Jump to content

யாழ். மதுபானசாலையில்... இரு குழுக்களுக்கு, இடையில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு! (காணொளி) 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மதுபானசாலையில்... இரு குழுக்களுக்கு, இடையில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு! (காணொளி) 

மதுபானசாலையில் எழுந்த வாய்த்தர்க்கம் போத்தல் குத்தில் முடிவடைந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை வெளி பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையில் நேற்று (திங்கட்கிழமை) மது அருந்திய இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

வாய்த்தர்க்கம் முற்றி இரு குழுவினரும் கைக்கலப்பில் ஈடுபட்டனர். அதன்போது ஒருவர் மதுபான போத்தல் ஒன்றினை உடைத்து இளைஞன் ஒருவரை குத்தியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து அக்குழு அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் அங்கிருந்தவர்கள் போத்தல் குத்துக்கு இலக்கான இளைஞனை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். வைத்திய சாலையில் இளைஞன் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

யாழ்ப்பாணம் திக்கம் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த குணசேகரன் குணசோதி (வயது 25) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், நான்கு சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ள பொலிஸார் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://athavannews.com/2022/1279752

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு நவநாகரீகமாக முன்னேறணும் எண்டா இதுவும் ஒரு அங்கம்...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் வாள் வெட்டு – 7 பேர் படுகாயம்!

வல்லை மதுபானசாலை... கொலை சந்தேகநபர்கள், இருவர் சரண் – பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட இருவர் தலைமறைவு

யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் இருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் அமைந்துள்ள மதுபான நிலையத்தில் கடந்த 3ஆம் திகதி இரவு இரு இளைஞர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தர்க்கம் போத்தல் குத்தில் முடிவடைந்ததில் திக்கம் பகுதியை சேர்ந்த குணசேகரம் குணசோதி (வயது 25) எனும் இளைஞன் உயிரிழந்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் நால்வரை அடையாளம் கண்டிருந்தனர்.

அவர்களை கைது செய்தவற்கு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் அல்வாய் பகுதியை சேர்ந்த இருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட இருவர் தொடர்ந்தும் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும், சரணடைந்துள்ள இருவரும் அன்றைய தினம் பிரதான சந்தேகநபருடன் மது அருந்திய நபர்கள் எனவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2022/1280229

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையோர்களின் பொறுப்பற்ற  தன்மைக்கு காரணம் என்ன  ?

பணப்புழக்கம் , தாராள மதுபாவனை  (வேறு போதைகளும்)  கஷ்டப்பட்டு   உழைத்தால் தானே பணத்தில் பெறுமதி தெரியும்.

  • Sad 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன்  என்று  சொல்லடா????😡

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வல்லை மதுபான விடுதி கொலை – பிரதான சந்தேக நபர் நீதிமன்றில் சரண்!

May 27, 2022
 

 

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி வல்லையிலுள்ள மாதுபான விடுதியில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நீதிமன்றில் சரணடைந்த நிலையில் , விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொலையுடன் தொடர்புடைய நால்வரில் மூவர் ஏற்கனவே நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 24 நாள்களின் பின்னர் முதன்மை சந்தேக நபர் தனது சட்டத்தரணி ஊடாக நேற்று வியாழக்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் சரண்டைந்துள்ளார்.

கடந்த மே 2ஆம் திகதி இரவு விடுதியில் மதுபானம் அருந்திய இரண்டு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் போத்தலினால் குத்தப்பட்டு உயிரிழந்தார்.

சம்பவத்தில் திக்கம் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த 25 வயதுடைய ஞானசேகரம் குணசோதி என்பவரே கொலை செய்யப்பட்டார்.

சம்பவத்தையடுத்து போத்தலினால் குத்தியவர் உள்ளிட்ட நால்வர் தலைமறைவாகிய நிலையில் நெல்லியடிப் காவற்துறையினர் தேடி வந்தனர்.

அவர்களில் அல்வாய் கிழக்கைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தேக நபர் வீட்டில் வைத்து இரண்டு தினங்களின் பின்னர் கைது செய்யப்பட்டார்.

https://globaltamilnews.net/2022/177120

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

வல்லை மதுபான விடுதி கொலை – பிரதான சந்தேக நபர் நீதிமன்றில் சரண்!

