Jump to content

சிற்றுண்டியில் உப்பு அதிகம் என மனைவி கொலை: இந்திய மனைவிகளின் நிலை பற்றிய அதிர்ச்சி தரவுகள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
 • கீதா பாண்டே
 • பிபிசி ந்யூஸ், டெல்லி

இந்தியாவில் காலை உணவில் உப்பு அதிகமாக இருந்ததால் மனைவியைக் கொன்றதாக குற்றமசாட்டப்பட்ட 46 வயது ஆடவரை கடந்த மாதம் போலீசார் கைதுசெய்தனர்.

"மேற்கு நகரமான மும்பையின் அருகிலுள்ள தானேவில் ஒரு வங்கியில் பணிபுரியும் நிகேஷ் கக், தனது 40 வயது மனைவியின் கழுத்தை ஆத்திரத்தில் நெரித்தார். காரணம், அவர் பரிமாறிய ஜவ்வரிசி உப்புமாவில், உப்பு அதிகம் இருந்தது," என்று காவல்துறை அதிகாரி மிலிந்த். தேசாய் பிபிசியிடம் கூறினார்.

தன் தந்தை தனது தாயார் நிர்மலாவை பின்தொடர்ந்து படுக்கையறைக்குள் சென்று உப்பு பற்றி புகார் சொல்லியபடி அவரை அடிக்கத் தொடங்கினார் என்று இந்த குற்றத்தை நேரில் பார்த்த தம்பதியின் 12 வயது மகன் காவல்துறையிடம் கூறினார்.

"அடிப்பதை நிறுத்துமாறு தனது தந்தையிடம் சிறுவன் அழுது கொண்டே கெஞ்சினார். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவியைத் தாக்கி, கயிற்றால் கழுத்தை நெறித்துக் கொன்றார்" என்று தேசாய் கூறினார். நிகேஷ் கக் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, அந்த சிறுவன் தனது தாய்வழி பாட்டி மற்றும் மாமாவை அழைத்தான்.

"நாங்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது, குடும்பத்தினர் அவரை ஏற்கனவே மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார்," என்றார் திரு தேசாய் .

பின்னர் காவல் நிலையத்தில் சரணடைந்த குற்றம்சாட்டப்பட்டவர், தான் உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படுவதாக அதிகாரிகளிடம் கூறினார். பின்னர் அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

கடந்த 15 நாட்களாக சில "வீட்டு பிரச்சனைகள்" தொடர்பாக கக், தனது மனைவி நிர்மலாவிடம் தகராறு செய்து வந்ததாக நிர்மலாவின் குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்தோ அல்லது அவரது குடும்பத்தினரிடமிருந்தோ இது குறித்து எந்த புகாரும் வரவில்லை என்று தேசாய் கூறினார்.

உணவிற்காக ஏற்பட்ட தகராறில், கணவனால் ஒரு பெண் கொலை செய்யப்படும் சம்பவம், இந்தியாவில் அவ்வப்போது தலைப்புச்செய்திகளில் இடம்பெறுகிறது.

சில சமீபத்திய வழக்குகளை எடுத்துக் பார்ப்போம்:

 • ஜனவரி மாதம், தலைநகர் டெல்லியின் புறநகர்ப் பகுதியான நொய்டாவில், இரவு உணவை வழங்க மறுத்ததற்காக தனது மனைவியைக் கொன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
 • 2021 ஜூன் மாதம், உத்திரபிரதேசத்தில் சாப்பாட்டுடன் சாலட் கொடுக்கவில்லை என்பதற்காக மனைவியைக் கொன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
 • நான்கு மாதங்களுக்குப் பிறகு பெங்களூருவில் ஒரு நபர் , வறுத்த கோழியை சரியாக சமைக்கவில்லை என்பதற்காக மனைவியை அடித்துக் கொன்றார்.
 • 2017 இல், 60 வயது முதியவர் தனது இரவு உணவை தாமதமாக பரிமாறியதற்காக தனது மனைவியை சுட்டுக் கொன்ற சம்பவம் பற்றி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

பாலின ஆர்வலர் மாதவி குக்ரேஜா ,"மரணம் கவனத்தை ஈர்க்கிறது" என்று கூறுகிறார், ஆனால் இவை அனைத்தும் பாலின அடிப்படையிலான வன்முறைகள். ஆனால் அந்த அம்சம் "மறைந்து விடுகிறது" என்கிறார் அவர்.

