Jump to content

பரி. யோவான் பொழுதுகள்: 2022 Big Match


Recommended Posts

பரி. யோவான் பொழுதுகள்:
2022 Big Match

பரி. யோவானில் படித்துக் கலக்கினவங்களை விட, Big Match இல் வெளுத்து கலக்கினவங்களை தான் Johnians சமூகம் தலையில் வைத்துக் கொண்டாடும். அந்தளவிற்கு இந்த “Big Match is a Big deal at St. John’s” என்று இங்கிலீஷில் சொன்னால் தான் Big Match இன் சிறப்பை, பெருமையை உங்களுக்கு விளங்க வைக்கலாம்.

2020 மார்ச் மாதத்தில் யாருமே எதிர்பாராத வகையில், பொடிப் பயலுகளான, Baby Brigade என்று வர்ணிக்கப்பட்ட, பரி யோவானின் அணி, பலம் வாய்ந்த பிஸ்தாக்களான யாழ் மத்திய கல்லூரி அணியை Big Match இல் வென்ற கையோடு, கொரனா பெருந்தொற்று முழு உலகையே பூட்டிப் போட்டது. 2020 Big Match உண்மையிலேயே கோலியாத்தை வென்ற தாவீது கதையின் மீளுருவாக்கம் தான்.

2021 Big Match ஐயும் கொரனா கொன்றுவிட, 2022 இல் Big Match நடக்குமா இல்லையா என்ற நிலையை கோத்தாவின் ஆட்சிக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி ஏற்படுத்தியது.  மார்ச்சில் நடக்க வேண்டிய ஆட்டம், ஏப்ரல் முதல் வாரத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டு, அதுவும் பின்னர் பிற்போடப்பட்டு ஏப்ரல் 21 முதல் 23 வரை நடைபெற்று முடிந்திருக்கிறது.

2022 இல் அன்டன் அபிஷேக் தலைமையில் களமிறங்கிய பரி. யோவானின் இளைய அணியில் ஆடிய பெரும்பாலான பெடியள், 2016/17 பருவகாலத்தில் இலங்கைப் பாடசாலைகள் U13 Div II இல் சம்பியனான அணியில் ஆடியவர்கள். தேசிய அளவில் வாகை சூடிய பரி். யோவான் U13 அணியை அன்று பயிற்றுவித்ததும், இன்றைய U19 கோச்சரான லவேந்திரா தான்.

“அண்ணே, அவங்கள் என்ட குஞ்சுகள் அண்ணே.. என்ன செய்வாங்கள்.. என்ன செய்ய மாட்டாங்கள் என்று எனக்கு நல்லா தெரியுமண்ணே” என்று லவேந்திரா சொல்லும் போது அவருக்கும் அணிக்கும் இடையிலான பந்தத்தின் வலு நன்றாகவே புரிந்தது. ஆட்டத்தின் மூன்றாம் நாள் காலை வேளையில் எப்பொழுது declare பண்ண வேண்டும் என்ற சரியான முடிவை எடுக்கும் நம்பிக்கையை லவேந்திராவிற்கு கொடுத்ததும் இந்த பந்தம் தான்.

பெருந்தொற்றால் தடைபட்ட 2021/22 பருவகாலத்தில், பரி. யோவான் அணியால் மூன்றே மூன்று இரு நாள் போட்டிகளில் மட்டுமே ஆட முடிந்தது. மிகுதி ஆட்டங்கள் எல்லாம் ஒரு நாள் ஆட்டங்களாகவே அமைந்தன. இந்தப் பருவகால ஆட்டங்களில் batting collapse என்பது பரி. யோவான் பாசறையில் சர்வசாதாரணமான ஒன்றாகவே அரங்கேறியதையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.

இந்தப் பருவகாலத்தில் பரி. யோவான் அணியின் batting பலமான ஓன்றாக அமைந்திருக்கவில்லை. களுத்துறை வித்தியாலத்திற்கு எதிரான ஆட்டத்தில் 89 ஓட்டங்களிற்கு சுருண்ட பரி. யோவான் அணி, பாணதுறை ஶ்ரீ சுமங்கல கல்லூரிக்கு எதிரான ஆட்டத்தில் 65 ஓட்டங்களிற்கு all out ஆகியிருந்தது. Big Match இன் இரண்டாவது இன்னிங்ஸில் 116 பந்துகளில் 105 ஓட்டங்களை விளாசிய சபேசனும், Big Match இற்கு முந்தைய ஆட்டங்கள் எதிலும் சோபித்திருக்கவில்லை. 

