Jump to content

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வீடுகள், வாகனங்கள் தீக்கிரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வீடுகள், வாகனங்கள் தீக்கிரை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வாகனங்கள் மற்றும் வீடுகள் போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன.

நாட்டில் இன்று காலை முதல் காலிமுகத்திடல் மற்றும் அலரிமாலிகை உள்ளிட்ட பல பகுதிகளில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.

அந்த வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் அலுவலகங்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டும், தீ வைக்கப்பட்டும் வருகின்றது.

அந்த வகையில் முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் குருநாகலிலுள்ள கட்சி அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

 குருநாகல் நகர மேயர் துஷார சஞ்சீவவின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அத்தோடு முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தவின் கட்டிடத்திற்கும் தீ வைக்கப்பட்டள்ளது.

https://www.virakesari.lk/article/127198

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறை ஆட்கொண்ட இலங்கையின் பிந்திய நிலை ஒரு பார்வை..

May 10, 2022
spacer.png


 

வன்முறைகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது.

நிட்டம்புவ பகுதியில் மூவரும், வீரக்கெட்டிய பகுதியில் இருவரும் இமதும பிரதேச சபையின் தலைவரும்மாக 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் நேற்று இடம்பெற்ற அமைதியின்மையில் காயமடைந்த 218 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார தாக்குதலில் மரணம்!

இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார, அவரது இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இரத்மலானை விமான நிலைய வளாகத்தை போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்துள்ளனர். விடிய விடிய அங்கு திரண்டிருந்த போராட்டக்காரர்கள் வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நைஜீரியாவில் இருந்து சரக்கு விமானம் ஒன்று திட்டமிடாத வகையில் இலங்கையைில் தரையிறங்குவதாக வெளியான தகவலை அடுத்து இந்த சுற்றி வளைப்புகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கிடையில் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், காலிமுகத்திடல் கோட்டா கோ கம பகுதியில் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தீயிட்டு கொளுத்தப்பட்ட சொத்துக்களின் விபரம்.
நாட்டில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்க்காரர்கள் மற்றும் வன்முறைகளின்போது ஆஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அரசாங்கத்தின் சொத்துக்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன், சேதமும் விளைவிக்கப்பட்டிருந்தன.

Avenra Garden Hotel ஆர்பாட்டகாரர்களால் முற்றாக எரிக்கப்பட்டுள்ளது.

spacer.png

நீர்கொழும்பு மீரிகம வீதியில் உள்ள Avenra Garden Hotel ஆர்பாட்டகாரர்களால் முற்றாக எரிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள உலகின் விலையுயர்ந்த சொகுசு வாகனங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. லம்போகினி காரும் கொழுந்து விட்டு எரிகிறது.

மஹிந்தானந்தவின் அலுவலகம் மீது தாக்குதல்.

spacer.png

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் அலுவலகம் மீது நேற்று (9.05.22) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது..

நாவலப்பிட்டி நகரில் அமைந்துள்ள அலுவலகத்துக்கு முன்பாக டயர்களை எரித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், அலுவலகத்தின் மீது கல்வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதனால் அலுவலகம் சேதமடைந்த நிலையில், காவற்துறையினரால் போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டுள்ளனர்.

தென்னக்கோன்களின் வீடுகளும் தீக்கிரை
spacer.png

தம்புளை- யாபாகம பிரதேசத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார மற்றும் பிரமித பண்டார தென்னக்கோன் ஆகியோரின் வீடுகள் நேற்றிரவு தீக்கிரையாகியுள்ளன.

தம்புளை நகர மேயர் ஜாலிய ஓபாத மற்றும் அவரது தாய், சகோதரர்களின் வீடுகளும் தீவைக்கப்பட்டுள்ளன.

ஞான அக்காவின் வீடும் தப்பவில்லை!

spacer.png

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பிரத்தியேக ஜோதிடரான ஞான அக்காவின் வீடும் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அநுராதபுரத்தில் உள்ள வீடு மற்றும் ஞான அக்காவின் ஹோட்டல் ஒன்றும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சேதமாக்கப்பட்ட சொத்துக்களின் விபரங்கள் வருமாறு:

1-சனத் நிஷாந்தவின் வீடு
2-திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு
3-குருநாகல் மேயர் மாளிகை
4-ஜோன்ஸ்டன் வீடு மற்றும் அலுவலகம்
5-மொரட்டுவை மேயரின் வீடு
6-அனுஷா பாஸ்குவலின் வீடு
7-பிரசன்ன ரணதுங்கவின் வீடு
8-ரமேஷ் பத்திரனவின் வீடு
9-சாந்த பண்டாரவின் வீடு
10-ராஜபக்ஷ பெற்றோரின் கல்லறை
11- நீர்கொழும்பில் உள்ள அவன் கார்டன் ஹோட்டல்
12-அருந்திகவின் வீடு
13-கனக ஹேரத்தின் வீடு
14-காமினி லொகுகேவின் வீடு
15-காலியில் உள்ள ரமேஷ் பத்திரனவின் வீடு
16-மொரட்டுவை மேயர் சமன் லால் இல்லம்
17-லான்சாவின்-2 வீடுகள்
18-வென்னப்புவ நைனாமடம ட்ரெவின் பெர்னாண்டோ வீடு
19-அலி சப்ரியின் வீடு
20-பந்துல குணவர்தன வீடு

