆயுதம் வழங்கி பின்னின்று அனுப்பப்படும் உக்ரேனிய வல்லரசுக்கும் நடக்கும் யுத்தத்துக்கு அல்ல, நடுவில் கிடந்து நசுங்கி உக்ரேனிய படைகளிடம் செல்லடிவாங்கி சாகும்  சிறுபான்மை ரஷ்யமக்களுக்காகவும் உக்கிரைன் படையினரின் தாக்குதலில் பெரும் அழிவுகளை சந்தித்துக்கிடக்கும் அவர்களின் நகரங்களுக்காகவும்தான் நாம் முள்ளிவாய்க்கால் ஒப்பீட்டு கட்டுரை எழுதவேண்டும்.. ஏனெனில் மேற்குலகின் அனைத்து ஊடகங்களாலும் மறைக்கப்பட்டும் மறக்கப்பட்டும் உள்ள அப்பாவி மக்கள் அவர்கள்.. ஒட்டுமொத்த உலகாலும் கைவிடப்பட்டவர்கள்.. உக்கிரைனுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் யாழ்கள உறுப்பினர்கள் இந்த மக்களைப்பற்றி ஒருவார்த்தைகூட எழுதி யாமறியோம்.. அதிகாரம் உள்ளவர்களின் பக்கம் சாய்ந்து அவர்களின் சூவைத்துடைப்பது இந்தியாவில் பார்ப்பணர்களுக்குதான் கைவந்த கலை.. அது நமக்கு எதுக்கு..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உக்ரைன் இந்தப்பகுதியில் விடுதலைக்காகப்போராடும் மக்களை கிளர்ச்சியாளர்கள் எண்டு சொல்லி குண்டுவீசி தாக்குது.. இலங்கை அரசும் இதைக்கூறித்தான் எம்மீது குண்டுவீசியது.. அப்படி பார்க்கபோனால் முள்ளிவாய்க்கால் ஒப்பீடு ரஷ்யா என்னும் வல்லரசுக்கும் மேற்குலக வல்லரசுகளால் ஆயுதம் வழங்கி பின்னின்று அனுப்பப்படும் உக்ரேனிய வல்லரசுக்கும் நடக்கும் யுத்தத்துக்கு அல்ல, நடுவில் கிடந்து நசுங்கி உக்ரேனிய படைகளிடம் செல்லடிவாங்கி சாகும்  சிறுபான்மை ரஷ்யமக்களுக்காகவும் உக்கிரைன் படையினரின் தாக்குதலில் பெரும் அழிவுகளை சந்தித்துக்கிடக்கும் அவர்களின் நகரங்களுக்காகவும்தான் நாம் முள்ளிவாய்க்கால் ஒப்பீட்டு கட்டுரை எழுதவேண்டும்.. ஏனெனில் மேற்குலகின் அனைத்து ஊடகங்களாலும் மறைக்கப்பட்டும் மறக்கப்பட்டும் உள்ள அப்பாவி மக்கள் அவர்கள்.. ஒட்டுமொத்த உலகாலும் கைவிடப்பட்டவர்கள்.. உக்கிரைனுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் யாழ்கள உறுப்பினர்கள் இந்த மக்களைப்பற்றி ஒருவார்த்தைகூட எழுதி யாமறியோம்.. அதிகாரம் உள்ளவர்களின் பக்கம் சாய்ந்து அவர்களின் சூவைத்துடைப்பது இந்தியாவில் பார்ப்பணர்களுக்குதான் கைவந்த கலை.. அது நமக்கு எதுக்கு..

இப்படியொரு பக்கம் இருப்பது பலருக்குத் தெரியவே வாய்ப்பில்லை.

ஏனென்றால் நாங்கள் எங்கள் விருப்பு வெறுப்புகளுக்கேற்பவே செய்திகளையும் வாசிப்போம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்திரி எத்திசையில் பயணிக்கக் கூடாது என்று நான் அஞ்சி , மற்றையவர்களின் விதண்டாவாதங்களை இங்கே செய்யவேண்டாம் என்று கேட்டேனோ, அது இப்போது தத்ரூபமாக நடக்கிறது.