எதிராளிகளின் முதல் ஐந்து, ஆறு விக்கெட்டுக்களை வீழ்த்துவதில் விண்ணர்களாக இருந்த பரி. யோவானின் பந்து வீச்சாளர்களிற்கு, எதிரணியை all out ஆக்குவது பல சந்தர்ப்பங்களில் சவால் மிகுந்ததாகவே இருந்திருக்கிறது. 

Mt. Lavania St. Thomas கல்லூரி அணியை 59/5  என்ற நிலைக்கு கொண்டு வந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பரி. யோவான் அணி, Thomians இன் ஆறாவது விக்கெட்டை கழற்றும் போது 225/6 என்று scoreboard பல்லிளித்த கதையை வேறு இந்தப் பருவகாலம் பதிவுசெய்தது. 

மறுவளத்தால், யாழ்ப்பாணத்தின் கிரிக்கெட் பிஸ்தாக்களான யாழ் மத்திய கல்லூரி அணியோ, ஆடிய எல்லா ஆட்டங்களிலும் 300+ ஓட்டங்களை குவித்து, எதிரணி பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து விட்டு தான், போன வியாழக்கிழமை ஆரம்பமான Big Match இல் களமிறங்கியது.

 “அவங்கட No 11 உம் நல்லா bat பண்ணும்.. முன்னுக்கு வாறதில நாலஞ்சு பேர் நல்ல விளாசல்காரன்கள்” என்று பரி. யோவான் அணியின் பொறுப்பாசிரியர் கோபிகிருஷ்ணா மத்திய கல்லூரியின் துடுப்பாட்ட வரிசையை விபரித்தார். 

மிகப் பலமான துடுப்பாட்ட வரிசையை தன்னகத்தே கொண்டிருந்ததால், இரண்டாவதாக bat பண்ணி நல்ல lead வைத்து, பரி யோவானை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோற்கடிக்கலாம், இல்லாட்டியும் நாலாவது இன்னிங்ஸில் துரத்தி வெளுக்கலாம் என்ற நம்பிக்கையில், 2022  Big Match இன் நாணயச் சுழற்சியில் வென்ற யாழ் மத்திய கல்லூரி அணி, பரி யோவான் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.  

பரி. யோவானின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சச்சினும் (20) கரிஷனும் (41) முதலாவது விக்கெட்டுக்கு திறமான இணைப்பாட்டத்தை தந்து, 59 ஓட்டங்களை சேர்த்தார்கள். முதலாவது இன்னிங்சில் எப்படியும் பரி யோவானின் ஓட்ட எண்ணிக்கை 200, 250 தாண்டும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் தான் மளமளவென்று விக்கெட்டுகள் சரிந்து 99/6 என்ற நிலைக்கு கொண்டு வந்து, மத்திய கல்லூரி் அணியின் மிதவேகப் பந்து வீச்சாளர்கள் பரி. யோவான் அணியின் துடுப்பாட்ட வரிசையை ஆட்டம் காண வைத்தார்கள். 

பேந்தென்ன.. முக்கித் தக்கி, நொட்டித் தட்டி, பரி யோவானின் அணித்தலைவர் அன்டன் அபிஷேக் (40) தனது இறுதிவரிசை துடுப்பாட்ட வீரர்களோடு இணைந்தாடி,  அணியின் முதலாவது இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை 167 ஓட்டங்கள் என்ற கணக்கில் கொண்டு வந்துவிட்டார்கள்.

யாழ் மத்திய கல்லூரி அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களும் 25 ஓட்டங்களை நிதானமாக ஆடி எடுத்துத் தங்களது அணிக்கு பலமான அடிதளத்தை இட்டுக் கொண்டு இருக்கும் போது தான் யோகதாஸின் பெடியனின் அட்டகாசம் தொடங்கியது.

யோகதாஸ் எங்கட SJC92 batch நண்பர், 1979 இல் பாலர் வகுப்பில் பரி. யோவானில் இணைந்து, 1992 இல் A/L சோதனை எடுத்து முடிக்கும் வரை, பரி. யோவான் கல்லூரியில் மட்டுமே முழுமையாக கல்விகற்ற கலப்படமில்லாத 22 கரட் ஜொனியன். 

