Jump to content

இலங்கை நெருக்கடி: ஒரு வாரத்தில் புதிய அரசாங்கம்; நாடாளுமன்றத்திற்கு அதிகாரம்: கோட்டாபய ராஜபக்ஷ


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நெருக்கடி: ஒரு வாரத்தில் புதிய அரசாங்கம்; நாடாளுமன்றத்திற்கு அதிகாரம்: கோட்டாபய ராஜபக்ஷ

8 நிமிடங்களுக்கு முன்னர்
 

ராஜபக்ஷ

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு வார காலத்திற்குள் புதிய அரசாங்கத்தை அமைத்து, அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமல்படுத்த தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தியபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாடு ஸ்திரதன்மை அடைந்த பிறகு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வதற்கும் தான் நடவடிக்கை எடுப்பதாக அவர் இன்று உறுதி வழங்கியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ உரையிலிருந்து:

இன்று எமது நாடு வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் மிகவும் மோசமான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்த சந்தர்ப்பத்திற்கு வருவதற்கு முன்பாக, பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் எதிர்நோக்கி வந்த சிரமங்கள் காரணமாக சமூக, அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டது. இந்த பிரச்னைக்கு தீர்வாக பல்வேறு தரப்பினர் பொஸ்திதுவான யோசனையொன்றை முன்வைத்தார்கள்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மை கட்சிகளை இணைத்த புதிய அரசாங்கமொன்றை ஸ்தாபிக்குமாறே பலரும் யோசனைகளை முன்வைத்திருந்தார்கள். இந்த விடயம் தொடர்பில் கடந்த காலங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் தலைவர்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தேன்.

அந்த கருத்துக்களை நானும் ஏற்றுக்கொண்டு, இந்த பிரச்னைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான பின்னணியை ஏற்படுத்தி, அதற்காக மிகவும் சிரமமான கடுமையான பல தீர்மானங்களை எடுத்தேன். கடந்த அமைச்சரவையை நியமிக்கும் போது, அப்போது இருந்த பல சிரேஸ்ட அமைச்சர்களும், அனைத்து ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இல்லாத, புதிய அமைச்சர்களுடனான புதிய அமைச்சரவையொன்றை ஸ்தாபித்தேன். அதேபோன்று, பிரதமர் ராஜினாமா செய்து, முழு அமைச்சரவையையும் கலைத்து, புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையை நியமிப்பதற்கான இணக்கப்பாட்டிற்கு வந்தேன். எனினும், மே மாதம் 9ம் தேதி காலை நீங்கள் அனைவரும் அறிந்த விதத்தில் மிகவும் அசாதாரண சூழ்நிலையொன்று ஏற்பட்டது.

இந்த சம்பவத்தின் பின்னர், குறுகிய நேரத்தில் நாடு முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டது. ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தி, முப்படைகளை கடமைகளுக்கு அமர்த்துவதற்கு முன்பாகவே, திட்டமிட்ட இந்த சம்பவம் நாடு முழுவதும் ஏற்பட்டது. சில மணிநேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அடங்கலாக 9 பேர் அமானுஷியமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டனர்.

அதேபோன்று, சுமார் 300 பேர் வரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோன்று, பெருமளவிலான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. நாடு முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை முதன்மையாக கட்சி பேதங்கள் இன்றி நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

அது தொடர்பிலான விசாரணைகளை நடத்துவதற்கும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் போலீஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். அது எவ்வாறானாலும், அதன் பின்னர் நடத்தப்பட்ட கொலைகள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட சம்பவங்களை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இந்த சம்பவம் நடந்தேறிய சந்தர்ப்பத்திலிருந்து, பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதி, போலீஸ் மாஅதிபர், புலனாய்வு பிரதானி உள்ளிட்ட பாதுகாப்பு பிரதானிகளை தொடர்புப்படுத்திக் கொண்டு, நான் நாட்டை அமைதியாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தேன்.

