Jump to content

அறப் படிச்ச வானொலி அறிவிப்பாளர்களால்... வழக்கொழிந்து வரும், வானொலி துறை.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

 

அறப் படிச்ச வானொலி அறிவிப்பாளர்களால்... வழக்கொழிந்து வரும், வானொலி துறை.

இன்றைய உலக வானொலி தினத்தில்... 
தமிழர் தரப்பை பொறுத்த வரை, இவ் வானொலி கேட்கும் பழக்கம் 
வழக்கொழிந்து மருவி வருவதற்கு முக்கிய காரணம் 
டிஜிட்டல் சாதனங்களின் வரவு தான் என்று 
குற்றம் சாட்டுவது நியாயம் இல்லை.

இக்கால அறிவிப்பாளர்களின் அதிக பிரசங்கி தனமான 
மிகைப் படுத்தப்பட்ட்ட அலப்பறைகளும், தென்னிந்திய ஒலிபரப்புகளை 
பிரதி எடுத்து தன் பாணியில் சொல்லுகிறேன் என்று 
வெளிப்படுத்தப்படும் தேவையற்ற ஆணி புடுங்கி வெளிப்பாடுகளும் 
அதன் பின்னர் இவர்களின் தனிப்பட்ட சமூக வலைத்தளங்களில் 
இவர்கள் தம் பெருமைக்காக பதிவிடும் தம் குடும்ப வாழக்கையில் 
நடைபெறுகின்ற கொண்ட்டாட்டங்கள், சுற்றுலா செல்லுதல், 
தங்கள் மனைவிமார்களின் சமையல் தொடங்கி சகல நடவடிக்கைகளையும் 
பதிவேற்றும் இவர்களின் வலிந்து காட்டும் புகழ் துதி தளமாக, 
தம்மை பிரபலப்படுத்துவதற்கு வானொலியை பாலமாக 
பயன்டுத்த நினைத்த எண்ணமே... 
இன்றைய அறிவிப்பாளர்கள் பால், மக்களுக்கு இருக்கும் வெறுப்பு 
மக்கள் வானொலி கேட்பதை நிறுத்தி, வேறு பக்கம் திசை திருப்ப வைத்தது. 

உண்மை உரைகல்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு பிடித்த அறிவிப்பு அதுதான் என்று அட்வைஸ் பண்றாங்கள். 😑வாயை மூடிக்கொண்டு இருப்பம் தமிழ் சிறி. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, shanthy said:

மக்களுக்கு பிடித்த அறிவிப்பு அதுதான் என்று அட்வைஸ் பண்றாங்கள். 😑வாயை மூடிக்கொண்டு இருப்பம் தமிழ் சிறி. 

சாந்தி....
தற்போதைய  வானொலியிலும்,  இணையத் தளங்களை நடத்துபவர்களும்,
"யூ  ரியூப்" பதிவு இடுபவர்களும்... தேவை இல்லாமல்,   
அதிக ஆங்கில வார்த்தையை கலந்து பேசுவதை பார்க்க, வெறுப்பாக உள்ளது.

அதனைப் பார்த்து... அங்கு  வாழும் சாதாரண மக்களின்,
உரையாடலிலும்... ஆங்கிலம் கலந்து வருவதை பார்க்க 
மிகவும் வேதனையாக உள்ளது.

விரைவில்... நமது மண்ணிலும், 
தமிழ்நாட்டு தமிழர் போல் கதைக்கப் போகிறார்கள் என்பது நிச்சயம்.
இதனை... நமது, வானொலி தொலைக்காட்சிகள்..
சமூக அக்கறையுடன்... தாய் மொழிக்கு தீங்கு வராமல் 
காக்க வேண்டிய பொறுப்பு, உள்ளது என்பதனை உணர வேண்டும்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

இன்றைய அறிவிப்பாளர்கள் பால், மக்களுக்கு இருக்கும் வெறுப்பு 
மக்கள் வானொலி கேட்பதை நிறுத்தி, வேறு பக்கம் திசை திருப்ப வைத்தது. 

உண்மை உரைகல்

அறிவிப்பாளர்கள் பால், மக்களுக்கு வளங்கினார்கள்

 

சிலபேர், வேறயிடங்களில் வங்த வீடியோக்களை 75% போட்டு, 25% கதைபார்கள். தடியைபிடிச்சுகொண்டு நடக்கிறமாதிரியிருக்கும்

 

 

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Knowthyself said:

இன்றைய அறிவிப்பாளர்கள் பால், மக்களுக்கு இருக்கும் வெறுப்பு 

இது வெறுப்பினால் வந்ததல்ல தன்னையறிந்தவன் அவர்களே! அன்று ஒன்றிரண்டு வழிகள்தான் தெரிந்த வழிகளாக இருந்தன, இன்று பல வழிகள்... மக்கள் எந்தவழியில் செல்வது என்று தெரியாது திண்டாடுகின்றனர். 

