Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தினமும்... சைக்கிள் ஓட்டுபவனால், உலக பொருளாதாரம் சீரழியும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of bicycle and text that says 'தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்... 謝 சீட் கவர் ₹50 கரல் ₹200 பெல் ₹70 பால்ஸ் ₹70 காற்று2வில்களுக்கு6 டயர் ₹180 180முதல் முதல் 4000 டியப் 100 முதல் பெடல் ₹100 பஞ்சர் ₹30 ஆச்சரியமா இருக்கா? தொடர்ந்து படிங்க....'
 
தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்...
ஆச்சரியமா இருக்கா? தொடர்ந்து படிங்க.....
 
ஏன்னா அவன் கார் வாங்க மாட்டான்...
அதற்காக கடன் வாங்கவும் மாட்டான்...
வட்டியும் கட்ட மாட்டான்...
பேங்க் பைனான்ஸ் கம்பெனிக்கு சல்லி பைசாவுக்குகூட பிரயோஜனம் இல்லாதவன்...
கார் இன்சூரன்ஸ் பண்றதுக்கு வர மாட்டான்...
இந்த பெட்ரோல் டீசல்..... ம்ஹூம்... வாய்ப்பே இல்ல...
இவனால அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கும் கூட எந்த பயனும் இல்ல...
சர்வீஸ் ஸ்பேர் பார்ட்ஸ் எதற்கும் இவன் செலவு செய்யறது இல்ல...
பார்க்கிங் கட்டணம்னு பெருசா எங்கேயும் செலுத்த மாட்டான்...
 
இதெல்லாம் போய்த் தொலையட்டும்னு உட்டா...
இவனுக்கு சுகர் வராது...
இதய நோய் வராது...
குண்டாகவும் மாட்டான்...
ஆஸ்பத்திரி, டாக்டர் , மருந்து கடை இதெல்லாம் இவனுக்குத் தேவையே இல்லை...
உலகபொருளாதாரம் வளர இவன் எதுவும் செய்ய மாட்டான்...
 
அதே சமயம் ஒரே ஒரு பீட்ஸா கடை ஊர்ல உள்ள எல்லா டாக்டரையும் வாழ வைக்கும்...
10 இதய டாக்டர்...
10 பல் டாக்டர்...
10 டயட்டீசியன்...
இன்னும் ஒரு 50 மெடிக்கல் ஷாப்க்கு தேவையான பொருளாதாரம் அதனால கிடைக்கும்...
உடனே முடிவெடுங்க
சைக்கிளா?
காரா?
உலக பொருளாதாரமா???
உங்க உடல் நலமா???
 
படித்ததில் மிகவும் பிடித்தது.
  • Like 1
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:
May be an image of bicycle and text that says 'தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்... 謝 சீட் கவர் ₹50 கரல் ₹200 பெல் ₹70 பால்ஸ் ₹70 காற்று2வில்களுக்கு6 டயர் ₹180 180முதல் முதல் 4000 டியப் 100 முதல் பெடல் ₹100 பஞ்சர் ₹30 ஆச்சரியமா இருக்கா? தொடர்ந்து படிங்க....'
 
தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்...
ஆச்சரியமா இருக்கா? தொடர்ந்து படிங்க.....
 
ஏன்னா அவன் கார் வாங்க மாட்டான்...
அதற்காக கடன் வாங்கவும் மாட்டான்...
வட்டியும் கட்ட மாட்டான்...
பேங்க் பைனான்ஸ் கம்பெனிக்கு சல்லி பைசாவுக்குகூட பிரயோஜனம் இல்லாதவன்...
கார் இன்சூரன்ஸ் பண்றதுக்கு வர மாட்டான்...
இந்த பெட்ரோல் டீசல்..... ம்ஹூம்... வாய்ப்பே இல்ல...
இவனால அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கும் கூட எந்த பயனும் இல்ல...
சர்வீஸ் ஸ்பேர் பார்ட்ஸ் எதற்கும் இவன் செலவு செய்யறது இல்ல...
பார்க்கிங் கட்டணம்னு பெருசா எங்கேயும் செலுத்த மாட்டான்...
 
இதெல்லாம் போய்த் தொலையட்டும்னு உட்டா...
இவனுக்கு சுகர் வராது...
இதய நோய் வராது...
குண்டாகவும் மாட்டான்...
ஆஸ்பத்திரி, டாக்டர் , மருந்து கடை இதெல்லாம் இவனுக்குத் தேவையே இல்லை...
உலகபொருளாதாரம் வளர இவன் எதுவும் செய்ய மாட்டான்...
 
அதே சமயம் ஒரே ஒரு பீட்ஸா கடை ஊர்ல உள்ள எல்லா டாக்டரையும் வாழ வைக்கும்...
10 இதய டாக்டர்...
10 பல் டாக்டர்...
10 டயட்டீசியன்...
இன்னும் ஒரு 50 மெடிக்கல் ஷாப்க்கு தேவையான பொருளாதாரம் அதனால கிடைக்கும்...
உடனே முடிவெடுங்க
சைக்கிளா?
காரா?
உலக பொருளாதாரமா???
உங்க உடல் நலமா???
 
படித்ததில் மிகவும் பிடித்தது.

சைக்கிள் கழுவிப் பூட்ட மண்ணெண்ணெய், கிறீஸ், போள்ஸ் எல்லாம் தேவை தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி யாழில் பள்ளி மாணவமாணவிகளைத் தவிர சைக்கிள் ஓடுவார் இல்லை.

இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 400 நாள் போர் நிறைவு; ரஷியாவிடம் இழந்த நிலங்களை மீட்போம்: உக்ரைன் சூளுரை உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது கடந்த பிப்ரவரி 24-ந்தேதியுடன் ஓராண்டை நிறைவு செய்தது. எனினும், ஓராண்டுக்கு பின்பும் இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ தாக்குதல்கள் நீடித்து வருகின்றன. போர் தொடங்கி 400 நாட்கள் நிறைவடைந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோவில் தோன்றி பேசும்போது, இந்த போரில் உக்ரைன் வெற்றி பெறும். நிலங்களை மீட்பதிலும் வெற்றி பெறுவோம். நீதியை மீட்டெடுப்பதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களது நிலத்தில் ரஷியாவின் ஒரு தடம் கூட இருக்காமல் செய்வோம். எந்தவொரு எதிரியையும் தண்டிக்காமல் நாங்கள் விடமாட்டோம். அதற்கான தகவலை சேகரித்து வருகிறோம். முழு அளவிலான ஆக்கிரமிப்புக்கு எதிரான எங்களது பாதுகாப்பு நடவடிக்கைகள் 400 நாட்களாக தொடர்ந்து வருகின்றன. நாங்கள் ஒரு பெரிய பாதையில் நடந்து வந்துள்ளோம். உக்ரைனுக்காக போரிட்ட மற்றும் போரிட்டு வரும், நாடு மற்றும் நாட்டு மக்களை கவனத்துடன் பாதுகாத்த மற்றும் பாதுகாத்து வரும், உதவி செய்து மற்றும் தொடர்ந்து எங்களது பாதுகாப்பு தளவாடங்களுக்கு உதவி வரும், உக்ரைனின் மீட்சியை வலுப்படுத்தியவர்களுக்கும், வலுப்படுத்தி வருபவர்களும் அனைவரும் ஒன்றிணைவோம். உக்ரைன் பயங்கர நாட்களை கடந்து வந்தது. இந்த குளிர்காலத்திலும் நாங்கள் தப்பி வந்து உள்ளோம். இந்த வார்த்தைகளுக்கு பின்னால், பெரிய முயற்சிகள் இருந்துள்ளன என கூறியுள்ளார். கீவ், செர்னிஹிவ் மற்றும் சுமி பகுதிகள், எங்களுடைய கார்கிவ் பகுதிக்கு மீண்டும் நாங்கள் திரும்பி வந்துள்ளது, கெர்சன் நகருக்கு திரும்பி வந்தது, பாக்முத் மற்றும் தொன்பாஸ் நிலங்களை பாதுகாத்தது, என்பது உக்ரைனியர்களின் வீரம். இதனை இந்த உலகம் மறக்காது என்று அவர் கூறியுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=242339
    • மலரும்.........! (10).                                                                                                        அன்று ஆச்சி அப்படிக் கேட்டதும் சில நாட்களாக அதை பற்றி நன்றாக யோசித்துப் பார்த்த நிர்மலா தனது வாழ்க்கைக்கும் ஒரு பிடிமானம் வேண்டும் என்று முடிவு செய்கிறாள். இவர்களின் குடும்பம் ஒரு நல்ல குடும்பமாகவும் இருக்கின்றது. ஏன் தானும் மறுமணம் செய்யக்கூடாது. அவர்கள் என்ன காரணத்துக்காக மறுமணம் செய்தார்களோ அதே காரணம் எனக்கும் இருக்குதுதானே. மாதங்கள் வந்து போகுதோ இல்லையோ மாதவிடாய் தவறாமல் வந்து விடுகிறதுதானே. தானாக வரும் இந்த சந்தர்ப்பத்தை ஏன் நான் எனக்கான பரிசோதனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. என்று பலவாறு யோசிக்கிறாள்.                                அன்று ஆச்சி உரலில் வெத்திலை இடித்துக் கொண்டிருக்கும்பொழுது நிர்மலா சிவாங்கியுடன் அங்கு வருகிறாள். அப்போது ஆச்சியும் இயல்பாக என்ன பிள்ளை நான் சொன்ன காரியத்தை யோசிச்சனியோ என்று கேட்கிறாள். --- ஓம் அம்மா ....நான் நிறைய யோசிச்சனான். நீங்கள் இப்படிக் கேட்பது உங்களின் மகனுக்குத் தெரியுமோ, அவருக்கு இதில விருப்பம் இருக்குதோ என்று வினவுகிறாள். --- ஓம் பிள்ளை......முதலில் நானும் இவரும்தான் இது பற்றி கதைத்தனாங்கள். அன்றைக்கு இந்தப் பிள்ளை சிவாங்கி அந்தக் கிணத்துக் காட்டில் ஏறி நின்று விளையாடியபோது நானும்  இவரும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிக்க நீ தளப்பம் இல்லாமல் மெதுவாக ஊர்ந்து போய் பிள்ளையை படக்கென்று பிடித்தனியெல்லோ, அப்போதுதான் எங்கட மனசுக்குள் இந்த எண்ணம் தோன்றியது. பின் இந்த சம்பவத்தை கதிரவனிடம் சொன்னபோது அவன் உனக்கு நன்றி சொல்லிவிட்டு போனவன். பிறகு சிலநாள் கழித்து நாங்கள் அவனுடன் இந்த எங்களின்விருப்பத்தை சொன்னபோது முதலில் தயங்கினாலும் பிறகு சரியென்று சொல்லிப் போட்டார். ஆனால் உனக்கு விருப்பம் இல்லையென்றால் வற்புறுத்தக் கூடாது எண்டவர். அதன் பின்னால்தான் நான் உன்னோடு கதைத்தது.                                                                         