Jump to content

காங்கேசன்துறையில் படைக்கலம் இறக்கிய நிமலவவை கடலின் உள் அனுப்பிய கடற்கரும்புலிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

காங்கேசன்துறையில் படைக்கலம் இறக்கிய நிமலவவை கடலின் உள் அனுப்பிய கடற்கரும்புலிகள்

 

எழுத்து: நன்னிச் சோழன்

 

 

அது நான்காம் ஈழப்போரில் போர் மேகம் உச்சந் தொட்டிருந்த காலம். தமிழீழம் எங்கும் தொடர் சமர்கள் கடலிலும் தரையிலும் வானிலும் என நிகழ்ந்துகொண்டிருந்தன. எமது நாட்டின் எல்லைகள் எங்கும் வெடியோசைகள் கேட்டம்வண்ணமிருக்க அவற்றின் தொலைவுகளும் நாளீற்றில் குறுகிக்கொண்டிருந்தன; ஊர்வழிய நாடோறும் அழுகுரல்கள் ஏகிறிக்கொண்டிருந்தன. 

அதே நேரம் பெருங்கடலில் கடற்புலிகளின் கப்பல்கள் ஒன்றன்பின் ஒன்றாக இந்திய-மேற்குலகத்தின் கூட்டுப் புலனாய்வு பற்றியத்தின் அடிப்படையில் சிங்களக் கடற்படையால் இலக்கு வைக்கப்பட்டு பன்னாட்டு பெருங்கடலில் பன்னாட்டு விதிமுறைகளுக்கு எதிராக - பன்னாட்டு கடற்பரப்பில் பயணிக்கும் செய்யும் கப்பல்களை தாக்குவது கூடாது - மூழ்கடிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. 

இவ்வாறாக பெருங்கடலில் ஏற்பட்ட பாரிய இழப்புகள் - நீண்ட கடற்பயண பட்டறிவு நிரம்பிய 62 ஆழ்கடலோடிகளின் இழப்போடு அத்துணை ஆழிக்கப்பல்களின் இழப்பால் - கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் கேணல் சூசை அவர்களின் மனதில் ஆறாத வடுவினை தோற்றுவித்திருந்தன. இவற்றிற்கு பழிவாங்கும் விதமாக கடற்படையின் கடற்கலங்கள் மூழ்கடிக்கப்பட வேண்டுமென்ற கடுஞ்சினமான உணர்வு அன்னாரின் மனதில் மேலெழுந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக கடற்புலிகளால் 'பழிவாங்கல்' எனப் குறியீட்டுப்பெயர் சூட்டப்பட்ட கடல் வலிதாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

அத்தகையவற்றில், முதலாவது குறியீட்டுப்பெயர் சூட்டப்பட்ட 'பழிவாங்கல்-01' நடவடிக்கையானது 22.03.2008 அன்று முல்லைத்தீவு நாயாற்றுக் கடற்பரப்பில் சிங்களத்தின் டோறாவைக் குறிவைத்து நீர்மேல் தாக்குதல் கடற்கரும்புலிகளால் பட்டப்பகலில் மேற்கொள்ளப்பட்டது. இத்துணிகர தாக்குதலில் டோறா தாட்டப்பட்டு நடவடிக்கை வெற்றியீட்டியதைத் தொடர்ந்து 09.05.2008 அன்று தமிழீழத் தலைநகர் திருக்கோணமலையில் தரித்திருந்த சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான ஏ.என். 520 என்ற படைகாவிக் கப்பல் மீது நீரடி நீச்சல் கடற்கரும்புலிகளால் வெற்றிகரமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இவ் இரண்டாவது நடவடிக்கைக்கு 'பழிவாங்கல்-02' என கடற்புலிகள் பெயர் சூட்டியிருந்தனர். 

இவ்வாறாக பழிவாங்கல் என்ற தொடரிலக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலிரு கடல் வலிதாக்குதல் நடவடிக்கைகளும் கடற்புலிகளால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன் மூன்றாவது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக எந்தவொரு பற்றியமும் இதுவரையிலும் அறியப்படவில்லை.

எனினும், மீண்டும் இத்தன்மைய தாக்குதலொன்று 22.10.2008 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தில் கடற்கரும்புலிகளால் ஊடுருவப்பட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