21-வீரகெட்டிய மெதமுலன வீடு
22.கேகாலை மஹிபால ஹேரத் ஹவுஸ்
23-கொட்டிகாவத்தை ரேணுகா பெரேரா இல்லம்
24-கம்பஹா நாலக கொடஹேவா இல்லம்
25- விமல் வீரவன்சவின் வீடு
26-அசோசியேட் சூப்பர் சென்டர் காலி
27- சிறிபால கம்லத் வீடு
28- கெஹலிய ரபுக்வெல்ல வீடு
29-ரோஹித அபேகுணவர்தன இல்லம்
30-நீர்கொழும்பு குரான கிராண்டீசா ஹோட்டல்
31-காஞ்சனா விஜேசேகர இல்லம்
32-துமிந்த திசாநாயக்க வீடு
33-ஞானாக்கா வீடு

https://globaltamilnews.net/2022/176438

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

காலி முகத்திடலுக்குள்... "தமிழீழம்" நுழைந்தால்,  பொறுக்க மாட்டோம்.. என்று சொன்ன,
முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரவின்...  வீட்டுக்கு, ஒன்றும் நடக்கவில்லையா.

கொஞ்ச  போராட்டக்காரர்கள்... மண்ணெண்ணை போத்தலுடன், அந்தப் பக்கம் போகலாமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text

காலி முகத்திடலுக்குள்... "தமிழீழம்" நுழைந்தால்,  பொறுக்க மாட்டோம்.. என்று சொன்ன,
முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரவின்...  வீட்டுக்கு, ஒன்றும் நடக்கவில்லையா.

கொஞ்ச  போராட்டக்காரர்கள்... மண்ணெண்ணை போத்தலுடன், அந்தப் பக்கம் போகலாமே. 

சிங்களவன் அதில கவனம் தமிழீழத்திற்கு எதிரானவர்களுக்கு பிரச்சனையில்லை

Link to comment
Share on other sites

மகிந்த திருகோணமலை கடற்படை முகாமில் ஒளிந்து இருப்பதாக தகவல்கள் வருகின்றன. 

பீரிசின் வீடு கொளுத்தப்பட்டதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, nunavilan said:

மகிந்த திருகோணமலை கடற்படை முகாமில் ஒளிந்து இருப்பதாக தகவல்கள் வருகின்றன. 

பீரிசின் வீடு கொளுத்தப்பட்டதா?

இந்த கடற்படை தளமும் ஒரு கொலைத‌ளம் தானே. இதனருகில் உயர்தரம் எழுதிவிட்டு வந்த ஐந்து இளம் பாடசலை மாணவர்கள் கொல்லப்பட்டார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text

காலி முகத்திடலுக்குள்... "தமிழீழம்" நுழைந்தால்,  பொறுக்க மாட்டோம்.. என்று சொன்ன,
முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரவின்...  வீட்டுக்கு, ஒன்றும் நடக்கவில்லையா.

கொஞ்ச  போராட்டக்காரர்கள்... மண்ணெண்ணை போத்தலுடன், அந்தப் பக்கம் போகலாமே. 

அதைத்தான் நானும் தேடிக்கொண்டிருக்கிறேன், இவருக்கு இருக்கு கடைசியில. ஆள் பயத்தில பம்முது போல இருக்கே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமான வீடும் தீக்கிரை !!

பசில் ராஜபக்சவிற்கு... சொந்தமான வீடும், தீக்கிரை !!

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமானது என கருதப்படும் மல்வானை வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1281174

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் அலுவலகங்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டும், தீ வைக்கப்பட்டும் வருகின்றது.

தீயாரை காண்பதுவும் தீதே, தீயார் சொற்கேட்பதுவும் தீதே, தீயாரோடு இணங்குதலும் தீதே.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nunavilan said:

அங்கஜனின் சுகம் எப்படி?🙂

அங்கஜன், டக்கி எல்லாரும்...இப்ப நல்ல பிள்ளைக்கு நடிக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

6 minutes ago, தமிழ் சிறி said:

அங்கஜன், டக்கி எல்லாரும்...இப்ப நல்ல பிள்ளைக்கு நடிக்கிறார்கள். 

டக்கிளஸ் வீட்டில் மகிந்தவும், அங்கஜன் வீட்டில் பசிலும் ஒளிந்து உள்ளனர் என்று போகிற போக்கில் கொளுத்திப் போடுவமா என யோசிக்கின்றேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

டக்கிளஸ் வீட்டில் மகிந்தவும், அங்கஜன் வீட்டில் பசிலும் ஒளிந்து உள்ளனர் என்று போகிற போக்கில் கொளுத்திப் போடுவமா என யோசிக்கின்றேன்.

