Jump to content

யாழ். பல்கலைக்கு... அமெரிக்கத் தூதுவர், விஜயம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைக்கு அமெரிக்கத் தூதுவர் விஜயம்!

யாழ். பல்கலைக்கு... அமெரிக்கத் தூதுவர், விஜயம்!

யாழ்பாணத்துக்கு  விஜயம் செய்துள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்  நேற்று (புதன்கிழமை) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்க கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின் போது, யூ. எஸ் எயிட் அனுசரணையுடன், யாழ். பல்கலைக் கழக உயர்பட்டப் படிப்புகள் பீடத்தினால் நடாத்தப்படும் சமாதானமும், முரண்பாடுகளுக்கான தீர்வுகளும் என்ற முதுமாணிக் கற்கை நெறிக்கான அனுசரணையாளர் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அமெரிக்கத் தூதுவர் முன்னிலையில் யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தரும், யூ. எஸ் எயிட் நிறுவன அதிகாரிகளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இதன் போது, பல்கலைக் கழகப் பதிவாளர், நிதியாளர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், யூ. எஸ் எயிட் நிறுவன அதிகாரிகள் மற்றும் பல்கலைக் கழக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

image_6483441-3-600x400.jpg

image_6483441-7-600x338.jpg

image_6483441-8-600x400.jpg

https://athavannews.com/2022/1278949

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இடமும் மிச்சம் விடுகிறேல்லை என்கிற திட்டத்தோடதான் திரியிறா இவா. தூபி உடைச்ச கதையையும் சொல்லியிருப்பினமில்லே! ஒன்றா இரண்டா சொல்ல வெளிக்கிட்டா சொல்லி முடியாது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

ஒரு இடமும் மிச்சம் விடுகிறேல்லை என்கிற திட்டத்தோடதான் திரியிறா இவா. தூபி உடைச்ச கதையையும் சொல்லியிருப்பினமில்லே! ஒன்றா இரண்டா சொல்ல வெளிக்கிட்டா சொல்லி முடியாது.

அவங்களுக்கு இதெல்லாம் சொல்லியா தெரியணும்?

எங்களைவிட கூடுதலாக அவர்களுக்கு தெரியும்.

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் தெரியும், நடக்கும்போது தடுக்க மாட்டினம், எல்லாம் முடிந்தபிறகு தமக்கு தேவையானபோது அப்பதான் அறிகிற மாதிரி பாசாங்கு பண்ணிக்கொண்டு வருவினம் அறிக்கைகளோடு. அவைக்கென்ன இழப்பு? சுற்றுலா பயணிகள்! ஆனால் சம்பளம் விழும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, satan said:

எல்லாம் தெரியும், நடக்கும்போது தடுக்க மாட்டினம், எல்லாம் முடிந்தபிறகு தமக்கு தேவையானபோது அப்பதான் அறிகிற மாதிரி பாசாங்கு பண்ணிக்கொண்டு வருவினம் அறிக்கைகளோடு. அவைக்கென்ன இழப்பு? சுற்றுலா பயணிகள்! ஆனால் சம்பளம் விழும்.

சாத்தான்…. முள்ளிவாய்க்காலில் மக்கள் குண்டடி பட்டுக் கொண்டு இருக்கும் போது,
ஐ.நா. தனது செய்மதி ஊடாக… நடக்கும் அவலங்களை நேரடியாக பார்த்துக் கொண்டிருந்தது என்று,
நியூயோர்க் ரைம்ஸ் ஆதாரத்துடன் வெளியிட்டு இருந்தது.
அப்படிப் பட்டவர்கள்…. இப்போ, நாடகம் ஆடுகின்றார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப என்ன செய்ய வேணும் எண்டு சொல்லிறீங்கள் மக்காள் ..
"கோ ஹோம் ஜூலி"  எண்டு ஆர்ப்பாட்டம் செய்வமோ ..??