எங்கட SJC92 batch இல் யோகதாஸும் யசீந்திராவும் தான் திறமான fast bowlers. U17 ஓட யசீந்திரா கல்லூரிக்கு கிரிக்கட் விளையாடமல் விட்டு விட, அதுவரை கல்லூரி அணியில் ஆடியிராத யோகதாஸ் அணிக்குள் நுழைந்து, 1992 Big Match இல் 5/76 எடுத்து Big Match வரலாற்றில் இடம்பிடித்தவர்.

1992 Big Match இல் தனது வலதுகை வேகப்பந்து வீச்சின் மூலம் ஐந்து விக்கெட்டுக்களைச் சாய்த்த யோகதாஸின் இரண்டாவது புத்திரன் தான் விதுஷன். விதுஷன் முதலில் சில ஓவர்கள் இடதுகை மிதவேகத்தில் பந்து வீசிப் பார்த்தார், ஆனால் தகப்பனைப் போல fast bowl போட்டு அவரால் விக்கெட் எடுக்க முடியாமல் போக, தனக்குப் பரிச்சயமான spin இற்குத் தாவினார். 

நின்று, நிதானித்து, இரண்டடி எடுத்து வைத்து, இடக் கையைச் சுழற்றி விதுஷன் வீசிய மாயச் சுழற்பந்து வீச்சில், மத்திய கல்லூரியின் அதிரடி துடுப்பாட்டக்காரன்கள், ஆட்டமிழந்து வெளியேறத் தொடங்கினார்கள். மத்திய கல்லூரி அணியின் முதல் ஐந்து விக்கெட்டுக்களையும் கைப்பற்றி, விதுஷனும் Big Match இன் சாதனை ஏட்டில் இடம்பிடித்துக் கொண்டிருக்க, மத்திய கல்லூரி அணியோ 72/5 இல் அல்லாடியது.

1904 ஆண்டு முதல் 115 ஆவது தடவையாக ஆடப்பட்டுக் கொண்டுவரும், Battle of the North  (வடக்கின் பெரும்போர்) என்று வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரிக்கும் பரி. யோவான் கல்லூரிக்கும் இடையிலான இந்த Big Match போட்டிகளில், ஐந்து விக்கெட்டுக்களை எடுத்து Big Match records இல் இடம்பிடித்த தந்தை-மகன் இணை, யோகதாஸும்-விதுஷனுமாகத் தான் இருக்க வேண்டும்.

ஒருபக்கத்தால் விதுஷன் விக்கெட்டுக்களைச் சாய்க்க, மறுபக்கத்தில் இன்னுமொரு சுழற் பந்துவீச்சாளரான அஷ்நாத் மத்திய கல்லூரியின் விக்கெட்டுக்களைக் கைப்பற்றத் தொடங்கினார். பரி. யோவான் அணியின் சிறந்த ஆரம்ப பந்து வீச்சாளரும் அணியின் தலைவருமான அபிஷேக் 2 ஓவர்கள் வீசிவிட்டு ஒதுங்கிக்கொள்ள, இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களான விதுஷனும் (6/48) அஷ்நாத்தும் (4/46) மத்திய கல்லூரி அணியை 125 ஓட்டங்களிற்கு முதலாவது இன்னிங்ஸில் all out ஆக்கினார்கள். 

இரண்டாவது இன்னிங்ஸை ஆட வந்த பரி. யோவானின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களை, மத்திய கல்லூரியின் பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சில் உடனடியாகவே (1/2 in 2.4 overs) ஆட்டமிழக்க வைத்தார்கள்

2018 Big Match இல் 8/4 என்று இருந்த நிலைமையும் மீண்டும் கண்ணுக்கு முன்னால் வந்து போக, காலஞ்சென்ற நேசகுமாமார் அண்ணாவின் மகனான எபினேசரும் (35) சுகேதனும் (34) மூன்றாவது விக்கெட்டுக்கு 60 ஓட்டங்களை நிதானமாச் சேர்த்து, பரி. யோவானின் இரண்டாவது இன்னிங்ஸை ஸ்தரப்படுத்தினார்கள். 

61/3 இல் சுகேதன் ஆட்டமிழந்து வெளியேற, பரி. யோவான் கல்லூரி அணியின் உப தலைவர் சபேசன், எபினேசருடன் இணைந்து கொண்டார். வழமையாக ஸ்டைலிஷாக அடித்தாடும் எபினேசர், தட்டிக் கொண்டு நிற்க, மற்றப் பக்கத்தால், முதலாவது இன்னிங்ஸில் முதலாவது பந்திலேயே ஆட்டமிழந்த சபேசன், இரண்டாவது இன்னிங்ஸில் வெளுக்கத் தொடங்கினார்.