 
இந்தியா

"கணவன் அல்லது உறவினர்களால் கொடுமை" என்ற சட்டப்பூர்வ வார்த்தையின் கீழ் பெரும்பாலும் புகாரளிக்கப்படும் குடும்ப வன்முறை என்பது இந்தியாவில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடக்கும் வன்முறைக் குற்றமாகும். குற்றத் தரவுகள் கிடைக்கப்பெறும் கடைசி ஆண்டான 2020 இல், 1, 12, 292 பெண்களிடமிருந்து காவல்துறை புகார்களைப் பெற்றுள்ளது. அதாவது ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு குற்றம் நடக்கிறது.

இத்தகைய வன்முறை இந்தியாவில் மட்டுமே நடக்கிறது என்று சொல்ல முடியாது. உலகளவில் மூன்றில் ஒரு பெண் பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்கொள்கிறார், அதில் பெரும்பாலானவை நெருங்கிய துணையால் ஏற்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்தியாவின் புள்ளிவிவரங்களும் இதே போலத்தான் உள்ளன.

இங்குள்ள ஆர்வலர்கள் அதைச் சூழ்ந்திருக்கும் மௌனத்திற்கு எதிராக போராட வேண்டியுள்ளது.அதிர்ச்சியூட்டும் வகையில் அத்தகைய வன்முறைக்கு பெரும் அங்கீகாரம் உள்ளது.

குடும்ப நல ஆய்வின் திடுக்கிடும் தகவல்கள்

அரசால் நடத்தப்பட்ட, இந்திய சமூகம் பற்றிய மிக விரிவான குடும்ப ஆய்வான, தேசிய குடும்ப உடல்நல ஆய்வின் (NFHS5) சமீபத்திய புள்ளிவிவரங்கள், திடுக்கிடும் தகவல்களை அளித்தன.

 
இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மனைவி தனது மாமியாரை அவமதித்தால், தன் வீட்டை அல்லது குழந்தைகளை புறக்கணித்தால், கணவனிடம் சொல்லாமல் வெளியே சென்றால், சரியாக சமைக்கவில்லை என்றால்,உடலுறவுக்கு மறுத்தால் கணவன்அவளை அடிப்பது தப்பில்லை என்று 40% க்கும் அதிகமான பெண்களும் 38% ஆண்களும் அரசு கணக்கெடுப்பாளர்களிடம் கூறியுள்ளனர். நான்கு மாநிலங்களில், 77%க்கும் அதிகமான பெண்கள் மனைவியை அடிப்பதை நியாயப்படுத்தியுள்ளனர்.

பெரும்பாலான மாநிலங்களில் ஆண்களை விட பெண்களே, மனைவியை அடிப்பதை நியாயப்படுத்துகிறார்கள். சரியாக சமைக்கவில்லை என்றால் ஒரு ஆண் தன் மனைவியை அடிப்பது தவறில்லை என்று ஆண்களை விட அதிகமான பெண்கள் நினைக்கிறார்கள். இதில் ஒரே விதிவிலக்கு கர்நாடகா மட்டுமே.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட முந்தைய கணக்கெடுப்பை விட இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. அப்போது 52% பெண்கள் மற்றும் 42% ஆண்கள் மனைவியை அடிப்பதை நியாயப்படுத்தினர். ஆனால் மனப்போக்கு மாறவில்லை என்று ஆக்ஸ்பாம் இந்தியாவின் பாலின நீதித் திட்டத்திற்கு தலைமை தாங்கும் அமிதா பித்ரே கூறுகிறார்.

"பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அதை நியாயப்படுத்தல், ஆணாதிக்கத்தில் வேரூன்றியுள்ளது. பாலின அடிப்படையிலான வன்முறை அதிக அளவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஏனெனில் இந்தியாவில் பெண்கள் கீழ்மட்ட பாலினமாக கருதப்படுகிறார்கள்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

"ஒரு பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி நிலையான சமூக கருத்துக்கள் உள்ளன. அவள் எப்போதும் ஆணுக்கு அடிபணிய வேண்டும், எப்போதும் முடிவெடுப்பதில் தாமதிக்க வேண்டும், அவனுக்கு சேவை செய்ய வேண்டும், அவள் அவனை விட குறைவாக சம்பாதிக்க வேண்டும் போன்றவை. இவற்றுக்கு நேர்மாறானவற்றை ஏற்றுக்கொள்பவர்கள் குறைவு. அதனால், ஒரு பெண் எதிர்த்து நின்றால் அவளை அடக்குவது சரிதான் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது."