 

ஜனாதிபதி அலுவலகம் அருகே பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருக்கும் ராணுவப் படை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஜனாதிபதி அலுவலகம் அருகே பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருக்கும் ராணுவப் படை

நாட்டின் அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதே இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் அடிப்படை பொறுப்பாக காணப்படுகின்றது. அதனால், அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு முப்படைகளுக்கும், போலீஸாருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு தொடர்புப்பட்ட, திட்டமிட்ட, ஆணை வழங்கிய மற்றும் பிரசாரம் செய்த அனைத்து தரப்பிற்கும் எதிராக கடுமையான சட்டத்தை அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதனால், இவ்வாறு வன்முறைகளில் ஈடுபடாது, அதனை தவிர்த்துக்கொள்ளுமாறு நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக நான் அனைத்து கட்சிகளினதும் தலைவர்களுடனும் இணைந்து செயற்பட்டு வருகின்றேன்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை முகாமைத்துவப்படுத்த, அதேபோன்று நாடு அராஜக பாதைக்கு செல்வதை தவிர்த்துக்கொள்வதற்கும், தற்போது நிறுத்தப்பட்டுள்ள அரச செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கும், புதிய அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு நான் நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.

நான் இந்த வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையை வெற்றிக்கொண்ட, அதேபோன்று, நாட்டு மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்திக்கொள்ளக்கூடிய பிரதமர் ஒருவர் மற்றும் அமைச்சரவையை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றேன். அதன்பின்னர், நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் கிடைக்கும் விதத்திலான 19வது திருத்தம் அமல்படுத்தும் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த நான் நடவடிக்கை எடுப்பேன்.

புதிய அரசாங்கத்தின் பிரதமருக்கு புதிய திட்டத்தை முன்வைத்து, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பேன். அதேபோன்று, பல்வேறு தரப்புக்களினால் ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யுமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. நியமிக்கப்படும் புதிய அரசாங்கம், நாட்டை ஸ்திரதன்மைக்கு கொண்டு வந்ததன் பின்னர் அனைத்து தரப்புடனும் கலந்துரையாடல்களை நடத்தி, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொடுப்பேன்.

இந்த சிரமமான சந்தர்ப்பத்தில் நாட்டை வீழ்ச்சி பாதைக்கு கொண்டு செல்லாது, பொதுமக்களின் உயிர்களுக்கான பாதுகாப்பை போன்று, அவர்களின் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்து, அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான அரச பொறிமுறையொன்றை தொடர்ச்சியான நடைமுறைப்படுத்துவதற்கு எனக்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன். இந்த சந்தர்ப்பத்தில் அமைதியாகவும், சிந்தித்தும் செயற்படுமாறு அனைத்து இலங்கையர்களிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

https://www.bbc.com/tamil/sri-lanka-61411531

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புதிய பிரதமரின் தலைமையில் அமைச்சரவையை இவ்வாரத்திற்குள்  ஸ்தாபிப்பேன் : ஜனாதிபதி உறுதி

இவ்வாரத்திற்குள் புதிய பிரதமரின் தலைமையில் அமைச்சரவையை ஸ்தாபிப்பேன் என ஜனாதிபதி உறுதி பூண்டுள்ளார்.

Articles Tagged Under: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ | Virakesari.lk

இன்று இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே இந்த உறுதியை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாரத்திற்குள் புதிய பிரதமரின் தலைமையில் அமைச்சரவையை ஸ்தாபிப்பேன் .

நாட்டில் நிலைமை மோசமடைந்துள்ளது. இதனை மீளக்கட்டியெழுப்ப அனைத்து ஒத்துழைப்புக்களையும் புதிய அமைச்சரவைக்கு வழங்குவேன்.

19 ஆவது அரசியலமைப்பில் உள்ள சிறந்த விடயங்களை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பை உருவாக்க ஒத்துழைப்பேன்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது தொடர்பாக பலர் ஆலோசனை வழங்கியுள்ள நிலையில் அது குறித்து அவதானம் செலுத்துவேன்.

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்திற்கு காரணமானவர்கள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

http://www.newswire.lk/wp-content/uploads/2022/05/Screenshot_20220511-210851_Drive.jpghttp://www.newswire.lk/wp-content/uploads/2022/05/Screenshot_20220511-210851_Drive.jpg
 

 

https://www.virakesari.lk/article/127339

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சோத்துப்பிரச்சினை ஒன்று தான்  நாட்டில்???

திருந்தப்போவதில்லை

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஓரளவு நிலைமை சீரானாலும் இன்னும் ஐந்து வருடங்கள் ஆனாலும் பொருளாதார நிலைமை சீரடையாது. நாடக்கூலிக்கு வேலை செய்யும் குடும்பங்கள் தான் பரிதாபத்துக்கு உரியது 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கொதிநிலையில் இருக்கும் மக்களின் எழுச்சியையும் அவர்களின் போராட்டத்தையும்   நீர்த்துப்போகவைக்கும் மாற்றுத்  திட்டம் ஒன்றை ஜனாதிபதி போடுவதாக தெரிகிறது.  புதிய அரசாங்கம் அமைத்தவுடன் நாட்டில் பொருளாதார நெருக்கடி தீர்ந்துவிடுமா? அல்லது மக்களின் அன்றாட கஷ்டங்கள் தான் உடனடியாக தீர்ந்துவிடுமா?