இதை எண்ணித்தான் ஒரு பொதுவான வேண்டுகோளை முன்வைத்தேன். இது எனது சொந்த ஆக்கம், குறைந்தது நான் எழுதியதை முடிக்கும்வரையிலாவது என்னை எழுத விடுங்கள் என்று. ஆனால், நிர்வாகமே, "அப்படியில்லை, யாரும் எழுதலாம்" என்று சொன்னதன் பிறகு தமது பக்க நியாயங்கள் என்று ஆளாளுக்கு எழுதுகிறார்கள். உங்களின் சொந்தக் கருத்துக்களை, நியாயங்களை தனியே ஒரு திரி திறந்து எழுதலாமே என்றுகூடக் கேட்டுப் பார்த்தாயிற்று, ஆனால் எவரும் கேட்பதாக இல்லை. 

சரி, உங்கள் விருப்பத்தின்படியே ஆகட்டும். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரஞ்சித் said:

இத்திரி எத்திசையில் பயணிக்கக் கூடாது என்று நான் அஞ்சி , மற்றையவர்களின் விதண்டாவாதங்களை இங்கே செய்யவேண்டாம் என்று கேட்டேனோ, அது இப்போது தத்ரூபமாக நடக்கிறது.

இதை எண்ணித்தான் ஒரு பொதுவான வேண்டுகோளை முன்வைத்தேன். இது எனது சொந்த ஆக்கம், குறைந்தது நான் எழுதியதை முடிக்கும்வரையிலாவது என்னை எழுத விடுங்கள் என்று. ஆனால், நிர்வாகமே, "அப்படியில்லை, யாரும் எழுதலாம்" என்று சொன்னதன் பிறகு தமது பக்க நியாயங்கள் என்று ஆளாளுக்கு எழுதுகிறார்கள். உங்களின் சொந்தக் கருத்துக்களை, நியாயங்களை தனியே ஒரு திரி திறந்து எழுதலாமே என்றுகூடக் கேட்டுப் பார்த்தாயிற்று, ஆனால் எவரும் கேட்பதாக இல்லை. 

சரி, உங்கள் விருப்பத்தின்படியே ஆகட்டும். 

நீங்கள் கண்டுகொள்ளமால் உங்கள் ஆக்கம்களை வையுங்கள் எல்லாம் முடிந்தபின் கருத்துக்களை படியுங்கள் பிரச்சனை முடிந்தது .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி, தூற்றுபவர்களும்,பிழைகாண்பவர்களும் ஒருபக்கம் எழுதட்டும். அது அவர்களின் வேலை.

நான் எனது திரி தொடங்கிய நோக்கத்திலிருந்து தொடர்ந்து பயணிக்கலாம்.

உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் காரணங்கள் என்று ரஸ்ஸியப் பயங்கரவாத அரசினால் முன்வைக்கப்படும் கற்பனைக் காரணங்கள் பற்றி தெளிவுபடுத்துவது இத்திரியின் நோக்கத்திற்கு அவசியமானது என்பதால், அதுகுறித்தும் சில விளக்கங்களைக் கொடுத்துக்கொண்டே தொடர்ந்தும் பயணிக்கலாம். மேற்குலக ஊடகங்கள் பொய்யுரைப்பதாகவும், இப்போரின் மறுபக்கம் என்றொன்று இருக்கிறது, அது ரஸ்ஸியாவின் நடவடிக்கையினை நியாயப்படுத்தும் என்று நம்பிக்கொண்டு இக்களத்தில் எழுதிவரும் சிலருக்காகவும் நான் இதனை இங்கே தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் என்று உணர்வதாலும் இதைச் செய்யவேண்டியிருக்கிறது.

உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பு தொடங்கிய காலத்திலிருந்து ரஸ்ஸியாவுக்குச் சார்பான செய்திச் சேவைகள் மற்றும் இணையத்தளங்களினூடாக பரப்பப்பட்டுவரும் பொய்யான பரப்புரைகளையும், காரணங்களையும் களைவது மிக அவசியம். 