தெழில்நுட்ப பரினாம வளர்ச்சியின் காரணமாக உலகமக்களிடையே அதிகளவிலான ஊடகங்கள் தோற்றம் பெற்றுள்ளன. இந்த ஊடகங்கள் நிலைபெற்று நிற்பதற்கும் வளர்ச்சிக்கும் இன்று பணமே பெரும் காரணமாகி இருக்கிறது. (பொருட் செல்வம் பூரியார் கண்ணுமுள) அத்துடன் இவற்றில் எழுத்துவடிவில், ஒலிவடிவில், ஒளிவடிவில் வரும் எண்ணற்ற செய்திகளில் எது உண்மை எது பொய் என்று அறிவது மிகவும் சிரமமானது. இவற்றைக் கிரகிக்கும் மக்கள் தாங்கள் கொண்டுள்ள அறிவைக் கொண்டு உண்மை எது பொய் எது என்று நிர்ணயம் செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.  

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவின் 90 களின் இறுதியில் ஐபிசி வானொலி ஆரம்பித்தார்கள். வானொலி மற்றும் கலை துறையில் பழுத்த அனுபவம் கொண்ட ஏசி தாசீசியஸ் எனும் பெரியவர் தலைமையில் அறிவிப்பு துறையில் அனுபவம் வாய்ந்த விக்னராஜா, எஸ்,கே ராஜன், மற்றும் சுமதி சுரேசன்,ஜி எஸ்.குமார்,ரவி அருணாச்சலம் நாவரசன் ,அருணா கோஷ்டி லோகேஷ்-இவர் லைட்டா 2 ,3 பெக் அடிச்சிட்டுத்தான் ஒலிவாங்கியில் பேசுவார் ஒருகட்டத்தில் அவரையறியாமலே உளறல் ஜாஸ்தி ஆகிவிடும்) போன்றவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு வானொலியை திறம்பட நடத்தினார்கள்.

ஒருவருடம்தானிருக்கும் அதற்குபின்  தமிழருக்கே உரித்தான குழு மோதலில் முதலில் விக்னராஜா பிரிந்து போனார், பின்னர் தாசீசியஸ் எஸ்கே ராஜன் ஜிஎஸ் குமாஎ என்று அனைவருமே பிரிந்துபோனார்கள்.

ஐபிசியில் ஒன்றாக இயங்கிய காலத்திலேயே தாசீசியசுக்கு திமிர் தலையில் வந்து உக்காந்து கொண்டது, நேயர்களை தனது நகைச்சுவை பேச்சு அறிவாற்றல் மிக்க கேள்விகள் நிகழ்ச்சி தொகுப்பு என்று கவர்ந்த விக்னராஜாபத்தி ஒரு நேயர் எங்க அவர கனநாளா காணவில்லை என்று கேட்டதுக்கு அவர் விலகிட்டார் ..வேற கேள்வி?? அப்படித்தான் ஒரேவரியில் பதில் சொன்னார்.

வணக்கம் ஐபிசி மாமா என்ற மழலைகளுக்கான நிகழ்ச்சியில் ஒரு குழந்த புலிமாமா வீட்டுக்கு வாங்கோ பாட்டு பாடியதுக்கு , குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்காதீர்கள் என்று அதன் தாயை கண்டித்தார்.

காலபோக்கில் ஒரே வழிசல் வானொலியானது, பெண்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், அம்மா, இல்லடா, சரிடா, செல்லம் ரேஞ்சுக்கு வழிந்தார்கள், ஆண்கள் வந்து கொஞ்சம் பேசினாலும் சுருக்கமாக முடித்து கொள்ளுங்கள் அடுத்த நேயருக்கு வழி விடவேணும் என்று கறார் குரலில் சொல்வார்கள், முக்கியமாக தாசீசியஸ்.

டக்ளஸ் மகேஸ்வரி சுவிஸ் ரஞ்சன்என்று அந்த காலகட்டத்தில் தமிழ்மக்களின் அதீத வெறுப்பை சம்பாதித்த பிரமுகர்களை தேடி தேடி பேட்டி எடுத்தார்கள்.