ஜனாதிபதி முறையை ஒழிப்பதுடன் நின்றுவிடாமல் இனி வரும் காலங்களில் குடும்ப வாரிசுகளை மையப்படுத்திய ஆட்சி அதிகார  முறை, அரசியலில் பௌத்த சங்கங்களின் தலையீடு,  நாட்டின் இனங்களுக்குள் பாகுபாட்டை வளர்த்து அரசியல் இலாபம் தேடுவது, சிறுபான்மை மக்களின் பாரம்பரிய வாழ்நிலங்களை திட்டமிட்டு சூறையாடுதல் இதுபோன்ற இன்னும் பல ஜனநாயக விரோத நடைமுறைகளையும் மாற்றியமைத்தல் வேண்டும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மேட்டுக்குடி இரண்டின் நாடகம் இது..

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வழமை போல் வெளிநாட்டு மானியங்கள் மூலம் சிங்கள மக்களை குளிர்வித்து விடுவார்கள். ஏனெனில் சிங்கள மக்கள் வீதிக்கு இறங்கியது அன்றாட தேவைகள் இல்லாத காரணத்தினால் மட்டுமே. மற்றும் படி சிங்கள மக்களுக்கு எவ்வித அடிப்படை பிரச்சனைகள் ஏதுமில்லை.

சிங்கள இனவாதம் தற்போதைய பிரச்சனைகள் மூலம் நாடி பிடித்து நோயை அறிந்து விட்டது. இனிமேல் அந்த தவறு வராமல் பார்த்துக்கொள்ளும். ஐ மீன்  இனிவரும் காலங்களில் சிங்கள தேசத்தில் பாண்,பருப்பு,சம்பல்,எரிபொருளுக்கு தட்டுப்பாடு வராமல் கண்ணும் கருத்துமாய் கவனமாக இருக்கும்.

மற்றும்படி சிங்கள தேச தேர்தல் என்பது அவர்களுக்கு ஒரு சூதாட்ட/களியாட்ட நிகழ்வு போன்றது. தமிழர்களின் நிலையோ அன்றுபோல் என்றும் அணிலை ஏற விட்ட நாயின் நிலைதான்.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பொருளாதாரப்பிரச்சினையின் அடிப்படை காரணத்தினை (உண்மையான காரணத்தினை) எதிர்கட்சியினரும் தெரிவிப்பதில்லை, அண்மையில் இரணில் விக்கிரமசிங்க இனது நேர்முகத்தில் இலங்கையர்சின் 2019 கொண்டு வரப்பட்ட வரி வீத குறைப்புதான் இந்த  இன்றையநிலைக்கு காரணம் என அர்சின் நிர்வாகத்திறமியின்மை காரணம் காட்டினார்.

https://data.worldbank.org/indicator/GC.TAX.TOTL.GD.ZS?locations=LK

2012, 2013, 2014 இலங்கயின் வருமான வரி 2019 இல் இருந்ததினை விட குறைவு.

உண்மையான இலங்கை பொருளாதார பிரச்சினை அரசின் உழல்தான், இதனை சுட்டி காட்ட எதிர்கட்சி விரும்பவில்லை என நினைக்கிறேன்.

எதிர்கட்சி ஏன் அரசின் ஊழலை மூடி மறைக்க வேண்டும்? 

எதிர்காலத்தில் எதிர்கட்சி ஆட்சிக்கு வந்தால் இதே ஊழலை செய்ய விரும்புகிறார்களோ?

அப்படியானால் இலங்கைக்கு விடிவே கிடையாது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் நடைமுறைக்கணக்கு (Current account balance) பற்றாக்குறை மொத்த தேசிய வருமானத்தில் (GDP).

நடைமுறக்கண்க்கில்தான் ஏற்றுமதி இறக்குமதி நிலுவை செல்கிறது, இலங்கயில் காலா காலமாக ஒரே விதமான பற்றாக்குறையே ஏற்பட்டு வருவதனை இந்த தரவுகளின் மூலம் காணலாம்.

https://www.theglobaleconomy.com/Sri-Lanka/current_account/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

இலங்கை நெருக்கடி: ஒரு வாரத்தில் புதிய அரசாங்கம்; நாடாளுமன்றத்திற்கு அதிகாரம்: கோட்டாபய ராஜபக்ஷ

இவரை பதவி விலகுமாறு கோரியே ஆர்ப்பாட்டம் தொடங்கப்பட்டது.