2014 ஆம் ஆண்டில் சட்டத்திற்கு முரணான வகையில் கிரிமியாவை ஆக்கிரமித்துக்கொண்டது முதல் இன்று உக்ரேனில் முழுமையான ஆக்கிரமிப்புப் போரை கட்டவிழ்த்துவிட்டதுவரையான இக்காலப் பகுதியில் ரஸ்ஸிய அரசு தனது உள்ளூர் மக்களை நோக்கியும், தனது அயல் நாடுகள் நோக்கியும் உக்ரேன் மீதான தனது ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் தொடர்ச்சியான, மிகவும் பாரதூரமான பொய்ப் பிரச்சாரத்தினை முடுக்கிவிட்டிருக்கிறது. இந்தப் பொய்ப்பிரச்சாரங்கள் மூலம் உலக மக்களின் அபிப்பிராயம் தன் பக்கம் திரும்பலாம் என்று அது எதிர்பார்க்கிறது. 

ரஸ்ஸியாவில் வேண்டுமென்றே முடுக்கிவிடப்பட்டிருக்கும் விஷமப் பிரச்சாரங்களை ஒவ்வொன்றாக நாம் களையலாம்.

விஷமப் பிரச்சாரம் 1 : உக்ரேனில் நிலவும் நிலைமையே இந்த ஆக்கிரமிப்பிற்குக் காரணமாகும். உக்ரேனின் கிழக்கில் வசிக்கும் ரஸ்ஸிய மொழி பேசும் சிறுபான்மையினருக்கெதிரான உக்ரேனின் நடவடிக்கைகளே இந்த ஆக்கிரமிப்பைத் தூண்டிவிட்டன. ரஸ்ஸியாவும் உக்ரேனும் ஒரே நாட்டு, ஒரே தேசம், ஆகவேதான் உக்ரேனின் கிழக்கில் மக்களைக் காக்க ரஸ்ஸியா தலையிட வேண்டியதாகியது. 

இந்தப் பொய்யுரையினை மெய்யாக்க ரஸ்ஸிய அரசு ஊடகங்கள் கடுமையாக முயன்று வருகின்றன. தன் மொழிபேசும் மக்கள் மீது உக்ரேன் இனவழிப்பை நடத்துவதாக அவை தொடர்ச்சியாக விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதுடன் உக்ரேனை ஒரு வில்லனாக, ரஸ்ஸியாவின் பிரதான எதிரியாக உள்நாட்டிலும், தனது ஆதரவாளர்களிடையேயும் விம்பப்படுத்தி வருகின்றன. 2 ஆம் உலகப் போரில் நாஜிக்களுடனான போரில் ரஸ்ஸியாவிற்கு ஏற்பட்ட மனக்கசப்பை மீண்டும் கிளறியெடுத்து, மக்களின் உணர்வுகளுடன் விளையாடி, உக்ரேனை புதிய நாஜிகள் என்று ஒப்பிடுவதன் மூலம் தனது பொய்ப்பிரச்சாரத்தை ரஸ்ஸியர்களிடையே முன்கொண்டு செல்கிறது ரஸ்ஸிய அரசு. 