இத்தாக்குதலானது சிங்களப்படைகளால் வல்வளைக்கப்பட்டிருந்த யாழ் குடாநாட்டில் குடியிருந்த பொதுமக்களுக்கு உணவு முதலான இன்றியமையாத பொருட்கள் ஏற்றிவருகின்றோம் என்ற பரப்புரை போர்வையின்கீழ் யாழில் நிலைபெற்றிருந்த சிங்களப்படைகளுக்குத் தேவையான படைக்கலங்கள், உணவுகள் உள்ளிட்ட வழங்கல் பொருட்களை ஏற்றிப்பறித்து படைய பணிகளுக்கென பயன்படுத்தப்பட்டு வந்த இரண்டு வழங்கல் கப்பல்கள் மீதே மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த நாளில் அதிகாலை (வைகறை) 5:10 மணியளவில் காங்கேசந்துறை துறைமுகத்தினுள் ஊடுருவிய கடற்கரும்புலிகளால் இத்தாக்குதல் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இத்தாக்குதலின் போது அங்கே நின்றுகொண்டிருந்த எம்வி றுகுணுவ என்ற கப்பல் சேதத்திற்கு உள்ளானதுடன் மற்றொரு படைய வழங்கல் கப்பலான எம்வி நிமலவ மூழ்கடிக்கப்பட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்தனர். "வணிகக் கப்பல்களில் ஒன்று - எம்.வி. நிமலவ - மூழ்கிக் கொண்டிருக்கிறது, மற்றைய கப்பல் சேதமடைந்துள்ளது." என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு சிறிலங்கா பாதுகாப்புத்துறை அலுவலர் தெரிவித்ததாக ஏஜொன்ஸ் விரான்ஸ் பியஸ் என்ற செய்தி ஊடகம் வெளியிட்ட பற்றியத்தை பல்வேறு பன்னாட்டு ஊடகங்களும் ஆமோத்தித்து வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

SLN supply ship MV Nimalawa - sunk நிமலவ.jpg

'மூழ்கடிக்கப்பட்ட எம்வி நிமலவ'

 

SLN supply ship MV Ruhunuwa - damaged - றுகுண.jpgSLN supply ship MV Ruhunuwa - damaged 2 - றுகுண.jpg

'சேதமடைந்த எம்வி றுகுணுவ'

 

damaged - றுகுண.jpg

'றுகுணுவவில் சேதமடைந்த பகுதியாக சிங்களத்தால் வெளியிடப்பட்ட படிமம்'

ஆனால் வழக்கம் போல சிறிலங்கா அரசும் அதனது ஊடகங்களும் இரண்டு கப்பல்களும் நீருக்கு மேலாக மிதப்பதாக இட்டுக்கட்டிய செய்திகளை வெளியிட்டு உண்மையை மூடி மறைத்தன. தாக்குதல் நடந்து ஒரு மணிநேரத்திற்குள் நிமலவ மூழ்கிய செய்தியை வெளியிட்ட சிங்கள செய்தி வலைத்தளங்கள் அதன்பின் அவற்றை பின்னெடுத்ததுடன் இரு கப்பல்களும் மேலே மிதப்பதாகவே செய்தியை வெளியிட்டன.

இந்தத் தாக்குதலின் போது விடுதலைப்புலிகள் தரப்பில் கடற்புலிகளின் கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவைச் சேர்ந்த கடற்கரும்புலி லெப் கேணல் குபேரன், அங்கையற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவைச் சேர்ந்த கடற்புலிகளின் மகளிர் பிரிவின் முன்னைய துணைக் கட்டளையாளர் கடற்கரும்புலி லெப் கேணல் தாட்சாயினி எ இலக்கியா ஆகிய இரு கடற்கரும்புலிகள் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டனர்.

கடற்கரும்புலி லெப் கேணல் குபேரன்.jpg

'நீரடி நீச்சல் கடற்கரும்புலி லெப் கேணல் குபேரன்'

 

கடற்புலிகள் மகளிர் துணைக் கட்டளையாளர் கடற்கரும்புலி லெப் கேணல் இலக்கியா எ தாட்சாயினி.jpg

'நீரடி நீச்சல் கடற்கரும்புலி லெப் கேணல் இலக்கியா எ தாட்சாயினி'

 

இந்த தாக்குதலின் போது கடற்கரும்புலிகளால் பயன்படுத்தப்பட்ட 'மிதக்கும் நீர்முழுகி இலக்கிய ஏவரி' (Diver Aimed Floating Torpedo) ஒன்று கடலினுள் பிரண்டபடி மிதந்துகொண்டிருந்த போது சிங்களக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. இது மூன்றாவது கடற்கரும்புலியால் ஓட்டிவரப்பட்டு கவிழ்ந்ததால் கைவிடப்பட்டதா அல்லது வந்த இரு கடற்கரும்புலிகளிலேயே யாருடையதேனும் கவிழ்ந்ததா என்பது பற்றிய பற்றியம் அறியில்லை. இந்தவகை ஏவரிக்கு கடற்புலிகள் இட்ட பெயர் தெரியவில்லை!

 

சிங்களக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மிதக்கும் நீர்முழுகி இலக்கிய ஏவரி:

main-qimg-b26489db724d85ab9025660c84385c57.png

'கடல் நீரில் கவிழ்ந்த நிலையில்'

 

main-qimg-4c214514291c9e4220d4a119c9ffea8a.png

'கடற்கரைக்கு கட்டியிழுத்து வந்த பின்னர்'

 

main-qimg-588ec7c353803a6ec090c5a91f89a968.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.