"ஆணாதிக்கம் பாலின விதிமுறைகளை வலுப்படுத்துகிறது மற்றும் பெண்கள் அதே கருத்துக்களை உள்வாங்குகிறார்கள். அவர்களின் நம்பிக்கைகள், குடும்பம் மற்றும் சமூகத்தால் வடிவமைக்கப்படுகின்றன. அதிகமான பெண்கள் மனைவியை அடிப்பதை நியாயப்படுத்துவதற்கு இதுவே காரணம்," என்று அமிதா பித்ரே கூறுகிறார்.

 
இந்தியா

நாட்டின் ஏழ்மையான பகுதிகளில் ஒன்றான வட இந்தியாவின் புந்தேல்கண்டில், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக கால் நூற்றாண்டு காலமாக, பணிபுரியும் 'வணங்கானா' என்ற தொண்டு நிறுவனத்தை மாதவி குக்ரேஜா நிறுவியுள்ளார். "நீங்கள் உங்கள் புகுந்த வீட்டிற்கு ஒரு பல்லக்கில் செல்கிறீர்கள். உங்கள் இறுதி ஊர்வலம் மட்டுமே அங்கிருந்து வெளியேற வேண்டும்" என்று புது மணப்பெண்களுக்கு அளிக்கப்படும் ஒரு பிரபலமான அறிவுரை பற்றி அவர் கூறுகிறார்..

எனவே தொடர்ந்து அடி உதைகளை எதிர்கொள்ளும் பெண்கள் உட்பட பெரும்பாலானவர்கள், இந்த வன்முறையை தங்கள் தலைவிதியாக ஏற்றுக்கொள்கிறார்கள். புகாரளிப்பதில்லை.

"கடந்த தசாப்தத்தில் புகார்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளபோதிலும், இந்தியாவில் மனைவியை அடித்தல் மிகவும் குறைவாகவே பதிவாகிறது. இதுபோன்ற வழக்குகள் பற்றி புகாரளிப்பதும் பதிவு செய்வதும் கடினம். 'வீட்டில் நடப்பது வீட்டிலேயே இருக்க வேண்டும்' என்று பலர் கூறுவார்கள். அதனால், பெண்கள் காவல்துறையிடம் செல்வது ஊக்குவிக்கப்படுவதில்லை," என்று குக்ரேஜா கூறுகிறார்.

புகுந்த வீட்டை விட்டு வெளியேறினால்

மேலும், தங்கள் புகுந்த வீட்டை விட்டு வெளியேறினால் அவர்களுக்கு வேறு போக்கிடமும் இல்லை என்று அவர் கூறினார்.

அவமானம் கருதி பெற்றோர்கள் அவர்களை வரவேற்பதில்லை. பல சமயங்களில், பெற்றோர் ஏழைகளாக இருப்பதால் மேலும் ஒருவருக்கு உணவளிக்க முடியாத சூழலில் உள்ளனர். இது போன்ற பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் அமைப்புமுறை இல்லை. தங்குமிடங்கள் மிகவும் குறைவு. மேலும் கைவிடப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை மட்டுமே இருக்கிறது. தனக்கும், தன் குழந்தைகளுக்கும் உணவளிக்க க்கூட அது போதுமானது அல்ல."

வணங்கானாவின் தலைவரான புஷ்பா ஷர்மா, கடந்த மாதம் தன்னிடம் வந்த இரண்டு வழக்குகளைப் பற்றி என்னிடம் கூறினார். அதில் பெண்கள் தாக்கப்பட்டு ,சிறு குழந்தைகளுடன் கணவர்களால் கைவிடப்பட்டனர்.