ரஸ்ஸிய அரச ஊடகங்களில் வெளிவந்த பொய்ப்பரப்புரைகளில் ஒன்றினை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், ரஸ்ஸிய சிறுவன் ஒருவனை உக்ரேனிய ராணுவத்தினர் சிலுவையில் அறைந்து கொன்றதாக ஒரு செய்தியாளர் கூறிவிட, அப்பொய்ச் செய்தியை அனைத்து ரஸ்ஸிய ஆதரவுத்தளங்களும் காவித் திரிந்தன. ஆனால், இப்படியான நிக்ழவு உண்மையிலேயே நடக்கவில்லை என்பதுடன், இந்நிக்ழவு நடந்ததற்கான காரணமாக ரஸ்ஸியா முன்வைத்த காரணமும் மிகவும் நகைப்பிற்கிடமானது. 2014 இல் இடம்பெற்றதாக ரஸ்ஸியா புனையும் இந்த புழுகில், சிறுவன் திருடினான் என்பதற்காகவே உக்ரேனியர்கள் அவனை சிலுவையில் அறைந்தார்களாம். ஆனால், இதுபோன்ற பல புரட்டுக்களை ரஸ்ஸிய செய்தி ஊடகங்கள் தொடர்ச்சியாக கட்டவிழ்த்து வருகின்றன. 
ஆனால், உண்மையில் கிழக்கு உக்ரேனில் ரஸ்ஸிய மொழி பேசும் மக்களுக்கெதிரான எந்தவித அச்சுருத்தல்களையும் உக்ரேன் அரசு விடுக்கவில்லை என்று நிலைமையிருக்க, ரஸ்ஸியாவோ அங்கே இனவழிப்பு நடைபெறுவதாக கூக்குரலிட்டு வருகிறது.
கிழக்கு உக்ரேனில் ரஸ்ஸிய மொழிபேசுவோருக்கு எதிராக மனிதவுரிமை மீறள்கள் நடைபெறவில்லையென்பதை ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைக் கவுன்சிலும், ஐரோப்பிய கவுன்சிலும் உறுதிப்படுத்தியிருக்கின்றன. 
மேலும் ரஸ்ஸியாவும் உக்ரேனும் ஒரே தேசம் எனும் பல் நூற்றாண்டுப் பழமைவாதக் கோஷமானது, சுமார் 800 வருடங்களுக்கு முன்னர் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பில் உக்ரேன் உட்பட்டிருந்த வேளையில் உக்ரேனை ஆக்கிரமித்தவர்கள் உக்ரேன் மீது திணித்த ஒரு கொள்கை. அதே கொள்கையினை மீள உயிர்ப்பிக்கும் ஒரு நடவடிக்கையாகவே சுமார் 800 வருடங்களின் பின், தனியான அடையாளங்களைக் கொண்ட, தனித்துவ இனமான, தனிக் கலாசாரத்தைக் கொண்ட உக்ரேனை தன்னுடன் கட்டாயமாக இணைக்க அதே கோஷத்தைப் புட்டின் கையிலெடுத்திருக்கிறார் என்றால் அது மிகையில்லை. 

2014 இல் இருந்து இந்தப் பொய்பரப்புரையினை கடுமையாக முடுக்கி விட்டிருக்கும் புட்டின், உக்ரேன் மீதான தனது ஆக்கிரமிப்பிறகு நியாயம் கற்பிக்க இந்த புனைவினை பாவித்து வருகிறார். சுமார் 800 வருடங்களுக்கு முன்னால் எல்லைகளற்ற ரஸ்ஸிய தேசத்தை 21 ஆம் நூற்றாண்டில் கொண்டுவருவேன் என்று புட்டிங் நினைப்பது சுத்த அயோக்கியத்தனமேயன்றி வேறில்லை. 
உக்ரேன் சுதந்திரமான ஒரு தனிநாடு. தனது வளர்ச்சி எப்பாதையில் செல்லவேண்டும் என்பதைத் தீர்மானிப்பது உக்ரேன் மட்டும்தான். யார் யாருடன் தான் சிநேகம் வைக்கவேண்டும், தனது பாதுகாப்புத்துறையும், வெளிவிவகாரத்துறையும் எத்திசையில் பயணிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது கூட உக்ரேன் தான். அத்துடன், சர்வதேச அமைப்புக்களில் தான் இடம்பெறவேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதும் உக்ரேன் தான். 

ஆனால், அகண்ட ரஸ்ஸிய தேசத்தை சரித்திர காலத்திலிருந்து கிளறியெடுத்து, அதற்கு உயிர்கொடுக்க முனையும் புட்டினும் அவரது பயங்கரவாத அரசும் உக்ரேனின் தனித்தன்மையினைத் தொடர்ச்சியாகக் கேள்வி கேட்டு வருவதுடன், உக்ரேன் என்பது ஒரு சுதந்திரமான நாடு என்பதையும் ஏற்றுக்கொள்ள மறுத்தே வருகின்றனர். 
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஷமப் பிரச்சாரம் 2 : உக்ரேனின் கிழக்கில் வசிக்கும் ரஸ்ஸிய மொழிபேசும் மக்கள் மீது உக்ரேன் அரசு இனவழிப்பினை மேற்கொள்கிறது.