அடுத்து வந்த சில நாட்களில் கதிரவனுக்கும் நிர்மலாவுக்கு மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. என்னதான் அவர்கள் நட்புடன் பழகி இருந்தாலும் அடுத்து வந்த இரவுகளில் தயக்கத்தாலும் பிள்ளைகள் அவர்களிடையே படுத்துறங்குவதாலும் அதிகமான நெருக்கம் இன்றி கை கால்களின் சின்ன சின்ன உரசல்களுடனும் விரல்களின் சில்மிசங்களுடனும் காதல் பார்வைகளுடனும் உறவுகள் இன்றியே கடந்தன. இவர்களின் போக்கை தனது அனுபவத்தால் உணர்ந்த ஆச்சியும் மெய்கண்டான் காலண்டரில் ஒரு நல்ல நாள் பார்த்து அன்று பிள்ளைகளை தன்னுடன் பிடித்து வைத்துக் கொண்டு நிர்மலாவுக்கு சில அறிவுரைகள் சொல்லி அறைக்குள் அனுப்பி வைக்கிறாள்.                                           அறைக்குள் கட்டிலின் மீது புதிய விரிப்புகளும் பூபோட்ட தலையணைகளும் அழகாக விரித்து இருக்கின்றன. ஊதுபத்தியின் மணம் ஒரு கிறக்கத்தைத் தருகின்றது. உள்ளே கதிரவனும் நாலுமுழ வேட்டி அணிந்து மெல்லிய வெள்ளை சேர்ட்டுடன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருக்கிறான். சேர்ட்டினூடாக கிப்ஸ் பெனியனும் அதன் மேல் அட்ஷரக்கூடுடன் கூடிய தடித்த டைமன் சங்கிலி டாலடிக்கிறது. அவனிடம் இருந்து நறுமணமிக்க செண்டின் வாசனை வருகின்றது. அவனுக்கு ஒரு நிமிஷம் ஒரு யுகமாக இருக்கிறது. நிர்மலாவும் ஆச்சி தன் கையாலேயே பின்னி அவள் தலையில் சூடிவிட்ட ஒற்றை மல்லிகை சரமும், கையில் மாற்றிக் கட்டுவதற்கான நைட்டியோடும் பூபோட்ட கொட்டன் புடவையும் அணிந்துகொண்டு கதவைத் திறந்து உள்ளே வந்து அதைத் தாழிடுகிறாள். அப்போது வலிமையான இரு கரங்கள் அவளை இடையுடன் சேர்த்து தன்னுடன் அனைத்துக் கொள்கின்றன. --- ஸ்......என்ன அவசரம், கொஞ்சம் பொறுங்கள் நைட்டியை மாற்றிக் கொண்டு வருகிறேன். அவள் குரல் கெஞ்சலாய் ஒலிக்கிறது. --- இந்த சேலையை அகற்றினால்தானே அதை நீ மாற்ற முடியும், அதற்கு நான் உனக்கு உதவி செய்கிறேன். அப்படியே பூமாலைபோல் அவளை அள்ளியெடுத்து தத்தையை மெத்தையில் வளர்த்திவிட்டு வித்தைகள் புரிய சரிந்து கொள்கிறான்.      அவள் வெட்கத்தில் கைகளால் முகத்தை மூடிக் கொண்டு மெத்தையில் உருண்டு குப்புறப் படுத்துக் கொள்கிறாள். அந்த அறையின் சிறு வெளிச்சத்தில் ஒரு தேவதைபோல் அவனருகே கிடக்கிறாள். அவனும்கூட வெகு காலத்தின்பின் தனக்கே தனக்கான ஒரு பெண்ணணங்கை தன்னருகே பாசத்தோடும் காதலோடும் பார்க்கிறான். அவளது கருங்குழல் அந்தப் பரந்த முதுகில் மயில்தோகை போன்று சற்றே விரிந்து பரவிக் கிடக்கிறது. அதன் நடுவே ஒற்றை மல்லிகை சரம் மின்னல் கீற்றாக மின்னுகிறது. அவன் கைகள் அவள் முதுகை ஆதரவுடன் வருடிக் கொண்டு வர  "கரைதேடி நுரையோடு வரும் பேரலையொன்று கற்பாறையில் மோதி மேலெழுந்து குடையாய் விரித்தபடி ஒரு கணம் அசைவற்று அப்படியே நிண்றதுபோல்" இடைக்கும் முழங்காலுக்கும் இடையில் பொங்கித் தளும்பும் பேரழகு மனசை அலைக்கழிக்க, அவனது பார்வை போகும் இடமெல்லாம் தன் அகக்கண்களால் உணர்ந்தவள்போல் அவள் சிறிது நெளிந்து கொள்கிறாள். அவனும் தனது பார்வையை வேறு பக்கம் திருப்பி அவளது வழுக்கும் தோள்களை வலுவான கரங்களால் பற்றி தனது பக்கம் திருப்புகிறான்.                                              அவளது மேனியில் இருந்தும் ஒரு சுகந்தமான வாசனை அவன் நாசியை வருடுகிறது. தன் முகத்தருகே மிக அருகில் நெருங்கும் அவன் முகத்தை அவளும் காதலுடன் பார்த்து ஏதோ சொல்ல வாயெடுக்கையில் அந்த வார்த்தைகளை அவன் தன் வாயினுள் வாங்கிக் கொள்கிறான். அவர்களுக்குள் பல ஆண்டுகளாக பதுங்கியிருந்த காமம் கிளர்ந்தெழுகிறது. ஆதவனின் கதிர்கள் மலர்களை மலர்விப்பதுபோல் கதிரவனின் ஸ்பரிசத்தில் பெண்மை மலர்கின்றது. அந்நேரத்திலும் அவளது மனம் "முருகா எனக்கு ஏற்பட்ட அபவாதம் நீங்க நீ அருள் புரிய வேண்டும். குழந்தையுடன் உன் சன்னதிக்கு வந்து மாவிளக்கு ஏற்றுவதற்கு நீ கிருபை செய்திடு" என்று பிரார்த்திக்கிறாள்.                                                             இதயம் பிரார்த்தனை செய்ய இதழ்களில் அவன் பருகப் பருக தேன் சுரக்கிறது. ஆகிருதியான அவன் மார்பின் உரோமங்களை உரசி உரசி முந்தானை மொட்டுக்கள் மலர்கின்றன. விலகிய ஆடையின் இடையினில் துலங்கிய நாபியில் அவனது விரல்கள் மேய்கின்றன. அந்த மோதிர விரல்களை மேலும் நகரவிடாமல் வளைக்கரமொன்று தளர்வாகத் தடுக்கின்றது. ஆனந்தகான அமுதமழையாக அவனை அவள் வர்ஷிக்கிறாள். அதில் மூல்கித் திளைத்தவனில் இருந்து வியர்வையுடன் முத்துக்களும் சிதறுகின்றன. சிந்திய முத்துக்களை சேகரிக்க சிப்பியொன்று தயாராகின்றது. சத்தான கருவில் வித்தாக எதுவும் தீண்டியதில்லை இதுவரை. கல்லாகி நின்ற மருங்குகள் அனல்மேல் மொழுகாகி நெகிழ்கின்றன. வியர்வை மதுவில் மூழ்கிய கனியை கொஞ்சி கொத்தி சுவைக்கும் கிளியாக .......                                                   