"இரண்டு சம்பவங்களிலும் கணவர்கள் தங்கள் மனைவிகளை தலைமுடியைக் பிடித்து இழுத்து வெளியே தள்ளி, அக்கம்பக்கத்தினர் முன்னிலையில் அவர்களைத் தாக்கினர். அவர்கள் சரியாக சமைக்கவில்லை என்று கூறினர். அது எப்போதும் புகார்களின் ஒரு பகுதியாக உள்ளது. சாப்பாடு என்பது துவக்கப்புள்ளியாக இருக்கிறது."

எனக்கு பதில் சொல்லுங்கள்

"பெண்களைப் பெற்றெடுத்ததற்காக, 'ஆண் வாரிசு' தராததற்காக, கருமை நிறமாக இருப்பதற்காக, அழகாக இல்லாத காரணத்திற்காக, போதுமான வரதட்சணை கொண்டு வராததற்காக, கணவர் குடிபோதையில் இருந்தால், கணவர் வீட்டிற்கு திரும்பியவுடன் உணவு அல்லது தண்ணீரை விரைவாக வழங்கவில்லை என்பதற்காக, உணவில் அதிக உப்பைப் போட்டதற்காக அல்லது போட மறந்ததற்காக, ஒரு பெண் அடிக்கப்படுகிறாள்," என்று அவர் குறிப்பிட்டார்.

 
இந்தியாவின் ஏழ்மையான பகுதிகளில் ஒன்றில்,குடும்ப வன்முறையில் இருந்து தப்பிய பெண்களுக்கு 'வணங்கானா' புகலிடம் தருகிறது.

பட மூலாதாரம்,AFP

1997 இல், வணங்கானா வீட்டு வன்முறை பற்றி மக்களுக்கு உணர்த்துவதற்காக முஜே ஜவாப் தோ [எனக்கு பதில் சொல்லுங்கள்] என்ற தெரு நாடகத்தை தொடங்கியது.

"இந்தப்பருப்பில் உப்பு இல்லை... என்ற வரியுடன் நாடகம் தொடங்கியது" என்கிறார் திருமதி குக்ரேஜா.

"எங்கள் பிரச்சாரம் துவங்கி 25 ஆண்டுகளுக்குப் பிறகும் நிலமையில் சிறிதும் மாற்றம் இல்லை. அதற்குக் காரணம் திருமணத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம். திருமணத்தைக் காப்பாற்ற நாம் எல்லாவற்றையும் செய்கிறோம் . இது புனிதமானது, அது எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்."

"அந்த எண்ணம் மாற வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். அவர்கள் அடிப்பதை பொறுத்துக்கொள்ள தேவையில்லை," என்று அவர் உறுதிபடத்தெரிவித்தார்.

சிற்றுண்டியில் உப்பு அதிகம் என மனைவி கொலை: இந்திய மனைவிகளின் நிலை பற்றிய அதிர்ச்சி தரவுகள் - BBC News தமிழ்

 • Like 1
Link to comment
Share on other sites

 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்

கீழே இணைக்கப்பட்ட இணைப்பில் உள்ள கட்டுரை, அவுஸ்ரேலியா மெல்பேரின் வாழும் மனநல மருத்துவர் ஒருவர், மெல்பேர்னில் உள்ள இந்திய சமூகத்தில் நடைபெறும் சீதனக்கொடுமையையும் அதனோடு இணைந்த குடும்ப வன்முறைகளையும் கூறுகிறது.. அவரது புத்தகம் “ Daughters of Durga- Dowries, Gender Violence and Family in Australia “(நேற்றுத்தான் வெளியிடப்பட்டது) . இந்த புத்தகம் இன்னமும் ஆழமாக இருக்கும் என நம்புகிறேன். 

இந்த கட்டுரையை வாசிக்கும் பொழுது இங்கே நடக்கும் பல விடயங்களை உணரமுடியும். இங்கேயே இவர்கள் இந்தளவு கொடுமைகளை அனுபவிக்கும் பொழுது, இந்தியாவில் கேட்கவா வேண்டும்.. 

https://amp.theaustralian.com.au/weekend-australian-magazine/dowries-slavery-abuse-the-hidden-shame-of-south-asian-women-in-australia/news-story/a325a9162f52fee86186b7f43cfc1b75

 

On 7/5/2022 at 00:02, பிழம்பு said:

திருமணத்தைக் காப்பாற்ற நாம் எல்லாவற்றையும் செய்கிறோம்

திருமணத்தைக் காப்பாற்ற என்பதைவிட சமூகத்தில் என்ன மதிப்பு தரப்படும் என்ற பயமே இந்த மாதிரி விடயங்கள் வெளியில் வராமல் போக முக்கிய காரணம் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

கீழே இணைக்கப்பட்ட இணைப்பில் உள்ள கட்டுரை, அவுஸ்ரேலியா மெல்பேரின் வாழும் மனநல மருத்துவர் ஒருவர், மெல்பேர்னில் உள்ள இந்திய சமூகத்தில் நடைபெறும் சீதனக்கொடுமையையும் அதனோடு இணைந்த குடும்ப வன்முறைகளையும் கூறுகிறது.. அவரது புத்தகம் “ Daughters of Durga- Dowries, Gender Violence and Family in Australia “(நேற்றுத்தான் வெளியிடப்பட்டது) . இந்த புத்தகம் இன்னமும் ஆழமாக இருக்கும் என நம்புகிறேன். 

இந்த கட்டுரையை வாசிக்கும் பொழுது இங்கே நடக்கும் பல விடயங்களை உணரமுடியும். இங்கேயே இவர்கள் இந்தளவு கொடுமைகளை அனுபவிக்கும் பொழுது, இந்தியாவில் கேட்கவா வேண்டும்.. 

https://amp.theaustralian.com.au/weekend-australian-magazine/dowries-slavery-abuse-the-hidden-shame-of-south-asian-women-in-australia/news-story/a325a9162f52fee86186b7f43cfc1b75

 

திருமணத்தைக் காப்பாற்ற என்பதைவிட சமூகத்தில் என்ன மதிப்பு தரப்படும் என்ற பயமே இந்த மாதிரி விடயங்கள் வெளியில் வராமல் போக முக்கிய காரணம் 

இந்தியா மட்டுமல்ல, பாகிஸ்தானில் பெண்கள் நிலை மிகவும் பரிதாபகரமானது.

ஆடறுபது போல, கவுரவக் கொலை செய்வர். அதிலும் பெண்ணை பிடிக்காவிடில், பொய்யாகவே..... குற்றம் சுமத்திக் கொல்வர்.

ஈராக்கில், ஈரானில் கூட மோசம்...

பெண்கள் ஓரளவு நல்லநிலையில் இருந்த சிரியாவில், அது பொறாமல், ஜஎஸ் பூந்து செய்தது, அநியாயம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ஈராக்கில், ஈரானில் கூட மோசம்...

ஏன் இலங்கையில் மட்டும் என்னவாம்,,,,!அதுவும் யாழ்ப்பாணத்தில்....!! என் வீட்டுக்கு அருகில் இருந்த, காவற்துறையில் சார்யென்டு அதிகாரத்தில் இருந்த ஒருவர் தன் மனைவி வைத்த மீன் குழம்பு சரியில்லை என்று அதனை மனைவியின் தலைமீதே கொட்டிப் பிரட்டி கிணற்றடிக்கு இழுத்துச் சென்று முழுகவாத்ததைக் கண்டோம். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Paanch said:

ஏன் இலங்கையில் மட்டும் என்னவாம்,,,,!அதுவும் யாழ்ப்பாணத்தில்....!! என் வீட்டுக்கு அருகில் இருந்த, காவற்துறையில் சார்யென்டு அதிகாரத்தில் இருந்த ஒருவர் தன் மனைவி வைத்த மீன் குழம்பு சரியில்லை என்று அதனை மனைவியின் தலைமீதே கொட்டிப் பிரட்டி கிணற்றடிக்கு இழுத்துச் சென்று முழுகவாத்ததைக் கண்டோம். 

கொட்டினாலும், முழுக்காத்தி இருக்கிறாரே, பொறுப்பா... 😁

எனெக்கெண்டா... அவர் அரப்பு, சீயாக்காய் வைத்து, உங்களுக்கு.... எடுப்பு காட்ட... மீன்குழம்பை ஊத்தின மாதிரி கதை விட்டு, குரலை எழுப்பி.... முழுக்காத்தி இருக்கிறார்.... நீங்கள் தான் இண்டைக்கு வரை பிழையா விளங்கி இருக்கிறியள்... 😜

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

ஏன் இலங்கையில் மட்டும் என்னவாம்,,,,!அதுவும் யாழ்ப்பாணத்தில்....!! என் வீட்டுக்கு அருகில் இருந்த, காவற்துறையில் சார்யென்டு அதிகாரத்தில் இருந்த ஒருவர் தன் மனைவி வைத்த மீன் குழம்பு சரியில்லை என்று அதனை மனைவியின் தலைமீதே கொட்டிப் பிரட்டி கிணற்றடிக்கு இழுத்துச் சென்று முழுகவாத்ததைக் கண்டோம். 