மனிதநேயத்திற்கு எதிரான மிகவும் மோசமான அக்கிரமங்களை உக்ரேன் அரசு செய்வதாகப் பொய்யுரைக்கும் ரஸ்ஸியா, உக்ரேனை மிகப்பெரும் வில்லனான ரஸ்ஸிய மக்களிடையே சித்தரித்து வருகிறது. ஆனால், 1948 ஆம் ஆண்டின் ஜெனீவா மனித உரிமை சாசனத்தின்படி இனவழிப்பு என்பதன் வரைவிலக்கணத்தினை முற்றாக மறைத்து இனவழிப்பு என்பதற்கான புதிய விளக்கத்தினை ரஸ்ஸியா கொடுக்க முயன்று வருவது கண்கூடு. 

ஆனால், புட்டினாலும்,  அரச பயங்கரவாத ஊடகங்களினாலும் பரப்பப்பட்டுவரும் இந்த நகைப்பிற்கிடமான  "இனவழிப்பு" குற்றச்சாட்டை ரஸ்ஸியாவின் சுயாதீன ஊடகங்கள் கண்டுகொள்ள மறுப்பதுடன், இவை அரசினால் புனையப்பட்ட கட்டுக்கதைகள் என்பதையும் பகிரங்கமாகக் கூறி வருகின்றன. உக்ரேனின் நடப்பதாக ரஸ்ஸியா பசப்பும் இனவழிப்பை ஐ நா வின் மனிதவுரிமை ஆணையமோ அல்லது சர்வதேச மனிதவுரிமைகளுக்கான நீதி மைய்யமோ ஏற்றுக்கொள்ள மறுப்பதுடன், ஆண்டுதோறும் வெளியிடப்படும் மனிதவுரிமை அறிக்கையில் உக்ரேனில் நடப்பது இனவழிப்பு எனும் ரஸ்ஸியாவின் தொடர்ச்சியான பரப்புரையினை முற்றாக மறுதலித்தே வருகின்றன. ரஸ்ஸியாவின் இந்தப் பொயான புனைவினையடுத்து, உக்ரேனின் கிழக்கில் ரஸ்ஸியாவினுடனான போரை முடிவிற்குக் கொண்டுவரும் நோக்கில் சர்வதேச நீதிமன்றில் ஆணையொன்றினைக் கேட்டிருக்கும் உக்ரேன், ரஸ்ஸியா கூறுவதுபோன்று அங்கே இனவழிப்பொன்று நடைபெறவில்லையென்பதை எவர் வேண்டுமானாலும் சென்று பார்க்கலாம் என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஷமப் பிரச்சாரம் 3 : டொன்பாஸ் பிராந்தியம் மீது உக்ரேன் இரசாயண, அணுவாயுத ஆயுதங்கள் அடங்கலாக பல தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தத் தயாராகி வருகிறது.


உக்ரேன் ஒருபோதுமே இரசாயண ஆயுதங்களைத் தயாரிக்கவில்லையென்பதுடன், அவற்றை சேமித்தும் வைக்கவில்லையென்பதே உண்மை. இரசாயண ஆயுதங்களைப் பாவிப்பதில்லை எனும் சாசனத்தில் அங்கத்துவம் வகிக்கும் உக்ரேன் இவ்வகையான ஆயுதங்களைப் பாவிக்கும் என்று ரஸ்ஸியா கூறுவது முற்றான பொய்ப்பிரச்சாரமே அன்றி வேறில்லை. 

மேலும் ரஸ்ஸிய அரச ஊடகங்கள் உக்ரேன் வெண்பொசுபரசு ஆயுதங்களைத் தயாரிப்பதாகவும், அவற்றைப் பாவிப்பதாகவும் தொடர்ச்சியான பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அத்துடன், ரஸ்ஸிய உளவுத்துறையுடன் நெருக்கமான டெலிகிராப் சனல் எனும் செய்திச் சேவை, உக்ரேனியர்கள் பெற்றோல்க் குண்டுகளை வீடுகளில் தயாரிப்பதை, "வீட்டில் தயாரிக்கும் அணுவாயுதங்கள்" என்று விஷமத்தனமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. 

