Jump to content

கன்னிக்கால் - Dr. T. கோபிசங்கர்


Recommended Posts

கன்னிக்கால் 

சொந்தத்தில ஒரு கலியாண வீடு , சோடிச்சிட்டு படுக்கேக்க விடியப்பிறம் ரெண்டு மணி ஆகீட்டுது . அப்பிடியே பந்தலுக்க போட்ட நாலு இரும்புக் கதிரையை ஒண்ட விட்டு ஒண்டு வளம் மாறி அடுக்கீட்டு ( உருண்டு விழாம இருக்க) படுத்தது தான் தெரியும் . திடீரெண்டு குளிர்ற மாதிரி இருக்க காலை உள்ளுக்க இழுத்து முழங்காலை மடக்கிக்கொண்டு, கழுத்து வரை சோட்ஸ்க்கு மேல கட்டின சாரத்தால போத்துப் படுக்க , “ விநாயகனே வினை தீர்ப்பவனே “ எண்டு சந்திரன் சவுண்ட் எண்டு எழுதின குழாய்க்கால சீர்காழி பாடத் தொடங்கீட்டார். ஊரில எல்லா நல்லது கெட்டதில சந்திரன் இருப்பார்.

நல்ல காரியங்களுக்கு குடுக்கிற பந்தலை செத்த வீட்டுக்கு சந்திரன் குடுக்கிறேல்லை . பந்தல், சோடனை , கதிரை, amplifier ஓட ரெண்டு speaker எண்டு எல்லாச் சாமாங்களையும் வாடைக்கு எடுக்கக் கூடிய ஒரே இடம் சந்திரன் பந்தல் சேவை தான் . எண்பதுகளின் கடைசிப் பகுதியில் தான் தகரப்பந்தலும் சிங்கப்பூர் சோடினையும் . அதுக்கு முந்தின காலத்தில பந்தல் போடுறது கலியாண வீட்டில முக்கிய வேலை. 

மாப்பிளை வீட்டை பொன்னுருக்கு முடிய பொம்பிளை வீட்டை வந்து கன்னிக்கால் போட்ட உடனயே வேலை தொடங்கீடும். பெரிய பனைமரம் , காட்டுத்தடி , பனஞ்சிலாகை எல்லாம் ஊரில முதலே தேடி எடுத்து வைச்சிடுவினம் .கன்னிக்கால் போட்டு முடிய அங்கால பந்தல் வேலை தொடங்க, இங்கால நாள் பலகாரத்துக்கு அடுப்பு வைப்பினம். முதலில பால் ரொட்டி தான் செய்யிறது .முதல் சுட்ட பால் ரொட்டியை உடைச்சு அடுப்புக்கல்லுக்கு குடுத்திட்டு தான் ஆக்களுக்கு குடுக்கிறது. கலியாணத்துக்கு சுடுற பலகாரத்தில காவாசி கலியாணத்துக்கு முதலே முடிஞ்சிடும். ஒற்றை விழ சுடோணும் எண்டு சுடுற சில பலகாரம் சபைக்கு வராமலே போயிடும். 

அப்ப கலியாணத்துக்கு make up பண்ணிறது எண்டது ஆளுக்கு இல்லை வீட்டுக்குத்தான். கலியாணத்தோட தான் வீடுகளுக்கு விடிவு வாறது . வேலீல இருக்கிற கிழுவை , பூவரசு வெட்டி கிளையை விறகுக்கு எடுத்து வைக்கிறது, கிணத்தடி தொட்டீல சிப்பி சேந்த சுண்ணாம்பை ஊறப்போட்டு வீட்டுக்கு வெள்ளைச் சுண்ணாம்பும் , மதிலுக்கு மஞ்சளும் அடிக்கிறது , குசினியோட சேர்த்துப் பலகாரம் சுடுறதுக்கும் , சமையலுக்கும் எண்டு ஒரு பத்தியும் போடிறது, குருமண் பறிச்சுப் பரவுறது எண்டு வீட்டுக்கே ஒரு களை வந்திடும். 