 

28 minutes ago, Nathamuni said:

கொட்டினாலும், முழுக்காத்தி இருக்கிறாரே, பொறுப்பா... 😁

எனெக்கெண்டா... அவர் அரப்பு, சீயாக்காய் வைத்து, உங்களுக்கு.... எடுப்பு காட்ட... மீன்குழம்பை ஊத்தின மாதிரி கதை விட்டு, குரலை எழுப்பி.... முழுக்காத்தி இருக்கிறார்.... நீங்கள் தான் இண்டைக்கு வரை பிழையா விளங்கி இருக்கிறியள்... 😜

நாறல் பயல். இவன் எல்லாம் ஒரு பொலிஸ் சார்ஜண்ட். 🤔
மீன் குழம்பை… ஆரும் தலையில் ஊற்றுவார்களா?
குழம்பு கண்ணுக்குள் வந்து, எவ்வளவு எரிவை ஏற்படுத்தி இருக்கும். 😢

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, தமிழ் சிறி said:

நாறல் பயல். இவன் எல்லாம் ஒரு பொலிஸ் சார்ஜண்ட். 🤔
மீன் குழம்பை… ஆரும் தலையில் ஊற்றுவார்களா?
குழம்பு கண்ணுக்குள் வந்து, எவ்வளவு எரிவை ஏற்படுத்தி இருக்கும். 😢

உங்களுக்கும் அவரைத் தெரிந்திருக்கலாம் தமிழ் சிறி, லொறிகளைப் பிடித்து ஏதாவது ஒரு குற்றம் கண்டு, ஓசியில் கல்லு மணல் ஏற்றிவரச்செய்து புதுவீடு கட்டினவர். ஊர்ப் பெரியவர்கள் முதல் விதானையார் வரை அவருடைய வண்டவாளங்கள் தெரியும். ஆனாலும் காவல்துறை, அதுவும் சார்யென்டு தரம், அவரை விமர்ச்சிக்க எல்லோருக்கும் தயக்கம்.

1 hour ago, Nathamuni said:

கொட்டினாலும், முழுக்காத்தி இருக்கிறாரே, பொறுப்பா... 😁

எனெக்கெண்டா... அவர் அரப்பு, சீயாக்காய் வைத்து, உங்களுக்கு.... எடுப்பு காட்ட... மீன்குழம்பை ஊத்தின மாதிரி கதை விட்டு, குரலை எழுப்பி.... முழுக்காத்தி இருக்கிறார்.... நீங்கள் தான் இண்டைக்கு வரை பிழையா விளங்கி இருக்கிறியள்... 😜

அவர் மனைவியின் தலையில் மீன்முள்ளுக் கீறி எனது அம்மாவும் வருத்தம் பார்க்கப் போனது பாவம் உங்களுக்கு எப்படித் தெரியும்.??😲

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Paanch said:

அவர் மனைவியின் தலையில் மீன்முள்ளுக் கீறி எனது அம்மாவும் வருத்தம் பார்க்கப் போனது பாவம் உங்களுக்கு எப்படித் தெரியும்.??😲

அட, நான் பகிடிக்கெல்லே சொன்னனான்.

சேனாதிராசா, தமோதரம்பிள்ளை??

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இங்கேயே இவர்கள் இந்தளவு கொடுமைகளை அனுபவிக்கும் பொழுது, இந்தியாவில் கேட்கவா வேண்டும்.. 

உண்மை தான்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

அட, நான் பகிடிக்கெல்லே சொன்னனான்.

சேனாதிராசா, தமோதரம்பிள்ளை??

நீங்கள் தெரிவித்த பெயரில் ஒரே ஒரு எழுத்துத்தான் 'தி' பொருந்தியிருக்கிறது. திருநெல்வேலியைத் தெரிந்தவர்களிடம் கேட்டால் அந்த பொலீசு சார்யென்டு யார் எனத் தெரிந்துகொள்ளலாம்.