சுமந்திரன் வீட்டில்... ஜோன்சன் பெர்ணாண்டோ,  நிக்கிறார் எண்டும் சொல்லி விடுங்கோ. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையில் உள்ள சோபர் ஐலண்டில் ராஜா பட்சிகளின் குடும்பம் தலைமறைவாக இருப்பதாக செய்தி. இங்கே இருக்கும் ஒரு ஹோட்டல் கூட சிராந்தியின் பெயரில் தான் நிர்வாகிக்கப்படுகிறதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, standing and outdoors

அடே(ய்) உங்கட ஆட்டமெல்லாம்... கொழும்பில் மட்டும் தான்டா... 
உங்களால முடிஞ்சா,  மட்டக்களப்புக்கு வந்து... 
எங்க ஆசான், வியாழேந்திரன் வீட்டின்  மேல... கைய வச்சி பாருங்கடா... அப்ப தெரியும். 

மட்டக்களப்பு தாதா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அங்கஜன், சுமந்திரன், கருணா, பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன் மற்றும் மகிந்தாவின் தமிழ் அன்னவர்களினது வீட்டு விலாசங்கள் இருந்தால் எடுத்துப் பதியவும், ஏலுமெண்டால் கூகிள் மப்பில் போட்டு அதைப் பகிரவும்...

சிங்களவருக்கு துணிச்சல் இருந்தால் அவற்றிலும் கைவைத்துப் பார்க்கட்டும்...
 
சிங்களவனுக்கு தங்கட அரசியல்வாதிகளில் கைவைக்க மட்டுமே துணிவிருக்கிறது... தமிழனில் தொடப் பீப்பயம். தொட்டால் துலைஞ்சானுகள் என்பது தெரியும்...

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

டக்கிளஸ் வீட்டில் மகிந்தவும், அங்கஜன் வீட்டில் பசிலும் ஒளிந்து உள்ளனர் என்று போகிற போக்கில் கொளுத்திப் போடுவமா என யோசிக்கின்றேன்.

கவனம்! எதுக்கும் கொஞ்சம் யோசிச்சு கொளுத்துங்கோ, இப்ப கொழுத்தியவன்  பக்கம் திரும்பி பத்தி எரியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச்சா ..... சரத் வீர சேகரவை எப்படி தவற விட்டார்கள். தவற எல்லாம் விட்டிருக்க மாட்டார்கள், ஆறுதலாக கவனிப்பார்கள் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசுதேவ நணயக்கார எங்க இருக்கிறார். அவரும் மகிந்தவிண்ட ஆள்தான். விக்கி அய்யா வீட்ட போனால் ஆளைப் பிடிக்கலாம்! 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Maruthankerny said:

Image

நம்ம பசங்களுக்கு சிறிலங்காவில லெக்சன் நடக்கிற பீலிங் போல.....

பூனைக்கு வெளயாட்டு சுண்டெலியளுக்கு சீவன் போகுற விசயம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

இவ்வாறு சேதமாக்கப்பட்ட சொத்துக்களின் விபரங்கள் வருமாறு:

1-சனத் நிஷாந்தவின் வீடு
2-திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு
3-குருநாகல் மேயர் மாளிகை
4-ஜோன்ஸ்டன் வீடு மற்றும் அலுவலகம்
5-மொரட்டுவை மேயரின் வீடு
6-அனுஷா பாஸ்குவலின் வீடு
7-பிரசன்ன ரணதுங்கவின் வீடு
8-ரமேஷ் பத்திரனவின் வீடு
9-சாந்த பண்டாரவின் வீடு
10-ராஜபக்ஷ பெற்றோரின் கல்லறை
11- நீர்கொழும்பில் உள்ள அவன் கார்டன் ஹோட்டல்
12-அருந்திகவின் வீடு
13-கனக ஹேரத்தின் வீடு
14-காமினி லொகுகேவின் வீடு
15-காலியில் உள்ள ரமேஷ் பத்திரனவின் வீடு
16-மொரட்டுவை மேயர் சமன் லால் இல்லம்
17-லான்சாவின்-2 வீடுகள்
18-வென்னப்புவ நைனாமடம ட்ரெவின் பெர்னாண்டோ வீடு
19-அலி சப்ரியின் வீடு
20-பந்துல குணவர்தன வீடு

21-வீரகெட்டிய மெதமுலன வீடு
22.கேகாலை மஹிபால ஹேரத் ஹவுஸ்
23-கொட்டிகாவத்தை ரேணுகா பெரேரா இல்லம்
24-கம்பஹா நாலக கொடஹேவா இல்லம்
25- விமல் வீரவன்சவின் வீடு
26-அசோசியேட் சூப்பர் சென்டர் காலி
27- சிறிபால கம்லத் வீடு
28- கெஹலிய ரபுக்வெல்ல வீடு
29-ரோஹித அபேகுணவர்தன இல்லம்
30-நீர்கொழும்பு குரான கிராண்டீசா ஹோட்டல்
31-காஞ்சனா விஜேசேகர இல்லம்
32-துமிந்த திசாநாயக்க வீடு
33-ஞானாக்கா வீடு

இந்த எரிந்த வீடுகளுள் மிகவும் பிடித்தது

விமல் வீரவன்சாவின் வீடு தான்.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.