அந்தப்புரத்தில் ஆனந்தலீலை அதிகாலைவரை நீடிக்கின்றது. நேரத்துடன் கதிரவன் எழுந்து கொள்கிறான். இன்னும் அவள் களைப்பில் சாந்தமான முகத்துடன் உறங்குகிறாள். இதழ்களில் சிறு புன்னகையும் சேர்ந்திருக்க அதை சிறிது ரசித்து விட்டு அவள் நெற்றியில் நெளிந்த முடியை கொஞ்சம் ஒதுக்கி சிறு முத்தமிட்டு எழுந்து கொள்கிறான். அவள் கட்டியிருந்த சேலை எட்டிக் கிடந்ததால் அந்த ஆறடி அழகுச்சிலையை தனது நாலுமுழத்தால் போர்த்திவிட்டு சறத்தை அணிந்து கொண்டு வெளியே வருகிறான். அதற்காகவே காத்திருந்த ஆச்சியும் இரண்டு கோப்பைகளில் முட்டைக் கோப்பி எடுத்து வந்து ஒன்றை அவனிடம் குடுத்து விட்டு மற்றதை எடுத்துக் கொண்டு அறைக்குள் வருகிறாள். --- பிள்ளை எழும்பி இதைக் குடித்து விட்டு படனை. ஆறப்போகுது சுட சுட குடி நல்லா இருக்கும் என்று சொல்லிவிட்டு வேட்டியால் போர்த்துக் கொண்டிருக்கும் அவளைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புடன் வெளியேறுகிறாள்.                                         கதிரவன் எழுந்தவுடன் நிர்மலாவுக்கும் விழிப்பு வந்துவிட்டது. ஆனால் தான் இருந்த நிலையில் துணி எடுக்க அவகாசமில்லாததால் உறங்குவதுபோல் பாவனை செய்கிறாள். அவன் அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு தனது வேட்டியால் போர்த்திவிட்ட அந்தக் கரிசனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. பின்பு அவள் எழும்புவதற்குள் ஆச்சியும் உள்ளே வந்து விட்டா அதனால் மீண்டும் தூக்கம்போல் நடிப்பு. அவர்களது அன்பையும் பாசத்தையும் பார்க்கும்போது ஒரு சரியான பாதுகாப்பான இடத்துக்கு தான் வந்திருப்பதாக உணர்கிறாள்......! மலரும்.........!  🌼
    • நான் துறவி அல்ல, காதலன்! KaviApr 01, 2023 11:31AM ஷேர் செய்ய :  சத்குரு படிக்கும் வயதில் படிக்க வேண்டும், வேலை செய்யும்போது வேலை செய்யவேண்டும் என்றால், காதலிப்பது எப்போது? காதலிக்க நேரமில்லை என்றாலும், காதலில்லாமல் வாழ முடியுமா? நாம் வாழ்க்கையில் என்ன செய்தாலும், அதில் காதல் கலந்திட என்ன செய்வது? சத்குரு சொல்கிறார், மேலும் படியுங்கள். “நான்கு அரியர்களை வைத்து இருக்கும் என் மாணவன், யாரோ ஒரு பெண்ணுக்காக மூன்று மணிநேரம் தெருவில் காத்திருப்பதைக் கவனித்தேன். நன்றாகப் படிக்க வேண்டும், வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும் என்ற ஆர்வத்தைவிட, ஒரு பெண் பின்னால் சுற்றும் ஆர்வம்தானே அவனுக்கு அதிகமாக இருக்கிறது? இன்றைக்கு இளைஞர்களைச் செலுத்தும் ஒரே சக்தி காதலாக இருப்பது ஆரோக்கியமான நிலையா? ஒரு துறவியிடம் கேட்கிறேனே என்று தப்பாக நினைக்காதீர்கள்!” என்று அண்மையில் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்னிடம் கேட்டார். “நான் துறவி அல்ல; முழுமையான காதலன்!” என்று சிரித்தேன். நான் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தபோது, எங்களுக்கு ஓர் ஆசிரியை இருந்தார். ஆங்கிலக் கவிதைகள் பற்றிப் பாடம் நடத்துவார். சரியாகப் புரிந்து கொள்ளாத மாணவர்களைப் பார்த்து, “காதல் இல்லாமல் கல்லைப்போல் உட்கார்ந்தால், கவிதை எப்படிப் புரியும்? போய், மகாராணி காலேஜ் முன்னால் நின்று பாருங்கள், காதல் வந்தால் கவிதையும் தானே வரும்” என்பார். ஈஷா நடத்தும் பள்ளிக்கூடத்தில், ஜுன் மாதத்தில் திடீர் என்று மழை பிய்த்துக்கொண்டு கொட்டியது. பள்ளி ஆசிரியர்கள் பெரிய பெரிய பாடத் திட்டங்களுடன் வந்து என்னைச் சந்தித்தார்கள். “நான் ஒரு குழந்தையாக இருந்தால், இப்படி எல்லாம் வகுப்பு நடத்தும் பள்ளிக்குப் போகவே மாட்டேன். குழந்தைகளைச் சும்மா காட்டுக்குள் கூட்டிப்போங்கள். ஆற்றில் விளையாடட்டும். மழையில் நன்றாக நின்று நனைந்து ஊறட்டும். அதன் பிறகு அழைத்து வாருங்கள்” என்றேன். குழந்தைகள் குதூகலமாக மழையில் விளையாடினார்கள். போதும் என்று தோன்றிய பிறகு, உள்ளே வந்தார்கள். இப்போது அவர்களிடம் மழை பற்றி உணர்வுப்பூர்வமாக ஓர் ஆர்வம் வந்துவிட்டது. மழையின்மீது பிறந்த