வீடு கட்டிற மாதிரித்தான் பந்தலும் போடிறது.பொன்னுருக்கு முடிய இடம் பாத்து, கிழக்க இல்லாட்டி வடக்க வாசல் வாற மாதிரிப் பாத்து தேங்காய் உடைச்சுப் பந்தல் வேலை தொடங்கிறது . அத்திவாரம் மாதிரி கயிறு கட்டி நேர் பாத்து ஆழமாக் கிடங்கு கிண்டி பெரிய மரம் நட்டு நிமித்தீட்டு பிறகு தீராந்தி போட்டு , குறுக்கு மரம் கட்டிறது . மரம் பிலப்பெல்லாம் பாத்திட்டு கடைசீல கிடுகு வேயிறது. கீழ இருந்து ரெண்டு ரெண்டாக் கிடுகு எறிய ஏறி நிக்கிறவை அடுக்கி வேஞ்சு அதை பனை ஈக்கிலால கட்டுவினம். அப்பிடிக் கட்டேக்க ரெண்டு ரெண்டா ஓலை பிடிச்சுக் கட்டினா எந்த மழைக்கும் ஒழுக்கு இருக்காது. பந்தல் முடிய வெள்ளளக்குருமண் பரவிவிட நல்லூர்த் தண்ணிப் பந்தல் மாதிரி இருக்கும். 

கலியாணத்துக்கு முதல் நாள் சோடிக்கிறதுக்கு வீட்டில இருக்கிற பெடியன்டை friends இல்லாட்டி கோயில் , வாசிக சாலை எண்டு பெடியள் குறூப் ஒண்டு வரும். சோடினை , சபை போடிறது எண்டு முழு வேலையும் அவை தான் செய்யிறது . சணல் கயிறு எத்தினை றாத்தல், இளைக்கயிறு எத்தினை முடிச்சு, வெள்ளை சீமெந்து நூல் எத்தினை பந்து , மஞ்சளும் வெள்ளையும் Tissue பேப்பர் எத்தனை , crepe paper எத்தனை கட்டு , பிளாஸ்டிக் மாலை எத்தினை எண்டு எல்லாம் கணக்குப் பாத்து முதல் நாளே வாங்கி வைச்சிடுவினம் . நாலு பெற்றோல் மக்ஸ் வாடைக்கு எடுத்து மன்டில் எல்லாம் மாத்தி பின்னேரம் மண்ணெண்ணை விட்டு காத்து அடிச்சு பத்த வைச்சிட்டு இரவிரவாத்தான் வேலை செய்யிறது. பாவம் friends எல்லாம் வேலை செய்யிறாங்கள் எண்டு வாற மாப்பிள்ளையை , நாளைக்கும் நித்தரை முழிக்கோணும் இண்டைக்கு போய் படும் எண்டு அனுப்பிப் போட்டு வேலை தொடரும். 

ரெண்டு மரத்துக்கு குறுக்கா நூலைக் கட்டீட்டுத்தான் tissue ஒட்டிற வேலை தொடங்கிறது . ரெண்டா மடிச்ச tissue paper ஐ கீலம் கீலமா வெட்டி பிறகு நடுவால குறுக்க வெட்டி அடுக்கி காத்துக்கு பறக்காமல் கல்லை வைக்க ஒருத்தர் பசை வாளியோட வருவார். வந்தவர் பசையை பூசிக் கொண்டு போக ரெண்டு பேர் சேந்து வெள்ளையும் மஞ்சளும் கலந்து tissue paper ஐ மாறி மாறி ஒட்டுவினம் . வீட்டுக்குள்ள crepe paper , வெளியில light post இல இருந்து இறக்கி சாய்வாக் கட்டின tissue paper , பந்தலுக்குள்ள கலர் மாலை எண்டு எல்லா வேலையும் ஒரே நேரத்தில நடக்கும். அடிக்கடி ஆரும் வந்து தேத்தண்ணி இந்தாங்கோ , பலகாரம் இந்தாங்கோ எண்டு வந்து வேலையை வேவு பாப்பினம் . பக்கத்து வெறும் வளவுக்க இறக்கி வைச்ச பின்னேரக் கள்ளு ரெடி எண்டோன்ன signal வர கொஞ்சக் கொஞ்சப் பேரா ஆக்கள் காணாமல் போய் திரும்பி வருவினம், அதுகும் வெத்திலை வாயோட. கடைசீல வாழைக்குலை ரெண்டையும் நிமித்திக் கட்டீட்டு இளனியைக்குத்தி வைச்சுட்டு போய் உள் வேலைகள் மிச்சத்தை முடிக்கிறது. 