ஆட்டத்தின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை பின்னேரம் பண்ணைக் கடலில் சூரியன் மறையும்போது பரி. யோவான் 129/4 என்ற பலமான நிலையில் இருந்தது. சபேசன் ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களோடு  புட்டு சாப்பிட வீட்ட போனார். 

அன்றிரவு முழுவதும், பரி. யோவானின் சமூக வலைத்தளங்களில் பரி. யோவான் அணி எப்ப declare பண்ண வேண்டும், sportive declaration எப்படி இருக்க வேண்டும், bowlers ஐ நம்பி declare பண்ண வேண்டும் என்று காரசாரமாக கருத்துக்கள் பகிரப்பட்டுக் கொண்டிருக்க, இவை எவற்றையும் பார்ப்பதைத் தவிர்த்த கோச்சர் லவேந்திராவிற்கு, பரி. யோவானின் புகழ் பூத்த கிரிக்கெட் வீரர் ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது.

“எல்லாம் நல்லா தான் போகுது.. நீ யார்ற கதையும் கேளாத.. உன்ர ப்ளானிலேயே போ” வெளிநாட்டில் இருந்து வந்த அந்த அழைப்பு கோச்சருக்கு உற்சாகமூட்டியது. “240,250 lead வச்சியென்றா காணும் என்று தான் நெக்கிறன்.. lunch இற்கு முதல் ஒரு அரை மணித்தியாலம் குடு..” என்ற ஆரோக்கியமான ஆலோசனையுடன் ஆசிகூறி அந்த புகழ்பூத்தப் பழைய மாணவர் அழைப்பைத் துண்டித்தார். 

சனிக்கிழமையான மூன்றாம் நாள் காலையில் யாழ்ப்பாணத்து வானத்தை கருமேகங்கள் சூழத் தொடங்க, மத்திய கல்லூரி மைதானத்தில் சபேசன் தனது அதிரடி துடுப்பாட்டத்தால் ரன்ஸ் மழை பொழியத் தொடங்கினார் . சபேசன் தனது 89 ஓட்டங்களில் இருந்து Six அடித்து nervous nineties இற்குள் பாய்ந்தவர், பின்னர் 98 ஓட்டங்களில் நின்று கொண்டு அதிரடியாக இன்னுமொரு sixer அடித்து அழகிய Big Match century ஒன்றை முத்தமிட்டார். 

பரி. யோவானின் lead ஒரு பக்கத்தால் ஏறிக் கொண்டிருக்க, மறுபக்கத்தில் ஆட்டத்தில் மீதமிருந்த நேரம் சுருங்கிக் கொண்டிருந்தது. மறுபடியும் பரி. யோவானின் சமூக வலைத்தளங்கள் பதறிக் கொண்டிருக்க, இவை எவற்றையும் அறியாது, மைதானத்தின் எல்லைக் கோட்டிற்கு வெளியே பிளாஸ்டிக் கதிரையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கோச்சர் லவேந்திரா ஆட்டத்தின் போக்கை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தாராம். 

பரி. யோவான் கல்லூரி அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் 220/7 ஐ எட்டிய வேளையில், declare பண்ணும் முடிவை பரி. யோவான் அணி எடுத்தது. 115 ஆவது வடக்கின் பெரும் போரை வெல்ல யாழ் மத்திய கல்லூரிக்கு  65 ஓவர்களில் 263 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தப் பருவகாலத்தில் ஆடிய ஆட்டங்களில் பலமுறை 300+ ஓட்டங்களை குவித்திருந்த, அதிரடியான துடுப்பாட்ட வரிசையை வைத்திருந்த, யாழ்ப்பாண மத்திய கல்லூரியை பொறுத்தவரை இதுவொரு sportive declaration தான். 

யாழ் மத்திய கல்லூரி அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்க, முதலாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுக்களைச் சரித்த யோகதாஸ் விதுஷன் ஆரம்பப் பந்துவீச்சாளராகக் களமிறக்கப்பட்டார். 