காதல், அதுபற்றிய விஞ்ஞானத்தை அறிந்துகொள்வதிலும் வந்துவிட்டது. மழையின் புவியியல் பின்னணி என்ன? உயிர்களுக்கும் மழைக்குமான தொடர்பு என்ன? மழையை வைத்து நம் நாட்டின் வரலாறு, கலாச்சாரம், பொருளியல், ரசாயனம், சமூகவியல் என்று அனைத்தைப் பற்றியும் அவர்களிடம் பேச முடிந்தது. எதன் மீதாவது ஆர்வம் வந்துவிட்டால், அதுபற்றி அறிந்து கொள்ளாமல் தூங்க முடிவது இல்லை. அந்த ஆர்வத்தைத் தூண்டிவிடாமல், பாடப் புத்தகங்களை எழுதினால், தொட்டுப் பார்க்கவே பிடிக்காமல் போகிறது. தொட்டுத் திறந்தாலே… தூக்கம்தான் வருகிறது. இது எப்படி மாணவனின் தப்பாகும்? பாடப் புத்தகத்தை ஒரு காதல் கதை மாதிரி எழுதி இருந்தால், ஏன் படிக்காமல் தவிர்க்கப் போகிறார்கள்? அறிவியலையும், வரலாற்றையும், கணிதத்தையும் காதலுக்குரிய சுவாரஸ்யத்தோடு எழுதக் கூடாதா? காதலை கெமிஸ்ட்ரி என்பவர்கள், கெமிஸ்ட்ரியைக் காதலாகத் தர முடியாதா? பாடத்தின் மீது காதல் பிறப்பதுபோல் அமைக்காத கல்வி முறையின் மீதுதானே அடிப்படைத் தவறு? கொஞ்சம் ஆழமாகப் பார்த்தீர்கள் என்றால், காதல் என்பது ஒரு மனிதனுக்கு ஆழமான, மகிழ்ச்சியான, ஆனந்தமான உணர்வாக இருக்கிறது. இந்த உணர்வை ஏதோ ஒரு காரணம் தூண்டிவிடுகிறது. காதலை ஆங்கிலத்தில் அழகாக ‘Falling in Love’ என்று சொல்வார்கள். காதலில் ஏற முடியாது, இறங்க முடியாது, நிற்க முடியாது, பறக்க முடியாது. விழத்தான் முடியும். ‘நான்’ என்ற தன்மை கொஞ்சம் நொறுங்கிக் கீழே விழுந்தால்தான், காதல் பிறக்க முடியும். சென்ற கணம் வரை உங்கள் வாழ்க்கையில் நீங்கள்தான் ஹீரோ. காதல் வந்துவிடட்டுமே, உங்களைவிட இன்னொருவர் முக்கியமாகிவிடுகிறார். எப்போது இன்னோர் உயிர் நம்மைவிட முக்கியமாக ஆகிவிட்டதோ, அதற்குப் பெயர்தான் காதல். கல்லூரி நண்பர்கள் சிலர் பல வருடங்கள் கழித்து தங்கள் புரொஃபசர் வீட்டில் சந்தித்தனர். எங்கெங்கோ சுற்றிவிட்டு பேச்சு அவர்களுடைய காதல் வாழ்வு பற்றித் திரும்பியது. ஒவ்வொரு நண்பரிடத்திலும் ஏதோ ஓர் ஏமாற்றம், ஏதோ ஒரு வருத்தம். புரொஃபசர் ஒரு ஜாடியில் தேநீர் கொண்டு வந்து வைத்தார். “அந்த அலமாரியில் நிறையக் கோப்பைகள் இருக்கின்றன. உங்களுக்குப் பிடித்த கோப்பையில் தேநீரை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார். பீங்கான் கோப்பை, கண்ணாடிக் கோப்பை, வெள்ளிக் கோப்பை என்று விதவிதமான கோப்பைகள். நண்பர்கள் ஆளுக்கு ஒரு கோப்பையை எடுத்து தேநீர் நிரப்பி அமர்ந்ததும், புரொஃபசர் சொன்னார்… “சாதாரணமான மண் கோப்பைகளை யாரும் எடுக்கவில்லை. விலை உயர்ந்த அழகான கோப்பைகளைத்தான் நீங்கள் எல்லோரும் எடுத்திருக்கிறீர்கள் என்பதை கவனித்தீர்களா? கோப்பையைக் கையில் வைத்திருக்கப் போகிறீர்கள் அவ்வளவுதான். தேநீர்தான் உள்ளேபோய் உங்களுடன் ஒன்றாகப் போகிறது. ஆனால், உங்கள் கவனம் கோப்பையில் நின்றுவிட்டது. எனக்கு என்ன கிடைத்தது, அடுத்தவருக்கு எந்தக் கோப்பை போய்விட்டது என்பதில் சிந்தனை போய்விட்டதால், தேநீரின் உண்மையான ருசியைக் கவனிக்கத் தவறுகிறீர்கள். காதலும் அப்படித்தான். அந்த அற்புதமான உணர்வு கொண்டுவரும் ஆனந்தத்தை வெளித் தோற்றங்களுடன் தொடர்புபடுத்தி, ருசிக்கத் தவறுகிறீர்கள்… வேதனையில் அல்லாடுகிறீர்கள்!” உண்மைதான். மாட்டுக்குக்கூடக் காதல் இருக்கிறது. கழுதைக்குக்கூடக் காதல் இருக்கிறது. புழு, பூச்சிக்கும் காதல் இருக்கிறது. காதலிக்கத் தெரியாதவர்கள் அதற்கும் கீழே இருப்பவர்கள். காதல் என்பது மிக ஆழமான ஈடுபாடு. துறவறம் பூணுபவர்கள் காதல் அற்றவர்கள் அல்ல… குறிப்பிட்ட நபரோடு மட்டும் பிரியத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், அவர்களுக்கு எல்லாவற்றின் மீதும் காதல் வந்துவிட்டது என்று அர்த்தம். வாழ்க்கை என்றாலே காதல்தான். நீங்கள் சுவாசிக்கும் காற்றைக் காதலோடு கவனியுங்கள். நமக்குள் போய், நம்மில் ஒரு பாகமாகவே மாறும் உணவைக் காதலோடு புசியுங்கள். காதலாக இருக்கும்போது, உங்களுடைய உணர்வு இனிப்பாக இருக்கிறது. உயிர் போனாலும் சரி என்ற ஆனந்த உணர்வு நிறைகிறது. ஒரே ஒருவராலேயே இவ்வளவு கிடைக்கும் என்றால், எல்லா ஜீவராசிகளிடமும், ஜீவனுக்கு மூலமாக இருக்கிற காற்றிடமும், மண்ணிடமும், கல்லிடமும், செடியிடமும் காதல்கொண்டால், எப்பேர்ப்பட்ட அளவில்லாத ஆனந்தம் கிடைக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள். மலை, நதி, பூ, புல்வெளி, பட்டாம்பூச்சி, ஆடு, மாடு என்று காணும் ஒவ்வொன்றின் மீதும் காதல் கொள்ளலாம். காதலிப்பது கையில் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால்தான், பிரச்சனை. அதைத் தவிர்த்துவிட்டால், கடலின் மீதும், ஆகாயத்தின் மீதும், நிலவின் மீதும்கூட உண்மையான காதல் கொள்ளலாமே? அந்த உணர்வை உங்களிடம் இருந்து யாரால் தட்டிப் பறிக்க முடியும்?     https://minnambalam.com/featured-article/sadhguru-on-saint-and-lovers/  