இதுக்குள்ள பத்தாத்துக்கு ஒரு பெருசு வரும் கருத்துச் சொல்ல, “மாலை சரிஞ்சிருக்கு மூலையைஉயத்திக்கட்டோணும் எண்டு. இதை எல்லாம் கணக்கெடுக்காம வேலை தொடரும். 

எல்லாம் முடிய பந்தலுக்குள்ள முன்னுக்கு பாய் விரிச்சு பின்னுக்கு கதிரையை அடுக்கி முடிய காலமை சாப்பாட்டுக்கு இட்டலி அவிக்கிறாக்கள் எழும்பீடுவினம். 

நானும் இப்படி ஒரு கலியாணப் பந்தல் வேலை எல்லாம் முடிச்சிட்டுப் படுக்கத் தான் சீர்காழி பாடத் தொடங்கினார். 

“காலமை தோயவாக்க வாறாக்களுக்கு கோப்பியை குடு எழும்பு “ எண்டு அம்மா எழுப்பி விட , பாத்தா முழு வீடும் எழும்பி இருந்தது. மேக்கப்காரீன்டை ஆக்கினை இல்லாத்தால அரக்கப் பறக்காம அப்ப தான் எழும்பி வந்த மாமியை தோய வாக்க மாப்பிளை வீட்டுக் காரரும் வந்து இறங்கிச்சினம். அந்தக்கார் வர இங்க இருந்து கார் ஒண்டு மாப்பிளையை தோய வாக்க வெளிக்கிட்டுப் போச்சுது. 

இப்ப சீர்காழிக்கு இடைவேளை குடுத்திட்டு TMS உள்ள வர கலியாணம் களை கட்டத் தொடங்கிச்சுது. 

Dr. T. கோபிசங்கர்

யாழப்பாணம்.

 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒரு பாரம்பரிய கல்யாணவீட்டுக்கு போய் வந்த திருப்தி ........நிஜமாகவே சிறப்பான அனுபவங்கள்.....!  👍

நன்றி நிழலி .......!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சற்றே  முன்னரான காலத்தில் ( 75 ....80  ) நடந்த கதையை கோர்வையக சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.இளையோரின் ஒத்துழைப்பும் , நண்பனுக்கான ஆதரவும் ,  ஒரு குடும்பம்  போன்ற  வாழ்வியலும் நடைபெற்ற இனிதான காலங்கள்.  எண்ணிப் பெருமை கொள்ளத்தான் முடிகிறது . 
 