பரி. யோவானின் பந்து வீச்சாளர்களான கஜகர்ணன் (2/5), விதுஷன் (2/57) மற்றும் அஷ்நாத் (6/70) ஆகியோர் முதல் 13 ஓவர்களிலேயே மத்திய கல்லூரியின் நான்கு விக்கெட்டுக்களை 18 ஓட்டங்களுக்குள் சரித்தார்கள். 
 
18/4 என்ற நிலையில் எந்த அணி இருந்தாலும் பிட்சில் பாயைப் போட்டு படுத்து விடுவார்கள். ஆனால் மத்திய கல்லூரி அணியோ அடித்து ஆடத் தொடங்கியது. அடுத்து வந்த 20 ஓவர்களில் சரமாரியாக பவுண்டரிகளும் சிக்ஸர்களும் அடித்து 90 ஓட்டங்களைக் குவித்தது கஜன் (53) - சாரங்கன் (33) இணைப்பாட்டம். 

109/5 இல் கஜனின் விக்கெட் விழுந்து விட, மத்திய கல்லூரி அணியின் middle order மீண்டுமொரு mini collapse ஐச் சந்தித்து. 8 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுக்களை இழந்து 118/8 என்ற நிலையில் இந்தா சென்ரல் தோற்கப் போகுது என்று உலகமே பார்த்துக் கொண்டிருக்க, சாகும் வரை போராடும் வல்லமை படைத்த மத்திய கல்லூரி அணி மீண்டும் போராட ஆரம்பித்தது.

அடுத்து வந்த இருபது சொச்ச ஓவர்களும் வெற்றியை எதிர்பார்த்திருந்த பரி. யோவான் சமூகத்தின் பொறுமை சோதிக்கப்பட, “I told you we should have declared earlier” என்ற கருத்துக்களும் ஆங்காங்கே பதிவாகிக் கொண்டுருந்தது. 

பண்ணைக் கடற்கரையில் மறையப் போகும் சூரியனை, மைதானத்தை சூழ்ந்திருந்த மழைமேகங்கள் மறைத்திருக்க, மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் வருணபகவானிற்கு ஆராத்தி எடுத்து அபிஷேகம் செய்யத் தொடங்கினார்கள். 

Big Match இன் இறுதி நாளின் இறுதி மணித்தியாலத்தின் இறுதிக் கணங்களிற்குள் நுழைந்த Big Match இன் நினைவுகள் காலத்திற்கும் நிலைத்து நிற்கும். Big Match வரலாற்றில் இன் இறுதி நாளின் இறுதி மணித்தியாலத்திற்கு பல தனிவரலாறுகள் இருக்கின்றன. 

பரி. யோவானைப் பொறுத்தவரை அந்த இறுதிக் கணங்களின் நாயகர்களாக விக்னபாலன்-விஜயராகவன் (1982), நிஷ்யந்தன் (1984), கேர்ஷன்-சுஜித் (1992), ஶ்ரீதரன்-சஞ்சீவ் (1993), பந்து வீச்சில் கபில்ராஜ்- ஜதுஷன் (2018) என்ற நீண்ட பட்டியலே இருக்கிறது. யாழ் மத்திய கல்லூரிக்கும் அதே போன்ற நாயகர்கள் கனபேர் இருப்பார்கள்.

115 ஆவது Big Match இன் இறுதி மணித்தியாலத்துக்குள் ஆட்டம் நுழைந்து விட்டது. களைத்துப் போன பரி. யோவானின் பந்து வீச்சாளர்கள் அறம்புறமாக மாற்றப்படுகிறார்கள். கடைசிவரை துடுப்பாடும் வல்லமை படைத்த மத்திய கல்லூரியின் வீரர்கள் ஆட்டத்தை draw ஆக்கும் கெத்துடன், மறித்தும் அடித்தும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒன்பதாவது விக்கெட்டுக்கு 18 ஓவர்கள் நின்றுபிடித்து 36 ஓட்டங்களை எடுத்திருந்த சன்சஜன்-சயந்தன் இணைப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் பரி. யோவான் அணி தீவிரமாக ஈடுபடுகிறது. 
அதுவரை சுப்ரமணிய பூங்கா முனையில் பந்து வீசிக் கொண்டிருந்த யோகதாஸ் விதுஷன், மணிக்கூட்டுக் கோபுர முனையில் இருந்து பந்துவீச அழைக்கப்படுகிறார்.