    • ஐபிஎல் 2023: முதல் போட்டியில் சறுக்கிய சிஎஸ்கே! Apr 01, 2023 07:38AM IST ஷேர் செய்ய :  குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 16வது ஐபிஎல் தொடர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மார்ச் 31) இரவு கோலாகலமாகத் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்ய சிஎஸ்கே அணி வலுவான பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கியது. சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்வாட் அரைசதம் அடித்து தொடர்ந்து சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 92 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். கெய்க்வாட்டை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சுமாரான ரன்களில் ஆட்டமிழந்தனர். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனி ஆட்டத்தின் தொடக்கத்தில் களமிறங்கி ரன்களை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8வது விக்கெட்டிற்கு களமிறங்கி அதிர்ச்சி கொடுத்தார். 20 ஓவர் இறுதியில் சிஎஸ்கே 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. குஜராத் டைட்டன்ஸ் அணியில், ஷமி, ரஷித் கான், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜோசுவா லிட்டில் 1 விக்கெட்டையும் எடுத்திருந்தார். தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது. குஜராத் அணியின் வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். குஜராத் அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 63 ரன்களை எடுத்திருந்தார். அதிகப்படியான விக்கெட்டுகளை இழக்காமல் விளையாடி வந்த குஜராத் அணி 19.2 ஓவரிலேயே இலக்கை அடைந்து 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் குஜராத் அணி தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆனால் முதல் போட்டியிலேயே சிஎஸ்கே தோல்வியடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஐபிஎல் தொடரின் 2வது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. மாலை 3.30 மணிக்கு மேகாலயாவில் தொடங்கும் முதல் போட்டியில் பஞ்சாப் – கொல்கத்தா அணிகள் மற்றும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் லக்னோ – டெல்லி அணிகள் மோதவுள்ளன.  மோனிஷா https://minnambalam.com/sports/ipl-2023-chennai-super-kings-vs-gujarat-titans/  
    • விடுதலை பாகம் 1 – விமர்சனம்! KaviApr 01, 2023 11:33AM ஷேர் செய்ய :  கமர்ஷியல் திரைப்படங்கள் தரும் நட்சத்திர நாயகர்கள் எவ்வாறு ஆராதிக்கப்படுகிறார்களோ, அதற்கிணையான பாராட்டுகளை இயக்குனர்களும் அள்ளுவது காலம்காலமாகத் தொடர்ந்து வருகிறது.  இன்றைய காலகட்டத்தில் அப்படியொரு வரவேற்புக்குரிய இயக்குனர்களில் ஒருவராகத் திகழ்கிறார் வெற்றிமாறன். அவர் இயக்கியுள்ள ‘விடுதலை பாகம் 1’ பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அந்த எதிர்பார்ப்பிற்குத் தக்கவாறு ‘விடுதலை பாகம் 1’ அமைந்திருக்கிறதா? படம் பார்த்து வெளியே வரும்போது, இக்கேள்விக்கு மாறுபட்ட பதிலொன்றைத் தர முடிகிறது.  பிளாஷ்பேக் சம்பவங்கள்! அருமபுரி மாவட்டத்திற்கு மாற்றலாகிச் செல்கிறார் போலீஸ் கான்ஸ்டபிள் குமரேசன் (சூரி). அங்கு அமையவிருக்கும் சுரங்க முதலீட்டுக்கு எதிராகத் தாக்குதலில் ஈடுபடுகின்றனர் மக்கள் படையைச் சேர்ந்த தலைவர்கள்; அவர்களைப் பிடிப்பதற்காக, ஒரு தனிப்படை முகாம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் பொறுப்பாளராக போலீஸ் அதிகாரி ராகவேந்தர் (சேத்தன்) உள்ளார். தான் சொல்வதை மட்டுமே முகாமில் இருக்கும் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டுமென்று எதிர்பார்க்கும் மனிதர் அவர்.  அவரது ஜீப் ஓட்டுநராக நியமிக்கப்படுகிறார் குமரேசன்.