என்ன செய்வது, எங்கள் அர்யுன் அவர்கள்தான் இப்போது யாழுக்கு வருவதில்லையே.😩 photo-thumb-3687.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

இந்தியா மட்டுமல்ல, பாகிஸ்தானில் பெண்கள் நிலை மிகவும் பரிதாபகரமானது.

இந்தியாவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் சாதி கொடுமைகள் இருந்தாலும் ஓரளவு மனித தன்மையான மக்கள் வாழ்கின்றார்கள் என நினைக்கின்றேன். ஆனால் அப்படியே வடக்கு நோக்கி செல்ல செல்ல மனிதாபிமானம்/படிப்பறிவு இல்லாத மண்ணாகவே வரும்.பாக்கிஸ்தான் ஈறாக அரபு நாடுகள் வரைக்கும் பரவி வரும்.

அப்படி பார்க்கையில் இலங்கை பரவாயில்லை. ஓரிரு சம்பவங்களை வைத்து இலங்கையையோ யாழ்ப்பாணத்தையோ தவறாக எடை போட முடியாது.:cool:
 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Nathamuni said:

இந்தியா மட்டுமல்ல, பாகிஸ்தானில் பெண்கள் நிலை மிகவும் பரிதாபகரமானது.

ஆடறுபது போல, கவுரவக் கொலை செய்வர். அதிலும் பெண்ணை பிடிக்காவிடில், பொய்யாகவே..... குற்றம் சுமத்திக் கொல்வர்.

ஈராக்கில், ஈரானில் கூட மோசம்...

பெண்கள் ஓரளவு நல்லநிலையில் இருந்த சிரியாவில், அது பொறாமல், ஜஎஸ் பூந்து செய்தது, அநியாயம்.

உண்மை.. அதிலும் இவை எல்லாம் குடும்ப வாழ்க்கையில் சாதாரணம் மனநிலையை உருவாக்குவதுதான் பெண்கள் கூட இவற்றை நியாயப்படுத்த காரணமாகிறது