விதுஷன் வீசிய பந்தை சயந்தன் ஓங்கி அடிக்க, பரி. யோவானின் அணித்தலைவர் அன்டன் அபிஷேக் பிடியெடுக்க, மத்திய கல்லூரி அணியின் ஒன்பதாவது விக்கெட் இழக்கப்படும் போது, யாழ்ப்பாண மணிக்கூட்டுக் கோபுரத்தின் மணிக்கூடு பிற்பகல் 4.20 ஐத் தாண்டியிருந்தது. 

மணிக்கூட்டுக் கோபுரத்தின் நிமிட முள்ளு ஏனோ வேகமாகமாக ஓடுவதாக ஜொனியன்ஸ் நினைத்துக் கொண்டிருக்க, மத்திய கல்லூரியின் கடைசித் துடுப்பாட்ட வீரர்களோ நேரம் கடத்தும் விளையாட்டையும் அரங்கேற்றத் தொடங்கினார்கள்.

நேரங்கடத்தும் வித்தையில் வித்தகர்களான பரி. யோவான் அணியோ, கிடுகிடுவென ஓவர்களின் இடையில் field மாறி, மளமளவென பந்துவீச பந்துவீச்சாளர்கள் துடித்துக் கொண்டிருந்தார்கள்.

விக்கெட் விழாமல் போன ஒவ்வொரு பந்தும் Johnians இற்கு விசரைக் கிளப்ப, நேரமோ 5 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. ஐந்து மணியை நெருங்கத் துடிக்கும் மணிக்கூட்டு கோபுரத்தின் நிமிட முள்ளோடு மழை தரும் மேகங்களின் சேர்க்கை போட்டி போட, மைதானத்திலும் உலகெங்கிலும் இருந்து ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஜொனியன்ஸின் இதயத்துடிப்பு பன்மடங்கு ஏறத் தொடங்கியது. 

மணி நாலரை தாண்டியிருக்கும்.. இன்னும் ஆறோ ஏழு ஓவர்கள் நின்று பிடித்து விட்டார்கள் என்றால் மத்திய கல்லூரி அணி ஆட்டத்தை draw ஆக்கிவிடும். 

மணிக்கூட்டுக் கோபுர முனையில் இருந்து ஆட்டத்தின் சிறந்த பந்துவீச்சாளராகத் தெரிவான அஷாந் வீசிய பந்து, மத்திய கல்லூரி அணியின் சன்சஜனின் கால் காப்பில் பட… “how is that?” என்று மைதானத்தில் பரி. யோவான் வீரர்கள் கத்திய கத்தில், டொரோன்டோவில் நித்திரை முழித்து இரவிரவாக ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த விக்னபாலன் அண்ணாவும் எழும்பிக் கத்த, அம்பயர் தனது தங்க விரலைத் தூக்கி அவுட் கொடுக்க…. பரி. யோவானின் Red & Black கொடிகளோடு பழைய மாணவர்கள் மைதானத்துக்குள் ஓடிவந்து, Big Match வென்ற கல்லூரியின் வீரர்களை தங்களது தோள்களில் சுமந்து கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறும் காட்சிகள் ஜொனியன்ஸின் கண்களை ஆனந்தத்தில் கலங்க வைத்தன.  

பொதுவாக கிரிக்கெட் ஆட்டத்தில் Bastmen களின் பங்களிப்பு தான் பெரிதாக பேசப்படும். அதுவும் century அடித்த batsmen இன் புகழ் நீடித்து நிலைத்து நிற்கும். 2022 Big Match இல் வீழ்தப்பட்ட 20 விக்கெட்டுக்களில் 18 ஐ வீழ்த்திய இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களான அஷாந் (10/116) மற்றும் விதுஷன் (8/105) இருவரின் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் பதிவு செய்வதும் காலத்தின் கட்டாயம். பரி. யோவான் அணி வீழ்த்திய மத்திய கல்லூரியின் அனைத்து இருபது விக்கெட்டுக்களையும் வீழ்த்தியது இடதுகை பந்துவீச்சாளர்கள் என்பதும் ஒரு சிறப்பம்சம்மாகும். 

இந்தாண்டு Big Match வென்ற அணியில் ஆடிய ஒன்பது வீரர்கள் அடுத்த ஆண்டும் பரி. யோவான் அணியில் விளையாட வாய்ப்புண்டு. பரி. யோவானின் இருநூறாவது அகவைக் கொண்டாட்டக்கள் அரங்கேறப் போகும் 2023 ஆம் ஆண்டில், ஆடப்படப் போகும் 116 ஆவது Big Match ஐச் சூழ எழப் போகும் பாரிய எதிர்பார்ப்புக்களை இந்த இளம் வீரர்கள் அணி தனது தோள்களில் சுமக்கப் போகிறது.

