Jump to content

காங்கேசன்துறையில் படைக்கலன் இறக்கிய நிமலவவை கடலினுள் அனுப்பிய கடற்கரும்புலிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

காங்கேசன்துறையில் படைக்கலன் இறக்கிய நிமலவவை கடலினுள் அனுப்பிய கடற்கரும்புலிகள்

 

 

அது நான்காம் ஈழப்போரில் போர் மேகம் உச்சந் தொட்டிருந்த காலம். தமிழீழம் எங்கும் தொடர் சமர்கள் கடலிலும் தரையிலும் வானிலும் என நிகழ்ந்துகொண்டிருந்தன. எமது நாட்டின் எல்லைகள் எங்கும் வெடியோசைகள் கேட்டம்வண்ணமிருக்க அவற்றின் தொலைவுகளும் நாளீற்றில் குறுகிக்கொண்டிருந்தன; ஊர்வழிய நாடோறும் அழுகுரல்கள் ஏகிறிக்கொண்டிருந்தன. 

அதே நேரம் பெருங்கடலில் கடற்புலிகளின் கப்பல்கள் ஒன்றன்பின் ஒன்றாக இந்திய-மேற்குலகத்தின் கூட்டுப் புலனாய்வு பற்றியத்தின் அடிப்படையில் சிங்களக் கடற்படையால் இலக்கு வைக்கப்பட்டு பன்னாட்டு பெருங்கடலில் பன்னாட்டு விதிமுறைகளுக்கு எதிராக - பன்னாட்டு கடற்பரப்பில் பயணிக்கும் செய்யும் கப்பல்களை தாக்குவது கூடாது - மூழ்கடிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. 

இவ்வாறாக பெருங்கடலில் ஏற்பட்ட பாரிய இழப்புகள் - நீண்ட கடற்பயண பட்டறிவு நிரம்பிய 62 ஆழ்கடலோடிகளின் இழப்போடு அத்துணை ஆழிக்கப்பல்களின் இழப்பால் - கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் கேணல் சூசை அவர்களின் மனதில் ஆறாத வடுவினை தோற்றுவித்திருந்தன. இவற்றிற்கு பழிவாங்கும் விதமாக கடற்படையின் கடற்கலங்கள் மூழ்கடிக்கப்பட வேண்டுமென்ற கடுஞ்சினமான உணர்வு அன்னாரின் மனதில் மேலெழுந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக கடற்புலிகளால் 'பழிவாங்கல்' எனப் குறியீட்டுப்பெயர் சூட்டப்பட்ட கடல் வலிதாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

அத்தகையவற்றில், முதலாவது குறியீட்டுப்பெயர் சூட்டப்பட்ட 'பழிவாங்கல்-01' நடவடிக்கையானது 22.03.2008 அன்று முல்லைத்தீவு நாயாற்றுக் கடற்பரப்பில் சிங்களத்தின் டோறாவைக் குறிவைத்து நீர்மேல் தாக்குதல் கடற்கரும்புலிகளால் பட்டப்பகலில் மேற்கொள்ளப்பட்டது. இத்துணிகர தாக்குதலில் டோறா தாட்டப்பட்டு நடவடிக்கை வெற்றியீட்டியதைத் தொடர்ந்து 09.05.2008 அன்று தமிழீழத் தலைநகர் திருக்கோணமலையில் தரித்திருந்த சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான ஏ.என். 520 என்ற படைக்காவி கப்பல் மீது நீரடி நீச்சல் கடற்கரும்புலிகளால் வெற்றிகரமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இவ் இரண்டாவது நடவடிக்கைக்கு 'பழிவாங்கல்-02' என கடற்புலிகள் பெயர் சூட்டியிருந்தனர். 

இவ்வாறாக பழிவாங்கல் என்ற தொடரிலக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலிரு கடல் வலிதாக்குதல் நடவடிக்கைகளும் கடற்புலிகளால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன் மூன்றாவது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக எந்தவொரு பற்றியமும் இதுவரையிலும் அறியப்படவில்லை.

எனினும், மீண்டும் இத்தன்மைய தாக்குதலொன்று 22.10.2008 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தில் கடற்கரும்புலிகளால் ஊடுருவப்பட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

இத்தாக்குதலானது சிங்களப்படைகளால் வல்வளைக்கப்பட்டிருந்த யாழ் குடாநாட்டில் குடியிருந்த பொதுமக்களுக்கு உணவு முதலான இன்றியமையாத பொருட்கள் ஏற்றிவருகின்றோம் என்ற பரப்புரை போர்வையின்கீழ் யாழில் நிலைபெற்றிருந்த சிங்களப்படைகளுக்குத் தேவையான படைக்கலங்கள், உணவுகள் உள்ளிட்ட வழங்கல் பொருட்களை ஏற்றிப்பறித்து படைய பணிகளுக்கென பயன்படுத்தப்பட்டு வந்த இரண்டு வழங்கல் கப்பல்கள் மீதே மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த நாளில் அதிகாலை (வைகறை) 5:10 மணியளவில் காங்கேசந்துறை துறைமுகத்தினுள் ஊடுருவிய கடற்கரும்புலிகளால் இத்தாக்குதல் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இத்தாக்குதலின் போது அங்கே நின்றுகொண்டிருந்த எம்வி றுகுணு என்ற கப்பல் சேதத்திற்கு உள்ளானதுடன் மற்றொரு படைய வழங்கல் கப்பலான எம்வி நிமலவ மூழ்கடிக்கப்பட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்தனர். "வணிகக் கப்பல்களில் ஒன்று - எம்.வி. நிமலவ - மூழ்கிக் கொண்டிருக்கிறது, மற்றைய கப்பல் சேதமடைந்துள்ளது." என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு சிறிலங்கா பாதுகாப்புத்துறை அலுவலர் தெரிவித்ததாக ஏஜொன்ஸ் விரான்ஸ் பிரஸ் என்ற செய்தி ஊடகம் வெளியிட்ட பற்றியத்தை பல்வேறு பன்னாட்டு ஊடகங்களும் ஆமோத்தித்து வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

