Jump to content

பிரதமரின் இல்லத்தைத் தீயிட்டுக்கொளுத்துபவர்கள் இரக்கம் காண்பிப்பதற்குத் தகுதியற்றவர்கள் - சுப்ரமணியன் ஸ்வாமி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமரின் இல்லத்தைத் தீயிட்டுக்கொளுத்துபவர்கள் இரக்கம் காண்பிப்பதற்குத் தகுதியற்றவர்கள் - சுப்ரமணியன் ஸ்வாமி

(நா.தனுஜா)

பிரதமரின் இல்லங்களைக்கூட தீயிட்டுக்கொளுத்தி, பாராளுமன்ற உறுப்பினர்கள்மீது தாக்குதல் நடத்துவதெனில், அந்த கலகக்காரர்கள் இரக்கம் காண்பிக்கப்படுவதற்கு எவ்வகையிலும் தகுதியற்றவர்களாவர் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் ஸ்வாமி தெரிவித்துள்ளார்.

'மைனா கோ கம' மற்றும் 'கோட்டா கோ கம' ஆகிய இடங்களில் கடந்த திங்கட்கிழமை அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைத்தாக்குதல்களை அடுத்து நாடளாவிய ரீதியில் அமைதியின்மை நிலையொன்று தோற்றம் பெற்றுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவொன்றைச் செய்திருந்த சுப்ரமணியன் ஸ்வாமி, 'அரசியலமைப்பு முறைமையை நிலைநாட்டுவதற்கு இந்திய இராணுவம் அனுப்பிவைக்கப்படவேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் அவர் செய்திருக்கும் மற்றொரு பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

'பிரதமரின் இல்லங்களைக்கூட தீயிட்டுக்கொளுத்தி, பாராளுமன்ற உறுப்பினர்கள்மீது தாக்குதல் நடத்துவதெனில், அந்த கலகக்காரர்கள் இரக்கம் காண்பிக்கப்படுவதற்கு எவ்வகையிலும் தகுதியற்றவர்களாவர். எமது அயல்நாடு மற்றுமொரு லிபியாவாக மாறுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கமுடியாது' என்று அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 

 

https://www.virakesari.lk/article/127323

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுக்கிலாம்..... பிரகளாம்....

நல்ல மப்பால எழும்பி..... அலம்பறை பண்ணுறார்....

அடிவாங்கிய பா.உ கள், அடிக்க ஆட்களை கொண்டு வந்தவர்கள்... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

பிரதமரின் இல்லத்தைத் தீயிட்டுக்கொளுத்துபவர்கள் இரக்கம் காண்பிப்பதற்குத் தகுதியற்றவர்கள் - சுப்ரமணியன் ஸ்வாமி

இது வாங்கின காசுக்கு மேல கூவுது .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

இது வாங்கின காசுக்கு மேல கூவுது .

மகிந்தவுக்கு பாரத ரத்னா விருது கொடுங்க வேணும் எண்டு கோரிய, அசட்டு  கிருமி.... இந்தாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

பிரதமரின் இல்லத்தைத் தீயிட்டுக்கொளுத்துபவர்கள் இரக்கம் காண்பிப்பதற்குத் தகுதியற்றவர்கள் - சுப்ரமணியன் ஸ்வாமி

சூப்ரமணியன் சிலோன் பிரச்சனை கதைக்கலாம் ஆனால் ஈழத்தமிழன் அதுவும் புலம்பெயர் தமிழன் தமிழ்நாட்டு அரசியலை பற்றி கதைக்கப்படாது.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

மகிந்தவுக்கு பாரத ரத்னா விருது கொடுங்க வேணும் எண்டு கோரிய, அசட்டு  கிருமி.... இந்தாள்.

நல்லதுதான் சொல்லியிருக்கார் அந்த செய்தியையும் சமூக வலைதளம்களில் உலாவ விடுவம் .

புதிய அவதார்  கோத்தா ராஜபாக்ஸ ஆதரவாளர் முகம் செம்மையாய் வாங்கி கட்டுது  அந்த அவதார்கள் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Nathamuni said:

மகிந்தவுக்கு பாரத ரத்னா விருது கொடுங்க வேணும் எண்டு கோரிய, அசட்டு  கிருமி.... இந்தாள்.

இது கொடுத்த காசுக்கு மேலாக கூவேலை, இது தனக்கு வரவேண்டிய காசின்ற மிச்சம் வரவில்லை என்று அழுகிறது. மகிந்த திரும்ப வந்தால்தான் காசு அல்லது பெப்பே தான்… பாவம்

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ragaa said:

இது கொடுத்த காசுக்கு மேலாக கூவேலை, இது தனக்கு வரவேண்டிய காசின்ற மிச்சம் வரவில்லை என்று அழுகிறது. மகிந்த திரும்ப வந்தால்தான் காசு அல்லது பெப்பே தான்… பாவம்

அட இப்படியும் எடுத்துக்கொள்ளலாம் .