இப்போ இவரே புதிய அரசு அமைக்கப் போகிறாராமே?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1.தேயிலை

2. ஆடை ஏற்றுமதி

3. சுற்றிலா 

4. புலம்பெயர்ந்தோர் டாலர்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ஈழப்பிரியன் said:

இவரை பதவி விலகுமாறு கோரியே ஆர்ப்பாட்டம் தொடங்கப்பட்டது.

இப்போ இவரே புதிய அரசு அமைக்கப் போகிறாராமே?

அதுதான்… எனக்கும் விளங்கவில்லை.
கோத்தாவுக்கு…. வைத்த குறி, மைனாவுக்கு… பட்டுட்டுது. 😂

 • Haha 1
Link to comment
Share on other sites

ரணிலை பிரதமராக்க முனைகின்றனர் என தென்னிலங்கையில் இருந்து செய்திகள் வருகின்றன. சரத் பொன்சேக்காவின் பெயரும் அடிபடுகின்றது.

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தடுப்பூசி ஏற்றுவதை உறுதிப்படுத்துதே, தொற்றுப் பரவலில் இருந்து மீள்வதற்குள்ள சிறந்த வழியாகும் – ஜனாதிபதி!

மக்களின் நம்பிக்கையை பெறக்கூடிய புதிய பிரதமரும், அரசாங்கமும் இந்த வாரத்தில் நியமிக்கப்படும் – ஜனாதிபதி!

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்று மக்களின் நம்பிக்கையை பெறக்கூடிய புதிய பிரதமரும், அரசாங்கமும் இந்த வாரத்தில் நியமிக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு இன்று(புதன்கிழமை) இரவு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புதிய பிரதமர் மற்றும் அரசாங்கத்தை நியமித்ததன் பின்னர், அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் உள்ளடக்கத்தை நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் பிரதமருக்கு புதிய வேலைத்திட்டத்தை உருவாக்கி இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பதவியை நீக்குவதற்கான கோரிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், புதிய அரசாங்கம், நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திய பின்னர், அனைத்து தரப்பினருடனும் இந்த விவகாரம் குறித்து விவாதித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் மக்களையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் அதேவேளையில், நாட்டை வீழ்ச்சியடையச் செய்யாமல், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையானவற்றை வழங்குவதற்கான அரச பொறிமுறையை தொடர்ந்தும் பேணுவதற்கு உங்கள் ஆதரவை நான் கோருகிறேன் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த வார தொடக்கத்தில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வன்முறைக்கான மூல காரணத்தை வன்மையாகக் கண்டித்ததோடு, விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொலைகள், தாக்குதல்கள், மிரட்டல் நடவடிக்கைகள், சொத்துக்களை அழித்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தொடர் கொடூரமான செயல்களை நியாயப்படுத்த முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வுகள் நடந்த தருணத்திலிருந்து, பாதுகாப்பு செயலாளர், ஆயுதப்படைகளின் தளபதிகள், உளவுத்துறை தலைவர் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்பட்டு, நாட்டில் அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதே அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு.

வன்முறையை ஏற்படுத்துவோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு சிறிலங்கா காவல்துறை மற்றும் முப்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வுகளுக்குத் திட்டமிட்ட, உதவிய, ஊக்குவித்த மற்றும் தொடர்புள்ளவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்ததுடன், நாசகார செயல்களில் இருந்து அனைவரும் விலகுமாறு கேட்டுக் கொண்டார்.

வெறுப்புணர்வை பரப்ப முயற்சிப்பவர்களின் செயல்களை வன்மையாகக் கண்டிக்குமாறு நாட்டிலுள்ள அனைத்து பொறுப்புள்ள குடிமக்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://athavannews.com/2022/1281505

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

தடுப்பூசி ஏற்றுவதை உறுதிப்படுத்துதே, தொற்றுப் பரவலில் இருந்து மீள்வதற்குள்ள சிறந்த வழியாகும் – ஜனாதிபதி!

மக்களின் நம்பிக்கையை பெறக்கூடிய புதிய பிரதமரும், அரசாங்கமும் இந்த வாரத்தில் நியமிக்கப்படும் – ஜனாதிபதி!