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் கோத்தாவை பதவியை விட்டு துரத்தாமல்  ஓய மாட்டார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

சாத்தான்…. முள்ளிவாய்க்காலில் மக்கள் குண்டடி பட்டுக் கொண்டு இருக்கும் போது,
ஐ.நா. தனது செய்மதி ஊடாக… நடக்கும் அவலங்களை நேரடியாக பார்த்துக் கொண்டிருந்தது என்று,
நியூயோர்க் ரைம்ஸ் ஆதாரத்துடன் வெளியிட்டு இருந்தது.
அப்படிப் பட்டவர்கள்…. இப்போ, நாடகம் ஆடுகின்றார்கள்.

உண்மை! அமெரிக்கா செய்மதி மூமாக அத்தனை அவலங்களையும் சேகரித்து வைத்திருக்கிறது, தனக்கு தேவையானபோது வெளியிடும் என்று செய்திகள் வெளிவந்தன. ஒரு மனித அவலத்தை தடுக்க தவறிய, அதை தனது இலாபத்துக்கு பயன்படுத்துவோர் இன்றில்லை ஒருநாள் தண்டிக்கப்படுவார்கள். உக்ரேயின் எங்களுக்கு குண்டுபோட விமானிகளை அனுப்பும்போது நினைத்திருக்குமா? இந்த அவலம் தன்மக்களுக்கெதிராக திரும்பி வருமென்று. அப்போதைய ஐ. நா. செயலாளர் பெயரை மறந்துவிட்டேன், கெலியில் சென்று பார்த்து ரசித்தார். என்னத்தை கிழிச்சார்? ஆனால் அந்த அவலங்கள் மரணம் வரை அவர்களை துரத்தும். தங்கள் பதவிகளை, பொறுப்புகளை துஷ்பிரயோகம் செய்தவர்கள் இவர்கள்! 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்கும்: பான் கீ மூன் நம்பிக்கை! |  Government of Sri Lanka, a war crime, international investigation, the UN,  Ban Ki-Moon

அப்போதைய ஐ. நா. செயலாளர் பெயர்.... பான் கீ  மூன்.
கொரியாவை பிறப்பிடமாக கொண்டவர்.

அத்துடன்... அந்நேரம் இந்திய வெளியுறவு செயலாளராக இருந்து,
இலங்கையுடனும், ஐ.நா. வுடனும்  பேச்சு வார்த்தை நடத்தியவர்..
நம்பியார் (மலையாளம்) என நினைக்கின்றேன். (பெயர் சரியாக தெரியவில்லை)  
அவரின் மகனும், பான் கீ  மூனின் மகளும்... 
திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வந்தது. 

ஈழத் தமிழர் பிரச்சினை  கதைக்கப் போய்... சம்பந்தியான கேவலமும் நடந்தது.
இப்படிப்  பட்டவர்களிடம்... தமிழன் எப்படி, நீதியை எதிர் பார்க்க முடியும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

அவை ஈழத்தமிழர் பிரச்சினை பற்றித்தான் கதைச்சவை என்டுநினைச்சியளோ? அதைச்சாட்டி தங்கடை சம்பந்தப்பிரச்சினையல்லோ கதைச்சவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்கும்: பான் கீ மூன் நம்பிக்கை! |  Government of Sri Lanka, a war crime, international investigation, the UN,  Ban Ki-Moon

அப்போதைய ஐ. நா. செயலாளர் பெயர்.... பான் கீ  மூன்.
கொரியாவை பிறப்பிடமாக கொண்டவர்.

அத்துடன்... அந்நேரம் இந்திய வெளியுறவு செயலாளராக இருந்து,
இலங்கையுடனும், ஐ.நா. வுடனும்  பேச்சு வார்த்தை நடத்தியவர்..
நம்பியார் (மலையாளம்) என நினைக்கின்றேன். (பெயர் சரியாக தெரியவில்லை)  
அவரின் மகனும், பான் கீ  மூனின் மகளும்... 
திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வந்தது. 