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஶ்ரீலங்காவின் இறையாண்மைக்கு… இழுக்கு ஏற்படுத்தினால், “டாலர்” வராட்டிலும் காரியமில்லை, ஆக்களை நாடு கடத்துவோம். 😁
  • குமரன் பத்மநாதனும்… தாய்லாந்து பெண்ணை கலியாணம் கட்டி, தாய்லாந்தில்… பலவருடமாக இருந்தவர். பின்பு மலேசியாவில்… வலிய பிடிபட்டு, ஶ்ரீலங்காவில், கோத்தாவின் விருந்தாளியாக இருந்தவர். இப்ப சத்தமில்லாமல்  இருக்கிறார்.
  • இவ்வளவு பில்லியனை செலவு செய்து மக்களை (இராணுவமும் மக்கள்தான்) அழிப்பதிலும் பார்க்க நல்லதொரு பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைக்கலாமே.......செய்ய மாட்டார்கள் காரணம் பிறகு இவ்வளவு ஆயுதங்களையும் பழைய இரும்புக்குத்தான் போடவேண்டி வரும்.......!  🤔
  • உங்களின் வீட்டில் நண்டும் சிண்டுமா பிள்ளைகள் இல்லை போலிருக்கு.....அதுதான் சுலபமா சொல்லிப்போட்டியள்........!  😢
  • மனிதர்கள் இறப்பது ஏன்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர்   பட மூலாதாரம்,GETTY IMAGES சாகாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் மனித குல வரலாற்றில் புதியது அல்ல. ஆனால், அதை நோக்கிய ஆய்வுகளில் காலந்தோறும் புதிய புதிய வெளிச்சங்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில், சாகாமல் வாழ்வதற்கு உடலில் என்ன இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடையை வழங்கியிருக்கிறது ஹைட்ரா என்னும் நீர்வாழ் உயிரி. கடலிலும் ஆறுகளிலும் உலவும் ஹைட்ரா வகை உயிரினங்களை இதுவரை நீங்கள் கவனிக்காமல் விட்டிருக்கலாம். பவளப்பாறை, கடல்தாமரை, ஜெல்லிமீன் ஆகியவற்றின் நன்னீர் வடிவமாகிய ஹைட்ராக்களில் பார்த்து ரசிக்க பெரிதாக ஒன்றுமில்லைதான். ஆனால், இந்த உயிரியின் வியக்க வைக்கும் பண்பு ஒன்று உயிரியலாளர்களை இந்தப் பக்கம் திரும்ப வைத்துள்ளது. அதுதான் மீட்டுருவாக்கம். இதனை எத்தனை துண்டுகளாக வெட்டினாலும், மீண்டும் முழு உடல் வளர்ந்து ஒவ்வொரு துண்டும் ஒரு புதிய உயிரியாக வாழத் தொடங்கிவிடும். அப்படியானால், இறக்காமல் வாழ்வதற்கான சாத்தியம் என்பது இயற்கையிலேயே இருக்கிறதா என்று உயிரியலாளர்களை எண்ண வைத்திருக்கிறது இந்த பண்பு. எனில் மரணம் தவிர்க்க முடிந்ததுதானா? ஏன் இந்த உயிரி மட்டும் மரணிப்பதில்லை? சீனாவில் பரவும் புதிய வைரஸால் 35 பேர் பாதிப்பு - உலகத்துக்கு ஆபத்தா? 65 வயதை கடந்தவர்கள் பாலுறவை அதிகமாக விரும்புகிறார்களா? தூக்கமின்றி தவிக்கிறீர்களா? - இந்த 6 வழிகளைப் பின்பற்றுங்கள் (இந்தக் கட்டுரையில் இயற்கையான தேர்வு முறை என்று அடிக்கடி சொல்லப்படும். உடலின் செல்கள், ஆற்றல் ஆகியவை அடங்கிய வளத்தை, தானாகவே உடல் ஆரோக்கியத்துக்காக உடலே எடுத்துக் கொள்ளும் முறைதான் இயற்கை தேர்வு முறை என்பதை நினைவில் கொள்ளுங்கள். சரி கட்டுரைக்குள் போகலாம்)   வயது மூப்பு என்பது இனப்பெருக்கத்துக்கும் செல் பராமரிப்புக்கும் இடையிலான ஒரு சமாதான வர்த்தகம் என்று 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் சொல்லப்பட்டது. ஒவ்வொரு உயிரியின் உடலிலும் உள்ள வளங்களை (செல்கள்) அவை, ஆரோக்கியமாக வைத்திருக்க பயன்படுத்துகின்றன. குழந்தைப்பருவம் மற்றும் பதின்பருவத்தின் போது, உடல் தசைகளை வலுவாக வைத்திருக்க இந்த வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், பாலியல் முதிர்ச்சி