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்று மக்களின் நம்பிக்கையை பெறக்கூடிய புதிய பிரதமரும், அரசாங்கமும் இந்த வாரத்தில் நியமிக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு இன்று(புதன்கிழமை) இரவு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புதிய பிரதமர் மற்றும் அரசாங்கத்தை நியமித்ததன் பின்னர், அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் உள்ளடக்கத்தை நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் பிரதமருக்கு புதிய வேலைத்திட்டத்தை உருவாக்கி இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பதவியை நீக்குவதற்கான கோரிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், புதிய அரசாங்கம், நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திய பின்னர், அனைத்து தரப்பினருடனும் இந்த விவகாரம் குறித்து விவாதித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் மக்களையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் அதேவேளையில், நாட்டை வீழ்ச்சியடையச் செய்யாமல், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையானவற்றை வழங்குவதற்கான அரச பொறிமுறையை தொடர்ந்தும் பேணுவதற்கு உங்கள் ஆதரவை நான் கோருகிறேன் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த வார தொடக்கத்தில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வன்முறைக்கான மூல காரணத்தை வன்மையாகக் கண்டித்ததோடு, விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொலைகள், தாக்குதல்கள், மிரட்டல் நடவடிக்கைகள், சொத்துக்களை அழித்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தொடர் கொடூரமான செயல்களை நியாயப்படுத்த முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வுகள் நடந்த தருணத்திலிருந்து, பாதுகாப்பு செயலாளர், ஆயுதப்படைகளின் தளபதிகள், உளவுத்துறை தலைவர் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்பட்டு, நாட்டில் அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதே அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு.

வன்முறையை ஏற்படுத்துவோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு சிறிலங்கா காவல்துறை மற்றும் முப்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வுகளுக்குத் திட்டமிட்ட, உதவிய, ஊக்குவித்த மற்றும் தொடர்புள்ளவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்ததுடன், நாசகார செயல்களில் இருந்து அனைவரும் விலகுமாறு கேட்டுக் கொண்டார்.

வெறுப்புணர்வை பரப்ப முயற்சிப்பவர்களின் செயல்களை வன்மையாகக் கண்டிக்குமாறு நாட்டிலுள்ள அனைத்து பொறுப்புள்ள குடிமக்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://athavannews.com/2022/1281505

மக்களின்நம்பிக்கையைப் பெறக்கூடிய பிரதமர் என்டால் தேர்தலில் வெல்லாத தேசியப்பட்டியல் ரணிலோ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மாறி சொல்லிப்போட்டார். மக்களின் நம்பிக்கையை பெற்று ஆரவாரமாய் கதிரையில் இருத்தியவர்களை அடித்து கலைத்தாயிற்று. இனி மக்களின் நம்பிக்கையை பெறாதவரை பிரதமர் ஆக்கினால் மக்கள் அடித்து விரட்ட முடியாது என்று நினைத்தார்களோ?