ரஸ்ஸியாவின் அரச ஊடகங்களில் அண்மையில் வெளிவந்த "உக்ரேனியர்கள் முன்னாள் அணு உலையான  செர்னோபிலில் அணுவாயுதங்களைத் தயாரிக்கிறார்கள்"  எனும் பொய்ப் பரப்புரை எதுவித சாட்சியங்களையும் முன்வைக்க முடியாத நிலையில் ரஸ்ஸியர்களாலேயே கண்டுகொள்ளாமல் விடப்பட்டதும் நடந்தது. 

இவ்வாறான பரப்புரைகளை மேற்கொள்வதன் மூலம் உக்ரேனிய ராணுவத்தினரை மிக மோசமான வில்லன்களாகவும், ரஸ்ஸிய வீரர்களை காவல் தெய்வங்களாகவும் காட்டியதுடன், செர்னோபில் அணு மின் நிலையத்தை தான் அடாத்தாகக் கைப்பற்றி ஆக்கிரமித்துக் கொண்டதனையும் ரஸ்ஸிய அரசு நியாயப்படுத்தியிருக்கிறது. 

இரசாயண ஆயுதங்களின் பாவனை தொடர்பான ரஸ்ஸிய அரசு மற்றும் ஆரசு சார் ஊடகங்களின் பொய்ப் பரப்புரைகள் நெடுங்காலமாக நடந்துவருபவை. சிரிய சர்வாதிகாரி ஆஸாத்துடன் இணைந்து அப்பாவிச் சிரியர்களின் மீது கடுமையான இரசாயன ஆயுதத் தாக்குதலினை ரஸ்ஸியா மேற்கொண்டு வந்தபோதிலும் அதனை இன்றுவரை ரஸ்ஸியா மறுத்தே வருகிறது. இதுமட்டுமல்லாமல், ரஸ்ஸியாவின் முன்னாள் உளவாளிகளை சர்வதேசமெங்கும் தேடி வேட்டையாடி வரும் புட்டின், இவர்களைக் கொல்வதற்கு இரசாயணங்களையே பாவித்துவருகிறார் என்பதும் ரகசியமல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஷமப் பிரச்சாரம் 4 : டொன்பாஸ் பிராந்தியத்தில் உக்ரேனியர்கள் கொடுஞ்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

உக்ரேன் மீதான தனது ஆக்கிரமிப்பு - அழித்தொழிப்பு யுத்தத்திற்கு ரஸ்ஸியா காரணங்காளாக முன்வைத்து வருபவற்றில் இந்தக் காரணம் மிகவும் முதன்மையானது. கடந்த சில வருடங்களாக ரஸ்ஸிய அரசு ஊடகங்கள் மனம் நெகிழச் செய்யும், உணர்ச்சி ததும்பும் செய்திகளை உள்நாட்டு ரஸ்ஸிய மக்களை நோக்கி முன்வைத்து வருகின்றன. இவ்வாறான உணர்வுபூர்வமான செய்திகளைத் தொடர்ச்சியாக வானலையில் பரவ விடுவதன் மூலம் உக்ரேனியர்கள் மீதான இயல்பான ஆத்திரத்தையும், வன்மத்தையும் உள்ளூர் ரஸ்ஸியர்களிடையே ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். 