ஆனால், வந்த முதல் நாளே அதிகாரியின் உத்தரவை மீறி உடல்நலமில்லாத ஒரு மூதாட்டியை ஜீப்பில் ஏற்றி மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்கிறார் குமரேசன். அது ராகவேந்தரை ஆத்திரப்படுத்துகிறது. அதனால், வாரம் முழுக்க இரவு பகலாகப் பல்வேறு வேலைகளைச் செய்யும் கொடுமைக்கு ஆளாகிறார். அது, அந்த மூதாட்டியின் பேத்தியான தமிழரசிக்குத் (பவானிஸ்ரீ) தெரிய வருகிறது. நாள்பட தமிழரசிக்கும் குமரேசனுக்கும் இடையே ஒரு நட்பு மலர்கிறது; மெல்ல காதலாக மாறுகிறது. அருமபுரி மலைப்பகுதிகளில் சுரங்கம் அமைக்கும் பணி தொடர்பாக, ஒரு வெளிநாட்டு நிறுவனம் தமிழ்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறது.  அந்தச் சூழலில், மக்கள் படையினரால் அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என்று மெனக்கெடுகிறது காவல் துறை. அப்போது, அந்த இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரது உறவினர்கள் முகாமின் அருகிலுள்ள கிராமத்தில் இருப்பதாகத் தகவல் கிடைக்கிறது.  தமிழரசியின் உறவினரும் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்தான். இந்தச் சூழலில், மக்கள் படையின் தலைவர் பெருமாள் எனும் வாத்தியாரை (விஜய் சேதுபதி) தான் பார்த்ததாக ரைட்டர் சந்திரனிடம் சொல்கிறார் குமரேசன்.  அவர் மட்டுமல்ல, யாரும் அதனைக் காது கொடுத்துக் கேட்பதாக இல்லை. தனக்குத் தெரிந்த உண்மையைச் சொல்லாமல்போய், அதனால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்று அவர் பதைபதைக்கும்போது, தமிழரசியின் கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் முகாமுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.  ஆண்களும் பெண்களும் தொடர் சித்திரவதைகளுக்கு ஆளாகின்றனர். பெண்கள் நிர்வாணப் படுத்தப்படுகின்றனர். அந்த அவமானம் தமிழரசிக்கு நிகழ்ந்துவிடக் கூடாது எனும் நினைப்பில், பெருமாள் இருக்குமிடத்தைத் தன் உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்க ஓடுகிறார் குமரேசன்.  அவர் சொல் அம்பலம் ஏறியதா இல்லையா? பெருமாள் பிடிபட்டாரா என்பதோடு படம் நிறைவடைகிறது. இந்த படத்தின் ஒவ்வொரு பிரேமையும் புட்டு புட்டு வைத்தாலும், படத்தைப் பார்க்க அமர்ந்தால் தன்னை மறந்து போய்விடுவோம். அந்த அளவுக்கு, திரையில் உழைப்பைக் கொட்டியிருக்கிறது வெற்றி மாறன் குழு. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்வது போல திரைக்கதை வடிவமைக்கப்படிருப்பதால், பிளாஷ்பேக் சம்பவங்களாகவே மொத்த படமும் நகர்கிறது.  அரியலூர் ரயில் பாலம் தகர்ப்பு, வாச்சாத்தி கொடுமை உட்படத் தமிழ்நாட்டு சமூக அரசியல் பரப்பில் கிளர்ச்சியை உண்டாக்கிய பல விஷயங்கள் திரைக்கதையில் செருகப்பட்டிருக்கின்றன.  பரோட்டா முதல் போலீஸ் வரை! எத்தனையோ படங்களில் துணைநடிகராகத் தலைகாட்டியிருந்தாலும், ‘வெண்ணிலா கபடிக் குழு’வில் வரும் பரோட்டா சூரியாகத்தான் ரசிகர்கள் பலருக்கும் அவர் அறிமுகம். அப்படிப்பட்டவர் முழுக்கவே சீரியசான பாத்திரமொன்றில் நடிக்கும்போது, நிச்சயம் சிரிப்பு வந்துவிடக் கூடாது. அதற்கேற்றவாறு குமரேசன் பாத்திரத்தைத் தந்திருக்கிறார் வெற்றி மாறன்.  இத்தனைக்கும் காதல் காட்சிகளில் ‘சுப்பிரமணியபுரம்’ ஜெய் போல தன் பற்கள் தெரியச் சிரிக்கிறார் சூரி; ஆனால், நமக்கு கொஞ்சம் கூட கிண்டலடிக்கத் தோன்றுவதில்லை. காரணம், கனமான கதைக்களம். நிச்சயமாக, ஒரு நாயகனாக அறிமுகமாகச் சிறப்பான படத்தைத் தேர்வு செய்திருக்கிறார் சூரி.  தனிப்படை முகாமில் கடைசி நபராகக் கருதப்படும் ஒருவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரைக் கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் பிடிக்க முயல்வதெல்லாம் ஹீரோயிசத்தின் உச்சம் என்றே சொல்லலாம். விஜய் சேதுபதிக்குக் காட்சிகள் குறைவென்றாலும், ‘விக்ரம்’ பாணியில் அனைவருமே அவரது பாத்திரம் பற்றியே படம் முழுக்கப் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதனாலேயே, ஐம்பதுகளை தாண்டிய ஒரு பாத்திரத்தில் அவர் தோன்றும்போதும் நம்மையும் அறியாமல் ஒரு சூப்பர் ஹீரோ’ போல கொண்டாடத் தோன்றுகிறது. இவர்கள் இருவரையும் தவிர்த்து தமிழரசியாக வரும் பவானிஸ்ரீ, அவரது பாட்டியாக வரும் அகவம்மா, தனிப்படை முகாம் அதிகாரியாக வரும் சேத்தன், தலைமைச்செயலாளர் சுப்பிரமணியமாக வரும் ராஜீவ் மேனன், புதிய அதிகாரியாக இடம்பிடிக்கும் கவுதம் மேனன், அமைச்சராக வரும் இளவரசு, மூணார் ரவி என்று பலரும் நம் மனதில் இடம்பிடிக்கின்றனர்.  