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • செம்மணி பகுதியில் ஏழு அடி உயரமான  சிவலிங்கம் பிரதிஷ்டை! சிவபூமி அறக்கட்டளையினால், செம்மணி பகுதியில் “யாழ்ப்பாணம் வரவேற்கிறது” வளைவுக்கு அருகில் ஏழு அடி உயரமான  சிவலிங்கம் இன்றைய தினம் (புதன்கிழமை) காலை 8 மணியளவில் பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மதப் பெரியவர்கள், ஆர்வலர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். யாழ்ப்பாண நகருக்குள் நுழைவோர் சிவபெருமானை வணங்கி புனிதமாக நுழைய வேண்டும். அதேபோல் குறித்த வீதியில் பயணிப்போர் பாதுகாப்பாக இறை பக்தியோடு பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும் இந்த சிலை உருவாக்கப்பட்டதாக சிவ பூமி அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.     https://athavannews.com/2022/1314503
  • கள்ளன் – காவல்துறை விளையாட்டை விளையாடும் ரணில் – ராஜபக்‌சாக்கள் மக்கள் தொடர்பில் பசில் ராஜபக்‌ச மிகுந்த அச்சத்திலேயே இருப்பதாகத் தெரிவிக்கும் முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ, ரணில் – ராஜபக்‌ச ‘திருடன் -காவல்துறை’ விளையாட்டையே விளையாடி கொண்டிருப்பதாகவும் கேலி செய்தார். ராஜபக்‌சாக்களும் ரணில் விக்ரமசிங்கவும் கள்ளன் காவல்துறை விளையாட்டையே விளையாடி வருகிறார்கள். ரணில் – ராஜபக்‌சர்களுக்குப் பொறுப்புகளை வழங்குவதும் ராஜபக்‌சர்கள் ரணிலுக்குப் பொறுப்புகளை வழங்குவதுமே அரசியலில் இத்தனை காலமாக நீடித்திருந்தது. எவ்வாறாயினும் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் இதனை சவாலுக்கு உட்படுத்தினார்கள். இதன் பின்னர், எதிர் எதிர் திசையிலிருந்து கள்ளன் – காவல்துறை விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்த ரணில் – ராஜபக்‌சாக்கள் ஓர் இடத்துக்கு வந்துள்ளனர். அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பேச்சுகளை நன்கு அவதானித்தால், அவர் போராட்டக்காரர்களுக்கும் சோஷலிச முன்னிலைக் கட்சிக்கும், காவல்துறை ஆணைக்குழுவுக்கும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குமே குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். உண்மையில், பசில்ராஜபக்‌ச, மக்கள் மீது மிகுந்த அச்சத்தில் இருக்கிறார். ஜூலை 09ஆம் திகதி போராட்டத்துக்கு சுமார் 10 இலட்சம் பேர் வந்ததாக அரச புலனாய்வுப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், விபசாரத்தில் ஈடுபடுபவர்கள் என அனைவரும் இருந்தார்கள். நாட்டின் அரசியல் தொடர்பில் பேசுவதற்கு அவர்களுக்கும் உரிமை இருக்கிறது எனவும் தெரிவித்தார்.   https://akkinikkunchu.com/?p=232312  
  • தமிழருக்குள் வாழும் சிங்கள உயர் பிரிவினராகிய „கொவிகம’பிரிவினர்!… ஏலையா க.முருகதாசன். குறிப்பாக யாழ் குடாநாட்டுக்குள் தமிழர்களாக மாறிய சிங்களவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என இவ்வாண்டு ஆரம்பித்தில் ஒரு பதிவை எனது முகநூலில் இட்டிருந்தேன். ஒரு சிலரால் அதை சீரணிக்க முடியாதிருந்தது.எப்பொழுதும் அது எவராக இருந்தாலும் தமக்குச் சாதகமில்லாத தகவல்களோ செய்திகளோ வந்தால் அவை கசக்கத்தான் செய்யும். ஐந்து பரம்பரைக்கு மேற்பட்டு மொழியாலும் பண்பாடுகளாலும் பெற்றுக் கொண்ட உணர்வுகளாலும் ஒருவர் தமிழராக வாழ்கையில் அவரிடம் நீ சிங்கள கொவிகம வம்சாவழியைச் சேர்ந்தவன் என்று சொன்னால் அதை அவரால் சீரணிக்க முடியாது. ஆனால் அவர் கொவிகம என்ற வம்சாவழியைச் சேர்ந்தவன் என்பதும் இல்லாது விடாது.