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிரமணியம் சுவாமி மகிந்த சகோதரர்களின் குடும்ப நண்பர். அவர்களுடன் வியாபார கொடுக்கல் வாங்கல்கள் செய்யக்கூடும். அனுதாபம், ஆவேசம் வராதா பின்ன.. மகிந்த சகோதரர்களின் ஆட்சி ஆட்டம் கண்டால் அதன் பின் சாமியை இலங்கையில் வேறு யார் அழைத்து, மரியாதை செய்து, கெளரவிக்க போகின்றார்கள்?

தனது முன்னைய டிவிட்டர் பதிவுகளில் பிரேமதாசாவே இலங்கையில் இந்திய இராணுவத்தின் தோல்விக்கு காரணம் என்றும் கூறி உள்ளார். சாமி சஜித் அதிகாரத்தை பிடிப்பதை விரும்பமாட்டார் என்றே தோன்றுகின்றது. 

சாமியை டுவிட்டரில் பத்து மில்லியன் கணக்குகள் பின் தொடர்கின்றன. டுவிட்டருக்கு வந்த சோதனை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.  

07sld1.jpg

வெளியல நின்று சவுண்ட் கொடுக்காமல் நண்பனுக்காக களத்தில் இறங்குவதே சிறப்பு.👌

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.

உடுத்தியுள்ள வேட்டியானது உடலில் இருந்து அவிழ்ந்து கீழே நழுவியபோது உடனே கை விரைந்து சென்று அதை சரிசெய்துவிடுகிறது. அதுபோல, ஒருவனுக்கு துன்பம் நேரிட்டபோது, உடனே சென்று அந்தத் துன்பத்தை நீக்கி விடுவதற்கு, உதவுவது சிறந்த நட்பாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

பிரதமரின் இல்லத்தைத் தீயிட்டுக்கொளுத்துபவர்கள் இரக்கம் காண்பிப்பதற்குத் தகுதியற்றவர்கள் - சுப்ரமணியன் ஸ்வாமி

இதனை... சு.சாமி, "கோத்தாகோகம" வில் நின்று சொல்ல துணிவு இருக்கின்றதா?
வாய்... இருந்தால், என்னத்தையும் கதைக்கிறாததா?
அவனனவன்  வேதனை, அவனுக்குத்தான் தெரியும்.
இதற்குள்.... கதைக்க, உமக்கு என்ன, அருகதை இருக்கு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரதம்ர் என்றவுடன் மோடி நினைவுக்கு வந்துவிட்டது சுவாமிக்கு..😆

முன்னம் இட்ட தீ இந்தியாவுக்கும் பரவும் என்கின்ற பயம் போல...😆

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

இதனை... சு.சாமி, "கோத்தாகோகம" வில் நின்று சொல்ல துணிவு இருக்கின்றதா?

அறளை பேந்த சூப்ரமணியம் அங்கை நிண்டு கொண்டு கோ கோத்தபாய எண்டு கத்தினாலும் கத்தும்.....இந்த கலியாணம் தெரியும் தானே 😂

 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

அறளை பேந்த சூப்ரமணியம் அங்கை நிண்டு கொண்டு கோ கோத்தபாய எண்டு கத்தினாலும் கத்தும்.....இந்த கலியாணம் தெரியும் தானே 😂

 

 

ரொம்ப குசும்பு பிடித்த அல்லது மறை கழன்ற சாமி போல் உள்ளதே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமி நடிக்குது.....

யோவ் சாமி..... நம்ம முன்னாள் பிரதமர் மற்றும் அவரது அல்லக்கைகள் வீடுகளை எரிச்சதுக்கு பின்னால் பக்கா திட்டமிடல், வேகம்..... ஒழுங்கமைப்பு..... எல்லாத்தும் காரணம்.... உங்கள் ரோ என்று.... புலம்புகிறார்.... திருகோணமலையில் இருந்து ஒருத்தர்....

😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமிக்கு தான் செய்த அநியாயத்துக்கு தன் வீடுகளையும் எரிச்சிடுவாங்களோன்ன பயத்தில உளறுது. மகிந்தாவிட்ட வாங்கி பெட்டிகள் அனைத்தும் பாவத்தின் கணக்கென்னு.. சாமிக்கு விளங்கும் போது.. உடம்பு ஊசலாடுமோ தெரியல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

ரொம்ப குசும்பு பிடித்த அல்லது மறை கழன்ற சாமி போல் உள்ளதே. 

 செய்தது பிழை எண்டு தெரிஞ்சும்..... நிண்டு சாந்தி முகுர்த்தம்  நடத்தீட்டு போற பிளான்போல பல்லை காட்டிகொண்டு நிக்குது 😁

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.