இவர்கள் தவிர்த்துப் பலர் இப்படத்தில் முகம் காட்டியிருந்தாலும் ரைட்டர் சந்திரன் ஆக வருபவர் நம் கவனம் கவர்கிறார். இரண்டாம் பாகத்திலும் அவருக்கு முக்கியத்துவம் என்று எதிர்பார்க்கலாம். ‘விடுதலை’யின் முக்கிய பலம், மலைப்பாங்கான பிரதேசத்தை முதன்மைப்படுத்தும் கதைக்களம். அதனைக் கொஞ்சம் கூட அழகுறக் காட்டிவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.  அதனாலேயே, அழகழகான இடங்கள் கூடக் காட்சிகளின் கனத்தினால் நம் எண்ணவோட்டத்தில் இருந்து விலகி நிற்கின்றன. அதேபோல, கண்கள் பதறும் அளவுக்கு குறைந்த நொடிகள் ஓடும் ஒரு ஷாட்டை கூடக் காண்பித்துவிடக் கூடாது என்பதில் மெனக்கெட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் ராமர்.  கிளைமேக்ஸில் வரும் சண்டைக்காட்சியிலும் அதனைப் பின்பற்றியிருப்பது அருமை. போலவே பீட்டர் ஹெய்ன், ஸ்டன் சிவா குழுவினரின் உழைப்பும் அபாரம்.‘காட்டு மல்லி’, ‘உன்னோட நடந்தா’ பாடல்கள் ஏற்கனவே பலரது பிளேலிஸ்டை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. அவை திரையில் இடம்பெறும்போது, எவரும் இருக்கையை விட்டு எழவில்லை.  டைட்டில் இசையில் ‘ஜெர்க்’ ஆக வைத்தாலும், படம் முழுக்கப் பாவி நிற்கும் பின்னணி இசை நம் கவனத்திற்குப் புலப்படாதவாறு காட்சிகளோடு கரைந்திருப்பது இன்னொரு அதிசயம்.ஊட்டி, கொடைக்கானல் என்று மேற்குத்தொடர்ச்சி மலையின் சில பகுதிகளையே பார்த்த கண்களுக்கு, அடர்ந்த காடு இப்படித்தான் இருக்கும் என்று காட்டியிருக்கிறார் இயக்குனர் வெற்றி மாறன்.  பரீட்சார்த்தமாக அவர் படம்பிடித்தவை மட்டும் மிகச்சில இடங்களில் ஒட்டாமல் தனித்து தெரிகிறது. அவற்றைப் புறந்தள்ளினால் நமக்குக் கிடைப்பது ரத்தினம் போன்ற காட்சியாக்கம். அவற்றில் லாஜிக் மீறல்களைத் தேடினாலும் சுலபத்தில் கிடைப்பதாக இல்லை.  வெற்றிமாறனின் தனித்துவம்! அருமபுரி என்ற பெயரைச் சொல்லும்போதே, இது எந்த பிரதேசத்தில் நிகழ்ந்த கதை என்பதை ஊகித்துவிட முடிகிறது. அது மட்டுமல்லாமல் அரசின் அதிகார மட்டத்தைச் சேர்ந்தவர்கள் சூப்பர்பாஸ், வாத்தியார் என்று உச்சரிப்பதெல்லாம் குறிப்பிட்ட தலைவரைச் சுட்டிக்காட்டுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஏன், பெருமாள் வாத்தியார் எனும் பாத்திரம் கூட நக்சல்பாரி கொள்கையை முன்னிறுத்திய ஒரு தலைவரின் சாயலில் அமைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது.  ஆனால், அது போன்ற பல தகவல்களை திரையில் அழுத்தம் திருத்தமாகவோ, ஒருசார்பான பிரசாரத் தொனியிலோ வெற்றிமாறன் படமாக்கவில்லை. வெற்றிமாறனின் முந்தைய படங்கள் காவல்துறையின் அத்துமீறல்களைச் சொன்னது போலவே, இதில் தனிப்படையினரின் செயல்பாடுகள் விமர்சிக்கப்பட்டுள்ளன.  அதேநேரத்தில், மக்களுக்குச் சேவையாற்றும் எண்ணத்தோடு இருப்பவர்களும் கணிசம் என்று காட்டுகிறது திரைக்கதை. வெறுமனே நாயகனை மட்டுமே நல்லவன் என்ற வார்ப்பில் அடக்கவில்லை. பெண்கள் மீதான பாலியல் வன்முறையைக் காட்ட பாதுகாப்பான கோணங்களைத் தேர்ந்தெடுக்காமல், முழுக்க நிர்வாணமாகப் படம்பிடித்து படத்தொகுப்பில் அப்பிம்பங்களை ‘மங்கலாக்கிய’ எபெக்டிலேயே திரையில் ஓட விடுகிறார்.  ஒரு கோரத்தை அழகாகக் காட்சிப்படுத்திவிடக்கூடாது என்ற அக்கறை அதன் பின்னிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் சார்பு இருக்கும். ஒரு திரைப்படத்தின் இயக்குனருக்கும் அது பொருந்தும். ஆனால், மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் ஒருவருக்கே சமநிலை வாய்க்கும். ஏதேனும் ஒருபக்கம் நில் எனும் எதிர்பார்ப்புக்கு மாறானது இது; கூட்டம் சேர்க்க வழிவகை செய்யாதது.  ஆனால், அதனை முன்வைக்கும் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்திற்கு மக்கள் திரளாகக் குவியக் காரணம், அவரது தனித்துவமான படைப்பாக்கமே. அதுவே, நீண்டநாள் காத்திருப்புக்குப் பிறகு வெளியானபோதும் ’அடுத்த பாகம் எப்போது’ என்ற கேள்வியை அவரிடம் முன்வைக்கவும் தூண்டுகிறது. அந்த வகையில், இது ரசிகர்களின் எதிர்பார்ப்பினை மீறி வேறொரு உச்சத்தைத் தொட்ட படமாகவும் இருப்பது சிறப்பு.     https://minnambalam.com/cinema/viduthalai-part-1-review-in-tamil-minnambalam-cinema-news/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.