தான் சிங்கள வம்சா வழியைச் சேர்ந்தவன் என்பதை ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கு இன்னொரு காரணம் சிங்களவனாக இருக்க விரும்பாததாகவும் இருக்கலாம். நீண்ட பல ஆண்டுகளானக இந்த ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர்கள் „கொவிகம’ பிரிவினர்: தமிழருக்குள் தமிழராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான் என்பதை அறிந்து கொண்டதும் அந்த அய்வுகளை நிறுத்தியது மட்டுமல்ல அதை வெளியில் சொல்லவும் தயங்கினார்கள். அதனைத் தடுப்பதில் தமிழ் அரசியல்வாதிகளின் தலையீடும் இருந்தது. ஏன் இந்த வரலாற்றை மூடிமறைத்தார்கள் என்பதற்கு இரண்டு காரணங்கள் முதன்மைக் காரணங்களாக இருக்கின்றன. முதலாவது காரணமாக தமிழர் பிரிவிற்குள் தாமே முதன்மையானவர்கள் மற்றைய அனைவரும் தமக்கு அடுத்தபடியானவர்கள் என்ற மேற்குடியானவர்களின் மனப்போக்குக்கு இது தடையாக இருந்தமை. இலங்கை அரசிற்கு அது சாதகமாகிவிடும் என்பதற்காகவுமேயாகும். இன்றுவரை தம்மையே தமிழருக்குள் முதன்மையானவர்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு தம்மைவிட உயர்ந்த பிரிவினர் தமிழ்ச் சமூகத்துக்குள் வாழ்வதை சகிக்க முடியாமையும் ஏற்றுக் கொள்ள முடியாமையுமேயாகும். „கொவிகம’ சிங்களச் சமூகத்திற்குள் எப்பிரிவு என்றால்,இவர்கள் விவசாயிகளாகவும், அரச உத்தியோகத்தர்களாகவும், அரச திணைக்களங்களில் அமைச்சுப் பணிமனைகளிலும்,சிங்கள மன்னர்களின் காலத்தில் சிற்றரசர்களாகவும்,மன்னர்களாகவும், அரச சபைகளில் பெரும் அதிகாரிகளாகவும் இருந்தவர்கள்(ஆதாரம்:தாய்வீடு பத்திரிகையில் திரு.க.சண்முகலிங்கம் அவர்கள் எழுதிய கட்டுரை வழியாக) இவர்கள் எவ்வாறு தமிழ்ச சமூகத்திற்குள் கலந்தார்கள் என்ற ஆய்வுக்கு முன்னர்,தமிழகத்திலிருந்த பிரிவினரோடு இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்குள் இருக்கும் பிரிவினரை ஒப்பிடுகையில்,இராஜராஜ சோழன் அனைத்துப் பிரிவினரையும் இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்கிறான் என்பதையொட்டிப் பார்க்கையில் தமிழகத்திலுள்ள பிரிவினர் அனைவரும் இலங்கையில் இருக்கையில் தமிழகத்திலில்லாத ஒரு பிரிவினர் கொவிகம வம்சாவழிப் பிரிவினர்தான் என்பது உண்மையாகின்றது. இந்த கொவிகம பிரிவினர் எங்ஙனம் தமிழ்ச சமூகத்திற்குள் வந்தார்கள் என்ற ஆய்வு ரீதியாகப் பார்க்கையில் மன்னர் காலத்தில் தமிழக மன்னர்களின் இலங்கை மீதான படையெடப்புகளின் போது அதனை எதிர்த்த நின்றவர்களின் முதன்மையாக இருந்தவர்கள் கொவிகம என்ற சிங்கள உயர்குடிப் பிரிவினரே.இன்றும் நீங்கள் ஒரு செய்தியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள் சிங்கள கொவிகம பிரிவினர்தான் சிங்கள வெறியர்களாக இருக்கிறார்கள் என்பதும்,அவர்கள்தான் முப்படைகளிலும் அரச திணைக்களங்களிலும்,சிலர் அமைச்சகர்களாக இருக்கிறார்கள் என்பதுடன் விடுதலைப் புலிகளை கடுமையாக எதிர்த்தவர்கள் என்பதுமாகும். சோழர்கள் பாண்டியர்களை எதிர்;த்த இவர்களை பாண்டியர்களும் சோழர்களும் இவர்களை சிறைபிடித்து வந்து தமிழர் பகுதிகளில் குடியமர்த்தினார்கள்.அத்துடன் சிங்கள மன்னர்கள் ஒருவருக்கொருவர் போரிட்ட போதும் வடபுலம் நோக்கியும் புலம்பெயர்ந்திருக்கிறார்கள்.(ஆதாரம்:இலங்கையில் தமிழ்ப் பண்பாடு) இவர்களுடைய குடிபரம்பல் ஆங்காங்கே ஒவ்வொரு ஊர்களிலும் ஒரு தீவு போல இருக்கும் ஒவ்வொரு இடத்திலும் ஐந்திலிருந்து இருபது முப்பது குடும்பங்களாக இருப்பார்கள். குறிப்பாக கொவிகமவினர் சங்கானை,அச்சுவேலி,சுண்ணாகம்,தெல்லிப்பழை, மல்லாகம்,சுளிபுரம்,தொல்புரம்,கொடிகாமம்,சாவகச்சேரி,உடுப்பிட்,கரணவாய்,அல்வாய்,நாரந்தனை,வேலணை,கரவெட்டி,வயாவிளான் ஆகிய இடங்களிலும் குடநாட்டுக்கு வெளியேயும் பரவலாக வாழுகின்றனர். இவர்களுக்கும் தமிழ்ச்சமூக மேற்குடியினர் என்று சொல்லப்படுகிறவர்களுக்குமிடையில் ஒரு உள்ளக பனிப்போர் இருந்து கொண்டேயிருக்கும். இவர்கள் இரு பகுதியினரும் திருமண உறவின் மூலம் இரந்த பந்தத்தினை வைத்துக் கொள்ள விரும்புவதில்லை.