வந்ததும் முன்னுரிமை இனப்பெருக்கத்துக்கு போய்விடுகிறது. ஏனெனில், பெரும்பாலான உயிரிகளில் குறைந்தளவே வளங்கள் உள்ளன. அவை இனப்பெருக்கத்துக்காக பயன்படுத்தப்படுவதால், உடலின் ஆரோக்கியத்துக்கு பயன்படுத்தப்படுவது குறையும். ஆனால், உயிர்கள் ஏன் இறக்கின்றன என்பதில் தற்போதைய புரிதல் கவனிக்கத்தக்கது. பாலியல் முதிர்ச்சி வந்ததும், இயற்கையாகவே வளங்களை பயன்படுத்தும் உடலின் பண்பு தளர்வடைந்து, வயதாகத் தொடங்குவது இறப்புக்கு வழிவகுக்கிறது என்கிறார் பிரிட்டன் கிழக்கு ஏஞ்சலியா பல்கலைக்கழக உயிரியல் மற்றும் உயிரியக்கவியல் பேராசியர் அலெக்சி மெக்லகோவ்.   பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, ஹைட்ரா நம் வாழ்நாளில் நமது மரபணுக்கள் ஏராளமான திரிபுகளைச் சேர்த்துக் கொள்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை தீங்கு விளைவிப்பவையாகவோ அல்லது ஏதும் செய்யாதவையாகவோ இருக்கலாம். வெகு சில மட்டுமே பயனுள்ளவை. பாலியல் முதிர்ச்சிக்கு முன்பாக, "இனப்பெருக்கத்துக்கான திறனை குறைக்கும் அல்லது இனப்பெருக்கத்துக்கு முன்பாக அந்த உயிரியை கொல்லும் எந்த ஒரு மரபணு திரிபும் உடலால் தேர்ந்தெடுக்கப்படும்." ஆனால், பாலியல் முதிர்ச்சியை ஒரு உயிரினம் அடைந்த பிறகு, தன் மரபணுக்களை அடுத்த தலைமுறைக்கு கடத்த முடியும். இதன்பிறகு, இயற்கையாக தேர்வு செய்யப்படும் முறை பலவீனமடைகிறது. உதாரணத்துக்கு, முட்டையிடும் சால்மன் மீன்களை எடுத்துக் கொண்டால், அவை இளம்பருவத்துக்கும் இனப்பெருக்கத்துக்கும் நன்றாக தயாராகின்றன. கடலில் பெரும்போராட்டத்தை வென்று முட்டையிட்ட பிறகு அவற்றின் சந்ததிகளும் இதே போன்று போராடி முட்டையிட வேண்டியிருக்கும். அதன்பின்னர் அவை இறந்துவிடுகின்றன. ஒருவேளை பிழைத்திருந்தால் (வாய்ப்பு குறைவு) இன்னொரு சுற்று முட்டையிடுமானால், அவை முந்தைய சந்ததி அளவுக்கு சிறப்பானதாக இருக்காது. காரணம், ஏற்கனவே ஒரு தலைமுறைக்கு (திரிபுகளற்ற மரபணுவை) அது வழங்கிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், எல்லா உயிரினங்களும் அப்படி இல்லை. சில உயிரினங்கள் பலமுறை இனப்பெருக்கம் செய்கின்றன. அப்போது ஒவ்வொரு முறையும் டி.என்.ஏ.வில் மாற்றம் ஏற்படுகிறது. அவை சில சமயங்களில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். சில சமயங்களில் விளைவுகளற்றும் இருக்கலாம். நம் உடலே அதை சரி செய்து கொள்ள முடியும். ஆனால், நாள் செல்ல செல்ல வயது மூப்பும் இணைந்து கொண்டு, இயற்கையாகவே செல்களை பயன்படுத்தும் முறையை வெகுவாக பலவீனப்படுத்தி விடுகிறது. வயதாவதும் இறப்பதும் இரண்டு வழிகளில் நடைபெறுகின்றன. ஒன்று இயற்கையாகவே செல்களை தேர்வு செய்வது குறைந்துவிடுவதால் உடலில் உருவாகும் எதிர்மறை திரிபுகளின் தொகுப்பு; இன்னொன்று இனப்பெருக்கத்துக்கு பெருமளவு உதவவல்ல ஆனால், நீண்ட ஆயுட்காலத்துக்கு எதிரான தேர்வு முறை. வயாகரா சாப்பிட்டால் மறதி பிரச்னை நீங்குமா? ஆய்வாளர்கள் விளக்கம் மனிதர்கள் ஏன் முத்தமிடுகின்றனர்? - அறிவியல் கூறும் காரணம் வயதாவதைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் சில உயிரினங்கள் மிகவும் வெற்றிகரமாக இருக்கின்றன. அது, "எதிர்மறை முதுமை" என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இதற்கான ஆதாரங்கள் போதிய அளவுக்கு