MV Nimalawa.jpg

'மூழ்கடிக்கப்பட்ட எம்வி நிமலவ'

 

MERCS_RUHUNU - damaged.jpg

'சேதமடைந்த எம்வி றுகுணு'

 

 

y9.jpg

'சேதமடைந்த எம்வி றுகுணு'

 

Nimalava

'நிமலவவில் சேதமடைந்த பகுதியாக சிங்களத்தால் வெளியிடப்பட்ட படிமம்'

ஆனால் வழக்கம் போல சிறிலங்கா அரசும் அதனது ஊடகங்களும் இரண்டு கப்பல்களும் நீருக்கு மேலாக மிதப்பதாகவும் நிமலவவின் கலக்கூடு மட்டும் சிறிது சேதம் எனவும் அதை கடற்படையினர் சரிசெய்துகொண்டிருக்கின்றனர் எனவும் இட்டுக்கட்டிய செய்திகளை வெளியிட்டு உண்மையை மூடி மறைத்தன. தாக்குதல் நடந்து ஒரு மணிநேரத்திற்குள் நிமலவ மூழ்கிய செய்தியை வெளியிட்ட சிங்கள செய்தி வலைத்தளங்கள் அதன்பின் அவற்றை பின்னெடுத்ததுடன் இரு கப்பல்களும் மேலே மிதப்பதாகவே செய்தியை வெளியிட்டன.

இந்தத் தாக்குதலின் போது விடுதலைப்புலிகள் தரப்பில் கடற்புலிகளின் கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவைச் சேர்ந்த கடற்கரும்புலி லெப் கேணல் குபேரன், அங்கையற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவைச் சேர்ந்த கடற்புலிகளின் மகளிர் பிரிவின் முன்னைய துணைக் கட்டளையாளர் கடற்கரும்புலி லெப் கேணல் தாட்சாயினி எ இலக்கியா ஆகிய இரு கடற்கரும்புலிகள் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டனர்.

கடற்கரும்புலி லெப் கேணல் குபேரன்.jpg

'நீரடி நீச்சல் கடற்கரும்புலி லெப். கேணல் குபேரன்'

 

கடற்புலிகள் மகளிர் துணைக் கட்டளையாளர் கடற்கரும்புலி லெப் கேணல் இலக்கியா எ தாட்சாயினி.jpg

'நீரடி நீச்சல் கடற்கரும்புலி லெப். கேணல் இலக்கியா எ தாட்சாயினி'

 

இந்த தாக்குதலின் போது கடற்கரும்புலிகளால் பயன்படுத்தப்பட்ட 'மிதக்கும் நீர்முழுகி இலக்கிய ஏவரி' (Diver Aimed Floating Torpedo) ஒன்று கடலினுள் பிரண்டபடி மிதந்துகொண்டிருந்த போது சிங்களக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. இது மூன்றாவது கடற்கரும்புலியால் ஓட்டிவரப்பட்டு கவிழ்ந்ததால் கைவிடப்பட்டதா அல்லது வந்த இரு கடற்கரும்புலிகளிலேயே யாருடையதேனும் கவிழ்ந்ததா என்பது பற்றிய பற்றியம் அறியில்லை. இந்தவகை ஏவரிக்கு கடற்புலிகள் இட்ட பெயர் தெரியவில்லை!

 

சிங்களக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மிதக்கும் நீர்முழுகி இலக்கிய ஏவரி:

main-qimg-b26489db724d85ab9025660c84385c57.png

'கடல் நீரில் கவிழ்ந்த நிலையில்'

 

main-qimg-4c214514291c9e4220d4a119c9ffea8a.png

'கடற்கரைக்கு கட்டியிழுத்து வந்த பின்னர்'

 

main-qimg-588ec7c353803a6ec090c5a91f89a968.png

'கடையார்'

 

உசாத்துணை

ஆக்கம் & வெளியீடு:

நன்னிச் சோழன்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to காங்கேசன்துறையில் படைக்கலன் இறக்கிய நிமலவவை கடலின் உள் அனுப்பிய கடற்கரும்புலிகள்
  • நன்னிச் சோழன் changed the title to காங்கேசன்துறையில் படைக்கலன் இறக்கிய நிமலவவை கடலினுள் அனுப்பிய கடற்கரும்புலிகள்


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........!  👍
    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.