அரிதாக நடக்கும் திருமண உறவுகளில்கூட இவர்கள் ஒட்டியம் ஒட்டாமல் தாமரை இலைத் தண்ணீர் போலவே இருப்பார்கள். கொவிகம பிரிவினர் சிங்களச் சமூகத்தில் தமக்கு அடுத்தபடியாக உள்ள எவருடனும் திருமண உறவினை வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. தமிழ்ச் சமூக உயர் பிரிவினரைவிட கொவிகமப் பிரிவினரே உயர்ந்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை. அதனால் கொவிகமப் பிரிவினருக்கு ஒரு திமிர் உண்டு.சிங்கள கொவிகமப் பிரிவினருக்கு இருக்கும் வேகமாக கோப உணர்ச்சிப்படுதல், எதிர்த்து நின்று வாதாடுதல்,சண்டித்தனம் எல்லாம் உண்டு. சிங்களவர்களுக்கு உரிய குணங்களாகும் .ஆனால் நேர்மையானவர்கள் நயவஞ்சம் அற்றவர்கள்.   https://akkinikkunchu.com/?p=232271  
  • இலங்கைக்கான இந்தியாவின் உதவி இன அடிப்படையிலானது இல்லை - ஜெய்சங்கர் By Rajeeban 08 Dec, 2022 | 10:55 AM இலங்கைக்கான இந்தியாவின் உதவி இன அடிப்படையிலானது இல்லை என  இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார் இந்தியா இலங்கை முழுவதற்கும் உதவியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் சிங்களவர்கள் ஏனைய சமூகத்தினர் அடங்கிய இலங்கை முழுவதற்கும் நாங்கள் எங்கள் ஆதரவை வழங்கியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். மிகவும் பாரதூரமான பொருளாதார நெருக்கடியில் உள்ள அயல்நாட்டிற்கு உதவிவழங்கும் விடயத்தில் நாங்கள் இனரீதியிலான அணுகுமுறையை பின்பற்றவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். அயல்நாடு நெருக்கடியான நிலையில் உள்ள தருணத்தில் நாங்கள் உதவ முன்வராவிட்டால் நாங்கள் எங்கள் கடமைகளை நிறைவேற்ற தவறியவர்களாக மாறிவிடுவோம் -நாங்கள் சரியான தருணத்தில் உதவினோம் எனவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியா தனது நீண்டகால நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான வாக்கெடுப்பை புறக்கணித்தது என தெரிவித்துள்ள  இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்த நிலைப்பாட்டை முந்தைய இந்திய அரசாங்களும் பின்பற்றியுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தமிழ் சமூகத்தின் நலன்களை முன்னெடுப்பதற்கு இதுவே மிகவும் ஆக்கபூர்வமான அணுகுமுறை தொடர்ந்தும் இதுவே எங்கள் அணுகுமுறையாக காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   https://www.virakesari.lk/article/142488
  • மன்னர் சார்லஸ் மீது மீண்டும் முட்டை வீச்சு பிரித்தானிய மகாராணி 2ஆம் எலிசபெத்தின்  மரணத்துக்குப் பின்னர்  மன்னராக பதவியேற்றுள்ள 3ஆம் சார்லஸ், நாடு முழுவதும் பயணம் செய்து, மக்களைச் சந்தித்து வருகிறார். இந்நிலையில், வடக்கு லண்டனில் இருந்து 46 கிலோ மீற்றர்  தொலைவில் உள்ள  லுட்டன் நகரத்துக்கு நேற்று முன்தினம் சென்ற(06) அவர், அங்குள்ள மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது எதிர்பாராத விதமாக கூட்டத்தில் இருந்து  மன்னரை நோக்கி முட்டையொன்று வீசப்பட்டது.  இதனையடுத்து  உடனடியாக மன்னரை வேறொரு இடத்துக்கு அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இந்நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபரைப் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னர் மீது முட்டை வீசப்படுவது இது முதற் தடவை அல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மன்னர் சார்லஸ்  மற்றும்அவரது மனைவி ராணி கமிலா யார்க் நகரத்துக்கு சென்றபோது  அவர்கள் மீது 23 வயதான  இளைஞர் ஒருவர் முட்டை வீசியிருந்தார் என்பது, பின்னர்  அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/மன்னர்-சார்லஸ்-மீது-மீண்டும்-முட்டை-வீச்சு/50-308636
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.