ஜூட் பிரகாஷ்
மெல்பேர்ண்

 

Edited by நிழலி
சில பகுதிகள் இரு தடவை பதியப்பட்டது
 • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தனுவுடன் ஒரு உரையாடல். (யாவும் கற்பனை அல்ல)   கேள்வி- உன்னை ஒரு பயங்கரவாதி என்று இந்திய அரசு கூறுகிறதே? தனு- ஏன் அப்படி சொல்கிறார்கள்?   கேள்வி – குண்டு வெடிக்க வைத்தமையினால்? தனு- அப்படியென்றால் பகத்சிங் என்ன பூவையா வீசினார்? பாராளுமன்றத்திற்கு குண்டு விசிய பகத்சிங்கை ஆங்கிலேய அரசு பயங்கரவாதி என்று தூக்கில் இட்டுக் கொன்றது. ஆனால் இதே இந்திய அரசு அவரை சுதந்திர போராட்ட தியாகி என்று பாராட்டுவதை கவனியுங்கள்.   கேள்வி- அப்படியென்றால் …? தனு- இந்திய அரசு என்னை பயங்கரவாதி என்று முத்திரை குத்தினாலும் எனது தமிழ் மக்கள் நான் ஒரு விடுதலைப் போராளி என்பதை நன்கு அறிவார்கள்.   கேள்வி - இருப்பினும் ராஜீவ் காந்தியை கொல்வது தவறு இல்லையா? தனு- இந்தியாவில் வேறு யாராவது தலைவர்களை நாம் கொன்றிருக்கிறோமா? இல்லையே. ராஜீவ் காந்தியை மட்டும் ஏன் கொல்ல வேண்டி வந்தது என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்களேன்.   கேள்வி- இந்திய அமைதிப்படை ஈழத்தில் மேற்கொண்ட அக்கிரமங்களுக்கான தண்டனையா இது? தனு- இந்திய ராணுவம் மேற்கொண்ட அக்கிரமங்கள் மட்டுமன்றி அந்த அக்கிரமங்கள் குறித்து இந்திய நீதிமன்றம் ஒன்றில்கூட எமக்கு நியாயம் வழங்கப் படவில்லையே.   கேள்வி- புரியவில்லை? தனு- ராஜீவ் காந்தி கொலை என்பது பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான ஈழத் தமிழர்கள் சார்பில் வழங்கப்பட்ட தண்டனை.   கேள்வி- இருந்தாலும் இந்தியா சென்று ராஜீவ் காந்தியைக் கொன்றது என்ன நியாயம்? தனு- பஞ்சாபில் 400 இந்திய மக்களைக் கொன்ற டயர் என்னும் ஆங்கிலேய அதிகாரியை இங்கிலாந்து சென்று உத்தம்சிங் கொன்றார். அவரை தியாகி என்று இந்திய அரசு கௌரவித்துள்ளது. அவர் செய்தது நியாயம் என்று பாராட்டுபவர்கள்.. பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழரைக் கொன்றவரை இந்தியா சென்று நான் கொல்வது எப்படி அநியாயம் என்று கூறமுடியும்?   கேள்வி- என்ன இருந்தாலும் பிரியங்கா, ராகுல் இருவரும் தம் இளம் வயதில் தந்தையை இழப்பது கொடுமை அல்லவா? தனு- பிரியங்கா போன்று 800 க்கு மேற்பட்ட எமது பெண்கள் இந்திய ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார்கள். ராகுல் போன்று பல்லாயிரம் குழந்தைகள் தமது தாய் தந்தையரை இழந்திருக்கிறார்கள். ராகுல் பிரியங்காவிற்காக கவலைப்படுபவர்கள்... ஏன் எமது தமிழ் குழந்தைகளுக்காக கவலைப்படவில்லை?   கேள்வி- பெண்கள் தற்கொலைத் தாக்குதல் செய்வது தவறு இல்லையா? தனு- குயிலி என்ற பெண் தற்கொலை தாக்குதல் செய்து வரலாற்றில் எமக்கு வழி காட்டியுள்ளார். குயிலி செய்தது தவறு என்று யாரும் எமக்கு சொல்லவில்லையே?   