இல்லை என்கிறார் பேராசிரியர் மெக்லகாவ். ஏதோ காரணங்களுக்காக குறைவாக இனப்பெருக்கம் செய்யும் அல்லது இளமை முதலே இனப்பெருக்கம் செய்ய முடியாத சுற்றுச்சூழல் இருந்தால், அந்த உயிர்களில் செல்களை தேர்வு செய்வதற்கான முறையில் மாற்றம் நடைபெறுகிறது என்றும் தெரிவிக்கிறார் பேராசிரியர் மெக்லகாவ். எப்படியாயினும், முதுமையடைவது என்பதில் கலவி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. லண்டன் பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த ரூத் மேஸ் மற்றும் மேகன் ஆர்னாட் ஆகியோரின் ஆய்வின்படி, தொடர்ச்சியாக கலவியில் ஈடுபடும் பெண்களுக்கு மெனோப்பாஸ் தாமதமாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்தரிக்க வாய்ப்பில்லாத சமயங்களில், ஆற்றலை, முதிர்ந்த முட்டைகளை வெளியேற்ற பயன்படுத்துவதற்கு பதில், அந்த ஆற்றலை உடலின் மற்ற பாகங்கள் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்கிறது இந்த ஆய்வு. அதாவது, ஆற்றலை பயன்படுத்திக் கொள்வதில் பரஸ்பர சமாதானம் இங்கு ஏற்படுகிறது என்பதற்கான உதாரணமாக இந்த செயல்முறை உள்ளது. ஆனால், மீதமுள்ள விலங்குலகில், அதிகமான இனப்பெருக்க திறன் கொண்டிருக்கும் உயிரினங்களுக்கு வேகமாக வயதாவதாகத் தெரிகிறது. வௌவால்கள் அதிகமான முறை இனப்பெருக்கம் செய்கின்றன ஆனால் குறைந்த காலமே வாழ்கின்றன. "இளமைக்காலத்தில் அதிகமுறை இனப்பெருக்கம் செய்யும் உயிரினங்கள் வாழ்வின் பிற்பகுதியில் சிறப்பாக இல்லை" என்கிறார் பேராசிரியர் மெக்ஹக். சில உயிரினங்களில் பாலினத்தைப் பொறுத்தும் ஆயுட்காலம் வேறுபடுகிறது. குறிப்பாக எறும்புகள், தேனீக்கள் ஆகியவற்றில் ராணி எறும்பு / ராணித் தேனீ அதிகமான இனப்பெருக்க வல்லமையும் அதிகமான ஆயுட்காலமும் கொண்டுள்ளது. இங்கு மட்டும் ஏன் கலவிக்கும் முதுமைக்குமான தொடர்பு வேலை செய்யவில்லை? காரணம், இரண்டுக்குமான வாழ்வியல் முறைகளின் வேறுபாடுதான். பெரும்பாலும் பிரச்னைகளை காவல் எறும்புகளோ/தேனீக்களோ கையாளும் சூழலில் அவை வாழ்கின்றன. அதுபோக, மூப்பு அடைவதற்கான சூத்திரங்கள் இங்கு எல்லாவற்றுக்கும் சமமாக பொருந்துவதில்லை. சரி, மனிதனின் ஆயுட்காலத்தை நிர்ணயிப்பதில் இனப்பெருக்கத்துக்கு இப்படி ஒரு முக்கியத்துவம் உண்டு என்றால், குழந்தைகள் பெறுவதை நிறுத்திய பிறகும் ஏன் மனிதர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள்?   பட மூலாதாரம்,GETTY IMAGES 'பாட்டி கருதுகோள்' சொல்வதன்படி, வயது மூத்த நம் உறவினர்கள் உயிரோடு இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில், இனப்பெருக்கம் என்பது விலைமதிப்புமிக்க கடினமான செயலாகிவிட்டது. ஒரு பாட்டி தன் பேரக்குழந்தையுடன் நேரம் செலவிடுவதன் மூலம் அந்தக் குழந்தைக்குள் இருக்கும் தன் சொந்த மரபணுவை தூண்டி விட முடியும். இயற்கையான தேர்வு முறை என்ற அளவில், இது அவசியமாகிறது. பாட்டிகள் இருக்கும் குடும்பங்களில் அதிகமான இனப்பெருக்கத்திறன் காணப்படுகிறது. பாட்டிகளின் உதவி இருப்பதால் அடுத்த குழந்தை குறித்து அந்தத் தாயால் சிந்திக்க முடிவதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார் கவுன்ரிடஸ். (பிபிசி ஃபியூச்சரில் வில்லியம் பார்க் எழுதிய கட்டுரை இது) https://www.bbc.com/tamil/india-62498045
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.