ஜேர்மனியில வெறியிலை செய்த குற்றங்களுக்கு தண்டனை குறைவு.....🙃
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த வல்வை வெளி புறாப்பொறுக்கிக்கு அண்மையில் உள்ள மதுபான சாலை மூடப்படணும் திரும்ப திரும்ப குற்றங்களை உற்பத்தி செய்யும் நிலையமாகமாறிவிட்டது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோல் இல்லை, டீசல் இல்லை, மருந்தில்லை, சாப்பாடும் இல்லை…

ஆனால் இது மட்டும் “தண்ணியாய்” ஓடுகிறது.

கண்ணதாசன் என நினைக்கிறேன்,

“நானும் குடித்திருக்கேன், குடிப்போரை பார்த்திருகேன், நல்ல புத்தி வருவதில்லை குடியிலே, ஒரு நாய் கூட மதிப்பதில்லை தெருவிலே”. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

முதலில் இந்த வல்வை வெளி புறாப்பொறுக்கிக்கு அண்மையில் உள்ள மதுபான சாலை மூடப்படணும் திரும்ப திரும்ப குற்றங்களை உற்பத்தி செய்யும் நிலையமாகமாறிவிட்டது .

நாங்கள் மூலைக்கு மூலை மதுபான சாலைகள் இருக்கும் நாடுகளில் வாழ்கின்றோம். அங்கு செல்லும் மக்கள் என்ன நடைமுறைகளை கடைப்பிடிக்கின்றார்கள் அல்லது கடைப்பிடிக்கின்றோம் என்பதனையும் கவனத்தில் எடுத்து அங்கேயும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

உலகில் ஜேர்மனி மதுவை பொறுத்தவரை ஒரு திறந்த வெளி.எங்கும் எதுவும் வாங்கலாம்.பகிரங்கமாக அருந்தலாம். அது போல் சட்டங்களும் தண்டனைகளும்  திறந்த வெளிதான்.மது அருந்திவிட்டு  சைக்கிள் ஓடினால் கூட தண்டம் உண்டு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

முதலில் இந்த வல்வை வெளி புறாப்பொறுக்கிக்கு அண்மையில் உள்ள மதுபான சாலை மூடப்படணும் திரும்ப திரும்ப குற்றங்களை உற்பத்தி செய்யும் நிலையமாகமாறிவிட்டது .

இதுதான் உண்மை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுபான சாலைகளை மூடினால் வீட்டு வீடு பின் பக்கம் மது பாசனசாலையாய் வரும். கையோட சூடை மீன் பொரியலும் வரும்.....அங்கால நான் சொல்ல விரும்பல  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மதுபாணத்துக்கு உள்ள விற்ப்பனை நடைமுறைகளே பல சட்ட விரோத நடவடிக்கைளுக்கு காரனம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

நாங்கள் மூலைக்கு மூலை மதுபான சாலைகள் இருக்கும் நாடுகளில் வாழ்கின்றோம். அங்கு செல்லும் மக்கள் என்ன நடைமுறைகளை கடைப்பிடிக்கின்றார்கள் அல்லது கடைப்பிடிக்கின்றோம் என்பதனையும் கவனத்தில் எடுத்து அங்கேயும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

உலகில் ஜேர்மனி மதுவை பொறுத்தவரை ஒரு திறந்த வெளி.எங்கும் எதுவும் வாங்கலாம்.பகிரங்கமாக அருந்தலாம். அது போல் சட்டங்களும் தண்டனைகளும்  திறந்த வெளிதான்.மது அருந்திவிட்டு  சைக்கிள் ஓடினால் கூட தண்டம் உண்டு.

அங்கு போலீஸ் என்பவர்கள் தமிழருக்குள்  நிறைய குற்றம்களும் தற்கொலைகளும் அதிகரிக்கணும் எனும் நோக்கில் நீண்டகால தமிழ்  இன  அழிப்புக்கு துணையாக குந்தி இருப்பவர்கள் .

உங்கள் ஜெர்மனி அப்படியா சாமி ? 

7 hours ago, alvayan said:

இதுதான் உண்மை...

வடமராட் சியின் முக்கிய நகரங்களில் தமிழ் அரசியவாதி ஒருத்தரின் மதுபான விடுதிகள்  மக்களின் எதிர்ப்பின் பின் துரத்துபட்டு புறாப்பொறுக்கி பக்கம் ஒதுங்கி உள்ளது .

8 hours ago, goshan_che said:

பெற்றோல் இல்லை, டீசல் இல்லை, மருந்தில்லை, சாப்பாடும் இல்லை…

ஆனால் இது மட்டும் “தண்ணியாய்” ஓடுகிறது.

அதுதான் சிங்களவன் கோல்பேசில் முள்ளிவாய்க்கால் கஞ்சி  ஊத்தினாலும் காரியத்தில் கண்ணாக இருக்கிறான் .

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.