ரஸ்ஸிய செய்தி வாசிப்பவர் ஒருவரால் விஷமத்தனமாக வெளியிடப்பட்ட 2014 இன் ரஸ்ஸிய சிறுவனை உக்ரேனியர்கள் சிலுவையில் அறைந்து கொன்றார்கள் எனும் பொய்யுரையினையடுத்து, இதேபோன்ற பல பசப்புரைகளை ரஸ்ஸியர்களைக் கோபப்படுத்தும் நோக்கில் மட்டுமே ரஸ்ஸிய அரசும் புட்டினும் பரப்பி வந்தார்கள். அவற்றில் சிலவான, "மேற்கு நாடுகளின் செல்வந்தர்கள் டொன்பாஸ் பிராந்தியத்திற்கு வந்து, மிருகங்களை வேட்டையாடுவது போன்ற சபாரிகளில் ரஸ்ஸியர்களை வேட்டையாடலாம் என்று உக்ரேன் ஒரு போட்டியை ஆரம்பித்திருக்கிறது" என்பதும், "மேற்குநாட்டவர்கள் டொன்பாஸுக்கு வந்து தூரவிருந்து குறிபார்த்துச் சுடும் போட்டியினை ரஸ்ஸியர்களை இலக்குகளாக வைத்து நடத்தலாம் என்று உக்ரேன் அரசு அறிவித்திருக்கிறது" என்பதுமான மிலேச்சத்தனாமன கற்பனைப் பொய்யுரைகளை ரஸ்ஸியர்களிடையே பரப்பிவருவதன் மூலம் உக்ரேனியர்கள் மீதான  ஆக்கிரமிப்பிற்கு ரஸ்ஸிய மக்களை தன் பின்னால் ஒன்றுதிரட்ட புட்டின் முயன்று வருவதும் கண்கூடு. 
இதேபோல, 2012 இல், ரஸ்ஸிய சிறுவன் ஒருவனை உக்ரேனிய விமானப்படை ட்ரோன் விமானத்தைப் பயன்படுத்திக் கொன்றதாக ரஸ்ஸிய உளவுத்துறை தன்னிடம் கூறியதாக அரச தொலைக்காட்சியொன்றின் செய்தி வாசிப்பவர் போகிற போக்கில் கூறிச்சென்றதும் நடந்தது. இதற்கான காரணமாக அச்சிறுவன் சில ஆவணங்களைப் போலியாகத் தயாரித்தான் என்பதாலேயே உக்ரேனியர்கள் அவனை ட்ரோனைக் கொண்டு தாக்கியதாக வேறு அந்தச் செய்தி வாசிப்பவர் கூறியிருக்கிறார். 

ரஸ்ஸியாவினால் பல்லாண்டுகளாக செய்யப்பட்டுவரும் "நாஜி எதிர்ப்பு" பரப்புரைகளும் இவ்வாறான பொய்யான புனைவுகளும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புடையவை. உக்ரேனை ஆக்கிரமிக்கும் தனது நியாயப்படுத்தல்களில் ரஸ்ஸியா கூறிய ஒரு விடயம் தான்  உக்ரேனிலிருந்து நாஜிகளை முற்றாக துடைத்து அழிப்பதென்பது. ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால், உக்ரேன் அரசு ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவுசெய்யப்பட ஒரு அரசு என்பதுடன், குறைந்தது 8 மில்லியன் உக்ரேனியர்கள் நாஜிகளுக்கெதிரான யுத்தத்தில் கொல்லப்பட்டார்கள் என்பதும் வேண்டுமென்றே புட்டினாலும் அவரது அரச ஊதுகுழல்களாலும் இது மறைக்கப்பட்டு வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித் 

இதுவரை உக்ரேன் பொது மக்களின் துன்பங்களைக் க்ண்டு அதன் காரணமாகத்தான் ரஸ்யா MIது கோபம் கொள்கிறீர்கள் என்றிருந்தேன்.வ்

ஆனால் இப்போதுதான் புரிகிறது உங்கள் நோக்கம் அது அல்ல என்று. 

☹️

Edited by Kapithan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

ரஞ்சித் 

இதுவரை உக்ரேன் பொது மக்களின் துன்பங்களைக் க்ண்டு அதன் காரணமாகத்தான் ரஸ்யா MIது கோபம் கொள்கிறீர்கள் என்றிருந்தேன்.வ்

ஆனால் இப்போதுதான் புரிகிறது உங்கள் நோக்கம் அது அல்ல என்று. 

☹️

உங்களின் புரிதல் தொடர்பாக நான் எதுவும் கூறமுடியாது.

ஆனால் உக்ரேன் மீதான் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பு - அழித்தொழிப்பு யுத்தத்திற்காக அது முன்வைக்கும் பொய்க் காரணங்கள் பற்றி விளக்குவதும், எவ்வகையான பொய்ப்பரப்புரைகளை அது மேற்கொண்டு உக்ரேனியர்களை படுகொலை செய்வதை நியாயப்படுத்தி வருகிறதென்பதை விளக்குவதும் எனது நோக்கம். இதை உங்களால் வேறுவிதமாகத்தான் புரிந்துகொள்ள முடியும் என்றால், நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.