அதுவும் ஒருபக்கத்தால் டக்ளஸ் கோஷ்டியால் உள்ளே அனுப்பபட்டவர்களை மறுபக்கத்தால் மகேஸ்வரி பணம் வாங்கொண்டு மீட்க அவரை கருணை தாயே என்று தாசீசியஸ் புகழ்ந்தார். பின்னர் நேயர்கள் கோபம் கொண்டு தாசீசியசிடம் கண்டனம் தெரிவித்தபோது, அது சும்மா அவரை நக்கலாக சொன்னேன் என்று கஷ்டப்பட்டு சமாளித்தார்.

மேற் சொன்ன இரண்டு சம்பவத்திலும் தான் தவறு செய்ததை ஒப்புக்கொள்ளவேயில்லை அவர் அவ்வளவு வித்தக திமிர்.

பின்னாளில் அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் இணையவானொலி என்று ஒன்று ஆரம்பித்து அப்படியே காணாமல் போனார் அந்த பெரியவர். அதற்கப்புறம் ஐபிசிபல கைகள்மாறி அதன் போக்கே மாறி எங்கோ தொலைந்து போனது.

ஐரோப்பாவில் ஓரிரு வானொலிகள் ஐபிசிக்கு முதலில் ஆரம்பித்தாலும் 24 மணிநேரமும் இலவசமாக அனைவரும் கேட்க இயங்கிய முதல் வானொலி ஐபிசிதான், அந்த தொட்டிலில் பழக்கம் இன்றுவரை அனைவரிடமும் தொடர்கிறது என்று சொல்லி கொள்ளலாம்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எதிலும் கூடக்குறைய வரலாம். தொழில்நுட்ப, விஞ்ஞான வளர்ச்சிகள், சமூக மாற்றஙகளால் மனித வாழ்க்கை பாரிய மாற்றங்களை கண்டு உள்ளது. 

வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள், கலைஞர்கள் சேவை குறைத்து மதிப்பிடப்பட முடியாது.

நான் கேட்ட, பார்த்த அளவில் சிறப்பாகவே செயற்படுகின்றார்கள். இவர்களை ஊக்குவிப்பது, உற்சாகம் கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.

வர்த்தக விளம்பரங்கள் தவிர்க்கப்பட முடியாதவை. சமூக ஊடக பரப்பில் அனைவருமே தம்மை முன்னிலைப் படுத்துகின்றார்கள். இங்கு வானொலி, தொலைக்காட்சி கலைஞர்கள் ஒதுங்க வேண்டும் என்ற அவசியமில்லை.

நாம் இப்போது 2022ம் ஆண்டில் நிற்கின்றோம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
14 hours ago, தமிழ் சிறி said:

தற்போதைய  வானொலியிலும்,  இணையத் தளங்களை நடத்துபவர்களும்,
"யூ  ரியூப்" பதிவு இடுபவர்களும்... தேவை இல்லாமல்,   
அதிக ஆங்கில வார்த்தையை கலந்து பேசுவதை பார்க்க, வெறுப்பாக உள்ளது.

அதனைப் பார்த்து... அங்கு  வாழும் சாதாரண மக்களின்,
உரையாடலிலும்... ஆங்கிலம் கலந்து வருவதை பார்க்க 
மிகவும் வேதனையாக உள்ளது.

விரைவில்... நமது மண்ணிலும், 
தமிழ்நாட்டு தமிழர் போல் கதைக்கப் போகிறார்கள் என்பது நிச்சயம்.
இதனை... நமது, வானொலி தொலைக்காட்சிகள்..
சமூக அக்கறையுடன்... தாய் மொழிக்கு தீங்கு வராமல் 
காக்க வேண்டிய பொறுப்பு, உள்ளது என்பதனை உணர வேண்டும்.

உங்கள் கருத்தை நூறு வீதம் ஆமோதிக்கிறேன்.

எனக்கும் இந்த ஆங்கிலம் கலந்து கதைப் பதைக் கேட்க அருவெறுப்பக உள்ளது.

அதை விட ஆங்கிலம் கலந்து இயல்பு வாழ்க்கையில் கதைப்பது என்பது சத்தியமா நினைத்துப் பார்க்க இயலவில்லை. ஆனால் அது ஊரில் வந்து விட்டது. என் தலைமுறைக்கு அப்படித்தான் தமிழ் உள்ளது... 

எமது ஊடகங்களும் தமிழ் நாட்டுத்தமிழ் போலவே கதைப்பது மனதிற்கு ஏற்க இயலாமல் உள்ளது. இதனால் எமது வட்டார வழக்குத் தமிழ் காலப்போக்கில் அழியும் வாய்ப்புள்ளது...

 

 

 • Thanks 1
Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.