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பரந்தன் பூநகரி வீதி B357, மாங்குளம் வெள்ளாங்குளம் வீதி B269 இரண்டும் மிக மோசமாக சேதமடைந்துள்ளது.
  • "அதிமுக நெருக்கடிக்கு யார் காரணம்? சதி வலை பின்னியது யார்?" - மதுரையில் ஓபிஎஸ் பேட்டி 27 நிமிடங்களுக்கு முன்னர்   அ.தி.மு.கவில் உள்கட்சி பூசல் அதிகரித்துள்ள நிலையில், ' தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை, யாரால் எப்படி ஏற்பட்டது, எவரால் இந்தச் சதி வலை பின்னப்பட்டது என்பதை உணர்ந்து மக்களே உரிய தீர்ப்பினை வழங்குவார்கள்' என்கிறார், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில், 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் அறிவித்தனர். ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி பதவியேற்கும் வகையில் வரும் ஜூலை 11 ஆம் தேதி புதிய பொதுக்குழு நடைபெற உள்ளதாகவும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, ஒற்றைத் தலைமையை நோக்கி முன்னேறிய அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாகப் பார்க்கப்பட்ட மைத்ரேயன், மா.ஃபா.பாண்டியராஜன், வேளச்சேரி அசோக் உள்ளிட்டவர்களையும் தன்பக்கம் வர வைத்தார். மேலும், தென்மாவட்டங்களில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோரின் ஆதரவாளர்களையும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வளைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஓ.பி.எஸ், தனது ஆதரவாளரான பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ' அ.தி.மு.க பொதுக்குழுவை நடத்தத் தடையில்லை. அதேநேரம், தீர்மானம் தொடர்பாக உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது' என்றார். இதையடுத்து, இரவோடு இரவாக தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரியிடம் முறையிட்ட ஓ.பி.எஸ் தரப்பினர், இதனை அவசர வழக்காக விசாரிக்குமாறு கூறினர். இதன் தொடர்ச்சியாக நடந்த மேல்முறையீட்டு விசாரணையில், 'புதிதாக எந்தத் தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது' என நீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லியில் ஓபிஎஸ் முகாம் - ஓரம்கட்டுகிறாரா பிரதமர் நரேந்திர மோதி? அதிமுக பொதுக்குழுவில் நடந்தவை என்ன? - 10 முக்கியத் தகவல்கள் இதனால் ஆவேசமடைந்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர், பொதுக்குழு கூட்டத்தில் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். தனக்கு மாலை போட வந்தவர்கள் மீதும் எடப்பாடி கோபத்தைக் காட்டினார். ஒருகட்டத்தில், 'ஜனநாயகத்துக்கு விரோதமாக நடந்த பொதுக்குழுவை புறக்கணிக்கிறோம்' எனக் கூறிவிட்டு ஓ.பி.எஸ் தரப்பினர் வெளியேறினர். அப்போது ஓ.பி.எஸ் மீது பாட்டில் வீச்சு சம்பவமும் நடந்தது. இதையடுத்து, பொதுக்குழு நடந்த அன்றே டெல்லி விரைந்த பன்னீர்செல்வம், 25 ஆம் தேதி இரவு சென்னை திரும்பினார். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரௌபதி முர்மு, வேட்பு மனு தாக்கல் செய்யவிருந்ததால், அதற்காக ஓ.பி.எஸ் சென்றதாகக் கூறப்பட்டது.   தீவிரம் அடைந்த மோதல் அதேநேரம், வரும் ஜூலை 11ஆம் தேதி அ.தி.மு.க சார்பில் நடக்கவுள்ள பொதுக்குழுவை தடுப்பதற்கான சட்டரீதியான பணிகளில் ஓ.பி.எஸ் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், தனது ஆதரவாளர்கள் வளையத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் இருந்து மதுரை வந்த ஓ.பன்னீர்செல்வத்தை தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் ஏராளமான தொண்டர்களும் வரவேற்றனர். அப்போது பேசிய ஓ.பி.எஸ், 'எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர். தொண்டர்களுடன் நான் என்றும் இருப்பேன். இந்த இயக்கத்தை எம்.ஜி.ஆரும் அம்மாவும் மனிதாபிமான இயக்கமாக வளர்த்தெடுத்து மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றனர். இதன்மூலம் 30 ஆண்டுகாலம் தமிழ்நாட்டின் முதல்வராக நல்லாட்சியை நடத்தியுள்ளனர். தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை, யாரால் எப்படி ஏற்பட்டது? எவரால் இந்தச் சதி வலை பின்னப்பட்டது என்பதை உணர்ந்து மக்களே உரிய தீர்ப்பினை வழங்குவார்கள். அவர்களுக்கு எம்ஜி.ஆர் மற்றும் அம்மாவின் தொண்டர்கள் உரிய பாடத்தை வழங்குவார்கள்' என்றார். மேலும், 'எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா ஆகியோரின் இதயத்தில் இருந்து என்னை யாரும நீக்க முடியாது. பன்னீர்செல்வலம் போன்ற துய தொண்டனைப் பெற்றது என் பாக்கியம் என அம்மா கூறினார். இதைவிட வேறு என்ன வேண்டும்?' என்றார். இதையடுத்து, பேட்டியை முடித்துக் கொண்டு ஓ.பி.எஸ் கிளம்பியபோது, ' உங்களின் அரசியல் எதிர்காலம் என்ன?' என செய்தியாளர் ஒருவர் கேட்டார். இதற்குப் பதில் அளித்த ஓ.பி.எஸ், 'என்னுடைய எதிர்காலத்தை அம்மாவின் தொண்டர்களும் மக்களும் நிர்ணயிப்பார்கள்' என்றார். https://www.bbc.com/tamil/india-61942518
  • நேற்று நம்ம பக்கத்திலயும் பல கிலோ மீற்றருக்கு மக்கள் வரிசையில் பெற்றோலுக்கு காத்திருந்தவை, பாதிப்பேருக்கு மேல பெற்றோல் வாங்காமல் திரும்பினவை.
  • தீதும் நன்றும் பிறர் தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோரன்ன; சாதலும் புதுவது அன்றே வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே!
  • நாங்கள் kings தான் பாவிப்பது.......உங்களின் சிபாரிசில் அடுத்தமுறை கடைக்கு செல்லும்போது எடுத்துப் பாவித்துப் பார்க்கிறேன்......!   😁
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.