கேள்வி- பயங்கரவாத இயக்கங்கள் அப்பாவி பெண்களை மூளைச் சலவை செய்து போதை மருந்து செலுத்தி தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்துவதாக கூறுகிறார்களே? தனு- இந்திய ராணுவத்தின் பல அக்கிரமங்கள் என் கண் முன்னே நடந்திருக்கின்றன. இந்த பொறுப்பை நானே கேட்டுப் பெற்றேன். இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது குறித்து உண்மையில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.   கேள்வி- நிஜமாகவா? அச்சம் எதுவும் இல்லையா? தனு- கடந்த 3 நாட்களாக நான் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தேன். எனது தோழி சுபா தான் செல்கின்றேன் எனக் கேட்டார். நான் விரும்பியிருந்தால் இந்த தாக்குதலில் இருந்து விலகியிருக்க முடியும். ஆனால் நான் வற்புறுத்தி இந்த வாய்ப்பைப் பெற்றேன்.   கேள்வி- என்னதான் துணிச்சல் பெற்ற ஆண்களாக இருந்தாலும் தூக்குமேடைக்கு செல்லும்போது அவர்கள் கால்கள் சோர்ந்துவிடும். அரைவாசி மயங்கிய நிலையிலேயே அவர்களை இழுத்துச் சென்று தூக்கில் இடுவார்கள் என அறிந்திருக்கிறேன். ஆனால் ஒரு பெண் உன்னால் எப்படி கொஞ்சம் கூட மரணபயம் இன்றி முகத்தை இயல்பாக வைத்திருக்க முடிந்தது? தனு- இந்திய ராணவத்தால் பாதிக்கப்பட்ட என் உறவுகளே என் மனக்கண்முன் எப்போதும் இருக்கிறார்கள். அவர்களுடைய அந்த நினைவே என்னை இயக்குகிறது.   கேள்வி- இதனால் சாதிப்பது என்ன? தனு- இனி இந்தியாவின் எந்தவொரு பிரதமரும் ஈழத்தில் தலையிடமுன் ஒன்றுக்கு இரண்டு தடவை சிந்திப்பார்கள். ஒரு இனத்தை அதன் சொந்த மண்ணில் தாக்கினால்... அது எந்தப் பெரிய வல்லரசாக இருந்தாலும் திருப்பி அடி கிடைக்கும் என்று... வரலாறு இனி இயம்பும்.   அங்கயற் திலகம்  
  • ராஜீவ்காந்தி  மரணம், கொலை அல்ல.  அது, ஈழத்தில் அவர் இழைத்த குற்றங்களுக்காக...  அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை. தோழர் பாலன்
  • கண்முன்னால் நடக்கும் உக்கிரேன் மக்களின் இறப்புக்களையும் அழிவுகளையும் கொண்டாட்ட மனநிலையில் இருந்துகொண்டு இரசித்துக்கொண்டும் சர்வாதிகாரி பூட்டினின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்திக்கொண்டும் இருக்கும் உங்களைப் போன்றவர்கள் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், லிபியாவிலும் அமெரிக்காவின் தலைமையில் மேற்கு நாடுகள் மேற்கொண்ட அழிப்புக்களையும், சிரியாவில் ரஷ்யாவின் ஆதரவோடு ஆசாத் மேற்கொண்ட பயங்கர அழிப்புக்களையும் பார்த்து நிச்சயம் கண்ணீர் உகுத்திருக்கமாட்டீர்கள். மனிதாபிமானமும், அடிப்படை விழுமியங்களும் இல்லாதவர்கள்தான் மக்களின் அழிவுகளைப் பார்த்து மகிழ்ந்து திளைப்பார்கள். அராபியர் மீதும், முஸ்லிம்கள் மீதும் பிற்போக்கு சிந்தனையுள்ளவர்கள் எவ்வளவு அனுதாபம் காட்டுவார்கள் என்பதை யாழ் களத்திற்கு வருவபவர்கள் நன்கு அறிவார்கள். ஆனால் நாம் அமெரிக்காவின் புஷ்ஷின் ஆக்கிரமிப்பையோ, ரொனி பிளேயர் அதற்கு உடந்தையாக செயற்பட்டதையோ ஒருபோதும் நியாயப்படுத்தவும் இல்லை. ஆதரிக்கவும் இல்லை.   
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.