ஈழத் தமிழர் பிரச்சினை  கதைக்கப் போய்... சம்பந்தியான கேவலமும் நடந்தது.
இப்படிப்  பட்டவர்களிடம்... தமிழன் எப்படி, நீதியை எதிர் பார்க்க முடியும்.

பதிவுக்கு நன்றி சிறியர்! விஜய் நம்பியார். இவர் மலையாளி என்றுதான் பேசப்பட்டது. மலையாளிகளும் சிங்களமும் ஏதோ வழிவந்த உறவு என்று பேசிக்கொண்டார்கள். இப்போ என்னடா வென்றால்; நாயுடு சொந்தம் கொண்டாடுகிறார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

அவர்கள் கோத்தாவை பதவியை விட்டு துரத்தாமல்  ஓய மாட்டார்கள் 

அதுதான் எனது பயமும், வருத்தமும்! கோத்தாவை துரத்தினால்; எனது சொந்த, பந்தமெல்லாம் மீண்டும் உள்ளுக்கை போய் மீட்பர் இல்லாமல் வருந்த  நேரிடலாம்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரதி said:

அவர்கள் கோத்தாவை பதவியை விட்டு துரத்தாமல்  ஓய மாட்டார்கள் 

துரத்துவார்கள், மெது மெதுவாக. 😉

நூல் விட்டுப் பார்க்க போயிருக்கினம். 

வடக்கு கிழக்கில்  வேகமான மாற்றங்கள் நடக்கும்போல தெரிகிறது. 

இதில் இந்தியா அவுட். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kapithan said:

துரத்துவார்கள், மெது மெதுவாக. 😉

நூல் விட்டுப் பார்க்க போயிருக்கினம். 

வடக்கு கிழக்கில்  வேகமான மாற்றங்கள் நடக்கும்போல தெரிகிறது. 

இதில் இந்தியா அவுட். 

வடக்கில்…. ஒரு, உதவி அமெரிக்க தூதரகத்தையும் திறந்தார்கள் என்றால்,
இந்தியா…. வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

வடக்கில்…. ஒரு, உதவி அமெரிக்க தூதரகத்தையும் திறந்தார்கள் என்றால்,
இந்தியா…. வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.

"சோழியன் குடுமி சும்மா ஆடாது," இந்தியா இலங்கைக்கு விழுந்து விழுந்து உதவி செய்வது ஒன்றும் பச்சாதாபத்திலில்லை.  இலங்கை சும்மா இராது, ஓடியோடி உதவிக்கு கைநீட்டி வேறுநாடுகளை இழுத்துவந்து தனக்கு தலைவலியையும், குடைச்சலையும் கொடுத்துவிடும் என்பதால் அதை தடுத்து தன் கைக்குள் வைத்திருந்தால் தனக்கு ஆபத்தில்லை என்று எண்ணி மாய்ந்ததெல்லாம் இப்படி வீணாயிடுமோ? நாதம்ஸ் சொன்னதுதான் நினைவுக்கு வருது, தம்பி பெண்டாட்டியை இழுத்துக் கொண்டோடின கதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

வடக்கில்…. ஒரு, உதவி அமெரிக்க தூதரகத்தையும் திறந்தார்கள் என்றால்,
இந்தியா…. வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.

அது நடக்கும். மெதுவாக...

சுவிஸ் அல்லது ஜேர்மன் அல்லது கனேடிய துணைத் தூதுவராலயத்தைத் திறப்பார்கள். யுஎஸ் இறுதியாக வரும். 

இந்தியவுக்கு பெப்பே

(வடக்கு கிழக்கிற்கு மட்டுமே  வழங்க இருந்த தமிழக உதவியை இலங்கை ழுவதும் வழங்கும்படி TNA கோரியதைக் கவனிக்க)

(இறுதியாக TNA, US tour வரும்போது நாங்கள் எல்லோரும் அடிச்சுக் கலைத்தது நினைவுக்கு வருகிறது)

😉

Edited by Kapithan
  • Like 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.